February 1, 2010

தமிழ்ப்படம் - ஒரு டுபாங்கோ பார்வை...!!!

எனக்கே நல்லாத் தெரியும்.. நா ரொம்ப லேட்டா வண்டில ஏறுறேன்னு... படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு.. எல்லா பதிவரும் கைவலிக்க கால்வலிக்க படத்த பத்தி எழுதியாச்சு.. ஆனா என்ன பண்ண? தமிழ்ப்படம் பத்தி எழுதாத காரணத்துல பதிவுலகத்துல இருக்கற ஆரும் என்னோட அன்னந்தண்ணி பொழங்கக் கூடாது.. அதாவது பதிவ வாசிக்கக் கூடாது, கமென்ட் போடக் கூடாதுன்னு நாட்டாம தீர்ப்பு சொல்லிட்டா... ? கடமைன்னு வந்துட்டா கட் அண்ட் ரைட்டா சும்மா கன் மாதிரி இருப்போம்ல.. அதனால.. கெட் செட்.. ரெடி..கோ...



***************

செந்தில் : அண்ணே.. தமிழ்ப்படம் பார்த்துட்டீங்களா அண்ணே?

கவுண்டமணி : ஏண்டா டபரா தலையா.. என்னப் பார்த்தா கிண்டலா இருக்கா? தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு தமிழ்ப்படம் பார்க்காம நான் என்ன ஹிந்தி படமும் இங்கிலிபீசு படமா பார்க்கப் போறேன்? அப்படியே பார்த்தாலும் அந்தக் கெரகம் எனக்கு என்ன புரியவா போகுது? ஓங்கி எத்தினேன்னு வையி.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட...

செந்தில் : ஐயோ அண்ணே.. நான் அந்த அர்த்தத்துல கேக்கல அண்ணே.. புதுசா ஒரு படம் வந்திருக்குல .. இந்த மிர்ச்சி சிவா நடிச்சது.. தமிழ்ப்படம்.. அதப் பத்திக் கேட்டேன்..

கவுண்டமணி :அப்படித் தெளிவா சொல்லுடா அண்டா வாயா.. பார்த்துட்டேன்.. இப்போ என்ன அதுக்கு?

செந்தில் : அந்தப் படத்தோட கத என்ன அண்ணே?

கவுண்டமணி : அப்படிக் கேளுடா.. இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்னு சொல்றது.. தமிழ்ப்படத்தோட கத என்னன்னா.. கிராமத்துல பொறந்த ஹீரோ எப்படி சிட்டிக்கு வந்து ஒரு அகில ஒலக சூப்பர் ஸ்டாரா.. அதாவது என்ன மாதிரி.. அநியாயத்த தட்டிக் கேக்குற வைஸ் கேப்டனா.. எதிரிகளைக் களை எடுக்குற அண்டர்வேர் ஆபிசரா.. ச்சே.... அண்டர்கவர் ஆபிசரா ஆகுறார்.. அப்படிங்கறதுதான்.. நடுவுல காதல்.. தொலஞ்சு போன குடும்பத்தோட பாட்டுப் பாடி ஒண்ணு சேருறது.. மூஞ்சே காட்டாத வில்லன்னு பல பிட்டுகள ஒண்ணாப் போட்டுக் குலுக்கினா.. சுடச்சுட "தமிழ்ப்படம்" ரெடி..

செந்தில் : ஐயயையையையோ...

கவுண்டமணி : டேய்.. முண்டா முழியா.. என்னடா ஆச்சு?

செந்தில் : பயப்புடாதீங்க அண்ணே.. கதையைக் கேக்குறப்பவே அப்படியே சிலிர்க்குதுன்னே..

கவுண்டமணி : பார்த்துடா.. ரொம்ப சிலிர்த்து கடைசில உன்னைய வேற ஏதாவது ஆஸ்பத்திரில கொண்டு போய் விட்டுர பாருங்க.. எதுக்கும் நீ கொஞ்சம் எட்டத் தள்ளியே இரு நாயே.. அப்புறம் உன்னோட சேர்த்து என்னையும் தூக்கிட்டுப் போகிடப் போறாய்ங்க..





***************

விஜய் : ஏம்ப்பா? படத்துல இந்த சிவாவோட நடிப்பு எப்படி இருக்கு?

அஜித் : என்னது.. தமிழ்ப்படத்துல நடிச்சு இருக்குறது சிவாவா? நீங்க இல்லையா? ஹி ஹி ஹி.. நான் என்னமோ நீங்கதான் கெட்டப் மாத்தி நடிச்சு இருக்கீங்கன்னு நினச்சேன்.. ஏன்னா கதை கிட்டத்தட்ட உங்க படத்தோடது மாதிரி இருந்தது...

விஜய் : ஆனாலும் ஒனக்கு ரொம்ப ஓவருதான்.. சரி சரி.. சிவாவப் பத்தி சொல்லு..

அஜித் : என்னத்தச் சொல்றது.. உண்மையில பயமா இருக்கு.. நீ நான்லாம் சும்மா.. அலட்டிக்காம நடிச்சு இருக்காப்புடி.. அவர் பேசுறத வேற ஒரு மார்க்கமா இருக்கு.. காதலன் பிரபுதேவா மாதிரி ஒரு டான்ஸ் ஆடுறாரு பாரு.. நீயெல்லாம் இனிமேல் டான்ஸ் பத்தி பேசவே கூடாது..ஓமகசியா பாட்டுல உணர்ச்சி வேகத்துல கொடுக்குற எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்து நானே மெரண்டு போய் கிடக்கேன்.. ஹே.. இனிமேல் நான் பேச மாட்டேன்.. ஒரு ஹிட் கொடுத்துட்டுத்தான் பேசுவேன்..

விஜய் : நாசமாப் போச்சு.. அப்போ நீ எப்போ பேசுறது.. நாங்க எப்போ கேக்குறது?





(கவுண்டமணி - செந்தில் மற்றும் அஜித் - விஜய் என்று இருப்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் / வேண்டாம் என்று வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

***************

போதும். இத்தோட நிறுத்திக்குவோம். படத்த பத்தி இனி நாமளே பேசுவோம்.

கடந்த முப்பது வருடங்களாக எந்தெந்த விஷயங்களை எல்லாம் நம் தமிழ் சினிமாவில் கொண்டாடி வந்திருக்கிறோமோ, அதை எல்லாம் நார் நாராய் கிழித்து கசக்கிப் பிழிந்து காயப் போட்டிருக்கிறார்கள். மற்ற படங்களை அவ்வப்போது சின்ன சின்ன கேலியும் கிண்டலும் செய்வதென்பது நம் தமிழ் சினிமாவில் அடிக்கடி காணக் கிடைப்பதுதான். உ.ம்: சத்யராஜின் மகாநடிகன், இங்கிலிஷ்காரன், வெங்கட்பிரபுவின் சரோஜா, விவேக்கின் காமெடி காட்சிகள். ஆனால் ஹாட்ஷாட்ஸ் போல ஒரு முழுநீள ஸ்பூப் படம் தமிழில் வந்தது கிடையாது என்ற குறையை நிவர்த்தி செய்கிறது "தமிழ்ப்படம்".

**************

என்னைப் பொறுத்தவரை இவர்கள்தான் படத்தின் உண்மையான நாயகர்கள்..

துரை தயாநிதி - இதுவரை தேவையில்லாத பிரச்சினைகளுக்காக மட்டுமே ஊடகங்களில் அடிபட்டு வந்த பெயர். முதல் முறையாக அவரைப்பற்றி நல்ல விதமாக பேச வைத்திருக்கிறது "தமிழ்ப்படம்". எனக்கு என்னமோ உதயநிதி ஸ்டாலினை விட தயாநிதிக்கு சினிமா ரசனை அதிகம் என்றே தோன்றுகிறது. "குருவி,ஆதவன்" என்று பெரிய ஸ்டார்களின் பின்னாடி ஓடிப்போய் முன்னவர் கும்மாங்குத்து வாங்கிக் கொண்டிருக்க, இவரோ சத்தமே இல்லாமல் "தமிழ்ப்பட"த்தை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

அமுதன் - இயக்குனருக்கு ரொம்பவே தைரியம். லொள்ளு சபா டைப் படத்தை போர் அடிக்காத திரைக்கதையால் திறமையாக சொல்லி இருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சினிமாபட்டிக்கு வந்து போகும் ரயில் வண்டி. இப்போதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த படம் எப்படி எடுக்கப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கண்ணன் - அறிமுக இசையமைப்பாளர் என்று நம்ப முடியவில்லை. எல்லாப்பாட்டுமே சூப்பர். குத்து விளக்கு பாட்டும், பச்சைத் தமிழன் பாட்டும் என்னோட பேவரைட்ஸ். பின்னணி இசையும் ஓகே. குடும்பப்பாட்டு என்று "MLTR" பாட்டைப் போட்டு கலக்கி இருக்கிறார்.



நீரவ்ஷா - சின்ன பட்ஜெட் படம் போலவே தெரியவில்லை. காட்சிகள் அத்தனை துல்லியம். ரெட் ஒன் காமிராவாம். (தகவல் உபயம் - அண்ணன் ஜாக்கி சேகர் ) நன்றாக செய்திருக்கிறார்.

சந்துரு - வசனம் எழுதி இருப்பவர். பதிவர் - நம்ம ஆளாம். டைமிங் ஜோக்சில் சுழட்டி அடிக்கிறார். வாழ்த்துகள்.

**************

படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச சீன்..

தண்ணியப் போட்டுட்டு சிவா பீச்ல மட்டையாகிக் கிடப்பாரு... மேல இருந்து காமிரா அவர நோக்கி வரும்.. அப்போ அவரு சொல்ற வசனம்.. " பிரியாவ தூக்கிட்டு போய்ட்டானுங்க.. ஏற்கனவே சரக்கு போட்டு தல சுத்திக்கிட்டு இருக்கு.. இவனுங்க வேற மேல காமிராவுல சுத்துறானுங்க.. என்னால முடியல..." (காக்க காக்க..)

அடங்கப்பா.. சிரிச்சு மாளல..

***************

கருத்தம்மா, தளபதி, நாட்டாமை, ரமணா, சிவாஜி, பாட்ஷா, கந்தசாமி, பில்லா, மௌனராகம், ரன், சிதம்பர ரகசியம் (தெரிஞ்சது கையளவு, தெரியாதது உலகளவு) என பல படங்களை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்து இருக்கிறார்கள். இந்தப் படங்களை எல்லாம் ஏற்கனவே பார்த்து இருந்தால் மட்டுமே ஒரு சில காட்சிகள் புரியும் என்பது படத்தின் பலவீனம். அதே போல முதல் பாதியின் வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. ஆனாலும் எந்தெந்த காட்சி எந்தெந்த படத்தில் இருந்து சுட்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பதில் இந்தக் குறை வெளியே தெரியாமல் அமுங்கிவிடுகிறது.

**************

வீட்டுக்குப் போனபிறகும் யோசிச்சு யோசிச்சு பார்த்து சிரிக்கற அளவுக்கு ஜோக்ஸ் இல்ல. ஆனாலும் படம் பார்க்கும்போது இரண்டு மணி நேரம் கவலையை மறந்து நம்மையும் அறியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் இந்தப்படத்தின் வெற்றி.

தமிழ்ப்படம் - கொண்டாட்டம்

பின்குறிப்பு 1 : துரை தயாநிதியின் அடுத்த படத்துக்கு பூஜை போட்டு விட்டார்கள். "தூங்கா நகரம்" - நம்ம மதுரையோட இன்னுமொரு பெயர். இதிலும் ஸ்டார்கள் யாருமில்லை. கதையை நம்பி களம் இறங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்குறிப்பு 2 : அப்பாடா.. படத்தோட கதையோ இல்ல முக்கியமா சீன்களோ, எதுவுமே சொல்லாம ஒரு இடுகை எழுதியாச்சு.. இனிமேலாவது தருமி ஐயா என்னைத் திட்டாமல் இருக்க சினிமா உலகை ரட்சிக்க வந்த கடவுள் "சிவா" அருள்புரிவாராக..:-)))

32 comments:

சங்கர் said...

//மூர்த்தி - வசனம் எழுதி இருப்பவர். பதிவர் - நம்ம ஆளாம். டைமிங் ஜோக்சில் சுழட்டி அடிக்கிறார். வாழ்த்துகள்.//

தல, இங்க இருக்காரு அவரு

http://minnalpriyan.blogspot.com/2010/02/blog-post.html

தருமி said...

//...உலகை ரட்சிக்க வந்த கடவுள் "சிவா" அருள்புரிவாராக..://

சினிமா உலகை ரட்சிக்க வந்த கடவுள் "சிவா" அருள்புரிவாராக ... என்று மாற்றி கொள்ளவும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// சங்கர் said...
//மூர்த்தி - வசனம் எழுதி இருப்பவர். பதிவர் - நம்ம ஆளாம். டைமிங் ஜோக்சில் சுழட்டி அடிக்கிறார். வாழ்த்துகள்.//

தல, இங்க இருக்காரு அவரு//

பார்த்துட்டேன் நண்பா.. சுட்டிக்கு நன்றி..

// தருமி said...
சினிமா உலகை ரட்சிக்க வந்த கடவுள் "சிவா" அருள்புரிவாராக ... என்று மாற்றி கொள்ளவும்.//

ஐயா மாத்திட்டேன்.. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..

ஜெட்லி... said...

//அப்போ நீ எப்போ பேசுறது.. நாங்க எப்போ கேக்குறது?
//

செம.....

settaikkaran said...

கவுண்டமணி-செந்திலை விடவும், அஜீத்-விஜயை விடவும் உங்க பாணியிலே பண்ணின விமர்சனம் கலக்கலா இருந்தது. ஆனாலும், ஒரு படம் ரிலீசாகி மூணு நாட்கள் கழிச்சு விமர்சனம் எழுதறதெல்லாம் ஒரு கடமையுணர்ச்சியுள்ள வலைப்பதிவாளருக்கு அழகில்லேங்கிறதை மட்டும் சொல்லிப்புட்டேன்...ஆமா...!

மின்னல்ப்ரியன் said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி கார்த்திகை பாண்டியன் .. எனது பெயர் மூர்த்தி அல்ல .. சந்துரு .

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
செம.....//

ஒரு மனுஷன் நடுநிலைமையா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.. அவ்வ்..

//சேட்டைக்காரன் said...
கவுண்டமணி-செந்திலை விடவும், அஜீத்-விஜயை விடவும் உங்க பாணியிலே பண்ணின விமர்சனம் கலக்கலா இருந்தது. ஆனாலும், ஒரு படம் ரிலீசாகி மூணு நாட்கள் கழிச்சு விமர்சனம் எழுதறதெல்லாம் ஒரு கடமையுணர்ச்சியுள்ள வலைப்பதிவாளருக்கு அழகில்லேங்கிறதை மட்டும் சொல்லிப்புட்டேன்...ஆமா...!//

நன்றிங்க.. ஒரு முக்கியமான நிகழ்ச்சியில பிசியா இருந்ததால, படம் நேத்துத்தான் பார்த்தேன்..:-))

//கே.சந்துரு said...
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி கார்த்திகை பாண்டியன் .. எனது பெயர் மூர்த்தி அல்ல .. சந்துரு .//

தகவல் பிழை..மாத்திட்டேன் நண்பா

அண்ணாமலையான் said...

லேட்டா ஏறி லேட்டஸ்ட்டா எழுதிட்டீங்க..

Santhappanசாந்தப்பன் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்கண்ணே!

கலக்கல்!!

வால்பையன் said...

ஆரம்பம் செம நக்கலு!

Unknown said...

//(கவுண்டமணி - செந்தில் மற்றும் அஜித் - விஜய் என்று இருப்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் / வேண்டாம் என்று வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்//

உள் குத்து.. :))

vasu balaji said...

ஓஹோ. இந்த பாணி நல்லாருக்கே:))

Ivan Yaar said...

Does any one in Tamilnadu have guts to question about how Dhayanidhi Alagiri got so much money to finance cinema???

ப்ரியமுடன் வசந்த் said...
This comment has been removed by the author.
ப்ரியமுடன் வசந்த் said...

கார்த்தி எங்க தலைவர் நம்ம எவ்வளவு கும்முனாலும் திருந்தமாட்டேன்றாரே என்ன செய்ய? நீங்களே நல்லா நடிச்சுருக்கார்ன்னு சொல்றமாதிரி ஒரு நாளாவது நடிக்காமயா போய்டுவார்?

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....

வாத்தியாரய்யா 31ந் தேதி மதுரை எப்படி இருந்துச்சு அதப்பத்தி எழுதவே இல்லை...

மேவி... said...

ரைட்டு ......படம் முழுக்க சிரித்து சிரித்தே வசனங்களை கேட்க முடியாமல் போயிருச்சு ......அதுக்காகவே இன்னொரு பார்க்க வேண்டும் போல் இருக்கே


பிகு - அவர்கள் அந்த "லாலாக்கு டோல் டப்பிமா" வில் சொன்ன அந்த இலக்கிய கருத்தை பற்றி நீங்கள் கொஞ்சமாச்சு சொல்லிருக்கலாம்.:)))

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்.....

க.பாலாசி said...

அஜித் விஜய் கமெண்ட் சூப்பர்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//அண்ணாமலையான் said...
லேட்டா ஏறி லேட்டஸ்ட்டா எழுதிட்டீங்க..//

ரொம்ப நன்றிண்ணே..

//பிள்ளையாண்டான் said...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்கண்ணே!கலக்கல்!!//

நன்றி நண்பா

//வால்பையன் said...
ஆரம்பம் செம நக்கலு!//

பலசரக்குக் கடையில நாம பேசிக்கிட்ட விஷயம் தான தல.. :-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//முகிலன் said...
உள் குத்து.. :))//

அதேதான் ..:-)

//வானம்பாடிகள் said...
ஓஹோ. இந்த பாணி நல்லாருக்கே:))//

தாங்க்ஸ் பாலா சார்..

//Ivan Yaar said...
Does any one in Tamilnadu have guts to question about how Dhayanidhi Alagiri got so much money to finance cinema???//

come on boss.. its an open secret.. am not ready to get into these politics.. just watch the cinema and enjoy.. thats it..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
கார்த்தி எங்க தலைவர் நம்ம எவ்வளவு கும்முனாலும் திருந்தமாட்டேன்றாரே என்ன செய்ய? நீங்களே நல்லா நடிச்சுருக்கார்ன்னு சொல்றமாதிரி ஒரு நாளாவது நடிக்காமயா போய்டுவார்?//

நம்பிக்கை இருக்கலாம் நண்பா.. ஆனா அவர் நடிப்பார் என்பது மூட நம்பிக்கை மாதிரி படுதே..:-)))

// Sangkavi said...
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....
வாத்தியாரய்யா 31ந் தேதி மதுரை எப்படி இருந்துச்சு அதப்பத்தி எழுதவே இல்லை...//

நாளைக்கு காலையில பதிவுல இருக்கும்ணே.. போட்டோக்களுக்காக வைட்டிங்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// டம்பி மேவீ said...
ரைட்டு ......படம் முழுக்க சிரித்து சிரித்தே வசனங்களை கேட்க முடியாமல் போயிருச்சு ...... அதுக்காகவே இன்னொரு பார்க்க வேண்டும் போல் இருக்கே //

:-)))))))))

//ஆ.ஞானசேகரன் said...
கலக்கல்.....//

நன்றி தலைவரே

// க.பாலாசி said...
அஜித் விஜய் கமெண்ட் சூப்பர்...//

நன்றி பாலாஜி

Anonymous said...

விஜய் அஜித் பேச்சு செம கலக்கல் மாப்ஸ்...

சூப்பரா இருக்கு விமர்சனம்!

M.G.ரவிக்குமார்™..., said...

நீங்க பாத்த டிவிடி பிரிண்ட் எப்படி இருந்திச்சு!...

கார்த்திகைப் பாண்டியன் said...

//She-nisi said...
விஜய் அஜித் பேச்சு செம கலக்கல் மாப்ஸ்...சூப்பரா இருக்கு விமர்சனம்//

வாங்க தலைவரே.. என்னத்த சொல்றது.. கவிஞரும் இப்போ விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க போல..

//நேசன்..., said...
நீங்க பாத்த டிவிடி பிரிண்ட் எப்படி இருந்திச்சு!...//

என்னது.. மதுரையில தமிழ்ப்படம் டிவிடியா.. என்ன சின்னப்புள்ளத்தனமா கேட்டுக்கிட்டு?

DR said...

"காதலில் விழுந்தேன்" படத்துக்கு ரிலீஸ் நாளுக்கு முன்னாடியே எங்களால் திருட்டு டிவிடி வெளியிட முடியும், அதே நேரத்தில் "தமிழ் படம்" ரிலீஸ் ஆகி ஒரு மாசம் கழிச்சும் டிவிடி கெடைக்காத மாதிரி பண்ணாவும் முடியும்...

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Dinesh

ஆகா.. யாரோ ஒரு விவரம் தெரிஞ்ச மதுரை பார்ட்டி போல இருக்கே.. அப்படியா நண்பா?

cheena (சீனா) said...

சூப்பர் விமர்சனம் கார்த்தி

நேத்துதான் படம் பாத்தோம் -

நல்வாழ்த்துகள் கார்த்தி

கார்த்திகைப் பாண்டியன் said...

@ cheena (சீனா)

அம்மாவும் பார்த்தாச்சா? சரி ரைட்டு.. நன்றி ஐயா..

Guru Prasath said...

As you mentioned in Narsim blog, I liked the Kakka Kakka nakkal. "Mr. Anbuselvan....yennadhu..." remarking about the Coke can thrown on his Jeep.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Guru prasath

thanks boss..:-))