February 25, 2010

உக்கார்ந்து யோசிச்சது (25-02-2010)..!!!

கடைசியாக அது நடந்தே விட்டது. ஒரு நாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் என்பதை நம் சச்சின் சாதித்து இருக்கிறார். இருபது வருடங்கள் கிரிக்கெட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். 1999 உலகக்கோப்பையின் போது அவருடைய தந்தை மரணம் அடைந்த சூழலிலும் நாட்டுக்காக விளையாடியவர். அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒருவரால் இந்த சாதனை படைக்கப்பட்டிருப்பதுதான் எத்தனை பொருத்தம்? மென்மேலும் சச்சின் பட்டையைக் கிளப்ப வேண்டும். அவருடைய விளையாட்டு வாழ்வில் ஒரே ஒரு குறை இருக்கிறதென்று சொன்னால், அது உலகக்கோப்பை மட்டுமே. 2011யில் அந்தக் கனவும் நிறைவேற சச்சினுக்கு வாழ்த்துகள்.

***************



மேலே இருக்கும் காடு போன்ற இடம் என்னவென்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாத்தியமான திருமண மண்டபம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் இது. பெரியார் பேருந்து நிலையத்தை ஒட்டி, மதுரையின் மையப்பகுதியான எல்லிஸ் நகரில் இந்த இடம் இருக்கிறது.


எனக்குத் தெரிந்து கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக இப்படித்தான் எந்த விதமான கவனிப்பும் இன்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஏன் இப்படி? யாருக்குமே பலனில்லாமல் இந்த இடம் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இதை கொஞ்சம் சுத்தம் செய்து வாழ்விடம் இல்லாத நடைபாதை மக்கள் தங்குவதற்கான மண்டபம் போல கட்டினாலாவது அவர்களுக்கு பயன்படுமே? அல்லது உருப்புடியாக எந்தவொரு விஷயத்துக்காகவாவது உபயோகப்படுத்திக் கொள்ளலாமே? பொறுப்பில் உள்ளவர்கள் யோசிப்பார்களா?

***************

சமீபத்தில் உறவினரின் திருமணத்துக்காக கோவை சென்று வந்த நண்பரொருவரின் அனுபவம் இது. உக்கடத்தில் இருந்து காந்திபுரம் செல்வதற்காக பேருந்தில் ஏறி இருக்கிறார். மதுரை மக்களுக்குத்தான் படியில் தொங்குவதில் அலாதி பிரியமாச்சே... நம்மாளும் வாசலில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அருகில் வந்த நடத்துனர் இவரிடம் கத்தி இருக்கிறார்.

"மேல ஏறி வாங்க சார்.. நீங்களே ஓசிங்க.. நான் மத்த டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா?"

நம்மாளுக்கு கெட்ட கோபம் வந்து பதிலுக்கு கத்தியிருக்கிறார்.

"ஏய்.. யாரப் பாத்து ஓசின்னு சொன்ன.. கொன்னுபுடுவேன்.. காசையும் வாங்கிக்கிட்டு லந்த கொடுக்குறியா?"

இவரின் வேகத்தை பார்த்து நடத்துனர் அரண்டு போய் விட்டார் போல... அப்புறம் தான் தெரிகிறது.. "யோசிங்க" என்பது தான் "ரோசிங்க" என்று மாறி "ஓசிங்க.." ஆகி இருக்கிறது.

ஊருக்கு ஊர் பாஷை மாறுவதால் வரும் பிரச்சினை. என்ன கொடுமை சார் இது? மதுரையில் வெகு சாதரணமாக புழங்கும் "ம*ரு" என்ற வார்த்தையை கோவையில் இருக்கும் நண்பனிடம் சொல்லி நான் டன் டன்னாக வாங்கிக் கட்டியது நினைவுக்கு வந்தது. சிரித்துக் கொண்டேன்.

***************

ஒரு மனிதனால் இத்தனை உருகி உருகி காதலிக்க முடியுமா என்று திகைக்க வைக்கிறது யூமா.வாசுகியின் "மஞ்சள் வெயில்". அகல் வெளியீடு. நாவல் என்று சொல்லாமல் மிக நீண்ண்ண்ண்ண்ட கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். ஜீவிதா என்ற பெயருடைய யாரையேனும் சந்திக்க மாட்டேனா என்று ஏங்க வைத்து விட்டது புத்தகம். "கடலலைகள் கழுவிச் சென்ற கரையின் ஓரமாக நடந்து செல்லும் சிறு குழந்தையின் கட்டை விரல் பதிவைப்போல சுழிந்திருக்கிறது உங்கள் நாபி ஜீவிதா.." அத்தனை அழகான வர்ணனைகள் புத்தகம் முழுதும் விரவிக் கிடக்கின்றன.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் புத்தகம் பற்றிய முழுமையான அறிமுகப்பதிவொன்று எழுதும் ஆசை இருக்கிறது. காதலித்தவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்கும் எண்ணம் கொண்டவர்கள், காதலை ரசிப்போர் என அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்த நண்பர் யாத்ராவுக்கு நன்றி. (தவிர்க்க முடியாத கல்லூரிப்பணியின் காரணமாக உங்கள் திருமணத்துக்கு வரமுடியவில்லை.. மன்னியுங்கள் நண்பா..)

***************

கர்ணமோட்சம் - தேசிய விருது பெற்றிருக்கும் தமிழின் முதல் குறும்படம். அன்புக்குரிய எஸ்ராவின் கதை, வசனத்தில் உருவாகி இருக்கிறது. கூத்துக்கலையின் வீழ்ச்சியையும், இன்றைய சமூகத்தின் அலட்சியத்தையும் உள்ளத்தை உருக்கும்படியாக படம் படித்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற படங்களால் ஏதேனும் விழிப்புணர்வு உண்டானால் சரி. படத்தினைக் காண நண்பர் பிரசன்னா ராசனின் தளத்துக்கு செல்லுங்கள்.

(தகவல் பகிர்வுக்கு நன்றி - செல்வேந்திரன்)

***************

"விண்ணைத் தாண்டி வருவாயா" - கவுதமின் படங்கள் எப்போதுமே என்னைக் கவர்ந்தது கிடையாது. "காக்க காக்க" தவிர மற்ற எல்லா படங்களுமே என்னை கொலையாய் கொன்றவை. இது போதாதென்று குருவி, ஆதவன் என்று தமிழ் சினிமாவை சூறாவளியாய் தாக்கிக் கொண்டிருக்கும் "ரெட் ஜெயன்ட்" வெளியீடு என்பதாலேயே நான் கொஞ்சம் பயந்து போய் தான் இருக்கிறேன். இசைப்புயல் வேறு மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ரொம்பவே வித்தியாசமான இசையைக் கொடுத்து இருக்கிறார். என்ன நடக்கப் போகிறதோ? சிம்புவின் நேரம் எப்படி.. நாளை தெரிந்து விடும்.

***************

ஒரு அழைப்பு..

சந்திப்பு, மதுரை அன்புடன் அழைக்கிறது..

கலாப்ரியாவின் "நினைவின் தாழ்வாரங்கள்" நூல் அறிமுகம்

தலைமை: நா.முருகேசப்பாண்டியன்

வரவேற்புரை: சமயவேல்

கருத்துரை: சுந்தர் காளி, யவனிகா ஸ்ரீராம், திருச்செந்தாழை, லிபி ஆரண்யா, கடற்கரய், ரமேஷ் பிரேதன், ஜெயமோகன்

ஏற்புரை: கலாப்ரியா

நாள்: 28-02-2010 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை பத்து மணி

இடம்: ஹோட்டல் பிரேம் நிவாஸ், மதுரை

பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

22 comments:

Prabu M said...

நல்லா ஓசிச்சிருக்கீங்க நண்பா!! ;)

அழகான தொகுப்பு....
பாஷைக் குளறுபடி ரசிக்க வைத்தது!! :)

Raju said...

ஒரு ஊரில் சாதரணமாக புழங்கும் வார்த்தை மற்றோர் ஊரில் மாபெரும் கெட்டவார்த்தய்யா இருக்கு..!
எனக்கு இது போல பல அனுபவங்களுண்டு..

அன்பேசிவம் said...

நண்பா, மிக்க நன்றி. கருணமோட்சத்தை தேடிக்கொண்டிருந்தேன். நன்றி பிரசன்னாவிற்கும்.

சச்சின் நிச்சயம் உலகக்கோப்பையை வாங்கி கொடுத்துட்டுதான் போவார். மார்க் மை வேர்டஸ்.

:-)

Anbu said...

\\\கவுதமின் படங்கள் எப்போதுமே என்னைக் கவர்ந்தது கிடையாது.\\\

கவுதம் என்பவரால் தான் நான் சூர்யாவின் தீவிர விசிறி ஆனேன்...


பதிவு அருமை அண்ணே..

ஈரோடு கதிர் said...

வடிவேலுவின்....
ஏறி...வாய்யா....
ஏரி வாயா ஆனமாதிரி

☀நான் ஆதவன்☀ said...

’மஞ்சல் வெயில்’ ஒரு அருமையான காதல் கவிதை தான் :) படிக்கும் நம்மையே கதையின் நாயகனாக மாற்றிவிடும்.

மதுரையில புழங்குற வார்த்தைன்னு * போட்டு மறைச்சுட்டீங்களே நண்பா. புழங்குற வார்த்தைன்னா டக்குன்னு சொல்ல வேணாமா :)

vasu balaji said...

அட! இது உக்கார்ந்து ஓசிச்சதா:))

Unknown said...

இதத் தாங்க ஆஸ்திரேலியாக்காரனுவளும் சொல்றாய்ங்க.. அவங்க ஊர்ல “லக்கி பாஸ்டர்ட்” அப்பிடின்னு சொன்னா சிரிச்சிக்கிட்டே போயிடனுமாம்.. நம்ம ஊர்ல சொன்னா??

Unknown said...

நல்லா ஓசிக்கரிங்க போங்க..

ஜெட்லி... said...

நானும் அதன் அண்ணே யோசிக்கிறேன்...
நாளைக்கு போறதா வேணாமானு.....
லவ்னு சொல்லி ஓவரா பண்ணுவாரு கௌதம்.

அத்திரி said...

// ஜெட்லி said...
நானும் அதன் அண்ணே யோசிக்கிறேன்...
நாளைக்கு போறதா வேணாமானு.....
லவ்னு சொல்லி ஓவரா பண்ணுவாரு கௌதம்.//



இப்படி சொன்னா எப்படி ஜெட்லி.....ஒழுங்கு மருவாதயா நாளை மதியம் படம் பாத்துட்டு விமர்சனம் போடுற இல்ல...............

அப்புறம் புரொபசர் நமக்கும் இதே நிலமைதான். சென்னையில ஓ... இந்த வார்த்தை அடிக்கடி வந்திடும்.... ஆனா எங்க ஊருக்கு போனா கப்சிப்......

க.பாலாசி said...

ஓசிச்சது நல்லாவே இருக்குங்க...

அந்த போர்டுக்கு மட்டும் அப்பப்ப பெயிண்ட் அடிப்பாங்க போலிருக்கு....

இராகவன் நைஜிரியா said...

நல்லாவே யோசிச்சு இருக்கீங்க.

Prabhu said...

ஜீவிதா என்ற பெயருடைய யாரையேனும் சந்திக்க மாட்டேனா என்று ஏங்க வைத்து விட்டது புத்தகம்.////

வயசு கோளாறு.. . சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணி வைங்கப்பா....

வெங்கட் said...

சில சமயம் இந்த மாதிரி வார்த்தைகள்
நம்மை மாட்டி விடுவது உண்டு..

Anonymous said...

நாளிக்கு வி.தா.வ. எழவு தானா

Unknown said...

2011 உலகக்கோப்பை நமக்கு தான்...,

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கலான பதிவில் அசத்தியிருக்கீங்க கார்த்திக்.

///"மேல ஏறி வாங்க சார்.. நீங்களே ஓசிங்க.. நான் மத்த டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா?"

நம்மாளுக்கு கெட்ட கோபம் வந்து பதிலுக்கு கத்தியிருக்கிறார்.

"ஏய்.. யாரப் பாத்து ஓசின்னு சொன்ன.. கொன்னுபுடுவேன்.. காசையும் வாங்கிக்கிட்டு லந்த கொடுக்குறியா?"

இவரின் வேகத்தை பார்த்து நடத்துனர் அரண்டு போய் விட்டார் போல... அப்புறம் தான் தெரிகிறது.. "யோசிங்க" என்பது தான் "ரோசிங்க" என்று மாறி "ஓசிங்க.." ஆகி இருக்கிறது. ///

:)))

செம சூப்பர் . இந்த மாதிரி பாஷை கவனிக்கபட வேண்டியது. எனக்கும் அப்படி ஒரு சம்பவம் உண்டு. தமிழ்நாட்டுல எத்தனை எத்தனை ஷ்லாங் பார்த்தீங்களா..


அருமையான பதிவு ரொம்ப சூப்பர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

உக்கார்ந்து நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க கார்த்திக்.

சொல்லரசன் said...

//சமீபத்தில் உறவினரின் திருமணத்துக்காக கோவை சென்று வந்த நண்பரொருவரின் அனுபவம் இது.//

அந்த நண்பர் தீபாவளி பாண்டியன்தானே?

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

ஓசி - மதுரக்காரனுங்களுக்கு மூக்கு மேலே கோபம் வருமே - என்ன செய்றது ...

சச்சின் உலகக் கோப்பையைக் கைப்பற்ற பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துகள்

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நிச்சயம் கவனிக்கும் - நம்பிக்கை இருக்கிறது

நாளைக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்குப் போறீங்களா - முடிஞ்சா போன் பண்ணுங்க - அங்க சந்திக்கலாம் - ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருக்கற பிரேம் நிவாஸ் தானே

Dhavappudhalvan said...

இதேபோல எனக்கும் ஒரு முறை ஏற்ப்பட்டது. ஒரு தெரிந்தவர் வீட்டிற்கு ஒரு சமயம் செல்ல நேரிட்டபொழுது, தெலுங்கு மொழியில் மீன் சாப்பிடுவீர்களா என கேட்டது, நாங்கள் படுக்கும் பாயை குறிக்கும் அர்த்தத்தை கொடுக்க, எதோ புதிய உணவு என நினைத்து மறுத்து விட்டேன். பிறகு விசாரித்தபோது தெரிந்தது, அது மீன் உணவு என்பது. சைவஉணவு சாப்பிடும் நான், புதிய வகைஉணவு என நினைத்து சரியென சொல்லியிருந்தால், என் நிலை எப்படியிருந்திருக்கும்