February 10, 2010

தமிழ்ப்பதிவு - இது சத்தியமா வித்தியாசமான பதிவுங்கோ..!!!

டிஸ்கி 1 : இந்த இடுகை முழுக்க முழுக்க கற்பனை கிடையாது என்றாலும், முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட இடுகை.. நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்கின்ற நம்பிக்கையிலேயே எழுதுகிறேன்..

டிஸ்கி 2 : இடுகையில் எந்த விதமான குறியீடோ, உள்குத்தோ, வெளிகுத்தோ கிடையாது என்பதை தெளிவாக சொல்லி விடுகிறேன்..

டிஸ்கி 3 : இடுகையில் லாஜிக் தேடுபவர்களுக்கு கும்மாங்குத்து விழும் என்பதையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்..

மெட்ராசின் (கவனிங்க.. சென்னை இல்ல.. சோ இது கற்பனைதான.. ) முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியரின் வீடு.

"என்னதான் சொல்றான் உன்னோட பையன்?"

"அவனுக்கு கண்டிப்பா கம்ப்யூட்டர் படிக்கணுமாம்.."

"அஞ்சு வயசுலையே அவனுக்கு இவ்ளோ திமிரா? அவன என்ன பண்றேன் பாரு.."

கோபமாகக் கத்தியவரின் மனசில் மேலாளர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

"இந்தக் கம்பெனியில வேலை பாக்குரவங்களோட பிள்ளைங்க என்ன வேணுனாலும் படிக்கலாம்.. ஆனா கம்ப்யூட்டர மட்டும் தொடக் கூடாது. ஏன்னா.. அத படிச்சுப்புட்டு, ஏதாவது ஒரு டப்பா காலேஜ்ல சேர்ந்து இஞ்சினியரிங் படிக்க வேண்டியது.. அப்புறம் வேலைக்கு சேர்ந்து ஆபிசுல வேலையைப் பார்க்காம மொக்கையா பதிவெழுதி மனுஷங்க உசிர வாங்க வேண்டியது.. வேண்டாம்டா சாமி.. அதை மீறி யாராவது புள்ளங்கள கம்ப்யூட்டர் படிக்க வச்சா.. இந்தா.. முருகா முருகானு பொலம்பிக்கிட்டே இருப்பாரே.. நம்ம டுபாக்கூர் தமிழன்.. அவரோட பதிவு அத்தனையும் ஒரே நாள்ல படிக்கனும்கிரதுதான் தண்டன.."

ஒரே நாள்ல அத்தன பதிவும்? நெனக்கும்போதே அப்பாவுக்கு கண்ணக் கட்டுது. "இவன இப்படியே விடக்கூடாது. நாளைக்கு நம்ம பாடு திண்டாட்டம் ஆகிடும். இன்னைக்கு உன்னைய பொலி போட்டுடுறேண்டா.." கோபமா எந்திரிச்சு உள்ள வாரார்.

அப்பாக்கிட்ட மாட்டினா பிரபல பதிவர் ஆகணும் அப்படிங்குற லட்சியம் என்ன ஆகுறது? சோ நம்ம ஹீரோ வீட்ட விட்டு ஓடி வரார். வந்து சேர்ற இடம்.. ஒரு பிளேடு தயாரிப்பாளரோட வீடு. வேல பார்த்துக்கிட்டு அங்கேயே வளர ஆரம்பிக்கிறார்.

ஒரு நாள் ஓனர்கிட்ட போய் சொல்றார். "எவ்வளவுதான் நான் நெஜ பிளேடு மட்டும் செஞ்சுக்கிட்டு இருக்குறது? நான் பெரியவனாகனும். பிரபல பதிவர் ஆகணும். பதிவு எழுதி பிளேடு போடணும்.அதுக்கு ஏதாவது பண்ணுங்க.."

மொறச்சு பார்க்குற ஓனர் பையனோட கையில ஒரு எலிப்பொறியத் தரார். இது எதுக்குன்னு கேப்பீங்க? பதிவு எழுத கம்ப்யூட்டர் வேணும்ல.. அதோட மவுசும் (Mouse ) வேணும்ல.. நம்ம லாஜிக் எப்பூடி?

பொறிய வச்சு எலியப் பிடிக்கிறார் நம்ம ஹீரோ. அத ஆசையா தடவிக் கொடுக்கிறார். இப்போ க்ளோசப்புல கையையும் எலியையும் காட்டுறோம். ஜூம் அவுட் பண்ணினா, நம்ம ஹீரோ வளர்ந்துட்டார்.

பதிவு எழுதணும். பல பேர மெண்டல் ஆக்கணும். வெறியோட அலையுறார் நம்ம ஹீரோ. என்ன பண்ணாலாம்னு யோசிச்சுக்கிட்டு சிஸ்டத்த நோண்டிக்கிட்டு இருக்கும்போதுதான் எதேச்சையா அந்தப் பதிவு கண்ணுல பட்டுது.

சூரத்தில் இருக்குற நக்கல் மன்னன், லேட்டஸ்ட் இலக்கியவாதி, கவிஞர் டொக்ளசொட பதிவு.

"பிரபல பதிவர் ஆக பத்து எளிய வழிகள்"

1. பேரக் கேட்டவுடனே சும்மா எல்லாரும் டர் ஆகுற மாதிரி ஒரு பேர்ல எழுத ஆரம்பிங்க. உ.ம்: டர்சிம்னு வச்சுக்கலாம். பழைய காலத்து இலக்கியத்துல எல்லாம் பாட்டா எழுதி இருக்காங்க? எல்லாம் அடாசு.. புரியாத மொழி.. மனுஷன் படிப்பானான்னு சங்க காலத்துப் புலவன எல்லாம் வம்புக்கு இழுத்தா நீங்கதான் அடுத்த "கார்ப்பரேட் வம்பர்".

2. பதிவுல கெலிக்க சினிமா ரொம்ப முக்கியம். யாரையாவது பிடிச்சு இன்டஸ்டிரியில நுழைஞ்சிடனும். அப்புறம் ஒரு நாளைக்கு நாலு படம் பார்த்து அஞ்சு விமர்சனம் எழுதணும். ஒரு டேபிள போட்டு ஹாயா உக்கார்ந்துக்கிட்டு எல்லாப் படத்தையும் பட்டி பார்த்து டிங்கர் பண்ணி கிழிச்சா நீங்கதான் "டேபிள் டிங்கர்". கூடவே "வுமன் ப்ரீயும், ரெண்டு பிட் ஷக்கீலாவும்" னு புக் கூடஎழுதலாம்.

3. எல்லார் பதிவையும் படிச்சு பின்னூட்டம் போடணும். சரக்கு பத்தி கவிதை எழுதணும். சாமி இருக்குன்னு யாராவது சொன்னா ஓடிப்போய் அவங்கள ஓட்டு ஓட்டுன்னு ஓட்டனும். மத்தவங்கள நக்கல் பண்றதுதான் என் வாழ்க்கையோட கோல்னு (Goal ) சொல்றவர்தான் கோல்பையன். நீங்க சொல்றதுதான் சரின்னு கூடவே ஒரு ராமன்அம்பிகாகுணாளனும் சேர்ந்துக்கிட்டா ஒரே மஜாதான் போங்க.

4. லக்கு, லுக்கு, டக்குன்னு காமிக்ஸ்ல வர ஒரு நல்ல கேரக்டரா பார்த்து பேர் வச்சுக்கோங்க. அவர மாதிரி ஒரு எழுத்தாளர் உண்டான்னு யாரவது ஒரு இலக்கியவாதிய தலையில தூக்கி வச்சு ஆடனும். சகட்டு மேனிக்கு எல்லாரையும் கிண்டல் பண்ணனும். யாரைப் பத்தியும் கவலைப்படாம தெனாவட்டா இருக்கணும். அதுக்கு மேலயும் யாரவது அடிக்கிறதுக்கு வந்தா, "ஓடப் பிறந்தவன்.. ஒளிய மாட்டேன்னு" ஸ்லைடு போட்டுட்டு.. எஸ்கேப் மாமு எஸ்கேப்.

5. எதை எழுதினாலும் சுவாரசியமா எழுதணும். அட்டு பிகரும் பிட்டு படமும், வீணாப்போன சாதியும் பரங்கிமலை ஜோதியும்.. இந்த மாதிரி அஜால் குஜால் மேட்டரும் எழுதணும். ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தாராம்னு டகல்பாஜி கதையும் சொல்லணும். யாராச்சும் கேட்டா இதுதாண்டா ஜென்னு, நீ தின்னுக்கடா பன்னுன்னு உதார் விடணும். இப்போத் தெரிஞ்சிருக்குமே.. அடுத்த மிதிஷா நீங்கதான்.

6. நடிக்கவே தெரியாத ஒரு நடிகர செலக்ட் பண்ணும். இவர மாதிரி ஒருத்தர் உண்டானு எவ்வளவு அடிச்சாலும் ஸ்டிராங்கா கொடி பிடிக்கணும். அப்பப்போ குட்டிக் கதையும் எழுதணும். வீட்டு ஜன்னல் வழியா உள்ள நுழையுற காத்து மாதிரி எல்லார் மனசுலயும் இடம் பிடிக்கணும். உங்க பதிவு எல்லாம் பார்ல வச்ச தீ மாதிரி எல்லார்கிட்டயும் பரவினா, நீங்கதான் பார்த்தீ.

7. பதிவுலக நண்பர்கள் எல்லாரையும் ஒழுங்கா வழிநடத்தனும். நண்பர்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மொத ஆளா நிக்கணும். எதுன்னாலும் நம்ம தலைவர் இருக்காருன்னு அப்பத்தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். அதனால, மத்தவங்கள பிரச்சினைல இருந்து பெயில்ல எடுத்தா, நீங்கதான் பெயிலான்.

8. குறும்படம் இயக்கலாம். கூடவே தெனமும் ஒரு பதிவாவது போடணும். இல்லைன்னா கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடும். இதுக்கு பதிவோபோபியான்னு பேரு. அதனால, தெனமும் எழுதுறேன்... பார்த்துக்கோ பார்த்துக்கோன்னு தண்டோரா போட்டுக்கிட்டே இருந்தோம்னா.. ஈசியா பிரபல பதிவர் ஆகிடலாம்.

9. ஒலக சினிமா பாக்குறது பதிவருக்கு அழகு. தமிழ்ல எல்லாம் படமா எடுக்குறானுங்க.. ஹங்கேரி, ஜெர்மனி, பிரான்ஸ் மாதிரி வருமான்னு சொல்லிக்கிட்டு யாருமே பாக்காத படத்தப் பத்தி பேசிக்கிட்டே இருக்கனும். கையில ஒரு காமிரோவோட நம்ம போட்டோவ எடுத்து தளத்துல போட்டுக்கிட்டோம்னா ஒரு அறிவுஜீவி லுக்கு வந்திரும். எல்லா படத்தையும் பாக்கி வைக்காம பார்த்தா நீங்கதான் "பாக்கி சேகர்".

10 . நெறைய கார்ட்டூனை எடுத்துக்கலாம். நம்ம மனசுல தோனுற கமெண்டை போடுறோம். படிக்குறவன் எல்லாம் தெறிச்சு ஓடனும். எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோனுதுன்னு அவனவன் டரியல் ஆகணும். உங்ககிட்ட பேசுனா விசு கூட தோத்துருவாறு அப்படின்னு சொல்ற அளவுக்கு மக்கள் நோக விட்டா, நீங்கதான் விசும்பன்.

11. இல்லையா.. இருக்கவே இருக்கு எதிர்க்கவிதை. யாரவது கவிதை எழுதுறாங்களான்னு கண்ணு முழிச்சு பார்த்துக்கிட்டே இருக்கணும். அப்படி எழுதினவுடனே, ஓடிப்போய் எதிர்க்கவிதை எழுதணும். தண்ணி, சரக்கு, மட்டை இதெல்லாம் நடுவுல நடுவுல போட்டுக்கணும். சும்மா பறந்து பறந்து எழுதினா அதுதான் "நையாண்டி மைனா".

பதிவு பிரபலமாக இத்தன வழி இருக்கானு நம்ம ஹீரோ ஆனந்தக் கூத்தாடுறார். அப்போ ஒருத்தர் அவர்கிட்ட வந்து நீங்க இந்த வாரம் அலைச்சரம் ஆசிரியர் ஆக முடியுமான்னு கேக்குறார். அவர்தான் தீனா ஐயா.

சந்தோஷமா சமதிக்கிற நம்ம ஹீரோ அங்கயும் எழுதிக்கிட்டே தனக்குன்னு இருக்குற பதிவுல எழுத ஆரம்பிக்கிறார். அவரோட இடுகையோட தலைப்பு...

தமிழ்ப்பதிவு - இது சத்தியமா வித்தியாசமான பதிவுங்கோ..!!!

நன்றி நன்றி நன்றி

வரும் பதினாலாம் தேதியோடு நான் திரட்டிகளில் இணைந்து, ஹிட் கவுண்டர் போட்டு ஒரு வருடம் ஆகிறது. முக்கி முக்கி ஒரு லட்சம் ஹிட்ஸ்களைத் தொட்டு விட்டேன். பதிவுலக நண்பர்கள, வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

92 comments:

settaikkaran said...

சூப்பர் பதிவுண்ணே! இதைத் தான் நான் தேடிட்டிருந்தேன் இத்தினி நாளா? அப்புறம், உங்க வலைப்பதிவுக்கு வந்தவங்களை லட்சத்தில் ஒருவனாக்கியதற்கு ரொம்ப நன்றிண்ணே!

கண்ணா.. said...

ஓரு இலட்சத்திற்கும் , ஓரு வருடத்திற்கும் வாழ்த்துக்கள்.

:)

//முக்கி முக்கி ஒரு லட்சம் ஹிட்ஸ்களைத் தொட்டு விட்டேன்//


எப்பிடி முக்குனீங்கன்னு சொன்னீங்கன்னா....நாங்களும் கொஞ்சம் முக்குவோம்... :)

vasu balaji said...

ஆஹா! என்னாச்சு கார்த்தி=)). அசத்தல். முதல் ஆண்டுக்கு வாழ்த்துகள். பல ஆண்டுகள் தொடர்க:)

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

Unknown said...

நல்லா இருக்கு கார்த்திகைப் பாண்டியரே...

பதிவைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் டிஸ்கி-2 ஐப் படித்து ரசித்தேன்.

ஆமா ஒரு பாண்டியரா இருந்துக்கிட்டு எதுக்காக பொன்னியின் செல்வன்னு ஒரு சோழக் கதையைத் தலைப்பா வச்சிருக்கிங்க (பத்த வச்சாச்சு)

Athisha said...

பாசமுள்ள பாண்டியரே இதெல்லாம் அடுக்குமா?

மணிஜி said...

யோசிச்சு வச்சிருந்தேன். வடை போச்சே!

சொல்லரசன் said...

//இடுகையில் எந்த விதமான குறியீடோ, உள்குத்தோ, வெளிகுத்தோ கிடையாது என்பதை தெளிவாக சொல்லி விடுகிறேன்..//


அப்ப‌டியா!!!!!!!!!!!!!!!!!!!!!!

Ganesan said...

ஒரு லட்சம் பல லட்சியங்களாக வாழ்த்துக்கள்.

Raju said...

லேட்டஸ்ட் இலக்கியவாதியா..? அவ்வ்வ்..!
டோட்டல் டேமேஜ்..!


லட்சத்துக்கு வாழ்த்துக்கள்..!
பிப்-14. நிச்சயதார்த்தத்துக்கும் வாழ்த்துக்கள்.

Raju said...

"பிரபல பதிவர் ஆக பத்து எளிய வழிகள்" ன்னு போட்டுட்டு 11 வழிகளா..? லாஜிக் இடிக்குதேப்பா..!

hiuhiuw said...

//ராமன்அம்பிகாகுணாளனும் சேர்ந்துக்கிட்டா ஒரே மஜாதான் போங்க.//

இப்ப கனகா தாங்க ஹாட்டு !

கார்த்திகைப் பாண்டியன் said...

// சேட்டைக்காரன் said...
சூப்பர் பதிவுண்ணே! இதைத் தான் நான் தேடிட்டிருந்தேன் இத்தினி நாளா? அப்புறம், உங்க வலைப்பதிவுக்கு வந்தவங்களை லட்சத்தில் ஒருவனாக்கியதற்கு ரொம்ப நன்றிண்ணே!//

உபயோகமான பதிவா இருந்தா சரி.. ஹி ஹி ஹி.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

//கண்ணா.. said...
ஓரு இலட்சத்திற்கும் , ஓரு வருடத்திற்கும் வாழ்த்துக்கள். :)//

நன்றி நண்பா

//எப்பிடி முக்குனீங்கன்னு சொன்னீங்கன்னா....நாங்களும் கொஞ்சம் முக்குவோம்... :)//

அது கம்பெனி சீக்ரட்டு..:-)

//வானம்பாடிகள் said...
ஆஹா! என்னாச்சு கார்த்தி=)). அசத்தல். முதல் ஆண்டுக்கு வாழ்த்துகள். பல ஆண்டுகள் தொடர்க:)//

நன்னி பாலா சார்..:-)))

hiuhiuw said...

//அவர மாதிரி ஒரு எழுத்தாளர் உண்டான்னு யாரவது ஒரு இலக்கியவாதிய தலையில தூக்கி வச்சு ஆடனும்.//

நீங்க சாணிய சாரி சா.நி ய சொல்றீங்களா ?

hiuhiuw said...

//முக்கி முக்கி//

ரொம்ப கஷ்டம்தான் போங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//gulf-tamilan said...
வாழ்த்துக்கள்!!!//

நன்றிங்க

// முகிலன் said...
நல்லா இருக்கு கார்த்திகைப் பாண்டியரே...பதிவைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் டிஸ்கி-2 ஐப் படித்து ரசித்தேன்.//

நன்றி பாசு..

//ஆமா ஒரு பாண்டியரா இருந்துக்கிட்டு எதுக்காக பொன்னியின் செல்வன்னு ஒரு சோழக் கதையைத் தலைப்பா வச்சிருக்கிங்க (பத்த வச்சாச்சு)//

ஒங்க திட்டம் பலிக்காது..:-)))

//அதிஷா said...
பாசமுள்ள பாண்டியரே இதெல்லாம் அடுக்குமா?//

என்ன தல பண்றது? ஒரு பிரபல பதிவர நம்ம ஏரியாக்கு வர வைக்க இப்படி எல்லாம் பண்ண வண்டியிருக்கு.. பாசமுள்ள பாண்டியரேன்னு நீங்களே சொல்றீங்க பாருங்க.. எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு ஒரு குருட்டு தைரியம்தான்..:-))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

// தண்டோரா ...... said...
யோசிச்சு வச்சிருந்தேன். வடை போச்சே!//

நல்ல வேளை... முந்திட்டேன்..:-))

//சொல்லரசன் said...
அப்ப‌டியா!!!!!!!!!!!!!!!!!!!!!!//

அப்படித்தான்..!!!!!!!!!

//காவேரி கணேஷ் said...
ஒரு லட்சம் பல லட்சியங்களாக வாழ்த்துக்கள்.//

லட்சத்தையே லட்சியமாக்கிட்டீங்களே.. நன்றி நண்பா

நர்சிம் said...

கலக்கல் நண்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
லேட்டஸ்ட் இலக்கியவாதியா..? அவ்வ்வ்..! டோட்டல் டேமேஜ்..!//

அது..:-))

//லட்சத்துக்கு வாழ்த்துக்கள்..!//

நன்றிப்பா..

//பிப்-14. நிச்சயதார்த்தத்துக்கும் வாழ்த்துக்கள்.//

நீ பாட்டுக்கு ஏதாவது புதுசா கொளுத்திப் போட்டுட்டு போகாத ராசா

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராஜன் said...
இப்ப கனகா தாங்க ஹாட்டு !//

ராதாவுக்கு அம்பிகா அக்கா முறை வேணும்ப்பா..

// ராஜன் said...
நீங்க சாணிய சாரி சா.நி ய சொல்றீங்களா ?//

அப்படின்னா? எனக்குத் தெரியாது சாமி.. நான் எல்லாம் பச்ச புள்ளப்பா..

// ராஜன் said...
ரொம்ப கஷ்டம்தான் போங்க//

ஆமா ஆமா.. ஒரு வருஷமா.. அவ்வவ்....

// நர்சிம் said...
கலக்கல் நண்பா.//

ரொம்ப நன்றி தல..கொஞ்சம் பயம் இருந்தது :-))

hiuhiuw said...

//ராதாவுக்கு அம்பிகா அக்கா முறை வேணும்ப்பா..//

குத்த வெச்சதெல்லாம் அத்த பொண்ணு .... மத்ததெல்லாம் மாமம்பொன்னு

hiuhiuw said...

//அப்படின்னா? எனக்குத் தெரியாது சாமி.. நான் எல்லாம் பச்ச புள்ளப்பா..//

நேத்து போன பண்ணி சாணிய அப்படி திட்டினீங்க ! இப்ப அப்பிடியே நடிக்கறீங்களே ! இது நியாயமா ! ஆனா அந்தாளு நாய் வளக்கறதுக்கு நீங்க சொன்ன காரணம் இருக்கே ! காதுல கேட்டா தூக்குல தொங்கிடுவாறு

வால்பையன் said...

விழுந்து விழுந்து சிரித்து தலையில் அடிபட்டு விட்டது!

ரசித்தேன்ன்னு ஒரே வார்த்தையில் சொல்லமுடியல!

ரொம்பவே நல்லாயிருந்தது!

hiuhiuw said...

//விழுந்து விழுந்து சிரித்து தலையில் அடிபட்டு விட்டது!

ரசித்தேன்ன்னு ஒரே வார்த்தையில் சொல்லமுடியல!

ரொம்பவே நல்லாயிருந்தது!//

அவ்வளவு வு வு வு சிரிப்பாவா வா வா வா இருந்துச்சு சு சு சு !

ஜெட்லி... said...

செம நக்கல்....பிரிச்சு மெய்ஞ்சிட்டிங்க அண்ணே...

கார்த்திகைப் பாண்டியன் said...

// ♠ ராஜு ♠ said...
"பிரபல பதிவர் ஆக பத்து எளிய வழிகள்" ன்னு போட்டுட்டு 11 வழிகளா..? லாஜிக் இடிக்குதேப்பா..!//

ஏலே.. அது கட்டுடைப்பு தம்பி.. பின் நவீனத்துவம்.. (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. ஆவ்வ்வ்வ்..)

//ராஜன் said...
குத்த வெச்சதெல்லாம் அத்த பொண்ணு .... மத்ததெல்லாம் மாமம்பொன்னு//

//ராஜன் said...

//அப்படின்னா? எனக்குத் தெரியாது சாமி.. நான் எல்லாம் பச்ச புள்ளப்பா..//

//நேத்து போன பண்ணி சாணிய அப்படி திட்டினீங்க ! இப்ப அப்பிடியே நடிக்கறீங்களே ! இது நியாயமா ! ஆனா அந்தாளு நாய் வளக்கறதுக்கு நீங்க சொன்ன காரணம் இருக்கே ! காதுல கேட்டா தூக்குல தொங்கிடுவாறு//

மாமனுக்கு மொரவாசல் செய்ய நம்மால ஆகாதுப்பா... ஏற்கனவே காலேஜுல இவன் என்னடா பொட்டி முன்னாடியே இருக்கான்னுதான் பாக்குறாங்க.. இதுல இந்த அக்கப்போர் வேறவா.. நீங்க தொடருங்க.. நான் இப்போ எஸ்கேப்பு..

//வால்பையன் said...
விழுந்து விழுந்து சிரித்து தலையில் அடிபட்டு விட்டது!ரசித்தேன்ன்னு ஒரே வார்த்தையில் சொல்லமுடியல!
ரொம்பவே நல்லாயிருந்தது!//

ரைட்டு.. ரொம்ப நன்றி தல..

Anonymous said...

\\ராஜன் said...February 10, 2010 12:40 PM
வால்பையன் said...February 10, 2010 12:40 PM \\

எப்பிடிய்யா டக் டக்குன்னு லாகின் மாத்துறீங்க..?!?!

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்கு வாத்தியாரே.....

எல்லோரையும் போட்டு பின்னீட்டிங்க.....

குடந்தை அன்புமணி said...

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா.... நல்லாருக்கு கார்த்தி. இனி இதைப்போல எத்தனை இடுகை யார் யார் வலையில வர(விழ)ப் போகுதோ...

hiuhiuw said...

//எப்பிடிய்யா டக் டக்குன்னு லாகின் மாத்துறீங்க..?!?!//

அடங்கொக்கா மக்கா! கண்டுபுடிச்சுட்டானுங்க !

வால்பையன் said...

//Anonymous said...

\\ராஜன் said...February 10, 2010 12:40 PM
வால்பையன் said...February 10, 2010 12:40 PM \\

எப்பிடிய்யா டக் டக்குன்னு லாகின் மாத்துறீங்க..?!?!//


எங்களுக்கு கொரளி வித்தை தெரியும்!

hiuhiuw said...

//எப்பிடிய்யா டக் டக்குன்னு லாகின் மாத்துறீங்க..//
அது பிரபலமாக பன்னிரெண்டாவது வழி

hiuhiuw said...

//ஏற்கனவே காலேஜுல இவன் என்னடா பொட்டி முன்னாடியே இருக்கான்னுதான் பாக்குறாங்க.. இதுல இந்த அக்கப்போர் வேறவா.. நீங்க தொடருங்க.. நான் இப்போ எஸ்கேப்பு..//

பொட்டிநா என்ன ! இஸ்திரி பொட்டியா

//மாமனுக்கு மொரவாசல் செய்ய நம்மால ஆகாதுப்பா...//

அதெல்லாம் முடியாது அந்த நாய் மேட்டர இப்போ இங்க பகிரங்கமா அவுத்து விடுங்க !

☼ வெயிலான் said...

// மத்தவங்கள பிரச்சினைல இருந்து பெயில்ல எடுத்தா, நீங்கதான் பெயிலான் //

:))))))

வாழ்த்துக்கள்!!!!!

Anonymous said...

தரலு ஆகிச்ச நோடிரீ சலிப்புட கலவுவா

Anonymous said...

டோயங்கோ டுமங்கைஎரோ ....

வல்தக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்திட்டீங்க அசத்தல் ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பெயில்ல எடுத்தா, நீங்கதான் பெயிலான்.\
ஆகா நல்லா எழுதி இருக்கீங்க.. :)

சென்ஷி said...

\\பெயில்ல எடுத்தா, நீங்கதான் பெயிலான்.\

:))

☀நான் ஆதவன்☀ said...

:)))

புல்லட் said...

ஹாஹாஹா! சூப்பர் நக்கல்ஸ்..

butterfly Surya said...

hahahaha.. நல்லாயிருக்கு.

இதுதாண்டா ஜென்னு, நீ தின்னுக்கடா பன்னு/// முடியலை..

எல் கே said...

Vazhtugal pandiayre

ஹேமா said...

வாழ்த்துக்கள் கார்த்தி.
உள்குத்து ஒண்ணும் இல்லியா.
நம்பிடறோம்.

என்ன....ஒரு சேட்டை !

Unknown said...

ஹா ஹா.., நல்லா யிருக்கு

க.பாலாசி said...

அடுத்ததா பிரபலமாக ட்ரை பண்ணணும்...

ஹிட்ஸ்களுக்கும் வாழ்த்துக்கள்...

Prabhu said...

வாத்தியாரே கெளப்புங்கள்!

Anonymous said...

ஹிஹி.. செம்ம காமெடி... ரசிச்சு சிரிச்சேன்

"உழவன்" "Uzhavan" said...

ஹிட்ஸ்களுக்கு வாழ்த்துகள் தல :-)
என்ன ஸ்பூப் பதிவா?

Singa Muthu said...

உலக சினிமா கேள்விப்பட்டு இருகேன் ஆது என்ன ஒலக சினிமா :) :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
செம நக்கல்....பிரிச்சு மெய்ஞ்சிட்டிங்க அண்ணே...//

நன்றி ஜெட்லி..

//Sangkavi said...
நல்லாயிருக்கு வாத்தியாரே.....
எல்லோரையும் போட்டு பின்னீட்டிங்க.....//

:-)))))

//குடந்தை அன்புமணி said...
கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா.... நல்லாருக்கு கார்த்தி. இனி இதைப்போல எத்தனை இடுகை யார் யார் வலையில வர(விழ)ப் போகுதோ...//

ஏதோ நம்மால முடிஞ்சது நண்பா

hiuhiuw said...

//Singa Muthu//

நீங்க தான் வடிவேலுக்கு நெலம் வாங்கிக் குடுத்தவரா ?! அவ்வ்வ்வவ்வ்வ் !

கார்த்திகைப் பாண்டியன் said...

// ☼ வெயிலான் said...
:)))))) வாழ்த்துக்கள்!!!!!//

நன்றி தலைவரே

//Anonymous said...
டோயங்கோ டுமங்கைஎரோ ....
வல்தக்கள்//

ஆகா.. இது நம்ம சொள்அளகன் அண்ணாத்த மாதிரிக்கீதே

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அசத்திட்டீங்க அசத்தல் .. //

ரொம்ப நன்றி நண்பா

செ.சரவணக்குமார் said...

செம்ம காமெடி சார் நீங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said
ஆகா நல்லா எழுதி இருக்கீங்க.. :)//

:-))))))))))

// சென்ஷி said...
:))//

சரி.. ரைட்டு

// ☀நான் ஆதவன்☀ said...
:)))//

யோவ், என்னய்யா இது.. சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் சிரிப்பான மட்டும் போட்டுட்டு போய்க்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்..:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் said...
ஹாஹாஹா! சூப்பர் நக்கல்ஸ்..//

வாங்க நண்பா

//butterfly Surya said...
hahahaha.. நல்லாயிருக்கு.
இதுதாண்டா ஜென்னு, நீ தின்னுக்கடா பன்னு/// முடியலை..//

நன்றி தலைவரே

// LK said...
Vazhtugal pandiayre//

thanks boss..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...
வாழ்த்துக்கள் கார்த்தி.உள்குத்து ஒண்ணும் இல்லியா.நம்பிடறோம்.
என்ன....ஒரு சேட்டை !//

அதேதான் தோழி..:-)))

//பேநா மூடி said...
ஹா ஹா.., நல்லா யிருக்கு//

நன்றி நண்பா

//க.பாலாசி said...
அடுத்ததா பிரபலமாக ட்ரை பண்ணணும்... ஹிட்ஸ்களுக்கும் வாழ்த்துக்கள்...//

பேப்பர்ல எல்லாம் வந்தாச்சு.. நீங்க ஏற்கனவே பிரபலம்தான் பாலாஜி..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

// pappu said...
வாத்தியாரே கெளப்புங்கள்!//

நன்றி ஸ்டூடன்ட் நம்பர் 1

// நாஸியா said...
ஹிஹி.. செம்ம காமெடி... ரசிச்சு சிரிச்சேன்//

சந்தோசம்.. ரொம்ப நன்றி

// "உழவன்" "Uzhavan" said...
ஹிட்ஸ்களுக்கு வாழ்த்துகள் தல :-)
என்ன ஸ்பூப் பதிவா?//

Exactly thala..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//Singa Muthu said...
உலக சினிமா கேள்விப்பட்டு இருகேன் ஆது என்ன ஒலக சினிமா :) :)//

உங்களுக்குத் தெரியாத ஒண்ணு மாதிரி என்னன்னு கேக்க வச்சது பாருங்க, அதுதான் ஒலக சினிமா :-))))

//ராஜன் said...
//Singa Muthu//
நீங்க தான் வடிவேலுக்கு நெலம் வாங்கிக் குடுத்தவரா ?! அவ்வ்வ்வவ்வ்வ் !//

வேண்டாம்ப்பா.. பாவம்.. விட்டுருங்க..

//செ.சரவணக்குமார் said...
செம்ம காமெடி சார் நீங்க.//

அடடடா.. ரொம்பப் புகழாதீங்க தலைவா.. எனக்கு வெட்கமா இருக்குல்ல..

Jackiesekar said...

ஒலக சினிமா பாக்குறது பதிவருக்கு அழகு. தமிழ்ல எல்லாம் படமா எடுக்குறானுங்க.. ஹங்கேரி, ஜெர்மனி, பிரான்ஸ் மாதிரி வருமான்னு சொல்லிக்கிட்டு யாருமே பாக்காத படத்தப் பத்தி பேசிக்கிட்டே இருக்கனும். கையில ஒரு காமிரோவோட நம்ம போட்டோவ எடுத்து தளத்துல போட்டுக்கிட்டோம்னா ஒரு அறிவுஜீவி லுக்கு வந்திரும். எல்லா படத்தையும் பாக்கி வைக்காம பார்த்தா நீங்கதான் "பாக்கி சேகர்".///

செம நக்கல் எல்லோரையும் பின்னி எடுத்து இருக்க.. புரபசர்...
நன்றி கண்ணீல் நீர் வர ரசித்தேன்...

Jackiesekar said...

ஒரு லட்சத்துக்கு வாழ்த்து நண்பா..

நேசமித்ரன் said...

லந்து குடுக்குறதுல ம்ம் !!!

:)

அத்திரி said...

கலக்கல் புரொபசர்....... லட்சத்துக்கு வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

கலக்கல் கா.பா

வெற்றி said...

சிரிப்புப் புயலையே கெளப்பிட்டீங்க அண்ணே.. :))

சில பேரு விட்டு போச்சு..

பாதிமூளைகிருஷ்ணன்,பீ.ரா.,போங்கு,புஞ்சை பூந்தி,கஞ்சன்யா, விரிசல்காரன்,புரட்டாசி பாண்டியன் :)

டிஸ்கி : இந்த பின்னூட்டம் முழுக்க முழுக்க கற்பனை கிடையாது என்றாலும், முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பின்னூட்டம் .. நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்கின்ற நம்பிக்கையிலேயே எழுதுகிறேன்..

வினோத் கெளதம் said...

கலக்கல் தல..எல்லாமே சூப்பரு..

Unknown said...

வாத்தியாரே கலக்கிட்டிங்க..

வேலூர் ராஜா said...

தமிழ்ப்படம் மாதிரியே பதிவும் ஹிட் .கோடியாக வாழ்த்துக்கள் .

வால்பையன் said...

//புரட்டாசி பாண்டியன்//


இது நல்லாயிருக்கே!
யாராவது வந்து ஆரம்பிச்சி வையுங்கப்பா!

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜாக்கி சேகர் said...
செம நக்கல் எல்லோரையும் பின்னி எடுத்து இருக்க.. புரபசர்... நன்றி கண்ணீல் நீர் வர ரசித்தேன்... ஒரு லட்சத்துக்கு வாழ்த்து நண்பா.. //

வெளயாட்டா எடுத்து ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி ஜாக்கிண்ணே..

//நேசமித்ரன் said...
லந்து குடுக்குறதுல ம்ம் !!! :)//

மதுரைக்கார புத்தி நண்பா..

//அத்திரி said...
கலக்கல் புரொபசர்....... லட்சத்துக்கு வாழ்த்துக்கள்//

எல்லாம் உங்க ஆதரவுதாண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஈரோடு கதிர் said...
கலக்கல் கா.பா//

நன்றி கதிர்

//வெற்றி said...
சிரிப்புப் புயலையே கெளப்பிட்டீங்க அண்ணே.. :))சில பேரு விட்டு போச்சு..பாதிமூளைகிருஷ்ணன்,பீ.ரா.,போங்கு,புஞ்சை பூந்தி,கஞ்சன்யா, விரிசல்காரன்,புரட்டாசி பாண்டியன் :)//

அதெல்லாம் ரைட்டு வெற்றி.. கடைசியில பூசாரியையே பலி கொடுக்கப் பாக்குறது என்ன நியாயம்?

//வினோத்கெளதம் said...
கலக்கல் தல..எல்லாமே சூப்பரு..//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said... வாத்தியாரே கலக்கிட்டிங்க..//

நன்றி சம்பத்

//வேலூர் ராஜா said...
தமிழ்ப்படம் மாதிரியே பதிவும் ஹிட் கோடியாக வாழ்த்துக்கள் //

உங்க வாக்கு பொன்னாப் பலிக்க.. ரொம்ப நன்றிங்க

//வால்பையன் said...
//புரட்டாசி பாண்டியன்//
இது நல்லாயிருக்கே! யாராவது வந்து ஆரம்பிச்சி வையுங்கப்பா!//

வேண்டாம் தல.. எதுன்னாலும் பேசி தீர்த்துப்போம்..:-)))

சம்பத் said...

லொல்லின் உச்ச கட்டம் பாசு....

cheena (சீனா) said...

ஆகா ஆகா - ஏங்கப்பா - சூப்பரப்பு - கலக்கிட்டே போ

வி.வி.சி

ஆமா அது யார் தீனா ஐயா - ஏன் அவரு பேர மட்டும் சிவப்புல போடல - பாரபடசம் காட்டுற கார்த்தி - ம்ம்ம்ம்ம்ம்

மேவி... said...

me the 75

மேவி... said...

பிரபலம் என்று நீங்கள் எதை வைத்து முடிவு செய்றிங்க ????????

எல்லோரும் இந்த பதிவை காமெடியாக எடுதுபாங்க ன்னு எப்புடி நீங்கள் எதிர்ப்பர்க்காலம் ??????

சத்யமாக உங்களிடம் இருந்து நான் இந்த மாதிரியான பதிவை எதிர்ப்பார்க்கல .........

(வேற வேற .......)


:))))

மேவி... said...

கருத்து ரீதியாக கிண்டல் பண்ணி இருக்கலாம் .......

ரோஸ்விக் said...

ஊர்க்காரருக்கு நக்கல் ஜாஸ்தி தான். ரசிக்கும்படியா இருந்தது. குறிப்பிடப்பட்டவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி. :-)

பரிசல்காரன் said...

என்னையெல்லாம் பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு? உங்க கூட கா....

அன்பேசிவம் said...

ஹா ஹா ஹா தொப்பி தொப்பி ஹா ஹா ஹா

குசும்பன் said...

//வீணாப்போன சாதியும் பரங்கிமலை ஜோதியும்.. இந்த மாதிரி அஜால் குஜால் மேட்டரும் எழுதணும். ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தாராம்னு டகல்பாஜி கதையும் சொல்லணும். யாராச்சும் கேட்டா இதுதாண்டா ஜென்னு, நீ தின்னுக்கடா பன்னுன்னு உதார் விடணும். இப்போத் தெரிஞ்சிருக்குமே.. அடுத்த மிதிஷா நீங்கதான்.
//

சான்சே இல்லை செம கலக்கல்!

குசும்பன் said...

//ஒரு நாளைக்கு நாலு படம் பார்த்து அஞ்சு விமர்சனம் எழுதணும். ஒரு டேபிள போட்டு ஹாயா உக்கார்ந்துக்கிட்டு எல்லாப் படத்தையும் பட்டி பார்த்து டிங்கர் பண்ணி கிழிச்சா நீங்கதான் "டேபிள் டிங்கர்". //

அவருதான் கிழிஞ்சார்:))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said...
லொல்லின் உச்ச கட்டம் பாசு....//

:-)))))

//cheena (சீனா) said...
ஆகா ஆகா - ஏங்கப்பா - சூப்பரப்பு - கலக்கிட்டே போ வி.வி.சி
ஆமா அது யார் தீனா ஐயா - ஏன் அவரு பேர மட்டும் சிவப்புல போடல - பாரபடசம் காட்டுற கார்த்தி - ம்ம்ம்ம்ம்ம்//

நன்றி ஐயா.. தப்பு பண்ணிட்டேன்.. ரெண்டு மூணு பேர கலர் கொடுக்காம விட்டுட்டேன்..:-(((

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
பிரபலம் என்று நீங்கள் எதை வைத்து முடிவு செய்றிங்க ????????
எல்லோரும் இந்த பதிவை காமெடியாக எடுதுபாங்க ன்னு எப்புடி நீங்கள் எதிர்ப்பர்க்காலம் ??????
சத்யமாக உங்களிடம் இருந்து நான் இந்த மாதிரியான பதிவை எதிர்ப்பார்க்கல .........//

சிண்டு முடியணும்னா மொத ஆளா வரணும்.. இப்படி கடைசியில வந்து கிச்சு கிச்சு காட்டக்கூடாது..

//டம்பி மேவீ said...
கருத்து ரீதியாக கிண்டல் பண்ணி இருக்கலாம் .......//

கரெக்டு.. திருத்திக்கலாம்..

//ரோஸ்விக் said...
ஊர்க்காரருக்கு நக்கல் ஜாஸ்தி தான். ரசிக்கும்படியா இருந்தது. குறிப்பிடப்பட்டவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி. :-)//

அதே சந்தோஷம்தான் எனக்கும்.. நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// பரிசல்காரன் said...
என்னையெல்லாம் பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு? உங்க கூட கா..//

விடுங்க தல.. பார்ட் டூல கலக்கிருவோம்..

// முரளிகுமார் பத்மநாபன் said...
ஹா ஹா ஹா தொப்பி தொப்பி ஹா ஹா ஹா//

Nothing but wind..:-)))

//குசும்பன் said...
சான்சே இல்லை செம கலக்கல்!//

வசிஷ்டர் வாயால.. நன்றி தல..

Sanjai Gandhi said...

என்னா வாத்யாரே.. என்னாதிது.. இப்டி எல்லாம் பின்னி பெடலெடுத்தா நாங்க எல்லாம் எப்டி ராசா பொழைக்கிறது?

Annamalai Swamy said...

நல்ல நகைச்சுவையான பதிவு! நல்ல எழுதியிருகீங்க!! வாழ்த்துக்கள்!!!

Cable சங்கர் said...

கலக்கல்

இப்படிக்கு
டேபிள் சங்கர்

Jerry Eshananda said...

முக்கியதற்கு வாழ்த்துகள்.

தருமி said...

//வரும் பதினாலாம் தேதியோடு நான் திரட்டிகளில் இணைந்து, //

இணைஞ்சதே valentine's day தானா ..அதான் இம்புட்டு ஹிட்ஸ்..

gulf-tamilan said...

/விடுங்க தல.. பார்ட் டூல கலக்கிருவோம்./
பார்ட் டூ எப்ப வரும் ????

NIVETHA said...

NEENGA INTHA TECHNIQ-KA THAAN FOLLOW PANNEENGALA SIR? (ILLA NEENGALUM PIRABALA PATHIVAR THAANE)
ROMMBA NALLA IRUNTHATHU SIR.ITHU PUTHU PATHIVARGALUKKU (KUSUMBARGALUKKU) USEFULLA IRUKKUM.
"MUTHAL AANDUKKU VAAZHTHUGAL INNUM NIRAYA ACHIEVE PANRATHUKKUM VAAZHTHUGAL"