February 20, 2010

நாட்டின் பேராண்மையும் ஈனவெங்காயமும்..!!!


நிலவில் தடம் பதித்தோம்
புதிதாய் பல கோள்கள் கண்டோம்
பிறவிக் குருடர்க்கும் பார்வை தந்தோம்
எத்தனையோ அற்புதங்கள் செய்தோம்

கூடவே
மனிதமும் தொலைத்து விட்டோம்

கனவுகளில் ஏக்கமும்
வாழ்க்கையில் வறுமையும்
கொண்டலையும் மனிதருக்கு
ஒரு வேளை உணவளிக்க
வக்கில்லா விட்டாலும்
2020 இல் வல்லரசு என
கொடிபிடித்து அலைந்து திரிகிறோம்

கண்ணெதிரே தோழர்கள்
நசித்து ஒழிக்கப்பட
கண்ணிருந்தும் குருடர்களாய்
அமைதி காக்கிறோம்

காலத்தினால் வந்த மாற்றமா
அல்லது
கலங்கி நிற்கும் தேசத்தின் தலைவிதியா?

வண்ணக்கனவுகள் கூட
விழிகளில் கருப்பு வெள்ளையாக மட்டுமே
தெரிவதைப் போல
காலகட்டங்களும் மாறிப்போன கொடுமையை
என்னவென்று சொல்வது?

சீறிவரும் இளைஞரின் நாட்டுப்பற்றெல்லாம்
வேகமிழந்த சிற்றாறாய்
டிவி பார்த்து கொண்டாடிய
தேசிய தினங்களோடு
முடிந்து போகக் கூடுமோ?

பணமிருப்பவர் பாராள்வதும்
மற்றவர் அவர்தம் கால் தொழுவதுமென
வேற்றுமைகள் இல்லா சமுதாயம்
என்பது கானல்நீர்தானா?

எல்லாம் தொலைத்துவிட்டு
அனாதையாய் இருப்பவர்களிடம் வந்து
நாட்டின் பேராண்மை பற்றிப் பேசும்
அன்பான ஈனவெங்காயங்களே

இதுதான் உங்கள் சுதந்திரம் என்றால்
நீங்களும் இந்த நாடும் நாசமாய்ப் போகட்டும்

(என்னுடைய மாணவி ஜெ.நிவேதா எழுதிய கவிதை.. இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கிறார்.. சமூக அக்கறை கொண்டவர்.. ரௌத்ரம் பழகுபவர்.. இன்னும் நிறைய எழுத வேண்டும் என அவருக்கு என் வாழ்த்துகள்.. நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே )

38 comments:

வெற்றி said...

கவிதை நல்லா இருக்கு வாத்தியாரே..

சாரி..முதலில் மாணவி என்பதை வேறு மாதிரி படித்து விட்டு குழம்பி விட்டேன்..

முரளிகுமார் பத்மநாபன் said...

நண்பரே! நிச்சயம் அந்த பெண்ணுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள். வெங்காயமும் கடைசிவரியும் பெரியாரை நினைவுபடுத்துகிறது.


வரிகளில் மட்டுமே இல்லாமல் வாழ்விலும் இதே போலிருக்க எனது வாழ்த்துக்கள், ஜெ.நிவேதாவிற்கு.

Anbu said...

கலக்கல்..

வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அண்ணே. அந்த அக்காவுக்கு..

க.பாலாசி said...

மனப்புழுக்கத்தையும், ஆதங்கத்தையும் நல்லாவே சொல்லியிருக்காங்க... என்னுடைய வாழ்த்துக்களும்....

சம்பத் said...

கவிதை அருமை நண்பா...உங்களது என்று நினைத்தேன்...

வாழ்த்துக்கள் அந்த மாணவிக்கு...

ச.செந்தில்வேலன் said...

உங்கள் மாணவியின் சீற்றம் சுடுகிறது. அவர்க்கும் அவரை ஊக்குவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

பொன்.பாரதிராஜா said...

கவிதை சூப்பர் மாப்ள!!!...அப்புறம் என்ன அந்த பொண்ணையும் ப்ளாக் ஆரம்பிக்க சொல்ல வேண்டியதுதான?அம்மணிக்கு வாழ்த்துக்கள்.

லோகு said...

ம்ம்ம்... அறச்சீற்றம்.

அவங்களுக்கும் வலையுலகை அறிமுகபடுத்தினால் அவர் திறமை, இன்னும் பலரை சென்றடையும்.

வி.பாலகுமார் said...

பொறி தெறிக்கிறது. வாழ்த்துகள் நிவேதா. படத்தேர்வு அருமை கார்த்தி.

ஜெட்லி said...

செம... சில வரிகளில் அனல் தெறிக்குது...
வாழ்த்துக்கள்!!

பிரபு . எம் said...

//வண்ணக்கனவுகள் கூட
விழிகளில் கருப்பு வெள்ளையாக மட்டுமே
தெரிவதைப் போல
காலகட்டங்களும் மாறிப்போன கொடுமையை
என்னவென்று சொல்வது?//

அருமை....

நிவேதாவுக்கு வாழ்த்துக்கள்....
நல்லாசிரியர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு ஒரு சல்யூட்.. :)

I really feel proud to be your friend nanbaa :)

jaffer erode said...

//உங்கள் மாணவியின் சீற்றம் சுடுகிறது. அவர்க்கும் அவரை ஊக்குவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.//

tamilmagal said...

sathikka thudikkum en thozhi "nive"kku vazhlthukkal.

vani said...

anbula thozhie niveku valthukal....
kavathai superaka erkerathu....

கார்த்திகைப் பாண்டியன் said...

//வெற்றி said...
கவிதை நல்லா இருக்கு வாத்தியாரே..//

நன்றி தம்பி

//முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பரே! நிச்சயம் அந்த பெண்ணுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள். வெங்காயமும் கடைசிவரியும் பெரியாரை நினைவுபடுத்துகிறது.//

கண்டிப்பாக நண்பா..

// Anbu said...
கலக்கல்..வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அண்ணே. அந்த அக்காவுக்கு..//

அன்புக்கு நன்றி அன்பு :-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// க.பாலாசி said...
மனப்புழுக்கத்தையும், ஆதங்கத்தையும் நல்லாவே சொல்லியிருக்காங்க... என்னுடைய வாழ்த்துக்களும்....//

நன்றி பாலாஜி

// சம்பத் said...
கவிதை அருமை நண்பா...உங்களது என்று நினைத்தேன்...வாழ்த்துக்கள் அந்த மாணவிக்கு...//

சில நாட்களுக்கு முன் என்னுடைய மாணவி எழுதியது நண்பா.. கொஞ்சம் எடிட்டிங் வேலை மட்டுமே நம்ம பண்ணினது..:-)))

//ச.செந்தில்வேலன் said...
உங்கள் மாணவியின் சீற்றம் சுடுகிறது. அவர்க்கும் அவரை ஊக்குவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.//

நன்றி தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன்.பாரதிராஜா said...
கவிதை சூப்பர் மாப்ள!!!அப்புறம் என்ன அந்த பொண்ணையும் ப்ளாக் ஆரம்பிக்க சொல்ல வேண்டியதுதான?அம்மணிக்கு வாழ்த்துக்கள்.//

சொல்லி இருக்கேண்டா.. பார்க்கலாம்..

//லோகு said...
ம்ம்ம்... அறச்சீற்றம். அவங்களுக்கும் வலையுலகை அறிமுகபடுத்தினால் அவர் திறமை, இன்னும் பலரை சென்றடையும்.//

அவர் எழுதுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு நண்பா

//வி.பாலகுமார் said...
பொறி தெறிக்கிறது. வாழ்த்துகள் நிவேதா. படத்தேர்வு அருமை கார்த்தி.//

நன்றி பாலா..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
செம... சில வரிகளில் அனல் தெறிக்குது... வாழ்த்துக்கள்!!//

thanks thala..

//பிரபு . எம் said...
அருமை....நிவேதாவுக்கு வாழ்த்துக்கள்....நல்லாசிரியர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு ஒரு சல்யூட்.. :) I really feel proud to be your friend nanbaa :)//

பாராட்டுகள் எல்லாமே நிவேதாவைத்தான் சேரும் நண்பா.. திறமைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவது நம் கடமைதானே..:-)))

// jaffer erode said...
உங்கள் மாணவியின் சீற்றம் சுடுகிறது. அவர்க்கும் அவரை ஊக்குவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.//

:-)))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//tamilmagal said...
sathikka thudikkum en thozhi "nive"kku vazhlthukkal.//

தமிழ்மகள்? பேரு நல்லா இருக்கும்மா.. என்னோட மாணவின்னு தெரியுது.. ஆனா யாரு?

//vani said...
anbula thozhie niveku valthukal....
kavathai superaka erkerathu....//

என்னோட வாழ்த்துகளும்..:-)))

Anonymous said...

வாழ்த்துக்கள் தமிழ் பெண்ணே. வளரட்டும் உன் ரௌத்ரம். மேலும் உன் சீற்றக் கவிதைகள் வெளிவரட்டும்.

வாழ்த்துக்களுடன்

ஈழத்து தமிழன்

பாபு said...

நிவேதாவுக்கு வாழ்த்துக்கள்!
எங்கள் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு உங்களுக்கு நன்றி!
விரைவில் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க சொல்லுங்கள்!

Madurai Saravanan said...

ena vengkayam super. ungkal maanavi saarunivethaavukku valththukkal. thiramaiyaana manavarkalai veli konduvarum ungkalukku en vaalththukkal.

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
வாழ்த்துக்கள் தமிழ் பெண்ணே. வளரட்டும் உன் ரௌத்ரம். மேலும் உன் சீற்றக் கவிதைகள் வெளிவரட்டும்.
வாழ்த்துக்களுடன்
ஈழத்து தமிழன்//

வாழ்த்துக்கு நன்றிங்க

//பாபு said...
நிவேதாவுக்கு வாழ்த்துக்கள்!எங்கள் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு உங்களுக்கு நன்றி! விரைவில் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க சொல்லுங்கள்!//

நன்றி.. சொல்லி இருக்கிறேன்

//Madurai Saravanan said...
ena vengkayam super. ungkal maanavi saarunivethaavukku valththukkal. thiramaiyaana manavarkalai veli konduvarum ungkalukku en vaalththukkal.//

thanks nanba

குமரை நிலாவன் said...

நண்பரே
எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள்

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

வாழ்த்துக்களை சொல்லிடுங்க தலைவரே.

அப்படியே பிரச்சார தொனியை கொஞ்சம் கொறைச்சுக்க எழுத சொல்லுங்க...

செ.சரவணக்குமார் said...

அருமை. உங்கள் மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

சொல்லரசன் said...

//இதுதான் உங்கள் சுதந்திரம் என்றால்
நீங்களும் இந்த நாடும் நாசமாய்ப் போகட்டும்//

இப்ப‌டியே எல்லோரும் சொல்லிவிட்டு வில‌கிகொண்டால் நாடு வ‌ள‌ம்பெறுவ‌து
எப்போது?
அந்த அன்பான ஈனவெங்காயங்கத்திடம் ரௌத்ரத்தை பயன்படுத்தி அடித்து விரட்ட சொல்லுங்க‌ நாடு உருப்படும்.

உங்க மாணவிக்கு எனது வாழ்த்துகள்

dhivyabharathi said...

kavithai super!
keep it up SMS.................

இய‌ற்கை said...

wishes to nivetha.. and her teacher:-)

gayathri said...

உம் மனம் அறிந்தோம இக்கவிதை வடிவில்

என் அன்புகனிந்த வாழ்த்துக்கள் தோழி .

தமிழ்மகள் said...

தங்கள் கணிப்பு சரியே. நன் தங்களின் மாணவியே.

NIVETHA said...

THANK YOU TO ALL.THANK YOU SIR.

NIVETHA said...

THANK YOU TO ALL.THANK YOU SIR.

NIVETHA said...

வாழ்த்துகள் சொன்ன எல்லோருக்கும் நன்றிகள் பல."கை தருவதற்கு தோழர்கள் இருந்தா இந்த ஈன வெங்காயமும் ரௌத்திரம் பழகுவா"நன்றி தோழரே .என்னை அறிமுகப்படுத்திய உன்னத(KARTHICK SIR) வழிகாட்டிக்கும் நன்றி -னு ஒரே வார்த்தை சொல்லிட முடியாது அதுக்கும் மேல.

NIVETHA said...

வாழ்த்துகள் சொன்ன எல்லோருக்கும் நன்றிகள் பல."கை தருவதற்கு தோழர்கள் இருந்தா இந்த ஈன வெங்காயமும் ரௌத்திரம் பழகுவா"நன்றி தோழரே .என்னை அறிமுகப்படுத்திய உன்னத(KARTHICK SIR) வழிகாட்டிக்கும் நன்றி -னு ஒரே வார்த்தை சொல்லிட முடியாது அதுக்கும் மேல.

என்னைத் தேடி said...

வாழ்த்துகள் நிவேதா

கண்ணகி said...

ரொளத்ரம் தொடரட்டும்...

நசரேயன் said...

கடையை ஆரமிக்க சொல்லுங்க வாத்தியாரே