பிரியத்துக்குரிய நண்பரும் பதிவுலகின் டெர்ரர் கவிஞருமான நேசமித்திரன் நேற்று மதுரை வந்திருந்தார். காலை பதினோரு மணிபோல அவருக்காக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். திண்டுக்கல்காரராக இருந்தாலும் நைஜீரியாவில் இருந்து வருபவர், கவிதைகளில் ஒரு புது மொழியை உண்டாக்கி மனிதர்களைக் கலங்கடிப்பவர்... எப்படி இருப்பாரோ என்று ஒருவித பயத்துடன் தான் இருந்தேன். ஆனால், "வணக்கம்ணே.. சொல்லுங்க.." என்று மாறாத மதுரை மண்ணின் பேச்சோடும் முகம் மலர்ந்த புன்னகையோடும் மிக எளிமையாக வந்திறங்கினார் நேசன். கூடவே அவருடைய நண்பர் சதீஷும் வந்திருந்தார்.
இருவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு நானும் ஸ்ரீதரும் மதுரையில் வழக்கமாக பதிவர் சந்திப்பு நடக்கும் இடமான அமெரிக்கன் கல்லூரி சிற்றுண்டிசாலைக்கு வந்து சேர்ந்தோம். தருமி ஐயா, ஜெரி ஈஷானந்தா, மதுரை சரவணன் என்று நண்பர்கள் எல்லோரும் வந்து சேர சந்திப்பு களைகட்டியது. மதியத்திற்கு மேல் நண்பர் பாலகுமாரும் சேர்ந்து கொண்டார்.
பதிவர் சந்திப்பு என்று சொல்வதை விட கிட்டத்தட்ட ஒரு இலக்கிய கூட்டம் என்றே சொல்லலாம் என்னுமளவுக்கு நிறைய விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நேசன். பல விஷயங்களைப் பற்றி தெளிவாக விளக்கினார். நண்பர்களின் சில கேள்விகளையும் அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களையும் என் நினைவிலிருந்து தொகுத்து இருக்கிறேன்..
உங்களுடைய கவிதைகளை புரிந்து கொள்வது அத்தனை கடினமாக இருப்பது ஏன்?
கவிதை என்பது ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். புதிய படிமங்களை உருவாக்க வேண்டும். படிக்கும்போது உங்களை வேறொரு தளத்துக்கு தூக்கி அடிக்க வேண்டும். எதற்காக இந்த வார்த்தைப் பிரயோகம் என்பதை யோசிக்க வைக்க வேண்டும். ஒரு கவிதையை எழுதி முடித்தவுடன் கவிஞன் இறந்து போகிறான். பிரதி மட்டுமே உங்கள் பார்வைக்கு இருக்கிறது. அதில் வாசகர்கள் சிந்திப்பதற்கான ஒரு வெளியை நான் உண்டாக்க முயலுகிறேன்.
பழைய உவமைகளை விடுத்து, புதிதாக.. இன்றைய அறிவியல் உலகத்தின் பாதிப்போடு எழுத முயலுகிறேன். ஒரு குறிப்பிட வட்டத்துக்குள் என்னை நான் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை. மாறாக எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய கவிதைகளை படிக்கும்போது அவர்களுக்கும் புரியும்படியாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
சொல்ல வரும் விஷயத்தில் இருக்கும் தீவிரத்தையும் அடர்த்தியையும் வார்த்தைகளைத் தெரிவு செய்வதிலும் கொண்டு வருவதுதான் முக்கியம். தேவையில்லாத வார்த்தை என்று ஒன்று கூட கவிதையில் இருக்கக் கூடாது என்பதால் எழுதும் கவிதைகளை கூர்தீட்டிக் கொண்டே இருப்பேன். ஒரு பென்சில் சீவுவது போலத்தான். பொறுக்கி எடுக்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமே இருக்கும்போது கடைசியில் அது ஒரு மூடுபனி போன்ற உருவத்தை தோற்றுவிக்கிறது. அதன் ஊடாக இருக்கும் செய்தியை அனுமானிக்க வேண்டியது வாசகன்தான்.
இந்த காரணங்களினாலேயே என்னுடைய கவிதையின் மொழி சற்று கடினமானதாகப்படுகிறது என சொல்லலாம்.
மொழி பற்றி?
தமிழ்மொழி போன்ற அழகான மொழி வேறெங்கும் கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். யாருமே யோசித்துப் பார்க்க முடியாத பல கற்பனைகளை தமிழ் பாடல்களில் பார்க்கலாம். குறிப்பாக சங்க காலப் பாடல்களை படிக்கும்போது அத்தனை பெருமையாக இருக்கிறது. அதில் காணக் கிடைக்கும் உவமைகளில் ஒன்று.. "புறாவின் கழுத்து வளைவை ஒத்ததாக ஒரு பெண்ணின் கைவிரல்கள் இருப்பதாக" ஒரு பாடல் இருக்கிறது. எத்தனை அழகு பாருங்கள்.. அதே போல ஒரே வார்த்தையில் பல விஷயங்களை சொல்லிப் போகும் கவிதைகளும் உண்டு.. இத்தனை காலம் தாண்டியும் தமிழ் இன்னும் செறிவாக இருப்பதே அதன் தனித்தன்மைக்கு சான்று.. அதை முன்னெடுத்து செல்வதென்பது ரொம்ப முக்கியம். எனவே எழுதும் போது ஒற்றுப்பிழைகளோ, தவறான வார்த்தை பிரயோகமோ இருக்கக்கூடாது.
பதிவுலகம்?
தீவிரமாக எழுத வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு ஒரு அருமையான பயிற்சிக்கூடமாக பதிவுகள் இருக்கின்றன. ஆனால வெகு சிலரே அது போன்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். பதிவுகள் ஒரு பொழுதுபோக்கு, வடிகால் என்பதையும் மீறி பயனுள்ளதாக செய்வது நம் கையில்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி நல்ல நட்பினை பதிவுகள் மூலம் அடைய முடிவது ரொம்ப சந்தோசம்.
ஒருவருடைய எழுத்தின் சாயல் மற்றவரின் எழுத்தில் இருப்பது பற்றி?
இதை நான் பெரிதும் வெறுக்கிறேன். இன்றைக்கு கவிதை எழுதுபவர்களில் பலரும் மனுஷ்யபுத்திரனின் நகலாக இருக்கிறார்கள். இது சரிதானா? "யாருமற்ற, வெறுமை, தன்னந்தனியாக.." இது போன்ற வார்த்தைகளே எங்கும் விரவிக் கிடக்கின்றன. ஏன்? உங்களுக்கான புது வார்த்தைகளை உருவாக்குங்கள். சொல்லாடல்களை கொண்டு வாருங்கள். மாறாக மற்றவரை பிரதியெடுக்க முயலாதீர்கள். நிறைய பேரை வாசிக்கலாம். அதன் மூலம் நம்முடைய தளம் விரிவடையும் என்பது உண்மைதான். மாறாக அவர்களின் சாயல் நம்மீது படிந்து விடக்கூடாது. சமீபத்தில் யானை என்பதைக் கொண்டு ஒரு கவிதை எழுத முற்பட்டேன். அதற்காக ஒரு படிமத்தை உருவாக்கினேன். பின்புதான் ஜெயமோகனின் "மத்தகம்" பற்றிய ஞாபகம் வந்தது. எந்த இடத்திலும் அதன் பாதிப்பு இருந்து விடக்கூடாதே என அஞ்சியபடி கதையை படித்தேன். அப்படி ஒரு வார்த்தை அங்கு இல்லை என்றான பின்புதான் நிம்மதியாக இருந்தது. இந்த சுயகவனிப்பு எல்லாரிடமும் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
(நேசன் பேசியதை முழுதும் எழுத வேண்டுமானால் இன்னும் இரண்டு, மூன்று இடுகைகள் தேவைப்படும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.)
தன்னுடைய கவிதைகளில் சிலவற்றை வாசித்து விளக்கம் தந்தார் நேசன். அவருடைய வார்த்தைகளில் கேட்க ரொம்பவே அருமையாக இருந்தது. மதியம் காந்தி மண்டபத்தில் நடைபெற்ற அர்ஷியாவின் "ஏழரைப் பங்காளி வகையறா.." என்ற புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டோம். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் கல்லூரியில் ஜமா கூடியது. நண்பர்கள் பாலகுமார். ஸ்ரீ மற்றும் நான் எழுதிய சில இடுகைகளை படித்து தன்னுடைய கருத்துகளை சொன்னார். என்ன மாதியான விஷயங்களை எழுதலாம் என்பது பற்றியும் பேசினோம். எதெதையோ தொட்டு, எங்கெங்கோ பயணித்தது பேச்சு. கடைசியாக எங்கள் சந்திப்பு முடிந்தபோது இரவு மணி பதினொன்று ஆகி விட்டிருந்தது. நண்பருக்கு அன்புப்பரிசாக யூமா.வாசுகியின் "மஞ்சள் வெயில்" என்ற புத்தகத்தை வழங்கினோம். அடுத்த வாரம் மீண்டும் மதுரைக்கு வருவதாக சொல்லி விடைபெற்றுக் கொண்டார் நேசன்.
ஞாயிற்றுக்கிழமையை ஒரு பயனுள்ள தினமாக, என்றும் நினைவில் நிற்கும் ஒரு நாளாக மாற்றிய நேசனுக்கும், நண்பர்களுக்கும் நன்றி.
(வழக்கம் போல கல்லூரியில் தொழில் நுட்ப கோளாறு காரணமா என்னால படங்களை இணைக்க முடியல.. அதை எல்லாம் தனிப்பதிவா போடுறேன்.. இப்போ படங்களுக்கு தருமி ஐயாவின் பதிவுக்குப் போங்க..)

45 comments:
photo pottu irukkalame???
(padivai padikkavillai...piragu vanthu padikkiren)
சுவையான சந்திப்பு.
அருமையான கட்டுரை.
சும்மா சந்திச்சோம், சாப்பிட்டோம்னு எழுதாம, ஒரு நேர்காணல் மாதிரி அருமையா எழுதியிருக்கீங்க.
உங்களைப் பாத்தா கொஞ்சம் பொறாமையா இருக்கு, இத்தனை பதிவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைப்பதைப் பார்த்து.
தம்பி நேசமித்ரன் கூட பேசுவதே ஒரு கவிதை மாதிரித்தான்.
நல்ல உபயோகமாக செலவழித்து இருக்கின்றீர்கள்.
கொஞ்சம் கும்மி அடிக்க ஆசையா இருக்கு... அடிக்கலாமா?
நல்ல சந்திப்பு போல
//டம்பி மேவீ said...
photo pottu irukkalame???//
கொஞ்சம் தொழில்நுட்பக்கோளாறு நண்பா
// வி.பாலகுமார் said...
சுவையான சந்திப்பு.//
பட்டாசு கிளப்பிட்டாரு.. இல்ல பாலா?
//Joe said...
அருமையான கட்டுரை.சும்மா சந்திச்சோம், சாப்பிட்டோம்னு எழுதாம, ஒரு நேர்காணல் மாதிரி அருமையா எழுதியிருக்கீங்க.
உங்களைப் பாத்தா கொஞ்சம் பொறாமையா இருக்கு, இத்தனை பதிவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைப்பதைப் பார்த்து.//
ரொம்ப நன்றி நண்பா.. கண்ணுபோடதீங்கப்பா..:-))
//இராகவன் நைஜிரியா said...
தம்பி நேசமித்ரன் கூட பேசுவதே ஒரு கவிதை மாதிரித்தான்.நல்ல உபயோகமாக செலவழித்து இருக்கின்றீர்கள்.//
ஆமாண்ணே..
//கொஞ்சம் கும்மி அடிக்க ஆசையா இருக்கு... அடிக்கலாமா?//
இது உங்க ஏரியா.. பெர்மிஷன் எல்லாம் கேட்டு என்னை அந்நியன் ஆக்காதீங்க ராகவன் அண்ணே..
// அண்ணாமலையான் said...
நல்ல சந்திப்பு போல//
ஆமாங்க.. அருமையான, உபயோகமான சந்திப்பு..
கார்த்தி...அதிஸ்டசாலி நீங்க.
// பிரியத்துக்குரிய நண்பரும் பதிவுலகின் டெர்ரர் கவிஞருமான நேசமித்திரன் நேற்று மதுரை வந்திருந்தார். //
நைஜிரியா என்றாலே டெரர் தானோ?
// ஆனால், "வணக்கம்ணே.. சொல்லுங்க.." என்று மாறாத மதுரை மண்ணின் பேச்சோடும் முகம் மலர்ந்த புன்னகையோடும் மிக எளிமையாக வந்திறங்கினார் நேசன்.//
வணக்கம் கூட சொன்ன கவிதையை ஏன் இங்கு சொல்லவில்லை.
// கூடவே அவருடைய நண்பர் சதீஷும் வந்திருந்தார்.//
திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை வந்திருந்த நண்பர் சதீஷ் சுகமா?
// பல விஷயங்களைப் பற்றி தெளிவாக விளக்கினார்.//
தெளிஞ்சுட்டீங்கன்னு சொல்லுங்க...
// கவிதை என்பது ஒரு அனுபவமாக இருக்க வேண்டும்.//
ஆமாம்... படிப்பதே ஒரு அனுபவமாக்கி விடுவார்...
// புதிய படிமங்களை உருவாக்க வேண்டும்.//
ரொம்ப படிமங்களை உருவாக்கினால் கனிம வளத்துறையில் இருந்து வந்து கேள்வி கேட்பாங்க. அதனால் கொஞ்சமா உருவாக்குங்க.
// படிக்கும்போது உங்களை வேறொரு தளத்துக்கு தூக்கி அடிக்க வேண்டும். //
எப்படி ஸ்ரீகாந்த் சிக்சர் அடிக்கற மாதிரி... இனிமே கவிதை என்ற தளமே வேண்டாம் என்று, மொக்கை என்ற தளத்திற்கு தூக்கி அடிக்க வேண்டும்.
// எதற்காக இந்த வார்த்தைப் பிரயோகம் என்பதை யோசிக்க வைக்க வேண்டும்.//
தம்பி கார்த்திக்கை ரொம்ப யோசிக்க வைக்காதீங்க... இப்பவே தலையில் முடி பாதி காணாம போயிடுச்சு.
// அதில் வாசகர்கள் சிந்திப்பதற்கான ஒரு வெளியை நான் உண்டாக்க முயலுகிறேன்.//
அது சரி.. பல்லு இருக்கிறவன் பகோடா சாப்பிடலாம்.. (முடிஞ்சா மதுரையில் கிடைக்கும் இஞ்சி பகோடா கூட சாப்பிடலாம்) மூளை இருக்கிறவன் சிந்திக்கலாம்... என்ன மாதிரி ஆளுங்க என்ன பண்றதுன்னு கேட்கலையா?
// ஒரு குறிப்பிட வட்டத்துக்குள் என்னை நான் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை. //
அப்போ இன்னும் கொஞ்சம் குண்டா ஆகுங்க... ஒடு வட்டத்துக்குள் என்ன சதுரத்துக்குள் கூட உங்களை அடைக்க முடியாது.
// பழைய உவமைகளை விடுத்து, புதிதாக.. இன்றைய அறிவியல் உலகத்தின் பாதிப்போடு எழுத முயலுகிறேன்.//
ரொம்ப பாதிக்கப் பட்டு விட்டார் போலிருக்கு... அய்யோ பாவம்.
// மாறாக எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய கவிதைகளை படிக்கும்போது அவர்களுக்கும் புரியும்படியாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.//
அவரோட நினைப்பை சொல்லிட்டாருங்க. தமிழ் தெரிஞ்சவங்களே புரிஞ்சுக்க கஷ்டப் படறாங்க... இதில் எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவரும் புரிஞ்சுகிறதா?
// ஒரு பென்சில் சீவுவது போலத்தான். //
ரொம்ப சீவினா பென்சிலே காணம போயிடுங்கண்ணே... பார்த்து சீவச் சொல்லுங்க..
// பொறுக்கி எடுக்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமே இருக்கும்போது கடைசியில் அது ஒரு மூடுபனி போன்ற உருவத்தை தோற்றுவிக்கிறது. //
கொஞ்சம் கூடுதலான வார்த்தைகளை பொறுக்குங்க... ரொம்ப கொஞ்சமா பொறுக்குவது கஷ்டமாயிருக்கு.
// ஒரு மூடுபனி போன்ற உருவத்தை தோற்றுவிக்கிறது. //
மூடுபனி- இங்கு ஜீரோ விசிபிலிட்டியில் போயிடுது... அதான் கஷ்டமே..
// அதன் ஊடாக இருக்கும் செய்தியை அனுமானிக்க வேண்டியது வாசகன்தான்.//
ஆமாம். இப்ப கூட பாருங்க... இவ்வளவு பெரிய இடுகை போட்டு இருக்காரு... நான் அதன் ஊடால இருக்கிறத படிச்சு ... என்னோட அனுமானத்தை எல்லாம் எழுதியிருக்கேன். இது மாதிரி நாமலா எல்லாத்தையும் அனுமானிச்சிக்க வேண்டியதுதான்.
// யாருமே யோசித்துப் பார்க்க முடியாத பல கற்பனைகளை தமிழ் பாடல்களில் பார்க்கலாம்.//
யாருமே யோசித்துப் பார்க்க முடியாததை, இவங்க மட்டும் எப்படி யோசனைப் பண்ணியிருபாங்க... அப்ப யோசிக்காமயே எழுதிட்டாங்களா?
டோட்டல் கன்பூயஷன்ப்பா?
// உங்களுக்கான புது வார்த்தைகளை உருவாக்குங்கள். //
இருக்கின்ற வார்த்தைகளையே ஞாபகம் வச்சுக்க முடியல... இதுல இன்னும் புது வார்த்தைகளா?
// இந்த காரணங்களினாலேயே என்னுடைய கவிதையின் மொழி சற்று கடினமானதாகப்படுகிறது என சொல்லலாம். //
புரிஞ்சா சரி..
// தன்னுடைய கவிதைகளில் சிலவற்றை வாசித்து விளக்கம் தந்தார் நேசன். //
அது சரி... ரொம்ப நல்லா இருக்கும். பொழிப்புரை, பதவுரை எல்லாம் சொல்லி சொன்னால் நல்லா இருக்கும். இதை ஓவ்வொரு கவிதை எழுதும் போதும் செஞ்ச்சுட்டார் என்றால், என்னைப் போன்ற மரமண்டைகளுக்கும் விளங்கும் இல்லையா?
கடைசியாக ஒன்று...
இராகவா... ஃபார்ம் போகலை... இன்னும் இருக்கு... வெரிகுட்... கீப் இட் அப்...
இது தனக்கு தானே திட்டத்தின் கீழ் பாராட்டிக் கொள்ளப்பட்டது.
//உங்களுடைய கவிதைகளை புரிந்து கொள்வது அத்தனை கடினமாக இருப்பது ஏன்?//
இதற்கான அவரின் பதில் ஏற்புடையதே...
இன்னும் எழுதியிக்க வேண்டியதுதானே. சென்ற புதன்கிழமை, தண்டோரா அலுவலகத்தில், நேசமிதரனுக்காக காலைமுதல் மாலைவரை காத்திருந்தோம். வரவில்லை.சந்திக்கமுடியாமல் ஏமாற்றத்தோடு, திரும்பினேன்.அந்த வகையில் உங்களை நினைத்துப் பொறாமையாக இருக்கிறது:)
எங்க காலேஜ்ல தான் இப்ப பதிவர்களின் டாப்பா? நடத்துங்க. நேசமித்ரன் மதுரையா?
அசத்தல் கார்த்தி.
//ஹேமா said...
கார்த்தி...அதிஸ்டசாலி நீங்க.//
முகம் தெரியாத பதிவுலக நண்பர்களை நேரில் பார்க்கும்போது ஒரு இனம்தெரியாத சந்தோஷ உணர்வு கிடைக்குது.. இல்லையா தோழி? நன்றி..
@ இராகவன் நைஜிரியா
ஒத்தை ஆளா களம் இறங்கி கலக்கி இருக்கும் அண்ணனுக்கு ரொம்ப நன்றி
இது பதிவு .............!
// க.பாலாசி said...
இதற்கான அவரின் பதில் ஏற்புடையதே...//
கண்டிப்பாக நண்பா.. எல்லோருக்குமே தங்களின் செயல்களுக்கான நியாயங்கள் உண்டு.. தன்னுடைய கவிதைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் நேசன் தெளிவாகவே இருக்கிறார்..
//ச.முத்துவேல் said...
இன்னும் எழுதியிக்க வேண்டியதுதானே. சென்ற புதன்கிழமை, தண்டோரா அலுவலகத்தில், நேசமிதரனுக்காக காலைமுதல் மாலைவரை காத்திருந்தோம். வரவில்லை.சந்திக்கமுடியாமல் ஏமாற்றத்தோடு, திரும்பினேன்.அந்த வகையில் உங்களை நினைத்துப் பொறாமையாக இருக்கிறது:)//
வருத்தம்தான் நண்பா.. இன்னும் எழுதுவதா? அட போங்கப்பா.. காற்றில் ஆடும் சிறகு என்றுதான் சொல்ல வேண்டும்.. அப்படி எல்லா தளங்களையும் தொட்டுப் போகிறார்.. நேசனுடன் பேசிய நேரம் கம்மி ஆனால் அதில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ரொம்பவே அதிகம்.. அவர் விரிவாகவே பேசினாலும் அதை அத்தனையையும் கிரகித்து வெளிக்கொணர்வது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது..
//pappu said...
எங்க காலேஜ்ல தான் இப்ப பதிவர்களின் டாப்பா? நடத்துங்க. நேசமித்ரன் மதுரையா?//
ஏதோ தருமி ஐயா புண்ணியத்துல நல்லாவே போய்க்கிட்டு இருக்கு.. நேசன் திண்டுக்கல்காரர் தம்பி...
//ஜெரி ஈசானந்தா. said...
அசத்தல் கார்த்தி.//
நன்றி ஜெரி..
//தருமி said...
இது பதிவு .............!//
அது.. நன்றி ஐயா..
நல்லா பதிவு நண்பரே
நடத்துங்க , நடத்துங்க
//இராகவன் நைஜிரியா said...
// ஒரு மூடுபனி போன்ற உருவத்தை தோற்றுவிக்கிறது. //
மூடுபனி- இங்கு ஜீரோ விசிபிலிட்டியில் போயிடுது... அதான் கஷ்டமே..
////
கும்மியில் சிறந்தது இது. :))
கலக்குங்க ராகவன்.
ரொம்ப சந்தோசம் நண்பா..
நல்ல பதிவு. அவர் கருத்தை அழகாய் பதிவு செய்துள்ளீர்கள்
//கிட்டத்தட்ட ஒரு இலக்கிய கூட்டம்// ஐயையோ, இலக்கிய"வியாதி" க்கு இது தான் அறிகுறியா ? சீக்கிரம் மாற்று மருந்து கண்டுபிடிக்கனும்ண்ணே ! கொடைக்கானல் ஓ.கே ?
அருமையான மனிதருடன் நிறைவான சந்திப்பு கார்த்தி..
நேசனை பேச சொல்லி கேட்டுக் கொண்டிருப்பது போல் இருந்தது கார்த்தி,பதிவு.
நல்ல அவதானிப்பு.presentesan!
எனது இடுகை: http://solaiazhagupuram.blogspot.com/2010/02/blog-post_24.html
//மாறாக எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய கவிதைகளை படிக்கும்போது அவர்களுக்கும் புரியும்படியாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
//
இந்த முனைப்புதான் மரபு மற்றும் மொழி போன்ற தளைகளிலிருந்து விடுவிப்பது.
நகைச்சுவையில் கூட மொழி சார்ந்த நையாண்டி மொழிபெயர்க்கப்படும்போது நசிந்துவிடுகிறது.
க.சீ.சிவக்குமாரின் ஒரு கதை இப்படித் தொடங்குகிறது..
ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாயானது...
மொழிப்பெயர்ப்பில்போது இந்த அழகு இருக்காது.
ஒரு புள்ளியில் மொழி கடந்த எழுத்தாக படைப்பு இருப்பது இலக்கியத்தின் 'உலகமயமாக்கல் கொள்கை' மாதிரிதான்.
Post a Comment