May 26, 2010

உக்கார்ந்து யோசிச்சது (26-05-10)..!!!

பிரியத்துக்குரிய பதிவுலக நண்பர் "அப்பாவி முரு" என்கிற முருகேசனின் திருமணம் இன்று சின்னாளபட்டியில் இனிதே நடைபெற்றது. அவருக்கும் மணமகள் ரேவதி அவர்களுக்கும் உள்ளங்கனிந்த நல்வாழ்த்துகள்.



(பயபுள்ளைய ஏதாவது பற்பசை விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கலாமோ?)

மதுரையில் இருந்து நானும் சீனா ஐயாவும் போயிருந்தோம். சென்னையில் இருந்து ரம்யாக்கா, கலை அக்கா மற்றும் சித்தர் ஆகியோர் வந்திருந்தார்கள். பதிவுகளில் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் தன்னுடைய சார்பில் நன்றியை சொல்லும்புடி அண்ணன் முருகேசன் ஆணையிட்டதற்கு இணங்க, ஒரு பெரிய நன்றிங்கோவ்....

***************

இன்றைக்கு திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கும் மற்றொரு நண்பர்.. நவீன தமிழ் கவிதைகளில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி இருக்கும் நண்பர் நரன். நேற்றைக்கு அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருதுநகரில் நடைபெற்றது. ஸ்ரீதரும் நானும் போயிருந்தோம். இசை, செல்மா ப்ரியதர்ஷன், யவனிகா ஸ்ரீராம், மணிவண்ணன், தேவேந்திர பூபதி, ஸ்ரீஷங்கர் எனப் பல இலக்கியவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் தேவதச்சனும் வந்து இருந்தார். நிறைய விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது. பூவோடு சேர்ந்த நாரும் என்பது போல மேடையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக ஏறியபோது “இவர்கள் என்னுடைய எழுத்தாள நண்பர்கள்” என்று நரன் தனது துணைவியாரிடம் அறிமுகம் செய்தபோது ரொம்ப வெட்கமாக இருந்தது. கூகிலாண்டவருக்கும் பிளாகருக்கும் நன்றி.

வந்து இருந்தவர்களில் படு ஜாலியான மனிதராக பட்டையைக் கிளப்பியவர் செல்மா ப்ரியதர்ஷன். லீனா மணிமேகலை, யவனிகா ஆகியோரின் கவிதைகளை செல்மா வாசித்த விதம் அட்டகாசம். என்னை மிகவும் ஆச்சரியம் கொள்ள வைத்தவர் யவனிகாதான். இளைஞர்களோடு இயைந்து செயல்படக்கூடிய உள்ளமும் நட்பு நிறைந்த நெஞ்சமும் எல்லாருக்கும் வாய்த்து விடாது. அந்த வகையில் யவனிகா கொடுத்து வைத்த மனிதர். நாங்கள் விடை பெற்றுக் கிளம்பும்போது மனிதர் அமைதியாக இரண்டே வரிகளில் சொன்னார்.. "இங்கே எதற்குமே அர்த்தங்கள் கிடையாது.. நம்முடைய நட்பும் அர்த்தங்களை மீறிய ஒன்றாக இருக்கட்டும்..சந்திப்போம்.." அருமையான பொழுதுகள்.

நரன்.. நன்றி நண்பா.. உனக்கு என் வாழ்த்துகள்..:-))))

***************

இரண்டு நாட்களுக்கு முன்பு.. மட்ட மத்தியான வேலை. கல்லூரி பணிகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். சரியான தாகம். சரி ஒரு இளநியைக் குடிப்போம் என்று ஒரு தள்ளுவண்டிக் கடையில் ஒதுங்கினேன்.

"எவ்வளவுண்ணே..?"

"பதினஞ்சு, இருபதுங்க.."

"சரிண்ணே.. நிறைய தண்ணி இருக்கிற மாதிரி இருபதுல ஒண்ணு கொடுங்க.."

"வேண்டாம் சார்.. தண்ணி நிறைய வேணும்னா பதினஞ்சுலையே வாங்கிக்குங்க.. இருபதுல எல்லாம் தேங்காதான் சார்.."

உண்மையைப் பேசி வியாபாரம் செய்யும் அந்த மனிதரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

"எளனி வரத்து எல்லாம் எப்படிண்ணே இருக்கு..?"

"எங்க தம்பி.. நேரடியா எடுக்கலாம்னா மதுரைல எங்கயும் தோப்பு இல்ல.. எல்லா இடத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாங்க.. தேனீ, போடி இங்க இருந்துதான் எளனி வருது.. அதனால எல்லாரும் புரோக்கர் பயலுக கைல மாட்டி சீரழியுறோம்.. காலைல இருந்து வெயிலுல காஞ்சாலும் காய்க்கு ரெண்டு ரூபா கூட கிடைக்கிறது இல்ல.. என்ன பண்ண சொல்லுங்க.."

அவர் தன்னுடைய பிரச்சினையை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். எனக்கோ அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் பெரிதும் உதைத்தது. மதுரையில் இருக்கிற தோப்புகள் எல்லாமே காலியா? இதே நிலை எல்லா ஊர்களுக்கும் பரவ எததனை நாள் ஆகப் போகிறது? ஏற்கனவே ஒவ்வொன்றாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறோம்.. ஹ்ம்ம்ம்.. என்னமோ போடா மாதவா..

***************

சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல விஷயம் கிடைக்கும் அல்லவா? அதுதான் அம்பாசமுத்திரம் அம்பானியில் நடந்து இருக்கிறது. கருணாஸ் இசையில் "பூப்பூக்கும்" என்ற வெஸ்டன் டைப் பாட்டும், "தண்ட தண்ட பாணி.. " பாட்டும் டாப். "ஒத்தக்கல்லு" போன்ற கிராமத்து பாடல்களையும் அழகாக கொடுத்து இருக்கிறார். நன்றாக இருக்கும் என நம்பிய "பாணா காத்தாடி"யில் யுவன் கோல் போட்டிருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம்தான். அதே நேரத்தில்.. சிங்கம் படத்தின் பாடல்களையும் ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் அல்வா கொடுத்து விட்டார். அத்தனையும் வெளங்காத பாட்டு. சன் டிவி புண்ணியத்தில் ஏதாவது ஒன்றிரண்டு ஹிட் ஆகலாம். டிரைலர் பார்க்கும்போதே மனிதனுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறது. யூ டூ சூர்யா?

***************

இந்த மாத உயிர் எழுத்து இதழில் வெளியான நரனின் கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு..

வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு - 1

வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பில்
1853 சூன் 7 ஆம் தேதி
137 ஆம் பக்கம்
வேட்டையில் அவர் சுட்டு வீழ்த்திய
வங்கப் புலியொன்றின் குறிப்பு இருந்தது.
7 வயது நிரம்பியிருந்த தருணத்தில்
அது வீழ்த்தப்பட்டது.
கொல்கத்தா அருங்காட்சியகத்தில் இப்பவும்
வைஸ்ராயின் டைரி இருக்கிறது.
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புகள் ஒட்டப்பட்ட
கண்ணாடி பேழைக்குள்
வரியோடிய அப்புலியின் உடல்
பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
டைரிக் குறிப்பில்
சுட்டு வீழ்த்தப்படதைச் சொல்லும் வரிக்கு
இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன்
புலி இன்னமும் உயிருடன் இருக்கிறது.
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைப்படம் எடுப்பவனையும்
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது புலி.
பல நூறு மைல்கள் தாண்டி கானகத்திற்குள்
அதன் எலும்புகளை வைத்துப் பழங்குடியோருவன்
தோல் கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாமல்தான்
அசைய முடிகிறது.

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி.. கொஞ்சம் லொள்ளு..

கல்யாணம் ஆன புதுசுல மாப்பிள்ளைப் பையன் தன்னோட பொண்டாட்டி நம்பரை செல்லுல இப்படி பதிவு பண்ணினான்.. "என்னோட உயிர்.."

ஒரு வருஷத்துக்குப் பிறகு "என்னோட மனைவி.."

அஞ்சு வருஷம் கழிச்சு "வீடு.."

பத்து வருஷம் கழிச்சு "ஹிட்லர்.."

இருபது வருஷம் கழிச்சு "ராங் நம்பர்.."

ஹி ஹி ஹி.. என்னடா மேல எல்லாருக்கும் திருமண வாழ்த்து சொல்லிட்டு கீழே இப்படி ஒரு சூது இருக்கேன்னு யாரும் யோசிச்சா.. அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல..

இப்போதைக்கு அவ்ளோதான் நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

25 comments:

vasu balaji said...

மணமக்களுக்கு வாழ்த்துகள். :)

Balakumar Vijayaraman said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

மதுரைக்குள்ள, இளநீர் 20, 25 ஆகிருச்சேண்ணே ! இருந்தாலும் விற்றவருக்கு இளநீர் மனது :)

கவிதை அருமை.

தமிழ் அமுதன் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள். :)

க.பாலாசி said...

மணமக்களை நானும் வாழ்த்துகிறேன்..

வருங்காலத்துல இளநீரெல்லாம் நினைச்சுக்கூட பாக்கமுடியாது போலருக்கு...

GEETHA ACHAL said...

மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...

வினோத் கெளதம் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.
Joke Super..:))

கார்த்திகைப் பாண்டியன் said...

// வானம்பாடிகள் said...
மணமக்களுக்கு வாழ்த்துகள். :)//

நன்றி பாலா சார்..

//வி.பாலகுமார் said...
மணமக்களுக்கு வாழ்த்துகள். மதுரைக்குள்ள, இளநீர் 20, 25 ஆகிருச்சேண்ணே ! இருந்தாலும் விற்றவருக்கு இளநீர் மனது :) கவிதை அருமை.//

நன்றி பாலா.. அந்த கடைக்காரர் நல்ல மனுஷனப்பா.. நம்மள நிறையவே யொசிக்க வச்சுட்டார்..

//தமிழ் அமுதன் (ஜீவன்) said...
மணமக்களுக்கு வாழ்த்துகள். :)//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//க.பாலாசி said...
வருங்காலத்துல இளநீரெல்லாம் நினைச்சுக்கூட பாக்கமுடியாது போலருக்கு...//

என்னத்த சொல்ல..

//Geetha Achal said...
மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...//

நன்றிங்க..

//வினோத்கெளதம் said...
மணமக்களுக்கு வாழ்த்துகள்.Joke Super..:))//

நன்றி நண்பா.. என்னப்பா ஆச்சு.. ஆளையே காணோம்? எதுவும் எழுதுறது இல்ல? ஏன்?

மேவி... said...

unga mela kovam ...


ungalai kindal adithu padivu poda poren

Unknown said...

நான் ஒரு டாலர் குடுத்து இளநிய டப்பால வாங்குறேன். கூடிய சீக்கிரம் அந்த நிலைமை மதுரையிலேயே வந்துடும் போலயே

ILA (a) இளா said...

உங்க கடைசி பாராவுல குத்து இல்லீங்க. நாக் அவுட் அது.. (உண்மை உறைக்கத்தானே செய்யும்)

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
unga mela kovam ...ungalai kindal adithu padivu poda poren//

ஏன் தங்கம்? என்னம்மா ஆச்சு?

//முகிலன் said...
நான் ஒரு டாலர் குடுத்து இளநிய டப்பால வாங்குறேன். கூடிய சீக்கிரம் அந்த நிலைமை மதுரையிலேயே வந்துடும் போலயே//

:-((((((((

//ILA(@)இளா said...
உங்க கடைசி பாராவுல குத்து இல்லீங்க. நாக் அவுட் அது.. (உண்மை உறைக்கத்தானே செய்யும்)//

அனுபவம் பேசுது..:-))

செ.சரவணக்குமார் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

Romeoboy said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .

வேடிக்கை மனிதன் said...

pathivulagil vanthirunthavarkalai thirumana vaipavathil parthum pesamudiyamal ponathu enathu thurathistam.

கார்த்திகைப் பாண்டியன் said...

//செ.சரவணக்குமார் said...
மணமக்களுக்கு வாழ்த்துகள்.//

வாழ்த்துக்கு நன்றி நண்பா

@thalaivan.com

நன்றிங்க.. இணைக்க முயலுகிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//~Romeo~~ said...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .//

நன்றி நண்பா :-)))))

//வேடிக்கை மனிதன் said...
pathivulagil vanthirunthavarkalai thirumana vaipavathil parthum pesamudiyamal ponathu enathu thurathistam.//

ஆகா.. அங்கதான் இருந்தீங்களா? பார்க்க முடியாம போனது வருத்தம் தான் நண்பா.. முடிஞ்சா உங்க நம்பர் கொடுங்க.. பேசுவோம்..

Anonymous said...

hello sir
advance happy birthday to u............

"உழவன்" "Uzhavan" said...

அப்பாவி முருகுக்கும், நரனுக்கும் திருமண வாழ்த்துகள்!
பகிர்ந்த விதம் சூப்பர் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
hello sir advance happy birthday to u............//

thanks da..:-)))

//"உழவன்" "Uzhavan" said...
அப்பாவி முருகுக்கும், நரனுக்கும் திருமண வாழ்த்துகள்!பகிர்ந்த விதம் சூப்பர் நண்பா//

அட.. ஆயுசு நூறு நண்பா.. இன்னைக்கு காலையிலதான் உங்களப் பத்தி நினைச்சேன்.. ரொம்ப நாளா ஆளக் காணோமேன்னு..:-)))

அத்திரி said...

//ஹி ஹி ஹி.. என்னடா மேல எல்லாருக்கும் திருமண வாழ்த்து சொல்லிட்டு கீழே இப்படி ஒரு சூது இருக்கேன்னு யாரும் யோசிச்சா.. அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல//

இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா//

ஹி ஹி ஹி.. ஏன் இல்லை? நான் இருக்கிறேன் தோழர்.. நான் மட்டுமே இருக்கிறேன்..ஹே ஹே ஹே..:-)))

வேடிக்கை மனிதன் said...

9003015155 தொடர்பு கொள்ளுங்கள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றிங்க.. கூப்பிடுறேன்..:-)))