காமிக்ஸ் புத்தகங்களின் மூலமாகத்தான் எனக்கு கௌபாய்களின் உலகம் அறிமுகமானது. டெக்ஸ் வில்லர், கிட் கார்சன், டைகர், சிஸ்கோ கிட்... எத்தனை எத்தனை சாகச நாயகர்கள்? பின்பு அறுபதுகளில் வந்த ஹாலிவுட் கௌபாய் படங்களைப் பார்த்தபோது அவர்களின் மேதான காதல் இன்னும் அதிகமாகியது. அனல் கக்கும் துப்பாக்கிகள், பறக்கும் குதிரைகள், தொப்பி மற்றும் நீண்ட காலணிகள் என அவர்களுக்கான ஒரு உடை, பறந்து விரிந்த பாலைவனங்கள், போர்வெறி கொண்ட செவ்விந்தியர்கள் என கௌபாய் கதைகள் தரும் அனுபவமே அலாதியானது. ஸ்பெயின், வட அமெரிக்கா என்று பல்வேறு இடங்களில் வாழ்ந்த கௌபாய்கள் போல தமிழ்நாட்டிலும் கௌபாய்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன் விளைவுதான் "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்". இம்சை அரசன், அறை எண் கடவுள் என்று பட்டையைக் கிளப்பிய சிம்புதேவனின் மூன்றாவது படம். கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரித்து இருக்கிறார்.
இரும்புக்கோட்டையை ஆளும் வில்லன் கிழக்குகட்டை (நாசர்). அருகில் இருக்கும் ஊர்களை எல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். அவரை எதிர்த்து போராடும் மக்கள் தலைவன் சிங்கம் (லாரன்ஸ்). திடீரென சிங்கம் ஒரு நாள் காணாமல் போக, அவரைப் போலவே இருக்கும் சிங்காரத்தை மக்களுக்காக சிங்கமாக நடிக்க வைக்கிறார்கள். மக்களுக்கு எதிரிகளாக இருக்கும் செவ்விந்தியர்களையும் தன் சாமர்த்தியத்தால் நண்பர்களாக்கி கொள்கிறான் டூப்ளிகேட் சிங்கம். அவர்களின் துணையோடு வில்லனை எதிர்த்துப் போராடுகிறான். நடுவில் சில காதல்கள். சில மோதல்கள். புதையல் தேடி ஒரு பயணம். கடைசியில் மக்கள் சக்தி ஜெயித்ததா? உண்மையான சிங்கம் என்ன ஆனான்? கோழையான சிங்காரம் தன்னைத் தானே உணர்ந்தானா? இதுதான் படத்தின் கதை.
வழக்கம் போல லாரன்ஸ் ரஜினியின் மேனரிசங்களோடு வருகிறார். அது போதாதென்று இந்தப் படத்தில் கூடுதலாக "ஷாங்காய் நூன்" ஜாக்கிசானையும் காப்பி அடித்திருக்கிறார். படத்தில் எதற்கெனத் தெரியாமலே மூன்று நாயகிகள். கிராமத்து டாக்டராக பத்மப்பிரியா, செவ்விந்திய இளவரசியாக சந்தியா, வில்லனின் கையாளாக லட்சுமிராய். ஓரளவுக்காவது தேறுகிறார் என்றால் அது லட்சுமிராய்தான். சொல்லி வைத்தது போல மூன்று பேருக்குமே லாரன்சை பார்த்ததுமே காதல் வருகிறது. அட போங்கப்பா..
ஒற்றைக்கண் வில்லனாக நாசரும், அவருடைய அல்லக்கை "உலக்கை"யாக சாய்குமாரும் நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரின் வசன உச்சரிப்புமே எரிச்சல். படத்தில் தூள் கிளப்பி இருப்பவர்கள் செவ்விந்தியத் தலைவனாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவருடைய மொழிபெயர்ப்பாளராக வரும் சாம்சும்தான். பட்டாசு காமெடியால் மனதை அள்ளிக் கொள்ளுகிறார்கள். மனோரமா, வி.எல்.ராகவன், மவுலி, இளவரசு, வையாபுரி, ரமேஷ் கண்ணா, செந்தில் என்று ஒரு பெரிய பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையை நம் கண் முன்னே தத்ரூபமாக கொண்டு வந்திருப்பதில் மூன்று பேருக்கு பெரும்பங்கு உண்டு. ஒளிப்பதிவாளர் அழகப்பன், உடைகள் வடிவமைத்து இருக்கும் சாய் மற்றும் அருமையான கலை இயக்கத்தின் மூலம் நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்றிருக்கும் முத்துராஜ்தான் அந்த மூன்று பேர். ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். நிகழ்காலத்தின் சாயல் எங்கும் தென்படாத இடங்களைத் தேர்வு செய்வதற்குள்ளேயே மக்களுக்கு மண்டை காய்ந்து இருக்கும். அதையும் மீறி லோகேஷன்களையும் அருமையாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். படத்தின் பெரிய மைனஸ் ஜி.வி.பிரகாஷின் இசை. எந்தப் பாட்டுமே தேறவில்லை. அதை விடக் கொடுமை.. பின்னணி இசையில் மேக்கேனாஸ் கோல்டில் ஆரம்பித்து சமீபத்திய பைரேட்ஸ் ஆப் த கரீபியன் வரை காப்பி அடித்திருக்கிறார். அவ்வவ்.. என்ன கொடுமை சார் இது?
இரும்புக்கோட்டை என்ற பெயர் கொண்ட "USA புரம்" மக்களோடு போடும் அணுசக்தி ஒப்பந்தம்.. கைதட்டணும்னா கூட எனக்கு தெரியாம தட்டக் கூடாது என்ற ஷரத்து.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை புரட்சி.. தமிழனுக்கு ஒரு பிரச்சனைனா தமிழனே உதவ மாட்டான்.. உடன்குடி மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிக் கொண்டிருப்பது.. மக்கள் வலிமையோடும் நம்பிக்கையோடும் போராட தலைவன் இறந்ததை மறைத்து விடுங்கள் என்பது என.. நிறைய இடங்களில் அரசியலை தொட்டுச் செல்கிறார் சிம்பு.
ஊருக்குப் பெயர் ஜெயஷங்கர்புரம் மற்றும் ஷோலேபுரம், வில்லனுக்குப் பெயர் கிழக்குகட்டை (EASTWOOD), இரும்புக்கோட்டையில் இருக்கும் அசோகனின் சிலை, தொப்பி வைத்தபடி பூஜை செய்யும் அர்ச்சகர், குடி குடியை ரேப் செய்யும் என்னும் அடைமொழியோடு இருக்கும் பாஸ்மார்க், இங்கே குரல்வளை நெறிக்கப்படும் என்ற பெயர்ப்பலகையோடு இருக்கும் தூக்குமேடைகள், நிழலை விட வேகமாக சுடும் மற்றும் காலில் விழும் நாயகன், செவ்விந்திய மொழியில் ஒலிக்கும் வாராயோ தோழி பாட்டு என நிறைய சின்ன சின்ன விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர். வசனங்கள் பல இடங்களில் குபீர் சிரிப்பு. ஆனால் அத்தனையும் மீறி ஏதோ ஒன்று குறைகிறது என்றால்.. அது வேகம். திரைக்கதையில் நிறையவே தடுமாறி இருக்கிறார் சிம்பு. முதல் பாதி நத்தை வேகத்தில் போகிறது. இரண்டாம் பாதியிலும் புதையல் தேடித் போகும் அரை மணி நேரம் மட்டும்தான் கலக்கல். இடைவேளையில் "இனி டிரவுசர் கிழியும்" என்று போட்டபோது அருகிலிருந்த ரசிகர் ஒருவர் "இதுக்கு மேலயா" என்று நொந்து கத்தும் அளவுக்கு நிலைமை மோசம். தனித்தனி காட்சியாக பார்க்கும்போது வரும் சிரிப்பு மொத்தப் படமாக பார்க்கும்போது வருவதில்லை என்பது மிகப்பெரிய குறை.
தமிழில் இதுபோல ஒரு முழுநீள கௌபாய் படம் வந்ததில்லை என்ற வகையில் இது ஒரு நல்ல முயற்சி. (தயவு செய்து கர்ணன் படங்களை எல்லாம் கௌபாய் கணக்கில் சேர்க்க வேண்டாமே பிளீஸ்..) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம்.
நிதானமான சிங்கம்

25 comments:
சின்ன சின்ன விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர். வசனங்கள் பல இடங்களில் குபீர் சிரிப்பு. ஆனால் அத்தனையும் மீறி ஏதோ ஒன்று குறைகிறது என்றால்.. அது வேகம். திரைக்கதையில் நிறையவே தடுமாறி இருக்கிறார் சிம்பு. முதல் பாதி நத்தை வேகத்தில் போகிறது!!///
தேர்ந்த விமரிசகராகிவிட்டீர் கார்த்தி!!
நான்தான் முதல்!!!
//இடைவேளையில் "இனி டிரவுசர் கிழியும்" என்று போட்டபோது அருகிலிருந்த ரசிகர் ஒருவர் "இதுக்கு மேலயா" என்று நொந்து கத்தும் அளவுக்கு நிலைமை மோசம். //
LOL :)
//தேவன் மாயம் said...
தேர்ந்த விமரிசகராகிவிட்டீர் கார்த்தி!!//
ஓட்டாதீங்க தேவா சார்..:-))
//நான்தான் முதல்!!!//
நன்றி தலைவரே..:-))
// சென்ஷி said...
இடைவேளையில் "இனி டிரவுசர் கிழியும்" என்று போட்டபோது அருகிலிருந்த ரசிகர் ஒருவர் "இதுக்கு மேலயா" என்று நொந்து கத்தும் அளவுக்கு நிலைமை மோசம்.LOL :)//
:-))))))
சுறா படத்தைப் பத்தி எதுவுமே சொல்லலையே!...ஏன் சார்?....அதுக்கும் ஒரு விமர்சனப் பதிவு போடுங்க!.....
//நேசன்..., said...
சுறா படத்தைப் பத்தி எதுவுமே சொல்லலையே!...ஏன் சார்?....அதுக்கும் ஒரு விமர்சனப் பதிவு போடுங்க!.....//
தப்பா எடுத்துக்காதீங்க நண்பா.. நான் விஜய் படங்கள் பாக்குறது கிடையாது..:-)))
ரசிக்கக் கூடிய பார்வை.
உங்கள் நகைச்சுவைத் திறனையும், எழுத்து நடையையும் ரசித்தேன்!!
ஆஹா......கார்க்கி எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்!.....
அப்போ உங்கள மாதிரி 'சின்னப்பிள்ளைகளுக்குப்' பிடிக்கும் என்கிறீர்கள் .... ?
//பிள்ளையாண்டான் said...
ரசிக்கக் கூடிய பார்வை. உங்கள் நகைச்சுவைத் திறனையும், எழுத்து நடையையும் ரசித்தேன்!!//
நன்றிங்க..
//நேசன்..., said...
ஆஹா......கார்க்கி எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்!.....//
ரசனைகள்தான் வேற வேற.. மத்தபடி சகா நம்ம ஆளுதான் தல
// தருமி said...
அப்போ உங்கள மாதிரி 'சின்னப்பிள்ளைகளுக்குப்' பிடிக்கும் என்கிறீர்கள் .... ?//
அவ்வ்வ்வ்.. ஐயா.. நீங்க சொன்ன மாதிரியே படம் பப்படம்தான்..:-((
ஒன்னும் சொல்றதுக்கில்ல..ரொம்ப எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிச்சம்
//வெற்றி said...
ஒன்னும் சொல்றதுக்கில்ல..ரொம்ப எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிச்சம்//
why blood? ame blood..:-((
:)
:(
மேவீ.. இதுக்கு என்னய்யா அர்த்தம்?
usa புரம்ன்னு பேரு வெச்சு அமேரிக்காவை எதிர்க்கிறார். ஆனால் கடைசியில் ஊசாபுரத்தை ஜெய்சங்கர் புரத்துக்காரர்கள் சூரையாடும் போது கைது செய்யப்பட்ட சதாம் உசேன், சே குவேரா போன்ற சர்வாதிகாரிகளை விடுவிக்கிறார்கள்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு சொல்லவேண்டியது தான் அதுக்காக சர்வாதிகாரத்தை ஆதரிப்பதா ?
//சே குவேரா போன்ற சர்வாதிகாரிகளை //
??????????????
ஸ்லிப் ஆஃப் டங்க்.
சே.குவாரா ஒரு சர்வாதிகார ஆதரவாளன். இன்று புரட்சியின் சின்னமாக அவன் முகத்தைப் போட்டு புரட்சிகளையெல்லாம் கேவலப்படுத்தவே ஒரு அறிவாள் சுத்தி கோஷ்டி அலையுது. அதெல்லாம் இங்கு பேசவேண்டியதில்லை.
சிம்புத்தேவன் செய்த பாரடி படம் ஒரு நல்ல முயற்சி தான் என்றாலும், இப்படி மக்கள் விரோத, மக்களாட்சி விரோத அரசியல் கொள்கைகளுக்கும், சர்வாதிகாரிகள், சர்வாதிகார ஆதரவாளர்களுக்கெல்லாம் ஆதரவாக படத்தை எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை.
@வஜ்ரா
USA - அரசியலுக்குள் நுழைய எனக்கு விருப்பமில்லை.. ஆனால் நீங்களே சொன்னது போல இது ஒரு ஸ்பூப் படம்.. அமெரிக்காவின் எதிர்ப்பாளர்கள் என்ற முறையில் கடைசி காட்சி அப்படி அமைத்து இருக்கிறார் என்றே நினைக்கிறேன்..
நல்ல விமர்சனம்.நல்ல அறிவுரை.அதானே ரொம்ப எதிர்பார்த்தா தானே ஏமாற்றம் வரும்.இந்த ஜீவி பிரகாஷை ஏன் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறார்களோ தெரியலை.
@காமராஜ்
வாங்கண்ணே.. மொத தடவையா நம்ம தளத்துக்கு வந்து இருக்கீங்க.. ரொம்ப நன்றி
நடுநிலையான விமர்சனம் சார்.
@ அக்பர்
நன்றி நண்பா..:-))
halo sir ...........................
ஹலோ சொன்ன அனானி யாருன்னு தெரியலையே? நம்ம மாணவரா?
eppadi sir ippadi? Neenga engeyo Poyiteenga.
Ippadikku ,
Maanavan Magudesh
Post a Comment