May 18, 2010

அந்த அம்மா செஞ்சது சரியா..?!!

என்னுடைய வெகு நாள் ஆசை.. அதை ஒரு கனவு என்று கூட சொல்லலாம். ஆம் நண்பர்களே.. திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்புக்கு விண்ணப்பம் அனுப்பி இருக்கிறேன். மாணவனாக மீண்டும் படிக்கப் போகிறோம் என்பதே மனதுக்கு சுகமாக இருக்கிறது. இந்த சந்தோஷமான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

***************

ரயில்வே காலனி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் நான் குடியிருந்த இடம். சந்தோஷமாக இருக்கிறோமா? குழாயடியில்தான் டாப்பு. நண்பர்களும் சேர்ந்து கொண்டால் களை கட்டும். சோகமா? ரெண்டு நடை தெரு முக்கு வரை போய் வந்தால் மனம் அமைதியாகி விடும். மதுரையின் பரபரப்புகளுக்கு இடையே இன்னமும் இங்கேதான் கொஞ்சம் அமைதி ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஊருக்கு மத்தியில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அருமையான ஏரியா.

வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை காலனியில் இருந்த பூங்காவில் உட்கார்ந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஐந்து வயதிருக்கக்கூடிய குழந்தை ஒன்று அதன் தாயோடு உள்ளே வந்தது. செம சேட்டை. அங்கே ஓட, இங்கே ஓட என்று ஒரே அலப்பறை. பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அந்தக் குழந்தையை ரசிக்கத் தொடங்கி விட்டோம். ஆனால் அந்த அம்மாவோ "ஒரு இடத்துல நிக்கிறியா.. சனியனே.." என பிள்ளையைத் திட்டிக் கொண்டே பின்னாடி ஓடிக் கொண்டிருந்தார். கடைசியாக பிள்ளை ஊஞ்சல் அருகே வந்து நின்றது. அதில் ஏறி விளையாட வேண்டும் என்று அதற்கு அத்தனை ஆசை. அதன் அம்மாவோ கூடாது என்று ரொம்ப கறாராக சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி இப்படி அம்மாவை ஐஸ் வைத்து ஊஞ்சலில் விளையாட ஆரம்பித்தது குழந்தை.

சந்தோஷமாக ஆடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட... திடீரென ஊஞ்சலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டது குழந்தை. நல்ல வேளையாக மணலில் விழுந்ததால் அடி எதுவும் படவில்லை என்றாலும் அதிர்ச்சியில் அழத் தொடங்கி விட்டாள். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதன் அம்மா வேக வேகமாக குழந்தையை வந்து தூக்கி விட்டார். சரி அதை ஆறுதல் படுத்தப் போகிறார் என்று பார்த்தால்.. அடுத்து அவர் செய்ததுதான் அதிர்ச்சி. அவர் பாட்டுக்கு பிள்ளையை போட்டு அடி அடி என்று அடிக்க ஆரம்பித்து விட்டார்.

"மொதல்லேயே சொன்னேனே.. கேட்டியா கேட்டியா .." என்று குமுறி விட்டார். அருகில் இருந்த மக்கள்தான் பெரும் பிரயாசை செய்து குழந்தையை மீட்க வேண்டியதாகிப் போனது. குழந்தையின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டது. கீழே விழுந்ததை விடத் தனது தாய் அப்படி நடந்து கொள்வார் என்று அது சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. மிட்டாய், விளையாட்டு என்று பல விஷயங்கள் செய்துதான் அதனை ஆசுவாசப்படுத்த முடிந்தது. குழந்தையை இத்தனை கடுமையாக கையாள வேண்டாம் என்று அதன் அம்மாவோடு மன்றாடி கேட்டுக் கொண்டு அனுப்பி வைத்தோம்.

"சுறுசுறுப்பா இருந்தாத் தானடா கொழந்த.. சூட்டிகையான புள்ள.. அதப் போட்டு இப்படி அடிச்சுட்டாங்களே.. பாவம்ல அந்தக் குழந்தை" என்று நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு அவன் "சும்மா புலம்பாதே.. அவங்க பிள்ளையோட நல்லது பத்தி அவங்களுக்கு அக்கறை இருக்கப்போய்தான அடிக்கிறாங்க.."என்றான். நான் அமைதியாகிப் போனேன். அப்படியானால் அந்தக் குழந்தையை அடித்ததை அவனால் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடிகிறது, அந்தப் பெண்மணி செய்ததை நியாயப்படுத்த முடிகிறது என்றுதானே அர்த்தம்?

எனக்கு எழுந்த கேள்விகள் இதுதான். மனரீதியாக இந்த விஷயம் அந்தக் குழந்தையை பாதிக்காதா? கீழே விழுந்து யாருடைய ஆதரவுக்காக நாம் ஏங்குகிறோமோ , அவர்களே நம்மைப் போட்டு அடித்தால்? தான் செய்யும் எந்த செயலும் நம் அம்மாவுக்குப் பிடிக்கிறதோ என்று குழந்தைக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால்..? சரி தவறு என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்கும் முறை என்பது இதுதானா? கண்டிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எப்படி கண்டிக்கிறோம் என்பது முக்கியம் இல்லையா? எனக்கு என்னமோ "நான் சொன்னதை மீறிப் போய் விளையாண்டாய் அல்லவா, இப்போது அவஸ்தைப்படு" என்று அந்த அம்மா சந்தோஷப்பட்டது போலத்தான் தோன்றியது. ஒரு வேளை நான் நினைப்பது தவறா? இது ஒரு சின்ன விஷயம். இதை இத்தனை பெரிதுபடுத்த வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். இது போன்ற சிறு விஷயங்கள் குழந்தையை ஒன்றும் செய்யவில்லை என்றால் சரி. ஆனால் ஒரு வேளை.. குழந்தை பாதிக்கப்பட்டால்? அதுதான் என்னுடைய கவலை.

அந்தப் பெண்மணி செய்தது சரியா? என்ன செய்திருக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்..

(இந்த நிகழ்வு பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்றென்னைத் தூண்டிய நண்பர் மேவிக்கு நன்றி..)

***************

கார்த்தி ஓவரா குடும்பம், குழந்தைன்னு எழுதுறானேன்னு பின்னூட்டம் போட வேண்டாம் என்று அண்ணன் அத்திரிக்கு அன்பான எச்சரிக்கைகள் விடப்படுகிறது.. :-))))

***************

சமீபத்தில் நான் வாசித்த நண்பர் எட்வினின் இடுகைக்கான சுட்டி இங்கே.. வாசித்துப் பாருங்கள்.. கோடை விடுமுறை மற்றும் மாணவர்கள் பற்றி மனிதர் அருமையாக எழுதி இருக்கிறார்..

33 comments:

Raju said...

வணக்கம் நண்பரே,
மாணவராகப் போவதற்கு வாழ்த்துகள்.

பனித்துளி சங்கர் said...

நண்பரே நீங்கள் சொல்வது ஒரு வகையில் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் என்றாலும் . அந்த தருணத்தில் அந்த தாய் தன் குழந்தையை அடித்ததன் காரணம் அந்த குழந்தை மீது அவள் வைத்திருக்கும் அன்பின் மிகுதியே . இப்பொழுது எனக்கு ஞாபக்கத்திற்கு வரும் ஒன்று கோழி மிதித்து குஞ்சு சாகாது என்பதுதான் .

பகிர்வுக்கு நன்றி !

A N A N T H E N said...

ஒருவேளை அது ஓர் அம்மாவின் மனப்பாடு... தீவிர பாசம் கூட இப்படி கொண்டு செல்லலாம் தானே?

Balakumar Vijayaraman said...

ரெகுலர்ல பண்ணப்போறீங்களா, வாழ்த்துகள்.

//ஒரு சின்ன விஷயம். இதை இத்தனை பெரிதுபடுத்த வேண்டுமா...///

அதுதானே!

ஜெட்லி... said...

ஓவர்ஆ அடிச்சது தப்பு....சும்மா ரெண்டு அடி அடிச்சுட்டு...
அப்புறம் குழந்தைக்கு எங்கே அடிப்பட்டது என்று அக்கறையாக
விசாரித்து இருக்கலாம்....


ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்
அண்ணே....

Joe said...

வாழ்த்துக்கள் கார்த்திக்,
முனைவர் பட்டம் பெறப் படிக்கப் போவதற்கு.

குழந்தைகளை அடிக்கவே கூடாது என்று வெளிநாட்டவர்கள் சொல்கிறார்கள் (ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம்). ஆசிய நாடுகளில் குழந்தைகளை அடிப்பதில் தவறில்லை என்றே பலரும் எண்ணுகிறோம்.

குழந்தைகளை ஒரு சில நேரங்களில் லேசாக அடித்துக் கண்டிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். அதே சமயம், நமது கோபத்தை அவர்களின் மேல் காட்டக் கூடாது. அலுவலகத்தில் ஏற்பட்ட மன உளைச்சலில், சிறு தவறு செய்த குழந்தையை கடுமையாக தண்டிப்பது தவறு.

எந்த சமயமும் குழந்தையை அடிக்கவே மாட்டேன் என்று சொன்னால் அதைப் பல குழந்தைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள், என்ன சேட்டை பண்ணாலும், நமக்கு எதுவும் நடக்காது என்று.

அந்தம்மாவைப் பொறுத்தவரை அவர் செய்தது ரொம்ப தப்பு. கீழே விழுந்த குழந்தையை அரவணைத்து ஆறுதல் சொல்லி, எங்காவது அடிபட்டிருக்கான்னு பாத்திருக்கணும்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் சார்.

vasu balaji said...

வாழ்த்துகள் கார்த்தி:)

Prabhu said...

நீங்களே அத்திரியை சொல்வது போல சொல்லி வேணும்னே கமெண்ட் வாங்கிக்கிறாப்ல இருக்கு ;)

Prabhu said...

நீங்களே அத்திரியை சொல்வது போல சொல்லி வேணும்னே கமெண்ட் வாங்கிக்கிறாப்ல இருக்கு ;)

எட்வின் said...

சகோ. ஜோ சொன்னது போல... அந்தம்மாவைப் பொறுத்தவரை அவர் செய்தது ரொம்ப தப்பு. கீழே விழுந்த குழந்தையை அரவணைத்து ஆறுதல் சொல்லி, எங்காவது அடிபட்டிருக்கான்னு பாத்திருக்கணும்.

அதோட நம்மளயும் நம்பி படிச்சதுக்கு உங்களுக்கு மிக்க நன்றி பாஸ். படிச்சதோட பகிர்ந்து கிட்டதும் மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

குழந்தையை அடிப்பவர்கள் மனநோயாளிகள். கீழே விழுந்த வலியை விட அதன் அம்மா அடித்த அதிர்ச்சிதான்.. அடித்தது தவறு. எந்த மிருகமாவது தன் குழந்தையை அடிக்கிறதா?

கார்த்திகைப் பாண்டியன் said...

// ♠ ராஜு ♠ said...
வணக்கம் நண்பரே, மாணவராகப் போவதற்கு வாழ்த்துகள்.//

நன்றி டக்கு...:-)

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...நண்பரே நீங்கள் சொல்வது ஒரு வகையில் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் என்றாலும் . அந்த தருணத்தில் அந்த தாய் தன் குழந்தையை அடித்ததன் காரணம் அந்த குழந்தை மீது அவள் வைத்திருக்கும் அன்பின் மிகுதியே . இப்பொழுது எனக்கு ஞாபக்கத்திற்கு வரும் ஒன்று கோழி மிதித்து குஞ்சு சாகாது என்பதுதான் . //

அதுவும் சரிதான் என்றாலும் கொஞ்சம் அந்த அம்மா அனுசரனையா நடந்திருக்கலாம் நன்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//A N A N T H E N said...
ஒருவேளை அது ஓர் அம்மாவின் மனப்பாடு... தீவிர பாசம் கூட இப்படி கொண்டு செல்லலாம் தானே?//

அப்படி இருந்துட்டா பரவாயில்ல நண்பா

// வி.பாலகுமார் said...
ரெகுலர்ல பண்ணப்போறீங்களா, வாழ்த்துகள். //

இல்லப்பா.. பார்ட் டைம்தான்

////ஒரு சின்ன விஷயம். இதை இத்தனை பெரிதுபடுத்த வேண்டுமா...///அதுதானே!//

:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
ஓவர்ஆ அடிச்சது தப்பு....சும்மா ரெண்டு அடி அடிச்சுட்டு... அப்புறம் குழந்தைக்கு எங்கே அடிப்பட்டது என்று அக்கறையாகவிசாரித்து இருக்கலாம்..//

சரியாத்தான் தம்பி சொல்றீங்க

//Joe said...
வாழ்த்துக்கள் கார்த்திக்,முனைவர் பட்டம் பெறப் படிக்கப் போவதற்கு.//

நன்றி தல..

மற்றபடி உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கின்றன.. கிட்டத்தட்ட என் மனதில் இருந்ததை சொல்லி விட்டீர்கள்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// செ.சரவணக்குமார் said...
வாழ்த்துக்கள் சார்.//

நன்றி.. சார் எல்லாம் வேண்டாமே.. நான் உங்க நண்பன் தாங்க :-))))))

//வானம்பாடிகள் said...
வாழ்த்துகள் கார்த்தி:)//

நன்றி பாலா சார்

// pappu said...
நீங்களே அத்திரியை சொல்வது போல சொல்லி வேணும்னே கமெண்ட் வாங்கிக்கிறாப்ல இருக்கு;)//

ஆகா பப்பு... சூதைக் கண்டுபிடிச்சுட்டாப்ளயே..:-))) சரி சரி வெளில சொல்லாதீங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//எட்வின் said...
சகோ. ஜோ சொன்னது போல... அந்தம்மாவைப் பொறுத்தவரை அவர் செய்தது ரொம்ப தப்பு. கீழே விழுந்த குழந்தையை அரவணைத்து ஆறுதல் சொல்லி, எங்காவது அடி பட்டிருக்கான்னு பாத்திருக்கணும்.//

அதேதான் நண்பா

//அதோட நம்மளயும் நம்பி படிச்சதுக்கு உங்களுக்கு மிக்க நன்றி பாஸ். படிச்சதோட பகிர்ந்து கிட்டதும் மிக்க மகிழ்ச்சி.//

ரொம்ப நாளா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் நண்பா.. நேத்து எழுதி இருந்தது ரொம்பப் பிடிச்சது.. அதுதான் பகிர்ந்தேன்.. உங்கள மாதிரியே எனக்கும் சந்தோஷம்தான்

//மயில் said...
குழந்தையை அடிப்பவர்கள் மனநோயாளிகள். கீழே விழுந்த வலியை விட அதன் அம்மா அடித்த அதிர்ச்சிதான்.. அடித்தது தவறு. எந்த மிருகமாவது தன் குழந்தையை அடிக்கிறதா?//

காட்டமான பதிலடி.. நன்றி சகோதரி

மேவி... said...

"கார்த்தி ஓவரா குடும்பம், குழந்தைன்னு எழுதுறானேன்னு பின்னூட்டம் போட வேண்டாம் என்று அண்ணன் அத்திரிக்கு அன்பான எச்சரிக்கைகள் விடப்படுகிறது.. :-))))"


கார்த்தி உங்களுக்கு கல்யாண ஆசை வந்துருச்சு போல இருக்கு, அதான் இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதுறீங்க. சீக்கிரம் உங்க காதலை வீட்டுல சொல்லிடுங்க (நான் உங்களோட இலக்கிய காதலை பற்றி சொன்னேன்)


நல்ல எழுதிருக்கீங்க

Romeoboy said...

ஒருவர் பார்வையில் ஒவ்வொரு விஷயம் மாறுபடும்.

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் சார்

ச.பிரேம்குமார் said...

கண்டிப்பா தப்பு தான் பாண்டியன். குழந்தைக்கு அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும். இப்படி வேகமா ஆடுனா விழக்கூடும், அதனால நிதானமா ஆடனும் இல்ல கெட்டியா பிடிச்சுக்கனும் அப்படீன்னு சொல்லி கொடுத்திருக்கனும்.

அப்போது தான் ஓட கற்று கொள்ளும் குழந்தைகள் விழுந்தால் கூட, பயப்படுவோ அல்லது திட்டவோ கூடாது; மாறாக எழுந்து வா என்று சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறார்கள். Actually it works pretty well too :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
கார்த்தி உங்களுக்கு கல்யாண ஆசை வந்துருச்சு போல இருக்கு, அதான் இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதுறீங்க. சீக்கிரம் உங்க காதலை வீட்டுல சொல்லிடுங்க (நான் உங்களோட இலக்கிய காதலை பற்றி சொன்னேன்)//

எதிரிகள் வெளியில் இருந்து உருவாகுவதில்லை தம்பி.. அதை அடிக்கடி நிரூபிக்கிறீங்க..:-)))

//~~Romeo~~ said...
ஒருவர் பார்வையில் ஒவ்வொரு விஷயம் மாறுபடும்.//

நிச்சயமா தல.. அப்படியே நீங்க இந்த விஷயத்த எப்படி அணுகி இருக்கீங்க என்றும் சொல்லி இருக்கலாம்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசமித்ரன் said...
வாழ்த்துக்கள் சார்//

வாழ்த்துக்கு நன்றிண்ணே.. ஆனா அந்த சாரை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்..:-)))

//ச.பிரேம்குமார் said...
கண்டிப்பா தப்பு தான் பாண்டியன். குழந்தைக்கு அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும். இப்படி வேகமா ஆடுனா விழக்கூடும், அதனால நிதானமா ஆடனும் இல்ல கெட்டியா பிடிச்சுக்கனும் அப்படீன்னு சொல்லி கொடுத்திருக்கனும்.//

அதேதான் பிரேம்.. இப்படி ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன்.. இப்போ எங்கே இருக்கீங்க நண்பா? அமெரிக்காவா சென்னையா? நல்லா இருக்கீங்களா?

Anonymous said...

"யாருடைய ஆதரவுக்காக நாம் ஏங்குகிறோமோ , அவர்களே நம்மைப் போட்டு அடித்தால்?".....why to fall besides her words and then cry and then stretch hands????
hahahaah......

Anonymous said...

"யாருடைய ஆதரவுக்காக நாம் ஏங்குகிறோமோ , அவர்களே நம்மைப் போட்டு அடித்தால்?".....why to fall besides her words and then cry and then stretch hands????
hahahaah......

Anonymous said...

"யாருடைய ஆதரவுக்காக நாம் ஏங்குகிறோமோ , அவர்களே நம்மைப் போட்டு அடித்தால்?".....why to fall besides her words and then cry and then stretch hands????
hahahaah......

Anonymous said...

"யாருடைய ஆதரவுக்காக நாம் ஏங்குகிறோமோ , அவர்களே நம்மைப் போட்டு அடித்தால்?".....why to fall besides her words and then cry and then stretch hands????
hahahaah......

Anonymous said...

"யாருடைய ஆதரவுக்காக நாம் ஏங்குகிறோமோ , அவர்களே நம்மைப் போட்டு அடித்தால்?".....why to fall besides her words and then cry and then stretch hands????
hahahaah......

Anonymous said...

மே வீ sir சொல்லிரத எல்லாரும் listen

Anonymous said...

மே வீ sir சொல்லிரத எல்லாரும் listen

gauss said...

hello sir,
don't feel bad that i am writing in english, but i suppose u know why. i keep reading ur blog though with great difficulty. all the best for ur new innings in studies which i think is for mtech.

gauss said...

abt the blog.. today everyday wants good education but private schools claim exorbitant fees. so we may have to go to government schools. there the teacher is least interested in the students. today the essence of student-teacher relationship or anything of that kind is obsolete and hence we are the end sufferers.teachers in any school care only to finish the portions not to educate the child. kali kalam sir.

பிரேமாவின் செல்வி said...

மிக தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும். இதை உளவியல் ரீதியாகத்தான் அணுக வேண்டும். பெரும்பாலான நேரங்களில், அம்மாதான் குழந்தையோடு நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. என்னதான் பாசம், நேசம் எல்லாம் இருந்தாலும், அதுவரை மிக சுதந்திரமாக இருக்கும் பெண்களுக்கு நகர முடியாதபடி கட்டிப் போடுவதாகத்தான் குழந்தையை கவனித்துக் கொள்வது என்பது இருக்கும். குழந்தையின் முதல் 3 மாதங்களில் இது மிகவும் அதிகம். கூட்டுக் குடும்பங்கள் இல்லாத பெரு நகரங்களில் 24 மணி நேரமும் குழந்தையோடு செலவிடும் பெண்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் இதற்குக் காரணம். என் தோழியர் பல பேரிடத்தில் இந்த அடிப்படையிலான புலம்பல்களைக் கேட்டிருக்கிறேன்.