June 18, 2010

ராவணன் - திரைப்பார்வை..!!!

நல்லவனுக்கு உள்ளே ஒரு கெட்டவன் இருப்பதுண்டு.. கெட்டவனுக்கு உள்ளேயும் ஒரு நல்லவன் உண்டு.. அதுதான் "ராவணன்". முதலிலேயே தெளிவாக சொல்லி விடலாம். இது சாட்சாத் ராமாயணக் கதையேதான். "அசோகவன"ப் பகுதியை கதைக்கான கருவாக்கிக் கொண்டு கலந்து கட்டி கொடுத்து இருக்கிறார் மணி. கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஆனால் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் சொக்க வைக்கிறார். மகாபாரதத்து கர்ணனை "தளபதி"யாக்கிய மணிரத்னம் இந்தப் படத்தில் ராமாயணத்து ராவணனை நாயகன் ஆக்கியிருக்கிறார்.


ஊருக்கெல்லாம் நல்லவன் வீரா. ஆனால் சட்டத்துக்கு குற்றவாளி. அவனைப் பிடிக்க வரும் வரும் காவல்துறை அதிகாரி தேவ். அவருடைய மனைவி ராகினி. தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு பழிவாங்க ராகினியைக் கடத்துகிறான் வீரா. ராகினியின் மீது அவனுக்கு உண்டாகும் காதலால் அவளைக் கொல்லும் முயற்சியில் தோற்றுப் போகிறான். மனைவியைத் தேடி காட்டுக்குள் நுழையும் தேவ், கணவனின் அன்புக்கும் வீராவின் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ராகினி, ராகினியின் அன்புக்காக ஏங்கும் பழிவெறி கொண்ட வீரா.. அவர்களுக்கு இடையே நடக்கும் ஆடுபுலியாட்டம் தான் படம்.

இது ஐஸ்வர்யாவின் படம். அழகாக இருக்கிறார். அந்த பளிங்குக் கண்கள்.. ஆத்தாடி.. படத்துக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கிறார். மலையில் இருந்து கீழே குதித்து மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி ஒன்றே போதும்.. அங்கே ஆரம்பிக்கும் "உசுரே போகுதே" பாடலும்.. பட்டாசு. அருவி, ஏரி, மழை என படம் முழுவதும் நனைந்து கொண்டே இருக்கிறார். மெதுமெதுவாக விக்ரமின் மீது ஈர்க்கப்படும் காட்சிகளிலும் அருமையாக நடித்து இருக்கிறார். என்ன ஒன்று.. படம் முழுவதும் மார்புகள் தெரியும்படியாக அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டும் வடகத்திய சாயலோடு இருப்பதால் நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. (தியேட்டரில் பின்னாடி உட்கார்ந்து இருந்த நண்பர்கள் வேறு "ஐயோ பாவம் அபிஷேக்" என்று கத்திக் கொண்டே இருந்தார்கள்.. அவ்வவ்..)



முரட்டு வீராவாக விக்ரம். படம் முழுக்க வியாபித்து அழகாக நடித்து இருக்கிறார். தன் மீது ஐஸுக்கு அன்பு வந்து விட்டதை உணர்ந்து கொண்டு கண்களில் ஒரு சந்தோஷத்தை காண்பிக்கிறார் பாருங்கள்.. தூள். ஆனால் இதை விடக் கடினமான ரோல்களில் எல்லாம் அவரைப் பார்த்து விட்டதால் அவ்வளவு ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை. தனக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைக்கக் கூடும் என்று நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறார். பார்ப்போம். தேவாக பிருத்விராஜ். நல்லவனா, கெட்டவனா என்று பிரித்துப் பார்க்க முடியாத பாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார். கண்களில் சிரிப்பைத் தேக்கி வைத்துக் கொண்டே மற்றவர்களை காலி பண்ணும் காட்சிகளில் அசத்துகிறார்.

அனுமார் கார்த்தி. தனது ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். விக்ரமின் அண்ணனாக மகாகுண்டு பிரபு (விபீஷணன்?!). கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். தம்பியாக முன்னா. போலிசால் சுடப்பட்டு சாகிறார். விக்ரமின் தங்கையாக பிரியாமணி. தமிழ் சினிமாவில் இனிமேல் கேங்ரேப் என்றாலே அவர்தான் போல. பிரபுவின் மனைவியாக ரஞ்சிதா மாதாஜி ஸ்க்ரீனில் வரும்போதெல்லாம் விசில் தூள் பறக்கிறது. அரவாணியாக வையாபுரியும் இருக்கிறார்.

டெக்னிக்கல் விஷயங்களைப் பொறுத்தவரை - சர்வதேசத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா என்று பெருமையாக சொல்லலாம். சண்டைக் காட்சிகள் எல்லாமே அசத்தி இருக்கிறார்கள். குறிப்பாக பாலத்தில் நடைபெறும் கடைசி சண்டைக் காட்சி.. இணைந்த கைகள் படத்துக்குப் பிறகு இப்படி ஒரு காட்சியை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அதே போல ஓடும் டிரக்குகளில் ஏறும் மனிதர்கள், கூடாரங்களில் நடக்கும் சண்டை என எல்லாமே ரொம்ப இயற்கையாக இருக்கின்றன. சுஹாசினியின் வசனங்கள் அதிசயமாக தெளிவாக புரிகின்றன. ஒலிப்பதிவும் பயங்கரத் துல்லியம்.

படத்துக்கு மூன்று முக்கிய தூண்கள். முதலில் கலை - சமீர் சந்தா. மலையில் இருக்கும் கிராமம், அருவிக்கு ஊடே இருக்கும் கடவுள் சிலை, பாழ்மண்டபங்கள் என்று கலக்கி இருக்கிறார். இரண்டாவதாக ஏ.ஆர்.ரகுமான். பாடல்களை விடுங்கள். படம் முழுக்கவே பின்னணி இசையில் புயல் பின்னி எடுத்திருக்கிறது. கிளைமாக்சுக்கு முந்தைய காட்சியில் விக்ரமும், ஐசும் பேசிக் கொள்ளும் காட்சியின் பின்னணி இசை.. கொல்லுது... அம்சம். கடைசியாக ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன். மனத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியமைப்புகள். கொஞ்சம் தவறினால் ஆள் காலி என்பது போன்ற கஷ்டமான இடங்களில் ரொம்ப சிரமப்பட்டு படம் பிடித்து இருக்கிறார்கள். வண்ணங்களால் வரைந்த அழகிய ஓவியங்கள் நம் கண்முன்னே உருப்பெற்று வந்தது போல எல்லாக் காட்சிகளுமே அருமை. படம் பார்க்கும்போது சீனாவின் யாங் ஈமு படங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


மணிரத்னம் - இவரைப் பற்றி என்ன சொல்ல? அனைவரும் அறிந்த ஒரு பொதுப் பிரச்சினையை எடுத்துக் கொள்வது.. அதனூடாக தான் ஒரு கதையை சொல்வது.. இதுதான் மணியின் ஸ்டைல். ரோஜா தொடங்கி குரு வரை இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை தெளிவாக, அழகாக செய்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் படம் கூட ஏதோ நக்சல் தலைவரின் கதை என்கிற ரீதியில் பேசினார்கள். ஆனால் இது ராமாயணப் போர்வையில் அப்பட்டமான ஒரு காதல் கதை. அதன் நடுவே சிறிது அரசியலையும் பேசி இருக்கிறார். அவ்வளவே.. முதல் பாதி நல்ல வேகம். இரண்டாம் பாதி கொஞ்சம் சுனங்கினாலும் போனது தெரியவில்லை. இறுதியில் கனத்த மனதோடு நாம் வெளியேறுவதில் தனது வெற்றியை உறுதி செய்கிறார் மணி.

(அபிஷேக்குக்காக ஒரு முறை இந்தியில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டி விட்டிருக்கிறது படம்..)

ராவணன் - கவர்கிறான்

25 comments:

அத்திரி said...

கடமைய செஞ்சாச்சி போல

அத்திரி said...

//இது ஐஸ்வர்யாவின் படம். அழகாக இருக்கிறார். அந்த பளிங்குக் கண்கள்.. //

குரு தியேட்டரில் ஆறா ஓடிச்சாம் ஜொள்ளுதான்.......நீங்க தானா அது??

Joe said...

அருமையான விமர்சனம், கார்த்திக்.
படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டி விட்டீர்கள், அடுத்த வார இறுதிக்குள் பார்த்து விட வேண்டும்.

சென்னையில் எங்கேயும் டிக்கெட் கிடைக்கவேயில்லை.
உங்களுக்கு திரைப்பட விமர்சகர் என்ற முறையில் இலவசமாக டிக்கெட் கிடைக்குமோ? ;-)

கார்த்திகைப் பாண்டியன் said...

// அத்திரி said...
கடமைய செஞ்சாச்சி போல//

ஹி ஹி ஹி.. கடமைன்னா கரெக்டா இருக்கணும்ல

//அத்திரி said...
குரு தியேட்டரில் ஆறா ஓடிச்சாம் ஜொள்ளுதான்....நீங்க தானா அது??//

கம்பெனி சீக்ரட்.. பப்ளிக்கா சொல்லாதீங்க தல

// Joe said...
சென்னையில் எங்கேயும் டிக்கெட் கிடைக்கவேயில்லை.உங்களுக்கு திரைப்பட விமர்சகர் என்ற முறையில் இலவசமாக டிக்கெட் கிடைக்குமோ? ;-)//

ரொம்ப எதிர்பார்க்காம போங்க நண்பா.. பிடிக்கும்.. இலவச டிக்கட்டா? எங்க.. நூறு ஓவா கொடுத்துத்தான் பார்த்தேன்..

நேசமித்ரன் said...

//படம் முழுவதும் மார்புகள் தெரியும்படியாக அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டும் வடகத்திய சாயலோடு இருப்பதால் நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.//

சங்கட,.மாவா ...


ம்ம் ரைட்டு தலைவரே ..
:))


விமர்சனம் மெருகு கூடிக்கிட்டே போவுது போல

ம்ம் வாழ்த்துகள் அடுத்த தடவ ஃப்ரீ பாஸ் கிடைக்க

ஜெய்சக்திராமன் said...

ஹிந்தி ராவண் பாத்துட்டு ஒருத்தர் எழுதியிருந்த குறிப்புகள் இது...
"மெதுவான திரைக்கதை
அபிஷேக், விக்ரம் சுமாரான நடிப்பு
கதை நல்லா இல்ல..."
இந்த மாதிரி எதிர்மறையாகவே இருந்தது...

உங்களோட விமர்சனத்துக்காகத்தான் காத்திருந்தேன்...
கண்டிப்பா பார்த்திட வேண்டியதுதான்

குடந்தை அன்புமணி said...

எப்படி தலைவா? உங்களுக்கு நேரம் கிடைக்குது? காலேஜிக்கு போறதில்லையா? பசங்களோட கட் அடிச்சிட்டு நீங்களும் படம் பார்க்கிறீ்ஙகளா? எனக்கு இந்த உண்மை தெரி்ஞசாகணும்!

அன்பேசிவம் said...

யோவ் வாத்தியாரே! என்னைய்யா இது....... :-)


ம்ம்ம் நமக்கு குடுத்து வைக்கல இன்னிக்கு.... அந்த பொறாமைதான் வேற ஒண்ணியும் இல்லை

ஜாபர் ஈரோடு said...

//படம் முழுவதும் மார்புகள் தெரியும்படியாக அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டும் வடகத்திய சாயலோடு இருப்பதால் நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.//

நம்பிட்டேன்......

வால்பையன் said...

இன்னைக்கு காலேஜ் போகலையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசமித்ரன் said...
சங்கட,.மாவா ... ம்ம் ரைட்டு தலைவரே .. :))//

அதுக்குத்தான் கொஞ்சம் சங்கடமான்னு சொன்னேன் தலைவரே..:-)))

//ஜெய்சக்திராமன் said...
உங்களோட விமர்சனத்துக்காகத்தான் காத்திருந்தேன்... கண்டிப்பா பார்த்திட வேண்டியதுதான்//

ரொம்ப மோசம் எல்லாம் கிடையாது.. தொழில்நுட்ப விஷயங்களுக்காகவே ஒரு தடவை பார்க்கலாம்..

//குடந்தை அன்புமணி said...
எப்படி தலைவா? உங்களுக்கு நேரம் கிடைக்குது? காலேஜிக்கு போறதில்லையா? பசங்களோட கட் அடிச்சிட்டு நீங்களும் படம் பார்க்கிறீ்ஙகளா? எனக்கு இந்த உண்மை தெரி்ஞசாகணும்!//

சே சே.. நான் நல்ல வாத்தியார் தான் நண்பா.. கட்டெல்லாம் அடிக்க மாட்டேன்..:-)) வருடாந்திர விடுமுறைல இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
யோவ் வாத்தியாரே! என்னைய்யா இது....... :-) ம்ம்ம் நமக்கு குடுத்து வைக்கல இன்னிக்கு.... அந்த பொறாமைதான் வேற ஒண்ணியும் இல்லை//

விடுங்க தல.. சுனா பானா வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்

//ஜாபர் ஈரோடு said...
நம்பிட்டேன்......//

அப்பாடா.. நான் நல்லவன்னு நீங்களாவது நம்புனீனங்களே.. போதும் நண்பா

//வால்பையன் said...
இன்னைக்கு காலேஜ் போகலையா//

வருடாந்திர விடுமுறைல இருக்கேன் தல..

KARTHIK said...

//படம் முழுவதும் மார்புகள் தெரியும்படியாக அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டும் வடகத்திய சாயலோடு இருப்பதால் நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.//

தல அப்படி ஒன்னும் தெரியல

ஆனா பின்னால இருந்த செட் மற்றும் அந்த ஆட்கள் போட்டிருந்த டிரஸ் இதெல்லாம் வேனா அவங்க இந்திக்காக எடுத்தபடம்னு நெனைக்கவெக்குதுங்க
கத ஒன்னும் இல்லைனாலும் கேமராவும் செட்டும் இசையும் கலக்கிட்டாங்க :-))

KARTHIK said...

ஆனா முடிவு ரொம்ப யூகிக்கும்படியாவே இருந்தது எல்லாருக்கும்
கையவெட்டி கைல குடுக்கரதெல்லாம் ஓவர்
ஐஸவிடவும் ரஞ்சிதம் வரும்போதுதான் தியேட்டர் சும்மா அதிருதுங்க
நம்ம சண்டிகால 70 ரூபா தல

தேவன் மாயம் said...

படம் பார்த்து விடுவோம்!!

Anonymous said...

நம்ம கனடாவில $12= 500 இந்திய ருபா.

கார்த்திகைப் பாண்டியன் said...

// கார்த்திக் said...
தல அப்படி ஒன்னும் தெரியல//

இல்லையே தல.. நல்லாத் தெரிஞ்சுதே..:-)))

// கத ஒன்னும் இல்லைனாலும் கேமராவும் செட்டும் இசையும் கலக்கிட்டாங்க :-))//

அதேதான்..

//கார்த்திக் said...
ஐஸவிடவும் ரஞ்சிதம் வரும்போதுதான் தியேட்டர் சும்மா அதிருதுங்கநம்ம சண்டிகால 70 ரூபா தல//

எல்லாம் நித்தி மகிமை.. எழுபது பரவாயில்லையே தல.. இன்க நோரு வாஙகிட்டு மொதல்ல இருந்து மூனாவது ரோ..அவ்வ்வ்வ்

//தேவன் மாயம் said...
படம் பார்த்து விடுவோம்!!//

பாருங்க டாக்டர் சார்..

//nonymous said...
நம்ம கனடாவில $12= 500 இந்திய ருபா.//

யாத்தாடி.. ஆணியே புடுங்க வேணாம் சாமி

Ganesan said...

நேர்த்தியான விமர்சனம் வாத்யாரே.

Jackiesekar said...

இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த படத்துக்கு முன் வைக்கபடுகின்றன..
நாளை போஸ்ட் போடறேன்...

உங்களுக்கு இந்த படம் ரொம்ப நல்ல புடிச்சி இருக்கு போல...

கார்த்திகைப் பாண்டியன் said...

// காவேரி கணேஷ் said...
நேர்த்தியான விமர்சனம் வாத்யாரே//

நன்றி தல.. நல்லா இருக்கீங்கள்ல..

//ஜாக்கி சேகர் said...
இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த படத்துக்கு முன் வைக்க படுகின்றன..நாளை போஸ்ட் போடறேன். உங்களுக்கு இந்த படம் ரொம்ப நல்ல புடிச்சி இருக்கு போல//

Mixed Reviews தான் தல.. ஆன என்னப் பொறுத்த வரைக்கும் படம் ஒரு Visual Spectacle..

தருமி said...

போகும்போது என்னையும் கூட்டிட்டி போங்கன்னு சொல்லணும்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். நல்ல வேளை //இங்க நூறு வாஙகிட்டு மொதல்ல இருந்து மூணாவது ரோ..அவ்வ்வ்வ்// ம்ம்... ம்.. நல்லவேளை வரலை.

மேவி... said...

"படம் முழுவதும் மார்புகள் தெரியும்படியாக அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டும் வடகத்திய சாயலோடு இருப்பதால் நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது."

இதை நீங்களா சொல்லுரிங்க ??? நம்ப முடியவில்லை....ஹீ ஹீ ஹீ

விமர்சனம் நல்ல இருக்கு .... ஒரு இலக்கிய பார்வையில் எழுதிருந்த (எஸ்ரா மாதிரி) நல்ல இருந்திருக்கும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்கள் விமர்சனம் என்னைப் படம் பார்க்கும் எண்ணத்தை வளர்க்கிறது.

பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// தருமி said...
ம்ம்... ம்.. நல்லவேளை வரலை.//

பொறுமையா பார்க்கலாங்கைய்யா..

//வடம்பி மேவீ said...
இதை நீங்களா சொல்லுரிங்க ??? நம்ப முடியவில்லை....ஹீ ஹீ ஹீ //

ஹலோ மிஸ்டர்.. நான் நல்லவன்
தம்பி

//ச.செந்தில்வேலன் said...
உங்கள் விமர்சனம் என்னைப் படம் பார்க்கும் எண்ணத்தை வளர்க்கிறத

பாருங்க நண்பா.. பிடிக்கும்..

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said... வடம்பி மேவீ "

இதிலுள்ள அரசியலை கடுமையாக எதிர்க்கிறேன்