அது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ. பெங்களூரு நகரில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவாசல். முகத்தில் தாடியோடும், நிறைய கவலைகளோடும் ஒரு மனிதர் அங்கே நிற்கிறார். கீழே கையில் ஆறு மாத குழந்தையோடு அவரின் மனைவி அமர்ந்து இருக்கிறார். அருகே இரண்டு பெரிய பைகள். அந்த புகைப்படத்தை எனக்கு காமித்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் (முன்னாள்) மாணவர். "என்னடா இது?'.. நான் கேட்ட போது அவர் சொன்ன பதில்.."இது தான் சார் ரெசஷனோட உண்மையான முகம். அமெரிக்கால போன மாசம் வரைக்கும் வேலை.. கை நிறைய சம்பளம்.. ஆனா இன்னைக்கு.. பத்தி விட்டுட்டாங்க.. எங்க கம்பனி வாசல்ல வந்து குவார்டர்ஸ் கேட்டு நின்னுக்கிட்டு இருந்தப்ப எடுத்தேன்..."
அடுத்து அவர் சொன்னது இன்னும் அதிர்ச்சி. "என்னையவே இன்னும் ரெண்டு மாசத்துல கிளப்பி விட்டுருவாங்கன்னுதான் சார் நினைக்கிறேன். அஞ்சு டெஸ்ட் வைப்பாங்க.. அதுல எல்லாத்தையும் கிளியர் பண்ண முடியாட்டி நோட்டிஸ் தான். அந்த கொஸ்டின் பேப்பர்ல இருக்குற கேள்விக்கு ஒரு பயலும் பதில் சொல்ல முடியாது. அவ்வளவு கஷ்டமா இருக்கும். வேலை இல்லன்னு சொல்லாம, கம்பனியோட பேர் கெடாம இப்படித்தான் ஆளுங்கள வெளிய அனுப்பிக்கிட்டு இருக்கான்..சின்ன கம்பனில நேரடியா வேலை இல்லன்னு சொல்லிடுறான். ஆனா எங்க கம்பனி பெரிசுல்ல.. அசிங்கமா வேலை இல்லன்னு சொல்றதுக்கு பதிலா இது ஒரு டெக்னிக்கு..நானே அடுத்து மேல்படிப்பு படிக்கலாம்மான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்..."
இன்னைக்கு எல்லாரயும் போட்டு உலப்பிக்கிட்டு இருக்குற விஷயம்.. ரெசஷன் (Recession) என்கிற உலகப் பொருளாதார சரிவு. இங்க அடிச்சா அங்க வலிக்கும்னு சொல்ற மாதிரி அமெரிக்கால ஆரம்பிச்ச இந்த சரிவு இன்னைக்கு உலகம் பூரா பரவிக்கிட்டு இருக்கு. உண்மையச் சொல்லணும்னா இந்தியால இன்னும் தீவிரமா இந்த சரிவோட பாதிப்பு தெரிய ஆரம்பிக்கலை. அடுத்து வர நாட்கள்ல இன்னும் நெலமை மோசமாகும்னு சொல்றாங்க.

சமீபத்தில் நீங்க இந்த மாதிரி செய்திகளை நிறைய கேட்டு இருக்கலாம். ஐ.டி துறைல மொத்தமா இத்தன பேருக்கு வேலை போச்சு... அப்படின்னு எல்லாம்.... நேத்து வரைக்கும் ராஜாவா இருந்த ஐ டி மக்கள் ஒரே நாள்ல ஒண்ணுமில்லாம போனது எப்படி..? இந்த சரிவால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பது சாப்ட்வேர் நிறுவனங்களும் , அதைச் சார்ந்த மற்ற எல்லா தொழில்களும்தான். இந்த ரெசஷனால பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய மிக முக்கியமான இன்னொரு தொழில்.. கல்வி.
குறிப்பாக பொறியியல் கல்லூரிகள். இன்னைக்கு ரொம்ப ஈசியா ஆரம்பிக்கக் கூடிய, நிறைய லாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் என்னன்னு பார்த்தீங்கனா.. பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கறதுதான். நான் படிச்ச காலத்துல (98-02) எல்லாம் எங்களுக்கு ப்ளேஸ்மென்ட் அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது. ஆனா இன்னைக்கு இருக்குற மாணவர்கள் காலேஜுக்கு உள்ள நுழையும்போதே ரொம்பத் தெளிவா கேக்குற முதல் கேள்வி.. ப்ளேஸ்மென்ட் இருக்கான்னுதான்.. அந்த நிலை உருவானதுக்கு காரணம்.. சாப்ட்வேர் கம்பனிகள். நாலு வருஷம் படிச்சு முடிச்ச உடனே கைல முப்பதாயிரம் ரூபா சம்பளத்தோட வேலை. அதனால பொறியியல் கல்லூரில சேரக்கூடிய மக்களோட எண்ணிக்கை ஜாஸ்தி ஆச்சு.

(தொடரும்.....)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
67 comments:
me the first
//உண்மையச் சொல்லணும்னா இந்தியால இன்னும் தீவிரமா இந்த சரிவோட பாதிப்பு தெரிய ஆரம்பிக்கலை. அடுத்து வர நாட்கள்ல இன்னும் நெலமை மோசமாகும்னு சொல்றாங்க. //
இந்தியாவிலும் ஆரம்பித்து விட்டது அப்படினு நினைக்கிறேன்... ஆனாலும் ஐடி துறை மீண்டும் எழும்!!!!!!!!!!!
கேக்கவே பயமா இருக்கு.
வாங்க அத்திரி நண்பா.. நான் உங்க தளத்துல இருக்கேன்.. நீங்க இங்க.. வருகைக்கு நன்றி..
//அத்திரி said..
இந்தியாவிலும் ஆரம்பித்து விட்டது அப்படினு நினைக்கிறேன்... ஆனாலும் ஐடி துறை மீண்டும் எழும்!!!!!!!!!!!//
நடந்தால் நல்லது.. நடக்கும் என்று நம்புவோம்..
//குடுகுப்பை said..
கேக்கவே பயமா இருக்கு.//
உள்ள நிலை அப்படி பயமாத்தான் இருக்கு நண்பரே..
me the 6 th
Then me the second.
நன்றாக இருக்கிறது அண்ணா
தொடருங்கள் உங்கள் பணியை!
பயங்கரமா பீதிய கிளப்புறீங்க
சூ///// அப்பப்பா///
என்னோட நண்பர்கள் நிறைய பேர் இந்த துறையில் இருக்கிறார்கள். இதுவரைக்கும் எந்த பிரச்சனையுமில்லாமல் இருக்கிறார்கள்... பார்ப்போம்...
இப்படி பொசுக்குனு தொடரும் போட்டுட்டா எப்படி?
//ரெசஷன் (Recession) என்கிற உலகப் பொருளாதார சரிவு. இங்க அடிச்சா அங்க வலிக்கும்னு சொல்ற மாதிரி அமெரிக்கால ஆரம்பிச்ச இந்த சரிவு இன்னைக்கு உலகம் பூரா பரவிக்கிட்டு இருக்கு//
இது எல்லா துறைகளிலும் இருக்கு.மற்ற துறைகளில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று கவனிக்கவும்.
தமிழ்மணக் கருவிப்பட்டையை காணோம்? எங்க போச்சு...
ஐடி ஊழியர்களைப் போல அதுவும் விலக்கப்பட்டிருச்சா??? ஹிஹி
//உண்மையச் சொல்லணும்னா இந்தியால இன்னும் தீவிரமா இந்த சரிவோட பாதிப்பு தெரிய ஆரம்பிக்கலை. //
நிறைய கம்பனிகள் வெளியிலிருந்துதான உள்ள வந்திருக்கு அதல்லாம் போன பின்னாடிதான நாம சரி ஆரம்பிப்போம்
இல்லியா
நிலைமை மோசமா தான் இருக்கு..
atutha pathivukku wait panren. :)
அய்யோ பயமா இருக்கே...
நானும் ஐ.டி. பத்தி தான் யோசிக்கிறேன்..
படிக்க..
:-)
இப்பிடி சொன்னா நடுநடுங்குதுங்க...
என்ன செய்ய???
இந்தியாவுக்கு கண்டிப்பாக பெரிய பாதிப்பகள் வராது.....
:-)
இங்கே 30+ வயது, நரைத்த தலை, குடும்பஸ்தராக இருப்பவர்களை ஐடி கம்பெனிகள் நிராகரிக்கின்றன.
தலை முழுக்கச் சரக்கு இருந்தும் தப்புவதற்கு வழியில்லை.
வணக்கம் கார்த்திக் பாண்டியன்...
உங்கள் அலசல் நல்லா இருக்கு.. தமிநெஞ்சம் சொல்வது போல வயசும் ஒரு பாதகமாக இருக்கு...
//இங்கே 30+ வயது, நரைத்த தலை, குடும்பஸ்தராக இருப்பவர்களை ஐடி கம்பெனிகள் நிராகரிக்கின்றன//
இந்தியாவில் பாதிப்பு அவ்வளவாக பாதிப்பு தெரியாது.. ஆனாலும் குறைந்த பச்ச பாதிப்பை உணரமுடியும் என்பது உண்மை...
ஏற்கனவே இது போல் இரண்டு முறை ஐ.டி துறை சரிவை பார்த்து மீண்டு வந்துவிட்டது. இம்முறை கொஞ்சம் தாமதமாகலாம்
நம் மக்களும் நிறைய மாற வேண்டும். சேமிப்பு பற்றியெல்லாம் குழந்தை பருவத்திலிருந்தே சொல்லித்தர வேண்டும்
உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விஷயம். கவர்மென்ட் வேலையிலாவது union என்று எதாவது இருக்கும். இங்கு அதுவும் கிடையாது :(
அடி கொஞ்சம் அதிகம் தான்
ஓட்டு மட்டும் போட்டுட்டேன்.
ஐ டி சரிவில் இருப்பது உண்மை
மற்ற துறைகளிலும் சரிவு இருக்கத்தான் செய்கிறது .
நானும் அனிமேஷன் படிக்கலாம் என்று இருந்தேன்
இப்போ கொஞ்சம் யோசிக்கறேன்
ஐ டி துறை சரிவில் இருந்து மிண்டுவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது
குறிப்பாக பொறியியல் கல்லூரிகள். இன்னைக்கு ரொம்ப ஈசியா ஆரம்பிக்கக் கூடிய, நிறைய லாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் என்னன்னு பார்த்தீங்கனா.. பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கறதுதான். நான் படிச்ச காலத்துல (98-02) எல்லாம் எங்களுக்கு ப்ளேஸ்மென்ட் அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது. ஆனா இன்னைக்கு இருக்குற மாணவர்கள் காலேஜுக்கு உள்ள நுழையும்போதே ரொம்பத் தெளிவா கேக்குற முதல் கேள்வி.. ப்ளேஸ்மென்ட் இருக்கான்னுதான்.. அந்த நிலை உருவானதுக்கு காரணம்.. சாப்ட்வேர் கம்பனிகள். நாலு வருஷம் படிச்சு முடிச்ச உடனே கைல முப்பதாயிரம் ரூபா சம்பளத்தோட வேலை. அதனால பொறியியல் கல்லூரில சேரக்கூடிய மக்களோட எண்ணிக்கை ஜாஸ்தி ஆச்சு.//
உண்மையை சொல்லியிருக்கிங்க அண்ணே
கார்த்தி, துறை சார்ந்து எழுதியிருக்கீங்க. நல்ல பதிவு. ஐ.டி. தான் என்றில்லை, எல்லா துறையிலும் பொதுவாகவே ஒரு இறுக்கமான பொருளாதார சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. பெரிய தொழில்களே இப்படி தேக்க நிலையில் இருந்தால் எங்களைப் போல சிறு தொழில் புரிபவர்கள் என்ன ஆவோமோ என்ற கவலையை உங்கள் பதிவு ஏற்படுத்துகிறது. இப்போதைக்கு தமிழகத்தின் பெரிய அச்சுறுத்தல் வரும் மாதங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் மின்சார தட்டுப்பாடுதான். பார்க்கலாம் என்ன ஆகிறதென்று...
- பொன். வாசுதேவன்
//anbu said..
நன்றாக இருக்கிறது அண்ணா
தொடருங்கள் உங்கள் பணியை!//
அன்பு(க்கு) நன்றி..
//kavikutty said..
Then me the second.//
வந்து வாழ்த்தினதுக்கு நன்றிங்க
//முரளிகண்ணன் said..
பயங்கரமா பீதிய கிளப்புறீங்க//
உண்மையை சொல்றேன் நண்பா.. இங்க காலேஜ்ல நிலமா ரொம்ப மோசமாத்தான் இருக்கு..
//ஆதவா said..
என்னோட நண்பர்கள் நிறைய பேர் இந்த துறையில் இருக்கிறார்கள். இதுவரைக்கும் எந்த பிரச்சனையுமில்லாமல் இருக்கிறார்கள்... பார்ப்போம்... இப்படி பொசுக்குனு தொடரும் போட்டுட்டா எப்படி?//
சீக்கிரம் அடுத்த பாகத்த போட்டுறலாம் நண்பா..
//சொல்லரசன் said..
இது எல்லா துறைகளிலும் இருக்கு.மற்ற துறைகளில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று கவனிக்கவும்.//
நாம காலேஜ்ல இருக்குறதால இந்த விஷயங்கள் நமக்கு தெளிவா தெரியும் நண்பா.. அதனாலத்தான் இதைப் பத்தி எழுதினேன்..
//ஆ. முத்துராமலிங்கம் said... நிறைய கம்பனிகள் வெளியிலிருந்துதான உள்ள வந்திருக்கு அதல்லாம் போன பின்னாடிதான நாம சரி ஆரம்பிப்போம்
இல்லியா//
எல்லா பக்கமும் பிரச்சினைதான்.. இதுல எந்த கம்பனியும் பிரிச்சு பார்க்க முடியல..
//vinoth gowtam said..
நிலைமை மோசமா தான் இருக்கு..//
உங்கள மாதிரி மக்கள் சொன்னத வச்சுத்தான் இந்த பதிவே எழுதி இருக்கேன்..
//karthik said..
atutha pathivukku wait panren. :)//
சீக்கிரமே போட்டுறேன் கார்த்தி..
//வேத்தியன் said..
அய்யோ பயமா இருக்கே...
நானும் ஐ.டி. பத்தி தான் யோசிக்கிறேன்..படிக்க..:-)
இப்பிடி சொன்னா நடுநடுங்குதுங்க...
என்ன செய்ய???//
நிலைமை இப்படியே இருக்கும்மான்னு தெரியல நண்பா.. மாறலாம்ல.. அதனால நாலு பேருக்கிட்ட கேட்டுக்கிட்டு முடிவு பண்ணுங்க..
//babu said..
இந்தியாவுக்கு கண்டிப்பாக பெரிய பாதிப்பகள் வராது.....//
நம்புவோம்..
//கடையம் ஆனந்த் said..
:-)//
வருகைக்கு நன்றி நண்பா...
இந்தியாவுக்கு அந்தளவுக்கு பாதிப்பிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.
பாகம் - 1?
அப்ப இன்னும் இருக்கா பீதி!?
//தமிழ் நெஞ்சம் said..
இங்கே 30+ வயது, நரைத்த தலை, குடும்பஸ்தராக இருப்பவர்களை ஐடி கம்பெனிகள் நிராகரிக்கின்றன.
தலை முழுக்கச் சரக்கு இருந்தும் தப்புவதற்கு வழியில்லை.//
உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்த்ததா நண்பா.. வருகைக்கு நன்றி..
//ஆ. ஞானசேகரன் said..
இந்தியாவில் பாதிப்பு அவ்வளவாக பாதிப்பு தெரியாது.. ஆனாலும் குறைந்த பச்ச பாதிப்பை உணரமுடியும் என்பது உண்மை...//
அப்படியே நம்புவோம் நண்பா.. பாதிப்பு இல்லாவிட்டால் சந்தோஷமே...
//பிரேம்குமார் said..
நம் மக்களும் நிறைய மாற வேண்டும். சேமிப்பு பற்றியெல்லாம் குழந்தை பருவத்திலிருந்தே சொல்லித்தர வேண்டும்//
நீங்க சொல்றது ரொம்ப சரி பிரேம்.. பணத்தை பற்றியும் சேமிப்பை பற்றியும் நாம் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது...
//சம்பத் said..
உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விஷயம். கவர்மென்ட் வேலையிலாவது union என்று எதாவது இருக்கும். இங்கு அதுவும் கிடையாது :(//
ஆமா நண்பா.. ஆனா இதை எல்லாம் யூனியன் வச்சு எல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது..
//நசரேயன் said..
அடி கொஞ்சம் அதிகம் தான்//
உண்மைதான் நண்பா..
//ஹேமா said..
ஓட்டு மட்டும் போட்டுட்டேன்.//
நன்றி தோழி..
//நிலாவன் said..
ஐ டி சரிவில் இருப்பது உண்மை..ஐ டி துறை சரிவில் இருந்து மிண்டுவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது...//
நம்பிக்கையோடு இருப்போம் நண்பா..
//jackiesekar said..
உண்மையை சொல்லியிருக்கிங்க அண்ணே//
வருகைக்கு ரொம்ப நன்றிண்ணே..
//அகநாழிகை said..
இப்போதைக்கு தமிழகத்தின் பெரிய அச்சுறுத்தல் வரும் மாதங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் மின்சார தட்டுப்பாடுதான். பார்க்கலாம் என்ன ஆகிறதென்று...//
வாங்க வாசு.. ரொம்ப நாளா இதை எழுதணும் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. உண்மையிலேயே பெரிய பிரச்சினைதான்.. சிறுதொழில் செய்யும் எல்லாருமே கவலையில் தான் உள்ளனர்..
//குடந்தைஅன்புமணி said..
பாகம் - 1?
அப்ப இன்னும் இருக்கா பீதி!?//
ஆமா நண்பா.. இரண்டாம் பாகம் கூடிய விரைவில்.. பீதியைக் கிளப்ப. வந்து கொண்டே இருக்கிறது...
பாகம்-2 பீதி இல்லாம கொடுங்கள் நண்பரே
உள்ளதை உள்ளபடி சொல்லுவோம் நண்பா...
அது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ. பெங்களூரு நகரில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவாசல். முகத்தில் தாடியோடும், நிறைய கவலைகளோடும் ஒரு மனிதர் அங்கே நிற்கிறார். கீழே கையில் ஆறு மாத குழந்தையோடு அவரின் மனைவி அமர்ந்து இருக்கிறார். அருகே இரண்டு பெரிய பைகள். அந்த புகைப்படத்தை எனக்கு காமித்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் (முன்னாள்) மாணவர். "என்னடா இது?'.. நான் கேட்ட போது அவர் சொன்ன பதில்.."இது தான் சார் ரெசஷனோட உண்மையான முகம். அமெரிக்கால போன மாசம் வரைக்கும் வேலை.. கை நிறைய சம்பளம்.. ஆனா இன்னைக்கு.. பத்தி விட்டுட்டாங்க.. எங்க கம்பனி வாசல்ல வந்து குவார்டர்ஸ் கேட்டு நின்னுக்கிட்டு இருந்தப்ப எடுத்தேன்..."
///
உண்மையா?
நம்ப முடியவில்லையே!!
கவலைப்பட வேண்டிய விஷயம்:-(
ippa mattum enava oru college layayum placement illa , chuma pechuku solrathathu than.!
பார்ட் 2 எப்ப???
//தேவன்மாயம் said..
உண்மையா?
நம்ப முடியவில்லையே!!//
சத்தியமான உண்மை நண்பா.. அதில் கற்பனை ஏதுமில்லை.. உடைத்துச் சொன்னால் அந்த கம்பனி விப்....
//இயற்கை said..
கவலைப்பட வேண்டிய விஷயம்:-(//
ஆமாம் தோழி.. வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்..
//rajesh said..
ippa mattum enava oru college layayum placement illa , chuma pechuku solrathathu than.!//
உண்மை நண்பா.. இந்த வருடம் பிளேஸ்மென்ட் இன்னும் சரிந்து உள்ளது...
//கவின் said..
பார்ட் 2 எப்ப???//
ரொம்ப நாளா ஆளையேக் காணோம்? வாங்க நண்பா.. சீக்கிரம் போட்டுறலாம்...
when Every one want to work for another, where we can create the new jobs, that is the reason for the current reason, Hi all, pls think of creating new jobs by starting the new business.
Kindly help me to type in tamil.
நல்லா எழுதி இருக்கீங்க கார்த்திகை பாண்டியன்..
நீங்கள் குறிப்பிட்டுள்ளதை விட நிலைமை மோசம் என்றே கருதுகிறேன்..பலர் இது குறித்த சீரியஸ்நஸ் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
//ram மற்றும் கிரி //
வருகைக்கு நன்றி..
//Ram..//
http://www.google.com/transliterate/indic/Tamil
இந்த லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் செய்யுங்கள்..
Post a Comment