இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று நம் அனைவருக்கும் பெருமை சேர்த்து இந்தியா திரும்பி இருக்கிறார் ரஹ்மான். அவருக்கு வாழ்த்துக்கள். இதே நேரத்தில் நமது தமிழக அரசு இந்த வருடத்துக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. மொத்தம் 71 கலைஞர்களுக்கு இந்த வருடம் விருது வழங்கப்பட்டு உள்ளது. எல்லாம் சரி... ஆனால் உண்மையாக பாராட்டப்பட வேண்டிய கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா? எல்லா பத்திரிக்கைகளிலும் பரத், நயன்தாரா, அசின் விருது பெற்றனர் என்றுதான் செய்தி. ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எல்லா நாட்களிலுமே சினிமா நட்சத்திரங்களைப் பற்றித்தான் எழுதுகிறீர்கள். இதுபோன்ற தருணங்களிலாவது மற்ற கலைஞர்களைப் பற்றி எழுதலாமே.. ஏற்கனவே நம் நாட்டின் பாரம்பரியக் கலைகள் ஒவ்வொன்றாக அழிந்து வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழ் மக்களின் அரவணைப்பும் உரிய அங்கீகாரமும் மட்டுமே இது போன்ற கலைகளையும் கலைஞர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்யும்.
தமிழக அரசும் சில விசயங்களை கவனிக்க வேண்டும். ஏற்கனவே சினிமா கலைஞர்களுக்கு பல விருதுகள் உள்ளன. அவர்களைத் தவித்து மற்ற கலைஞர்களுக்கு மட்டும் இது போன்ற விருதுகளைக் கொடுக்கலாமே. அரசியல் காரங்களைத் தள்ளி வைத்து விட்டு உண்மையான கலைஞர்களை அரசு கவுரவிக்க வேண்டும். செய்வார்களா? ( இதில் கொடுமை என்னவென்றால், இரண்டு நாட்கள் முன்னாடி நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னான்.. தானைத்தலைவி நமீதாவுக்கு விருது கொடுக்காத தமிழக அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார்களாம் மதுரையில்.. அடங்கொய்யால.. இவங்களை திருத்தவே முடியாதுப்பா.. )
***************
பதிவுலகில் எல்லாருமே நான் கடவுளைப்பற்றி விதவிதமாகப் பேசி, துவைச்சு, அலசி காயப் போட்டாச்சு. அனைவரும் அருமை என்று ஒத்துக்கொண்ட விசயம்.. இளையராஜாவின் இசை. இந்தப் படத்திற்கான அவருடைய இசையைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராஜாவின் இன்னொரு படமான "நந்தலாலா" பற்றி யாரும் அதிகம் பேசவில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கு நான் கடவுளை விட நந்தலாலாவின் இசை மிக அபாரம் என்றே தோன்றுகிறது. "ஒண்ணுக்கொண்ணு துணை இருக்கும் உலகத்திலே அன்பு ஒன்றுதான் அனாதையா?" என்னும் பாடலைக் கேட்டு பாருங்கள். உள்ளத்தை உருக்கும் இசை. யேசுதாஸ் பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு கதை சொல்வது போல் வரும் "மெல்ல ஊர்ந்து.." பாடலும், தாயைப் பற்றி இளையராஜாவே பாடும் "தாலாட்டு கேட்க நானும்" பாடலும் ரொம்ப இனிமை. கடைசியாக ஒரு நரிக்குறவப் பெண்ணின் குரலில் ஒலிக்கும் "எலிலே" பாடலில் தமிழில் ஒரு புது முயற்சி. வெறும் உறுமி மேளத்தின் பின்னணியில் பாடல் பட்டையைக் கிளப்புகிறது. கண்டிப்பாக கேட்க வேண்டிய ஆல்பம்.
***************
நேற்று ஹைதராபாத்தில் இருந்து பதிவுலக நண்பர் பாரதிராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். சீக்கிரமா "எல்லாப் புகழும் வில்லுக்கே" பார்ட் டூ எழுதுங்க நண்பா என்றார். ஏன்யா.. நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா? முதல் பதிவுக்கே ஒரு பெயரில்லா நண்பர் என்னோட மொத்த குடும்பத்தையே காலி பண்ணிட்டார். (அப்படி ஒரு கெட்ட வார்த்தைகள நான் கேட்டதே இல்ல). அதுவாவது பரவா இல்லா.. இன்னொரு பெயரிலி எனக்கு வரப்போற பொண்டாட்டியக்கூட விடாமத் திட்டிட்டாரு. நான் எங்க போய் அழ..? "சரி சரி.. சுனாபானா.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னு" என்ன நானே தேத்திக்கிட்டு.. கூடிய சீக்கிரமே அடுத்த "வில்லு" பதிவ எழுதுறேன் நண்பான்னு சொல்லி இருக்கேன்.
ஏற்கனவே இரண்டு நண்பர்கள் தொடர்பதிவு எழுதக் கூப்பிட்டு இருக்காங்க. "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" பற்றி பிரேம் எழுத சொல்லி இருக்கார். "எனக்கு பிடித்த இருவர்" என்ற தலைப்பில் எழுத நண்பர் ஆதவா அழைப்பு விடுத்து இருக்கார். இரு பதிவுமே கொஞ்சம் தகவல்கள் சேகரித்து எழுத வேண்டியவை. கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன். அதோட.. குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை ஒண்ணு பதிவுல எழுதணும்னு எண்ணம் இருக்கு.. எழுதலாமா வேண்டாமான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க நண்பர்களே..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு அஜால் குஜால் கதை..
ஒருத்தன் வீட்டுக்கு வர வழியில கடைத்தெருவுல ரோபோ ஒண்ணப் பார்த்தான். அதுல என்ன விசேஷம்னா யார் பொய் சொன்னாலும் அந்த ரோபோ கண்டுபிடிச்சு அவங்க தலையைக் சேர்த்து ஓங்கி ஒரு அடியப் போடும். விலை பத்தாயிரம் ரூபாய். இவன் ஆசைப்பட்டு அதை வீட்டுக்கு வாங்கிட்டுப் போய்ட்டான். பொண்டாட்டிய வீட்டுலக் காணோம். லேட்டா வர்றா. எங்கடி போனன்னு இவன் கேட்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு ஒடம்பு முடியல..ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போயிருந்தேன்னு சொன்னா. ரோபோ அவ தலையில ஓங்கி அடிச்சது. பொய் சொல்லாம உண்மைய சொல்லுடின்னா.. படத்துக்கு போய் இருக்கா..அப்புறம் இவன் ரோபோவப் பத்தி சொன்னான். அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இது எவ்வளோ விலைங்கன்னு கேட்டா.. விலை கூட சொன்ன திட்டுவாலோன்னு பயந்து இவன் ஆயரம் ரூபாய்ன்னு சொன்னான்.. இவனுக்கு மண்டைல ஒரு போடு. பொண்டாட்டிக்கு இவன் போய் சொல்றன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறமா உண்மையான விலைய சொன்னான். அந்த நேரம் பார்த்து அவன் மகன் வீட்டுக்குள்ள வந்தான். இவ்வளவு நேரமா எங்கடா போன பக்கின்னு அப்பன் கேட்க... கிளாஸ்ல கூட படிக்கற பையன் வீட்டுக்கு போய் இருந்தேன்ப்பான்னு அவன் சொல்ல.. போடு.. அவனுக்கும் அடி விழுந்துச்சு. உண்மைல அவன் தெருவுல கோலிக்குண்டு விளையாண்டுக்கிட்டு இருந்திருக்கான். அம்மாவுக்கு கோபத்த அடக்க முடியல.. இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு.. (கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
49 comments:
கதைப் புரிந்தது, குடும்பத்துல குழப்பம் உண்டு பன்னகூடாது, சரியா
உட்கார்ந்து ரொம்பவே யோசிக்கிறீங்க... அஜால் குஜால் கதை ரொம்பத்தான் 'A' தனமா கீதுப்பா.
உட்கார்ந்து யோசிசது சரி,,, ரூம்போட்டு யோசிச்சீங்களா???? கதை மேட்டர் பட்டைய கிளப்புது!!! ம்ம்....
மக்கள் டி.வி யில் குறூம்படத்திற்கு விருதுகள் கொடுத்திருந்ததை ஒருநாள் பார்த்தேன்.. நெகிழ்வாக இருந்தது..
சினிமா, எவ்வளவு தூரம் நுழைந்திருக்கிறதோ, அந்த ஊடகங்கள் அனைத்தும் பாழாகின்றன.. சினிமாவிலும் நல்ல மனிதர்கலும் உழைப்பாளிகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது வருத்தத்ஹிற்கு உர்யிஅது
என்றோ ஒரு நாள் எழுதி வைத்தது...
சிலர் துப்பிய எச்சில்கள்
பத்திரிக்கைகளுக்கு
அமிர்தமாகின்றன
எங்களின் வியர்வைகள்
வீணாகிப் போகின்றன...
முதலில் 'ஸாரி' செல்லிக்கொள்கிறேன்! தகவல் சொல்லாமல் ஊருக்கு சென்றதற்காக...என் துணைவியாரையும்,என் வாரிசையும் அழைத்துவருவதற்காக 10 தினங்கள் விடுமுறையில் சென்றேன்.
எப்பொழுதும் விருதுகள் வழங்கப்பட்டால் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே முன்கொனரப்படுகின்றனர்.
கதையை நல்லா யோசிச்சியிருக்கீங்க!..
வாழ்த்துக்கள்!..
எல்லாம் சரிதான் தம்பி நீங்க மட்டும் உங்க பதிவில் திரைப்படம் பற்றித்தான் அதிகமா எழுதுறீங்க. வேறு துறைகளைப்பற்றியும் எழுதலாமே.
எனினும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
அன்பன்
பிரசன்னா (ஏ.மறந்துட்டியாப்பா)
நல்லாதான் யோசிக்கிறிங்க
கதை கொஞ்சம் A தனமா இருக்கு
தவிர்த்திருக்கலாம் .
பின்னுரே...! நண்பா பின்னுரே...!
உட்கார்ந்து யோசிச்சது சரி,,, ரூம்போட்டு யோசிச்சீங்களா???? கதை மேட்டர் பட்டைய கிளப்புது!!! ம்ம்....
நன்றாக இருந்தது அண்ணா
நல்ல கத சொன்னீங்க போங்க.
அப்பிடி ஒரு மிஷின...
மத்திய ஆட்சியிலும், மாநில ஆட்சியிலும் சேத்து கிட்டா பரவாயில்ல...:) எங்க போய் சொல்றதுக்கு இவிங்க அட்டகாசத்த... ம்ம்ம்ம்ம்ம் . மனுசனுகளயே மதிக்க மாட்டக்கிறாய்ங்க.
very nice post
கதை புரியாத சின்னப்பசங்க////
ஐ நான் சின்ன பையன்..
உக்காந்து நல்லாதான் யோசிக்கிரிங்க... மஜலாஜம் எழுதுங்கோஓஓஓ
கலைஞர் மனம்கவர்ந்த மனிதர்களுக்கு மட்டும் தான் கலைமாமணி விருது.
குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை நல்ல யோசிச்சு இருக்கிங்க இதை தனி வலைதளமாக ஆரம்பிங்க கா.பா. குழந்தைகள் பற்றி மற்றவர்களும் பதிவு எமுத அனுமதி அளித்தால் சிறப்பாக இருக்கும்.
"எனக்கு பிடித்த இருவர்" தொடர் எப்போது என்று (அலைபேசியில்)கேட்கலாம் என இருந்தேன்.நல்லவேளை(ஒரு அழைப்பு மிச்சம்) நீங்க சொல்லிவிட்டீர்கள்,விரைவில் எதிர்பார்க்கிறோம்.
உண்மையாவே உட்கார்ந்து- இருந்துதான் யோசிக்கிருக்கீங்க.
கதை புரிஞ்சுது.குடும்பத்தையே குழப்பிப் பெயர்த்தெடுக்கும் ரோபோ தேவையா?
//கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..) //
எனக்கு கதை புரியலை. கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா...........
//ஆ. ஞானசேகரன் said..
கதைப் புரிந்தது, குடும்பத்துல குழப்பம் உண்டு பன்னகூடாது, சரியா//
முதல் முறையாக வந்து கருத்து சொல்லி இருக்கேங்க.. ரொம்ப நன்றி..
//அன்புமணி said..
உட்கார்ந்து ரொம்பவே யோசிக்கிறீங்க... அஜால் குஜால் கதை ரொம்பத்தான் 'A' தனமா கீதுப்பா.//
நண்பா.. அது கொஞ்சம் விவகாரமாக யோசிச்சதுதான்..
//ஆதவாsaid..
சிலர் துப்பிய எச்சில்கள்
பத்திரிக்கைகளுக்கு
அமிர்தமாகின்றன
எங்களின் வியர்வைகள்
வீணாகிப் போகின்றன...//
நல்ல கவிதை நண்பா.. உரியவர்கள் மதிக்கப்பட்டால் சந்தோஷமே..
//ராம்.CM said..
முதலில் 'ஸாரி' செல்லிக்கொள்கிறேன்! தகவல் சொல்லாமல் ஊருக்கு சென்றதற்காக...என் துணைவியாரையும்,என் வாரிசையும் அழைத்துவருவதற்காக 10 தினங்கள் விடுமுறையில் சென்றேன்.//
வாழ்த்துக்கள் ராம்.. மேடம் குட்டியோட வீட்டுக்கு வந்துட்டாங்க.. என்ஜாய்.. வருகைக்கு நன்றி..
//p n a prasanna said..
எல்லாம் சரிதான் தம்பி நீங்க மட்டும் உங்க பதிவில் திரைப்படம் பற்றித்தான் அதிகமா எழுதுறீங்க. வேறு துறைகளைப்பற்றியும் எழுதலாமே.எனினும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
அன்பன்
பிரசன்னா (ஏ.மறந்துட்டியாப்பா)//
முடிஞ்ச அளவுக்கு எல்லாத்தைப் பத்தியும் எழுத முயல்கிறேன் நண்பா.. மறக்கவில்லை உங்களை.. எனது கல்லூரியில் உங்கள் தளம் தெரிய மாட்டேன் என்கிறது.. பார்க்கலாம்..
//நிலாவன் said..
நல்லாதான் யோசிக்கிறிங்க
கதை கொஞ்சம் A தனமா இருக்கு
தவிர்த்திருக்கலாம் .//
என்னைய ரொம்ப நல்லவன்னு நினைக்கிறீங்க நண்பா. சரி.. திருத்திக் கொள்கிறேன்..
//நையாண்டி நைனா said..
பின்னுரே...! நண்பா பின்னுரே...!//
நன்றி நண்பா..
//anbu said..உட்கார்ந்து யோசிச்சது சரி,,, ரூம்போட்டு யோசிச்சீங்களா???? கதை மேட்டர் பட்டைய கிளப்புது!!! ம்ம்....//
நன்றி அன்பு...
//எட்வின் said..
நல்ல கத சொன்னீங்க போங்க.
அப்பிடி ஒரு மிஷின...
மத்திய ஆட்சியிலும், மாநில ஆட்சியிலும் சேத்து கிட்டா பரவாயில்ல...:) எங்க போய் சொல்றதுக்கு இவிங்க அட்டகாசத்த... ம்ம்ம்ம்ம்ம் . மனுசனுகளயே மதிக்க மாட்டக்கிறாய்ங்க.//
உண்மைதான் நண்பா.. இவர்கள் மனிதர்களை மதிப்பதே கிடையாது.. பார்ப்போம்..
//எட்வின் said..
நல்ல கத சொன்னீங்க போங்க.
அப்பிடி ஒரு மிஷின...
மத்திய ஆட்சியிலும், மாநில ஆட்சியிலும் சேத்து கிட்டா பரவாயில்ல...:) எங்க போய் சொல்றதுக்கு இவிங்க அட்டகாசத்த... ம்ம்ம்ம்ம்ம் . மனுசனுகளயே மதிக்க மாட்டக்கிறாய்ங்க.//
உண்மைதான் நண்பா.. இவர்கள் மனிதர்களை மதிப்பதே கிடையாது.. பார்ப்போம்..
//muralikannnan said..
very nice post..//
ரொம்ப நன்றி முரளி
//கவின் said..
ஐ நான் சின்ன பையன்..//
உண்மையிலேயே நீங்க சின்னப்புள்ளதானே
//சொல்லரசன் said..
குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை நல்ல யோசிச்சு இருக்கிங்க இதை தனி வலைதளமாக ஆரம்பிங்க கா.பா. குழந்தைகள் பற்றி மற்றவர்களும் பதிவு எமுத அனுமதி அளித்தால் சிறப்பாக இருக்கும்.//
நல்ல யோசனை நண்பா.. முயற்சி பண்ணி பார்க்கலாம்..
//ஹேமா said..
உண்மையாவே உட்கார்ந்து- இருந்துதான் யோசிக்கிருக்கீங்க.
கதை புரிஞ்சுது.குடும்பத்தையே குழப்பிப் பெயர்த்தெடுக்கும் ரோபோ தேவையா?//
சும்மா நகைச்சுவைதான் தோழி..
//அத்திரி said..
எனக்கு கதை புரியலை. கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா...........//
இது நம்புற மாதிரி இல்லையே.. அழுகுணி ஆட்டம்..
நானும் மதுரைக்காரன்தாங்க!!! இங்க நம்ம ஊர்க்காரங்கள பாக்குறத நினைச்சு சந்தோஷமா இருக்கு. தமிழ் வழக்கொழிதல் பற்றி நீங்க கண்டிப்பாக எழுதனும். நானும் கொஞசம் அத பத்தி எழுதிருக்கேன். try பண்ணிப் பாருங்க.
அண்ணே..கத புரியல...ஏதாவது வீடியோ இருக்கா? நான் கொஞ்சம் சோடியம் லைட் டைப்பு.
ஒண்ணு தெரியுங்களா, நான் கலைமாமணிய பத்தி ஒரு பதிவ போட்டு அத நாளைக்கு வரமாதிரி போட்டிருக்கேன். கட்டாயமா வந்து பார்க்கணும். இன்னொரு பதிவுகூட இப்படித்தான்...ஏஆர் ரஹ்மான பத்தி. பதிவு போட்டுட்டு பார்க்கறேன் இன்னொரு நண்பரும் கிட்டதட்ட அதமாதிரியே. என்னத்த சொல்ல...ஒண்ணு புரியுது, நாம எல்லாம் ஒருமுத்த (பார்த்தீங்களா இப்படியெல்லாம் கதை சொன்னா இப்படித்தான்) சாரி...ஒருமித்த கருத்துடையவங்க.
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே...வோட்டு போட்டாச்சுங்கோவ்
நிதானமாகத் தான் உட்கார்ந்து ஜோசித்திருக்கிறீர்கள். அட்டகாசமாக இருக்கின்றது. நீங்கள் ஏன் அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறக்கூடாது? அப்படியே இந்த வில்லு மேட்டரை அங்கே சொன்னால் கைதட்டு நிச்சயம்.
கதை நல்லா இருக்கு :)
present sir :-))
கடைசியிலை கலக்க்ல மொக்கை வேறு...நல்லாத் தான் காமெடி பண்ணுறீங்கள்....உங்கள் பக்கம் இன்று தான் வந்தேன்...
இனித் தொடர்ந்தும் வருவேன்..
உங்கள் பதிவுகள் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளன..
தொடர்ந்தும் எழுதுங்கோ..
//pappu said..
நானும் மதுரைக்காரன்தாங்க!!! இங்க நம்ம ஊர்க்காரங்கள பாக்குறத நினைச்சு சந்தோஷமா இருக்கு. தமிழ் வழக்கொழிதல் பற்றி நீங்க கண்டிப்பாக எழுதனும். நானும் கொஞசம் அத பத்தி எழுதிருக்கேன். try பண்ணிப் பாருங்க.//
நன்றி நண்பா..ஊர்க்காரரா இருக்கீங்க.. வருகைக்கு நன்றி.. கண்டிப்பாக உங்க பதிவ பார்க்கிறேன்..
//விஜயசாரதி said..
அண்ணே..கத புரியல...ஏதாவது வீடியோ இருக்கா? நான் கொஞ்சம் சோடியம் லைட் டைப்பு.//
இதெல்லாம் ரொம்ப ஓவரு நண்பா.. வருகைக்கு நன்றி.. தொடர்ந்து எழுதுங்க.
//வந்தியத்தேவன்said..
நிதானமாகத் தான் உட்கார்ந்து ஜோசித்திருக்கிறீர்கள். அட்டகாசமாக இருக்கின்றது. நீங்கள் ஏன் அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறக்கூடாது? அப்படியே இந்த வில்லு மேட்டரை அங்கே சொன்னால் கைதட்டு நிச்சயம்.//
ரொம்ப நன்றி நண்பா.. நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் ஆசை இல்ல..ஏதோ இணையத்துல கொஞ்சம் நண்பர்கள் கிடைச்சு இருக்காங்க.. அது போதும்..
//ஸ்ரீதர்கண்ணன் said..
கதை நல்லா இருக்கு :)//
நன்றி தோழரே..
//mayvee said..
present sir..//
வருகைக்கு நன்றி..
//கமல் said..
கடைசியிலை கலக்க்ல மொக்கை வேறு...நல்லாத் தான் காமெடி பண்ணுறீங்கள்....உங்கள் பக்கம் இன்று தான் வந்தேன்...
இனித் தொடர்ந்தும் வருவேன்..//
முதல் வருகைக்கு நன்றி கமல்.. எனக்கு ஆதவா மற்றும் கவின் மூலமாக உங்களைத் தெரியும்.. தொடர்ந்து வந்து போங்கள்..
ரூம்போட்டு யோசிச்சீங்களா?
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.வருகையை எதிர்பார்க்கிறேன்:)
//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said.. ரூம்போட்டு யோசிச்சீங்களா?//
ஹி ஹி ஹி..எல்லாம் ஒரு கலைத்தாகம் தான்..
//iyarkai said..
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.வருகையை எதிர்பார்க்கிறேன்:)//
கண்டிப்பாக வருகிறேன் தோழி.. எழுதி விடலாம்..
sir,my first comment in ur blog.. read all the articles.. really good.. keep writing and i'll keep visiting..
thanks da kumaresh.. keep coming here..
Post a Comment