நான் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதால் பொதுவாக டிவி பார்ப்பதே கிடையாது. வீட்டுக்கு போகும்போது மட்டும்தான் பார்ப்பேன். அதுவும் பாட்டு மட்டும்தான். சென்ற வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் ஊருக்குப் போயிருந்தேன். டிவியில் ஒரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது.
அது ஒரு குளிர்பான விளம்பரம். நடிகை அசின் நடித்து இருந்தார். தாவணி எல்லாம் கட்டி அம்சமாக இருக்கிறார். அவரைப் பெண் பார்க்க வருகிறார்கள். பையனின் அப்பா அசினைப் பார்த்து பாடத் தெரியுமா என்று கேட்கிறார். உடனே இவர் வீணையை எடுத்து வந்து.. யம்மாடி ஆத்தாடி என்று காட்டுத்தனமாக பாட ஆரம்பிக்கிறார். அடுத்தது என்ன.. ஆட்டம் தானே என்று கேட்டவாறே அசின் தானாகவே டப்பாங்குத்து ஆட்டம் போடுகிறார். கடைசியில் மாப்பிள்ளைப் பையனும் அவரோடு சேர்ந்து ஆடுவதோடு விளம்பரம் முடிந்தது.
விளம்பரம் எடுப்பவர்கள் என்ன மனதில் நினைத்துக் கொண்டு இதை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை. பெண் பார்க்க வரும்போது ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா என்று கேட்பதே பைத்தியக்காரத்தனம். அதற்கு ஒரு பெண் இதுபோல் கேவலமாக ரியாக்ட் செய்வது என்பது அதை விட கேவலம். பெண் பிள்ளைகள் இதுபோல் இருப்பதுதான் சரி என்று சொல்ல வருகிறார்களா? இன்றைக்கும் நமது நாட்டுக்கு ஓரளவு பெருமை சேர்ப்பது என்பது நம்முடைய கலாச்சாரம்தான். ஏற்கனவே பலவழிகளில் அதை நாசம் செய்து கொண்டு இருக்கிறோம். இப்போது வரும் சினிமாக்களும் அதைத்தான் செய்கின்றன. இப்போது அந்த பட்டியலில் விளம்பரங்களும் சேர்ந்து கொண்டதாகவே தெரிகிறது.
தற்போது பெண்கள் விளம்பரங்களில் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு பைக் விளம்பரம். ஒரு ஆண் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறான். தெருவில் ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளுடன் வந்து கொண்டு இருக்கிறாள். இவனைப் பார்த்ததும் "இது என் குழந்தைகள் அல்ல, என் அக்காவுடையது" என்று சொல்லி அவனை நோக்கி வருகிறாள். அந்த அளவுக்கு பைக் அவளை ஈர்த்து விட்டதாம். இதை விடக் கொடுமை, சிகப்பழகு க்ரீமுக்காக வரும் விளம்பரங்கள். காதலி கறுப்பாக இருப்பதால் காதலன் இன்னொரு சிகப்பான பிகரை கரெக்ட் செய்கிறான். இவள் ஒரு கிரீமை பூசி அழகான உடனே மீண்டும் காதலன் திரும்பி விடுகிறான். இவளும் ஈஈஈ என்று இளித்துக் கொண்டே அவனுடன் போகிறாள். பெண்களைக் கண்டால் இவர்களுக்கு கிள்ளுக்கீரை போல் தெரிகிறதா?
எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை சானிடரி நாப்கின்களுக்காக எடுக்கப் படும் விளம்பரங்கள். ரொம்ப நாள் முன்னாடி பார்த்த விளம்பரம் இது. ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய்க் காலத்தில் படம் பார்க்க தியேட்டருக்கு போகிறாள். அங்கே எல்லோரும் அமர்ந்து இருக்கும் இருக்கை வழியாக போகும்போது மக்கள் முகத்தை சுழிக்கிறார்கள். உடனே குறிப்பிட்ட நாப்கின்னின் விளம்பரம். இப்போது அந்த பெண் சிரித்த முகத்துடன் இருக்கைகளின் ஊடாக தயக்கம் இன்றி போகிறாள். கெட்ட மணம் எதுவுமில்லை என்று காண்பிக்க வால் இடுப்பைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் வேறு போட்டுக் காமித்தார்கள். இவர்களை எல்லாம் செருப்பால் அடித்தால் என்ன?
இங்கே ஆண்களுக்கான பொருட்களை விற்கக்கூட பெண்கள் தான் தேவைப்படுகிறார்கள். முதலில் நல்ல ப்ளேடால் ஷேவ் பண்ணினால் பிகர் கிடைக்கும்.. நல்ல பைக்.. நல்ல டிரஸ்.. நல்ல சென்ட்.. (axe choclet வரும் கேவலமான விளம்பரம்).. எல்லாமே பெண்களைக் கவரவே.. ஏன் இப்போது கடைசியில் ஜாக்கி ஜட்டி அணிந்தால்தான் பிகர் மாட்டும் என்றெல்லாம் விளம்பரங்கள்.
சினிமாவைக் கூட நாம் தேடிப் போய்த்தான் பார்க்கிறோம். ஆனால் வீட்டுக்கு உள்ளேயே நேரடியாக வந்து சேரும் இந்த சனியன் பிடித்த விளம்பரங்களை என்ன செய்வது...?சினிமாவுக்கு இருப்பதுபோல் டிவிக்கும் ஒரு சென்சார் கொண்டு வந்தால் நல்லது என்றுதான் சொல்லுவேன். அப்போதுதான் இது போன்ற கருமம் பிடித்த விளம்பரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
94 comments:
என்ன நண்பா.. இது தான் அநியாயத்தை கண்டா பொங்குறதா?
இனி நாங்களும் பொங்கிருவம்லோ?
ஆமா அதானே.
இதை நான் கண்ணாபின்னா வென்று
வழிமொழிகிறேன்.
//சினிமாவைக் கூட நாம் தேடிப் போய்த்தான் பார்க்கிறோம். ஆனால் வீட்டுக்கு உள்ளேயே நேரடியாக வந்து சேரும் இந்த சனியன் பிடித்த விளம்பரங்களை என்ன செய்வது//
கண்டிப்பாக ஒரு கட்டுபாடு தேவை.
//axe choclet வரும் கேவலமான விளம்பரம்//
mahaa kevalamaana ondru:-(
ஏன் அண்ணா..இந்த கோபம்..கொஞ்ச மோசமாகத்தான் இருக்கும்..இருந்தாலும்..
//இவனைப் பார்த்ததும் "இது என் குழந்தைகள் அல்ல, என் அக்காவுடையது" என்று சொல்லி அவனை நோக்கி வருகிறாள்.//
இது போல சமுதாய சீர்கேடுகள் ஏராளம்.தொடர்ந்து எமுதுங்கள் வாழ்த்துகள்.
//நையாண்டி நைனா said..
என்ன நண்பா.. இது தான் அநியாயத்தை கண்டா பொங்குறதா?
இனி நாங்களும் பொங்கிருவம்லோ?
இதை நான் கண்ணாபின்னா வென்று
வழிமொழிகிறேன்.//
வாங்க நைனா.. யாராவது இதெல்லாம் கண்டு பொங்கித்தானே ஆகா வேண்டும்.. அத நாமலே ஆரம்பிச்சு வைப்போம்னுதான்..
//பெண் பார்க்க வரும்போது ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா என்று கேட்பதே பைத்தியக்காரத்தனம். அதற்கு ஒரு பெண் இதுபோல் கேவலமாக ரியாக்ட் செய்வது என்பது அதை விட கேவலம். பெண் பிள்ளைகள் இதுபோல் இருப்பதுதான் சரி என்று சொல்ல வருகிறார்களா?//
இந்த விளம்பரம் அப்படி ஒன்றும் மோசமில்லை, infact பழைய சம்பிரதாயங்களை வைத்து பகடி செய்திருக்கிறார்கள். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஆட தெரியுமா, பாட தெரியுமான்னு கேட்க்குற பெருசுகளுக்கு இப்படி தான் ரியாக்ட் பண்ணணும்.
மற்ற விளம்பரங்களை பொறுத்த வரை, நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.
//சொல்லரசன் said..
கண்டிப்பாக ஒரு கட்டுபாடு தேவை.
இது போல சமுதாய சீர்கேடுகள் ஏராளம்.தொடர்ந்து எமுதுங்கள் வாழ்த்துகள்.//
ரொம்ப சரி நண்பா.. நம்ம பண்பாட்டை நாம காப்பத்திக்கனும்னா கண்டிப்பா ஒரு சென்சார் அவசியம்.. நன்றி..
//iyarkai said..
mahaa kevalamaana ondru:-(//
என்ன செய்வது தோழி.. அதையும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்..
//anbu said..
ஏன் அண்ணா..இந்த கோபம்..கொஞ்ச மோசமாகத்தான் இருக்கும்..இருந்தாலும்..//
இது எனக்கு நியாயமான கோபமாகவே படுகிறது அன்பு.. இது போன்ற விளம்பரங்கள் தப்பான எண்ணங்களை உருவாகுபவை..
//இந்த விளம்பரம் அப்படி ஒன்றும் மோசமில்லை, infact பழைய சம்பிரதாயங்களை வைத்து பகடி செய்திருக்கிறார்கள். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஆட தெரியுமா, பாட தெரியுமான்னு கேட்க்குற பெருசுகளுக்கு இப்படி தான் ரியாக்ட் பண்ணணும்.//
நாய் நம்மைக் கடித்தால் நாம் திருப்பி கடிக்க முடியுமா நண்பா.. எனக்கு அந்த விளம்பரம் அப்படித்தான் தெரிந்தது..
என் பிளாக்ல ஒரு கவிதை இருக்கு.உண்மையோட எந்த அளவுக்கு ஒத்துபோகுதுன்னு சொல்லுங்களேன்.:-))
போட்டு தாக்கியுள்ளீர்கள்... உங்கள் கோபம் நியாயமானதே
//iyarkai said..
என் பிளாக்ல ஒரு கவிதை இருக்கு.உண்மையோட எந்த அளவுக்கு ஒத்துபோகுதுன்னு சொல்லுங்களேன்.:-))//
கண்டிப்பாக படிக்கிறேன் தோழி.. இன்றைக்கு வேலைப்பளு காரணமாக நண்பர்கள் பதிவெல்லாம் படிக்கவில்லை.. சாப்பிட்டுவிட்டு அந்த பதிவுகளை பார்க்கிறேன்..
//புருனோ bruno said..
போட்டு தாக்கியுள்ளீர்கள்... உங்கள் கோபம் நியாயமானதே//
அண்ணா.. நீங்கள் தமிழ்மண விருது வாங்கினவர் தானே.. வாழ்த்துக்கள்.. முதல் வருகைக்கு நன்றி..
NAAN SRI LANKA. IRUNTHALUM ITHU PONNRA KALASARA SEERKEDUKAL PATTRI SAMPANTHA PATTAVARKAL SINTHIKANUM,
அந்த விளம்பரங்கள் தான் மிகவும் பிரபலம் அடைகிறது என்பது கவலையான விசயம்.
டிவியில் இதையெல்லாம் சாதாரணமாக ஏற்றுக் கொண்டுள்ள மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கை முறை முரண்பாடானதே..
//அனானி said..
NAAN SRI LANKA. IRUNTHALUM ITHU PONNRA KALASARA SEERKEDUKAL PATTRI SAMPANTHA PATTAVARKAL SINTHIKANUM,//
வருகைக்கு நன்றி.. சம்பந்தப்பட்டவங்க சிந்திக்கனும்னுதான் நண்பா ஆசை.. பார்க்கலாம்..
//நான் ஆதவன் said..
அந்த விளம்பரங்கள் தான் மிகவும் பிரபலம் அடைகிறது என்பது கவலையான விசயம். //
உண்மையிலேயே வருத்தம்தான் நண்பா.. நம் மக்கள் இதை எல்லாம் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள பழகி விட்டார்கள்..
////////ஒரு பைக் விளம்பரம். ஒரு ஆண் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறான். தெருவில் ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளுடன் வந்து கொண்டு இருக்கிறாள். இவனைப் பார்த்ததும் "இது என் குழந்தைகள் அல்ல, என் அக்காவுடையது" என்று சொல்லி அவனை நோக்கி வருகிறாள். அந்த அளவுக்கு பைக் அவளை ஈர்த்து விட்டதாம்.////////
அந்த பைக் பேரு ஹீரோ ஹோண்டா கிளாமர் .ஆனா உண்மையிலேயே அது ஒரு மொக்க பைக் அத ஓடிடு போனா ஒரு வயசான பாட்டி கூட பாக்க மாட்டாங்க (சென்னை தமிழ் ல சொன்னா ஒரு அட்டு பிகர் கூட மடியாது ) ......அருமையான பதிவு நண்பரே , நானே இது போன்ற ஒரு பதிவு போடா வேண்டும் என்று நினைத்தேன் அனால் நீங்கள் முந்தி விட்டீர்கள்
niyayamaana karuththu
///நான் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதால் பொதுவாக டிவி பார்ப்பதே கிடையாது. வீட்டுக்கு போகும்போது மட்டும்தான் பார்ப்பேன். அதுவும் பாட்டு மட்டும்தான்.///
நண்பா, வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கே இப்படியென்றால் தினந்தோறும் சீரியல் பார்க்கும் பெண்களின் கதி அதோ கதிதான்.
அதுவும் சன், கலைஞர் டிவி யில் வரும் சுந்தர் சி,தனுஷ் படங்களின் dialog கள் அபத்தத்தின் உச்சகட்டம்.
Amul undergarments vilambarathai youtube-la paarunga.. apuram yenna solreenganu parpom ;-)
மிக அருமையான, அவசியமான பதிவு தோழா,
தயவு செய்து இத்துடன், விட்டுவிடாமல் இத்தகைய
விளம்பரங்களை கண்டித்து ''அட்வர்டைசிங் ஸ்டேன்டர்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா" என்ற அமைப்புக்கு எழுதினால்
கண்டிப்பாய் ஆவண செய்வார்கள்.குறைந்தது நூறு பேர்
கண்டனம் தெரிவித்தால் பலன் கிடைக்கும்.
யாருமே கேட்காமல் போவதால் தான் விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள்
இந்த ஆட்டம் போடுகின்றன.
Write to - Mr. Alan Collaco, Secretary General
The Advertising Standards Council of India,
219, Bombay Market,
78 Tardeo Road,
Mumbai 400 034
Tel: (022) 23521066/23516863,
Fax: 23516863,
E-mail: asci@vsnl.com
http://www.ascionline.org/
Click here to download complaint form:
http://www.ascionline.org/regulation/ASCI_complaint_form.pdf
சரி எல்லோருமே ஒரேமாதிரி கருத்து சொல்லிவிட்டதால்...... நாம் மாற்றி சொல்லுவோம்!!!
விளம்பரங்கள் மட்டுமல்ல... எல்லாவற்றிலும் எல்லாம் உண்டு!! விளம்பரங்களை நோகடித்து பிரயோசனமில்லை. ஒருமுறை என் நண்பர் உலகம் போகும் போக்கில் ஃபேஷன் ட்ரஸ்களெல்லாம் தேவையா என்று நொந்தார்.... நான் ஃபேஷன் துணிகளை வடிவமைத்தும் கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரியும் அதில் உள்ள லாப நஷ்டங்கள்... பிரா என்று சொல்ல கூச்சப்படும் வயதில் நிர்வாண டிசைன்களை செய்திருக்கிறேன். ஒரு பெண் ஃபேஷன் மேடையில் பிராவும் பாண்டீஸும் போட்டு நடந்து வருகிறாள் என்றால் அவள் தெருவில் அப்படி நடந்துவருவதாக அர்த்தம் இல்லை. எப்படி ஓவியக் கல்லூரியில் நிர்வாண ஓவியத்திற்கு ஒரு பெண்ணையோ ஆணையோ நிர்வாணப்படுத்துகிறார்களோ அப்படித்தான் இதுவும்..
விளம்பரங்கள் பெண்களை முன்னிருத்தியே எடுக்கப்படுகிறது. அதில சில நீங்கள் சொல்லுவதைப் போலவும் இருக்கலாம். உண்மையிலேயே Axe Chocolate விளம்பரத்தை ரொம்பவும் ரசித்தவன்.. அதன் தீம் எனக்குப் பிடித்திருந்தது.. ஏன், எல்லா Axe விளம்பரத் தீம்களும் வித்தியாசமாகவே இருக்கும்.... எத்தனையோ விளம்பரங்கள் இப்படி சொல்ல இருக்கிறது.
தேவை.... வீட்டில் யார் பார்க்கவேண்டும் என்ற பேரண்டல் கன்ரோல் இருக்கவேண்டும்.... சினிமாவை விட, விளம்ப்ரங்களை விட, தொலைக்காட்சித் தொடர்கள் மனதை பாதிப்பது ரொம்பவே அதிகம்.... அடுத்த தலைமுறையில் அதன் எதிரொளி நிச்சயம் தெரியும்..
நீங்கள் சொன்ன விளம்பரங்களைக் காட்டிலும் படுமோசமான விளம்பரங்களை நான் பார்த்திருக்கிறேன்..... நாம் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் அதை உங்களிடம் காட்டுகிறேன்.....
விளம்பரங்களில் வரும் தீம்களை நேசிக்கலாம்.... நாம் விளம்பரங்களுக்குள்ளாகச் செல்வது தவறு!!1
முதல் விளம்பரத்தை இன்னும் பார்க்கவில்லை. நண்பர்கள் ரசித்ததாகத் தெரிகிறது. பிற விளம்பரங்கள் குறித்து உங்கள் கருத்து மிகவும் ஏற்புடையதே. எல்லா விளம்பரங்களுமே சினிமாக்களைப் போலவே தணிக்கைச்சான்றிதழ் பெற்றே வெளியாகின்றன என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
உங்கள் நடை அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.
ஏற்புடைய கருத்து
நல்ல பதிவு .டிவி யின் பாதிப்பால் நானும் இங்கு பொங்கியிருக்கிறேன் பாருங்கள் http://sathik-ali.blogspot.com/2009/01/blog-post.html
"அப்படியே கடித்து சாப்பிடுங்க ஃபேண்டா ஆப்பிள் விளம்பரத்தை விட்டுவிட்டீர்களே..."
இது வியாபார உலகம் கலாச்சாரம், நாகரீகம் இவையெல்லாம் இவர்கள் பார்ப்பதில்லை...கண்டிப்பாக இது கண்டிக்கத்தக்கது...
கார்த்திகைப் பாண்டியன்,இங்கே ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் மீன் விளமபரத்துக்கு நடிகை கோபிகாவும்,மாளவிகாவும் ஆடுகிறார்கள்,எதுவுமே சம்பந்தம் இல்லாமல்.
நல்ல பதிவு நண்பா
உங்களோட கோபம் நாயமானது தான்
//தேவை.... வீட்டில் யார் பார்க்கவேண்டும் என்ற பேரண்டல் கன்ரோல் இருக்கவேண்டும்.... சினிமாவை விட, விளம்ப்ரங்களை விட, தொலைக்காட்சித் தொடர்கள் மனதை பாதிப்பது ரொம்பவே அதிகம்.... அடுத்த தலைமுறையில் அதன் எதிரொளி நிச்சயம் தெரியும்..//
குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு parenting control போடலாம். இடையில் வரும் விளம்பரங்களுக்கு எப்படி parenting control செய்வது??? நடக்குற காரியமா??
நல்ல பதிவு பாண்டியன்
இன்றைக்கும் நமது நாட்டுக்கு ஓரளவு பெருமை சேர்ப்பது என்பது நம்முடைய கலாச்சாரம்தான்.???????????
en darling asin nadicha ad-a pathi comment adikirathu not allowed
All things you have said are fine. But you have mentioned women as 'figure'. I suppose that is treating women with respect? Or is that allowed while referring to women dude?
உண்மைய சொல்ல போனால் நீங்க குறிப்பட்ட மத்த விளம்பரங்கள் கண்டனத்திற்கு உரியவை.. ஆனா.. அசின் நடிச்ச விளம்பரம்...எனக்கு பிடிச்சு இருந்துச்சு...
நீங்க பார்த்த கண்ணோட்டம் வேறு மாதிரி இருக்கலாம்.
நான் புரிந்து கொண்டது- இப்படி பழைய பஞ்ஜாகத்தோடு ஆட தெரியுமா, பாட தெரியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் அடி கொடுக்க தைரியம் உள்ளவள் பெண். இப்படிகூட நினைக்கலாமே!:)
சென்சார் வைத்திருக்கும் சினிமாவில் மட்டும் என்ன வாழுது? 'டாடி மம்மி வீட்டில்இல்ல தடைபோட யாருமில்ல' என்ற மாதிரி பாடல்களும் வரத்தானே செய்யுது! (நீங்கள் பாடலை மட்டும் பார்பபேன் என்பதால் இதை கூறுகிறேன்.) முழுமையான கண்காணிப்பு அவசியம்தான்!
உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன்
//அப்பாவி தமிழன் said..
அருமையான பதிவு நண்பரே , நானே இது போன்ற ஒரு பதிவு போடா வேண்டும் என்று நினைத்தேன் அனால் நீங்கள் முந்தி விட்டீர்கள்//
பரவாயில்லை நண்பா.. நீங்களும் இது பற்றி எழுதுங்கள்.. நாங்க படிக்க ரெடி..
//muralikannan said..
niyayamaana karuththu//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முரளி..
//சம்பத் said..
நண்பா, வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கே இப்படியென்றால் தினந்தோறும் சீரியல் பார்க்கும் பெண்களின் கதி அதோ கதிதான்.
அதுவும் சன், கலைஞர் டிவி யில் வரும் சுந்தர் சி,தனுஷ் படங்களின் dialog கள் அபத்தத்தின் உச்சகட்டம்.//
தோழா.. நாடகங்கள் மேல் எனக்கு கொலைவெறி உண்டு.. அவற்றால் பெரிதும் மண்டை காய்ந்தவன் நான்..
//யாத்ரீகன் said..
Amul undergarments vilambarathai youtube-la paarunga.. apuram yenna solreenganu parpom ;-)//
ஏன் நண்பா.. அவ்வளவு கேவலமாகவா இருக்கும்? பார்க்க முயற்சி செய்கிறேன்..
//முகு said..
மிக அருமையான, அவசியமான பதிவு தோழா,
தயவு செய்து இத்துடன், விட்டுவிடாமல் இத்தகைய
விளம்பரங்களை கண்டித்து ''அட்வர்டைசிங் ஸ்டேன்டர்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா" என்ற அமைப்புக்கு எழுதினால் கண்டிப்பாய் ஆவண செய்வார்கள்.குறைந்தது நூறு பேர்
கண்டனம் தெரிவித்தால் பலன் கிடைக்கும்.//
நிச்சயமாக என்னால் முடிந்ததை செய்கிறேன் தோழா..
//ஆதவா said..
நீங்கள் சொன்ன விளம்பரங்களைக் காட்டிலும் படுமோசமான விளம்பரங்களை நான் பார்த்திருக்கிறேன்..... நாம் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் அதை உங்களிடம் காட்டுகிறேன்..... //
உங்கள் கருத்தும் சரிதான் ஆதவா.. ஏன் நாம் சந்திக்கக் கூடாது? சீக்கிரமாக ஒரு நாளை சொல்லுங்கள்..
You are absolutely right. Im with you all the way. I have been frustrated with this kind of ads for a long time. What can I say, nowadays, one brushes teeth only to attract the opposite sex, not for personal hygeine. Standards have deteriorated heavily. I shall also write to the ASCI committee.
//தாமிரா said...
உங்கள் நடை அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..
//நசரேயன் said..
ஏற்புடைய கருத்து//
நன்றி நண்பரே..
//sathik lai said..
நல்ல பதிவு .டிவி யின் பாதிப்பால் நானும் இங்கு பொங்கியிருக்கிறேன் பாருங்கள் http://sathik-ali.blogspot.com/2009/01/blog-post.html//
படித்தேன்.. அருமையான பதிவு.. குழந்தைகள் இருக்கும் அனைவரும் படிக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்..
//கீழை ராஸா said..
"அப்படியே கடித்து சாப்பிடுங்க ஃபேண்டா ஆப்பிள் விளம்பரத்தை விட்டுவிட்டீர்களே..."
இது வியாபார உலகம் கலாச்சாரம், நாகரீகம் இவையெல்லாம் இவர்கள் பார்ப்பதில்லை...கண்டிப்பாக இது கண்டிக்கத்தக்கது...//
கருத்துக்கு நன்றி நண்பா..
// ஹேமா said..
கார்த்திகைப் பாண்டியன்,இங்கே ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் மீன் விளமபரத்துக்கு நடிகை கோபிகாவும்,மாளவிகாவும் ஆடுகிறார்கள்,எதுவுமே சம்பந்தம் இல்லாமல்.//
எல்லாம் பணம் படுத்தும் பாடு தோழி..
//நிலாவன் said..
நல்ல பதிவு நண்பா
உங்களோட கோபம் நாயமானது தான்//
நன்றி நண்பா..
//பிரேம் said.. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு parenting control போடலாம். இடையில் வரும் விளம்பரங்களுக்கு எப்படி parenting control செய்வது??? நடக்குற காரியமா??
நல்ல பதிவு பாண்டியன்//
நன்றி பிரேம்..எல்லாம் உங்கள் ஊக்கம் தான்..
//pukalini said..
இன்றைக்கும் நமது நாட்டுக்கு ஓரளவு பெருமை சேர்ப்பது என்பது நம்முடைய கலாச்சாரம்தான்.???????????//
நெஜமாங்க.. இன்னும் இந்தியான்னா அதோட கலாச்சாரம் பத்தித்தான் வெளிநாட்டுல பெருமையா சொல்றாங்க..
//personal said..
en darling asin nadicha ad-a pathi comment adikirathu not allowed//
எனக்கும் அசின் பிடிக்கும் நண்பா.. என்ன பண்ண.. கடமைன்னு வந்துட்டா இதெல்லாம் பார்க்க முடியாதே..
//அனானி சொன்னது..
All things you have said are fine. But you have mentioned women as 'figure'. I suppose that is treating women with respect? Or is that allowed while referring to women dude?//
நான் விளம்பரம் எடுப்பவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை என்ற அர்த்தத்தில் தான் பிகர் என்று சொன்னேன்.. ஆனாலும் தப்புதான்.. சுட்டிக் காட்டியதற்கு நன்றி
//thamizhmaangani said..
உண்மைய சொல்ல போனால் நீங்க குறிப்பட்ட மத்த விளம்பரங்கள் கண்டனத்திற்கு உரியவை.. ஆனா.. அசின் நடிச்ச விளம்பரம்...எனக்கு பிடிச்சு இருந்துச்சு...//
கருத்துக்கு நன்றி தோழி.. ஆனால் எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை.. வேறுபாடுகள் வருவது சகஜம்தான்..
//அன்புமணி said..
சென்சார் வைத்திருக்கும் சினிமாவில் மட்டும் என்ன வாழுது? 'டாடி மம்மி வீட்டில்இல்ல தடைபோட யாருமில்ல' என்ற மாதிரி பாடல்களும் வரத்தானே செய்யுது! (நீங்கள் பாடலை மட்டும் பார்பபேன் என்பதால் இதை கூறுகிறேன்.) முழுமையான கண்காணிப்பு அவசியம்தான்!//
சினிமா என்றாலும் கண்டிக்க வேண்டியதுதான் நண்பா..
//பாபு said..
உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன்//
ரொம்ப நன்றி நண்பா.. வருகைக்கு..
// Arivazhagan கூறியது...
You are absolutely right. Im with you all the way. I have been frustrated with this kind of ads for a long time. What can I say, nowadays, one brushes teeth only to attract the opposite sex, not for personal hygeine. Standards have deteriorated heavily. I shall also write to the ASCI committee//
நன்றி நண்பரே.. நானும் எழுதுவதாக உள்ளேன்.. நீங்களும் எழுதுங்கள்..
//அனானி சொன்னது..
All things you have said are fine. But you have mentioned women as 'figure'. I suppose that is treating women with respect? Or is that allowed while referring to women dude?//
//நான் விளம்பரம் எடுப்பவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை என்ற அர்த்தத்தில் தான் பிகர் என்று சொன்னேன்.. ஆனாலும் தப்புதான்.. /சுட்டிக் காட்டியதற்கு நன்றி//
I was not trying to find fault there. Sorry if I gave that impression. What I was trying to convey is that, most of us (including me) have a preset notion on women in general. Figure,color etc. So it is not enough if we just start blaming the ads and the people who make them. It's more of a social phenomenon that needs to be addressed.
Anyway what you have raised is a valid point and would be happy if you take it further on a broad scale in your following posts (about the treatment of women in media, possible reasons, our role in that etc)
I don't have tamil facility for typing.
அடடே ராசா நம்ம ஊரா நீயி???? :))
//anonymous//
நீங்கள் இவ்வளவு அக்கறையோடு பேசுவது மகிழ்ச்சி தருகிறது.. கண்டிப்பாக என்னால் ஆனவற்றை செய்வேன்..
//இராம்/Raam said..
அடடே ராசா நம்ம ஊரா நீயி???? :))//
ஆமாண்ணே.. நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்..
//Bleachingpowder சொன்னது…
//பெண் பார்க்க வரும்போது ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா என்று கேட்பதே பைத்தியக்காரத்தனம். அதற்கு ஒரு பெண் இதுபோல் கேவலமாக ரியாக்ட் செய்வது என்பது அதை விட கேவலம். பெண் பிள்ளைகள் இதுபோல் இருப்பதுதான் சரி என்று சொல்ல வருகிறார்களா?//
இந்த விளம்பரம் அப்படி ஒன்றும் மோசமில்லை, infact பழைய சம்பிரதாயங்களை வைத்து பகடி செய்திருக்கிறார்கள். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஆட தெரியுமா, பாட தெரியுமான்னு கேட்க்குற பெருசுகளுக்கு இப்படி தான் ரியாக்ட் பண்ணணும்.
மற்ற விளம்பரங்களை பொறுத்த வரை, நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.
//
வழிமொழிகிறேன்.
ஆமா, ப்ரீமியர் ப்ரஷர் குக்கருக்கு ஆம்பளை வந்து விளம்பரம் பண்றாரு புதுசா.. பார்த்தீங்களா தோழரே?
//பரிசல்காரன் said..
வழிமொழிகிறேன்.ஆமா, ப்ரீமியர் ப்ரஷர் குக்கருக்கு ஆம்பளை வந்து விளம்பரம் பண்றாரு புதுசா.. பார்த்தீங்களா தோழரே?//
வருகைக்கு நன்றி பரிசல்.. பெரிய பதிவர்.. முதல் முறையா நம்ம தளத்துக்கு வந்து இருக்கீங்க.. கருத்துக்கு நன்றி.. நான் இன்னும் நீங்கள் சொன்ன விளம்பரத்தை பார்க்கவில்லை.. பார்க்கிறேன்..
டி.வி யே ஒரு கண்றாவி.. அதில பாதி ஆபாச விளம்பரம்.
நல்ல பதிவு.
ஆமாங்க. நானும் இதை வழிமொழிகிறேன். நம்ப வலையுலகத்தில் கூட சில விளம்பர நிறுவனங்கள் உள்ளன். அவர்களும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளணும்.
(e.x)ads guru.
இதிலயும் சில விரும்பத்தாகாத விளம்பரங்கள் வருகின்றன.
//டி.வி யே ஒரு கண்றாவி.. அதில பாதி ஆபாச விளம்பரம்.
நல்ல பதிவு.//
கருத்துக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே..
//மகா said..
ஆமாங்க. நானும் இதை வழிமொழிகிறேன். நம்ப வலையுலகத்தில் கூட சில விளம்பர நிறுவனங்கள் உள்ளன். அவர்களும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளணும். (e.x)ads guru.
இதிலயும் சில விரும்பத்தாகாத விளம்பரங்கள் வருகின்றன.//
எல்லாருமே இதைப் பற்றி பேசினால் பதில் கிடைக்கும் தோழி..
yov konjaneram vandhama vilambaram patthama relax pannunama nnu illama idhu romba thevathan ungalukku pudikkalanna patthu poga vendiyadhuthana idhukku oru pathivu pinnottam poda alunga blog vandhalum vandhuchu naan toilet ponen, tea kudicchen ida mariyalam news poda aarambicchutttanga adhukku pinnottam vera kodumama
புலம்பிக்கொண்டே பின்னூட்டம் போட்டு உள்ளீர்கள் நண்பா.. நீங்க எழுதறது எல்லாம் வேற சொல்லி இருக்கீங்க.. பிடிக்கலன்னா சும்மா போக வேண்டியதுதான.. உங்க நேரத்த செலவு பண்ணி கருத்து சொல்லணுமா.. இருதாலும் வருகைக்கு நன்றி..
/
நையாண்டி நைனா கூறியது...
என்ன நண்பா.. இது தான் அநியாயத்தை கண்டா பொங்குறதா?
/
:)))
ROTFL
"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/
விடுமுறைல இருக்கிறன்பா அதான் லேட், விளம்பரங்க்ளுக்கு சாட்டை ஆனாலும் தொலைகாட்சியில் நான் விரும்பி பார்பது விளம்பரங்கள்தான் சில விளம்பரங்கள் அருமையாக இருக்கும் இப்ப எர்ரெல்
இந்த மாதிரி விளம்பரம் எல்லாம் கண்டிக்கப்பட வேண்டியதுதான்
யாரு பூனைக்கு மணி கட்டுவது???
விளம்பரம் எடுப்பவர்களுக்கு கொஞ்சம் கூட யோசனையே வராது போல
நான் கூட பல முறை பார்த்து இருக்கின்றேன் கோவமா வரும்.,
என்னா செய்ய?? அதனாலே தான் இப்போ எல்லாம் T.V. பார்ப்பதே இல்லை.
//சினிமாவைக் கூட நாம் தேடிப் போய்த்தான் பார்க்கிறோம். ஆனால் வீட்டுக்கு உள்ளேயே நேரடியாக வந்து சேரும் இந்த சனியன் பிடித்த விளம்பரங்களை என்ன செய்வது//
சரியான கோவம். இந்த கோபம் எல்லாருக்கும் வருது வரவேற்கத்தக்க கோபம் தான்.
//மங்களூர் சிவா said..
நையாண்டி நைனா கூறியது...
என்ன நண்பா.. இது தான் அநியாயத்தை கண்டா பொங்குறதா?
/
:)))
ROTFL//
முதல் வருகைக்கு நன்றி மங்களூர் சிவா..
//மகா said..
"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com//
கண்டிப்பாக பார்க்கிறேன்..
//கவின் said..
விடுமுறைல இருக்கிறன்பா அதான் லேட், விளம்பரங்க்ளுக்கு சாட்டை ஆனாலும் தொலைகாட்சியில் நான் விரும்பி பார்பது விளம்பரங்கள்தான் சில விளம்பரங்கள் அருமையாக இருக்கும் இப்ப எர்ரெல்..//
திரும்பி வந்தாச்சா.. வாங்க வாங்க..
//ரம்யா said..
எல்லாம் கண்டிக்கப்பட வேண்டியதுதான்
யாரு பூனைக்கு மணி கட்டுவது???
விளம்பரம் எடுப்பவர்களுக்கு கொஞ்சம் கூட யோசனையே வராது போல நான் கூட பல முறை பார்த்து இருக்கின்றேன் கோவமா வரும்.,
என்னா செய்ய?? அதனாலே தான் இப்போ எல்லாம் T.V. பார்ப்பதே இல்லை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..
//What I was trying to convey is that, most of us (including me) have a preset notion on women in general. Figure,color etc. So it is not enough if we just start blaming the ads and the people who make them. It's more of a social phenomenon that needs to be addressed.//
Wat he told is correct.
Thought provoking post. Expecting more such posts from you and other blogger friends.
//இன்னும் இந்தியான்னா அதோட கலாச்சாரம் பத்தித்தான் வெளிநாட்டுல பெருமையா சொல்றாங்க//
Velinaatula irukaravanga innum pazhasaiye pesittu irukanganu ninaikiren sir. Namma kannu munnadiye dhan ella kalachara seeralivugalum nadakudhu. Ellathaiyum paathutu porame thavira vera enna seiya mudiyudhu sollunga??!! Kalacharam, panpaadu, nerimurai idhellam vazhakolindha sorkalaagi poiduchungaradhu dhan varutha padavendi nijam, nidharsanam.
விரிவான கருத்துக்கு நன்றி தமிழிசை..எல்லாருமே முடியாதுன்னா அப்புறம் யாரு இதைப்பத்தி பேசுறது.. ஒருத்தரு ஆரம்பிச்சா எல்லாரும் பேச மாட்டாங்களான்னு ஒரு நம்பிக்கை தான்..
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க....எப்படியிங்க....
நண்பரே இப்படி பொங்குவதால் மட்டும் பலன் கிடைத்துவிடுமா என்ன?..
//ராம்.CM said..
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க....
எப்படியிங்க....//
அதெல்லாம் தானா வருது நண்பா..
//சுபாங்கி கூறியது...
நண்பரே இப்படி பொங்குவதால் மட்டும் பலன் கிடைத்துவிடுமா என்ன?..//
எதாவது நடக்கும்.. நாம் ஏதாவது செய்யலாம் என்றுதான் எழுதுகிறேன் தோழி..
"நையாண்டி நைனா கூறியது...
ஆமா அதானே.
இதை நான் கண்ணாபின்னா வென்று
வழிமொழிகிறேன்."
naanum
வருகைக்கு நன்றி mayvee
பிரிச்சு மெஞ்சிட்டீங்க...பெண்களிண்ட அமோக ஆதரவு உங்களுக்குஇருக்கும் போல..
உங்கட ப்ளாக்க பொலோ பண்ண வழியக்காணம் :(
நன்றி.. எனக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல நண்பா.. ரொம்ப நாளாவே சோதனை முயற்சின்னு போட்டு என்னை ரொம்பவே சோதிச்சிக்கிட்டு இருக்காங்க..
ரொம்ப நியாயமான பதிவு..
எத்தனை நாளைக்குத் தான் பெண்களை திரைப்படங்களும்/சின்னத்திரை விளம்பரங்களும் கேவலமாக சித்தரிக்குமெனத் தெரியவில்லை..
சென்சார் கட்டாயம் தேவை தான்.. ஆனால் திரைத்துறையில் நேரும் அதே அவல நிலை தொடர்ந்தால் வேதனையே மிஞ்சும்..
பாராட்டுகள் பொன்னியின் செல்வன் அவர்களே..!
Good dispatch and this mail helped me alot in my college assignement. Thank you for your information.
"தயவு செய்து விளம்பரங்களை சென்சார் செய்யுங்கள்.. ப்ளீஸ்.. !!!"
இனியும் இவங்க திருந்தலனா சும்மா விடக்கூடாது!!!!!
Post a Comment