March 17, 2009

துப்பட்டா அணிவது எதற்கெனில்...?!!

இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று இருந்தேன். நேற்று மாலை வீட்டுக்கு நண்பன் வந்திருந்தான். இருவரும் காலார நடந்தவாறே ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று அரசரடி சாலையில் சென்று கொண்டு இருந்தோம். விஷ் என்று வேகமாக ஒரு பைக் எங்களைத் தாண்டி சென்றது. ஒரு இளைஞனும் அவனை நெருக்கமாக அணைத்தபடி ஒரு பெண்ணும்.. அவளுடைய துப்பட்டா ஏதோ கட்சிக்கொடி போல காற்றில் பறந்து கொண்டு இருந்தது." பக்கி.. எப்படி போகுதுங்க பாரு.." நண்பன் சொல்லி வாய் மூடுவதற்குள் தடால் என்று சத்தம்.

அந்தப் பெண்ணின் துப்பட்டா வண்டி சக்கரத்தில் சிக்கி வாரி விட்டு விழுந்து கிடந்தனர். அருகில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிச்சென்று பைக்கை தூக்கி விட்டோம். அந்தப் பெண்ணுக்கு நல்ல அடி. துணி எல்லாம் அங்கங்கே கிழிந்து.. பாவமாக அழுது கொண்டு இருந்தது. அவனுக்கும் முழங்கையில் அடி. பக்கத்தில் இருந்த மருந்துக் கடையில் பிளாஸ்திரி வாங்கி ஒட்டி அனுப்பினோம். சென்னையில் இருக்கும் என் நண்பனிடம் அலைபேசியில் இதை பற்றி சொன்ன பொழுது அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.. "மதராஸ்ல இதெல்லாம் சகஜம்டா மாப்ள.. பிள்ளைங்க இங்க எல்லாம் இப்ப டிரஸ் பண்றதே வேற மாதிரி.. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு விபத்து இந்த மாதிரி நடக்கும்..".

துப்பட்டா அணிவது எதற்காக? பெண்கள் சுடிதார் அணியும்போது உடம்பின் அங்கங்கள் அசிங்கமாக வெளியே தெரியாமல் இருப்பதற்காக அணியும் உடைதான் துப்பட்டா. ஆனால் இன்று பெண்கள் துப்பட்டாவை எப்படி எல்லாம் அணிகிறார்கள்?

* ஒரு பக்கமாக - ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* நாதஸ்வரக்காரர்கள் இரு பக்கமாக அணிவார்களே - அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி...
* மிக முக்கியமாக - காதலனோடு செல்லும்போது தீவிரவாதி போல தலையை மூடிக் கொள்ள..

சுடிதாரின் நிலைமையே இப்படி என்றால் மற்ற உடைகளைப் பற்றி சொல்வதற்கு இல்லை. பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும்..சேலை தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. சேலை போல் பெண்களை செக்சியாக காட்டும் உடை வேறு கிடையாது என்று என் தோழிகள் அடிக்கடி சொல்லுவார்கள். வேலைக்காக, கல்விக்காக.. வெளியே செல்லும் பெண்களுக்கு மிகவும் சவுகரியமான உடை சுடிதார்தான். அதை எப்படி அணிகிறார்கள் என்பதில்தான் பிரச்சினையே.. நாம் உடுத்தும் உடை அடுத்தவர்களின் கவனத்தை கலைக்க கூடாது அல்லவா?

பெண்கள் எப்படி உடுத்தினால் என்ன.. ஆண்கள் தான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொன்னால்.. சாரி.. அது நடைமுறைக்கு சாத்தியமே கிடையாது. ஏன் என்றால் நாம் வாழும் சமூகம் அப்படிப்பட்டது. இங்கே ஆண், பெண் இரு பாலருமே சிறு வயதில் இருந்தே பிரிக்கப்பட்டுத்தான் வளர்க்கப்படுகிறார்கள். எதிர் இனம் இவர்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. மூடி வைக்கப்பட்ட பொருளைத் திறந்து பார்க்கும் ஆர்வம் போலத்தான் பெண்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஆண்களிடம் உள்ளது. எழுத்தாளர் சாரு நிவேதிதா அடிக்கடி சொல்வார்.. இந்தியா ஒரு sexual starvation நிறைந்த நாடு என்று... அதுதான் உண்மை. இன்னும் நமது ஊரில் அஜால் குஜால் படங்கள் அமோகமாக ஓட இதுதான் காரணம். இந்த சூழலில், பெண்கள் எப்படி இருந்தாலும் ஆண்கள் கண்டு கொள்ளக் கூடாது என்பது பாலை அருகில் வைத்து விட்டு பூனையைக் குடிக்காதே என்று சொல்வது போல் கேலிக்குரியது.

நான் கலாச்சார காவலனோ, பெரிய வெங்காயமோ கிடையாது. பெண்கள் தங்கள் இஷ்டப்படி உடை உடுத்துவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர்கள் உடையால் பிறரின் கவனம் சிதைக்கப்படக் கூடாது என்பதைத்தான் விரும்புகிறேன். என் வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோல் உடை அணிந்தால் நான் ஒத்துக் கொள்வேனா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.. இல்லை என்று தோன்றியது. எனவே எனக்கு தோன்றியதை இங்கே பதிவு செய்துள்ளேன். வேறு யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல..!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

116 comments:

சி தயாளன் said...

ஹாஹ...

ஒரு விதத்தில் உங்கள் கருத்துடன் நான் உடன் படுகின்றேன் :-)

அத்திரி said...

நல்ல பதிவு நண்பா........


//நான் கலாச்சார காவலனோ, பெரிய வெங்காயமோ கிடையாது. பெண்கள் தங்கள் இஷ்டப்படி உடை உடுத்துவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர்கள் உடையால் பிறரின் கவனம் சிதைக்கப்படக் கூடாது என்பதைத்தான் விரும்புகிறேன். //

ரிப்பீட்டேய்......................

சொல்லரசன் said...

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை,இது போல் விபத்துகள் சகஜம்,இதை பெண்கள் அவர்கள் உரிமை என்பதை விட இதனால் மற்றவர்களுக்கும் ஏன் அவர்களுக்கும் ஏற்படும் இன்னலாக பார்க்கவேண்டும்.

Anbu said...

\\\இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று இருந்தேன். நேற்று மாலை வீட்டுக்கு நண்பன் வந்திருந்தான்.\\\

சொல்லவேயில்லை... சொன்னா நானும் வந்திருப்பேன்ல

Anbu said...

\\\பாலை அருகில் வைத்து விட்டு பூனையைக் குடிக்காதே \\

படித்ததில் பிடித்தது அண்ணா

Anbu said...

நல்ல பதிவு அண்ணா !!

ஒரு வகையில் நானும் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றேன்

Anbu said...

அத்திரி சொன்னது…

நல்ல பதிவு நண்பா........


//நான் கலாச்சார காவலனோ, பெரிய வெங்காயமோ கிடையாது. பெண்கள் தங்கள் இஷ்டப்படி உடை உடுத்துவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர்கள் உடையால் பிறரின் கவனம் சிதைக்கப்படக் கூடாது என்பதைத்தான் விரும்புகிறேன். //

ரிப்பீட்டேய்......................

கார்த்திகைப் பாண்டியன் said...

//"டொன்"லீ said..
ஒரு விதத்தில் உங்கள் கருத்துடன் நான் உடன் படுகின்றேன் :-)//

வாங்க நண்பா.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
நல்ல பதிவு நண்பா........//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை,இது போல் விபத்துகள் சகஜம்,இதை பெண்கள் அவர்கள் உரிமை என்பதை விட இதனால் மற்றவர்களுக்கும் ஏன் அவர்களுக்கும் ஏற்படும் இன்னலாக பார்க்கவேண்டும்.//

அதுதான் என் ஆசை நண்பா.. இதில் உள்ள நிதர்சனத்தை பெண்கள் உணர்ந்து கொண்டால் போதும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
சொல்லவேயில்லை... சொன்னா நானும் வந்திருப்பேன்ல//

சாரி அன்பு.. ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்று விட்டேன்.. அடுத்த முறை மதுரை வரும்போது கட்டாயம் உங்களை அழைக்கிறேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
நல்ல பதிவு அண்ணா !!//

நன்றி அன்பு..

ஆதவா said...

நல்ல பதிவு..

அதிலும் பெண்கள் துப்பட்டா அணிவதை நன்கு ஆராய்ந்துள்ளீர்கள்.. ஹி ஹி..

பெண்கலே!!! நோட் திஸ் போஸ்ட்!!

ஆதவா said...

கடைசி பந்தி உண்மையிலேயே நோட் செய்யவேண்டியது!!! கொஞ்சம் 'எதிலும்' பக்குவமாக இருத்தல் வேணும்....

ஹேமா said...

நானும் ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களின் சில அத்துமீறல்கள் சமூகத்தையே அசிங்கப்படுத்துகிறது.
பாண்டியன் நீங்க சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சாட்டையடி.
யாராவது ஒரு பெண் கவனத்தில் எடுத்தாலும் மிகவும் நல்லது.

நசரேயன் said...

மதுரைக்காரர் பட்டைய கிளப்புராரு

Karthikeyan G said...

//நான் கலாச்சார காவலனோ, பெரிய வெங்காயமோ கிடையாது//

நீங்கள் கலாச்சார காவலர்தான். வேறு எதுவும் கிடையாது.

Karthikeyan G said...

இதேபோல் ஒத்த கருத்துடைய நான்கு பேரை சேர்த்துக்கொண்டு எதாவது 'சேனா' உருவாக்குங்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\நாம் உடுத்தும் உடை அடுத்தவர்களின் கவனத்தை கலைக்க கூடாது அல்லவா?
\\

அதற்காகவே இருந்தால் ...

Joe said...

இதே போல் எனது தோழிக்கு ஒரு முறை நிகழ்ந்தது. (அவர் சரியாக அணிந்திருந்த போதும், ஒரு பக்கம் சற்றே தொங்கி பின்சக்கரத்தில் சிக்கி, உயிர் பிழைத்தது பெரிய அதிசயம்!)

துப்பட்டாவை / சேலை தலைப்பை ஆட்டோ, பைக் சக்கரங்களுக்கு அருகில் பறக்கவிட்டு செல்லும் பெண்களை பார்த்தாலே, "சக்கரத்தில் துணி சிக்கிவிடும், சற்று கவனமாக செல்லுங்கள்" என்று சொல்வதுண்டு.

ஒரு வகையில் இந்த பதிவு / அறிவுரை அவசியமானது.

1. இப்படித்தான் பெண்கள் உடை அணியவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் ஆணாதிக்க சிந்தனை, அடக்குமுறை!
2. நீங்கள் சொல்வதற்காக யாரும் மாறப் போவதில்லை. "முகத்தை பார்த்து பேசாமல், மார்பை முறைக்கும் உன் பார்வையில் தான் பிரச்சினை" என்பது அவர்களின் வாதம்.

Anonymous said...

ஆம். சுடிதார் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாரம் தான். ஆனால் அதை ஒழுங்காக அணிவது அவசியம்.

புல்லட் said...

* ஒரு பக்கமாக - ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* நாதஸ்வரக்காரர்கள் இரு பக்கமாக அணிவார்களே - அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி...
* மிக முக்கியமாக - காதலனோடு செல்லும்போது தீவிரவாதி போல தலையை மூடிக் கொள்ள.. //

தலைவாஆஆஆஆஆ!
நீங்க எங்கேயோ போட்டீங்க...

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... :)

Raju said...

மதுரையிலுமா அண்ணே...
'மதுர' பரவால்லனுல்ல்னு நினைச்சேன்...
பெண்களே, பர்த்து பக்குவமா இருங்க பெண்களே....

தமிழர் நேசன் said...

அட ஒருமுறை சென்னை வந்து பார்த்துட்டு பதிவை போட்டிருந்தா இன்னும் நிறையா டிப்ஸ் கொடுத்திருந்திருக்கலாம்! சரி விடுங்க. இப்ப உள்ள பெண்கள் 90% மேல் உங்கள் கருத்தை முற்றிலும் ஆணாதிக்க கருத்தாக பார்க்கும் நிலையிலேயே உள்ளனர். அவரவர் அனுபவம் தான் சிறந்த படம்.
மனதில் பட்டதை அருமையாக எழுதியிருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்லா சொன்னீங்க தல!!

குடந்தை அன்புமணி said...

நல்ல பதிவு நண்பா! வாழ்த்துகள்! இதை மையமா வச்சி நான் ஒரு கதையே எழுதியிருக்கேன். விரைவில் வலையில விடலாம்.

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி,
பாலகுமாரன் ஒரு கவிதையில் எழுதியிருப்பார்...
சீவு, சிக்கெடு, அலங்கரி, பொட்டு வைத்துக்கொள்... படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

//பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும்..சேலை தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை//

அது சரி... சொன்னால் சும்மா விடுவார்களா...?

- பொன். வாசுதேவன்

Mohan said...

சரியா சொல்லி இருக்கீங்க! புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

Anonymous said...

மிகச்சரியாக சொன்னீர் சகோதரரே. இந்த காலத்தில் பெண் விடுதலை என்றாய் அது ஆடை குறைப்பையும் ஆண்களைப்போல் சில செயல்களை செய்வது என்பதே ஆகிவிட்டது .

ஆண்களும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று தான் quran சொல்கிறது. இருந்தாலும் பிற ஆண்களை கவரும் வண்ணம் ஒரு போதும் உடை அணியக்கூடாது என்பதனலேயே பெண்களின் முகம், கைகளை தவிர எல்லவற்றயும தளர்வான ஆடையை கொண்டு மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

-ஹிஜாப் அணியும் ஒரு சகோதரி-

ச.பிரேம்குமார் said...

ந‌ல்ல‌ ப‌திவு பாண்டிய‌ன்

பொன்.பாரதிராஜா said...

மகளிர் சங்கத்தில் இருந்து லெட்டர் வந்தாச்சா சகா?

Rajeswari said...

அட அரசரடி பக்கமா உங்க வீடு...மதுரையெல்லாம் எப்படி இருக்கு? திருவிழாவுக்கு போறீங்களா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
அதிலும் பெண்கள் துப்பட்டா அணிவதை நன்கு ஆராய்ந்துள்ளீர்கள்.. ஹி ஹி..
பெண்கலே!!நோட் திஸ் போஸ்ட்!!//

வீணா குழப்பம் பண்ணிறாதீங்க நண்பா.. நான் நல்லவன்.. நம்புங்க பெண்களே..

Anonymous said...

hi r u there?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
கடைசி பந்தி உண்மையிலேயே நோட் செய்யவேண்டியது!!! கொஞ்சம் 'எதிலும்' பக்குவமாக இருத்தல் வேணும்....//

எனக்கு தோன்றியதை இங்கே பதிவு செய்துள்ளேன். வேறு யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல..!!
ரிப்பீட்டேய்ய்ய்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா.. //
இருக்கேன் தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
நானும் ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களின் சில அத்துமீறல்கள் சமூகத்தையே அசிங்கப்படுத்துகிறது.
பாண்டியன் நீங்க சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சாட்டையடி.
யாராவது ஒரு பெண் கவனத்தில் எடுத்தாலும் மிகவும் நல்லது.//

இந்தப் பதிவை எழுதும்போது ஒரு பயம் இருந்தது.. பெண்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று.. ரொம்ப நன்றி தோழி... என் கருத்துக்களை சரியாக புரிந்து கொண்டதற்கு..

Anonymous said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
மதுரைக்காரர் பட்டைய கிளப்புராரு//

ரொம்ப நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthikeyan G said..
நீங்கள் கலாச்சார காவலர்தான். வேறு எதுவும் கிடையாது.//

நீங்கள் அப்படி நினைத்தல் சரி நண்பா.. இருந்து விட்டு போகிறேன்.. காசா பணமா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthikeyan G said..
இதேபோல் ஒத்த கருத்துடைய நான்கு பேரை சேர்த்துக்கொண்டு எதாவது 'சேனா' உருவாக்குங்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன்.//

தங்கள் சித்தம் என் பாக்கியம்.. ஆனால் நீங்கள் தான் தலைவர்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நட்புடன் ஜமால் said..
\நாம் உடுத்தும் உடை அடுத்தவர்களின் கவனத்தை கலைக்க கூடாது அல்லவா?
\\
அதற்காகவே இருந்தால் ...//

இது யோசிக்க வேண்டிய விஷயம்.. அந்த மக்களைத் திருத்த யாராலும் முடியாதது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//joe said..
துப்பட்டாவை / சேலை தலைப்பை ஆட்டோ, பைக் சக்கரங்களுக்கு அருகில் பறக்கவிட்டு செல்லும் பெண்களை பார்த்தாலே, "சக்கரத்தில் துணி சிக்கிவிடும், சற்று கவனமாக செல்லுங்கள்" என்று சொல்வதுண்டு.
ஒரு வகையில் இந்த பதிவு / அறிவுரை அவசியமானது. //

என் அக்கறையும் அதுதான்.. நன்றி நண்பா..

Anonymous said...

கலாச்சாரம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.
சரி, தப்பு என சமமாகவே பார்க்க வேண்டும்.

ஒருதலைபட்சமாக இருக்கக்கூடாது. இதை நான் பொதுவாக தான் சொல்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
ஆம். சுடிதார் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாரம் தான். ஆனால் அதை ஒழுங்காக அணிவது அவசியம்.//

பெண்கள் பரிந்து பேசுவது மகிழ்ச்சி தருகிறது.. நன்றி தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
கலாச்சாரம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.
சரி, தப்பு என சமமாகவே பார்க்க வேண்டும்.ஒருதலைபட்சமாக இருக்கக்கூடாது. இதை நான் பொதுவாக தான் சொல்கிறேன்//
சத்தியமான வார்த்தைகள் தோழி.. நானும் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் நம் சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் செய்யும் தவறு தானே பெரிது படுத்தப் படுகிறது.. அதற்கு என் பெண்கள் இடம் கொடுக்க வேண்டும்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி said..
தலைவாஆஆஆஆஆ!
நீங்க எங்கேயோ போட்டீங்க...
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... :)//

நன்றி தலைவா.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said...
மதுரையிலுமா அண்ணே...
'மதுர' பரவால்லனுல்ல்னு நினைச்சேன்...பெண்களே, பர்த்து பக்குவமா இருங்க பெண்களே..//

வாங்க தம்பி.. நம்ம ஊரு நல்ல ஊரு இப்போத்தான் இதெல்லாம் ஆரம்பிச்சிருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழர் நேசன் said..
அவரவர் அனுபவம் தான் சிறந்த படம். மனதில் பட்டதை அருமையாக எழுதியிருகிறீர்கள். வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றி நண்பா.. வருகைக்கும் கருத்துக்கும்...

Unknown said...

வணக்கம் !
அண்ணே எங்கேயோ போயிடீங்க ! வாழ்த்துக்கள் , அப்படியே மயின்டையின் பண்ணுங்க .

கார்த்திகைப் பாண்டியன் said...

//bhuvanesh said..
நல்லா சொன்னீங்க தல!!//
நன்றி தோழா..

Anonymous said...

வணக்கம் !
அண்ணே எங்கேயோ போயிடீங்க ! வாழ்த்துக்கள் , அப்படியே மயின்டையின் பண்ணுங்க .

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said..
நல்ல பதிவு நண்பா! வாழ்த்துகள்! இதை மையமா வச்சி நான் ஒரு கதையே எழுதியிருக்கேன். விரைவில் வலையில விடலாம்.//

சீக்ரமா பதிவ போடுங்க நண்பா.. பார்ப்போம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி,
பாலகுமாரன் ஒரு கவிதையில் எழுதியிருப்பார்...சீவு, சிக்கெடு, அலங்கரி, பொட்டு வைத்துக்கொள்... படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். //

இல்லை நண்பா.. இந்த வார்த்தைகளை படித்தது இல்லை.. உங்ககிட்ட பேசும்போது கேட்டுக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mohan said..
சரியா சொல்லி இருக்கீங்க! புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!//

வருகைக்கு நன்றி மோகன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆண்களும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று தான் quran சொல்கிறது. இருந்தாலும் பிற ஆண்களை கவரும் வண்ணம் ஒரு போதும் உடை அணியக்கூடாது என்பதனலேயே பெண்களின் முகம், கைகளை தவிர எல்லவற்றயும தளர்வான ஆடையை கொண்டு மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
-ஹிஜாப் அணியும் ஒரு சகோதரி-//

ரொம்ப நன்றி சகோதரி.. ஆணும் பெண்ணும் தங்களுடைய ஒழுக்கங்களை பேனா வேண்டும் என்பதுதான் எல்லாருக்கும் வேண்டியது...

ராஜ நடராஜன் said...

//எழுத்தாளர் சாரு நிவேதிதா அடிக்கடி சொல்வார்.. இந்தியா ஒரு sexual starvation நிறைந்த நாடு என்று... அதுதான் உண்மை.//

இது உண்மையில்லைங்க!நம்மை விட காஞ்சு போனவனுங்க தேசம் தேசமா இருக்கான்.சாரு நிவேதிதா சொன்னதால இது உண்மையாகி விடாது.

அப்புறம் சேலை கட்டுவதில் மெஜஸ்டிக் லுக்கும் கொண்டு வரமுடியும்.மயிர்க்கால்கள் சிலுத்துகவும் செய்யமுடியும்.அணியும் விதத்தைப் பொறுத்தது.

ராஜ நடராஜன் said...

போன பின்னூட்டத்துக்கு கூடுதலா இன்னுமொன்னு மெஜஸ்டிக் லுக்குன்னு சொன்னேனே அது சேலைக்கு மட்டும்தானுங்க.

பட்டாம்பூச்சி said...

மிக சரியான கருத்து.நானும் ஆமோதிக்கிறேன்.

ராம்.CM said...

நல்ல கருத்து, நல்ல பதிவு.. நம்ம நண்பர்கள் சொன்ன அனைத்தையும் நானும் ஆமோதிக்கிறேன்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன்.பாரதிராஜா said..
மகளிர் சங்கத்தில் இருந்து லெட்டர் வந்தாச்சா சகா?//

ஏம்ப்பா.. விட்டா நீங்களே சொல்லி மாட்டி விடுவீங்க போல.. வேணாம்.. விட்டுருங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
ந‌ல்ல‌ ப‌திவு பாண்டிய‌ன்//

நன்றி பிரேம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajeswari said..
அட அரசரடி பக்கமா உங்க வீடு...மதுரையெல்லாம் எப்படி இருக்கு? திருவிழாவுக்கு போறீங்களா?//

ஆமாம் தோழி.. ரயில்வே காலனியில்தான் வீடு.. நம்ம ஊரு நல்லாவே இருக்கு.. கண்டிப்பாக திருவிழாவுக்கு போவேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//shan said.
வணக்கம் !
அண்ணே எங்கேயோ போயிடீங்க ! வாழ்த்துக்கள் , அப்படியே மயின்டையின் பண்ணுங்க .//

நன்றிங்க.. முயற்சி பண்றேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராஜ நடராஜன் said..
//எழுத்தாளர் சாரு நிவேதிதா அடிக்கடி சொல்வார்.. இந்தியா ஒரு sexual starvation நிறைந்த நாடு என்று... அதுதான் உண்மை.//
இது உண்மையில்லைங்க!நம்மை விட காஞ்சு போனவனுங்க தேசம் தேசமா இருக்கான்.சாரு நிவேதிதா சொன்னதால இது உண்மையாகி விடாது.//

எனக்கு அவர் சொன்னது சரின்னு பட்டது நண்பா.. உங்கள் கருத்து மாறுபடுது.. இது சகஜம் தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராஜ நடராஜன் said..
போன பின்னூட்டத்துக்கு கூடுதலா இன்னுமொன்னு மெஜஸ்டிக் லுக்குன்னு சொன்னேனே அது சேலைக்கு மட்டும்தானுங்க.//

புரிஞ்சதுங்க.. நான் ஒன்னும் தப்பா நினைக்கலை..-:)

Anonymous said...

உங்கள் பதிவு நல்லாயிருக்கு. இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டாம்பூச்சி said..
மிக சரியான கருத்து.நானும் ஆமோதிக்கிறேன்.//

நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
நல்ல கருத்து, நல்ல பதிவு.. நம்ம நண்பர்கள் சொன்ன அனைத்தையும் நானும் ஆமோதிக்கிறேன்!//

வாங்க ராம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
உங்கள் பதிவு நல்லாயிருக்கு. இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்//

தொடரும் ஆதரவுக்கு நன்றி தோழி.. கண்டிப்பாக எழுதுகிறேன்..

நையாண்டி நைனா said...

"இது ஒரு அப்பட்டமான ஆணியவாதியின் கருத்து.

என்ன நண்பா என்ன ஆச்சி...?

துப்பட்டா மாட்டி விபத்து நடக்குறது தான் உங்க கண்ணுக்கு தெரியுமா? மற்ற விபத்துக்கள் நடப்பது தெரியாதா?

முதல்லே அவனே நிறுத்த சொல்-

குடிச்சிப்புட்டு பைக்கு ஒட்டி விபத்து பண்றானே அவனை நிறுத்த சொல்.

அதிகமா சம்பாதிக்கணும், அதிகமா காசு பார்க்கணும் என்று விடுப்பே கொடுக்காம டாக்ஸீ ஒட்டுறானே அவனை நிறுத்த சொல்.

கண்ணு மண்ணு தெரியாம தண்ணி லாரியும், மண்ணு லாரியும் ஓடுதே அதை நிறுத்த சொல்.

நீயா நானா போட்டி போட்டு போரானுன்களே தனியார் பேருந்துகள் அதை நிறுத்த சொல்.

இவைகளால் ஏற்படும் விபத்தை விட, துப்பட்டா விபத்து கம்மிதான்."

இப்படி சொல்லணும் என்று நினைக்கிறன். ஆனால் தாய்குலம் கஷ்டபடுறது எனக்கும் கஷ்டமாதான் இருக்கு.

அம்மா தாய்குலமே, கொஞ்சம் பாதுகாப்பா, அதாவது உங்களுக்கு பாதுகாப்பா அணிஞ்சா போதும்.

நீங்களும் நலம்.
நாங்களும் நலம்.
யாவரும் நலம்.

யாவரும் நலம், மாதவன் மாதிரி நாங்களும் டரியலாக மாட்டோம்.

Anonymous said...

என்னடா இந்த ஞாயிறு புது பட விமர்சனத்தை காணம்னு பார்த்தன் தல ஊருக்கு போயிருச்சா???
ஆனாலும் நல்ல ஆராய்ச்சி+கண்டுபிடிப்பும்
ஹிஹிஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா//
நண்பா..இதுதான் வாழைப்பழத்துல ஊசி எத்துறதா.. என்ன என்ன சொல்ல மாட்டேனு சொல்லிக்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டீங்க.. பரவா இல்லை.. எத்தனையோ பிரச்சினைகள் நீங்க சொன்ன மாதிரி.. நான் இதையும் அதுல ஒன்னாத்தான் பாக்குறேன்.. opinions do differ... வெளிப்படையாக நீங்க நினைப்பதை சொன்னதற்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
என்னடா இந்த ஞாயிறு புது பட விமர்சனத்தை காணம்னு பார்த்தன் தல ஊருக்கு போயிருச்சா???
ஆனாலும் நல்ல ஆராய்ச்சி+கண்டுபிடிப்பும்
ஹிஹிஹி//

ஆமாம் நண்பா.. ஊருக்கு போயிட்டேன்.. புதுப் பட விமர்சங்கள அடுத்த வாரம் மறுபடியும் ஆரம்பிச்சுடலாம்..

குமரை நிலாவன் said...

பெண்கள் திருந்தினா சரிதான்
நல்ல பதிவு நண்பா
விரிவா எழுத நேரமில்லை

நையாண்டி நைனா said...

/*opinions do differ... வெளிப்படையாக நீங்க நினைப்பதை சொன்னதற்கு நன்றி*/

நண்பா உங்கிட்டே சொல்வதில் எனக்கு என்ன தடை நண்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
பெண்கள் திருந்தினா சரிதான்
நல்ல பதிவு நண்பா
விரிவா எழுத நேரமில்லை//

வாங்க நண்பா.. பரவா இல்லை.. நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
நண்பா உங்கிட்டே சொல்வதில் எனக்கு என்ன தடை நண்பா.//

இந்த உரிமை உங்களுக்கு இல்லாமலா.. இப்படி நீங்க சொல்ல நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.. நன்றி நைனா..

Anonymous said...

Can't u see or apprecaite positive happenings arround u and give an applause.
புலம்பல் தவிர வேற புகழ்ந்தும் எழுதுங்களேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏம்பா.. இந்த ஒரு பதிவ மட்டும் பாக்குறீங்க.. மத்த எல்லா பதிவுகளும் சந்தோஷத்தப் பத்தி தானே இருக்கு.. என்னோட எல்லா உணர்வுகளையும்தான் சொல்றேன்..

Pradeep said...

நல்ல பதிவு. ஆணாதிக்கவாதியாகவும் இல்லாமல் கலாசார காவலனாகவும் இல்லாமல் தெளிவாக கையாண்டுள்ளிர்கள்.

//.........பெண்கள் எப்படி இருந்தாலும் ஆண்கள் கண்டு கொள்ளக் கூடாது என்பது பாலை அருகில் வைத்து விட்டு பூனையைக் குடிக்காதே என்று சொல்வது போல் கேலிக்குரியது.....///


இந்த கருத்தைத்தான் ஏற்று கொள்ள முடியவில்லை. பெண்கள் எவ்வளுவுதான் நேர்த்தியாக உடை உடுத்தினாலும் ஆண்கள் தங்களுடைய காம பார்வையை செலுத்த தவறுவதில்லை. ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தையை கற்பழித்த காமுகர்கள் இந்த நாட்டில் உண்டு.

ஆக, பெண்கள் இவ்வாறுதான் உடை உடுத்த வேண்டும் என்று சொல்வது ....நான் ஆணாதிகவாதி இல்லை என்று சொன்னாலும் , அது ஓர் வெளிபாடே என்று எனக்கு தோன்றுகிறது.

*இயற்கை ராஜி* said...

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.yenna sonnalum thirunthaatha jenmangala yenna panrathu..

ithai yellam avar veetil iruppavar sari seithaal than mudium..chudithar mattum illa..intha modern dress ah yellam vachittu panra kodumai irukke...thanga mudiyala...:-(

சொல்லரசன் said...

நையாண்டி நைனா கூறியது...

// "இது ஒரு அப்பட்டமான ஆணியவாதியின் கருத்து.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் கோவை ஹோப்பு கல்லுரிடயில் இருந்து
திண்டல் கல்லுரி வரை கா.பா வல்லவர் நல்லவர் என்பது தெரியும்.இது இயற்கைகே புரியும் என நினைக்கிறேன்.

Anonymous said...

//நையாண்டி நைனா கூறியது...

// "இது ஒரு அப்பட்டமான ஆணியவாதியின் கருத்து.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் கோவை ஹோப்பு கல்லுரிடயில் இருந்து
திண்டல் கல்லுரி வரை கா.பா வல்லவர் நல்லவர் என்பது தெரியும்.இது இயற்கைகே புரியும் என நினைக்கிறேன்.

//
அதே... அதே

கார்த்திகைப் பாண்டியன் said...

//pradeep said..
//.........பெண்கள் எப்படி இருந்தாலும் ஆண்கள் கண்டு கொள்ளக் கூடாது என்பது பாலை அருகில் வைத்து விட்டு பூனையைக் குடிக்காதே என்று சொல்வது போல் கேலிக்குரியது...../// இந்த கருத்தைத்தான் ஏற்று கொள்ள முடியவில்லை. பெண்கள் எவ்வளுவுதான் நேர்த்தியாக உடை உடுத்தினாலும் ஆண்கள் தங்களுடைய காம பார்வையை செலுத்த தவறுவதில்லை. ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தையை கற்பழித்த காமுகர்கள் இந்த நாட்டில் உண்டு. //

விரிவாக சொல்லி உள்ளீர்கள்.. நன்றி தோழரே... உங்கள் கருத்து சரிதான்.. கொடூர மிருகங்கள் காமப்பசியுடன் அலையும் இந்த நிலைக்கு நம் சமூகமும் ஒரு காரணம்.. அதை மேலும் ஏத்தி விடுவது போல பெண்கள் உடை அணிய வேண்டாமே என்பதுதான் என் கருத்து.. சொன்ன விதம் தப்பு என்று தோன்றினால்.. மாற்றி கொள்கிறேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.yenna sonnalum thirunthaatha jenmangala yenna panrathu..//

ஒரு பெண்ணாக இருப்பதால் மற்றவர்கள் செய்யும் அடாவடி பற்றி உங்களுக்கும் நன்றாக தெரிந்து இருக்கிறது.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

சொல்லரசன் மற்றும் கவின், உங்கள் ஆதரவுக்கு நன்றி.. நையாண்டி நைனாவுன் என் இனிய நண்பர்தான்.. இந்த முறை நான் எழுதிய எழுத்துக்கள் அவருக்கு வேறு மாதிரி தோன்றியதால் அதைப் பற்றிய கருத்தை சொல்லி உள்ளார்.. இதுக்கு எதுக்கு நான் நல்லவன் வல்லவன்னு எல்லாம்.. இருந்தாலும்.. நன்றி நண்பர்களே..

Joe said...

//
பாலை அருகில் வைத்து விட்டு பூனையைக் குடிக்காதே
//

பூனையை எப்படி குடிக்க முடியும்? சீனர்களிடம் கொடுத்தால் அறுத்து கறி சமைத்து தின்பார்கள்! ஹா ஹா!

பாலை அருகில் வைத்து விட்டு பூனையை "குடிக்காதே" என்று சொல்வது...
என்பதே சரியானது என்று நினைக்கிறேன்.

Joe said...

ஓஷோவின் புத்தகங்கள் படித்ததில்லையா?
பிரச்சினை நாம் உடலை இறைவனின் கோவில் என்று பார்க்காமல், இந்த உறுப்பு அசிங்கம், இந்த உறுப்பு அழகு என்று எண்ணுவதால் வருகிறது.

இந்தாளு "யாரும் யாருடனும் கலவி கொள்ளலாம்" என்ற ஒரு அசிங்கமான சாமியாரின் புத்தகங்களை சிபாரிசு செய்கிறார் என்று என் மீது யாரும் பாயாமல் இருந்தால் சரி! ;-)
அதைத் தவிர பல நல்ல விஷயங்களையும் அவர் சொல்லியிருக்கிறார்.
படித்து பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைக்கலாம் உங்களுக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

//joe said..
பூனையை எப்படி குடிக்க முடியும்? சீனர்களிடம் கொடுத்தால் அறுத்து கறி சமைத்து தின்பார்கள்! ஹா ஹா!//

ஐயோ சாமி.. கடியப் போடுறீங்களே.. திருத்திக்கலாம் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//joe said..
ஓஷோவின் புத்தகங்கள் படித்ததில்லையா? பிரச்சினை நாம் உடலை இறைவனின் கோவில் என்று பார்க்காமல், இந்த உறுப்பு அசிங்கம், இந்த உறுப்பு அழகு என்று எண்ணுவதால் வருகிறது. இந்தாளு "யாரும் யாருடனும் கலவி கொள்ளலாம்" என்ற ஒரு அசிங்கமான சாமியாரின் புத்தகங்களை சிபாரிசு செய்கிறார் என்று என் மீது யாரும் பாயாமல் இருந்தால் சரி! ;-)
அதைத் தவிர பல நல்ல விஷயங்களையும் அவர் சொல்லியிருக்கிறார்.
படித்து பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைக்கலாம் உங்களுக்கு.//

ஓஷோவைப் பற்றி கேள்விப்பட்டு உள்ளேன் நண்பா.. படித்தது இல்லை.. உங்களை யாரும் தப்பா எல்லாம் நினைக்க மாட்டோம்.. ஆனால் நீங்கள் சொல்லும் தெளிவு எல்லாருக்கும் சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்..

மேவி... said...

romba late aa vanthutten pol irukke....
anyways i agree with u dude....


melum

present sir

கார்த்திகைப் பாண்டியன் said...

பரவா இல்ல நண்பா..வருகைக்கு நன்றி..

Anonymous said...

நல்ல பதிவு நண்பா........

Anonymous said...

6

Anonymous said...

5

Anonymous said...

7

Anonymous said...

8

Anonymous said...

ready...

Anonymous said...

me the 100

Unknown said...

வாழ்த்துகள் பின்னுட்டத்தில் சதம் அடித்தற்கு,
//சொல்லரசன் மற்றும் கவின், உங்கள் ஆதரவுக்கு நன்றி.. நையாண்டி நைனாவுன் என் இனிய நண்பர்தான்.. இந்த முறை நான் எழுதிய எழுத்துக்கள் அவருக்கு வேறு மாதிரி தோன்றியதால் அதைப் பற்றிய கருத்தை சொல்லி உள்ளார்..//

இது என்னங்க எங்களுக்கும் நையான்டிக்கு இடையில் பிரச்சனையை கிளப்பி நீங்கள் மட்டும் தள்ளியிருப்பது.இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த்... //

தெய்வமே.. உங்க நல்ல மனச பார்த்து எனக்கு அழுகையா வருது.. அவ்வ்வ்வ்... சதமடிக்க உதவிய தோழருக்கு நன்றிய்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் //

ஐயயோ... நண்பா.. நான் அப்படி எல்லாம் சொல்லல.. நீங்க ரொம்ப கண்டிக்காதீங்க.. நாம எல்லாம் ஒரே செட்டு..( என்ன பெரிய சேவிங் செட்டுன்னு கேக்க கூடாது.. சொல்லிட்டேன்)

Anonymous said...

கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
//கடையம் ஆனந்த்... //

தெய்வமே.. உங்க நல்ல மனச பார்த்து எனக்கு அழுகையா வருது.. அவ்வ்வ்வ்... சதமடிக்க உதவிய தோழருக்கு நன்றிய்..

//
இப்படியெல்லாம் சொல்லப்பிடாது...அவ்வ்வ்வ்

Prabhu said...

////பிளாகர் கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
///டக்ளஸ் said...
மதுரையிலுமா அண்ணே...
'மதுர' பரவால்லனுல்ல்னு நினைச்சேன்...பெண்களே, பர்த்து பக்குவமா இருங்க பெண்களே..//

வாங்க தம்பி.. நம்ம ஊரு நல்ல ஊரு இப்போத்தான் இதெல்லாம் ஆரம்பிச்சிருக்கு..////////

எந்த ஊரா இருந்தாலும் ஒரே கதைதான்ணே!

கார்த்திகைப் பாண்டியன் said...

////கடையம் ஆனந்த்...
இப்படியெல்லாம் சொல்லப்பிடாது...அவ்வ்வ்வ் //

சரி சரி... உங்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
எந்த ஊரா இருந்தாலும் ஒரே கதைதான்ணே!//

வாங்க பப்பு.. நன்றி..

Dhavappudhalvan said...

அக்கா, தங்கச்சி இல்லையா? கல்யாண ஆயிடுச்சா ? ஆயிருந்தா புள்ளக்குட்டி இல்லையா ? உங்கமாதிரி எத்தனை பேர நானும் பாத்திருக்கேன். உங்க வீட்டு அனுமதிக்க மாட்டிங்க. ஆனா உங்க பின்னாடியோ, நீங்க அவங்க பின்னாடி உட்கார்ந்து போகும்போது தெரியும்.வானமே கையிலே.

Dhavappudhalvan said...

சும்மா நானும் கலாய்கறத்துக்காக முன் கருத்து எழுதினேன். அருமையான, கவனிக்க வேண்டிய விசயம்தான். ஆனா யாரு காதுல விழுக போகுது?

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க நண்பா.. ரொம்ப நாளா ஆளவேக் காணோம்..? வருகைக்கு நன்றி..

பால்கி said...

அருமை ....

எனக்கு வந்த குறுஞ்செய்தி

"காற்றில் அவள் துப்பட்டா
என் மீது விழுந்தது "
எனக்கு பயங்கர சந்தோசம்
என் பைக் துடைக்க
துணி கிடைத்ததே என்று .

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் வருகைக்கும் என்னைத் தொடர்வதற்கும் நன்றி தோழரே..

Ram said...

Sextual starvation in India is 5 year before only, Now the country is moved so much with western countries in terms of sex education amount the younger generation. We are talking about the dress by women, but we never worried about the top less men in lungi and shorts in our country. Take it as casual. don't think too much, then see u never miss the way in your journey.

கார்த்திகைப் பாண்டியன் said...

thanks ram, for your concern.. i record the things that i feel i have to.. thats it.. keep coming..

உமா said...

இந்தப் பதிவிற்கு மட்டும் 114 பின்னூட்டங்களா? இது கொஞ்சம் ஓவர்.
பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான். நம் குழந்தைகள் [காலேஜ் போற பெண்கள் தான்] துப்பட்டாவை காற்றில் பறக்க விட்டாலும் அசிங்கமாக தெரியாது. கொஞ்சம் பொறுப்பற்றவராகத்தெரிவார்கள் . காலம் வந்தால் பொறுப்பும் வந்துவிடும்.ஆனால் அசிங்கமாக உடையணிபவர்கள் வேறு பெண்கள்.அதற்கு குடும்பச் சூழலும் காரணம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி உமா.. நீங்கள் சொல்லும் கருத்து ஏற்புடையதுதான்.. சூழலும் ஒரு காரணம் என்றாலும் பெண்கள் கொஞ்சம் சூதானமாக இருக்கலாம் என்பதுதான் என் கருத்து.. பதிவு கொஞ்சம் சர்ச்சைக்கு உரியதாக இருப்பதால்தான் இத்தனை பின்னூட்டங்கள்.. விடுங்க.. பாண்டியன் (ஹி ஹி ஹி.. நான் தாங்க.. )பொழச்சு போகட்டும்..