September 4, 2009

நான்மாடக்கூடல்..!!!

மதுரை மாநகரம் - தூங்கா நகரம் என்ற பெருமையை உடையது. சரித்திரப் பெருமை வாய்ந்தது. மிகவும் பழமையானது. மதுரையைப் பற்றி "நான்மானக் கூடல்" என்னும் பெயரில் பேரா.காந்திராஜன் நடத்தி வரும் ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி - மதுரையில் நடைபற்று வரும் புத்தகத் திருவிழாவின் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. பேரா.காந்திராஜனின் சித்திரக்கல் அமைப்பும், கவிஞர் தேவேந்திர பூபதியின் கடவு அமைப்பும் இணைந்து இந்த அரங்கை அமைத்துள்ளார்கள்.

சென்னை ஓவியக் கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகப் பணிபுரியும் பேரா.காந்திராஜன் பல காலங்களாக தொல்லியல் துறையில் ஆர்வமுடன் இயங்கி வருகிறார். பாறை ஓவியங்கள், கோவில் சிற்பங்கள், பழங்குடி இன வாழ்க்கை முறை என்று பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய சொந்த முயற்சியால் பல அரிய பண்பாட்டுச் சின்னங்களை கண்டெடுத்து, அரசாங்கத்துக்கு தெரிவித்து இருக்கிறார்.

இந்த அரங்கில் இருக்கும் ஓவியங்களை இரண்டு வகையாகப் பிரித்து உள்ளனர். மதுரையில் ஓவியங்கள் - மதுரை நகரின் கோவில்களிலும், சுற்றுப்புறங்களிலும் இருக்கும் ஓவியங்கள் மற்றும் பண்பாட்டு சின்னங்கள் பற்றியத் தொகுப்பு. "ஓவியங்களில் மதுரை" - மதுரை தவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மதுரை எப்படி சித்திரிக்கப் பட்டுள்ளது என்பதை விளக்கும் ஓவியங்கள்.வெளிநாட்டில் இருந்து வந்த ஓவியர்களின் பார்வையில் மதுரையின் ஓவியங்களைப் பார்க்கும்பொழுது ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன்.

காந்திராஜன் அவர்களோடு ஒரு சில மணி நேரங்களை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. மனிதர் வரலாறு சம்பந்தமான பல விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தகவல் களஞ்சியமாக இருக்கிறார். அவர் என்னோட பகிர்ந்து கொண்ட விஷயங்களில் சில..

"இயற்கையோடு இன்றளவும் இணைந்து வாழும் முறையைப் பின்பற்றும் பழங்குடி இன மக்களே கொடுத்து வைத்தவர்கள்.நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் நாம் பல விஷயங்களைத் தொலைத்து விட்டோம்.கொடுமையான நோய்களைக் கூட எளிதாக குணப்படுத்தும் வைத்திய முறைகளை அவர்கள் அறிந்து இருந்தார்கள். ஒவ்வொரு குழுவினரும் தங்களை அடையாள படுத்திக் கொள்ளும் வண்ணமாக பறவை வடிவிலோ, கிரீட வடிவிலோ தலைக் கவசங்களை அணியும் வழக்கம் கொண்டிருந்தார்கள்."

"சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. நாம் உண்மைகளை அறிந்து கொள்ள உதவுவது அந்த மக்களின் பதிவுகளும்,பாறை ஓவியங்களும்,சிற்பங்களும்தான்.தென் இந்தியாவில் காணப்படும் பாறை ஓவியங்களுக்கும், ஆப்பிரிக்கக் காடுகளில் தென்படும் ஓவியங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் தென்படுகின்றன. இதன் மூலம் இந்த மக்களுக்கு இடையே ஏதோ ஒரு சரித்திரப் பிணைப்பு இருக்கிறது என்பது உறுதியாகிறது."

"சங்க காலம் முதலே மதுரை குறித்த தகவல்கள் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மதுரையில் நடைபெற்ற சமணர்கள் படுகொலை வரலாற்றின் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று. கூன்பாண்டியனின் வெப்பு நோயை குணப்படுத்துகிறார் திருஞானசம்பந்தர். சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறும் அரசன் எட்டாயிரம் சமணர்களை சாமனத்தம் என்னும் ஊரில் கழுவில் ஏற்றுகிறான். இது பற்றி சைவ சமய புத்தகங்களில் குறிப்பு இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட சமணர்கள் சார்பாக எந்த ஒருபதிவும் இல்லை. ஒருவேளை யாரும் எழுத வில்லையா அல்லது அந்தப் பதிவுகள் சைவர்களால் தேடி அழிக்கப் பட்டனவா?"

'மதுரையை சுற்றி இருக்கும் பதினெட்டு மலைகளில் சமணர்கள் வாழ்ந்து வந்ததற்கான வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. ஏதோ வந்து போன இடங்களில் எல்லாம் தங்காமல், அவர்கள் தங்களுக்கான வாழ்விடங்களை மிகவும் கவனமாக தெரிவு செய்து இருக்கிறார்கள். நீர் வசதியுடன் கூடிய, ஊரைப் பார்க்கும் தெளிவான உயரத்தில் இருக்கும் குகைகளைத் தேர்ந்து எடுத்து தங்கி இருக்கிறார்கள். பிறரிடம் தர்மம் பெற்று தங்கள் வாழ்வை நடத்தி வந்த இவர்களிடம் இருந்து பரவியது தான் இன்றைக்கும் மதுரையின் கிராமப்புறங்களில் பயன்பாட்டில் இருக்கும் தம்மச்சோறு எனும் வார்த்தை."

புத்தக கண்காட்சிக்கு செல்லும் நண்பர்கள் கண்டிப்பாக 'நான்மாடக்கூடல்" அரங்கையும் சுற்றிப் பாருங்கள். கண்டிப்பாக அது ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்..!!!

நண்பர் ஸ்ரீயின் இடுகை..

அட்டகாசமான படங்கள் பாலகுமார் பதிவில்



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

38 comments:

குமரை நிலாவன் said...

நல்ல பகிர்தல் நண்பா

சுந்தர் said...

பதிவர் சந்திப்பு எப்போ ?

க.பாலாசி said...

//புத்தக கண்காட்சிக்கு செல்லும் நண்பர்கள் கண்டிப்பாக 'நான்மாடக்கூடல்" அரங்கையும் சுற்றிப் பாருங்கள். கண்டிப்பாக அது ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்..!!!//

கண்டிப்பாக...நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அன்பரே...

ஹேமா said...

கார்த்திக் அழகாகத் தொகுத்து எழுதுகிறீர்கள்.நானும் அந்த இடங்களைப் பார்த்த உணர்வோடு...

வால்பையன் said...

நல்ல பதிவு கூடவே கொஞ்சம் போட்டோஸ் போட்டிருந்தால் நேரில் பார்த்த எஃபெக்ட் கிடைத்திருக்கும்,!

தேவன் மாயம் said...

குத்திட்டேன் !

சிவக்குமரன் said...

தகவல்களுக்கு நன்றி நண்பா!!

சொல்லரசன் said...

//"இயற்கையோடு இன்றளவும் இணைந்து வாழும் முறையைப் பின்பற்றும் பழங்குடி இன மக்களே கொடுத்து வைத்தவர்கள்.நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் நாம் பல விஷயங்களைத் தொலைத்து விட்டோம்.//

உண்மைதான்

மாதவராஜ் said...

இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே...

குப்பன்.யாஹூ said...

maருதை மிக சிறப்பான ஊர். வருத்தம் என்ன என்றால் பதிவு உலகில் யாரும் முழுமையாக பதிவிட வில்லை மருதை பற்றி.

என் பார்வையில் மதுரை பற்றி நூறு பதிவு எழுதலாம், பெரியார் பேருந்து நிலையம், டவுன் ஹால் ரோடு, மாசி வீதி, மேல ஆவணி மூல வீதி, ரயில் நிலையம், மங்கம்மா சத்திரம், விளக்கு தூன், மாப்பளையம், தேம்பாவணி என எத்தனை சுவாரஸ்யம் மிக்க மாநகர் அது.


லேகாவிடம் (யாழிசை) கேட்டு உள்ளேன், பார்ப்போம்



சமீபத்தில் எஸ் ராவின் கட்டுரை அருமை, மதுரை முக்கிய வீதிகளில் அவரும் எழுத்து உலக நண்பர்களும் நடந்தே சென்று uள்ளனர்.

நானும் பல நாட்கள் என் தாயார், தாய் மாமன்கள் உடன் அரசரடியில் இருந்து நடந்தே மீனாட்சி அம்மன் கோயில் வரை சென்று உள்ளேன், அலுப்பே தட்டாத நடை அது, சுவாரஸ்யம் மிக்க மனிதர்கள், ஆங்கிலம் கலக்காத தமிழ, மதுரை தமிழ வார்த்தைகளிலேயே ஒரு வித வீரம், பாசம் தெரியும்.

பீர் | Peer said...

நல்ல பகிர்வு கார்த்திக்.

மாதேவி said...

நல்லபதிவு.

"நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் நாம் பல விஷயங்களைத் தொலைத்து விட்டோம்"

குடந்தை அன்புமணி said...

நல்ல பகிர்வு நண்பா...கொஞ்சம் போட்டோவும் போட்டிருக்கலாம்...
இந்த மாதிரி விடயம் தெரிந்த ஓவியர்கள் யாரும் பதிவு வைத்திருக்கிறார்களா?

கார்த்திகைப் பாண்டியன் said...

// குமரை நிலாவன் said...
நல்ல பகிர்தல் நண்பா//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுந்தர் said...
பதிவர் சந்திப்பு எப்போ ?//

கூடிய சீக்கிரம் வச்சுடலாம் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// க.பாலாஜி said...
கண்டிப்பாக...நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அன்பரே.//

நீங்க என்னைக்கு வரீங்கன்னு சொல்லுங்கப்பா.. கலக்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...
கார்த்திக் அழகாகத் தொகுத்து எழுதுகிறீர்கள்.நானும் அந்த இடங்களைப் பார்த்த உணர்வோடு...//

நன்றி சகோதரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
நல்ல பதிவு கூடவே கொஞ்சம் போட்டோஸ் போட்டிருந்தால் நேரில் பார்த்த எஃபெக்ட் கிடைத்திருக்கும்,!//

முயற்சி பண்றேன் தல.. முடிஞ்சா எல்லா போட்டோவையும் தனியாப் போடப் பாக்குறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேவன் மாயம் said...
குத்திட்டேன் !//

நன்றி தேவா சார்..

//இரா.சிவக்குமரன் said... தகவல்களுக்கு நன்றி நண்பா!!//

வருகைக்கு நன்றி நண்பரே..

ஆ.ஞானசேகரன் said...

[[["இயற்கையோடு இன்றளவும் இணைந்து வாழும் முறையைப் பின்பற்றும் பழங்குடி இன மக்களே கொடுத்து வைத்தவர்கள்.நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் நாம் பல விஷயங்களைத் தொலைத்து விட்டோம்.கொடுமையான நோய்களைக் கூட எளிதாக குணப்படுத்தும் வைத்திய முறைகளை அவர்கள் அறிந்து இருந்தார்கள். ஒவ்வொரு குழுவினரும் தங்களை அடையாள படுத்திக் கொள்ளும் வண்ணமாக பறவை வடிவிலோ, கிரீட வடிவிலோ தலைக் கவசங்களை அணியும் வழக்கம் கொண்டிருந்தார்கள்."]]]


அருமை நண்பரே அழகான தொகுப்பு(பூ) பாராட்டுகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said... உண்மைதான்//

;-))))))

//மாதவராஜ் said...
இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே...//

வருகைக்கு நன்றி தோழர்.. இங்கே இதை படிக்கவே மக்கள் மூச்சு வாங்குவதாக சொல்கிறார்களே..:-(((

Karthik said...

சான்ஸ்லெஸ். செம ரைட்டிங், ரியலி. :)

அ.மு.செய்யது said...

//சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது//

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.மற்றபடி,பதிவு வழக்கம் போலவே சுவாரஸியம் குறையாமல்
அமைந்திருக்கிறது.

பயனுள்ள பதிவும் கூட.

தருமி said...

உள்ளேதான் நல்ல படங்கள் என்றால் முகப்பிலே வைத்திருந்த பெரிய flexboard-ல் இருந்த சமணக் குகை நிழல்படமும் மிக அருமை.

Unknown said...

பகிர்விற்கு நன்றி கார்த்திக். புத்தகக் கண்காட்சிக்கும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்குமாக மதுரைக்கு வர டிக்கெட் எடுத்து, வர ஏலாமல் போய்விட்டது. இப்பதிவை வாசித்ததும் வருத்தம் மேலதிகமாகி விட்டது. அடுத்த முறை மதுரை வரும்போது நிச்சயம் போக வேண்டும்..;))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்ஜி.யாஹூ said...
maருதை மிக சிறப்பான ஊர். வருத்தம் என்ன என்றால் பதிவு உலகில் யாரும் முழுமையாக பதிவிட வில்லை மருதை பற்றி.//

எங்க ஊரைப் பத்தி இவ்வளவு சிலாகிச்சு சொல்றீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா.. லேக்கா பற்றிய தகவலுக்கு நன்றி.. நானும் என்னால் முடிஞ்ச மட்டும் பதிவு பண்ணப் பார்க்கிறேன்.. மதுரை மற்றும் எஸ்ரா பத்தி இன்னும் நிறைய சொல்லலாம்.. பார்ப்போம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// பீர் | Peer said...
நல்ல பகிர்வு கார்த்திக்.//

நன்றி நண்பா..

//மாதேவி said...
நல்லபதிவு."நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் நாம் பல விஷயங்களைத் தொலைத்து விட்டோம்"//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
நல்ல பகிர்வு நண்பா...கொஞ்சம் போட்டோவும் போட்டிருக்கலாம்...//

Technical problems pa

//இந்த மாதிரி விடயம் தெரிந்த ஓவியர்கள் யாரும் பதிவு வைத்திருக்கிறார்களா?//

கவிஞர் நரன் ஒரு நவீன ஓவியரும் கூட.. :-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
அருமை நண்பரே அழகான தொகுப்பு(பூ) பாராட்டுகள்//

தாங்க்ஸ் தலைவரே..

//Karthik said...
சான்ஸ்லெஸ்.செம ரைட்டிங்,ரியலி.:)//

ரைட்டு, ஓகே, நன்றி :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//அ.மு.செய்யது said...
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.மற்றபடி,பதிவு வழக்கம் போலவே சுவாரஸியம் குறையாமல் அமைந்திருக்கிறது. பயனுள்ள பதிவும் கூட.//

opinions do differ நண்பா..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
உள்ளேதான் நல்ல படங்கள் என்றால் முகப்பிலே வைத்திருந்த பெரிய flexboard-ல் இருந்த சமணக் குகை நிழல்படமும் மிக அருமை.//

அருமையான் படங்கள் ஐயா... உங்க கூட சேர்ந்து போக முடியாதுதான் வருத்தம்

கார்த்திகைப் பாண்டியன் said...

// உமாஷக்தி said...
பகிர்விற்கு நன்றி கார்த்திக். புத்தகக் கண்காட்சிக்கும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்குமாக மதுரைக்கு வர டிக்கெட் எடுத்து, வர ஏலாமல் போய்விட்டது. இப்பதிவை வாசித்ததும் வருத்தம் மேலதிகமாகி விட்டது. அடுத்த முறை மதுரை வரும்போது நிச்சயம் போக வேண்டும்..;))//

நீங்கள் வர முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன் தோழி.. மதுரை வரும்பொழுது கண்டிப்பாக சொல்லுங்கள் ;-)))))

பாலகுமார் said...

//"சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. நாம் உண்மைகளை அறிந்து கொள்ள உதவுவது அந்த மக்களின் பதிவுகளும்,பாறை ஓவியங்களும்,சிற்பங்களும்தான்.//

அது என்னவோ உண்மை தான்.

படங்கள் இங்கே ...
http://solaiazhagupuram.blogspot.com/2009/09/blog-post.html

மேவி... said...

"ஒவ்வொரு குழுவினரும் தங்களை அடையாள படுத்திக் கொள்ளும் வண்ணமாக பறவை வடிவிலோ, கிரீட வடிவிலோ தலைக் கவசங்களை அணியும் வழக்கம் கொண்டிருந்தார்கள்"


எல்லோருக்கும் ஒரே மாதிரி கிரீடம் இருக்காது என்று நினைக்கிறேன் ..தகுதி அடிப்படையில் கிரீடங்கள் இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்

மேவி... said...

"சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. "


ஆமாங்க ... சரித்திரம் எல்லாம் வெற்றி பெற்றவர்களின் பார்வையில் இருந்தே கூற படுகிறது ...... தோற்றவர்களின் பதிவுகள் பற்றி யாரும் கவலை படுவதில்லை .... வெற்றி பெற்றவர்கள் அதை எல்லாம் அழித்து விட்டார்கள் ........


ex: பல்லவ ராஜியத்தின் கடைசி காலத்தின் பதிவுகள் இல்லை

மேவி... said...

"பாதிக்கப்பட்ட சமணர்கள் சார்பாக எந்த ஒருபதிவும் இல்லை. ஒருவேளை யாரும் எழுத வில்லையா அல்லது அந்தப் பதிவுகள் சைவர்களால் தேடி அழிக்கப் பட்டனவா?"


கதை வடிவில் இருக்கிறது என்று நினைக்கிறேன் .......வெளி நாட்டு பயண கட்டுரையில் இருக்கலாம்

நாஞ்சில் நாதம் said...

நல்ல பகிர்தல். தகவல்களுக்கு நன்றி

ஆதவா said...

புத்தகக் கண்காட்சியில் அத்தனை தூரம் சுற்றியும் ஓவிய கண்காட்சியை பார்க்கமுடியாமல் போயிற்று.
பதிவு அருமை கார்த்திகைப் பாண்டியன்.