January 18, 2010

வினோத மனிதர்கள்..!!!

திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி. மாலை நேரம். இருட்டத் தொடங்கியிருந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணியை முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் தனியாக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது வந்து போகும் வாகனங்களைத் தவிர சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. சிறிது நேரம் கழித்து, நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதரொருவர், பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிமிண்டு திண்டில் வந்து உட்கார்ந்தார். ஏதாவது பேசலாம் என்று அவர் பக்கமாகத் திரும்பினேன். கவனிக்காதவர் போல சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். சரி.. தனிமை விரும்பி போல என்று நானும் அமைதியாகிவிட்டேன்.

சற்று நேரம் கழித்து என் பின்னாலிருந்து வினோதமான ஒரு சத்தம் கிளம்பியது. மோட்டார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது போல.. இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் ஒரு பன்றி உறுமுவதை அந்த ஒலி ஒத்திருந்தது. நான் சத்தம் வந்த பக்கமாகப் பார்த்தேன். வித்தியாசமாக எதுவும் புலப்படவில்லை. நமக்குத்தான் ஏதோ பிரம்மை என்று சமாதானம் செய்தவனாக பார்வையை சாலையில் ஓடவிட்டேன். மீண்டும் அதே சத்தம். எனக்கு பயமாகப் போய் விட்டது. பேருந்து நிறுத்தத்தில் அந்த மனிதரைத் தவிர ஈ காக்கா இல்லை. நான் அவரையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவன் அதிர்ந்து போனேன். அந்த மனிதர்தான் உதடுகளைக் குவித்து அப்படி சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான் கவனிப்பதை அவரும் பார்த்து விட்டார். அவர் கண்களில் ஒரு வலி தெரிந்தது. கைகளைக் கட்டிக் கொண்டார். சிரிக்க முயன்றார். முகத்தை திருப்பிக் கொண்டார். கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. எப்பாடு பட்டாவது சத்தம் போடாமல் இருக்க முயலுகிறார் என்பது அவருடைய செயல்களில் இருந்து புலப்பட்டது. ஆனாலும் உதடுகளில் இருந்து அந்த சத்தம் வருவதை அவரால் தடுக்க முடியவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. நான் இருப்பதால்தானே அவருக்கு இந்த சங்கடம்? அந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ வர சட்டென்று ஏறிக் கிளம்பி விட்டேன். இனிமேல் எனக்காக அவர் இத்தனை கஷ்டப்பட வேண்டாம் என்று மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

விடுதிக்கு திரும்பும் வழி எல்லாம் மனம் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. எங்கிருந்து அவருக்கு இந்த பழக்கம் வந்திருக்கும்? இவ்வாறு சத்தம் எழுப்புவது அவருடைய பிறவிக்குணமா இல்லை ஏதேனும் நோயா? தன்னுடைய குறையை எண்ணி அவர் எப்படி எல்லாம் மனம் நொந்திருக்கக் கூடும்? நான் இன்று அவரை பயத்துடன் பார்த்தது போல எத்தனை பேர் அவருடைய மனதை காயப்படுத்தி இருப்பார்கள்? உறவினர்களாலும், மற்றவர்களாலும் அவர் எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்டிருப்பார்? அவருடைய குடும்பத்தார் அவரின் இந்த பழக்கத்தை அல்லது நோயை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? கேள்விகள்..கேள்விகள்... கேள்விகள்.. ஆனால் பதில்கள்தான் என்னிடத்தில் இல்லை.

இதேபோன்ற வினோத மனிதர்கள் வேறு யாரையேனும் சந்தித்து இருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். தேவாரத்தில் இருக்கும் ரங்கசாமி தாத்தாவின் ஞாபகம் வந்தது. என்னுடைய அம்மாச்சியின் ஒன்று விட்ட அண்ணன் அவர். அவருக்கு மிகவும் விசித்திரமான பிரச்சினை ஒன்று இருந்தது. அது.. அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. என்ன பேசினாலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சிரித்து விடுவார். அவருடைய அப்பா இறந்து போன நாள் வரை, அது மற்றவர்களுக்கு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. எழவு வீட்டிலும் தாத்தா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க எல்லோரும் அவரை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவருக்கே தன்னுடைய பிரச்சினை அப்போதுதான் உரைக்க ஆரம்பித்து இருக்கிறது. அன்று முதல் அவர் தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டார். கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. ஒரு பூட்டிய அறைக்குள்ளேதான் இருப்பார். சாப்பாடு, தூக்கம் எல்லாம் அங்கேயேதான். வெளியில் வந்து யாரோடும் பேச மாட்டார்.

நான் ரங்கசாமி தாத்தாவை முதல்முதலில் பார்த்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. இருட்டான அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தவர் ஓடிவந்து என்னைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு தட்டாமாலை சுற்றினார். என்னைப் பார்த்ததற்காக ரொம்ப சந்தோஷப்பட்டார். தனக்கு ஏன் இப்படி ஆனது என்று தெரியவில்லை என்றும் எத்தனையோ வைத்தியம் பார்த்தும் இதைக் குணப்படுத்த முடியாமல் போனதால், மற்றவர்கள் எல்லாம் தன்னை பைத்தியம் என்று நினைத்து விடக்கூடும் என அஞ்சியே தன் வாழ்க்கையை ஒரு கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டதாகவும் சொன்னார். இதை சொல்லும்போதும் வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டே இருந்தார். எத்தனை நல்ல மனிதர் ஒரே ஒரு விஷயத்தால் இப்படி தன் வாழ்க்கையை தொலைக்க வேண்டியதாகி விட்டதே? அவரின் நிலையை எண்ணி அழத் தொடங்கியவனை கடைசியில் அவர் சமாதானம் செய்ய வேண்டி இருந்தது.

வித்தியாசமான பழக்கம் கொண்ட இன்னொரு மனிதரைப் பற்றியும் நான் சொல்ல தோன்றுகிறது. என்னுடைய கல்லூரியில் வேலை பார்த்தவர் அந்த விரிவுரையாளர். புத்தகங்களை கணக்கு வழக்கின்றி சேகரிக்கும் வினோத பழக்கம் அவருக்கு இருந்தது. இதில் என்ன வினோதம் என்கிறீர்களா? அவர் அந்தப் புத்தகங்களில் ஒன்றைக் கூட படிக்க மாட்டார். ஒரு புத்தகம் நன்றாக இருக்கிறது என்று யாரேனும் சொல்லி விட்டால் போதும்.. உடனே அந்தப் புத்தகத்தை வாங்கி விடுவார். என்ன மொழி, என்ன பயன்பாடு என்றெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார். சரி.. மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்வார் என்று பார்த்தால் அதுவும் கிடையாது. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததால்தான் எனக்கே இந்த விஷயம் தெரிய வந்தது. ஒரு முறை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் கேட்டே விட்டேன். பதிலாக ஒரே ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது. இப்போது அவர் எங்கே இருக்கிறார்.. வாங்கிய புத்தகங்களை என்ன செய்தார்.. இன்னும் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறாரா? தெரியவில்லை.

தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்? அதில் இது போல எத்தனை விசித்திரமான மனிதர்களும், வினோத பழக்கங்களும் இருக்கக் கூடும்? நான் பார்த்த விஷயத்தையும், என்னுடைய சிந்தனைகளையும் விடுதி அறையில் என்னோடு தங்கியிருந்த நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் உளவியலில் மிகுந்த நாட்டம் கொண்டவர். நான் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டவர், மெலிதாக சிரித்தார்.

"ஏன் நண்பா.. சிரிக்கிறீங்க.."

"இல்ல தலைவரே.. வித்தியாசமான மனிதர்களா பார்த்திருக்குறதா சொல்றீங்களே.. அத நினைச்சுதான் சிரிச்சேன்.."

"இதுல சிரிக்க என்ன இருக்கு?"

"உண்மைய சொல்லனும்னா எல்லா மனுஷங்களுமே விநோதமானவங்கதானே.."

"எனக்கு புரியல நண்பா.."

"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. போட்டி, பொறாம.. ஒருத்தன் நல்லா இருந்தா இன்னொருத்தன் வயிறு எரியுறது.. பக்கத்து நாடு கூட.. வீட்டுக்குள்ள.... சக மனுஷன் கிட்ட.. எங்க பார்த்தாலும் சண்ட.. மதத்த சொல்லி.. இருக்குதா இல்லையான்னு தெரியாத சாமியோட பெயர சொல்லி.. அப்புறம் காசு, பணம்.. மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு.. அவன் படைச்ச காசுக்கு அவனே அடிமை ஆகிட்டான்.. அன்புன்னா என்னான்னு கேட்கிறான்.. எதுக்காக இந்த வாழ்க்கை.. என்னத்த தேடி போறோம்னு தெரியாமையே ஓடிக்கிட்டு இருக்கோம்.. இங்க யார் நிம்மதியா இருக்கா.. சொல்லுங்க பார்ப்போம்.. எல்லாத்துக்கும் மேல.. உனக்கு வாழ்க்கைய கொடுத்த இயற்கைய நீயே அழிக்கத் துணிஞ்சிட்ட.. இன்னும் கொஞ்ச நாள்ல இங்க எதுமே மிச்சம் இருக்காது.. ஒரு வேளை சோத்துக்கு மனுஷங்க அடிச்சிக்கிட்டு சாகப் போறாங்க.. இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும்தானே.. அப்போ நாம எல்லோருமே விநோதமானவங்கதானே?"

நிப்பாட்டாமல் பொரிந்து தள்ளி விட்டார். நான் பதில் சொல்ல முடியாமல் பேயறைந்தவன் போல நின்றேன். கேள்விகளின் வீரியம் முழுவதுமாய் எனக்கு உரைக்க சற்று நேரம் ஆனது. அவர் சொன்னது எதுவுமே பொய் இல்லையே? அப்படி ஒரு வாழ்க்கையைத்தானே நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இந்த லட்சணத்தில் நாம் எங்கே மற்றவர்களை விநோதர்கள் என்று சொல்வது? கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். பிறகு எதுவும் பேசாமல் அவர் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் தூங்கியும் போனார். ஜன்னலின் வழியே வானத்தைப் பார்த்தேன். ஒரே இருட்டாக இருந்தது. எங்கேனும் நட்சத்திரக் கீற்றுகள் தென்படுகின்றனவா எனத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. ஆயாசம் நிரம்பி வழிய, கனத்த மனதுடன் போர்வையை இழுத்து மூடியவனாக தூங்கிப் போனேன்..!!

27 comments:

மேவி... said...

raittu

padichittu varen

மேவி... said...

ai me the 1st

சங்கர் said...

அண்ணே, அந்த ப்ரொபசர் எங்க இருக்காருன்னு கண்டுபிடிங்க, போய் அந்த புத்தகத்தை எல்லாம் அள்ளிட்டு வந்திடலாம் :))

கண்ணா.. said...

எங்க காலேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க...அதான் அருமையா வந்துருக்கு...


:)

நல்ல பதிவு கார்த்தி....மிகவும் ரசித்தேன்

M.G.ரவிக்குமார்™..., said...

"வேடிக்கை மனிதர்கள்"னு பாரதியார் இவங்களைத் தான் சொல்றாரோ?...இதே போல் புராணங்களில் வரும் சிலரை நான் அலசியிருக்கேன்!கர்ணனே தன்னை எல்லாரும் சூதன் மகன்னு சொல்றதை மாத்தத்தான் தர்மம் பண்ணவே ஆரம்பிச்சான்!........

Balakumar Vijayaraman said...

நிச்சயமாக, எல்லோரும் விநோதமாகத் தான் இருக்கோம்.

எஸ்.ரா ரொம்ப பாதிக்கிறார் போல,,, நடை நெருங்கி வருது, வாழ்த்துக்கள்.

அப்புறம், எங்க கல்லூரி எப்படி இருக்கு, ஏதாவது சேதி சொல்லிவிட்டுச்சா? :)

vasu balaji said...

நல்ல பகிர்வு. நானும் இப்படி நிறைய பர்த்து யோசித்திருக்கிறேன்.

sathishsangkavi.blogspot.com said...

//"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. //

இது உண்மைன்னு படுதுங்க...

Pradeep said...

Really good post....real thoughts....its true.....

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ரொஃபசர் நிறைய பாடங்கள் கத்துக்குடுக்குறீங்க...

பெரியவர் சங்கோஜமா நினைக்கிறார் என்று நினைத்து ஆட்டோபிடித்து சென்றது எனக்கு நல்ல மனித பண்பை கற்றுகொடுக்கிறது ப்ரொஃபசர்...

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

விநோதம் - இது என்ன - ஒவ்வொருவரையும் பார்க்கும் போது ஒன்று வினோதமாகத் தோன்றும் - நமக்கு வினோதமாகத் தோன்றும் ஆனால் நம்மிடம் நம்மை அறியாமலெயே இருக்கும் வினோதம் நமக்குத் தெரியாது. இதுதான் உண்மை நிலை

நல்வாழ்த்துகள் கார்த்தி

மேவி... said...

விநோதமான மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் ..... எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் விநோதமானவர்கள் தான்..... அத்தனை ஏற்று ....புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்ல இருக்கும்.......


பணம் - நான் என்றுமே இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டது இல்லை ..... எனக்கு பணத்தின் மேல் ஆசையே இல்லை ... நூறு ரூபாய்க்கு மேல் என் கையில் என்றும் நான் வைத்து கொண்டது இல்லை...

மற்றவை போன் ல சொல்லுறேன்


கடைசியாக ACCEPT LIFE AND HUMANS AS THEY ARE ........ ENJOY LIVING

Anonymous said...

//எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. போட்டி, பொறாம.. ஒருத்தன் நல்லா இருந்தா இன்னொருத்தன் வயிறு எரியுறது.. பக்கத்து நாடு கூட.. வீட்டுக்குள்ள.... சக மனுஷன் கிட்ட.. எங்க பார்த்தாலும் சண்ட.. மதத்த சொல்லி.. இருக்குதா இல்லையான்னு தெரியாத சாமியோட பெயர சொல்லி.. அப்புறம் காசு, பணம்.. மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு.. அவன் படைச்ச காசுக்கு அவனே அடிமை ஆகிட்டான்.. அன்புன்னா என்னான்னு கேட்கிறான்.. எதுக்காக இந்த வாழ்க்கை.. என்னத்த தேடி போறோம்னு தெரியாமையே ஓடிக்கிட்டு இருக்கோம்.. இங்க யார் நிம்மதியா இருக்கா.. சொல்லுங்க பார்ப்போம்.. எல்லாத்துக்கும் மேல.. உனக்கு வாழ்க்கைய கொடுத்த இயற்கைய நீயே அழிக்கத் துணிஞ்சிட்ட.. இன்னும் கொஞ்ச நாள்ல இங்க எதுமே மிச்சம் இருக்காது.. ஒரு வேளை சோத்துக்கு மனுஷங்க அடிச்சிக்கிட்டு சாகப் போறாங்க.. இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும்தானே.. அப்போ நாம எல்லோருமே விநோதமானவங்கதானே?"//

அப்பட்டமான உண்மை இதை உணர்ந்தாலாவது நம்மில் மாற்றம் ஏதேனும் ஏற்படுமா?

அந்த பெரியவரின் நோயாவது குணப்படுத்தப்படும் ஆனால் மனிதனின் இந்த குணாதிசயம் மாறுபடாது அதனால் தான் நாம் மனிதர்களோ?.. நல்ல பகிர்வு..

Raju said...

க.க.போ...!

Romeoboy said...

எல்லா இடத்திலையும் வினோதம் சூழ்ந்து இருக்கிறது தான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
raittu padichittu varen//

முழுசா படிங்கப்பு..;-))))

//சங்கர் said...
அண்ணே, அந்த ப்ரொபசர் எங்க இருக்காருன்னு கண்டுபிடிங்க, போய் அந்த புத்தகத்தை எல்லாம் அள்ளிட்டு வந்திடலாம் :))//

சுத்தமா தொடர்பு இல்ல நண்பா..

// கண்ணா.. said...
எங்க காலேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க...அதான் அருமையா வந்துருக்கு...:)நல்ல பதிவு கார்த்தி....மிகவும் ரசித்தேன்//

ஆகா.. நீங்களும் நம்ம இனம் (பொறியியல்) தானா?தூள்.. ரசிச்சதுக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசன்..., said...
"வேடிக்கை மனிதர்கள்"னு பாரதியார் இவங்களைத் தான் சொல்றாரோ?... இதே போல் புராணங்களில் வரும் சிலரை நான் அலசியிருக்கேன்!கர்ணனே தன்னை எல்லாரும் சூதன் மகன்னு சொல்றதை மாத்தத்தான் தர்மம் பண்ணவே ஆரம்பிச்சான்!........//

நீங்களும் எழுதுங்க நண்பா..

//வி.பாலகுமார் said...
நிச்சயமாக, எல்லோரும் விநோதமாகத் தான் இருக்கோம். எஸ்.ரா ரொம்ப பாதிக்கிறார் போல,,, நடை நெருங்கி வருது, வாழ்த்துக்கள். அப்புறம், எங்க கல்லூரி எப்படி இருக்கு, ஏதாவது சேதி சொல்லிவிட்டுச்சா? :)//

எஸ்ரா தானே நண்பா நம்ம எழுத்தோட ஆதாரமே.. உங்க கல்லூரி நல்லாவே இருக்கு.. நேரில் பார்க்கும்போது விரிவா சொல்றேன்..

//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு. நானும் இப்படி நிறைய பர்த்து யோசித்திருக்கிறேன்.//

நன்றி பாலா சார்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sangkavi said...
"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. இது உண்மைன்னு படுதுங்க...//

நிதர்சனம் இதுதானே நண்பா

// Pradeep said...
Really good post....real thoughts....its true.....//

நன்றி நண்பரே

//பிரியமுடன்...வசந்த் said...
ப்ரொஃபசர் நிறைய பாடங்கள் கத்துக்குடுக்குறீங்க... பெரியவர் சங்கோஜமா நினைக்கிறார் என்று நினைத்து ஆட்டோபிடித்து சென்றது எனக்கு நல்ல மனித பண்பை கற்றுகொடுக்கிறது ப்ரொஃபசர்...//

நன்றி வசந்த்.. உண்மைய சொல்லணும்னா உத்துப்பார்த்து அவரை சங்கடப்படுத்தினதும் நான்தானே.. நம்மளால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு சங்கடம் தராம இருந்தாலே போதும்நண்பா

//cheena (சீனா) said...
அன்பின் கார்த்தி விநோதம் - இது என்ன - ஒவ்வொருவரையும் பார்க்கும் போது ஒன்று வினோதமாகத் தோன்றும் - நமக்கு வினோதமாகத் தோன்றும் ஆனால் நம்மிடம் நம்மை அறியாமலெயே இருக்கும் வினோதம் நமக்குத் தெரியாது. இதுதான் உண்மை நிலை
நல்வாழ்த்துகள் கார்த்தி//

ஆமா ஐயா.. வாழ்த்துக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
விநோதமான மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் ..... எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் விநோதமானவர்கள் தான்..... அத்தனை ஏற்று ....புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்ல இருக்கும்.......
பணம் - நான் என்றுமே இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டது இல்லை ..... எனக்கு பணத்தின் மேல் ஆசையே இல்லை ... நூறு ரூபாய்க்கு மேல் என் கையில் என்றும் நான் வைத்து கொண்டது இல்லை...மற்றவை போன் ல சொல்லுறேன் கடைசியாக ACCEPT LIFE AND HUMANS AS THEY ARE ........ ENJOY LIVING//

thats the attitude.. well said mayvee..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழரசி said...
அப்பட்டமான உண்மை இதை உணர்ந்தாலாவது நம்மில் மாற்றம் ஏதேனும் ஏற்படுமா?//

மாறணும்னு ஆசை இருக்கு சகோதரி.. ஆனால் உண்மை நிலை வேறாகத்தான் இருக்கிறது..

//♠ ராஜு ♠ said...
க.க.போ...!//

அது..:-)

//|| Romeo ||| said...
எல்லா இடத்திலையும் வினோதம் சூழ்ந்து இருக்கிறது தான்.//

உண்மைதான் நண்பா.. நன்றி..

தருமி said...

ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள். என் வயசிலகூட இப்படி ஒரு அனுபவம் வாய்த்ததில்லையே!

Anbu said...

நல்ல பதிவு அண்ணா

குமரை நிலாவன் said...

//மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு//
//என்னத்த தேடி போறோம்னு தெரியாமையே ஓடிக்கிட்டு இருக்கோம்.. இங்க யார் நிம்மதியா இருக்கா.. //

உண்மை தான் நண்பா

க.பாலாசி said...

உண்மைதாங்க தலைவரே... நாம எல்லாரையும் வித்யாசமா வினோதமா பாக்குறோம். ஆனாலும் நம்மகிட்டையும் ஒரு வினோதம் குடியிருக்கத்தான் செய்யுது. அந்த வினோதத்தைக்கண்டு ஒவ்வொருவரும் மாற முயற்சித்தால் உங்க தாத்தா மாதிரி இருட்டறைக்குள்ளதான் நம்ம வாழ்க்கையும் கழியும். எல்லா மனிதர்களுமே அப்டி இருக்கறதாலத்தான் நாமளும் எல்லாரோடையும் வாழ்ந்துகிட்டிருக்கோம் இருட்டான வெளிச்சத்துல.

நல்ல இடுகை...

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள். என் வயசிலகூட இப்படி ஒரு அனுபவம் வாய்த்ததில்லையே!//

ஆச்சரியம்தான் ஐயா.. ஆனா வாழ்க்கையே அப்படித்தானே.. இது போன்ற எதிர்பார்க்காத விஷயங்கள் சில நேரங்களில் எல்லாருக்கும் பார்க்க கிடைப்பதில்லை..

//Anbu said...
நல்ல பதிவு அண்ணா//

நன்றி அன்பு

//குமரை நிலாவன் said...
உண்மை தான் நண்பா//

வருத்தப்பட வேண்டிய... உண்மை.. இல்லையா நண்பா?

//க.பாலாசி said...
உண்மைதாங்க தலைவரே... நாம எல்லாரையும் வித்யாசமா வினோதமா பாக்குறோம். ஆனாலும் நம்மகிட்டையும் ஒரு வினோதம் குடியிருக்கத்தான் செய்யுது. அந்த வினோதத்தைக் கண்டு ஒவ்வொருவரும் மாற முயற்சித்தால் உங்க தாத்தா மாதிரி இருட்டறைக்குள்ளதான் நம்ம வாழ்க்கையும் கழியும். எல்லா மனிதர்களுமே அப்டி இருக்கறதாலத்தான் நாமளும் எல்லாரோடையும் வாழ்ந்துகிட்டிருக்கோம் இருட்டான வெளிச்சத்துல. நல்ல இடுகை...//

இன்னும் உண்மைய சொல்லனும்னா இதெல்லாம் மாத்த முயற்சி பண்ணினாத்தான் இந்த சமூகம் நம்மள வினோதமாப் பார்க்குது நண்பா..

தென்றல் said...

'எஸ்.ரா' எழுத்தை படித்ததுபோல் ஓர் உணர்வு!

நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் கார்த்தி!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//தென்றல் said...
'எஸ்.ரா' எழுத்தை படித்ததுபோல் ஓர் உணர்வு!நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் கார்த்தி!!//

ரொம்ப நன்றிங்க..:-)))