February 3, 2010

கனவு நிஜமானது - டாக்டர் ஷாலினிக்கு நன்றி..!!!

சந்தோஷமாக இருக்கிறேன் என்னும் ஒற்றை வார்த்தையின் மூலம் என்னுடைய உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலாது. அத்தனை சந்தோஷமாக உணர்கிறேன். மதுரையில் "குழந்தைகள் மனநலம்" பற்றிய கருத்தரங்கத்தை டாக்டர்.ஷாலினியின் தலைமையில் நடத்த வேண்டும் என்பது மதுரைப் பதிவர்கள் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த விஷயம். அதை ஒரு கனவு என்று கூட சொல்லலாம். சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தக் கனவு நிஜமானது.



செப்டம்பரின் ஒரு அருமையான மாலைப்பொழுதில் இந்த நிகழ்ச்சிக்கான விதை தூவப்பட்டது. சமூகத்துக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று மதுரை பதிவுலக நண்பர்கள் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற "குட் டச் பேட் டச்" நிகழ்ச்சியை மதுரையில் நடத்தலாம் என முடிவானது. ஆனால் டாக்டர்.ஷாலினியின் தேதிகள் கிடைப்பது சிக்கலாகிப் போனது. முதல் முறையாக நாம் நடத்தலாம் என முடிவு செய்த விஷயம் என்பதால் அதை மாற்றவும் மனம் வரவில்லை. நல்லதே நினைப்போம், நல்லது நடக்கும்" என்னும் நம்பிக்கையோடு பொறுமை காத்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. கடைசியாக ஜனவரி31 அன்று நிகழ்ச்சியை நடத்துவதென முடிவானது.

31-01-10 - 7:00 AM

"பொதிகையில்" டாக்டர்.ஷாலினி வந்து இறங்கினார். தருமி ஐயாவும், நண்பர் ஸ்ரீதரும் அவரை வரவேற்று அமெரிக்கன் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் புகைவண்டி நிலையத்துக்குப் போக இயலவில்லை. கருத்தரங்கம் நடத்துவதற்காக செமினார் ஹாலைத் தந்து உதவிய அமெரிக்கன் கல்லூரி நிர்வாகமே டாக்டர் தங்குவதற்காக விருந்தினர் விடுதியையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலை சிற்றுண்டிக்கு எல்லோரும் சந்திப்பது என முடிவானது.



9:00 AM

நான் அமெரிக்கன் கல்லூரியை அடைந்தபோது தருமி ஐயா ஏற்கனவே வந்திருந்தார். டாக்டரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். போனில் அவரின் குரலைக் கேட்டு கொஞ்சம் டரியலாகிப் போயிருந்தேன். ஆள் கொஞ்சம் கெத்து காமிப்பார் போல என்று எண்ணியிருந்தேன். ஆனால் நேரில் என்னுடைய கணிப்புக்கு அப்படியே எதிர்ப்பதமாக இருந்தார் ஷாலினி. ரொம்பவே சாப்ட் டைப் - எளிமை. கலகலப்பாக பேசினார். கொஞ்ச நேரத்தில் ஸ்ரீதரும் வந்து சேர்ந்தார். மீனாட்சி பவனில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திருமலை மன்னரின் அரண்மனைக்கு கிளம்பினோம். அங்கே எடுத்த சில போட்டோக்கள்..






11:00 AM

டாக்டரை மீண்டும் விடுதியில் தங்க வைத்து விட்டு கல்லூரிக்கு திரும்பினோம். கல்லூரி வாசலில் கட்ட வேண்டிய பிளக்சை பிரகஸ்பதி வழக்கம் போல வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்தது. (வேற யாரு.. நானேதான்..) அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது நண்பர் ஜாபர் ஈரோட்டில் இருந்து வந்து விட்டதாக அலைபேசினார். அவரை கூப்பிட்டுக் கொண்டு கல்லூரிக்கு வந்து சேர்ந்தபோது நண்பர் வால்பையனும் வந்து விட்டிருந்தார்.

2:00 PM

மதிய உணவுக்கு அண்ணா நகர் தாய் ரெஸ்டாரண்டுக்குப் போனோம். எங்களுக்குள் பேசுவதற்கான விஷயங்கள் நிறையவே இருந்தன. ஷாலினி இப்பொது சமண மதம் பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாராம். அதைப்பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஓரளவுக்கு மக்கள் கூட்டம் வந்த பிறகு டாக்டரை அழைத்து வரலாம் என முடிவு செய்தோம். சாப்பிட்டுமுடித்து அவரை விடுதியில் விட்டுவிட்டு செமினார் ஹாலுக்கு கிளம்பினோம்.

3:00 PM

அதை அதிர்ச்சி என்று சொல்லுவதா இல்லை பேரதிர்ச்சி என்று சொல்லுவதா? ஹாலில் மொத்தம் மூன்றே பேர்தான் இருந்தார்கள். சீனா ஐயா, ஜெரி மற்றும் அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த நண்பரொருவர். எனக்கு பேச்சே வரவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நூறு பேர் வருவார்கள் என்றெண்ணிக் கொண்டிருந்த நிலையில் வெறும் மூன்று பேர் மட்டும் இருந்தால் மண்டை காயுமா காயாதா? நானும் நம்பர் ஜாபரும் நிறைய பதட்டத்துடன் கல்லூரி வாசலில் வந்து நின்று கொண்டிருந்தோம். வருவோர் போவோர் முகத்தை எல்லாம் பார்த்து இவர்கள் நம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களாக இருப்பர்களோ என்று அடித்துக் கொண்டது மனது. சற்று நேரம் கழித்து ஒன்றிரண்டு பேர் என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வரத் துவங்கியபின்தான் நிம்மதி ஆனது.

3:30 PM

அரங்கத்தில் ஐம்பது பேர் கிட்டே இருந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது. சீனா ஐயா நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, கா.பா.. அட நான்தானப்பா.. வரவேற்புரை வழங்கினார். குழந்தைகள் மனநலம், பெண்களின் அடிப்படை உடற்கூறுகள், குட் டச் பேட் டச் எனப் பல விஷயங்களை பற்றி எளிமையாக விளக்கினார் ஷாலினி. தவறுகளை செய்பவர்களை விட இடம்கொடுப்பவர்கள் அதிகமாக இருப்பதாலேயே பிரச்சினைகள் ஜாஸ்தி ஏற்படுகின்றன என்றவர் பல எடுத்துக்காட்டுகளையும் கூறினார். குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கும்போது ஜனன உறுப்புகளைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசி முடித்தார். அவர் முடிக்கும்போது அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி விட்டிருந்தது.




5:00 PM

ஒரு சிறிய தேநீர் இடைவேளைக்குப் பிறகு கேள்வி நேரம் தொடங்கியது. நேரில் கேட்க சங்கோஜமாக இருக்கக்கூடிய கேள்விகளை மக்கள் எழுதித் தந்தார்கள். அதை நண்பர் காவேரிகணேஷ் வாசிக்க டாக்டர் பதில் சொல்லத் தொடங்கினார். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஷாலினி நல்லதொரு மனநல மருத்துவர் என்பதோடு மட்டுமல்லாது இதிகாசங்களையும் கரைத்துக் குடித்தவராக இருக்கிறார். தனக்கு தேவையான இடங்களில் அருமையான உதாரணங்களோடு அவர் இதிகாசக் கதைகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.




குழந்தைகள் மனநலம் மட்டும் என்றிராமல் நிறைய பொதுவான கேள்விகளும் கேட்கப்பட்டன. அனைத்துக்கும் டாக்டர் சலிக்காமல் பதில் சொன்னார். இந்தக் கேள்வி பதில் நேரமே சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆண்கள் எல்லாம் ஹாலை விட்டு வெளியேறி விட, பெண்கள் மட்டும் டாக்டருடன் தனிப்பட்ட முறையில் ஒரு அரை மணி நேரம் உரையாடினார்கள். மொத்தத்தில் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தபோது மணிஏழரையைத் தாண்டி விட்டிருந்தது.




நாலு மணி நேரம். ஒரு சின்ன சலிப்பு கூட இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தினார் ஷாலினி. அருமையாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் வால்பையனும், காரைக்குடியில் இருந்து வந்திருந்த நண்பர் "தமிழ்த்துளி" தேவன்மாயமும் டாக்டர்.ஷாலினிக்கு ஒரு நினைவுப் பரிசினை அளித்தார்கள். தருமி ஐயா நன்றியுரை ஆற்றினார். பதிவர்கள் அனைவரும் டாக்டருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். இன்னும் சில புகைப்படங்கள் உங்களுக்காக..







இரவு உணவை முடித்துக் கொண்டு புகைவண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். டாக்டருக்காக "பாண்டியனில்" டிக்கட் புக் செய்யப்பட்டு இருந்தது. திருநெல்வேலி லக்ஷ்மி விலாசின் ஸ்பெஷல் இனிப்புகளை டாக்டருக்கு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தோம். அவர் கிளம்பிய பின்பு தருமி ஐயா சொன்ன வார்த்தைகள் ... "நல்லாத் தெரிஞ்ச நண்பர் ஒருத்தரோடப் பழகுன மாதிரியே இருந்தது.. போகுரப்ப மனசுக்கு சங்கடமாப் போச்சு..இல்ல?" சத்தியமான வார்த்தைகள். It was an wonderful experience. Thanks a lot Dr.Shalini.

நன்றிகள் பல..

நன்றி என்று சொல்லி உங்களை எல்லாம் அந்நியப்படுத்த விரும்பவில்லை.. இருந்தாலும்..

கடைசி நேர அவசரத்தில் டிக்கட் எடுக்கவும், அதை கன்பார்ம் செய்து கொடுக்கவும் பேருதவி செய்த அண்ணன் "வானம்பாடிகள்" பாலாவுக்கு ரொம்ப நன்றி.

பதிவுகளின் மூலம் இந்த நிகழ்ச்சி இன்னும் பலர் சென்றடைய உதவிய கேபிள் சங்கர், ராஜூ, ஈரோடு கதிர், நர்சிம், ஈரோடு பதிவர் குழுமம் ஆகியோருக்கு மதுரைப் பதிவர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுக்காக சிரமம் பார்க்காமல் வந்த நண்பர் வெயிலானுக்கும் நன்றி.

நாங்களும் எங்கள் பங்களிப்பை செய்வோம் என்று உதவிய நண்பர்கள் ஆ.ஞானசேகரனுக்கும், வால்பையனுக்கும், ராஜாவுக்கும், அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த ரவிக்கும் நன்றி.

நிகழ்வை நல்ல முறையில் நடத்த தோள்கொடுத்த அமெரிக்கன் கல்லூரிக்கும் நன்றி.

இறுதியாக, கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்.. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியம் ஆகி இருக்காது. ரொம்ப நன்றி.

மதுரைப் பதிவர்கள்

இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிதாக சில மதுரைப் பதிவர்களின் அறிமுகமும் கிடைத்தது.

மதுரை சரவணன்

வெற்றி

காவேரிகணேஷ்

எம்.பிரபு

ஸ்ரீவித்யா

அன்போடு வழிநடத்தும் தருமி ஐயா மற்றும் சீனா ஐயா, தோள் கொடுக்கும் தோழர்கள் பாலகுமார், ஜெரி, ஸ்ரீதர், ஜாலிஜம்பர், சுந்தர்... அருமையான பதிவுலக நட்புகள்... நாமும் நம்மால் இயன்றதை செய்ய முடிகிறதே என்று சந்தோசம்... போதும்.

நாங்கள் ஏற்கனவே சொன்னது போல இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்றே நம்புகிறோம்..!!!

தொடர்புடைய நண்பர்களின் இடுகைகள்

மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம் - தொகுப்பு - புகைப்படங்கள் (காவேரிகணேஷ்)

மதுரை கருத்தரங்கம் - ஒரு அரைகுறைப் பார்வை
(வெற்றி)

டாக்டர் ஷாலினி (தேவன்மாயம்)

42 comments:

Thamiz Priyan said...

மிக்க மகிழ்வாக இருந்தது. மருத்துவர் ஷாலினிக்கு நன்றிகள். இந்தியாவில் இருந்திருந்தால் இந்த நல்ல கணத்தை தவற விட்டு இருக்க மாட்டேன்..

Ganesan said...

பதிவு நேர்த்தியாக உள்ளது.

உண்மை தான் கா.பா மருத்துவர் ஷாலினியின் எளிமை வியக்க வைத்தது.

மதுரை கருத்தரங்கம் பற்றிய என் பதிவு.

http://kaveriganesh.blogspot.com

வடுவூர் குமார் said...

அட‌! ம‌க்க‌ளுக்கு தேவையான‌ ஒரு நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்தி முடித்திருக்கிறீர்க‌ள் இந்தாருங்க‌ள் ஒரு பூச்செண்டு.

vasu balaji said...

:) அருமையான தொகுப்பு. நேரில் கலந்துகொண்ட திருப்தி. பாராட்டுகள் இந்த அசத்தலான தொடக்கத்துக்கு.

மணிஜி said...

தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வாழ்த்துக்கள்!!

sathishsangkavi.blogspot.com said...

இது போல் நிறைய நல்ல விசயங்கள் செய்ய எனது வாழ்த்துக்கள்....

புகைப்படத்தை பார்த்தவுடன் மிஸ் செய்துவிட்டோம் என்ற வருத்தம் மனதில்...

குடந்தை அன்புமணி said...

நினைத்தது போலவே நடத்திக் காட்டிவிட்டீர்கள். பாராட்டுகள்... உங்களுக்கும்- உங்களுடன் பணியாற்றிய அனைவருக்கும்!

Raju said...

மதுரைல இல்லாததற்கு வருத்தப்படுறேன் வாத்யாரே..!

அண்ணாமலையான் said...

உங்கள் அனைவரின் நல் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.. தொடர்ந்து அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்......

SK said...

நன்றி நண்பா. விரிவான பதிவிற்கு மேலும் ஒரு நல்ல நிகழ்ச்சி அமைய உழைத்தமைக்கு. தொடரட்டும்..

க.பாலாசி said...

வழக்கம்போல் 31 ஆபிஸ்... வரயிலவில்லை. முன்பே உங்களிடம் சொல்லமுடியவில்லை.

இந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய மதுரைப்பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

ஸ்ரீவித்யா பேரு மட்டும் விட்டு போச்சு தல!

அவரும் மதுரை பதிவர் தான்!

Balakumar Vijayaraman said...

"...miles to go, before we sleep.
no time to stand and stare..."

:) we have started, lets continue the journey.

குமரை நிலாவன் said...

மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு
நன்றிகள்

இந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய மதுரைப்பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்


//இந்தியாவில் இருந்திருந்தால் இந்த நல்ல கணத்தை தவற விட்டு இருக்க மாட்டேன் //
கண்டிப்பாக நானும்

கண்ணகி said...

நல்லதொரு நிகழ்வை ஆரம்பித்துவைத்த மதுரை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ் பிரியன் said...
மிக்க மகிழ்வாக இருந்தது. மருத்துவர் ஷாலினிக்கு நன்றிகள். இந்தியாவில் இருந்திருந்தால் இந்த நல்ல கணத்தை தவற விட்டு இருக்க மாட்டேன்..//

நன்றி நண்பா.. நீங்க சொல்றதக் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு

//காவேரி கணேஷ் said...
பதிவு நேர்த்தியாக உள்ளது. உண்மை தான் கா.பா மருத்துவர் ஷாலினியின் எளிமை வியக்க வைத்தது. //

நீங்களா வந்து கலந்துக்கிட்டு, நிகழ்ச்சியில் வேண்டிய உதவிகள் செய்து.. ரொம்ப நன்றி தலைவரே

//வடுவூர் குமார் said...
அட‌! ம‌க்க‌ளுக்கு தேவையான‌ ஒரு நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்தி முடித்திருக்கிறீர்க‌ள் இந்தாருங்க‌ள் ஒரு பூச்செண்டு.//

நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

// வானம்பாடிகள் said...
:) அருமையான தொகுப்பு. நேரில் கலந்துகொண்ட திருப்தி. பாராட்டுகள் இந்த அசத்தலான தொடக்கத்துக்கு.//

நிகழ்வு நன்றாக நடத்தில் உங்க பங்களிப்பும் இருக்கு பாலா சார்..:-))

// தண்டோரா ...... said...
தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வாழ்த்துக்கள்!!//

கண்டிப்பா மணிஜி..:-)))

//Sangkavi said...
இது போல் நிறைய நல்ல விசயங்கள் செய்ய எனது வாழ்த்துக்கள்.... புகைப்படத்தை பார்த்தவுடன் மிஸ் செய்துவிட்டோம் என்ற வருத்தம் மனதில்...//

வாழ்த்துக்கு நன்றி.. மறக்காம அடுத்த தடவ ஆட்டத்துல கலந்துக்கோங்க நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
நினைத்தது போலவே நடத்திக் காட்டிவிட்டீர்கள். பாராட்டுகள்... உங்களுக்கும்- உங்களுடன் பணியாற்றிய அனைவருக்கும்!//

நன்றி தலைவரே :-)))))))

//♠ ராஜு ♠ said...
மதுரைல இல்லாததற்கு வருத்தப்படுறேன் வாத்யாரே..!//

கவலைப்பட வேண்டாம் டக்கு.. நீ எங்க கூடத்தான் இருக்க..

//அண்ணாமலையான் said...
உங்கள் அனைவரின் நல் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.. தொடர்ந்து அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்......//

ரொம்ப நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//SK said...
நன்றி நண்பா. விரிவான பதிவிற்கு மேலும் ஒரு நல்ல நிகழ்ச்சி அமைய உழைத்தமைக்கு. தொடரட்டும்..//

இதன் ஆணிவேர் நீங்கள்தான் தல.. உங்களுக்கு எங்கள் நன்றி..

//க.பாலாசி said...
வழக்கம்போல் 31 ஆபிஸ்... வரயிலவில்லை. முன்பே உங்களிடம் சொல்லமுடியவில்லை.
இந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய மதுரைப்பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..//

பரவாயில்லை பாலாஜி.. புரிந்த கொள்ள முடிகிறது.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி

//வால்பையன் said...
ஸ்ரீவித்யா பேரு மட்டும் விட்டு போச்சு தல!அவரும் மதுரை பதிவர் தான்!//

ஆகா.. ஆமா தல.. சேத்துடுறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வி.பாலகுமார் said...
"...miles to go, before we sleep.
no time to stand and stare..."

:) we have started, lets continue the journey.//

sure buddy.. we go forward with our hands clutched together..:-))))

//குமரை நிலாவன் said...
மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு
நன்றிகள் இந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய மதுரைப்பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்//

எல்லாம் உங்களோட நல்வாழ்த்துகள் காரணமாத்தான் நண்பா

//கண்ணகி said...
நல்லதொரு நிகழ்வை ஆரம்பித்துவைத்த மதுரை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

இந்த நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்தவர்கள் சென்னைப் பதிவர்கள்தான் சகோதரி..

உங்கள் வாழ்த்துக்கு நன்றி..:-))))

☼ வெயிலான் said...

சாதித்திருக்கிறீர்கள் கார்த்தி!

தொடர வாழ்த்துக்கள்!

சாலிசம்பர் said...

நல்லதொரு நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.

சொல்லரசன் said...

இதற்காக உழைத்த மதுரை பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

வாழ்த்துக்கள் இது பலரை இது மாதரியான நிகழ்வுகளை நடத்த தூண்டுதலாய் இருக்கும். நல்ல முன் மாதிரி.

தேவன் மாயம் said...

தொகுப்பு நல்லா வந்துள்ளது கார்த்தி!!

வெற்றி said...

காலையில் இருந்தே உழைத்து கொண்டிருந்தீர்களா ?
Hats off !

சிநேகிதன் அக்பர் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

kailash,hyderabad said...

உங்களுக்கும் இந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய மதுரைப்பதிவர்களுக்கும் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.நன்றிகள்.ஓட்டு போட்டுட்டேன் (இந்த நல்ல பதிவுக்கு கூட ஒரு மைனஸ் ஓட்டா?).

malarvizhi said...

பதிவு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//☼ வெயிலான் said...
சாதித்திருக்கிறீர்கள் கார்த்தி! தொடர வாழ்த்துக்கள்!//

நன்றி தலைவரே..

//சாலிசம்பர் said...
நல்லதொரு நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.//

:-))))))))

// சொல்லரசன் said...
இதற்காக உழைத்த மதுரை பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்//

நன்றிண்ணே.. உடல்நலம் காரணமா நீங்க வராமப் போனதுல வருத்தம் தாண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...
வாழ்த்துக்கள் இது பலரை இது மாதரியான நிகழ்வுகளை நடத்த தூண்டுதலாய் இருக்கும். நல்ல முன் மாதிரி.//

உங்க வாழ்த்துக்கு நன்றி நண்பா

// தேவன் மாயம் said...
தொகுப்பு நல்லா வந்துள்ளது கார்த்தி!!//

நன்றி டாக்டர் சார்..

// வெற்றி said...
காலையில் இருந்தே உழைத்து கொண்டிருந்தீர்களா ? Hats off !//

நன்றி வெற்றி.. உங்களை சந்தித்ததில் சந்தோசம்.. இனிமேல் நம்ம கூட எல்லா விஷயத்துலயும் நீங்களும் இருக்கணும்..:-))

// அக்பர் said...
அனைவருக்கும் வாழ்த்துகள்.//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//kailash,hyderabad said...
உங்களுக்கும் இந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய மதுரைப்பதிவர்களுக்கும் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.நன்றிகள்.ஓட்டு போட்டுட்டேன்//

உங்கள் அன்புக்கு நன்றி

//(இந்த நல்ல பதிவுக்கு கூட ஒரு மைனஸ் ஓட்டா?)//

பதிவுலக அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

// malarvizhi said...
பதிவு நன்றாக உள்ளது. ாழ்த்துக்கள்.//

நன்றி தோழி..

கையேடு said...

நிகழ்ச்சியை அரங்கேற்றி முடித்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்..

தொகுப்பு ரொம்ப நல்லா வந்துருக்குங்க..நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

@ கையேடு

நன்றி நண்பா

Anonymous said...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியான நிகழ்வு கலந்து கொள்ள ஆசை தான் ஆனால் இயலவில்லை என்ற வருத்தம் இதை படித்தவுடன் வருத்தம் குறைந்தாலும் போகமுடியலையே என்ற வலி இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.. நிகழ்வை அழகான புகைப்படங்களோடு நல்லா தொகுத்து கொடுத்திருக்கீங்க பாண்டியன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

@ தமிழரசி

ரொம்ப நன்றி தமிழக்கா.. அடுத்த தடவை இந்த மாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு நீங்களும் வந்து கலந்துக்கனும்.. இது என்னோட ஆசை + ஆர்டர் (உரிமையோட..)

jothi said...

பதிவு மிக நேர்த்தி நண்பரே. சங்கம் வளர்த்த மதுரையில் இவ்வளவு பதிவர்கள் இருக்கார்களா?? யாரும் இருக்கிற இடமே தெரியவில்லை. மசாலாப்பதிவுகள் உண்மையான தரமான பதிவுகளை மறைக்கின்றன.

விழாவை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//jothi said...
பதிவு மிக நேர்த்தி நண்பரே. சங்கம் வளர்த்த மதுரையில் இவ்வளவு பதிவர்கள் இருக்கார்களா?? யாரும் இருக்கிற இடமே தெரியவில்லை. மசாலாப்பதிவுகள் உண்மையான தரமான பதிவுகளை மறைக்கின்றன//

மதுரையில் நகருக்குள் கிட்டத்தட்ட எட்டு பேர் இருக்கோம்.. அதுபோக வெளியூரில் மட்டும் இருபது பேர் கிட்ட இருக்காங்க...

//விழாவை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள்//

நன்றிங்க

காரணம் ஆயிரம்™ said...

மருத்துவரின் கருத்தரங்கத்திற்கு கலந்துக்க முடியாத என் போன்றவர்களுக்கு,
அலுவலகக்கருத்தரங்கங்களை சிடிக்களில் பதிவு பண்ணி தருவது போல கிடைக்க வழியுண்டா.. (எம்பி3/காணொளி).

இதுபோன்ற வலைபதிவர் சந்திப்புக்களை எங்கே நடந்தாலும் ஒருங்கிணைத்து அறிவிக்கும் தளம் ஒன்று இருந்தால் மிக்க நல்லது!

நன்றி..

அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

கார்த்திகைப் பாண்டியன் said...

@ காரணம் ஆயிரம்™

கண்டிப்பாக நண்பா.. அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.. எத்தனை முடியுமோ, அத்தனை பேருக்கு இந்த விஷயங்களைக் கொண்டு போய் சேர்பதுதானே நோக்கம்..

tamilmagal said...

akkalathil pengalukku ethirana vanmuraigalai ethirtha bharathiyai parthathilai nangal.Aanal tharpothu parkirom thangalin moolamaga.

tamilmagal said...

akklathil pengalukku ethirana vanmuraigalai ethirtha 'bharathi'yai
parthathillai nangal. Aanal tharpothu parkkirom thangalin moolamaga.Nanrigal pala.