February 5, 2010

அசல் - திரைப்பார்வை..!!!


ஏகனின் ஏமாற்றத்துக்குப் பின் வரும் "தல"யின் 49 ஆவது படம். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டிலில் போடவில்லை. அசலில் முதல் முறையாக அஜித் திரைக்குப் பின்னே படத்துக்காக பங்களிப்பு செய்து இருக்கிறார். கதை, திரைக்கதை வசனத்தில் உதவி என்றும் இணை இயக்கம் என்றும் போடுகிறார்கள்.

நினைத்ததை முடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதைதான். நியாயமான ஆயுத விற்பனையாளர் அப்பா அஜித். அவருடைய மூத்த தாரத்து மகன்கள் சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா. அவர்களின் மாமா பிரதீப் ராவத். இளைய தாரத்தின் மகனான இன்னொரு அஜித் மீதுதான் அப்பாவுக்கு பாசம். அப்பா இறந்த பிறகு தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் சகோதரர்களை அஜித் காப்பாற்ற முயல, அவர்களோ அஜித்தையே கொல்ல நினைக்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் "அசல்".

திரைக்கு முன்
****************

அஜித் - தனக்கு நன்றாக வருவதை மட்டும் செய்வதை தலயிடம் ரசிக்கலாம்.. இரட்டை வேடம்.. இருந்தாலும் அப்பாவுக்கு வேற யாரையாவது போட்டிருக்கலாம்.. இன்னும் பில்லாவில் இருந்து வெளியே வரவில்லை... நடிக்கிறார்.. பிறகு நன்றாக நடக்கிறார்.. சுருட்டு எதுக்கு என்றுதான் தெரியவில்லை.. பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது ஆறுதல்..



கெல்லி டோர்ஜி - ஸ்மார்ட்டான வில்லன்.. பாதியிலேயே அவுட்..

சம்பத் - கெரகம்.. சுத்த வேஸ்ட்..

ராஜீவ் கிருஷ்ணா - சைக்கோ மாதிரி .. இது தேவையா?

பிரதீப் ராவத் - இவர் படத்துல எதுக்கு இருக்காருன்னு அவருக்கே தெரியாது போல..

சுரேஷ் - வில்லன்களில் ஒரே ஆறுதல்.. கொஞ்சம் சீரியஸ்.... நிறையவே காமெடி.. அதிலும் கடைசி சீனில் திருந்துவது மிகப்பெரிய காமெடி..

பிரபு - படத்துல இருக்காரா?

யூகி சேது - லூசு டான்... படத்தோட காமெடி பீசு..

பாவனா - கொள்ளை அழகு.. பாலிஷ் போட்ட மாதிரி சும்மா சூப்பரா இருக்கார்.. சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...

சமீரா - கொஞ்சம் வயசான குதிரை.. ரெண்டு பாட்டுல டான்ஸ் ஆடுறதுக்கு மட்டுமே..



திரைக்குப் பின்
*****************

பிரசாந்த் டி மிசேல் - ஒளிப்பதிவாளர் - ஜமாய்த்து இருக்கிறார்.. டைட்டில் போடும்போது வான்வழியே பாரிஸ் நகரை சுட்டிருக்கும் அழகு மனதை கொள்ளை கொள்ளுகிறது.. வெளிநாடுகளை படமாக்கி இருக்கும் விதம் அருமை.. படத்தின் ரிச் லுக்குக்கு மிக முக்கிய காரணம் இவர்தான்.. ரொம்பவே நன்றாக செய்திருக்கிறார்..

ஆண்டனி - எடிட்டிங் - மொத்தப் படமும் ரெண்டே மணி நேரம்தான்.. முதல் பாதி கொஞ்சம் இழுவை.. இரண்டாம் பாதி ஓகே..

பரத்வாஜ் - இசை - ஐம்பதாவது படமாம்.. கிடைத்த வாய்ப்பை தவற விட்டுருக்கிறார்.. நிறைய காப்பி.. டோட்டடாயிங் பாட்டைத் தவிர எதுவும் தேறவில்லை.. பின்னணியில் பான்ட் இசையை போட்டுக் கொலையாய்க் கொல்லுகிறார்..

கதை - யூகி சேது - வில்லனில் செதுக்கியவர் இதில் சறுக்கி இருக்கிறார்.. நிறையவே பார்த்து சலித்துப் போன கதை.. வெளிநாட்டில் நடக்கும லோக்கல் வாரிசுப் பிரச்சினை - புதிதாக ஒன்றுமே இல்லை..

சரண் - திரைக்கதை, இயக்கம் - ஏன் சரண்? டான் கதை.. அதுக்கு ஸ்டைலான முலாம் போட்டால் போதுமா? திரைக்கதையில் வேகம் வேண்டாமா? அஜித் என்ற மாஸ் நடிகர் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எண்ணியதன் விளைவா? சின்ன சின்ன ரசனையான விஷயங்கள் வழக்கமாக உங்கள் படங்களில் இருக்கும்.. இதில் அப்படி எதுவுமே இல்லையே? நிறையவே ஏமாற்றம்..

படத்தில் ரசித்த விஷயங்கள்
********************************


--> அஜித்தின் வெகு சாதரணமான இன்ட்ரோ.. ஸ்டைல்

--> பாவனா தன்னுடைய அப்பாவின் புத்தகத்தை அடிக்கடி திறந்து பார்க்கும் அழகு

--> அஜீத்துக்காக பாவனாவும் சமீராவும் உரசிக் கொள்ளும் காட்சி..

--> சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும் விதம்..

--> உடை அலங்காரம்..

எரிச்சல்கள்
*************

--> சம்பத் மற்றும் பிரதீப் ராவத்..

--> அடிக்கடி எல்லோரும் தல தல என்றே புலம்பிக் கொண்டிருப்பது..

--> திரைக்கதை.. மெது மெதுவாக நகரும் காட்சிகள்..

நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்று சொல்லக் கூடியவன் கிடையாது. நல்ல படமாகத் தருவார் என்று நம்பும் என்னைப் போன்ற அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஒரு சராசரி படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

அச(த்த)ல் கம்மிதான்

36 comments:

Prabhu said...

வேல வெட்டி இல்லாத மீ த பர்ஸ்டு!

gulf-tamilan said...

/ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி./

யாருங்க அது???
:)))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//கொள்ளை அழகு.. பாலிஷ் போட்ட மாதிரி சும்மா சூப்பரா இருக்கார்.. சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...//

கார்த்திகைப் பாண்டியன் தானே?

துணுக்கு ஸ்டைலில் கொடுத்திருப்பது ரசிக்க வைக்குதுங்க :)

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஒரு சராசரி படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.
//

ம்க்கும்...

ஆனாலும் விமர்சனம் எழுத்து புதுசு

ஹேமா said...

//நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்று சொல்லக் கூடியவன் கிடையாது.//

இதுதான் நடுநிலைமையான தீர்ப்பு.கார்த்தி கை குடுங்க !

sathishsangkavi.blogspot.com said...

//நல்ல படமாகத் தருவார் என்று நம்பும் என்னைப் போன்ற அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஒரு சராசரி படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.//

வாத்தியாரே இங்க தான் நிக்கறீங்க....

ஜெட்லி... said...

இன்னைக்கு போலாம்னு நினைச்சேன்...
இப்போ ரெண்டு நாள் கழிச்சு பார்த்த போதும்னு
முடிவு பண்ணிட்டேன் !!

செந்தில் நாதன் Senthil Nathan said...

சரி மெதுவா பார்போம்....

cheena (சீனா) said...

ஹாய் கார்த்திக்

பாத்துடறேன் - அப்புறம் சொல்றேன்

விமர்சனம் புதுமை

நல்வாழ்த்துகள் கார்த்திக்

பொன்.பாரதிராஜா said...

விஜய்,அஜித் 2 பேரும் நடிக்கறதை நிறுத்தினாலே தமிழ் சினிமா பொழச்சுக்கும்...

அகல்விளக்கு said...

//சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...//

ரைட்டு....

பொண்ணுகேட்க போலாமாண்ணா....

மேவி... said...

raittu

தருமி said...

//விஜய்,அஜித் 2 பேரும் நடிக்கறதை நிறுத்தினாலே தமிழ் சினிமா பொழச்சுக்கும்...//

இப்படிக்கு,
J.K.ரித்தீஷ் & sam anderson ரசிகர் படை

தருமி said...

கா.பா.

அசல் திரைப்பார்வை ... நல்லா இருக்கு - திரைப்பார்வை.

Ganesan said...

நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்று சொல்லக் கூடியவன் கிடையாது.

உங்க நேர்மை பிடிச்சிருக்கு.

க.பாலாசி said...

//சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி..//

இந்த சோழனும்தாங்க...

Prabhu said...

சோழனா, வாளை எடுங்கள்... பாண்டியன் பதிவில் சோழனா?

Unknown said...

புதுமையான விமர்சனம் வாத்யாரே..

// பாண்டியன் காலி.. //

இந்த கொங்கனும்..


//.. pappu said...

சோழனா, வாளை எடுங்கள்... பாண்டியன் பதிவில் சோழனா? ..//


எப்பூடி..??

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
வேல வெட்டி இல்லாத மீ த பர்ஸ்டு!//

same blood..:-)))

// gulf-tamilan said...
/ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி./
யாருங்க அது???
:)))//

ஹி ஹி ஹி.. சத்தியமா நான்தான் அண்ணாச்சி..

//ச.செந்தில்வேலன் said...
கார்த்திகைப் பாண்டியன் தானே?
துணுக்கு ஸ்டைலில் கொடுத்திருப்பது ரசிக்க வைக்குதுங்க :)//

நானேதான்.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
ம்க்கும்... ஆனாலும் விமர்சனம் எழுத்து புதுசு//

சரி சரி.. லூசுல விடு நண்பா

//ஹேமா said...
இதுதான் நடுநிலைமையான தீர்ப்பு.கார்த்தி கை குடுங்க !//

நன்றி தோழி

//Sangkavi said...
வாத்தியாரே இங்க தான் நிக்கறீங்க..//

நாம எப்படி இருந்தா என்ன.. படம் படுக்காம இருந்தா சரி.. அவ்ளோதான் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஜெட்லி said...
இன்னைக்கு போலாம்னு நினைச்சேன.. இப்போ ரெண்டு நாள் கழிச்சு பார்த்த போதும்னு முடிவு பண்ணிட்டேன் !!//

ஜெட்லி இப்படி எல்லாம் சொல்லலாமா? போப்பா.. போய் படத்தப் பாருங்க..

//செந்தில் நாதன் said...
சரி மெதுவா பார்போம்....//

எப்படியோ பார்த்தா சரி..:-)))

//cheena (சீனா) said...
ஹாய் கார்த்திக் பாத்துடறேன் - அப்புறம் சொல்றேன்
விமர்சனம் புதுமை
நல்வாழ்த்துகள் கார்த்திக்//

நன்றி ஐயா

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன்.பாரதிராஜா said...
விஜய்,அஜித் 2 பேரும் நடிக்கறதை நிறுத்தினாலே தமிழ் சினிமா பொழச்சுக்கும்...//

பாரதி.. இம்புட்டு நல்லவனா நீயி?

//அகல்விளக்கு said...
ரைட்டு.... பொண்ணுகேட்க போலாமாண்ணா....//

ஐயோ.. எனக்கு வெட்கம் வெட்கமா வருதே..:-))

// டம்பி மேவீ said...
raittu//

அப்போ நான் லெப்டு

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
அசல் திரைப்பார்வை ... நல்லா இருக்கு - திரைப்பார்வை.//

எல்லாம் உங்க வழிகாட்டுதல்தான் ஐயா

//காவேரி கணேஷ் said...
உங்க நேர்மை பிடிச்சிருக்கு.//

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.. எப்படி எல்லாம் மெயின்டைன் பண்ண வேண்டியிருக்கு...

// க.பாலாசி said...
இந்த சோழனும்தாங்க..//

You too balaji?

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
சோழனா, வாளை எடுங்கள்... பாண்டியன் பதிவில் சோழனா?//

விடுப்பா.. படத்துலதான் பாண்டியன் வில்லன்னா, நெஜத்துலையுமா?

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
புதுமையான விமர்சனம் வாத்யாரே..
// பாண்டியன் காலி.. //
இந்த கொங்கனும்..//

கொல்லப் போறேன்.. எத்தனை பேருயா கெளம்பி இருக்கீங்க?

தருமி said...

////தருமி said...
அசல் திரைப்பார்வை ... நல்லா இருக்கு - திரைப்பார்வை.//

எல்லாம் உங்க வழிகாட்டுதல்தான் ஐயா
//
ஹி .. ஹி .. ஏங்க இப்படியெல்லாம் பொய் சொல்றீங்க .......

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Dharumi

படத்தோட கதைய சொல்லாம முடிஞ்ச அளவுக்கு ஒழுக்கமா எழுதுறேன்னா... அதுக்கு காரணம் உங்ககிட்ட வாங்கின திட்டு தானே.. அப்புறம் எப்படி பொய்யாகும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

கேள்விப்பட்ட வரைக்கும் படத்தோட கலெக்ஷன் நல்லா இருக்குறதா சொல்றாங்க.. நிறைய பேர் படம் பிடிச்சு இருக்குன்னும் சொல்றாங்க.. ரைட்டு..:-))))

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் ஓகே பார்க்கலாம் (முடிந்தால்)

கார்த்திகைப் பாண்டியன் said...

@ ஆ.ஞானசேகரன்

கண்டிப்பா பாருங்க தலிவரே..:-)))

குடந்தை அன்புமணி said...

நீங்கதான் ’அசல்’ ரசிகர். ‘தல‘யை தூக்கிவைச்சி கொண்டாடாம உள்ளது உள்ளபடியே விமர்சனம் செஞ்சதுக்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.

CS. Mohan Kumar said...

//பாவனா - கொள்ளை அழகு.. பாலிஷ் போட்ட மாதிரி சும்மா சூப்பரா இருக்கார்.. சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...//

ஆஹா!! ரசித்தேன்!! பாட்டுல (TV)பாக்கும் போதே தெரியுது!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
நீங்கதான் ’அசல்’ ரசிகர். ‘தல‘யை தூக்கிவைச்சி கொண்டாடாம உள்ளது உள்ளபடியே விமர்சனம் செஞ்சதுக்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.//

:-)))))

//மோகன் குமார் said...
ஆஹா!! ரசித்தேன்!! பாட்டுல (TV)பாக்கும் போதே தெரியுது!!//

அஜீத்த தவிர படத்துல ரசிக்கிற மாதிரி இருக்குற விஷயம் இவங்கதான் நண்பா..

கார்க்கிபவா said...

50வது படம் கலக்கும் தல.. (அல்லது) தல கலக்கும் :))

அன்பேசிவம் said...

அஜீத் நடக்கும் அசல்ன்னு போட்டிருக்கலாம் நண்பா..

:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//கார்க்கி said...
50வது படம் கலக்கும் தல.. (அல்லது) தல கலக்கும் :))//

வாழ்க்கையே நம்பிக்கைதானே தல..

//முரளிகுமார் பத்மநாபன் said...
அஜீத் நடக்கும் அசல்ன்னு போட்டிருக்கலாம் நண்பா..//

அஹ.. எஜ்ஜாட்லி..

Joe said...

//நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்று சொல்லக் கூடியவன் கிடையாது.//

Firstly, there are lot of folks in TN, who have a lot of free time.
I mean, You watched the movie in a movie hall, inspite of the reviews saying it's a flop, yeah? (God knows what Times of India folks were smoking, they had given 3.5 out 5, for this utterly boring movie) So no matter what crap they release (they refers to Rajini, Vijay, Ajith et al) there's a bunch of folks who would watch it anyway, so why would they work too hard to bring out quality films?

Secondly, there are many folks in TN, with a lot of black money, who don't mind throwing their cash in some venture which may not provide them any profits.
(Sorry for not typing in Tamil, transliterator not working)