February 8, 2010

பார்த்து சூதானமா வண்டி ஓட்டுங்கப்பூ...!!!

இந்த வருஷம் புதுசா பொறந்த சமயத்துல, சனவரி மொத வாரத்த நம்ம தமிழ்நாடு அரசு "சாலை பாதுகாப்பு வாரமா" கொண்டாடுறதா அறிவிப்பு செஞ்சாங்க.. எதுக்காக? இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல, சாலை விபத்துனால தினமும் இறந்து போறவங்க எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தி ஆகிக்கிட்டே போகுது.. அத கம்மி பண்ணனும்.. அப்படிங்கிறதால.. இது பத்தி தோழி "இதயப்பூக்கள்" இயற்கை ஒரு இடுகை எழுதி இருக்காங்க.. அத்தோட என்னையும் தொடரா எழுத சொல்லிக் கூப்பிட்டாங்க.. ஆனா பாருங்க நாமதான்ஒண்ணாம் நம்பர் சோம்பேறி ஆச்சே.. இந்தா அந்தான்னு ஒரு மாசம் ஆகிப் போச்சு..

ஒரு குட்டி கத.. ஒரு அம்மா சக்கர சாப்பிடுரத கம்மி பண்ணனும்னு அறிவுரை சொல்லுங்கன்னு காந்திக்கிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்களாம். அதுக்கு அவரு ரெண்டு நாள் கழிச்சு கூட்டிட்டு வரச் சொன்னாராம். ஏன்னா அவருக்கு சக்கரைய ஜாஸ்தி சாப்பிடுற பழக்கம் இருந்ததாம். அத கம்மி பண்ணிக்கிட்டு மத்தவங்களுக்கு அறிவுரை சொன்னாராம். அந்தக் கதைல வர மாதிரி இப்ப இத நான் எழுதுறதுக்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு.. அது என்னன்னா.. போன வாரம்தான் வண்டில இருந்து விழுந்து புதையல் எடுத்தேன். இப்போ நாம சொன்னாத்தான கரெக்டா இருக்கும். நாம பட்டுத்தான் தெரிஞ்சுக்குற கூட்டம்.. பட்டாச்சு.. அதனால் பத்திரமா இருங்கன்னு மத்தவங்களுக்கு சொல்றதுக்குத்தான் இந்த இடுகை..

ராத்திரி பத்து மணி. நண்பர் ஸ்ரீதர அவங்க வீட்டுல பார்த்துட்டு நம்ம ஏரியாக்கு திரும்பி வந்துக்கிட்டு இருக்கேன். நல்ல பசி. பைபாஸ் ரோடு. ரோட ரெண்டா பிரிச்சு இருக்காங்க. அதனால் ரோட்டோட ஒரு பக்கம் ஒன் வே மாதிரிதான். அவ்வளவா டிராபிக் வேற இல்லைன்னு வண்டிய கொஞ்சம் வேகமா பத்திக்கிட்டு வரேன். திடீர்னு எங்கிருந்து வந்ததுன்னு தெரியாம ஒரு லாரி - ரோட்டுக்கு நடுவுல இருக்குற ஒடப்பு வழியா உள்ளே வந்துட்டான். நான் எதிர்பார்க்கவே இல்ல.

இப்போ எனக்கு ரெண்டே வழிதான். ஒண்ணு நேராக் கொண்டு போய் லாரி மேல மோதலாம். இல்லைன்னா வண்டிய ரோட்ட விட்டுக் கீழ இறக்கணும். இறக்கிட்டேன். புல்லா மண்ணு. சரட்டி விட்டுருச்சு. வண்டியக் கீழ போட்டுட்டு தவ்விட்டேன். இருந்தாலும் முட்டிலையும், இடுப்புலயும் செம அடி. பின்னாடி வந்தவங்க லாரிக்கரானத் திட்டிக்கிட்டு இருந்தாங்க. என்னத் திட்டி என்ன பிரயோஜனம்? நாம விழுந்தது விழுந்தது தானே..

இதுல இருந்து என்ன தெரியுது? பசின்னு பறக்காவெட்டியா வண்டி ஓட்டக் கூடாது, கார்த்திக்கு ராத்திரின்னா கண்ணு தெரியாது.. இந்த மாதிரி எகத்தாளமா பதில் சொல்லக் கூடாது.

நான் சொல்ல வந்த விஷயம்.. நீங்க என்னதான் நல்லா வண்டி ஓட்டினாலும், ஒங்கள சுத்தி இருக்குறவங்க சரியா ஓட்டலைன்னாலும் நாம ஆபத்துல மாட்டிக்கிறது வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே வண்டியில கொஞ்சம் வேகம் கம்மியா போறது நல்லது. தப்பித்தவறி விழுந்தாக்கூட அவ்வளவா அடிபடாது.

ஹெல்மட் போடுறத எல்லோருமே ஏதோ ஒரு பாரமா நினைக்கிறோம். (நானும்தான்..) அது தப்பு. விபத்தப்போ தலைல அடிபடுறதால தான் பல உயிரிழப்பு நேரிடுது. அந்த சமயத்துல தலைக்கவசம்தான் நம்ம உயிரக் காப்பாத்தும். சோ.. ஹெல்மட் முக்கியம்.

கோட்டுக்கு முன்னாடி நிக்கிறதுதான ரூல். அதை மதிப்போம். அதோட சிக்னல்களை மதிக்கப் பழகிக்குவோம். சிவப்பு போட்டதுக்கு அப்புறமும் போறது, பச்சை விழுறதுக்கு முன்னாடியே அவசர அவசரமா ஓடுறது.. இதெல்லாம் வேண்டாமே..

ஒரு கணவன் மனைவி வண்டில போய்க்கிட்டு இருந்தப்போ, மொபைல்ல பேசுறேன்னு குப்பை வண்டில விட்டு, மொத்தமா போய் சேர்ந்த கதை எல்லாம் இருக்கு. நானே பார்த்து இருக்கேன். அதனால, தயவு செஞ்சு வண்டில போகும்போது அலைபேசிய பயன்படுத்தாதீங்க.

குடும்பத்தோட ரொம்ப தூரம் போறதுக்கு பைக்க பயன்படுத்தாதீங்க. இன்னைக்கு காலைல காலேஜுக்கு வரப்ப பார்த்தேன். வீட்டுக்காரர் வண்டி ஓட்டுறார். முன்னாடி ஒரு பெரிய பேக். பின்னாடி வீட்டுக்காரம்மா. கையில ஒரு குட்டிக் குழந்த. நடுவுல சின்னப் பையன் வேற. இது போதாதுன்னு வண்டியோட பின்பக்கம் ஒரு பெரிய பைய வேறக் கட்டி வச்சிருந்தாங்க. அது என்ன வண்டியா இல்ல லோடு லாரியா? சின்ன பிசகு ஆனாக்கூட என்ன ஆகும்? இதை எல்லாம் யோசிக்கணும்.

கடைசியா மாணவர்கள். வேகம், ட்ரிபிள்ஸ்.. எல்லாமே த்ரில்லாத்தான் இருக்கும். ஆனா அதுல இருக்குற ரிஸ்கையும் மனசுல வச்சுக்கணும். ஏன்னா, மனுச உசிரு விலை மதிப்பில்லாதது. உங்க அப்பா, அம்மா உங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கைகளை காப்பாத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. எல்லாத்துக்கும் மேல, நீங்க தான் இந்த நாட்டின் வருங்காலத் தூண்கள். அத மனசுல நினைச்சுக்கிட்டுவண்டியத் தொடுங்க.

இதுல சொல்லி இருக்குற விஷயங்கள் உங்களுக்கு மட்டுமில்ல, எனக்கும் சேர்த்துத்தான். பார்த்து சூதானமா வண்டி ஓட்டுவோம். பத்திரமா இருப்போம். சரிதானுங்களே நான் சொல்றது?

( இந்த வாரம் வலைச்சரத்துலையும் எழுதுறேன்.. அங்கயும் உங்களோட ஆதரவை எதிர்பார்க்கிறேன் நண்பர்களே.. )

39 comments:

sathishsangkavi.blogspot.com said...

//பார்த்து சூதானமா வண்டி ஓட்டுவோம். பத்திரமா இருப்போம். சரிதானுங்களே நான் சொல்றது?//

வாத்தியாரய்யா நீங்க சொல்லி தப்பு ஆகுமா...?

அப்படியே உங்க நண்பர்களிடம் எல்லாம் தலைகவசம் அணிந்த பின் வாகனத்தை ஓட்டச்சொல்லுங்க... நான் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்...

"தலைகவசம் உயிர்கவசம்"

க.பாலாசி said...

//தயவு செஞ்சு வண்டில போகும்போது அலைபேசிய பயன்படுத்தாதீங்க.//

கண்ணாலம் பண்ண மக்களே... பொண்டாட்டி புள்ளைங்கள வண்டியில வச்சிகிட்டு பேசாதீங்க...

பாத்துப்போங்க தலைவரே....எதுத்தால வர்ரவனுக்கு நேரம் சரியில்லன்னாலும் நமக்கும் ஒரு அடிவிழும்...

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

தேவன் மாயம் said...

நான் சொல்ல வந்த விஷயம்.. நீங்க என்னதான் நல்லா வண்டி ஓட்டினாலும், ஒங்கள சுத்தி இருக்குறவங்க சரியா ஓட்டலைன்னாலும் நாம ஆபத்துல மாட்டிக்கிறது வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே வண்டியில கொஞ்சம் வேகம் கம்மியா போறது நல்லது. தப்பித்தவறி விழுந்தாக்கூட அவ்வளவா அடிபடாது.
//

உண்மைதான் கார்த்தி!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துக்கள்

சாலையில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் .

சாலை பாதுகாப்பு பத்தி நான் எழுதிய பதிவு
சாலை விதிகளை மீறாதீங்க ...

ஈரோடு கதிர் said...

தேவையான இடுகை

அப்பாவி முரு said...

இந்தியால வாழ்க்கையே அட்வெஞ்சரஸாகப் போச்சு..

குறிப்பாய் ரோட் கல்ச்சர்???

:((((

vasu balaji said...

தலைக்கவசம் போடுறது மட்டுமில்லை, சரியாவும் போடணும். நல்ல பகிர்வு:)

தருமி said...

தெரியாதே .. நல்லா ஆயிட்டீங்களா? கவசம் வாங்கியாச்சா ?

activa வண்டிக்கெல்லாம் கவசமா அப்டின்னு யாரையும் பாத்து சொல்லக்கூடாது.. சரியா?

சம்பத் said...

நல்ல பயனுள்ள இடுகை பாஸ்...நானும் கொஞ்ச நாலா ஒழுங்கா rules follow பண்ணிக்கிட்டு இருக்கேன்....

////நீங்க என்னதான் நல்லா வண்டி ஓட்டினாலும், ஒங்கள சுத்தி இருக்குறவங்க சரியா ஓட்டலைன்னாலும் நாம ஆபத்துல மாட்டிக்கிறது வாய்ப்பு இருக்கு////

அனுபவிச்சு இருக்கேன்... :-(

அண்ணாமலையான் said...

நல்லா சொன்னீங்க...

Balakumar Vijayaraman said...

பார்த்து சூதானமா வண்டி ஓட்டுவோம்.

Jerry Eshananda said...

பொழுசாய கோழி அடிச்சு,கொண்டாறேன்,வீட்டில இரு ராசா.

Romeoboy said...

ஓடிட்டா போச்சு தலைவரே..

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு சார். வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

உடம்பு இப்ப எப்படி இருக்கு? பூரணமா குணமாயிட்டதா? பலபேரோட எதிர்காலம் உங்க கையில... பார்த்து நடந்துங்க...ஆம்

கண்ணா.. said...

சூதானமா ஓட்டிட்டா போச்சு....

கும்மாச்சி said...

கார்த்தி நல்ல இடுகை. என் தம்பி வண்டி பஞ்சர் ஆகி., கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு உயிர் பிழைத்தது பெரிய விஷயம். ஆனால் இழந்தது காதுகள் கேட்கும் திறனை, ஆதலால் வேலையில் தொடர முடியவில்லை.

வேகம் விவேகம் அல்ல.

Unknown said...

வாத்தியார்னா இப்படித்தான் ரம்பம் போடணும்(சும்மா லுலுலாய்க்கு..)

//.. வண்டில இருந்து விழுந்து புதையல் எடுத்தேன் ..//
புதையல் எடுத்தா கவர்மெண்டுக்கு கொடுக்கணும். இல்லன கவர்மெண்டுக்கு கொடுத்துட்டு புதையல் எடுக்கணும். நீங்க என்ன பண்ணுனிங்க?

Unknown said...

வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துகள்..

சிநேகிதன் அக்பர் said...

நல்லா சொன்னீங்க.

வினோத் கெளதம் said...

வண்டியை பார்த்து ஒட்டவும் நண்பா..

settaikkaran said...

நிறைய பேரு நான் வண்டியோட்டுறதுலே விற்பன்னன்கிற அதிநம்பிக்கையிலே இருக்காங்க; ஆனா மத்தவங்கெல்லாம் வண்டியோட்டுறதுலே விற்பன்னர்களா இருக்கணுமுங்கிறது அவசியமில்லை. இதை மனசுலே வச்சுக்கிட்டா ஆக்ஸிலேட்டரையும், பிரேக்கையும் சரியா உபயோகிக்க முடியும். ஆயுசு கெட்டியாயிருக்கணுமுன்னா, தலைக்கு மேலே சட்டியைக் கவுத்துறுங்க!

கார்த்திகைப் பாண்டியன் said...

// Sangkavi said...
வாத்தியாரய்யா நீங்க சொல்லி தப்பு ஆகுமா...? அப்படியே உங்க நண்பர்களிடம் எல்லாம் தலைகவசம் அணிந்த பின் வாகனத்தை ஓட்டச்சொல்லுங்க... நான் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்...
"தலைகவசம் உயிர்கவசம்"//

சத்தியமான வார்த்தைகள் நண்பா...

//க.பாலாசி said...
கண்ணாலம் பண்ண மக்களே... பொண்டாட்டி புள்ளைங்கள வண்டியில வச்சிகிட்டு பேசாதீங்க...
பாத்துப்போங்க தலைவரே.... எதுத்தால வர்ரவனுக்கு நேரம் சரியில்லன்னாலும் நமக்கும் ஒரு அடிவிழும்...//

சரியாச் சொன்னீங்க நண்பா..

//தேவன் மாயம் said...
உண்மைதான் கார்த்தி!!//

வாங்க தேவா சார்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துக்கள் சாலையில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் //

நன்றி நண்பா... உங்க இடுகையும் பயனுள்ளதா இருக்கு..

// ஈரோடு கதிர் said...
தேவையான இடுகை//

நன்றி நண்பா..:-))))

//அப்பாவி முரு said...
இந்தியால வாழ்க்கையே அட்வெஞ்சரஸாகப் போச்சு..
குறிப்பாய் ரோட் கல்ச்சர்???
:((((//

வருத்தப்பட வேண்டிய விஷயம் நண்பா :-((((

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
தலைக்கவசம் போடுறது மட்டுமில்லை, சரியாவும் போடணும்.நல்ல பகிர்வு:)//

நன்றி பாலா சார்..

// தருமி said...
தெரியாதே .. நல்லா ஆயிட்டீங்களா? கவசம் வாங்கியாச்சா ?//

கவசம் வச்சு இருக்கேன் ஐயா.. பெரிய அடி எல்லாம் ஒண்ணுமில்லை.. அதனாலத்தான் சொல்லலை

// activa வண்டிக்கெல்லாம் கவசமா அப்டின்னு யாரையும் பாத்து சொல்லக்கூடாது.. சரியா?//

ச்சே ச்சே.. நான் சொல்ல மாட்டேன்... ஆனா இப்போ நீங்களாத்தான் வாய் விட்டுரீக்கங்க.. இனிமேல் சொன்னாலும் சொல்லுவேன்..:-)))

//சம்பத் said...
நல்ல பயனுள்ள இடுகை பாஸ்...நானும் கொஞ்ச நாலா ஒழுங்கா rules follow பண்ணிக்கிட்டு இருக்கேன்....//

good boy..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// அண்ணாமலையான் said...
நல்லா சொன்னீங்க...//

நன்றிங்க

//வி.பாலகுமார் said...
பார்த்து சூதானமா வண்டி ஓட்டுவோம்//

அது..:-))

// ஜெரி ஈசானந்தா. said...
பொழுசாய கோழி அடிச்சு, கொண்டாறேன்,வீட்டில இரு ராசா.//

மச்சான்.. சாச்சுப்புட்டீங்களே ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//|| Romeo ||| said...
ஓடிட்டா போச்சு தலைவரே..//

என்னது ஓடப் போறீங்களா.. யாரோட..:-)))

//செ.சரவணக்குமார் said...
நல்ல பதிவு சார். வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா

//குடந்தை அன்புமணி said...
உடம்பு இப்ப எப்படி இருக்கு? பூரணமா குணமாயிட்டதா? பலபேரோட எதிர்காலம் உங்க கையில... பார்த்து நடந்துங்க...ஆம்//

இப்போ நல்லா இருக்கேன் நண்பா.. அக்கறைக்கு நன்றி :-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

// கண்ணா.. said...
சூதானமா ஓட்டிட்டா போச்சு....//

:-))))

//கும்மாச்சி said...
கார்த்தி நல்ல இடுகை. என் தம்பி வண்டி பஞ்சர் ஆகி., கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு உயிர் பிழைத்தது பெரிய விஷயம். ஆனால் இழந்தது காதுகள் கேட்கும் திறனை, ஆதலால் வேலையில் தொடர முடியவில்லை. //

வருத்தப்படுறேன் நண்பா.. பட்டவனுக்குத்தான் வலி தெரியும்..

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

வாத்தியார்னா இப்படித்தான் ரம்பம் போடணும்(சும்மா லுலுலாய்க்கு..) புதையல் எடுத்தா கவர்மெண்டுக்கு கொடுக்கணும். இல்லன கவர்மெண்டுக்கு கொடுத்துட்டு புதையல் எடுக்கணும். நீங்க என்ன பண்ணுனிங்க?//

அடப்பாவி மக்கா.. சேட்ட ஜாஸ்தியாப் போச்சு

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துகள்..//

நன்றி தல

கார்த்திகைப் பாண்டியன் said...

//அக்பர் said...
நல்லா சொன்னீங்க.//

நன்றிங்க

//வினோத்கெளதம் said...
வண்டியை பார்த்து ஒட்டவும் நண்பா..//

சரி தல.. பத்திரமா இருக்குறேன்..:-)))

//சேட்டைக்காரன் said...
நிறைய பேரு நான் வண்டியோட்டுறதுலே விற்பன்னன்கிற அதிநம்பிக்கையிலே இருக்காங்க; ஆனா மத்தவங்கெல்லாம் வண்டியோட்டுறதுலே விற்பன்னர்களா இருக்கணுமுங்கிறது அவசியமில்லை. இதை மனசுலே வச்சுக்கிட்டா ஆக்ஸிலேட்டரையும், பிரேக்கையும் சரியா உபயோகிக்க முடியும். ஆயுசு கெட்டியாயிருக்கணுமுன்னா, தலைக்கு மேலே சட்டியைக் கவுத்துறுங்க!//

Exactly.. well said nanba

ப்ரியமுடன் வசந்த் said...

பசங்களுக்கும் அப்டியே சொல்லிக்கொடுங்க வாத்யாரே...

வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியருக்கு..
நன்றியும்...

ஹேமா said...

வண்டி ஓட்டுறதைச் சிலபேர் ஏதோ சர்க்கஸ் வித்தை காட்டுறதாதானே றோட்டில போறங்க.இதனாலே அவங்களுக்கும் மத்தவங்களுக்கும் ஆபத்துன்னு நினைக்கிறதில்ல.இது எங்கள் நாடுகளில் மட்டுமே.

Nathanjagk said...

சூதானமாத்தான் சொல்லியிருக்கீங்கப்பூ!

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
பசங்களுக்கும் அப்டியே சொல்லிக்கொடுங்க வாத்யாரே...
வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியருக்கு..
நன்றியும்...//

ரொம்ப நன்றி தல

//ஹேமா said...
வண்டி ஓட்டுறதைச் சிலபேர் ஏதோ சர்க்கஸ் வித்தை காட்டுறதாதானே றோட்டில போறங்க.இதனாலே அவங்களுக்கும் மத்தவங்களுக்கும் ஆபத்துன்னு நினைக்கிறதில்ல.இது எங்கள் நாடுகளில் மட்டுமே.//

:-((((((((

//ஜெகநாதன் said...
சூதானமாத்தான் சொல்லியிருக்கீங்கப்பூ!//

நன்றி நண்பா

குந்தவை said...

நிஜமாகவே ஒரு பயனுள்ள பதிவு.

புல்லட் said...

அருமையா சொன்னீங்க பாஸ் .. அப்புறம் அடி கிடி ஒண்ணும் பலமில்லியெ? எல்லாம் குணமாயிட்டுதானே .. ஆனா உதை காந்தி கதைக்கு ஒப்பிடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. அது சக்கரை இது உணிரு.. :P நல்லா இருந்திச்சு வாசிக்க.. வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குந்தவை said...
நிஜமாகவே ஒரு பயனுள்ள பதிவு.//

நன்றிங்க

// புல்லட் said...
அருமையா சொன்னீங்க பாஸ் .. அப்புறம் அடி கிடி ஒண்ணும் பலமில்லியெ? எல்லாம் குணமாயிட்டுதானே .. ஆனா உதை காந்தி கதைக்கு ஒப்பிடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. அது சக்கரை இது உணிரு.. :P நல்லா இருந்திச்சு வாசிக்க.. வாழ்த்துக்கள்..//

நான் பத்திரமா இருக்கேன் நண்பா.. கதை சொன்னது ஒரு கோர்வைக்காக..மத்தபடி நம்ம எல்லாம் சாதாரண ஆள்தான் பாசு..

Prabu M said...

நல்ல விஷயத்தை சுவையா எழுதியிருக்கீங்க...

வலைச்சரப் பதிவுகளையும் படித்தேன்... எல்லாமே உங்க ஸிக்னேச்சர் ஷாட்ஸ்னு சொல்லலாம்..

சரி.. வலைச்சர வாரத்துல ஒருதடவயாவது "உக்காந்து யோசிக்க" வேண்டாமா?? :)

*இயற்கை ராஜி* said...

pahivukku nandri... sorry for late comment:-(

vilunthu varrathu ungalukku satharanama irukka nanba..be careful

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos