நேற்று என் வாழ்வின் மிக முக்கியமான.. மிகவும் சந்தோஷமான நாட்களில் ஒன்று. இலக்கிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த நாள் முதலாய் என் ஆதர்ச எழுத்தாளராய் விளங்கி வரும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை, அவருடைய வீட்டில் சந்தித்து உரையாட முடிந்தது. அவருடன் நான் இருந்த போது எனக்கு உண்டான உணர்வை என்ன சொல்லி விளக்குவது என்றே தெரியவில்லை. ஒரு முறை கோயமுத்தூரில் புத்தக திருவிழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பை நழுவ விட்டேன். அது முதல் எப்படியாவது எஸ்ராவை சந்தித்து விட வேண்டும் என்று ஆசை. எனவே அவரை பார்த்தபோது வெகு நாட்களாய் தேடி வரும் ஒன்று எதிர்பாராமல் கிடைத்ததைப்போல் ஒரு மகிழ்ச்சி.
என்னுடைய வாழ்வில் நான் எடுத்த சில முக்கியமான முடிவுகளில் அவருடைய எழுத்துக்கும் பங்கு உண்டு. அந்த அளவுக்கு என்னை பாதித்தவர் அவர். அதனால்தான் என்னுடைய வலைத்தளத்தில் இருபத்து ஐந்தாவது பதிவாக "எஸ்.ராமகிருஷ்ணன் - உணர்வுகளின் உன்னதம்" என்று அவரைப் பற்றி எழுதி இருந்தேன். அதை சிங்கப்பூரில் இருக்கும் எஸ்ராவின் சகோதரர் திரு.ஆதிமூலம் பார்த்து விட்டு எஸ்ராவிடம் சொல்லி இருக்கிறார். அது பற்றி எனக்கும் மின்னஞ்சலில் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில், என்னுடைய தோழி ஒருவர்.. என்னையும் எஸ்ரா மீதான என் ஆர்வத்தையும் நன்றாக அறிந்தவர்... எனக்கே தெரியாமல் எஸ்ராவை சந்திக்க அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை வந்து பார்க்கும்படி எஸ்ராவும் பதில் அனுப்பி விட்டார். தோழியோ இவ்வளவு எளிதாக எஸ்ராவை பார்க்க முடியும் என்று நம்ப முடியாமல் எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். முதலில் நான் என்னை கேலி செய்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் எஸ்ரா அனுப்பிய மின்னஞ்சலை பார்த்த பின்புதான் உண்மை உரைத்தது. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை. சென்னை. தேடிப்பிடித்து நானும் என் தோழியும் எஸ்ராவின் வீட்டுக்கு போய் விட்டோம். அவரைபோலவே வீடும் எளிமை. அவருக்கான அறையில்.. புத்தகங்கள் மற்றும் உலக சினிமாக்களின் dvdக்களின் ஊடே.. கணினியின் முன் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஈரோட்டில் இருந்து இதற்காகவா வந்தீர்கள் என்று கேட்டவர் அடுத்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நான் ஆடிப்போய் விட்டேன். "என்னை சந்திக்க விருப்பம் என்று சொல்லி இருந்தால் நானே உங்களை வந்து பார்த்து இருந்திருப்பேனே.." . இதற்கு நான் என்ன பதில் சொல்ல..?
அவருடைய எழுத்தைப் போலவே பேசும்போதும் பல விஷயங்கள் தானாகவே வெளிவந்தன. மிகவும் நுண்ணிய விஷயங்களை.. நாம் சாதரணமாக கவனிக்காத விஷயங்களைப் பற்றிக்கூட தெளிவாகப் பேசினார். அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களில் சில..
"வாழ்க்கை என்ற பாதையில் எனக்கு முன்னால் பலபேர் போய் இருக்கிறார்கள். இப்போது நான் போய்க்கொண்டு இருக்கிறேன். என்னுடைய அனுபவங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன். நாளை நீங்கள் இதே பாதியில் பயணம் செய்வீர்கள். எல்லாமே ஒரு அனுபவம்தான்.."
"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.."
"நம்முடைய விருப்பங்களும் குடும்பத்தின் தேவைகளும் எப்போதும் ஒத்துப்போகாது.. படகில் இருக்கும் துடுப்புகள் எதிரெதிர் திசைகளில் இயங்குவதுபோல நம்மை அலைக்கழிக்கும். நாம்தான் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டும்.."
அவர் சொன்னது அனைத்தையும் எழுத வேண்டும் என்றால் இன்னும் இதுபோல் ஐந்து பதிவுகளாவது தேவைப்படும். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். அவர் ஒரு அற்புதமான மனிதர். எல்லாவற்றைப் பற்றியும் பேசினார். அவருடைய படிக்கும் காலம்... பயணங்கள்.. நண்பர்கள்.. வெளிநாடுகளில் நூலகங்கள் இயங்கும் முறை.. இன்றைய மாணவர்கள்.. வெவ்வேறு துறைகளில் இயங்கும் விதம் பற்றி.. எல்லாம் சொன்னார். கடைசியாக தன்னுடைய குழந்தைகளைப் பற்றி சொன்னபோது அவருடைய கண்களில் தெரிந்த சந்தோஷம்.. அவருடைய பாசத்தை சொன்னது.
நான் அவருக்காக சிறு பரிசு ஒன்றை வாங்கிச் சென்றிருந்தேன். அதை அவருக்கு நன்றி கூறி கொடுத்தேன். நான் முதன்முதலில் வாங்கிய அவரின் புத்தகமான கதாவிலாசத்தை கொண்டு போயிருந்தேன். அதில் அவருடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். என்னிடம் இல்லாத அவரின் புத்தகம் எதுவெனக் கேட்டு.. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை புத்தகத்தில் கையெழுத்திட்டு தந்தார். விடை பெற்றுக் கிளம்பும்போது கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆகி இருந்தது. அவருடைய துணைவியாரிடம் நன்றி கூறி நானும் என் தோழியும் விடைபெற்றோம். வெளியே வந்தபோது மிகவும் நிறைவாக உணர்ந்தேன் . கண்டிப்பாக என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள் அவை...!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
65 comments:
Hats off to u nanbaa
முயற்சி திருவினையாக்கும்.
ஆசை நிறைவுற்றதா நண்பா. பதிவரின் பதிவுக்கு மதிப்பளித்த திரு.எஸ்.ரா
பாராட்ட படவேண்டியவர்
//"வாழ்க்கை என்ற பாதையில் எனக்கு முன்னால் பலபேர் போய் இருக்கிறார்கள். இப்போது நான் போய்க்கொண்டு இருக்கிறேன். என்னுடைய அனுபவங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன். நாளை நீங்கள் இதே பாதியில் பயணம் செய்வீர்கள். எல்லாமே ஒரு அனுபவம்தான்.."//
நீங்களும் அதே பாதையில் பயனித்து உங்கள் அனுபவத்தை மாணவர்களுக்கு சொல்லுங்கள்
//நையாண்டி நைனா said..
Hats off to u nanbaa..முயற்சி திருவினையாக்கும்.//
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி நண்பா...
//சொல்லரசன் said..
ஆசை நிறைவுற்றதா நண்பா. பதிவரின் பதிவுக்கு மதிப்பளித்த திரு.எஸ்.ரா பாராட்ட படவேண்டியவர்//
ஆமாம் நண்பா.. ஒரு நல்ல மனிதரை சந்தித்தோம் என்று ஒரு திருப்தி..
//சொல்லரசன் said..
நீங்களும் அதே பாதையில் பயனித்து உங்கள் அனுபவத்தை மாணவர்களுக்கு சொல்லுங்கள்//
கண்டிப்பாக நண்பா.. என்னால் இயன்றதை என் மாணவர்களுக்கு செய்வேன்..
எஸ்.ராவின் துணையெழுத்து, கதாவிலாஸம் இன்னும் பல வாசித்திருக்கிறேன். எனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர். அவரைச் சந்தித்த அனுபவத்தையும் கூடவே அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்.
அப்புறம் ஒரு விஷயம் நான் உங்க பதிவுலே இருக்கும்போது, நீங்க என் பதிவுலே இருந்திருக்கீங்க.
//ராமலஷ்மி said..
எஸ்.ராவின் துணையெழுத்து, கதாவிலாஸம் இன்னும் பல வாசித்திருக்கிறேன். எனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர். அவரைச் சந்தித்த அனுபவத்தையும் கூடவே அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்.//
வாங்க மேடம்.. ரொம்ப சந்தோஷம்.. மகிழ்ச்சி எனபது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளத்தானே..
//நையாண்டி நைனா said..
அப்புறம் ஒரு விஷயம் நான் உங்க பதிவுலே இருக்கும்போது, நீங்க என் பதிவுலே இருந்திருக்கீங்க.//
ரெண்டு மேதாவிங்க ஒரே மாதிரி யோசிக்கிறது ஒன்னும் புதுசு இல்லையே.. ஹி ஹி ஹி
வாழ்த்துகள்...
எனக்கும் பிடித்த எழுத்தாளர்..
ரொம்ப நன்றிங்க.. வருகைக்கும் வாழ்த்துக்கும்..
"நம்முடைய விருப்பங்களும் குடும்பத்தின் தேவைகளும் எப்போதும் ஒத்துப்போகாது.. படகில் இருக்கும் துடுப்புகள் எதிரெதிர் திசைகளில் இயங்குவதுபோல நம்மை அலைக்கழிக்கும். நாம்தான் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டும்.."
உண்மை ...
நண்பா உங்களது விருப்பம்
நிறைவேறியதில் எனக்கு
ரெம்ப சந்தோசம்
"என்னை சந்திக்க விருப்பம் என்று சொல்லி இருந்தால் நானே உங்களை வந்து பார்த்து இருந்திருப்பேனே.."
என்னைக் கிள்ளிப் பார்த்தேன். இப்படியுமா?? மாமனிதர்கள்...நம் நாடுகளில்...
வாழ்த்துக்கள் நண்பரே! இதே நீங்கள் ஒரு சினி ஸ்டாரைப் பார்க்கப் போயிருந்தேன் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் நான் கேலியான பதிலோடு போயிருக்கக்கூடும்.. ஆனால் நீங்கள் கண்டது ஒரு எழுத்தாளரை. அதிலும் இக்காலத்திய நவீன எழுத்துக்களை கைவசம் வைத்திருக்கும் நவீன எழுத்தாளரை!!!
அவர் ஒரு தேசாந்திரி என்பதால் உங்களைச் சந்திக்க நேரில் வருவதாகக் கூறியிருப்பார்...
அவரது உறுபசி நாவலை படித்துவிட்டேன்.. விரைவில் விமர்சனம்.... என் வாழ்க்கையில் அப்படி நுணுக்கமாக எவர் எழுதியும் நான் படித்ததில்லை... அப்படியொரு எழுத்துக்கள் அவை!!!
ம்ம்..... எனக்கு எப்போ சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியல!!!!
//ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.." //
Nice:-)
//நிலாவன் said...
உண்மை ...
நண்பா உங்களது விருப்பம்
நிறைவேறியதில் எனக்கு
ரெம்ப சந்தோசம்//
ரொம்ப நன்றி நண்பா..
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said
என்னைக் கிள்ளிப் பார்த்தேன். இப்படியுமா?? மாமனிதர்கள்...நம் நாடுகளில்...//
அவர் ஒரு தேசாந்திரி நண்பா.. பல ஊர்களுக்கு செல்லக் கூடியவர்.. ஆனாலும் சொல்ல மனம் வேண்டுமே
//ஆதவா said..
வாழ்த்துக்கள் நண்பரே! இதே நீங்கள் ஒரு சினி ஸ்டாரைப் பார்க்கப் போயிருந்தேன் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் நான் கேலியான பதிலோடு போயிருக்கக்கூடும்.. ஆனால் நீங்கள் கண்டது ஒரு எழுத்தாளரை. அதிலும் இக்காலத்திய நவீன எழுத்துக்களை கைவசம் வைத்திருக்கும் நவீன எழுத்தாளரை!!!//
வாங்க நண்பா.. எல்லாரையும் பத்தி எல்லாம் சொன்னேன்.. சிரிச்சுக்கிடே கேட்டார்.. ரொம்ப சந்தோஷம் எனக்கு..
//ஆதவா said..
அவரது உறுபசி நாவலை படித்துவிட்டேன்.. விரைவில் விமர்சனம்.... என் வாழ்க்கையில் அப்படி நுணுக்கமாக எவர் எழுதியும் நான் படித்ததில்லை... அப்படியொரு எழுத்துக்கள் அவை!!!//
சீக்கிரம் எழுதுங்க.. நான் இன்னும் அந்த புத்தகம் படிக்கவில்லை..
//ஆதவா said..
ம்ம்..... எனக்கு எப்போ சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியல!!!!//
கவலைப்படாதீங்க நண்பா.. கூடிய சீக்கிரம் அந்த வாய்ப்பு கிடைக்கும் என நன்பும்க.. நடக்கும்
//iyarkai said..
nice..:)))//
வருகைக்கு நன்றி தோழி..
வாழ்க்கையில் சில சந்திப்புக்கள் சிலிர்ப்பினை ஏற்படுத்துவதாய் இருக்கும். உங்கள் பதிவினை வாசிக்கையில் அதே உணர்வேற்பட்டது.
எஸ்.ராவின் துணையெழுத்து, கதாவிலாஸம் வாசித்திருக்கிறேன். எனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர்.
"வாழ்க்கை என்ற பாதையில் எனக்கு முன்னால் பலபேர் போய் இருக்கிறார்கள். இப்போது நான் போய்க்கொண்டு இருக்கிறேன். என்னுடைய அனுபவங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன். நாளை நீங்கள் இதே பாதியில் பயணம் செய்வீர்கள். எல்லாமே ஒரு அனுபவம்தான்.."
அவர் எழுத்துக்கள் முழுக்க அனுபவங்களால் நிறைந்திருக்கிறது....
அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே...
//தங்கராசா ஜீவராஜ் said..
வாழ்க்கையில் சில சந்திப்புக்கள் சிலிர்ப்பினை ஏற்படுத்துவதாய் இருக்கும். உங்கள் பதிவினை வாசிக்கையில் அதே உணர்வேற்பட்டது.அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே...//
வருகைக்கு நன்றி தோழரே.. என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
இரண்டு வருடங்களுக்கு முன் துணையெழுத்து படித்த தாக்கத்தில் நான் சார்ந்திருக்கும் அரிமா சங்கத்தின் கூட்டத்திற்காக ஈரோட்டிற்கு அழைத்திருந்தோம். மேடையில் அவரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலே நேசிப்பதற்குரிய மனிதர்.....
இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது.
நான் எஸ்.ரா உடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டுள்ளேன்.அவருடைய எளிமை அதில் காணமுடிந்தது.சென்னை வரும்போது முடிந்தால் பார்க்கவேண்டும். சந்திப்பின் மற்ற விஷயங்களையும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
அவருடன் நான் இருந்த போது எனக்கு உண்டான உணர்வை என்ன சொல்லி விளக்குவது என்றே தெரியவில்லை.
//
பிடித்தவர்களை திடீரென்று சந்திக்கும் போது அப்படி இருக்கும். அது அன்பின் வெளிப்பாடு. எதற்கும் ஈடு ஆகாது.
//கதிர் said..
இரண்டு வருடங்களுக்கு முன் துணையெழுத்து படித்த தாக்கத்தில் நான் சார்ந்திருக்கும் அரிமா சங்கத்தின் கூட்டத்திற்காக ஈரோட்டிற்கு அழைத்திருந்தோம். மேடையில் அவரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலே நேசிப்பதற்குரிய மனிதர்.....//
அன்பான மனிதர் என்பதுதான் முக்கியம் நண்பா.. வருகைக்கு நன்றி..
//கடையம் ஆனந்த் said..
பிடித்தவர்களை திடீரென்று சந்திக்கும் போது அப்படி இருக்கும். அது அன்பின் வெளிப்பாடு. எதற்கும் ஈடு ஆகாது.இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது.//
ஆம் நண்பா.. சில நேரங்களில் அன்பின் வெளிப்பாடு வித்தியாசமாக இருக்கும்.. நன்றி..
//பாஸ்கர் said.....நான் எஸ்.ரா உடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டுள்ளேன்.அவருடைய எளிமை அதில் காணமுடிந்தது.சென்னை வரும்போது முடிந்தால் பார்க்கவேண்டும். சந்திப்பின் மற்ற விஷயங்களையும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.//
ஆமாம் நண்பா.. எளிமையானவர்.. கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்..
வருகைக்கு நன்றி..
வாழ்த்துக்கள் நண்பா. மிக சந்தோஷம்.
ரொம்ப நன்றி முரளி.. உங்களுடைய அழைப்புக்கு மிக்க நன்றி.. உங்களுடன் பேசியதில் ரொம்ப சந்தோஷம்
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர்.
அவரது எழுத்துக்களை படிக்கும் போது அவர் எளிமையானவர் என்பதை புரிந்து கொண்டேன்.
இப்படியும் ஒரு எளிமையான மனிதரா என வியந்தது உண்டு.
அவரது இணையத்தளத்தை தொடர்ந்து வாசிப்பேன்.
கதாவிலாசம் ரொம்ப பிடிக்கும்.
எனது வாசிப்பு தரத்தை உயர்த்தியதில் அவரது எழுத்துக்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
நிறைய விடயங்களை அவரது எழுத்து மூலமாக தெரிந்துகொண்டேன்.
அவரை நான் பார்த்ததில்லை எனினும் எனது குருவாகவே நினைக்கிறேன்.
இவ்வளவு நேரம் அவருடன் பேசிய நீங்களும் அதிஷ்டசாலி தான்.
என்னை மாதிரியே அவரை நீங்களும் குருவாக நினைப்பதை அறிந்து மகிழ்கிறேன்.. வருகைக்கு மிக்க நன்றி..
நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு!!!
ம்ம்..... எனக்கு எப்போ சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியல!!!!
நன்றி அன்பு.. உங்களை சந்திக்கும்போது எஸ்ராவின் புத்தகத்தை தருகிறேன்.. வாசித்துப் பாருங்கள்.. நிச்சயம் பிடிக்கும்..
"நம்முடைய விருப்பங்களும் குடும்பத்தின் தேவைகளும் எப்போதும் ஒத்துப்போகாது.. படகில் இருக்கும் துடுப்புகள் எதிரெதிர் திசைகளில் இயங்குவதுபோல நம்மை அலைக்கழிக்கும். நாம்தான் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டும்.."
அப்பட்டமான உண்மை!
நல்லாயிருந்தது!
ரொம்ப நன்றி ராம்..
ஆகா! எழுத்தளர்கள் வித்தியாசமானவர்கள்... எனக்கு உவரைத் தெரியாது... ஆனால் உங்கள் நிலையில் என்னை வைத்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பன் என்று வியங்குது வாழ்த்துக்கள்...
உங்கள் கனவு மெய்த்ததற்கு வாழ்த்துக்கள்!!
//புல்லட் பாண்டி said..
ஆகா! எழுத்தளர்கள் வித்தியாசமானவர்கள்... எனக்கு உவரைத் தெரியாது... ஆனால் உங்கள் நிலையில் என்னை வைத்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பன் என்று வியங்குது வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புல்லட்..
//Bhuvanesh said..
உங்கள் கனவு மெய்த்ததற்கு வாழ்த்துக்கள்!!//
ரொம்ப நன்றி நண்பா...
"என்னை சந்திக்க விருப்பம் என்று சொல்லி இருந்தால் நானே உங்களை வந்து பார்த்து இருந்திருப்பேனே.."
ராமகிருஷ்ணன் எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவர்.
ஆமாம் நண்பா.. ஆச்சர்யமானவர் மட்டும் அல்ல நண்பா.. மிக நல்ல மனிதரும் கூட..
//"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.."//
மிகச் சரியான வார்த்தைகள்.
"நம்முடைய விருப்பங்களும் குடும்பத்தின் தேவைகளும் எப்போதும் ஒத்துப்போகாது.. படகில் இருக்கும் துடுப்புகள் எதிரெதிர் திசைகளில் இயங்குவதுபோல நம்மை அலைக்கழிக்கும். நாம்தான் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டும்.."
ஆம் உண்மை தான். பாலன்ஸ் பண்ண முடியாமல் தான் பலருடைய வாழ்க்கைப் படகு ஒன்று திசைமாறிப் போகிறது. இல்லைனா கவிழ்ந்துவிடுகிறது. பாலன்ஸ் பண்ணத் தெரிந்தவர்கள் தான் சாதிக்கிறார்கள்.
நான் அவரது படைப்புகளைப் படித்தது இல்லை. அவரது இணையத்தள முகவரி என்ன?
me the 50?
congrats. :)
hey dude its cool read ur exp. with him yaar...
congrats
//"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.."//
மிகவும் சரியான வார்த்தை. மனம் என்பது அவ்வாழ்வு எளிதல்லவே மாறுவதற்கு.
நண்பா... எஸ்ரா வின் எழுத்துக்களை படிக்கும் போது நான் அவரினை பற்றிய சில ஊகங்களை அனுமானித்திருந்தேன்.. குறிப்பாக அவரின் எளிமையான எழுத்துநடை என்னை மிகவும் பாதித்தது.. அவரும் அப்டியே எளிமையானவராக இருக்கிறார்..
//
ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.
//
மிக உன்னதமான கருத்து..
இத தான்.. “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது”னு பாடினர்.
அருமையான பதிவு கா.பா.
//
மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே...
//
இருக்காதா பின்ன :))))
//மகா said..
ஆம் உண்மை தான். பாலன்ஸ் பண்ண முடியாமல் தான் பலருடைய வாழ்க்கைப் படகு ஒன்று திசைமாறிப் போகிறது. இல்லைனா கவிழ்ந்துவிடுகிறது. பாலன்ஸ் பண்ணத் தெரிந்தவர்கள் தான் சாதிக்கிறார்கள்.நான் அவரது படைப்புகளைப் படித்தது இல்லை. அவரது இணையத்தள முகவரி என்ன?//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகா.. அவருடைய இணையதள முகவரி.. www.sramakrishnan.com
//karthik said..
me the 50?
congrats. :)//
வருகைக்கு நன்றி கார்த்திக்
//mayvee said..
hey dude its cool read ur exp. with him yaar...//
thanks boss..
//ramya said..
மிகவும் சரியான வார்த்தை. மனம் என்பது அவ்வாழ்வு எளிதல்லவே மாறுவதற்கு.//
எல்லாம் அனுபவம்தானே தோழி.. வருகைக்கு நன்றி..
//கவின் said..
நண்பா... எஸ்ரா வின் எழுத்துக்களை படிக்கும் போது நான் அவரினை பற்றிய சில ஊகங்களை அனுமானித்திருந்தேன்.. குறிப்பாக அவரின் எளிமையான எழுத்துநடை என்னை மிகவும் பாதித்தது.. அவரும் அப்டியே எளிமையானவராக இருக்கிறார்..//
ஆமாம் கவின்.. பழகுவதற்கு எளிமையான, இனிமையான மனிதர்..
//ஆளவந்தான் said..
அருமையான பதிவு கா.பா.//
மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே...//
இருக்காதா பின்ன :))))//
நன்றிண்ணே.. நீங்க நம்ம ஊர்க்காரரா.. ரொம்ப நன்றி..
ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.." ///
சிறப்பான வரிகள்...
உண்மைதான். மிகப்பெரிய பிரபலங்கள் எப்பொழுதும் எளிமையாகவே இருக்கின்றனர்.
உங்களுக்கு தோழி! எனக்கு தோழர் ஒருவர்.. நான் அறிவுமதியின் மீது கொண்ட ஈடுபாட்டை அறிந்து என்னை அறிவுமதி அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றார். நுங்கம்பாக்கத்தில் உள்ளது. நிறைய அழகான கருத்துக்களை பேசினார். என்னுடைய கவிதைகளையும் அவரிடம் காட்டினேன்... பாராட்டினார்.. பாருங்கள் எனக்கு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள தோன்றவில்லை.. ஒரு கையெழுத்தும் கூட அவரிடம் வாங்கவில்லை.. தவறவிட்டுவிட்டேன்.
பிரபலங்கள் எப்பொழுதும் மிக எளிமையாகவேத்தான் இருக்கிறார்கள்..
என் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ள வைத்தது, உங்களின் பதிவு.
அன்புடன்
ஷீ-நிசி
முதல் வருகைக்கு நன்றி நண்பா.. உங்களுக்கும் என்னைப் போலவே ஒரு அனுபவம் இருப்பது சந்தோஷம்..
// நான் முதன்முதலில் வாங்கிய அவரின் புத்தகமான கதாவிலாசத்தை கொண்டு போயிருந்தேன்.//
நானும் அவருடைய இந்த புத்தகத்தான் முதல்ல வாங்குனேன்.
போனமாசம் நாலு நாள் அவர் இங்க(ஈரோட்டுல) தான் இருந்தார்.சரி விடுங்க அடுத்த தடவா வேர யாராவந்தாங்கன்ன உங்களுக்கு தெரியப்படுத்துரேன்.
ரொம்ப நன்றி கார்த்திக்.. முடிந்தால் உங்களை தொடர்பு கொள்ளுகிறேன்..
புகை படம் எடுக்க வில்லையா?
இணைத்து இருக்கலாமே?
தங்களின் ஆசை நிறைவேறியதில்
சந்தோஷமே!!!!!!!!
நல்ல தோழி
Post a Comment