உலகத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவன். திமிர் பிடித்த பணக்காரர்களே உலகில் இருக்கக் கூடாது என நம்பும் இன்னொருவன். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வுகள்.. போராட்டங்கள்.. தாங்கள் தொலைத்த வாழ்க்கையை இவர்கள் மீண்டும் மீட்டு எடுப்பதுதான் "தநா 07 அல 4777" (எம்ஜியாரின் கார் நம்பர்). வித்தியாசமான கதைக்களம். "Taxi no.9211" என்னும் ஹிந்திப் படத்தின் தமிழ் பதிப்பு.
மணி(பசுபதி) ஒரு முன்கோபி.பத்து வருடங்களில் பல வேலைகள் மாறி விட்டவன். சமுதாயத்தில் நடக்கும் தவறுக்கு எல்லாம் பணம்தான் காரணம் என்று நினைப்பவன். வீட்டில் மனைவி சுபாவிடம்(சிம்ரன்) எல்ஐசியில் வேலை செய்வதாக உதார் விட்டுக் கொண்டு டாக்ஸி ஒட்டிக்கொண்டு இருக்கிறான். கெளதம்(அஜ்மல்) பொறுப்பு இல்லாத ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. சாகும்போது அவனுடைய அப்பா சொத்தை எல்லாம் தன்னுடைய நண்பர் பெயருக்கு மாற்றி விடுகிறார். சொத்தைக் கேட்டு தன் தந்தையின் நண்பர் மீது கேஸ் போட்டு இருக்கிறான் கெளதம். அவனுடைய காதலி பூஜா(மீனாக்ஷி).
கெளதம் ஒரு முக்கியமான உயிலை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். பாங்கில் இருக்கும் உயிலை எடுக்க மணியின் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. போலீசிடம் மணியை மாட்டிவிட்டு கெளதம் தப்பிக்கிறான். ஆனால் கௌதமின் உயில் இருக்கும் பேங்க் லாக்கர் சாவி இப்போது மணியிடம் சிக்கிக் கொள்கிறது. இருவருக்கும் ஒரு யுத்தம் தொடங்குகிறது.ஒருவரை ஒருவர் பழி வாங்க முயல்கிறார்கள். தான் செய்வது தப்பு என்பதை இருவருமே உணர மறுக்கிறார்கள். தன் கணவர் பொய் சொன்னதை அறிந்து மணியை விட்டு பிரிந்து போகிறார் அவனுடைய மனைவி. சொத்து கௌதமுக்கு இல்லை என்று தெரிந்தவுடன் நண்பர்களும் அவனுடைய காதலியும் அவனைப் பிரிகிறார்கள். கடைசியில் இருவரும் தங்களுடைய உண்மையான சந்தோஷத்தை கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.
ரகுவரனுக்கு அடுத்தபடியாக, இன்று தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் என்றாலும் பொருந்தக் கூடியது பசுபதிக்குத்தான் என்று நினைக்கிறேன். அருமையான உடல்மொழி. அஜ்மல்லை பார்க்கும்போதெல்லாம் கண்களில் விஷத்தைக் காண்பிக்கிறார். சிம்ரனிடம் கெஞ்சும் காட்சிகளிலும், மகனிடம் அழும் காட்சியிலும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். ஹிந்தியில் நானா படேகர் நடித்த பாத்திரம் பசுபதிக்கு ரொம்ப நன்றாக பொருந்தி வருகிறது. அஜ்மல் - செம ஸ்டைலாக இருக்கிறார். நடையே ஒரு பணக்கார தோரணைதான். அவருடைய ரோலை சரியாக செய்துள்ளார். சிம்ரனுக்கு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டுள்ளார். அஜ்மலின் காதலியாக மீனாக்ஷி. "கருப்பசாமி குத்தகைதாரர்" படத்தில் குடும்ப விளக்காக வந்தவரை குட்டி குட்டி உடைகள் குடுத்து ஒரு குத்துப்பாட்டுக்கு கும்மி எடுத்திருக்கிறார்கள்.(அடேங்கப்பா.. இந்த ஒரு வரியில எத்தன "கு" வருது.. சரி சரி..). ஆனால் அவருக்கு கவர்ச்சி எடுபடவில்லை. படத்தின் கடைசியில் ஒரே ஒரு சீனுக்கு பூஜா. அழகாக இருக்கிறார்.
படத்திற்கு தேவையே இல்லாமல் இரண்டு கதாநாயகர்களுக்கும் அறிமுகப் பாடலகள். இசை விஜய் அன்டோனி. "ஆத்திச்சூடி" பாடல் நன்றாக படமாக்கப் பட்டுள்ளது. பாடல்களை விட பின்னணி இசை அருமை. படத்தின் முக்கியமான இன்னொரு விஷயம் வசனம். "ரொம்ப தண்ணி அடிக்காம கிளம்பி வீட்டுக்குப் போ" எனும் அஜ்மலிடம் பசுபதி சொல்லுவார்.." வீட்டுக்கா.. என் வீடுதான் பஸ் ஏறி கோவைக்குப் போயிடுச்சே..". நிறைய இடங்களில் வசனம் ரொம்ப ஷார்ப். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கனக்கச்சிதம்.
படத்தில் அங்கங்கே சின்னக் குறைகளும் உண்டு. போலீஸ்காரர்களை கிறுக்கர்களாக காண்பிப்பது,, ஒரு சில காட்சிகளில் தெரியும் நாடகத்தன்மை.. விபத்து நடந்த கார் எப்படி பசுபதிக்கு உடனே கிடைத்தது.. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுப்பது.. இப்படி சில... ஆனால் எல்லாவற்றையும் அந்த கிளைமாக்ஸ் மறக்க செய்து விடுகிறது. அறிமுக இயக்குனர் லட்சுமிகாந்தனுக்கு இந்தப்படம் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும். ரொம்ப சின்னப் படம்தான். மொத்தமே நூறு நிமிடம் கூட இல்லை. ஆனால் ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த உணர்வு.
தநா 07 அல 4777 - நம்பி பயணிக்கலாம்.
(ஆஸ்கார் விருதை வென்று தமிழுக்கும் தமிழனுக்கும் பெயர் வாங்கி தந்து இருக்கும் இசைப்புயல் A.R. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.. இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இன்று விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் "slumdog millionaire" படத்துக்கும் மற்றொரு ஆவணப்படமான "smile pinkey" மற்றும் விருது பெற்ற எல்லாருக்குமே வாழ்த்துக்கள்.. )
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
40 comments:
mme th 1st
நாளைக்கு தான் இந்த படத்தை பார்க்கபோகிறேன்....
ஆனால் தல...
இப்பவே சஸ்பென்ஸ் யை பிரேக் பண்ணிடிங்கள ...
அப்ப படத்தை பார்க்கலாம்ன்னு
சொல்லுங்க.......
congrats for th award winners
//mayvee said..
அப்ப படத்தை பார்க்கலாம்ன்னு
சொல்லுங்க.......//
கண்டிப்பாக படத்தை ஒரு தடவை பார்க்கலாம் நண்பா..
குடும்ப விளக்காக வந்தவரை குட்டி குட்டி உடைகள் குடுத்து ஒரு குத்துப்பாட்டுக்கு கும்மி எடுத்திருக்கிறார்கள்
அப்ப கண்டிபா பாக்கனும்
கிடைக்கிற சந்தர்பத்தினை அற்புதமாக பயன் படுத்திக்கிறார் பசுபதி.
அவர் என்னக்கு பிடித்த நடிகனும் கூட
என்னங்க.... இந்த படமும் பார்த்தாச்சா?? நம்பரைப் பார்த்ததும் நினைச்சேன். ஹிந்தி தழுவல் என்று... விமர்சனம் நல்லா இருக்குங்க..
சின்னப்படமா????
சிம்ரன்???? எப்படி இருக்காங்க நம்ம மாமி???
பசுபதி ஒரு நல்ல நடிகர்.... அவரை உபயோகிக்க தமிழ் சினிமா ஏன் தயங்குகிரது?????
இந்தப் படமாவது அவருக்கு நல்ல வாய்ப்பைத் த்ரட்டும்
this movie is a remake of the hollywood movie Changing Lanes(2002) acted by samuel jackson & ben affleck.
//ரகுவரனுக்கு அடுத்தபடியாக, இன்று தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் என்றாலும் பொருந்தக் கூடியது பசுபதிக்குத்தான் என்று நினைக்கிறேன். அருமையான உடல்மொழி.//
பசுபதிக்காக பார்க்கலாம் என்று சொல்லுங்கள்
நன்றாக இருந்தது அண்ணா உங்கள் விமர்சனம்..
இந்த வருடத்தில் வெண்ணிலா கபடி குழு-விற்கு அடுத்தபடியாக ஒரு நல்ல படம்
//கவின் said..
குடும்ப விளக்காக வந்தவரை குட்டி குட்டி உடைகள் குடுத்து ஒரு குத்துப்பாட்டுக்கு கும்மி எடுத்திருக்கிறார்கள் அப்ப கண்டிபா பாக்கனும்//
வாங்க கவின்.. சேட்ட ஜாஸ்தியாப் போச்சு..
// ஆதவா said..
சிம்ரன்???? எப்படி இருக்காங்க நம்ம மாமி???//
பழைய மாதிரி நினைச்சுக்கிட்டு போனா.. நொந்து போய் வரணும் நண்பா.. நல்லா நடிச்சு இருக்காங்க..
//பெயரில்லா கூறியது...
this movie is a remake of the hollywood movie Changing Lanes(2002) acted by samuel jackson & ben affleck.//
தகவல் தந்த பெயரிலிக்கு நன்றி..
//சொல்லரசன் said..
பசுபதிக்காக பார்க்கலாம் என்று சொல்லுங்கள்
//
படமும் ஓரளவுக்கு நன்றாகத்தான் உள்ளது நண்பா..
//anbu said..
நன்றாக இருந்தது அண்ணா உங்கள் விமர்சனம்..இந்த வருடத்தில் வெண்ணிலா கபடி குழு-விற்கு அடுத்தபடியாக ஒரு நல்ல படம்//
ஆமாம் அன்பு.. நல்ல படம்.. பாருங்கள்..
Padame paaka venanu ninaikiren, avalo thathroobama kadhai vimarsanam. well done sir.
ரொம்ப நன்றி தமிழிசை.. அதுக்காக படம் பார்க்காம இருக்காதீங்க.. நல்ல படம்.. பாருங்க..
Good Review!
நன்றி கணேஷ்..
நல்ல விமர்சனம்
நல்ல விமர்சனம்
நல்ல படமா?விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது.பார்க்கிறேன்.
கணணிக்குள் வந்தபிறகு!
ரஹ்மானின் திறமைக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
//முரளிகண்ணன் said..
நல்ல விமர்சனம்//
ரொம்ப நன்றி முரளிகண்ணன் அவர்களே..
//ஹேமா said..
நல்ல படமா?விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது.பார்க்கிறேன்.
கணணிக்குள் வந்தபிறகு!
ரஹ்மானின் திறமைக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.//
நன்றி ஹேமா.. முடிந்த அளவுக்கு திரையில் பாருங்கள்..
"திரை விமர்சனம்...நன்றாக உள்ளது"...அனைவருக்கும் படம் பர்க்கும் ஆவலை உங்கள் பதிவு நிச்சயம் தூண்டும் என்பது திண்ணம்"....
//RAMASUBRAMANIA SHARMA said..
"திரை விமர்சனம்...நன்றாக உள்ளது"...அனைவருக்கும் படம் பர்க்கும் ஆவலை உங்கள் பதிவு நிச்சயம் தூண்டும் என்பது திண்ணம்"....//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
விமர்சனம் அருமை நண்பா.
கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நான் Hindi Version வந்தப்பவே பாக்கனம்னு நினைச்ச படம்..
Mechanical Dept Magesh(Lecturer) Teriyumaa...??
I have read thru your review and realized that the hindi movie has been "inspired" by the movie Changing Lanes.
விமர்சனம் அருமை நண்பா...
இந்த வாரம் சன் பிக்சர்சின் "தீ" ரிலீஸ் ஆகிறது.
So TOP10 movies of next week will be
1)தீ
2)Outlander
3)படிக்காதவன்
4)திண்டுக்கல் சாரதி
5)பெருமாள்
6)வெண்ணிலா கபடிக்குழு (வேற குடும்ப ரிலீஸ் இல்ல)
7)தநா 07 அல 4777
8).......
:-)
//vinoth gowtham said..
விமர்சனம் அருமை நண்பா.
கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நான் Hindi Version வந்தப்பவே பாக்கனம்னு நினைச்ச படம்..//
நன்றி நண்பா.. மகேஷ் பற்றி விசாரித்து பார்க்கிறேன்..
//rajavel said..
I have read thru your review and realized that the hindi movie has been "inspired" by the movie Changing Lanes.//
ரெண்டு பேர் உறுதியா சொல்லிட்டாங்க.. கடைசியில இது இங்கிலீஷ் பட உல்டாவா..
// சம்பத் said..
இந்த வாரம் சன் பிக்சர்சின் "தீ" ரிலீஸ் ஆகிறது.
So TOP10 movies of next week will be
1)தீ
2)Outlander
3)படிக்காதவன்
4)திண்டுக்கல் சாரதி
5)பெருமாள்
6)வெண்ணிலா கபடிக்குழு (வேற குடும்ப ரிலீஸ் இல்ல)
7)தநா 07 அல 4777
8).......:-)//
இத தனிப் பதிவாவே போடலாமே நண்பா..
நன்றி வலைப்பூக்கள்..
விரிவாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். நல்ல படத்தை நழுவவிடக்கூடாது. உங்கள் விமர்சனத்தால் கண்டுகொண்டோம்.
படம் பாக்க கொஞ்சம் லேட்டா
ஆகும் பாத்துட்டு வரேங்க ...
விமர்சனம் அருமையாக இருக்கு
வருகைக்கு நன்றி அன்புமணி மற்றும் நிலாவன்..
Post a Comment