February 20, 2009

மாசில்லாத உலகம் தா...!!!


இயந்திரங்கள் சிந்தும் எச்சில்களாலும்
ஊர்திகள் ஊதும் கரும்புகையாலும் - மட்டுமா
இந்த பூலோகம் மாசுற்றுள்ளது?
மாசுற்ற இதயங்கள் கோடி..!!
கல்வியுலகம் காசுக்கு
சோரம் போனது..
இளைஞர் உலகமோ - ஆசையிலும்
போதையிலும் அல்லல்படுகிறது..
உழைக்கும் நெஞ்சங்கள்
பொறாமைகளால் நசுக்கப்படுகிறது..
அரசியல் உலகமோ
ஊழலில் உழல்கிறது..
மாசில்லாத உலகம் தாவென்று
கடவுளைத் தேடிச் சென்றால் -
கோயில்களை இன்று
சாதிக் குட்டிச்சாத்தான்கள் அழுக்காக்குகின்றன..
எங்கும் தேடிப் பார்த்தேன்..
தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!!
இயற்கையை இன்னும் நாம் மாசுபடுத்தினால்
அது இயற்கையாகவே...
தனது கரைகளை அகற்றிக் கொள்ளும்..!!
உண்மையில் மாசில்லாத உலகம் வேண்டின்..
மாசில்லா உள்ளங்கள் வேண்டுவோம்..!!
எண்ணங்களை உயர்த்தி
உலகை உன்னதமாக்குவோம்... !!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

42 comments:

Anbu said...

me the first anna

Anonymous said...

குத்தியாச்சு.... கருத்துரையும் போட்டாச்சு....

Anonymous said...

எங்கும் தேடிப் பார்த்தேன்..
தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!!
*************
:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
me the first anna//

வாங்க அன்பு.. இன்னைக்கு நீங்கதான் முதல் போணியா.. ரொம்ப சந்தோசம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின்.. //
நன்றி கவின்..படம் எல்லாம் புதுசா இருக்கு..? nice..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இயற்கையை இன்னும் நாம் மாசுபடுத்தினால்
அது இயற்கையாகவே...
தனது கரைகளை அகற்றிக் கொள்ளும்..!!//
சரியா சொல்லிட்டீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

புதுசா வந்து இருக்கீங்க.. கருத்துக்கு நன்றி..

சொல்லரசன் said...

//கடவுளைத் தேடிச் சென்றால் -
கோயில்களை இன்று
சாதிக் குட்டிச்சாத்தான்கள் அழுக்காக்குகின்றன.. //

அழகான கவிதை அர்த்தம் உள்ள வரிகள்,வாழ்த்துகள் கார்த்தி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
அழகான கவிதை அர்த்தம் உள்ள வரிகள்,வாழ்த்துகள் கார்த்தி.//

ரொம்ப நன்றி நண்பா..

ஆதவா said...

மாசில்லாத உலகம் என்று எங்குமே இல்லை.. நீங்கள் சொன்னதைப் போல தாயின் கருவறை தவிர்த்து.... வேண்டுமெனில் கல்லறையையும் சேர்த்துக் கொள்வோம்!!

மனிதன் என்று பேச ஆரம்பித்தானோ, அன்றே மாசும் படற ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொருவர் மனதிலும் மாசு படிந்துள்ளது. அது அவர்களுக்கே தெரியாமல் அவர்களை அரித்துக் கொண்டிருக்கிறது..  இது எப்படி என்றால், கொழுப்பால் அடைப்பு ஏற்படும் இதயக்குழாய்களைப் போன்று!!!

அரசியல்!!! அது சொல்லவே வேண்டாம்!!

கடவுளைத் தேடிச் சென்றால் -
கோயில்களை இன்று
சாதிக் குட்டிச்சாத்தான்கள் அழுக்காக்குகின்றன..

உண்மையிலேயே கடவுள்கள் எழுந்ததன் நோக்கம், ஒரு நல்ல உலகம் பிறக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம்.. இன்று கடவுள்கள் இருப்பதில்லை... (கடவுளைக் கொலை செய்வது குறித்து நான் கவிதை எழுதியிருக்கிறேன் :) )

இன்றைய சூழ்நிலைக்கு மிகத் தேவையான கவிதை இது!

ஆதவா said...

ஓட்டு!!! போட்டாச்சு

வேணும்னா விரல்ல மை தடவியிருக்கு பாருங்க.!!

வினோத் கெளதம் said...

//எங்கும் தேடிப் பார்த்தேன்..
தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!!//

அருமை..

*இயற்கை ராஜி* said...

nice kavidhai:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
மனிதன் என்று பேச ஆரம்பித்தானோ, அன்றே மாசும் படற ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொருவர் மனதிலும் மாசு படிந்துள்ளது. அது அவர்களுக்கே தெரியாமல் அவர்களை அரித்துக் கொண்டிருக்கிறது.. இது எப்படி என்றால், கொழுப்பால் அடைப்பு ஏற்படும் இதயக்குழாய்களைப் போன்று!!! //

வாங்க ஆதவா.. உங்க தளம் கவிதைன்ன உடனே அழகா, பிரிச்சு, விரிவா விமர்சனம் பண்ணி இருக்கீங்க ..? நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வினோத் மற்றும் இயற்கை..

ச.பிரேம்குமார் said...

எல்லோருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது.

உங்களைப் போல சமூக அக்கறையுள்ள ஆசிரியர்களால் கட்டாயம் மாற்றம் கொண்டு வர முடியும்.

மாணவர்கள் மாறினாலே சமுதாயம் மெல்ல மெல்ல மாறிவிடும்

குடந்தை அன்புமணி said...

//உண்மையில் மாசில்லாத உலகம் வேண்டின்..
மாசில்லா உள்ளங்கள் வேண்டுவோம்..!!
எண்ணங்களை உயர்த்தி
உலகை உன்னதமாக்குவோம்... !!!//

நிச்சயமாக அனைவரும் முயற்சி செய்யவேண்டும். செய்யணும்!

அசோசியேட் said...

படிச்சுட்டு ஒரு பத்து பேர் சிந்திச்சா சரி !

குமரை நிலாவன் said...

கல்வியுலகம் காசுக்கு
சோரம் போனது..
இளைஞர் உலகமோ - ஆசையிலும்
போதையிலும் அல்லல்படுகிறது

உண்மைதான் ....

தாயின் கருவறை தவிர மாசில்லா இடம் என்கண்களில் சிக்கவே இல்லை!!

அருமை

இயற்கையை இன்னும் நாம் மாசுபடுத்தினால் அது இயற்கையாகவே... தனது கரைகளை அகற்றிக் கொள்ளும்..!!

ரெம்ப சரிதாங்க

Thamira said...

மாசுபடுத்தினால் அது இயற்கையாகவே... தனது கரைகளை அகற்றிக் கொள்ளும்.// இந்த வரிகள் ஆழமான டெக்னிகல் செய்தியைத்தருவது சிறப்பு. கருவறையைப்பற்றிய வரிகள் காலங்காலமாக சொல்லப்படுவது, தவிர்த்திருக்கலாம்.

அழகான சிந்தனை.. அழகாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துகள்.! (அந்தப்படம் இன்னும் அழகு.. கொஞ்சம் பெரிதாக போட்டிருக்கலாம்)

SurveySan said...

அழகோ அழகு!

*இயற்கை ராஜி* said...

குத்தியாச்சு.... கருத்துரையும் போட்டாச்சு....

அன்புடன் அருணா said...

//"மாசில்லாத உலகம் தா...!!!"//

ம்ம்ம்....யாரைக் கேட்பது?
அன்புடன் அருணா

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம் said..
உங்களைப் போல சமூக அக்கறையுள்ள ஆசிரியர்களால் கட்டாயம் மாற்றம் கொண்டு வர முடியும்.//

நன்றி பிரேம்.. என்னாலான முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அன்புமணி said..
நிச்சயமாக அனைவரும் முயற்சி செய்யவேண்டும். செய்யணும்!//

நன்றி நண்பா.. நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டால் இது சாத்தியமே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அசோசியேட் said..
படிச்சுட்டு ஒரு பத்து பேர் சிந்திச்சா சரி !//
அந்த நம்பிக்கைல தான் நண்பா எழுதி இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
ரெம்ப சரிதாங்க//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தாமிரா said..
இந்த வரிகள் ஆழமான டெக்னிகல் செய்தியைத்தருவது சிறப்பு. கருவறையைப்பற்றிய வரிகள் காலங்காலமாக சொல்லப்படுவது, தவிர்த்திருக்கலாம்.அழகான சிந்தனை.. அழகாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துகள்.! (அந்தப்படம் இன்னும் அழகு.. கொஞ்சம் பெரிதாக போட்டிருக்கலாம்)//

ரொம்ப நன்றி தாமிரா.. முதல் முறையாக வருகை தந்து உள்ளீர்கள்.. சிறு குறையையும் சுட்டிக் காட்டி இருகிறீர்கள்.. மாற்றி கொள்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//surveysan said..
அழகோ அழகு!//

வாழ்த்துக்கு நன்றி தோழரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ம்ம்ம்....யாரைக் கேட்பது?
அன்புடன் அருணா//

ஆதங்கம் புரிகிறது.. நிலைமை ஒரு நாள் மாறும் என்று நம்புவோம் தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இயற்கை said..
குத்தியாச்சு.... கருத்துரையும் போட்டாச்சு....//
ஓட்டுக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான கவிதை

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி நண்பரே..

ராமலக்ஷ்மி said...

//தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!!//

உண்மை.

//உண்மையில் மாசில்லாத உலகம் வேண்டின்..
மாசில்லா உள்ளங்கள் வேண்டுவோம்..!!//

அருமை.

//எண்ணங்களை உயர்த்தி
உலகை உன்னதமாக்குவோம்...//

நல்ல கவிதை. விகடன் ’குட் ப்ளாக்ஸ்’ல் இன்று. வாழ்த்துக்கள் அதற்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றிங்க.. இப்போத்தான் நானும் பார்த்தேன்.. சந்தோசம்..

Anonymous said...

//தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!! //
கவிதை அருமையாக உள்ளது நண்பரே!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி சுபாங்கி அவர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி மேடம்..

தமிழ் said...

/எங்கும் தேடிப் பார்த்தேன்..
தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!! /

இன்று வாசித்தேன் தங்களின் கவிதை
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

ஹேமா said...

வணக்கம் கா.பாண்டியன்.முதன் முதல் வந்திருக்கிறேன் உங்கள் பக்கம்.பதிவுகள் பார்க்கிறேன்.கவிதை கண்ணில் பட்டது.

//எங்கும் தேடிப் பார்த்தேன்..
தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!!//

இறைவனே கதிகலங்கித்தனே தவிக்கிறான்.நான் மனிதனை நல்லவனாகப் படைத்தேன்.மனிதன் ஏன் இப்படி ஆனான் என்றபடி!

கார்த்திகைப் பாண்டியன் said...

//திகழ்மிளிர் said..
இன்று வாசித்தேன் தங்களின் கவிதை
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்//

ரொம்ப நல்ல பெயர்.. வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
இறைவனே கதிகலங்கித்தனே தவிக்கிறான்.நான் மனிதனை நல்லவனாகப் படைத்தேன்.மனிதன் ஏன் இப்படி ஆனான் என்றபடி!//

நியாயமான ஆதங்கம் தோழி.. வருகைக்கு நன்றி