February 22, 2009

கேட்கக்கூடாத கேள்விகள் பத்து...!!!

(எல்லாரும் பத்து கேள்வின்னு பதிவு போடும்போது நீ மட்டும் ஏண்டா சும்மா இருக்க பாண்டியான்னு நண்பர்கள் ஏத்தி விட்டதால.. இந்த பதிவு.. )
கலைஞர் மு. கருணாநிதியிடம்..
இன்னும் கலைஞர் தொலைக்காட்சியில செய்திக்கு முன்னாடி "தமிழர்களே தமிழர்களே" அப்படின்னு சீன் போடும்போது உங்களுக்கே மனசாட்சி உறுத்தலையா?
செல்வி ஜெ. ஜெயலலிதாவிடம்..
சிறுதாவூர், கொடநாடுன்னு போய் ரெஸ்ட் எடுக்குறீங்க.. ஆண்டிப்பட்டில ஆடு செத்ததுக்கும், மன்னார்குடியில மாடு செத்ததுக்கும் கருணாநிதிதான் காரணம்னு அறிக்கை விடுறீங்க.. கம்யூனிஸ்ட் மக்களை உள்ள வச்சுகிட்டே காங்கிரஸ் மக்களை கூட்டணிக்கு கூப்பிடுறீங்க.. கடைசியில நான் ஒரு சந்நியாசி மாதிரி வாழுறேன்னு சொல்றீங்க.. உங்களைப் பார்த்து உங்க கட்சிக்காரனே மண்டை காஞ்சு அலையுறது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
மருத்துவர் ராமதாசிடம்..
தமிழ் மக்களுக்காக இவ்வளவு போராடுற நீங்க.. மத்திய அமைச்சரவைல இருக்குற உங்க மகன் அன்புமணியும் மற்ற அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்ல மாட்டேங்குறீங்களே.. ஏன்?
விஜயகாந்த்திடம்...
கருப்பு எம். ஜி. ஆர்..? இன்னும் மக்களோட மட்டும்தான் என்னோட கூட்டணின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?
சரத்குமாரிடம்...
831..? திருமங்கலம்..? யாருங்க அந்த ஜோசியர் உங்களைத் தேர்தல்ல நிக்க சொன்னது? சுப்ரமணியசாமி விட்ட இடத்துக்கு அடுத்து நீங்கதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்கு தெரியுமா?
கமல்ஹாசனிடம்..
மர்மயோகி படம் மருதநாயகம் பார்ட் டூன்னு சொல்றாங்களே.. உண்மையா சார்?
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம்..
நான் கடவுள் பார்த்துட்டு அகோரி பாபாக்கள நான் இமயமலைல பார்த்தேன்னு எல்லாம் அடிச்சு விடுறீங்களே தலைவா.. சரி விடுங்க.. ரசிகர்கள் சந்திப்புல தந்திரன்.. ச்சீ.. எந்திரன் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் உக்கார்ந்து பேசுவோம்னு சொன்னீங்களே.. அது ச்சும்மா உல்லுலாயீ தான.?
சிம்பு - கௌதமிடம்..
கெட்டவன்..? போடா போடி..? சென்னையில் ஒரு மழைக்காலம்..? அல்லு அரவிந்தோட தெலுங்கு படம்? அட போங்கப்பா.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா?
பதிவர் கார்க்கியிடம்..
அஜித் படம்னா நீங்க உசிர விடுவீங்கலாமே? அப்படியா?
(பரிசலின் பதிவுக்கு எதிர்பதிவு போட்டு இந்த பத்து கேள்வி சீசன ஆரம்பிச்சதே கார்க்கிதான்னு நினைக்கிறேன்.. அதனால அவரையும் உள்ள இழுத்து விட்டாச்சு.. )
பதிவர் கார்த்திகைப்பாண்டியனிடம்..
எல்லாரும் எழுதுனாங்க.. நானும் எழுதுனேன்னு இப்படி ஒரு பத்து கேள்வி பதிவ எழுதி இருக்கியே.. உனக்கே வெக்கமா இல்லையா?
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

53 comments:

அத்திரி said...

உள்ளேன்....................present

அத்திரி said...

வீட்டுக்கு ஆட்டோ ரெடியா இருக்கு அனுப்பட்டுமா....... இல்ல அனுப்ப சொல்லவா?

அத்திரி said...

அனைத்துக்கேள்விகளும் அருமை .அதிலும் கலைஞரிடம் கேட்ட கேள்வி .கும்மாங்குத்து.........

அத்திரி said...

நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ஆட்டோ அனுப்பினா மருவாதியில்ல டாட்டா சுமோதான் அனுப்பனும்

அத்திரி said...

//பதிவர் கார்க்கியிடம்..
அஜித் படம்னா நீங்க உசிர விடுவீங்கலாமே? அப்படியா? //


கார்க்கியை வம்புக்கிழுத்த உங்களுக்கு வேட்டைக்காரன் பட டிக்கெட் இலவசம்.........

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் கொஞ்ச பயந்த சுபாவம் நண்பா.. ச்சின்ன பையன் பொழச்சு போறான்னு விட்டுருங்க..

ஸ்ரீதர்கண்ணன் said...

பதிவர் கார்த்திகைப்பாண்டியனிடம்..
எல்லாரும் எழுதுனாங்க.. நானும் எழுதுனேன்னு இப்படி ஒரு பத்து கேள்வி பதிவ எழுதி இருக்கியே.. உனக்கே வெக்கமா இல்லையா?

ithu superu

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க ஸ்ரீதர்கண்ணன்.. அதுதான் கேட்க கூடாத கேள்வின்னு சொல்லியாச்சுல..

Manoj said...

hello sirr im manoj ....kalakuriga ayeeya

vinoth gowtham said...

//பதிவர் கார்க்கியிடம்..
அஜித் படம்னா நீங்க உசிர விடுவீங்கலாமே? அப்படியா? //

நீங்க வேற..அவர் கொஞ்ச நாளா அஜீத்தை(அந்த அளவுக்கு ) வம்பு அடிப்பது இல்லை..
இதுல காண்டு ஆகி "அஜீத்தை பார்த்து கேக்க விரும்பும் பத்து கேள்விகள்"
அப்படின்னு எதாச்சும் பதிவு போட்டுற போறாரு..

அசோசியேட் said...

மேட்டர் மறுபடியும் ஒரு ரவுண்டு வரப்போகுதுன்னு நெனைக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//manoj said..
hello sirr im manoj ....kalakuriga ayeeya//
பதிவுலகில் நம்ம மாணவர்? ஆச்சரியம்.. வருக..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
ங்க வேற..அவர் கொஞ்ச நாளா அஜீத்தை(அந்த அளவுக்கு ) வம்பு அடிப்பது இல்லை..இதுல காண்டு ஆகி "அஜீத்தை பார்த்து கேக்க விரும்பும் பத்து கேள்விகள்" அப்படின்னு எதாச்சும் பதிவு போட்டுற போறாரு..//

அதுதானே நண்பா நமக்கு வேணும்.. நல்லா பொழுது போகும் பாருங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

// அசோசியேட் said..
மேட்டர் மறுபடியும் ஒரு ரவுண்டு வரப்போகுதுன்னு நெனைக்கிறேன்.//

ஹி ஹி எதோ நம்மளால முடிஞ்சது..

ஆதவா said...

ஏன்???? ஏன்???

நல்லவேளை,  
கலைஞர் ஆஸ்பத்திரியில இருக்காரு,
அம்மா, வறுமையில இருக்காங்க,
விஜயகாந்த் ஆக்டிங்க்ல இருக்காரு,  
ராமதாசு தமிழ் வளர்த்துட்டு (இன்னும்தான்) இருக்காரு,
சரத்குமார் நமீதாவோட (வெயிட் வெய்ட்.... ரொம்ப கற்பனைக்குப் போயிடாதீங்க) படத்தில நடிச்சுட்டு இருக்காரு,
கமல்ஹாசன் ரொம்ப சோகமா ஆஸ்கர் விழாவுக்குப்போயிருக்காரு,
நம்ம சூப்பர் ஸ்டாரு, இமயமலையில படம்புடிச்சுட்டு இருக்காரு,
சிம்பு? நொ கமென்ஸ்,
கார்க்கி??? யாருப்பா அது?
கார்த்திகைப் பாண்டியன், ??? அய்யா..... எங்கேய்யா இருக்கீரு???

சம்பத் said...

//மருத்துவர் ராமதாசிடம்..
தமிழ் மக்களுக்காக இவ்வளவு போராடுற நீங்க.. மத்திய அமைச்சரவைல இருக்குற உங்க மகன் அன்புமணியும் மற்ற அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்ல மாட்டேங்குறீங்களே.. ஏன்?///

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.. இதெல்லாம் கேட்கபடாது தெரிஞ்சதா!!!


////விஜயகாந்த்திடம்...
கருப்பு எம். ஜி. ஆர்..? இன்னும் மக்களோட மட்டும்தான் என்னோட கூட்டணின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?//////

மக்கள் காசு குடுத்தாத்தான் கூட்டணிக்கு வருவாங்க கேப்டன் சார்!!! (மதுரை கா.பா கிட்ட கேட்டு பாருங்க :) )


///சரத்குமாரிடம்...
831..? திருமங்கலம்..? யாருங்க அந்த ஜோசியர் உங்களைத் தேர்தல்ல நிக்க சொன்னது? சுப்ரமணியசாமி விட்ட இடத்துக்கு அடுத்து நீங்கதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்கு தெரியுமா? /////

நல்ல பன்ச்.... (இவருக்கும் முட்டையல அடி விழும்னு சொல்லவரீங்களா தல?)

நாங்க உங்க பதிவுக்கு ஓட்ட குத்திட்டோமில்ல...

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
கார்த்திகைப் பாண்டியன், ??? அய்யா..... எங்கேய்யா இருக்கீரு??//

அதுதானே.. எங்க ஆதவாவக் காணோமேன்னு பார்த்தேன்.. நான் உங்ககிட்டயே தான் இருக்கேன் நண்பா... உண்மைல நான் இப்போ வேலை பார்த்துக்கிட்டு இருக்குறது ஈரோட்டுல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.. இதெல்லாம் கேட்கபடாது தெரிஞ்சதா!!!//

வருகைக்கு.. கருத்துக்கு .. நன்றி சம்பத்..

Rajeswari said...

கார்த்திகை பாண்டியனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
1)நீங்கள் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர?
2) நீங்கள் பொன்னியின் செல்வனானது எப்போது ?
மீதி வரும் பதிவுகளில் கேட்கிறேன்

vinoth gowtham said...

erode entha college???

Anonymous said...

தல கலக்கிடீங்க...
10தவது கேள்வி நச்
ஹாஹாஹா

Anonymous said...

எல்லாரும் ஒருத்டர்கிட்டை கேட்ட்க நீங்க பத்து பெயரை கேட்டுட்டிங்க.

ஆதவா said...

ஈரோடு!!! நான் அதிகம் பயணித்த, இப்பொழுது பயணிக்க விரும்பாத ஊர்!!! பல வருத்தங்களைத் தந்த ஊர்!!

ஒரு காலத்தில் வாரம் ஒருமுறை ஈரோடு செல்வேன்... என் அண்ணன் அங்கேதான் இருந்தான்... கடந்த வருடம் அகால மரணமடையும் வரை!!!!:(

எனது மொபைல் கேட்டிருந்தீர்கள் : +91 9894094141

அன்புடன்
ஆதவன்

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

நசரேயன் said...

நல்ல கேளுங்க இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை

கார்த்திகைப் பாண்டியன் said...

//rajeswari said..
கார்த்திகை பாண்டியனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
1)நீங்கள் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர?
2) நீங்கள் பொன்னியின் செல்வனானது எப்போது ?
மீதி வரும் பதிவுகளில் கேட்கிறேன்//

கேளுங்க.. பொறுமையா சொல்றேன்... நான் கார்த்திகை மாசத்துல எல்லாம் பிறக்கலைங்க.. என் பேர் மாறியது ஒரு தனி கதை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham..//

perundurai kongu engineering college நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
தல கலக்கிடீங்க...
10தவது கேள்வி நச்
ஹாஹாஹா//

நன்றி கவின்.. ச்சும்மா ஒரு குசும்புதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said.. //

சாரி ஆதவா.. உங்களுடைய பழைய நினைவுகளை தேவை இல்லாமால் தூண்டி விட்டதற்கு.. நம்பர் குறித்துக் கொண்டேன்.. விரைவில் கூப்பிடுகிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
நல்ல கேளுங்க இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை//

யாராவது கொஞ்சம் யோசிச்சா சரி நண்பா.. நன்றி..

Anonymous said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

MayVee said...

ha ha ha
he he he

MayVee said...

'நசரேயன் கூறியது...
நல்ல கேளுங்க இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை"

????

MayVee said...

"அத்திரி கூறியது...
வீட்டுக்கு ஆட்டோ ரெடியா இருக்கு அனுப்பட்டுமா....... இல்ல அனுப்ப சொல்லவா?"

inga 10 tata suma housefulla waiting....

அனுப்பட்டுமா.......

வேத்தியன் said...

கலக்கல் பதிவு...
சூப்பர்ங்க...

நையாண்டி நைனா said...

அரசியல் கேள்வி கேட்டு, என் டவுசரை கழட்டலாம்னு. பார்க்குறீங்களா?
நடக்காது நைனா, அது... இந்த நைனாகிட்டே நடக்காது.

சொல்லரசன் said...

அரசியல்வாதியையும் அரசியல் பற்றியும் எமுதுவதில்லைஎன்ற உங்கள் சபதத்தை உடைத்தது யாரோ?

//கம்யூனிஸ்ட் மக்களை உள்ள வச்சுகிட்டே காங்கிரஸ் மக்களை கூட்டணிக்கு கூப்பிடுறீங்க.. //

பத்தவச்சிட்யே காபா

Karthik said...

:))

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
வீட்டுக்கு ஆட்டோ ரெடியா இருக்கு அனுப்பட்டுமா....... இல்ல அனுப்ப சொல்லவா?"inga 10 tata suma housefulla waiting.. அனுப்பட்டுமா.......//

ஏனப்பா.. நான் கொஞ்சம் பயந்தவன்.. எனக்கு ஆட்டோவே அதிகம்.. இதுல சூமோ வேறவா.. வேண்டாம் சாமி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன்said..
கலக்கல் பதிவு...
சூப்பர்ங்க...//

வருகைக்கு ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
அரசியல் கேள்வி கேட்டு, என் டவுசரை கழட்டலாம்னு. பார்க்குறீங்களா?நடக்காது நைனா, அது... இந்த நைனாகிட்டே நடக்காது//

விட மாட்டோம் நைனா.. உங்களையும் இதுல எப்படியாவது இழுத்து விடுவோம்ல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
அரசியல்வாதியையும் அரசியல் பற்றியும் எமுதுவதில்லைஎன்ற உங்கள் சபதத்தை உடைத்தது யாரோ?//

நண்பர்கள் கேட்டார்கள் நண்பா.. அரசியல் ஒன்றும் தப்பானதில்லை.. அரசியல்வாதிகள் தான் தப்பு செய்கிறார்கள்.. ஏன் அவர்களைப் பற்றி எழுத மறுக்கிறாய் என்று? எனவே எழுதியாச்சு..

Anbu said...

//பதிவர் கார்க்கியிடம்..
அஜித் படம்னா நீங்க உசிர விடுவீங்கலாமே? அப்படியா? //

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik said..
:))//

வருகைக்கு நன்றி கார்த்திக்..

Anbu said...

மிகவும் நன்றாக உள்ளது அண்ணா!

Anbu said...

r u online anna

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு..

பாச மலர் said...

எல்லாக் கேள்வியும் நச் நச்..அதிலும் முதல்ல் கேள்விதான் டாப் நச்...

கார்த்திகைப் பாண்டியன் said...

// பாச மலர் said..
எல்லாக் கேள்வியும் நச் நச்..அதிலும் முதல்ல் கேள்விதான் டாப் நச்...//

ரொம்ப நன்றிங்க..

நையாண்டி நைனா said...

Best wishes dear friend....
( Haiyaaa.... 50 vathu comment naanthaan potten)

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையாக கருத்துரைகள் அரை சதம் அடிக்க உதவியுள்ள நைனாவிற்கு நன்றி..

நிலாவன் said...

நல்லாத்தான் கேள்வி கேட்டுருக்கிங்க
பதில் செல்லுவாங்களா

கார்த்திகைப் பாண்டியன் said...

தெரியல நண்பா.. கேக்குறது நம்ம கடமை..பதில் சொல்றது பத்தி அவங்ககிட்டயே விட்டுருவோம்..