சமூகத்தில் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்ற, மனநிலை பிரண்ட நிலையில் பிச்சை எடுத்து வாழும் மக்களின் கதையையும் ஆன்மிகத்தையும் ஒன்றாக இணைத்து கதை சொல்ல ஆசைப்பட்டு இருக்கிறார் பாலா. படத்தை பார்த்தவுடன் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி.. இந்த படத்தையா மூன்று வருடமாக எடுத்து வந்தார் பாலா? சில கதைகள் ஒரு வரியில் சொல்லும்போது கேட்க நன்றாக இருக்கும். ஆனால் அதை படமாக எடுக்கும்போது விளங்காது. எனக்கு என்னமோ இந்த படத்தின் கிளைமாக்ஸை மட்டும் வைத்து கொண்டு பாலா அதன் பின்னர் கதை எழுதி இருப்பாரோ என்றுதான் தோன்றுகிறது. தானும் குழம்பி நம்மையும் நன்றாக குழப்பி உள்ளார்.
வீட்டுக்கு ஆகாது என்று ஜோஷியர் சொன்னதை நம்பி மகனைக் கொண்டு போய் காசியில் விட்டு விடுகிறார்கள். அவர்தான் ஆர்யா. அங்கே அவர் அகோரியாக வளர்கிறார். தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டு, செத்தவர்களுக்கு மோட்சம் தரும் சாமியாராக இருக்கிறார். அவருடைய அப்பா அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஊருக்கு கூட்டி வருகிறார். இங்கும் அவரால் மக்களோடு சேர்ந்து இருக்க முடியவில்லை. கண் தெரியாத பிச்சைக்காரி பூஜா. உடல் ஊனமுற்ற மக்களை பிடித்து வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கும்பலிடம் மாட்டி கொள்கிறார். முகம் கோரமான ஒருவருக்கு அவரை விற்க முயற்சி செய்கிறார் வில்லன். அவனால் பெரிது கொடுமை செய்யப்படும் பூஜா இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்கள் என்று ஆர்யாவிடம் கேட்க பூஜாவின் கழுத்தை அறுத்து கொன்று போட்டு விடுதலை(?!!) தருகிறார் ருத்ரனாக வரும் ஆர்யா. மீண்டும் காசிக்கு போய் சேர்கிறார். இது தான் "நான் கடவுள்".
ஆர்யா - வெறி கொண்ட மனிதனாய் திரிகிறார். கண்களும் உடல்மொழியும் அவரை ருத்ரனாகவே மாற்றி விட்டன. ஆனால்.. அதைத் தவிர படத்தில் அவருக்கு வேலையே இல்லை. தலைகீழாக ஆசனம் செய்கிறார். முகத்தில் சாம்பலை பூசிக் கொள்கிறார். சமஸ்கிருத ஸ்லோகங்களை அள்ளி விடுகிறார். தமிழில் பேசியது அதிகபட்சம் நாலைந்து வசனங்கள் இருக்கலாம்.அதில் பாதி அப்பனையும் ஆத்தாளையும் போடா போடி என்று திட்டுவதுதான். சண்டைக்காட்சிகளில் மெனக்கட்டு நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் கூட படத்தில் கம்மிதான். ஆகா மொத்தத்தில்.. தல தப்பிச்சுட்டாருடா யப்பா.
எனக்கு பிடித்து இருந்தது மூன்று பேரின் நடிப்புதான். முதலாவதாக பூஜா. கிளைமாக்ஸ் காட்சியில் மேக்கப்பும் நடிப்பும் சூப்பர். ஆனால் அவர் வெவ்வேறு குரல்களில் பழைய பாடல்களை பாடும்போது கடுப்புதான் வருகிறது. அடுத்தது முருகனாக வரும் கிருஷ்ணமூர்த்தி. இயல்பாக நடித்து இருக்கிறார். கடைசியாக கவிஞர் விக்ரமாதித்தன். குழந்தையை பிடுங்கி செல்லும் காட்சியில் கண்களை ஈரமாக்கி விடுகிறார். வில்லனாக வருபவரும், பிச்சைக்காரர்களாக வருபவர்களும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்கள். குறிப்பாக தனது கிண்டலால் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்கிறான் அந்த குள்ளமான சிறுவன்.
படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்து செல்கிறது இளையராஜாவின் இசை. ஓம் சிவோகம், பிச்சைபாத்திரம் என்னும் இரண்டு பாடல்களை மட்டுமே படத்தில் பயன்படுத்தி உள்ளார் பாலா. படமாக்கி இருக்கும் விதம் அருமை. குறிப்பாக பிச்சைபாத்திரம் பாடலை பார்க்கும்போது இதயம் கனத்து போகிறது. வசனம் - ஜெயமோகன். பிரித்து எடுக்கிறார். கேலியும் கிண்டலும் சர்வ சாதாரணமாக வருகிறது. தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் படத்தில் உலா வருகின்றன. சைக்கிள் கேப்பில் தனது இந்துத்வா முகத்தை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் கூத்தில் தெளிவாக எல்லா சினிமாக்காரர்களையும் ஓட்டித்தள்ளுகிறார். ஆர்த்தர் வில்சனின் ஒளிப்பதிவு அருமை. படம் இரண்டு மணி நேரம் ஓடியதே தெரியாத அளவுக்கு சுரேஷ் அர்சின் படத்தொகுப்பு அபாரம்.
இத்தனை இருந்தும் படத்தை பார்க்கும்போது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம்.. பாலாவின் திரைக்கதை. அவருடைய முந்தைய படங்கள் எல்லாமே நம்மை ஏதோ ஒரு வகையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு காட்சி கூட இல்லை. கடைசியில் ஆர்யா பூஜாவை கொன்று போடும்போது கூட எந்த ஒரு அதிர்வும் இல்லை. மாறாக எரிச்சல் தான் வருகிறது. இப்படி எல்லாருக்கும் விடுதலை கொடுக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். அருமையான கதைக்களம், நல்ல நடிகர்கள் என எல்லாமே இருந்தும் பாலா கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய சோகத்தை சொல்லாமல் சந்தோசம் நிறைந்த மறுபக்கத்தை காட்டியதுதான் இந்த படத்தில் எனக்கு பிடித்து இருந்த ஒரு முக்கியமான அம்சம். நம் தமிழ் சினிமாவில் இன்றுள்ள சிறந்த இயக்குனர்களில் பாலாவும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுகருத்தே கிடையாது. அவருடைய அடுத்த படத்தில் இதை கண்டிப்பாக நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
நான் கடவுள் - பக்தர்கள் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்!!
28 comments:
///
மொத்தத்தில்.. தல தப்பிச்சுட்டாருடா யப்பா.
///
ரொம்ப கரெக்ட்
அன்பு நித்யன்
விமர்சனத்திற்கு டான்குசு.... அப்பாலிக்கா வறேன்....
ஹூம் சொல்ல மறந்தேனே... சூப்பரா எழுவி இருக்கீங்க சாமி.... வாழ்த்துக்கள்.
//நித்யகுமாரன் said..
ரொம்ப கரெக்ட்
அன்பு நித்யன்//
வருகைக்கு நன்றி நித்யன்..
//நையாண்டி நைனா said..
விமர்சனத்திற்கு டான்குசு.... அப்பாலிக்கா வறேன்....
ஹூம் சொல்ல மறந்தேனே... சூப்பரா எழுவி இருக்கீங்க சாமி.... வாழ்த்துக்கள்.//
வாங்க நைனா.. கொஞ்ச நாளா ஆள காணோமேன்னு பார்த்தேன்.. நன்றி..
நல்லா எழுதியிருக்கீங்க மதுரைக்காரரே. உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்.
http://pnaptamil.blogspot.com
http://pnaprasanna.blogspot.com
வருகைக்கு நன்றி பிரசன்னா..
கொஞ்சம் லேட் விமர்சனம் என்றாலும் நிறைவாக இருக்கிறது.. நான் கடவுள்.
இன்னும் படம் பார்க்கலைங்க.. எல்லோரும் இப்படி சுமாருன்னு சொல்லிட்டீங்க.. அதனால கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.....
hallo,
glad to meet you.
//ஆதவா said..
கொஞ்சம் லேட் விமர்சனம் என்றாலும் நிறைவாக இருக்கிறது..//
படம் வெள்ளிக்கிழமை மதியமே பார்த்து விட்டேன் நண்பா.. தோழியின் நிச்ச்சயதார்த்தத்திற்க்காக மாயவரம் சென்று விட்டு நேற்றுத்தான் வந்தேன்.. அதனால்தான் தாமதம்..
// ponniyinselvan//
இது அதிசயம் தான்.. உங்களுடைய பெயரும் கார்த்திதான்.. அதோடு உங்கள் தளத்துக்கும் பொன்னியின்செல்வன் என்று பெயர்.. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..
மிக அருமையான விமர்சனம்,
அதிக எதிர்பார்ப்பு சில சமயங்களில் ஏமாற்றம் தரும்
இன்னு படத்தினை பார்கவில்லை... 'தல' தப்பிச்சுட்டார்னு சொல்ல்றீங்க...
//சொல்லரசன் said..
மிக அருமையான விமர்சனம்,
அதிக எதிர்பார்ப்பு சில சமயங்களில் ஏமாற்றம் தரும்//
உண்மையாகவே ஏமாற்றம்தான் நண்பா.. படம் பாலாவின் தரத்தில் இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தம்..
//கவின் said..
'தல' தப்பிச்சுட்டார்னு சொல்ல்றீங்க...//
என்னால் இந்த வேடத்தில் அஜித்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.. மனிதன் உண்மையிலேயே தப்பித்துக் கொண்டார்..
ஓ! அதுக்குள்ள படம் பாத்தாச்சா? செம வேகம் போங்க.... :)
நான் பாலாவின் தீவிர ரசிகன் பிரேம்.. முதல் நாளே பார்த்து விட்டேன்.. ஆனால் இந்த முறை ஏமாற்றம்தான்..
விமர்சனம் ஓகே.
இரண்டு மணி நேர படம் என்பது நிறைய கத்திரி போட்டுவிட்டார்கள் என தெரிகிறது.
படம் வருவதற்கு முன்பே நிறைய பில்டப் கொடுத்தால் இப்படித்தான். சுமராய் இருந்தாலும், சரியில்லை என்று தான் சொல்ல தோன்றும்.
பாலாவின் திரை மொழி எனக்கு பிடித்த ஒன்று. பலபேர் இன்னும் நாடகத்தை திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பார்க்கலாம். பாலாவின் அடுத்த படைப்பை.
//நொந்தகுமாரன் said..
படம் வருவதற்கு முன்பே நிறைய பில்டப் கொடுத்தால் இப்படித்தான். சுமராய் இருந்தாலும், சரியில்லை என்று தான் சொல்ல தோன்றும்.
பாலாவின் திரை மொழி எனக்கு பிடித்த ஒன்று. பலபேர் இன்னும் நாடகத்தை திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.//
ஆமோதிக்கிறேன் நண்பா.. கண்டிப்பாக பாலா அடுத்த படத்தை இன்னும் தரமாகத் தருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு..
வணக்கம். நல்லா சரளமா எழுதரீங்க.வாழ்துக்கள்.னான் கடவுள் எனக்கு தந்த அனுபவம் வேறானது. பாலா குரூர அழகியலில் ஈடுபாடு உள்ளவர் என்பது என் எண்ணம். அவரின் முந்தைய படங்கள் இதன் சாட்சியே. ஆனால் இந்த படம் மிகவும் என்னை கவர்ந்தது. சொல்லாத வாழ்வை சொல்கிரென் என்று இதர்ற்கு முன்பு வம்படியாஇ படமெடுத்த பாலா இந்த படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ளார். ஆனால் படம் மிக நன்று. பழைய பாடல்கள் மருபடியும் வருவது, காவல் நிலைய கூத்துகள் (பிதாமகன்?)இதெல்லாம் தாண்டி அவர் காட்டிய அந்த முடமனிதர்களின் வாழ்வு படத்தை உயர்த்திப் பிடிக்கிஅது. சத்தியமாஇ இனி யாராவது முடமனிதர்கள் பிச்சை கேட்டால் திரும்பியாவது பார்ப்போம். அவர்களை பயன்படுத்தியது தான் படம் தாமதமானது. நந்தா போல இந்த படமும் நிரைய வெட்டப் பட்டு விட்டது பொலும். எனவெ படம் முழுமை இலாதது போல மயக்கம் காட்டும். படங்கலை தனிக்கை செவது மருஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வென்டும். பாலாவின் படங்கலில் ஜீவன் குரைவதர்கு அது முக்கிய காரணம்.
//jayaprakashvel said..
னான் கடவுள் எனக்கு தந்த அனுபவம் வேறானது. பாலா குரூர அழகியலில் ஈடுபாடு உள்ளவர் என்பது என் எண்ணம். அவரின் முந்தைய படங்கள் இதன் சாட்சியே. ஆனால் இந்த படம் மிகவும் என்னை கவர்ந்தது. சொல்லாத வாழ்வை சொல்கிரென் என்று இதர்ற்கு முன்பு வம்படியாஇ படமெடுத்த பாலா இந்த படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ளார். ஆனால் படம் மிக நன்று. //
இது நல்ல படம்தான் நண்பா.. ஆனால் பாலாவால் இதைவிட நன்றாக எடுக்க முடியும் என்பதுதான் என் வருத்தமே..
தங்கள் கருத்துக்கு நன்றி...
நெருக்கடிகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட
திரைப்படம் என்பதால் இதை தாழ்த்தி மதிப்பிட முடியாதென தோன்றுகிறது...
Slum dog Millionaire போன்று சமுதாயத்தில் டார்ச் அடித்துப்பார்த்து
படம் எடுத்திருந்தாலும், பாலா போன்ற கலைஞர்களுக்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது... ஆதலால் கடிகாரம் பார்க்காத ஒரு தயாரிப்பாளர் அவருக்கு கிடைப்பாராக..
வருகைக்கு நன்றி பேரின்பா.. நான் நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.. ஆனால் பாலா இந்தப் படத்தை இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம் என்பது என் கருத்து..
தலை,
தமிழ் திரை உலகில் காதலை தவிர வேறு தளத்தில் படம் எடுக்க கூடிய ஒரே தலைவர் பாலா அண்ணன் தான்.
என்ன அருமையாக ஒரு sensitive - விசயத்தை handle பண்ணியிருக்கார்...அதை போய் ரொம்ப negative-va விமர்சனம் பண்ணிவிட்டிர்களே !!
எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்தது !!!
//கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
நான் பாலாவின் தீவிர ரசிகன் பிரேம்.. முதல் நாளே பார்த்து விட்டேன்.. ஆனால் இந்த முறை ஏமாற்றம்தான்.//
Sorry karthi நிச்சயமாக நீங்கள் பாலாவின் ரசிகனாக இருக்க முடியாது....
//என்றுதான் தோன்றுகிறது. தானும் குழம்பி நம்மையும் நன்றாக குழப்பி உள்ளார்//
"நம்மையும்" என்று எல்லோரையும் சேக்காதிங்க பாஸ் " என்னையும் " ன்னு போடுங்க ஏன்ன என் கூட வந்த தமிழே தெரியாத என் நண்பனுக்கு கூட கதை நன்றாக விளங்கி விட்டது...
// அவர் வரும் காட்சிகள் கூட படத்தில் கம்மிதான். ஆகா மொத்தத்தில்.. தல தப்பிச்சுட்டாருடா யப்பா. //
இல்லனாலும் உங்க தல புடிங்கிருவரு பாருங்க... நல்ல வேல உங்க தல மோதலே பயந்துட்டு ஓடிட்டாரு இல்லாட்டி உங்க தல நடிக்கிற நடிப்ப பார்த்துட்டு பாலாவே எட்டி ஒதசுருப்பாறு அந்த வகைல உங்க தல தப்பிச்சுட்டாருடா யப்பா...
//இந்துத்வா முகத்தை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை//
எங்க வெளிப்படுத்தி இருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா...???????
ஐயோ ஐயோ நான் ஒரு பைத்தியங்க ஏன்ன தள அஜித் மாதிரி உன்னத படைப்பாளிகளின் ஊசிப்போன, நாறிப்போன சாப்பாட்டையே சாப்பிட்டு பழகுன நீங்க இப்பிடி ஒரு சாத்விகமான சாப்பாடு செரிகாம வாந்தி எடுததேல்லாம் படிச்சுட்டு கேள்வி வேற கேட்டுட்டு இருக்கேன் பாருங்க நா ஒரு பைத்தியக்காரன் தான்...
Maruthu
Kollam
//ச.ராமானுசம் said..
தமிழ் திரை உலகில் காதலை தவிர வேறு தளத்தில் படம் எடுக்க கூடிய ஒரே தலைவர் பாலா அண்ணன் தான்.
என்ன அருமையாக ஒரு sensitive - விசயத்தை handle பண்ணியிருக்கார்...அதை போய் ரொம்ப negative-va விமர்சனம் பண்ணிவிட்டிர்களே !! எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்தது !!!//
வாங்க நண்பா.. நீங்க சொல்றதுதான் என்னோட கருத்தும்.. பாலா தவிர யாருமே இந்தப் படத்த எடுத்திருக்க முடியாது.. ஆனா அவர் கதை சொன்ன விதம்தான் எனக்கு புரிபடலை..
//Maruthu said..
Sorry karthi நிச்சயமாக நீங்கள் பாலாவின் ரசிகனாக இருக்க முடியாது....//
ஏங்க.. படம்நல்லா இருக்குன்னு சொன்னாத்தான் ரசிகனா.. நான் படம் வரதுக்கு முன்னாடியே நான் கடவுள்பாலான்னு ஒரு பதிவே போட்டவங்க..
//நம்மையும்" என்று எல்லோரையும் சேக்காதிங்க பாஸ் " என்னையும் " ன்னு போடுங்க ஏன்ன என் கூட வந்த தமிழே தெரியாத என் நண்பனுக்கு கூட கதை நன்றாக விளங்கி விட்டது... //
நான் கதை சொன்ன விதம்.. திரைக்கதயைதான்.. குழப்பி உள்ளதாக சொன்னேன்..
//இல்லனாலும் உங்க தல புடிங்கிருவரு பாருங்க... நல்ல வேல உங்க தல மோதலே பயந்துட்டு ஓடிட்டாரு இல்லாட்டி உங்க தல நடிக்கிற நடிப்ப பார்த்துட்டு பாலாவே எட்டி ஒதசுருப்பாறு அந்த வகைல உங்க தல தப்பிச்சுட்டாருடா யப்பா..//
ருத்ரன் படத்துல ஒரு guest role தானப்பா பண்ணி இருக்காரு.. அந்த வகைல தல உண்மையாவே தப்பிச்சாட்டார்..
////இந்துத்வா முகத்தை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை//
எங்க வெளிப்படுத்தி இருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா...???????//
கடைசி காட்சியில் பூஜா தேவாலயம் போவதும்.. அதன் பின் வரும் வசனங்களும் என்னவாம்.. தெரியலேன்னா கேளுங்கப்பா.. சொல்லித் தரோம்..
//நா ஒரு பைத்தியக்காரன் தான்... //
ஒத்திக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி..
im also bala fan.i saw film 4 times.this s theworst command about this flim.this flim s not commercial one like your dhar thalai film.movie s mind blowing.he s best in direction. he lived with beggars for the film.wat a man.
thanks for your comments friend.. if u say this is the worst comment it means you have not read other bloggers.. i have said decently..i am also a fan of bala.. i think this movie is not upto the mark..thats all
Post a Comment