February 25, 2009

சின்ன சின்ன ஆசைகள்..!!!


தூக்கத்தில் ஒருநாள் -
என் கனவில் கடவுள்..
கேட்டார் என்னிடம்...
"சொல் கண்ணே..
உன் ஆசைகள் என்னென்ன?"
எதைச் சொல்ல...
எதை விட...
"தாயின் மடியில்
தலைவைத்து தூங்கி விட ஆசை!!
அவள் கையால் அமுதம் உண்ண ஆசை!!
தந்தை கரம் பிடித்து
தெருவினில் அலைந்திட ஆசை!!
வாங்கி வந்த பொம்மைக்காய்
அண்ணனோடு சண்டை போட்டிட ஆசை!!
பசியை முழுதாய் ஒழித்திட ஆசை!!
தினம் தினம் புதிதாய் உடுத்திட ஆசை!!
நான் நினைப்பதெல்லாம் நடந்திட ஆசை!!
எல்லாவற்றுக்கும் மேலாக -
நானே ஒருநாள் கடவுளாய் மாறிட ஆசை!!"
சொல்லி முடித்து கடவுளைப் பார்த்தேன்..
அனைத்துக்கும் பதிலாய்..
அவரின் புன்னகை மட்டுமே!!
சத்தமாக ஒலித்த மணியோசை
கேட்டு கலைந்தது கனவு!!
நானிருக்கும் அநாதை இல்லத்தின்
இன்றைய பணிகளைத் தொடங்க வேண்டும்..
பதறி எழுகிறேன் நான்!!
என்றேனும் ஒருநாள் என்
ஆசைகளும் கனவும் கைகூடும்
என்னும் நம்பிக்கையோடு..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

39 comments:

ராமலக்ஷ்மி said...

மனதைத் தொட்டது!

கோவி.கண்ணன் said...

மிக நன்றாக இருக்கிறது

Mohan R said...

ரொம்ப நல்லா இருக்கு...

Anonymous said...

அர்த்த்தமுள்ள ஆசைகளே...

Anonymous said...

நானே ஒருநாள் கடவுளாய் மாறிட ஆசை!!"
ஆசையா??? பேராசையா???

சம்பத் said...

கவிதை கலக்கல் கா.பா.. வாழ்த்துக்கள்...

ஆதவா said...

நானே ஒருநாள் கடவுளாய் மாறிட ஆசை!!


இதுதாங்க கவிதையோட டாப்////

கடவுளைக் கொல்லுதல் என்ற தலைப்பில் நான் கவிதை எழுதியிருக்கிறேன். அதில் நான் மற்றொரு கடவுளாக ஆக விரும்பவில்லை என்பேன்... ஏனெனில் மற்றொரு கடவுளைத் தாங்குமளவுக்கு மக்களுக்கு சக்தியில்லை என்று மறைமுகமாகச் சொல்லியிருப்பேன்.

நீங்க கவிதையை அத்தோடயே நிறுத்தியிருக்கலாம்... இருந்தாலும் ஆசைகள் கைகூடவேண்டும் என்ற ஆசை.... கவிதையில் எழுந்தோடுவதால்... கவிதை டாப் கியரில் செல்கீறது!!!

வாழ்த்துகள்

சொல்லரசன் said...

உங்க தல ஆசை போல் உள்ளது என்று படித்த போது,

//நானிருக்கும் அநாதை இல்லத்தின்
இன்றைய பணிகளைத் தொடங்க வேண்டும்.. பதறி எழுகிறேன் நான்!! என்றேனும் ஒருநாள் என் ஆசைகளும் கனவும் கைகூடும் என்னும் நம்பிக்கையோடு..!!!//

இந்த வரிகளை படிக்கையில் மனம் வலித்தது

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராமலக்ஷ்மி said..
மனதைத் தொட்டது!//

ரொம்ப நன்றி மேடம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கோவி. கண்ணன் said..
மிக நன்றாக இருக்கிறது//

முதல் முறையாக வருகை தந்து உள்ளீர்கள்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இவன் said..
ரொம்ப நல்லா இருக்கு...//

மிக்க நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
நானே ஒருநாள் கடவுளாய் மாறிட ஆசை!!"
ஆசையா??? பேராசையா???//

ஆசைபடுரதுன்னு முடிவு பண்ணியாச்சு.. அப்புறம் என்ன.. கேக்குறது பெரிசா கேக்க வேண்டியதுதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
கவிதை கலக்கல் கா.பா.. வாழ்த்துக்கள்...//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
நீங்க கவிதையை அத்தோடயே நிறுத்தியிருக்கலாம்... இருந்தாலும் ஆசைகள் கைகூடவேண்டும் என்ற ஆசை.... கவிதையில் எழுந்தோடுவதால்... கவிதை டாப் கியரில் செல்கீறது!!!//

இப்போத்தான் நண்பா கொஞ்சம் கொஞ்சமா கவிதை எழுதுறேன்.. பழகிக்குறேன்.. நீங்களும் சொல்லிக் குடுங்க.. நன்றி ஆதவா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
உங்க தல ஆசை போல் உள்ளது என்று படித்த போது,இந்த வரிகளை படிக்கையில் மனம் வலித்தது//

அடடா.. கவிதைல எல்லாம் நான் தலைய இழுக்க மாட்டேன் நண்பா..

Anbu said...

அண்ணா கவிதை மிகவும் அருமையாக உள்ளது!

Anbu said...

ஆனால் கொஞ்சம் பேராசையும் உள்ளது அண்ணா உங்களுக்கு

கடைசி வரிகள் மிகவும் அருமையாக உள்ளது..

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு

அத்திரி said...

அருமை.......... ரசித்தேன்

பொன்.பாரதிராஜா said...

அருமை நண்பா!!!!
தொடரட்டும்!!!!

குடந்தை அன்புமணி said...

//என்றேனும் ஒருநாள் என் ஆசைகளும் கனவும் கைகூடும் என்னும் நம்பிக்கையோடு..!!!//

நம்பிக்கை தானே வாழ்க்கை!
வாழ்த்துக்கள்!

வினோத் கெளதம் said...

azaga eluthi irukinga.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
அருமை.......... ரசித்தேன்//

நன்றி தோழரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அன்புமணி said..
நம்பிக்கை தானே வாழ்க்கை!
வாழ்த்துக்கள்!//

கண்டிப்பாக..நாளை நம்முடய கனவுகள் எல்லாம் நனவாகும் என்னும் நம்பிக்கையில்தானே நாம் வாழ்கிறோம்.

Dhavappudhalvan said...

கனவுகள் பல விதம். அதிலே இது ஒரு விதம். ஆசைக்கு எங்கிருக்கிறது அளவு? நல்ல ஆசைகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன்.பாரதிராஜா said..
அருமை நண்பா!!!!
தொடரட்டும்!!!!//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
azaga eluthi irukinga.//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//dhavappudhalvan said..
கனவுகள் பல விதம். அதிலே இது ஒரு விதம். ஆசைக்கு எங்கிருக்கிறது அளவு? நல்ல ஆசைகள்.//

வருகைக்கு, வாழ்த்துக்கு நன்றி நண்பரே..

தமிழ் said...

நல்ல இருக்கிறது

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி நண்பா..

மேவி... said...

nalla irukku

குமரை நிலாவன் said...

அனாதைன்னு யாரும் இல்லாமல்
இருக்க ஆசை ....



சத்தமாக ஒலித்த மணியோசை கேட்டு கலைந்தது கனவு!!நானிருக்கும் அநாதை இல்லத்தின் இன்றைய பணிகளைத் தொடங்க வேண்டும்..பதறி எழுகிறேன் நான்!!

குமரை நிலாவன் said...

நல்லா இருக்கு
கவிதை

கார்த்திகைப் பாண்டியன் said...

கருத்துக்குத்துக்கு நன்றி mayvee

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன் said..
நல்லா இருக்கு கவிதை//

ரொம்ப நன்றி நண்பா..

Rajeswari said...

நல்ல கவிதை.ஆமா ஹாஸ்டேள்ள தங்கி இருக்கிராபுல தெரியுது ..எப்போ ஊருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

மாதம் ஒருமுறைதான் தோழி ஊருக்கு.. நாளை கிளம்புகிறேன்..

அகநாழிகை said...

நண்பா... வணக்கம். உங்கள் ஆசைகள் அழகானவை. பெரும்பாலும் நிறைவேறிவிட வாய்ப்புள்ளவை. வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையா வலைத்தளத்துல கருத்து சொல்லி இருக்கீங்க.. ரொம்ப நன்றி..