அப்படி இப்படின்னு காதலர் தினத்த கொண்டாடி முடிச்சு ரொம்ப களைச்சு போய் இருப்போம். இந்த நேரத்துல நான் படிச்ச ரெண்டு விஷயத்த உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு தோணுது. மொத விஷயம் இங்கிலாந்தில நடந்தது. பையனுக்கு பதிமூணு வயசு. பொண்ணுக்கு பதினஞ்சு வயசாம். ரெண்டு பேரும் ஒரு நட்புனர்வோட பழகிக்கிட்டு இருந்து இருக்காங்க. ஒரு நாள் கொஞ்சம் நட்பு அதிகமாகி.. வீட்டுல யாரும் இல்லாதப்போ.. அது ஆகிப் போச்சாம். இப்ப அந்த பொண்ணுக்கு கொழந்த பொறந்திருக்கு. இதுக்கு அந்த பையனோட அப்பா சொல்லி இருக்கிறதுதான் ஹைலைட். "என் பையன் என்ன செயரோம்னே தெரியாம இந்த சூழ்நிழைலே மாட்டிக்கிட்டான். பரவா இல்ல. அவனோட குழந்தைக்கு நல்ல தகப்பனா இருக்க நாங்க உதவி பண்ணுவோம். "
இன்னொரு விஷயம் நம்ம இந்தியாவுல நடந்திருக்கு. இந்த ராம்செனாக்காரங்க எங்க இருந்து வந்தாங்களோ.... எல்லாப்பயலும் ஆரம்பிச்சுட்டாங்க. ரோட்டுல போன காதலர்களை மறிச்சு, பொண்ண விட்டு பையனுக்கு ராக்கி கட்ட வச்சு இருக்காங்க. பார்த்த இடத்திலேயே கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்க. ஒரு சிலருக்கு அடி கூட விழுந்து இருக்கு. எல்லாத்துக்கும் மேல பெரிய கொடுமை, அண்ணன் தங்கச்சி ரெண்டு பேர காதலர்கள்னு நெனச்சு அடியப் போட்டிருக்காங்க. அட ராமா, இந்த கலாச்சார காவலர்கள் இம்சை தாங்க முடியலப்பா.. ஒரு பக்கம் காதல்ல ஓவராப் போறாங்க.. இன்னொரு பக்கம் யோசிச்சாலே அடி விழுகுது.. என்னத்த சொல்ல?
******************
ரெண்டு நாளைக்கு முன்னாடி, எஸ்ராவின் வலைப்பக்கத்துல காவல் கோட்டம் பத்தின விமர்சனத்த படிச்சேன். எனக்கு பயங்கர அதிர்ச்சி. எஸ்ரா கூட இப்படி கோவப்படுவாரான்னு ஒரே ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஆயரம் பக்கம் உள்ள புத்தகம். மதுரையை பத்தின வரலாறு. விகடன்ல கூட இந்த வருடத்துக்கான சிறந்த புத்தகம்னு போட்டு இருந்ததேன்னு வாங்கலாம்னு நினச்சேன். இப்போ அந்த எண்ணமே மாறி போச்சு. எஸ்ராவையே பாடாப் படுத்தி இருக்குன்னா அது எப்படிப்பட்ட புத்தகம்னு பயமா இருக்கு. தப்பிச்சேன்டா யப்பா..
********************
குமுதத்துல இந்த வாரம் லிங்குசாமியோட பேட்டியப் படிச்சீங்களா.. ஒரே காமெடி.. "ரன், சண்டக்கோழி.. இந்த படங்கள்ல இருந்த ஒரு பீல் இப்போ எனக்கு பையா படத்துல தோணுது" அப்படின்னு சொல்லி இருக்காரு.. அஜித்தோட ஜி, விக்ரமோட பீமான்னு நெறைய கத்துக்கிட்டு இருக்காராம்.. அதனால மறுபடி இவங்க ஒரு வாய்ப்பு கொடுத்தா பின்னி எடுப்பாராம்.. ஐயா சாமி.. உங்கள நம்பி நாங்க ஒரு தடவ பட்டது போதாதா.. நீங்க தொழில் பழக நாங்கதானா கிடைச்சோம்? ஜி படம் வந்தா எல்லாரும் இனி அஜித்தை ஜின்னு தான் கூப்பிடுவாங்கன்னு சொன்னிங்க.. கடைசில எல்லாரும் ச்சீன்னு சொன்னதுதான் மிச்சம்.. தயவு செஞ்சு தலைய விட்டுருங்க..
*********************
இப்போ படிச்சுக்கிட்டு இருக்கிற புத்தகம் - சாருவோட "காமரூப கதைகள்.." ஏற்கனவே இணையத்துல படிச்ச அனுபவம் இருந்தாலும் புத்தகமா படிக்கிறது தனிதான்.. ஜீரோ டிகிரி அளவுக்கு குழப்பாம கொஞ்சம் தெளிவாத்தான் போகுது.. புத்தகம் முழுக்க சின்ன சின்ன கிண்டலும் கேலியும் இருக்குறதுதான் இந்தப் புத்தகத்தோட விசேஷம்.. சாருவோட பத்து புத்தகங்களையும் வெளியிட்ட அன்னைக்கே வாங்குனதுல அடியேனும் ஒருத்தன்.. கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா புத்தக கண்காட்சியில அவர் கைஎழுத்தோட வாங்கி இருக்கலாம்.. பார்க்கலாம்.. அடுத்த கண்காட்சியிலாவது எஸ்ரா.. சாரு.. இருவரையும் பார்த்து விட வேண்டும்..
*********************
படித்ததில் ரசித்தது..ஒரு ஊரில் தச்சர் ஒருவர் இருந்தார். ஒரு மேஜையை சரி பார்க்கும்போது அதில் ஆணி ஒன்று இருந்தது. அதை எடுத்து ஓரமாக வைத்து விட்டு வேலையை தொடர்ந்தார். பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருந்த அவரது குட்டிப்பையன் ஆணியை மிதித்து காயமாகி விட்டது. பயங்கர ரத்தசேதம். டாக்டரிடம் கொண்டுபோனால் அவரோ ரொம்ப செலவாகும் என்று சொல்லி விட்டார். அக்கம்பக்கம் இருந்த மக்களிடம் கடன் வாங்கி பையனை காப்பாற்றி விட்டார். கொஞ்ச நாளைக்கு பிறகு கடன் கொடுத்த மக்கள் எல்லாம் திருப்பி கேட்கத் தொடைங்கினார்கள். இவரால் தர முடியவில்லை. அவமானத்தில் தூக்கு போட்டு செத்து போனார். அவர் இறந்த சோகத்தில் அந்த குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் "ஆணியே புடுங்க வேண்டாம்!!!"
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
43 comments:
காக்டெய்லா???????? என்ன தல? நீங்க ரீமேக் செய்யலாமா? தலயோட ஃபேனே ரீமேக் செஞ்சா எப்படி? :))))
அய்யய்யோ நண்பா... இது யாரையும் காப்பி அடிக்க வைக்கல.. பரிசல் எழுதுற அவியல்தான் நான் படிச்சி இருக்கேன்.. அந்த ஆசையில வச்சேன்.. இது வேற யாரும் வச்சு இருக்கீங்களா.. தெரியாம நடந்து போச்சு.. விடுங்க.. மாத்திடுறேன்..
இந்தப் பதிவிற்கு முதலில் காக்டைல் என்று பெயர் இட்டிருந்தேன்.. அது ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதை சுட்டிக் காட்டிய தோழர் கார்க்கிக்கு நன்றி..அதனால் தலைப்பை மாற்றி விட்டேன்.. தவறினை பொறுத்தருள்க..
அண்ணே... காக்டெய்லை மாத்தறேன்னு என்னோட நொறுக்ஸை ரீமேக் செஞ்சிட்டீங்களே?????
அவ்வ்வ்வ்.....
:-)))
யோவ் யோவ் யோவ்! நீர் அந்த "காதலனே" கவிதை படிச்ச கெட்டவன் தானே! செம்ம ஆளுய்யா நீ!:-)))))))))))))))
விடுபட்டவை- பாலபாரதி
அவியல் - பரிசில்காரன்
வெங்காய சாம்பார்- ஷென்ஷி
காக்டெய்ல்-கார்க்கி
சூடான இட்லியும் அதுக்கு தொட்டுக்க நெய்யும் அது கூட ஜீனியும் - இது நானு
பின்ன யார் யார்ன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!
என்ன சகா ரொம்ப ஃபீல் பண்றீங்க. நான் என்ன காப்பிரைட்டா வாங்கி வச்சிருக்கேன்? சும்மா சொன்னேன். குழப்பம் வருமேன்னுதான் சொன்னேன். ப்ளீஸ்.. சீரியஸா எடுத்துக்காதீங்க.. :))))
//விடுபட்டவை- பாலபாரதி
அவியல் - பரிசில்காரன்
வெங்காய சாம்பார்- ஷென்ஷி
காக்டெய்ல்-கார்க்கி
சூடான இட்லியும் அதுக்கு தொட்டுக்க நெய்யும் அது கூட ஜீனியும் - இது நா//
ரெய்ன்போ தாட்ஸ் கார்த்திக்
கதம்பம் வடகரை வேலன்
கூட்டாஞ்சோறு லக்கி
துணுக்ஸ் வித்யா
வெட்டிபேச்சு வெட்டிபயல்
கொத்து பரோட்டா கேபிள் சங்கர்
இன்னும் நிறைய இருக்கு
அய்யய்யோ அய்யய்யோ குசும்பா நொறுக்ஸ் ன்னு நீ காபிரைட் வாங்கின பேரை "காதலனே" கார்த்திகைபாண்டி அண்ணே வச்சுட்டாரு ஓடியா ஓடியா!வரும் போது நம்ம ஆளுங்களையும் கூட்டியாந்துடு!
எப்பா - என்னாது - எல்லோரும் பதிவ வுட்டுட்டு தலைப்ப பிடிச்சிக்கிட்டு தொங்கறாங்க -ம்ம்ம்ம்
பதிவு நல்லா இருக்கு
காவல் கோட்டம் நான் படிக்கப் போறேன் - எஸ்ரா வலைப்பக்க லிங்க் பிளீஸ் -
ஆணி புடுங்காதீங்கப்பா இனிமே யாரும் - காபா சொல்லிட்டாரு
அட ராமா.. முடியல.. இப்படி எல்லாருமே ஒண்ணு வச்சு இருக்கீங்களா..
//ச்சின்னப் பையன் said..
அண்ணே... காக்டெய்லை மாத்தறேன்னு என்னோட நொறுக்ஸை ரீமேக் செஞ்சிட்டீங்களே?????
அவ்வ்வ்வ்.....:-)))//
இப்போ உங்ககிட்ட மாட்டிகிட்டேனா.. சுத்தம்.. மாத்திடுறேன் தம்பி..
//கார்க்கி said..
என்ன சகா ரொம்ப ஃபீல் பண்றீங்க. நான் என்ன காப்பிரைட்டா வாங்கி வச்சிருக்கேன்? சும்மா சொன்னேன். குழப்பம் வருமேன்னுதான் சொன்னேன். ப்ளீஸ்.. சீரியஸா எடுத்துக்காதீங்க.. :))))//
thanks கார்க்கி. நாம எல்லாருமே பதிவர் வட்டத்துல இருக்கப்ப ஒருத்தரு ஒருத்தர் சங்கடப் படுத்தக் கூடாது இல்லையா..
//சீனா said..
எப்பா - என்னாது - எல்லோரும் பதிவ வுட்டுட்டு தலைப்ப பிடிச்சிக்கிட்டு தொங்கறாங்க -ம்ம்ம்ம்
பதிவு நல்லா இருக்கு
காவல் கோட்டம் நான் படிக்கப் போறேன் - எஸ்ரா வலைப்பக்க லிங்க் பிளீஸ் -
ஆணி புடுங்காதீங்கப்பா இனிமே யாரும் - காபா சொல்லிட்டாரு//
ரொம்ப நன்றி சீனா அவர்களே.. நீங்க கேட்ட லிங்க் இதோ.. ரெண்டு பதிவா எழுதி இருக்காரு..
http://www.sramakrishnan.com/view.asp?id=231&PS=1
http://www.sramakrishnan.com/view.asp?id=232&PS=1
அப்பா மதுரை வீரா.. நீதான் என்னக் காப்பாத்தணும்.. இந்த தலைப்பையாவது வேற யாரும் வைக்காம இருக்கணும்டா சாமி..
nice
//அப்படின்னு சொல்லி இருக்காரு.. அஜித்தோட ஜி, விக்ரமோட பீமான்னு நெறைய கத்துக்கிட்டு இருக்காராம்..//
(((((((((((((((
சுட்டிக்கு நன்றி கா.பா
//முரளிகண்ணன் said..
nice//
நன்றி முரளி.. இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் உங்க பதிவு இடம்பெற்றதுக்கு வாழ்த்துக்கள்..
//அத்திரி said...
(((((((((((((((//
விடுங்க நண்பா.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்..no feelings
//cheena said..
சுட்டிக்கு நன்றி கா.பா//
உங்களுக்கு உதவ முடிஞ்சதுல ரொம்ப சந்தோசம்..
//அபி அப்பா said..
யோவ் யோவ் யோவ்! நீர் அந்த "காதலனே" கவிதை படிச்ச கெட்டவன் தானே! செம்ம ஆளுய்யா நீ!:-)))))))))))))))//இப்பத்தான் உங்க பதிவ படிச்சேன் நண்பா.. வருகைக்கு நன்றி.. ஏம்ப்பா.. எனக்கே தெரியாம என்ன வச்சு இங்க ஒரு கும்மியே நடந்திருக்கா.. ஒரு கவிதைய படிச்சு.. நல்லா கவனிங்க.. கவிதைய மட்டும் படிச்சு பின்னூட்டம் போட்டா தப்பா.. வளர்ற மக்களை ஊக்குவிங்கப்பா.. பரவா இல்ல.. என்கிட்டே சொல்லி இருந்தா.. நானும் கும்மில்ல ஐக்கியம் ஆகி இருப்பேன்ல.. நம்மள பத்தி எழுதுனதுக்கு ரொம்ப நன்றி "நல்லவரே".. நீங்க தான் அந்த கவிதைய படிக்கவும் இல்ல.. பார்க்கவும் இல்லையே.. அப்ப நல்லவர்தான.. அப்புறம் அந்த தமிழ்மணம் விருத மறந்துராதீங்க..
அடடா! என்னப்பா திரும்பவும் பேரை மாத்திட்ட!நாங்க சும்மா ஜாலிக்காக அப்படி கிண்டல் பண்ணுனா 17 வது தடவையா பேரை மாத்தியாச்சு போல:-))
யப்பா சாமி!! இந்த முறையாவது பின்னூட்டம் விழுக..... இத்தோட நாலாவது முறை.. ஒரே எர்ர் மயம்... நம்ம கார்த்திகைப் பாண்டியனுக்குப் பின்னூட்டம் போடக்கூடாதுன்னே ப்ளாக்கர் கங்கணம் கட்டிட்டுத் திரியறாய்ங்க போல....
எஸ்ரா ஒரு நல்ல எழுத்தாளர் மாத்திரமல்ல.. நல்ல வாசகர்... அவர் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்.. என்றாலும் நாமும் அதை படித்துப் பார்க்கலாம்.. (ஏதாச்சும் ஆதாயம் கிடடக்கலாம்)
லிங்குசாமியோட பையா படம் நிச்சயம் ஓடும்... ஏன்னு சொல்லுங்க???
அதிலதான் என்னோட ஆதர்ஷ ஹீரோயின் தமண்ணா இருக்கிறாளே!!!! :) (அடிக்க வாராதீங்க!!!)
எஸ்ராவையும், சாருவையும் பார்த்தா, ஆதவா ரொம்ப கேட்டதா சொல்லுங்க...!!!!!
சரி... நல்ல பெயரா வெச்சு ஒரு வைபவம் நடத்திடுங்க.. நானும் வந்து சேர்ந்திடறேன் (ஓசில உண்ட கட்டி கிடைக்கும்ல.)
//அபி அப்பா said..
17 ன்னா என்ன 100 ன்னா என்னண்ணே..உங்கள மாதிரி பெரியவங்க மனச சங்கடப்படுத்த கூடாதுல.. தப்பு செஞ்சா திருத்திக்கிறது தப்பே இல்லண்ணே..
:-))))
//ஆதவா said..
யப்பா சாமி!! இந்த முறையாவது பின்னூட்டம் விழுக..... இத்தோட நாலாவது முறை.. ஒரே எர்ர் மயம்... நம்ம கார்த்திகைப் பாண்டியனுக்குப் பின்னூட்டம் போடக்கூடாதுன்னே ப்ளாக்கர் கங்கணம் கட்டிட்டுத் திரியறாய்ங்க போல....எஸ்ரா ஒரு நல்ல எழுத்தாளர் மாத்திரமல்ல.. நல்ல வாசகர்... அவர் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்.. என்றாலும் நாமும் அதை படித்துப் பார்க்கலாம்.. (ஏதாச்சும் ஆதாயம் கிடடக்கலாம்)
லிங்குசாமியோட பையா படம் நிச்சயம் ஓடும்... ஏன்னு சொல்லுங்க??? அதிலதான் என்னோட ஆதர்ஷ ஹீரோயின் தமண்ணா இருக்கிறாளே!!!! :) (அடிக்க வாராதீங்க!!!) எஸ்ராவையும், சாருவையும் பார்த்தா, ஆதவா ரொம்ப கேட்டதா சொல்லுங்க...!!!!! //
வாங்க ஆதவா.. சதிய முறியடிச்சு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி.. புத்தகம் படிச்சா எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. தமன்னா நமக்கு என்னவோ அவ்வளவாப் பிடிக்கல.. பார்க்கலாம்.. எஸ்ரா , சாரு பார்த்தா கண்டிப்பா சொல்றேன்.. முடிஞ்சா ஒண்ணாவே போகலாம்..
எஸ்ரா பதிவை நானும் படிச்சேன்... எனக்கும் ஆச்சர்யமாயிடுச்சு...சாருவின் பத்து நூள்களின் வெளியீட்டின்போது அவரை நேரில் நான் பார்த்திருக்கிறேன்.. சாந்த சொரூபி. அதை படிச்சப்புறம் தான் தோணுச்சு மனுசன் என்னென்னவெல்லாம் படிச்சிருக்காருனு...
****************************
ஆணி புடுங்குறது ultimate.. கிட்டத்தட்ட கெயாஸ் தியரி..
கருத்து நன்றி பேரின்பா..
Hi,
I bought kaaval kottam after reading an extract of about 5-6 pages in the magazine 'Tamizhini'. (They are the ones who have published the book). What I read in the extract seemed intriguing.
But the book is exactly as what Mr.Ramakrishnan has described. Just a collection of information from historical sources and documents.
I read in your post, that it has been mentioned as the best novel of 2008. I sure would like to meet the person who said so!!!!
//பெயரில்லா கூறியது...
I read in your post, that it has been mentioned as the best novel of 2008. I sure would like to meet the person who said so!!!!//
விகடன் 2008 awardsல தான் போட்டிருந்தாங்க நண்பா..
நடந்துகிட்டே யோசிச்சா நல்லதுன்னு ஒரு கட்டுரை படித்தேன். நான் சொன்னதை யோசிச்சு பாருங்க!
//அன்புமணி said..
நடந்துகிட்டே யோசிச்சா நல்லதுன்னு ஒரு கட்டுரை படித்தேன். நான் சொன்னதை யோசிச்சு பாருங்க!//
ஒண்ணும் புரியல.. ஆனா.. யோசனைக்கு நன்றி நண்பா..
"உக்கார்ந்து யோசிச்சது(16-02-09)...!!!"//
தலைப்பையும் உக்கார்ந்தா யோசிச்சிங்க... கலக்கல்..
ஆணி.. ஸுப்பர்..
அப்ப இனி மாதாமாதம் உக்காந்து யோசிக்க போறீங்க,, கலக்கல்
//கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
அப்பா மதுரை வீரா.. நீதான் என்னக் காப்பாத்தணும்.. இந்த தலைப்பையாவது வேற யாரும் வைக்காம இருக்கணும்டா சாமி..//
ஹா ஹா ஹா
பொதுவா மெயில் ஐ டி தேர்வு செய்வதில் தான் இப்படி ஆகும்.. இப்ப இதிலுமா! :-)))
என்ன கொடுமை இது!
கோது பரோட்டாவையும் தயிர் சாதம் வையும் கலந்து சாப்பிட்ட effect வருது
இந்த தலைப்பை விட நல்ல சூப்பர்யான தலைப்பை வைவுங்க பாஸ்
"ஜி படம் வந்தா எல்லாரும் இனி அஜித்தை ஜின்னு தான் கூப்பிடுவாங்கன்னு சொன்னிங்க.. கடைசில எல்லாரும் ச்சீன்னு சொன்னதுதான் மிச்சம்.. தயவு செஞ்சு தலைய விட்டுருங்க.. "
காலேஜ் படிக்கும் போது அந்த படத்திற்கு எல்லா நண்பர்களையும் அழைத்து சென்று....
அனைவரிடமும் நான் மொக்கை வாங்கிய படம் அது....
//கவின் said..
அப்ப இனி மாதாமாதம் உக்காந்து யோசிக்க போறீங்க,, கலக்கல்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவின்..
//கிரி said..
ஹா ஹா ஹா
பொதுவா மெயில் ஐ டி தேர்வு செய்வதில் தான் இப்படி ஆகும்.. இப்ப இதிலுமா! :-)))//
எல்லாம் நம்ம நேரம் நண்பா..
//mayvee said..
இந்த தலைப்பை விட நல்ல சூப்பர்யான தலைப்பை வைவுங்க பாஸ்//
வாங்க Mayvee..ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க.. யோசிச்சு வச்சிரலாம் நண்பா..
இன்று தான் வேறு ஒரு வலைத்தளம் வழியாக உங்கள் வலைப்பூவை வந்தடைந்தேன். "உக்காந்து யோசிச்சது" பதிவில் ஆரம்பித்து, சுவாரஸ்யம் தாளாமல் அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் . தொடருங்கள். பின் தொடர்கிறேன்.
சுந்தர்
ருவாண்டா
மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா
ரொம்ப நன்றி வணங்காமுடி அவர்களே.. ரொம்ப சந்தோசம்..
Post a Comment