சிறு வயதிலிருந்தே, நானும் அப்பாவும் ஒன்றாக கழித்த பொழுதுகள் ரொம்ப கம்மிதான். உண்மையை சொல்வதானால், நான் ஒரு அம்மா பிள்ளையாகத்தான் வளர்ந்தேன். ஆங்கிலத் திரைப்படங்களுக்கு கூட்டி போவதற்கும், வேண்டியவற்றை வாங்கித் தர மட்டுமே நான் அப்பாவைத் தேடுவேன். நான் வளர்ந்து வெளியூருக்கு வேலைக்கு போன பின்பும் இதே நிலைமைதான் நீடித்தது. இருவரும் ஒன்றாக வீட்டில் இருப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. எப்போதாவது கிடைக்கும் வார விடுமுறைகளிலும், பண்டிகை காலங்களில் மட்டுமே நாங்கள் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருப்போம். இந்த வருடம் பொங்கலுக்கு எனக்கு ஐந்து நாட்கள் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது என்று முடிவு செய்து இருந்தேன்.
அன்றைக்கு மாட்டுப்பொங்கல். மதிய நேரம். சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தோம். பழைய காலத்து படம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி". அப்பா அதனை விரும்பி பார்த்துக் கொண்டு இருந்தார். நான் அருகில் அமர்ந்தவாறே அம்மாவிடம் படத்தை கிண்டல் செய்து கொண்டு இருந்தேன். கதாநாயகன் மாறுவேடத்தில் நாயகியின் அந்தப்புரத்திற்கு வருகிறான். அவனை பார்த்த முதல் பார்வையிலேயே ராணிக்கு காதல் வந்து விடுகிறது. எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
"ச்சே..கொடுத்த வச்ச மனுஷங்க.. ஒரு லுக்லையே பிள்ளைய மடிச்சுட்டான். நமக்குத்தான் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. அந்த காலத்துல எல்லாம் ரொம்ப ஈசியா மாட்டும் போல..என்னம்மா.." என்று அம்மாவை ஓட்டினேன்.
"கிறுக்கா.. உனக்கு விவஸ்தையே இருக்காது.. " என்னைத் திட்டிக்கொண்டே அம்மா எழுந்து உள்ளே போய் விட்டார்கள். நான் சிரித்துக் கொண்டே திரும்பினால் அப்பா என்னையே பார்த்து கொண்டிருந்தார்.
"நீ நினைக்குற மாதிரி இல்லடா தம்பி. காதல்ங்குறது வாழ்க்கைல எல்லாருக்கும் எளிதாக கிடைக்காது. அது ஒரு வரம். கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். " அப்பா இப்படி சொன்னதும் எனக்கு ஆச்சர்யம். இதில் எதோ சூது இருக்கிறது என்று நினைத்து கொண்டே அப்பாவிடம் கேட்டேன்.
"ஏம்பா... நீங்க யாரையும் லவ் பண்ணி இருக்கீங்களா.?"
அப்பா கண்களை மூடிக் கொண்டார். அவர் காலத்தில் பின்னோக்கி செல்வதை என்னால் உணர முடிந்தது. மெதுவாக சொல்லத் தொடங்கினார்.
"1972ஆம் வருஷம்னு நினைக்குறேன். வீடு ரயில்வே காலனிலதான் இருந்தது. எதிர் வீட்டுல அவுட்ஹவுஸ்ல ஒரு பொண்ணு குடியிருந்தா.. என்னன்னு தெரியல.. எப்படின்னும் புரியல.. எனக்கு அவங்கள ரொம்ப புடிச்சு இருந்தது. இந்தக் காலம் மாதிரி வெளிப்படையா பேசிக்க எல்லாம் முடியாது. போகைல வரைல.. ஒரு பார்வை.. ஒரு சின்ன சிரிப்பு.. அவ்வளவுதான். எனக்கு அவளைப் பிடிச்ச மாதிரி அவளுக்கு என்னை பிடிக்குமான்னு கூடத் தெரியல.. ஆனா கல்யாணம் பண்ணினா அவளைத்தான் பண்ணனும்னு நினச்சேன். அந்த வருஷம் பிள்ளையார் கோவில் திருவிழாவில அவகிட்ட சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன்.
அன்னைக்கு திருவிழாவோட கடைசி நாள். ராத்திரி எட்டு மணி. பாட்டு கச்சேரி நடந்துகிட்டு இருக்கு. அவ அவளோட குடும்பத்தோட முன்னாடி உக்காந்து இருந்தா. நான் பின்னாடி பசங்க கூட நின்னுகிட்டு இருந்தேன். அவ என்ன திரும்பி திரும்பி பார்க்குறான்னு எனக்கு நல்லா தெரியுது. போய் சொல்லுடான்னு பசங்க வேற ஏத்தி விடுறாங்க. எனக்கோ பயம். அவளைப் பார்த்துகிட்டே இருந்தேன். திடீர்னு அவ எந்திரிச்சு கோயிலுக்கு உள்ள போய்ட்டா. ஆனது ஆகட்டும்னு நானும் உள்ளே போனான். அங்க அவ அம்மன் சந்நிதி கிட்ட ஓரமா நின்னுக்கிட்டு இருந்தா.. . தைரியமா கிட்ட போய் என்ன கல்யாணம் பண்ண உங்களுக்கு சம்மதமான்னு கேட்டேன். அவ என்னை நிமிர்ந்து பார்த்தா.. இதை கேக்க ஏன் இவ்வளவு பயம்? நானும் உங்கள விரும்புறேன்னு சொல்லிட்டு போய்ட்டா.. எனக்கு சந்தோசம் தாங்கல.. "
"அப்புறம் என்னப்பா ஆச்சு? ஏன் அவங்கள.." நான் கேட்டேன்.
"எங்க அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அந்த பொண்ணு கீழ்ஜாதி.. அவள கட்டிகிட்டா நான் செத்துருவேன்னு சொல்லிட்டாங்க.. அம்மாவ மீறி என்னால ஒண்ணும் பண்ண முடியல.. வேலைய கொச்சினுக்கு மாத்திக்கிட்டு போயிட்டேன். நாலு வருஷம் கழிச்சு திரும்பி வந்தப்போ அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தது. ஒருநாள் அவள எதேச்சையா கடைத்தெருவுல பார்த்தேன். அந்த கண்கள்ல தெரிஞ்ச சோகமும், ஏமாற்றமும் என்னால மறக்கவே முடியாதுடா தம்பி" சொல்லி முடித்தபோது அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன.
"இதெல்லாம் இப்ப அவசியம் அவன்கிட்ட சொல்லனுமா.. " அம்மா உள்ளே இருந்து குரல் கொடுத்தார்கள். அப்போதுதான் கவனித்தேன். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அம்மா அங்கே வரவே இல்லை. அப்பா மௌனமாக இருந்தார்.
"அவங்க பேர் என்னப்பா?" நான் கேட்டேன்.
"பழனியம்மா.." தேய்ந்த குரலில் அப்பா சொன்னார். அப்பாவுக்கு அடிக்கடி போகும் அளவிற்கு பிடித்த ஊர் பழனிதான் என்பது ஏனோ எனக்கு அப்போது ஞாபகம் வந்தது. ஏதோ கேட்க தோன்றியது. ஆனால் நான் கேட்கவில்லை. வெகு நேரம் வரை யாரும் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு ஏனோ அப்பாவை எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழரைப் போல் உணர்ந்தேன்.
"நதியின் உள்ளே
மூழ்கிக் கிடக்கும்
கூழாங்கல்லைப் போல்
ஒவ்வொருவரின் மனதிலும்
மூழ்கி கிடக்கிறது - அவர்களின்
முதல் காதல்!!"
40 comments:
அருமையான ஆட்டோகிராப்
//spidey said..
அருமையான ஆட்டோகிராப்//
வருகைக்கு நன்றி spidey..
ஒன்ன்ன்ன்ன்னும் சொல்ல தெரியலே... எனக்கு.
ஏன் நைனா.. சொல்ல முடியாத அளவுக்கு ஒண்ணும் தப்ப எழுதிடலையே?
no..no...
feelings shop of india for me.
hehehehehehe
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
by the by... visit my blog. I have posted two new posts.
//நையாண்டி நைனா said..
no..no...
feelings shop of india for me.
hehehehehehe
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@//
உங்க feelins பார்த்து எனக்கு புல்லரிக்குது போங்க.. நன்றி நண்பா..
அருமையான அப்பாக்ராஃப்....
அன்புடன் அருணா
முதல் முறையா வந்திருக்கீங்க.. ரொம்ப நன்றி அருணா அவர்களே..
romba touching ah irukku..azhaku
அருமை
//இயற்கை said..
romba touching ah irukku..azhaku//
நெகிழ்வுக்கு நன்றி தோழி..
//T.V.Radhakrishnan said..
அருமை//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே..
nice one!
அப்பாகிட்ட இப்படி பேசறதே எவ்வளவு நல்ல விஷயம்...??? முதல் காதல் என்பது எல்லோருடைய ஆழ்மனக் கிணறுகளில் புதைந்திருக்கும் ரகசியம்... அதை தக்க சமயத்தில் தோண்டியெடுக்க ஒரு மகனால் நிச்சயம் முடியும்..
என் அப்பாவிடம், நான் காதல் பற்றி பேசினதில்லை.... ஒரே ஒரு முறை, மெரினாவில் வைத்து என் அப்பா சொன்னார், " காதல் பன்ற வயசில்ல உனக்கு.... அத நம்ம குடும்பமும் ஏத்துக்காது " என்றார்.... அவரோட காதல் அவரோட குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்காதோ என்ற சந்தேகம் எனக்குள் வலுவாக அன்றிலிருந்து இன்றுவரை இருந்திருக்கிறது...
கடைசியாக ஒரு கவிதை போட்டிருக்கீங்களே!!!! டாப்.....
//ela said..
nice one!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
//ஆதவா said..
அப்பாகிட்ட இப்படி பேசறதே எவ்வளவு நல்ல விஷயம்...??? முதல் காதல் என்பது எல்லோருடைய ஆழ்மனக் கிணறுகளில் புதைந்திருக்கும் ரகசியம்... அதை தக்க சமயத்தில் தோண்டியெடுக்க ஒரு மகனால் நிச்சயம் முடியும்..
என் அப்பாவிடம், நான் காதல் பற்றி பேசினதில்லை. ஒரே ஒரு முறை, மெரினாவில் வைத்து என் அப்பா சொன்னார், " காதல் பன்ற வயசில்ல உனக்கு.... அத நம்ம குடும்பமும் ஏத்துக்காது " என்றார்.அவரோட காதல் அவரோட குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்காதோ என்ற சந்தேகம் எனக்குள் வலுவாக அன்றிலிருந்து இன்றுவரை இருந்திருக்கிறது...
கடைசியாக ஒரு கவிதை போட்டிருக்கீங்களே!!!! டாப்.....//
நீங்களும் அப்பாவ பத்தி சொல்றத கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா..ஒரு வயதுக்குமேல் ஆண்மகன் அப்பாவுக்குத் தோழனாகி விடுகிறான்.. எங்க அப்பா என்கிட்டே அவ்வளவு பேசுனதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்..
"நதியின் உள்ளே
மூழ்கிக் கிடக்கும்
கூழாங்கல்லைப் போல்
ஒவ்வொருவரின் மனதிலும்
மூழ்கி கிடக்கிறது - அவர்களின்
முதல் காதல்!!"
உண்மைதான்,யாரவது மூழ்கி எடுத்தால்தான் உண்டு.
ஒரு சிறு நிகழ்வை சிறுகதை போன்று,எழுதி அப்பா மகன் உறவை சொன்னதற்கு பாராட்டுகள்
ஓவியமும் அருமை
\\"நதியின் உள்ளே
மூழ்கிக் கிடக்கும்
கூழாங்கல்லைப் போல்
ஒவ்வொருவரின் மனதிலும்
மூழ்கி கிடக்கிறது - அவர்களின்
முதல் காதல்!!" \\
அசத்தலான ஆட்டோகிராப் தான்
\\"ச்சே..கொடுத்த வச்ச மனுஷங்க.. ஒரு லுக்லையே பிள்ளைய மடிச்சுட்டான். நமக்குத்தான் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. அந்த காலத்துல எல்லாம் ரொம்ப ஈசியா மாட்டும் போல..என்னம்மா.."\\
ஆஹா... ஹா...ஹா....
தங்கள் இடுகை மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது.
அப்பாவின் நினைவுகளை வருடிச்செல்ல வைத்தது தங்கள் பதிவு......அருமை!
//சொல்லரசன் said..
உண்மைதான்,யாரவது மூழ்கி எடுத்தால்தான் உண்டு.
ஒரு சிறு நிகழ்வை சிறுகதை போன்று,எழுதி அப்பா மகன் உறவை சொன்னதற்கு பாராட்டுகள்.ஓவியமும் அருமை//
ஆம் நண்பா.. நம்மை நெருக்கமாக உணரும்போது தான் இது போன்ற விஷய்ங்களை சொல்ல முடியும்.. நன்றி
//கவின் said..
அசத்தலான ஆட்டோகிராப் தான்//
ரசித்ததற்கு நன்றி கவின்
//பாலராஜன்கீதா said..
தங்கள் இடுகை மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
//Divya said..
அப்பாவின் நினைவுகளை வருடிச்செல்ல வைத்தது தங்கள் பதிவு......அருமை!//
நான் இந்த இடுகையை இடக் காரணமே அதுதான்.. படிக்கும்போது ஏதேனும் ஒரு கணத்தில் உங்களுடைய அப்பாவை நினைக்க முடிந்தது என்றால் ரொம்ப சந்தோசம்.. நன்றி திவ்யா..
மிகச் சிறப்பான எழுத்து. உணர்வுகளை மிக அருமையாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அன்பு நித்யன்
//நித்யகுமாரன் said..
மிகச் சிறப்பான எழுத்து. உணர்வுகளை மிக அருமையாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.//
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தோழரே..
Muthal kaathal pasumarathu aani pol.Pl visit my previous post in my www.muniappanpakkangal.blogspot.com, Kaathal postmortem.
நல்ல அப்பா.....
நல்ல அட்டோகிராப்....
//muniyappan pakkangal said..
Muthal kaathal pasumarathu aani pol.Pl visit my previous post in my www.muniappanpakkangal. blogspot.com, Kaathal postmortem.//
கண்டிப்பாக படிக்கிறேன் நண்பா..
//மறத்தமிழன் said..
நல்ல அப்பா.....
நல்ல அட்டோகிராப்....//
பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா.. வருகைக்கு நன்றி..
அருமையான பதிவு...
//அத்திரி said..
அருமையான பதிவு...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..
தலை,
என்னை என் கடந்த காலத்தக்கு கூட்டி கொண்டு போய் விட்டிர்கள் !!!
My autogrpah starts from my 5th Std onwards.
I don't know how to tell all my autograph to my son. :-)
feeling-aa இருந்தது. Good ..keep on writing.
நீ நினைக்குற மாதிரி இல்லடா தம்பி. காதல்ங்குறது வாழ்க்கைல எல்லாருக்கும் எளிதாக கிடைக்காது. அது ஒரு வரம். கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.
நல்லா இருக்கு கார்த்திகைப்பாண்டியன்..
//ச.ராமானுசம் said..
தலை,என்னை என் கடந்த காலத்தக்கு கூட்டி கொண்டு போய் விட்டிர்கள் !!!My autogrpah starts from my 5th Std onwards.I don't know how to tell all my autograph to my son. :-)feeling-aa இருந்தது. Good ..keep on writing.//
fifth std? விவகாரமான ஆளுயா நீங்க.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..
//ஸ்ரீதர்கண்ணன் said..
நல்லா இருக்கு கார்த்திகைப்பாண்டியன்..//
நன்றி நண்பா..
மன்னிக்கவும் சிறிதுகாலமாக வரமுடியவில்லை...
இந்தப்பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது..நல்லாவாசிக்கிறாக்க ளு க்கு பீலிங்க்ஸ் வாறமாதிரி எழுதி இருக்கிறீங்க...
ஆனா அம்மா ஏனப்பிடி சொன்னாங்க எண்டு கேட்டீங்களா?
//புல்லட் பாண்டி said..
மன்னிக்கவும் சிறிதுகாலமாக வரமுடியவில்லை...
இந்தப்பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது..நல்லாவாசிக்கிறாக்க ளு க்கு பீலிங்க்ஸ் வாறமாதிரி எழுதி இருக்கிறீங்க...ஆனா அம்மா ஏனப்பிடி சொன்னாங்க எண்டு கேட்டீங்களா?//
பரவா இல்லப்பா.. வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி ..எந்தப் பெண்தான் தனது கணவர் இன்னொரு பெண்ணைப் பற்றி பேசுவதை ஒத்துக்கொள்வார்? அதனால் கேட்கவில்லை..
Post a Comment