February 26, 2009

அவனும் அவளும் (5)....!!!

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு அவன் அவளை சென்னையில் பார்த்தான். கண்டிப்பாக அவளேதான். மறக்கக் கூடிய முகமா அவளுடையது? ஆள் முன்னைக்கு இப்போது இன்னும் இளைத்து இருந்தாள். கையில் ஒரு குழந்தை வேறு இருந்தது. அவள் அவனைப் பார்க்கும்முன் திரும்பி விட எத்தனித்தபோது, அவள் அவனுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டாள். மெதுவாக திரும்பி அவளை நோக்கி சென்றான். அவள் கண்களில் ஆச்சர்யம் தேங்கி நின்றது.
"நீ இங்க எப்படி..? சென்னைக்கு எப்போ வந்த?"
"நான் இங்க வந்து எட்டு மாசம் ஆகுதும்மா.. பக்கத்துல ஒரு கம்பனிலதான் வேலை பாக்குறேன்"
"அதிசயமா இருக்கு.. நானே எப்பயாவதுதான் கடைத்தெருவுக்கு வருவேன்.. இன்னைக்கு என் நல்ல நேரம்.. உன்னப் பார்த்துட்டேன்.. எங்க தங்கி இருக்க?"
"கோடம்பாக்கத்துல ஒரு பிரென்ட் கூட ரூம் எடுத்து தங்கி இருக்கேன்"
"சரி வா.. இங்க கிட்டக்கத்தான் என் வீடு.. போய் அங்க பேசிக்கலாம்"
"பரவா இல்ல.. நான் இன்னொரு நாள் வரேனே."
"எத்தன நாள் கழிச்சு பாக்குறோம்? உன்ன அவ்வளவு சீக்கிரம் போக விட்டுடுவேனா? சொன்னா கேளு.. வா.. கிளம்பு.. ஒண்ணும் பேசக் கூடாது". அவள் எப்போதுமே அப்படிதான். ரொம்ப பிடிவாதக்காரி. அவள் சொன்னால் அது நடக்க வேண்டும். இன்னமும் மாறவில்லை போல என்று நினைத்துக் கொண்டான்.
அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுடைய அப்பா தென்மாவட்ட நகரம் ஒன்றில் சொந்தமாகக் கடை வைத்திருந்தார். அவன் அருமையாக கவிதை எழுதுவான். எந்தக் கல்லூரியில் போட்டி நடந்தாலும் அதில் கலந்து கொள்வான். அவனுக்கு என்று அவனது கல்லூரியில் ஒரு ரசிகர் மன்றமே இருந்தது. அவள் அவனுக்கு ஒரு வருடம் ஜுனியர். நிறைய புத்தகங்கள் படிப்பவள். அருகில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். இருவருக்குமே அலைவரிசை ஒத்துப் போனதால் எளிதாகப் பழக முடிந்தது. கடைசியில் வழக்கம் போல் காதலில் போய் முடிந்தது.
அவர்களைப் பார்த்து வியக்காத மக்கள் கல்லூரியில் கிடையாது. அப்படி ஒரு அழகான, அன்பான காதலர்கள். ஆனால் யாரும் நன்றாக இருந்தால்தான் விதிக்குப் பிடிக்காதே. ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் அவள் காணாமல் போனாள். காற்றில் கரைந்த கற்பூரம் போல் சுவடே இல்லாமல் மறைந்து விட்டாள். அவன் அவளுடைய ஊருக்கு போனபோது பூட்டி இருந்த வீடுதான் அவனை வரவேற்றது. அவளுடைய அக்கா யாரையோ காதலித்து ஓடிபோனதாகவும், அவமானம் தாங்காமல் அவர்கள் குடும்பத்தோடு ஊரைக் காலி செய்து விட்டுப்போய் விட்டதாகவும் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். அதுதான் அவன் அவளைப்பற்றி கடைசியாகக் கேள்விப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறான்.
சிறிய வீடு. அழகாக வைத்து இருந்தாள். கணவர் வேலைக்கு சென்று விட்டார் எனவும் இரவு லேட்டாகத்தான் வருவார் என்றும் சொன்னாள். நிறையப் பேசினாள். கணவரை பற்றி, அவருடைய குடும்பம் பற்றி, வேலை பற்றி எல்லாம் சொன்னாள். அவளுடைய அக்கா இப்போது மீண்டும் அவர்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து விட்டதையும் சொன்னாள். அவளுடைய பையன் அங்கும் இங்கும் ஓடி விளையாண்டுக் கொண்டிருந்தான். வெகு நேரம் பேசி விட்டு அவள் ஓய்ந்து போனாள். அவன் எதுவுமே பேசவில்லை. கொஞ்ச நேரம் அங்கே நிசப்தமாக இருந்தது.
"ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்.. பக்கத்துல இருந்துகிட்டும் ஏன் இப்படி அமைதியா இருக்க.. என்கிட்டப் பேச மாட்டியா..?" கேட்டபோது அவளுடைய குரல் கம்மியது. அவன் அப்போதும் அமைதியாக இருந்தான்.
"என்ன ரொம்பத் தேடி இருப்ப இல்ல? என்மேல கோபம் இருந்தாத் திட்டிடு.. இப்படி அமைதியா இருக்காத.. ப்ளீஸ்..".
அவன் முதல் தடவையாகப் பேசினான். "உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு என்னைக்குமே நான் நினைக்க மாட்டேன்.. எங்க இருந்தாலும் நீ நல்லா இருந்தாப் போதும். உன்னோட சூழ்நிலையில நான் இருந்தாலும் அப்படித்தான் பண்ணி இருப்பேன்.. நீ சங்கடப்படாதே..".
"உனக்கு எம்மேல வருத்தமே இல்லையா?"
"கண்டிப்பா இல்ல" அவன் சொல்லிக் கொண்டே எழுந்தான். "அப்போ நான் கிளம்புறேன்".
"இன்னொருநாள் அவர் இருக்கறப்ப கண்டிப்பா வரணும்.."
"சரி.." சொல்லிக்கொண்டே வாசலில் இருந்த செருப்புகளை அணிந்து கொண்டான். "நான் போயிட்டு வரேம்மா.."
"ஒரு நிமிஷம்.. "வாசலில் நின்றபடி அவள் கேட்டாள்." உனக்கு....கல்யாணம் ஆகிடுச்சா... ?"
அவன் ஒரு நிமிஷம் அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தான். திரும்பி நடக்கத் தொடங்கினான். பஸ்சைப் பிடித்து ரூமுக்கு வந்து சேர்ந்தான். ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டு ஓவென அழத்தொடங்கினான். அன்று இரவு முழுவதும் அந்த அறையில் இருந்து விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

31 comments:

அன்புடன் அருணா said...

கடைசி வரை எங்கேயோ படித்தமாதிரியே இருந்தது......
அன்புடன் அருணா

சொல்லரசன் said...

இது உங்கள் அனுபவமா,எனக்கும் இதை படித்த ஞாபகம்.

சுபாங்கி said...

நண்பரே! இப்போது தான் கதை எழுத தொடக்கி இருக்கிறீர்கள் என தெரிகிறது.
இருந்தாலும் "ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்.. " இந்த ஒரு வரியில் தான் உங்கள் கதையின் சாயல் வித்தியாசப்படுகிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடைசி வரை எங்கேயோ படித்தமாதிரியே இருந்தது......
அன்புடன் அருணா//

அப்படிங்களா.. இப்போதான் முழுக்க புனைவுகதை எழுத முயற்சி பண்ணி இருக்கேன்.. .. என்னை பாதித்த எழுத்துக்கள் எனக்குள் இருந்து வெளிப்பட்டு இருக்கலாம்.. திருத்திக்கறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
இது உங்கள் அனுபவமா,எனக்கும் இதை படித்த ஞாபகம்.//

நன்றி நண்பா.. உண்மையா நீங்க நினச்சத சொன்னதுக்கு.. அடுத்த தடவை இது நேராமல் பார்த்துக் கொள்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுபாங்கி கூறியது...
நண்பரே! இப்போது தான் கதை எழுத தொடக்கி இருக்கிறீர்கள் என தெரிகிறது.
இருந்தாலும் "ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்.. " இந்த ஒரு வரியில் தான் உங்கள் கதையின் சாயல் வித்தியாசப்படுகிறது.//

ரொம்ப நன்றிங்க.. நல்லது ஒண்ணு ரெண்டு இருக்குன்னு சொன்னதுக்கு..

ஆதவா said...

படிச்சவுடனே மனசு கனத்துப் போச்சுங்க.. சின்ன கதையின்னாலும் எவ்வளவு அழகான ஆழமான கருத்து..... எத்தனையோ பேர் இந்தமாதிரி கதை எழுதி ப்டிச்சிருக்கேன்.. ஆனால் இது முற்றிலும் வித்தியாசம்..

எல்லோருக்கும் இப்படி ஒரு மறுபக்கமும், அசந்தர்ப்பமும் அமையும்... ஏன், எனக்கே கூட...

காதல் ஒரு மாதிரியான வடு.... நீக்க முடியாதது!!!

வாழ்த்துகள்!!!

மணிகண்டன் said...

கதை நல்லா இருந்தது பாண்டியன். கலக்கறீங்க.

அவனும் அவளும்ன்னு முன்னாடி ஒரு பதிவு இருந்தது. இப்ப தான் அந்த பதிவு காணாம போய்டுச்சு.

Anonymous said...

சின்ன கதையில் பிரிவை சொல்லொட்டிங்க... மனசு கண்க்கிறது

இவன் said...

ஆனால் யாரும் நன்றாக இருந்தால்தான் விதிக்குப் பிடிக்காதே.

ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்..

ஒரு நிமிஷம்.. "வாசலில் நின்றபடி அவள் கேட்டாள்." உனக்கு....கல்யாணம் ஆகிடுச்சா... ?"அவன் ஒரு நிமிஷம் அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தான்.

அருமையா எழுதி இருக்கீங்க. என்ன அனுபவமோ.....

ஹேமா said...

காதலின் வலி கடைசி மூச்சு கட்டையில் போகும்வரை.

நசரேயன் said...

கதை நல்லா இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

///ஆதவா said..
படிச்சவுடனே மனசு கனத்துப் போச்சுங்க.. சின்ன கதையின்னாலும் எவ்வளவு அழகான ஆழமான கருத்துஎத்தனையோ பேர் இந்தமாதிரி கதை எழுதி ப்டிச்சிருக்கேன்.. ஆனால் இது முற்றிலும் வித்தியாசம்..
எல்லோருக்கும் இப்படி ஒரு மறுபக்கமும், அசந்தர்ப்பமும் அமையும்... ஏன், எனக்கே கூட...
காதல் ஒரு மாதிரியான வடு.... நீக்க முடியாதது!!!வாழ்த்துகள்!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//மணிகண்டன் said..
கதை நல்லா இருந்தது பாண்டியன். கலக்கறீங்க.அவனும் அவளும்ன்னு முன்னாடி ஒரு பதிவு இருந்தது. இப்ப தான் அந்த பதிவு காணாம போய்டுச்சு.//

ரொம்ப நன்றி நண்பா.. நான் இந்த பதிவுத் தொடர மூணு மாசமா எழுதிக்கிட்டு இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// கவின் said..
சின்ன கதையில் பிரிவை சொல்லொட்டிங்க... மனசு கண்க்கிறது//

நன்றி கவின்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இவன் said..
அருமையா எழுதி இருக்கீங்க. என்ன அனுபவமோ.....//
அனுபவம் எல்லாம் இல்லப்பா.. இது முழுக்க கற்பனைதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
காதலின் வலி கடைசி மூச்சு கட்டையில் போகும்வரை.//

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
கதை நல்லா இருக்கு//

நன்றி தோழரே..

gayathri said...

manasuku pudichavangala perinji irukarthu kodimailum kodumai

antha vali eppothu manathai vettu nengathu

கார்த்திகைப் பாண்டியன் said...

//gayathri said..
manasuku pudichavangala perinji irukarthu kodimailum kodumai
antha vali eppothu manathai vettu nengathu//

வருகைக்கு நன்றி தோழி..

Anonymous said...

அருமையா எழுதி இருக்கீங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் வருகை.. ரொம்ப நன்றி நண்பா..

அன்புமணி said...

எல்லார காதலிகளும் கேட்கிற கேள்விதான். காதலன்தான் யதார்த்த வாழ்க்கைக்கு வரமுடியாமல் நினைவுகளோடு நீந்திக்கொண்டிருக்கிறான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அன்புமணி said..
எல்லார காதலிகளும் கேட்கிற கேள்விதான். காதலன்தான் யதார்த்த வாழ்க்கைக்கு வரமுடியாமல் நினைவுகளோடு நீந்திக்கொண்டிருக்கிறான்.//

சரியாச் சொன்னிங்க நண்பா..

நிலாவன் said...

ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்..

"நான் போயிட்டு வரேம்மா..""ஒரு நிமிஷம்.. "வாசலில் நின்றபடி அவள் கேட்டாள்." உனக்கு....கல்யாணம் ஆகிடுச்சா... ?"அவன் ஒரு நிமிஷம் அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தான். திரும்பி நடக்கத் தொடங்கினான். பஸ்சைப் பிடித்து ரூமுக்கு வந்து சேர்ந்தான். ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டு ஓவென அழத்தொடங்கினான்.கதை நல்லா இருக்கு...
பிரிந்த காதலின்
வலி
காதலனுக்கும் காதலிக்கும்
இருக்கும்
ஆனால் காதலிகளை வலிகளோடு வாழ
இந்த சமுதாயம் சம்மதிப்பதில்லை...
அதனால் காதலிகளின் வலி தெரிவதில்லை
அம்மா ... அம்மா ...
என்னும் மழலையின் அமுதசொல்லால்
எத்தனையோ காதலிகள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்

இவன் said...

"பிரிந்த காதலின்
வலி
காதலனுக்கும் காதலிக்கும்
இருக்கும்
ஆனால் காதலிகளை வலிகளோடு வாழ
இந்த சமுதாயம் சம்மதிப்பதில்லை...
அதனால் காதலிகளின் வலி தெரிவதில்லை
அம்மா ... அம்மா ...
என்னும் மழலையின் அமுதசொல்லால்
எத்தனையோ காதலிகள் வாழ்ந்து"

அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப அருமையா சொன்னீங்க நண்பா.. நன்றி நிலாவன்..

கமல் said...

அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுடைய அப்பா தென்மாவட்ட நகரம் ஒன்றில் சொந்தமாகக் கடை வைத்திருந்தார். அவன் அருமையாக கவிதை எழுதுவான். எந்தக் கல்லூரியில் போட்டி நடந்தாலும் அதில் கலந்து கொள்வான். அவனுக்கு என்று அவனது கல்லூரியில் ஒரு ரசிகர் மன்றமே இருந்தது. அவள் அவனுக்கு ஒரு வருடம் ஜுனியர். நிறைய புத்தகங்கள் படிப்பவள். அருகில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். இருவருக்குமே அலைவரிசை ஒத்துப் போனதால் எளிதாகப் பழக முடிந்தது. கடைசியில் வழக்கம் போல் காதலில் போய் முடிந்தது. //

அது யாருங்க...நீங்களா??? :)))))

கமல் said...

"ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்.. பக்கத்துல இருந்துகிட்டும் ஏன் இப்படி அமைதியா இருக்க.. என்கிட்டப் பேச மாட்டியா..?" கேட்டபோது அவளுடைய குரல் கம்மியது. அவன் அப்போதும் அமைதியாக இருந்தான். //

வார்த்தைகளுக்குள் தொலைவதென்பது இது தானே?? நல்ல சொல்லாடல்??

கமல் said...

சரி.." சொல்லிக்கொண்டே வாசலில் இருந்த செருப்புகளை அணிந்து கொண்டான். "நான் போயிட்டு வரேம்மா.."
"ஒரு நிமிஷம்.. "வாசலில் நின்றபடி அவள் கேட்டாள்." உனக்கு....கல்யாணம் ஆகிடுச்சா... //

நல்லதொர்ரு படைப்பிலக்கியம்? கதையின் மையக் கரு இது தான் என்பதை வாசகர் சிந்தனைக்கு விட்டிருக்கிறீர்கள்.தொடர்ந்தும் எழுதுங்கோ...வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

அது சத்தியமா நான் இல்லை கமல்.. விரிவான கருத்துகளுக்கு நன்றி..