June 6, 2009

குளிர் 100 டிகிரி - திரைவிமர்சனம்..!!!


ஹிந்தியில் மல்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே உண்டு. அதற்கென ஒரு ஆடியன்ஸ் இருக்கிறார்கள். தமிழின் முதல் மல்டிப்ளெக்ஸ் படம் என்று இந்தப் படத்தை சொல்லலாம். கொஞ்ச நாளைக்கு முன் வந்த விசில் படத்தில் "அழகிய அசுரா" பாடலைப் பாடியவர் அனிதா உதீப். அதன் பிறகு காணாமல் போனவர் இந்தப்படத்தின் இயக்குனராக திரும்பி வந்து இருக்கிறார். குளிர் 100 டிகிரி - பெயரில் இருக்கும் வித்தியாசம் படத்தின் கதைக் களத்திலும் இருக்கிறது. மேல்தட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளியையும், அங்கே நிலவும் பிரச்சினைகளையும் காட்டி இருக்கிறார்கள்.


நாயகன் சூர்யா. +1 படிக்கிறான். முன்கோபி. தப்பு செய்பவர்களைக் கண்டால் பிடிக்காது. அவன் அப்பா ஒரு தாதா. இதனால் அம்மாவும் அப்பாவும் பிரிந்து வாழ்கிறார்கள். எதிலும் பிரச்சினை செய்யும் சூர்யா திருந்த வேண்டும் என்பதற்காக அவனுடைய அம்மா அவனை ஒரு மலை வாசஸ்தலத்தில் இருக்கும் கான்வென்ட்டிற்கு அனுப்புகிறார். அங்கே அவனுடைய நண்பனாக பப்லு. பிரின்சிபாலின் மகளான தான்யாவின் சிநேகமும் கிடைக்கிறது.


ரோஹித் - ஆகாஷ் - ரால்டி... இந்த மூவரும் ஸ்கூலின் அடாவடி மாணவர்கள். ஸ்டூடண்ட் கவுன்சில் என்ற பெயரில் மற்ற மாணவர்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள். இவர்கள் வைத்ததுதான் சட்டம். சூர்யா இவர்களை எதிர்க்கிறான். ஸ்கூலில் நடக்கும் தேர்தலில் ரோகித்தின் ஆளைத் தோற்கடிக்கிறான் சூர்யா. கோபத்தில் ரோதித்தும் நண்பர்களும் சேர்ந்து பப்லுவைக் கொன்று விடுகிறார்கள். உண்மை தெரிந்து சூர்யா மூவரையும் பழி வாங்குகிறான். கடைசியில் சூர்யாவுக்கு என்ன ஆனது.. இதுதான் படத்தின் கதை.


சாதரணமான கதைக்கு வெகுப் பொருத்தமான மக்களை தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர். சூர்யாவின் அப்பாவாக வரும் ஆதித்யா, ப்ரின்சியாக வரும் தலைவாசல் விஜய் தவிர எல்லாருமே புதுமுகங்கள். நாயகன் சூர்யாவாக நடித்து இருப்பவர் படு ஸ்மார்ட். அவருக்கு அப்படியே சிம்புவின் குரல். நன்றாக நடித்து இருக்கும் இன்னொருவர் பப்லுவாக வரும் குண்டுப் பையன். நண்பனுக்காக எதையும் செய்பவராக கலக்கி உள்ளார். கதாநாயகி ஓகே ரகம். வில்லன்களாக வரும் மூன்று பேரும் நன்றாக செய்து உள்ளார்கள்.


படத்தில் பட்டாசு கிளப்பி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய். டாப் ஆங்கிள்களில் வரும் காட்சிகள் மிரட்டல். மலைப்பகுதியின் பசுமையை கண்ணுக்கு குளிர்ச்சியாக படமாக்கி உள்ளார். பச்சைப்புல்வெளி, காடு, மணிக்கூண்டு, பள்ளிக்கூடம், பனி விழும் இரவு என அத்தனையையும் அம்சமாக காட்டுகிறார். சான்சே இல்லை. படத்தில் தூள் கிளப்பும் இன்னொரு விஷயம் இசை - BOBO சஷி. பின்னணி இசை கிளாஸ். பாடல்கள் பாப், ராப், jaaz என மேற்கத்திய ஸ்டைலில் இருக்கின்றன. நட்பை சொல்லும் "மனசெல்லாம்" பாடல் படமாக்கி இருக்கும் விதமும் அருமை. லெனின் கச்சிதமான எடிட்டிங் படத்தின் கூடுதல் பலம.


அடிபட்ட சூர்யாவின் காயங்களுக்கு பப்லு மருந்து போடும் காட்சியிலும், தன்னோடு வரும்படி சொல்லும் அப்பாவிடம் அம்மா கஷ்டப்படுவாங்காப்பா என்று சூர்யா சொல்லும் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர். படத்தை அழகாக இயக்கி உள்ளார் அனிதா உதீப். அவரிடம் சில கேள்விகள்...


* தமிழ் சினிமா மரபுப்படி இந்த படத்தில் ஐந்து பாடல்களை சேர்த்து இருப்பது தேவையா?


* இவ்வளவு ஸ்ட்ரிக்டான ஸ்கூலில் ச்டூடன்ட்சை கண்ட்ரோல் பண்ண வாத்தியார்களே இருக்க மாட்டார்களா?


* தமிழ் படத்தின் நாயகி லூசாகத்தான் இருக்க வேண்டுமா?


* கடைசி இருபது நிமிட வன்முறை அவசியம்தானா?


இத்தனையும் மீறி படம் நம்மை ஈர்க்கிறது என்றால் அதன் காரணம் தெளிவான திரைக்கதை. இயல்பான வசனங்கள். முதல் படத்திலேயே கலக்கி உள்ளார் அனிதா. வாழ்த்துக்கள்.


குளிர் 100 டிகிரி - ஜில்.


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

60 comments:

சம்பத் said...

தல, ரொம்ப நாளுக்கப்புறம் இணையத்திற்கு திரும்பவும் வந்துவிட்டேன்...வந்து பாத்தா நீங்க ஆ.வி ரேஞ்சுக்கு விமர்சனம் போடா ஆரம்பிச்சுட்டிங்க... கலக்குங்க...அப்புறம் புது வீளை எப்படி போகுது...?

Rajaraman said...

அருமையான தெளிவான நடுநிலையான விமர்சனம், உங்கள் விமர்சனத்துக்காகவே படம் பார்ர்க்க வேண்டும் போலுள்ளது.

Anbu said...

விமர்சனம் அருமை அண்ணா

டக்ளஸ்....... said...

பார்க்கலாம் போலயே..!

Karthik said...

நல்ல விமர்சனம். போலாம்ங்கிறீங்க? :)

முரளிகண்ணன் said...

நல்ல விமர்சனம்.

ச.பிரேம்குமார் said...

யோவ் பாண்டியரே, ஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்லையா?? :)

Anonymous said...

Dude,
I have a point to make. This is not totally related to your post or it's content. So please don't mistake me.

What does exactly the term 'Multiplex' mean. This seems to be the most abused word in blogging in addition to 'Fascist'. (Anyone who has a different viewpoint is a fascist !!!!)
From how I see it, multiplex generally refers to audience willing to shell out mega bugs to see a movie which has decent production values (Other things like the quality of the film itself is subjective ). Does this mean that they are elite!!. Maybe, because they would say 'bastard' instead of saying that word in Tamil. Other than this there does not seem to be any great higher sensibility in them.

I think we are unconsciously degrading the people who watch films in other areas by branding them as 'B'/'C' centers, mass film etc. What the heck? These are the same people who made films like 'Mullum Malarum' etc. hits and not the bozos in designer wear.

There seems to be a dichotomy here. One one hand most of us are nostalgic towards villages etc, but when it comes to films, we look down on them as mass, masala etc.

If at all good cinema is to reach people, multiplexes are never a solution since the price tag itself is going to be prohibitive. Some movement like the 'Odessa' movement in Kerala or the one being initiated by bloggers in Chennai is needed.

I think it's a great sign that bloggers are seeing more world movies, but why do we need to trash others once we have seen a couple of Iranian movies. (By the way, does world movies start and end with Iranian movies. Other than a post in your blog about a Chinese (or Korean) film, most blogs review only Iranian movies. Or the latest trend 'Kim Ki-duk'.

I have gone off on huge rant here, so please bear with me.

Karthik said...

யாருப்பா இந்த அனானி? பின்றீங்ணா!! :)

தருமி said...

அப்போ, நல்லா இருக்குன்னு சொல்றீங்க ...?

sollarasan said...

ரொம்ப குளிருது உங்க பதிவு

ஆ.முத்துராமலிங்கம் said...

Karthik said...
யாருப்பா இந்த அனானி? பின்றீங்ணா!! :)

அதான... பிண்ணூட்ட போடுங்கன்னா பின்னால ஒரு பதிவே போட்டுருக்கது... அதுவும் இங்கிலீசு!!!

அப்புறம் வாரேன் நண்பா.
(ஒரு படம் விடுவது கிடையாது. சீக்கிரமா ஒரு கடிவாளம் போட்டாதா சரி வருவீங்க போல!!! ஹீ...ஹீ!!)

வண்ணத்துபூச்சியார் said...

தமிழ் சினிமா மரபுப்படி இந்த படத்தில் ஐந்து பாடல்களை சேர்த்து இருப்பது தேவையா? /////////

இந்த கொடுமையாலதான் படம் பார்க்கவே பயமா இருக்கு....

நர்சிம் said...

கலக்கல் நண்பா..அப்புறம் அனானி கேட்டகேள்விகளுக்கு முரளிகண்ணன் பதிவில் அதைப் பற்றி எழுதிய ஞாபகம்..

ஜெட்லி said...

பாண்டியன் நீங்கள் பாடல்கள் தேவையா என்று கேட்டு இருக்கிறிர்கள்,
நானும் முதலில் உங்களை போல் தான் நினைத்தேன். அதன் பின்னால்
தான் தெரிந்தது பாடல் மூலம் பல பேர் பிழைத்து கொண்டு இருக்கிறார்கள்.

நம் வாழ்வில் சில விஷயங்களை எப்படி நீக்க முடியாதோ, அது போல் தான்
தமிழ் படமும் பாடல்களும். அப்புறம் ஒண்ணுங்க, "இந்த படத்துக்கு வினியோகிஸ்தர்களை
வர வைத்ததே மனசெல்லாம் பாடல் தான்" என்று இயக்குனரே கூறியுள்ளார்.

நேசன்..., said...

மதுரையில இந்தப் படம் எந்தத் தியேட்டேர்ல ஓடுது!........

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் கார்த்திகை பாண்டியன்,
என்னுடைய பதிவை படித்துவிட்டு கோவித்து கொள்வீர்களேயானால் முதலில் மன்னிக்கவும், பிறகு படிக்கவும். குளிர் சக்க மொக்கன்னு நான் எழுதிட்டு வந்து பார்த்த நீங்க ஆஹா..... ஒஹோன்னு...... எனகென்னமோ இது சரியா படலை,ஆமா.
:-)

http://eniyoruvithiseivom.blogspot.com/2009/06/100.html

ஆ.முத்துராமலிங்கம் said...

பாண்டியன் கலக்கிட்டீங்க அருமையா விமர்சனம் பண்ணி இருக்கீங்க. அதிலும் உங்கள் ஐந்து கேள்விகளும் தெளிவானக் கேள்வி.

கலக்குங்க!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said...
தல, ரொம்ப நாளுக்கப்புறம் இணையத்திற்கு திரும்பவும் வந்துவிட்டேன்...வந்து பாத்தா நீங்க ஆ.வி ரேஞ்சுக்கு விமர்சனம் போடா ஆரம்பிச்சுட்டிங்க... கலக்குங்க... அப்புறம் புது வீளை எப்படி போகுது...?//

வாங்க நண்பா..நல்லா இருக்கீங்களா? நம்ம புது வேலை நல்லா போய்கிட்டு இருக்கு.. நீங்களும் சீக்கிரம் பதிவுகள் எழுத ஆரம்பிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajaraman said...
அருமையான தெளிவான நடுநிலையான விமர்சனம், உங்கள் விமர்சனத்துக்காகவே படம் பார்ர்க்க வேண்டும் போலுள்ளது.//

ரொம்ப நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
விமர்சனம் அருமை அண்ணா//

நன்றி அன்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
பார்க்கலாம் போலயே..!//

ஆமா டக்கு.. நம்பிப் பார்க்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
நல்ல விமர்சனம். போலாம்ங்கிறீங்க? :)//

நன்றி கார்த்தி.. போரடிக்காம போகுதுப்பா..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகண்ணன் said...
நல்ல விமர்சனம்.//

நன்றி முரளி

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.பிரேம்குமார் said...
யோவ் பாண்டியரே, ஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்லையா?? :)//

ஹி ஹி ஹி....

கார்த்திகைப் பாண்டியன் said...

// Anonymous said...
Dude,I have a point to make. This is not totally related to your post or it's content. So please don't mistake me.//

you have put up some valid points mate.. am never gonna mistake you.. looks like you are reading all the blogs.. this multiplex content has started with metro towns and directors even refer to their movies as catering to niche audience.. it happens.. will correct myself in referring to such films in near future.. thanks for the comment dude..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
அப்போ, நல்லா இருக்குன்னு சொல்றீங்க ...?/

ஆமா ஐயா.. makingகாக பார்க்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//sollarasan said...
ரொம்ப குளிருது உங்க பதிவு//

நாளைக்கு வீட்டுல இருந்து ஒரு போர்வைய எடுத்துக்கிட்டு வாங்கண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அப்புறம் வாரேன் நண்பா.
(ஒரு படம் விடுவது கிடையாது. சீக்கிரமா ஒரு கடிவாளம் போட்டாதா சரி வருவீங்க போல!!! ஹீ...ஹீ!!)//

கண்ணு வைக்காதீங்கப்பா.. நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
இந்த கொடுமையாலதான் படம் பார்க்கவே பயமா இருக்கு....//

இந்தப் படம் ஓகே நண்பா.. பாடல்கள் கூட பரவா இல்லை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
கலக்கல் நண்பா..அப்புறம் அனானி கேட்டகேள்விகளுக்கு முரளிகண்ணன் பதிவில் அதைப் பற்றி எழுதிய ஞாபகம்..//

நன்றி நர்சிம.. முரளியின் எந்தப் பதிவுன்னு கொஞ்சம் லிங்க் கொடுங்க.. இருக்கட்டும்.. நானும் தேடித் பார்க்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
பாண்டியன் நீங்கள் பாடல்கள் தேவையா என்று கேட்டு இருக்கிறிர்கள்,நானும் முதலில் உங்களை போல் தான் நினைத்தேன். அதன் பின்னால் தான் தெரிந்தது பாடல் மூலம் பல பேர் பிழைத்து கொண்டு இருக்கிறார்கள்.//

உண்மைதான் நண்பா.. உங்க விமர்சனம் படிச்சேன்.. நல்லா இருந்தது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசன்..., said...
மதுரையில இந்தப் படம் எந்தத் தியேட்டேர்ல ஓடுது!........//

சக்தி மற்றும் ஜெயம் தியேட்டர்

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
வணக்கம் கார்த்திகை பாண்டியன்,
என்னுடைய பதிவை படித்துவிட்டு கோவித்து கொள்வீர்களேயானால் முதலில் மன்னிக்கவும், பிறகு படிக்கவும். குளிர் சக்க மொக்கன்னு நான் எழுதிட்டு வந்து பார்த்த நீங்க ஆஹா..... ஒஹோன்னு...... எனகென்னமோ இது சரியா படலை,ஆமா.:-)//

opinions differ..படிக்கிறேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
பாண்டியன் கலக்கிட்டீங்க அருமையா விமர்சனம் பண்ணி இருக்கீங்க. அதிலும் உங்கள் ஐந்து கேள்விகளும் தெளிவானக் கேள்வி.//

நன்றி முத்து..

ராஜா | KVR said...

//முதல் படத்திலேயே கலக்கி உள்ளார் அனிதா//
இது அனிதாவின் முதல் படமல்ல. இதற்கு முன்னரே ஓர் ஆங்கிலேயப் படம் இயக்கி உள்ளார் (NRI indian story)

படத்தின் பெயர்: Knock Knock I am looking to marry

http://kvraja.blogspot.com/2004/08/knock-knock-im-looking-to-marry.html

அத்திரி said...

என்ன மாதிரி ஆளுங்களுக்கு மல்டிபிளெக்ஸ் படங்கள் எல்லாம் ஒத்து வராது நண்பா>>.கிகிகி

ஆ.ஞானசேகரன் said...

விமர்சனம் அருமை நண்பா,
உங்களை பார்க்க பொறாமையா இருக்கு எல்லா படங்களையும் பார்த்துவிடுகின்றீர்கள்... அடுத்து விமர்சனம் வேர... திரைப்பட விமர்சனம் என்றே ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமே...... வாழ்க யூத்

தீப்பெட்டி said...

தைரியமா பாக்கலான்றீங்க...
நீங்களே சொன்ன பிறகு
பாத்துட்டாப் போச்சு..

பிரியமுடன்.........வசந்த் said...

குளிர் நடுக்கம்......


தெளிவான விமர்ச்சனம் நண்பா

தமிழ்ப்பறவை said...

விமர்சனம் படம் பார்த்துட்டுச் சொல்றேன்..
அனானி சொன்னது நல்லா இருந்தது...சிந்திக்க வைத்தது...அவர் இன்னும் கொஞ்சம் விரிவா பதிவே எழுதி இருக்கலாம்..

மகேஷ் said...

பார்த்துடுவோம்!

Cable Sankar said...

நைஸ்...

Chill-Peer said...

நீங்க பார்க்காத படம் ஏதும் இருக்கா கார்த்திக்?

வேத்தியன் said...

wow...

nice article...

Thamizhmaangani said...

எப்போ இந்த படம் வெளிவந்தது?

i am waiting for this movie to be release. உங்க positive reviewஎ படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் ரொம்ப குறைவு. இவங்க வந்து கலக்குவாங்கன்னு நினைக்குறேன்.

அந்த ஹீரோவுக்கு சிம்பு குரல் மாதிரி இருக்கா?

என்னப்பா, இத நம்பி படத்த பாக்க போலாமா? :)

அ.மு.செய்யது said...

நல்லா இருக்குங்க உங்க விமர்சனம்.தோரணைக்கு எழுதினத விட..

கேட்ட கேள்விகளும் சூப்பர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராஜா | KVR said...
இது அனிதாவின் முதல் படமல்ல. இதற்கு முன்னரே ஓர் ஆங்கிலேயப் படம் இயக்கி உள்ளார் (NRI indian story)//

தகவலுக்கு நன்றிங்க.. படிக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
என்ன மாதிரி ஆளுங்களுக்கு மல்டிபிளெக்ஸ் படங்கள் எல்லாம் ஒத்து வராது நண்பா>>.கிகிகி//

ஆளுங்கள்ல தரம் பார்க்கக் கூடாதுன்னு அனானி ஒருத்தர் நியாயமா சொல்லி இருக்காரு நண்பா.. அதனால நீங்களும் பார்க்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
விமர்சனம் அருமை நண்பா,
உங்களை பார்க்க பொறாமையா இருக்கு எல்லா படங்களையும் பார்த்துவிடுகின்றீர்கள்... அடுத்து விமர்சனம் வேர... திரைப்பட விமர்சனம் என்றே ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமே... வாழ்க யூத்//

ஹே ஹே.. கேட்டுக்கொங்கப்பா.. நாங்களும் யூத்துதான்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
தைரியமா பாக்கலான்றீங்க...
நீங்களே சொன்ன பிறகு
பாத்துட்டாப் போச்சு..//

பாருங்க ganesh.. பிடிக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்.......வசந்த் said...
குளிர் நடுக்கம்......தெளிவான விமர்ச்சனம் நண்பா//

நன்றி வசந்த்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ்ப்பறவை said...
விமர்சனம் படம் பார்த்துட்டுச் சொல்றேன்..அனானி சொன்னது நல்லா இருந்தது...சிந்திக்க வைத்தது...அவர் இன்னும் கொஞ்சம் விரிவா பதிவே எழுதி இருக்கலாம்..//

ஆமாங்க.. அவர் சொல்றது நியாயம்தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகேஷ் said...
பார்த்துடுவோம்!//

பாருங்க நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Cable Sankar said...
நைஸ்...//

வருகைக்கு நன்றி தல

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-Peer said...
நீங்க பார்க்காத படம் ஏதும் இருக்கா கார்த்திக்?//

நான் விஜய் படங்கள் பார்க்க மாட்டேன் நண்பா.:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
wow...nice article...//

வேத்தியா? நான் விமர்சனம் போட்டா நைஸ் ஆர்டிகல்னு காமெடி பண்றியா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//Thamizhmaangani said...
எப்போ இந்த படம் வெளிவந்தது?//

வெள்ளிக்கிழமையே ரிலீஸ் ஆகிருச்சுங்க.. பாருங்க.. நல்லா இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

//அ.மு.செய்யது said...
நல்லா இருக்குங்க உங்க விமர்சனம்.தோரணைக்கு எழுதினத விட..கேட்ட கேள்விகளும் சூப்பர்.//

ரொம்ப நன்றிங்க..:-)

Karthik said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நான் விஜய் படங்கள் பார்க்க மாட்டேன் நண்பா.:-)

:))