தயாரிப்பாளர்கள் கதாநாயகர்களை நம்பாமல் நல்ல படங்களைத் தர முன்வருவது தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் கதையும் திரைக்கதையும் சொதப்பி விட்டால் படம் ஊத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதுதான் முத்திரைக்கு நடந்து இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மரணத்துக்குப் பிறகு அவரின் மனைவி அனீஸ் தன்வீர் தொடங்கி இருக்கும் "விஷன் ஜீவா" ஸ்டூடியோசின் முதல் தயாரிப்பு.
பதவி பிரச்சினையில் தமிழகத்தின் முதல்வர் கொல்லப் படுகிறார். அவருடைய மரணம் பற்றிய ஆதாரம் ஒரு லாப்டாப்பில் இருக்கிறது. நிதின் சத்யாவும் டேனியல் பாலாஜியும் சில்லறைத் திருடர்கள். ஒரு சூழ்நிலையில் இந்த ஆதாரம் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறது. அதைக் கைப்பற்றத் துடிக்கும் போலிஸ் கமிஷனர் கிஷோரிடம் இருந்தும், உண்மையான கொலைகாரனான அரசியல்வாதி பொன்வண்ணனிடம் இருந்தும் இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.
நிதின் சத்யாவுக்கு காதல் காட்சிகளை விட காமெடி அருமையாக வருகிறது. சிரிப்புத் திருடன். அவருடைய ஒரு வரி வசனங்கள் செமை ஜாலி. டேனியல் பாலாஜி படம் முழுக்க இறுகிய முகத்துடன் அலைகிறார். பாடல் காட்சிகளில் கூட ஏதோ நாயகியை கற்பழிக்கப் போகிறவனைப் போல திரிகிறார். கிஷோர் கமிஷனராக வீணடிக்கப் பட்டு உள்ளார். சித்தப்பா சரவணன், சேத்தன், திருடா திருடா ஆனந்த் என்று பல பேர் வந்து போகிறார்கள்.
மேல்தட்டு கதாநாயகிகள் என்றால் எப்போதும் கிளேவேஜ் தெரிய அலைந்து கொண்டே இருக்க வேண்டுமா என்ன? லட்சுமிராயை ஒரு சில கோணங்களில் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. குறிப்பாக அவருக்கும் பாலாஜிக்கும் கல்யாணம் நடக்கும் காட்சியில் சேலை கட்டி, மேக்கப் இல்லாமல் அவர் நிற்கும்போது பல பேருக்கு மயக்கம் வரும். நிதின் சத்யாவின் காதலியாக மஞ்சரி. அறிமுகம். தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப்பெண். ராக்கி சாவந்த் ஒரு பாட்டுக்கு டாங்ஸோடு ஆட்டம் போடுகிறார்.
இசை யுவன்ஷங்கர்ராஜா. ஒரு பாட்டு கூட விளங்க வில்லை. பின்னணி இசையும் ஏனோ தானோ ரகம்தான். யுவன் இனிமேல் படங்களை குறைத்துக் கொண்டு குவாலிட்டியில் கவனம் செலுத்தலாம். சலீமின் ஒளிப்பதிவு ஓகே. தோட்டா தரணியின் கலையும், ஆண்டனியின் எடிட்டிங்கும் தான் படத்தை தாங்கிப் பிடிக்கும் விஷயங்கள். கதை, திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் அனீஸ் தன்விர்.
ஜீவாவின் உதவியாளரான ஸ்ரீநாத் (உள்ளம் கேட்குமே, தாம் தூம் படங்களில் நடித்தவர்..) இயக்கி உள்ளார். காட்சிகளில் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை. முதல்வரின் மரணம் பற்றிய ஆதாரம் கொண்ட லாப்டாப் கொஞ்சம் கூட சேபிடி இல்லாமல் அனாமாத்தாக ஓபன் ஆவது, போலிஸ் துரத்தும் நால்வரும் எந்த பிரச்சினையும் இல்லாமல் காட்டுக்குள் விதவிதமான உடைகளில் சுற்றுவது, க்ளைமாக்ஸ் என்று மனதில் ஒட்டாத காட்சிகள் நிறைய படத்தில் இருக்கின்றன. அடுத்த படத்தையாவது அனீஸ் தன்வீர் தரமான படமாகத் தரட்டும்.
"முத்திரை" பதிக்கத் தவறி விட்டார்கள்...
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
38 comments:
ஐ ஜாலி நான்தான் முதல்ல
நல்ல விமர்சனம்..
வாழ்த்துக்கள்!!
எப்படி பாஸ் இந்த படத்தையெல்லாம் முதல் நாளே பாக்குறீங்க..
உங்கள பாத்தா பாவமா இருக்கு கார்த்தி..
நல்ல வேளை நாங்க தப்பிச்சோம்..
உங்க தெளிவான விமர்சனம் அருமை கார்த்தி..
ஆகா., இன்னைக்கு வெள்ளி கிழமையா ??
\\டேனியல் பாலாஜி படம் முழுக்க இறுகிய முகத்துடன் அலைகிறார். பாடல் காட்சிகளில் கூட ஏதோ நாயகியை கற்பழிக்கப் போகிறவனைப் போல திரிகிறார்.\\
என்ன பண்றது..?
அவர அப்டியே யூஸ் பண்ணீட்டாங்க தல.. நம்ம தமிழ் சினிமா டயரடக்கர்கள்..!
மொக்கை படங்களா தேடி தேடி பார்த்து எல்லாரையும் காப்பாத்திக்கிட்டு இருக்கீங்க பாஸூ...!
ஆனா, இந்த படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.
:(
\\"முத்திரை" பதிக்கத் தவறி விட்டார்கள்...\\
:-((
அண்ணா ஒன்னு கேட்கலாமா?
படத்தில் டேனியல் பாலாஜியிடம் ஒரு முத்தக்காட்சி இருக்குதாமே..உண்மையா..
\\Anbu said...
படத்தில் டேனியல் பாலாஜியிடம் ஒரு முத்தக்காட்சி இருக்குதாமே..உண்மையா..\\
அதெல்லாம் Adults Only மேட்டராச்சே..!நீ ஏன் இதெல்லாம் கேக்குற..! வாத்தியாரே, உங்களால ஒரு இளம்பிஞ்சு பழுத்துருச்சு பாருங்க.
I am the பத்தாவது..!
முதல் பாராவிலேயே கதையின் முத்திரை தெரிந்துவிட்டது!!!
முதல் பாராவிலேயே கதையின் முத்திரை தெரிந்துவிட்டது!!!
\\முதல் பாராவிலேயே கதையின் முத்திரை தெரிந்துவிட்டது!!!\\
முத்திரையா..?
முகத்திரையா டாகடரே..?
முத்திரை என்னை ஏமாற்றி விட்டது...
வாத்தியார் சரியில்லையே.. ஒரு படத்தையும் விட மாட்டேங்குறாரே :-)))
கார்த்திகை..
நீங்களுமா..?
நாட்ல எவ்ளோ பேர் முதல் ஷோவே பார்க்குற அளவுக்கு ப்ரீயா இருக்காங்க பாருங்க..
முருகா.. முருகா.. முருகா..!
wy blood ......
same blood....
எங்களை காப்பாத்துன உங்களுக்கு
இதுகூட செய்யமாட்டமா?
ஓட்டு போட்டாச்சு!
நம்ம ஆதரவு எப்போதும் உண்டு உங்களுக்கு..
//ஒரு பாட்டு கூட விளங்க வில்லை.//
என்ன சார் இப்படி சொல்லிடீங்க. அதுல வர 'அழகான நானும்' பாட்டு தான் இப்ப என் பேவரைட். நரேஷ் ஐயரும் படத்தோட ஹிரோயின் மஞ்சரியும் பாடுனது. மத்த பாடல்கள் ஓரளவுக்கு பரவாயில்லை ராகம் தான்.
உங்க கடமையை நினைச்ச.... புல்லரிக்குதுங்கோ,எப்படிங்க கல்யானபிஸியிலும்
படம் பார்த்து விமர்சனம் எழுதறிங்க
அன்பு , நீ இப்பிடி ஆவேன்னு நான் நினைக்கவே இல்லை !, டக்ளசு சொன்னா மாதிரி , பிஞ்சு பழுக்கல ,வெம்பிடுச்சி...
டக்ளஸ்....... said...
//அதெல்லாம் Adults Only மேட்டராச்சே..!நீ ஏன் இதெல்லாம் கேக்குற..! வாத்தியாரே, உங்களால ஒரு இளம்பிஞ்சு பழுத்துருச்சு பாருங்க.//
அன்புமதுரையில் உங்கள சந்திக்கறதுக்கு முன்பு பிஞ்ச இருந்தபய,உங்கள சந்திச்சபின்தான் வெம்பிடுச்சி
வழக்கம் போல அசத்தல்...
அதுசரி.. கல்யாண வேலை எல்லாம் விட்டுட்டு படம் பாக்க போனீங்களா..
இவ்ளோ பிஸியிலியும் உங்களால எப்படி படம் பார்க்க முடியுது!
இந்தப் படமும் மொக்கையா? வரவர ஒரு படமும் உருப்பட மாட்டேங்குது.
நன்றிண்ணே.. 20 ரூபா மிச்சம்..
நான் டிவிடி விலைய சொன்னேன்..
\\\டக்ளஸ்....... said...
\\Anbu said...
படத்தில் டேனியல் பாலாஜியிடம் ஒரு முத்தக்காட்சி இருக்குதாமே..உண்மையா..\\
அதெல்லாம் Adults Only மேட்டராச்சே..!நீ ஏன் இதெல்லாம் கேக்குற..! வாத்தியாரே, உங்களால ஒரு இளம்பிஞ்சு பழுத்துருச்சு பாருங்க.\\
என்ன கொடுமை சார் இது...
ஒரு சந்தேகம் கூட கேட்க முடியலை..
\\தேனீ - சுந்தர் said...
அன்பு , நீ இப்பிடி ஆவேன்னு நான் நினைக்கவே இல்லை !, டக்ளசு சொன்னா மாதிரி , பிஞ்சு பழுக்கல ,வெம்பிடுச்சி.\\
அண்ணா..அப்படி எதுவும் இல்லை...சும்மா தமாசுக்கு..
\\\சொல்லரசன் said...
டக்ளஸ்....... said...
//அதெல்லாம் Adults Only மேட்டராச்சே..!நீ ஏன் இதெல்லாம் கேக்குற..! வாத்தியாரே, உங்களால ஒரு இளம்பிஞ்சு பழுத்துருச்சு பாருங்க.//
அன்புமதுரையில் உங்கள சந்திக்கறதுக்கு முன்பு பிஞ்ச இருந்தபய,உங்கள சந்திச்சபின்தான் வெம்பிடுச்சி\\\\\\\\
எல்லாம் வாலையும் டக்ளசையும் சந்தித்த பிறகு தான் அண்ணா..
டிஸ்கி:-
(அப்படி எதுவும் இல்லை...சும்மா தமாசுக்கு..)
உங்களுக்கு காலேஜ் இன்னும் ஆரம்பிக்கவில்லையா ....? இல்லை, அதற்குப் பிறகும் இப்படிதானா!
இனிமே படம் பார்க்கனு கிளம்பினா,உங்க பிளாக்க ஒருமுறை பார்த்துட்டு போகலாமுனு முடிவு பண்ணிட்டேன்...
நல்ல விமர்சனம்
நான் இன்னிக்குதான் குளிர் 100 போலாம்னு இருக்கேன். உங்க ரிவ்யு படிச்சு. இதுக்கு போக வேண்டாம் போல. :)
நல்ல விமர்சனம்................
//தருமி said...
உங்களுக்கு காலேஜ் இன்னும் ஆரம்பிக்கவில்லையா ....? இல்லை, அதற்குப் பிறகும் இப்படிதானா//
கிகிகிகி........................
//காட்சிகளில் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை. //
நல்ல விமர்சனம், கார்த்திகைப் பாண்டியன்.. படம் பார்க்கலாமா வேண்டாமா?
karthi ungal vimarsanangal asathal ! ethanayo perai kappatha neengal padum paadukalukku nanri!
பாடல் காட்சிகளில் கூட ஏதோ நாயகியை கற்பழிக்கப் போகிறவனைப் போல திரிகிறார்.//
அது வே.வி லேருந்தே அப்படிதான்.
எப்போதும் போல் கலக்கல் நண்பா.
இந்தியாவின் (தற்போதைய) இரும்பு மனிதர் யார்? பொன்னியின் செல்வன்.
Post a Comment