ஒரு கோவில். அதன் வாசலில் ஒரு பிச்சைக்காரன். கோவிலுக்கு தினமும் வரும் பெண்களில் ஒருத்தி அவனுக்கு காசு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தாள். ஒரு நாள் அவள் அந்தப் பிச்சைக்காரனுக்கு தானம் தரவில்லை. மாறாக மற்றவள் அவனுக்கு காசு கொடுத்தாள். அதற்கு அவன் சொன்னது.."தினமும் காசு தர தே..யா இன்னைக்குத் தரல.. என்னைக்குமே தராத மகராசி இன்னைக்கு தானம் பண்ணிட்டு போறா.." இதுதான் இன்றைய உலகம்.
மனிதனை இன்னும் மனிதனாக வைத்து இருப்பது ஒரு சில குணங்கள்தான். மற்றவர்களின் கஷ்டத்தைப் பார்த்து மனசு கேட்காமல் உதவி செய்யும் நல்ல உள்ளமும் அதில் ஒன்று. தன்னால் ஆன உதவிகளை பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு செய்யும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த உலகம் கொடுக்கும் அடைமொழி - "இளிச்சவாப் பய" என்பதாகவே இருக்கிறது.
"தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்தாற்போல்.." என்று ஒரு சொலவடை உண்டு. அதனுடைய அர்த்தம் எனக்கு சமீபத்தில் தான் புரிந்தது. கடலூரில் என் தோழியின் திருமணத்திற்கு சென்று இருந்தேன். வீட்டில் இருந்து மண்டபத்துக்கு போவதற்காக ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினேன். அதிகாலை நேரம். என்னோடு ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தார். அவர் வழியிலே இறங்கிக் கொண்டு ஓட்டுனரிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தார். முதல் சவாரி என்பதால் சில்லரை இல்லை என்று ஓட்டுனர் சொல்லி விட்டார்.
பயணியோ அவசரமாகப் போக வேண்டும் என்றார். என்னிடம் பத்து ரூபாய்க்கு சில்லரை இருந்தது. உடனே அதை எடுத்து பயணியிடம் கொடுத்தேன். ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் சில்லறைக் காசுகளும். அதை வாங்கிப் பார்த்த அந்த மனிதர் சில்லரை வேண்டாம் என்று சொன்னார். கேட்டால் ஐந்து ரூபாய் நோட்டு ஓரத்தில் கிழிந்து இருந்ததாம். பக்கத்தில் இருந்த கடைகளில் அலைந்து திரிந்து சில்லறை வாங்கி வந்தார். அவசரத்திற்கு உதவலாம் என்று எண்ணிய எனக்கு மண்டை காய்ந்து போனது.
ஒரு ஜென் கதை...
ஜென் குரு ஒருவர் மலைப்பாதையில் குதிரை மீது போய்க் கொண்டு இருந்தார். வழியில் ஒருவன் மயக்கம் போட்டுக் கிடந்தான். அவனுக்கு உதவ எண்ணிய குரு அவனை கஷ்டப்பட்டு குதிரை மீது ஏற்றினார். ஆனால் அவன் சட்டென்று குதிரையை திருடிக் கொண்டு ஓடிப் போனான். அவன் மயக்கம் போட்டவனாக நடித்தது பிறகுதான் குருவிற்கு புரிந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தையில் குரு அந்தத் திருடனைப் பார்த்தார். அவன் அந்தக் குதிரையை விற்க முயன்று கொண்டு இருந்தான். குருவைப் பார்த்தவுடன் பயந்து ஓடப் பார்த்தான். அவனை தடுத்தி நிறுத்தி குரு சொனார்.. "பயம் கொள்ளாதே, நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். இந்தக் குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் உதவி கேட்பது போல இனிமேல் யாரையும் ஏமாற்றாதே. பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடும்.."
என்னுடைய நண்பரின் அப்பா ஒருவருக்கும் இதே அனுபவம்தான். தெரிந்த மனிதர் ஒருவருக்காக இவர் செக்யுரிடி கையெழுத்து போட்டு இருக்கிறார். பணம் வாங்கியவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக இப்போது நண்பரின் அப்பா அந்தப் பணத்தைத் திரும்பி கட்டிக்கொண்டு இருக்கிறார். வீட்டில் ஏதோ அவர் கொலைபாதகம் செய்ததைப் போல பேசுவதாகவும் ஏண்டா மற்றவருக்கு உதவி செய்தோம் என்று எண்ணத் தோன்றுவதாகவும் நொந்து போய் சொன்னார். உதவி செய்வதில் தப்பில்லை. ஆனால் தப்பான மனிதர்களுக்கு உதவுவதுதான் தவறு என்று சொல்லி விட்டு வந்தேன். இதைத்தான் அன்றைக்கே சொல்லி வைத்து இருக்கிறார்கள்.. "பாத்திரம் அறிந்து பிச்சை இடு.."!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
50 comments:
உண்மைதானுங்கோ...!
கதை எல்லாம் சொல்லுரீங்க நண்பா
சரியான பதிவு நண்பரெ! முடிந்தவரை நான் பிச்சையிடுவதை தவிர்கின்றேன். இதே போல பல அனுபவங்கள்
நல்ல பதிவு ஜென் கதை மிகவும் பொருத்தமாகவுள்ளது.......
நீங்க சொல்றது உண்மை தான் ..
அறிவுரையெல்லாம் சொல்றீங்க ,வயசு ஏறிட்டே போவுதுன்னு அர்த்தம்.எங்களை மாதிரி யூத் இல்ல நீங்க.கதை நல்லாத்தான் இருக்கு.சூப்பர்.
சார்... பின்னூட்டமும் அப்படிதான் போடனுமா??? இல்லே சும்மா மானாவாரியா போடலாமா?
ட்ரிங்... ட்ரிங்...ட்ரிங்......
ட்ரிங்... ட்ரிங்...ட்ரிங்......
"டக்கு" மாப்பி பிரியா இருக்கியா???
இங்கே ஒருத்தன் சிக்கி இருக்கான்....
உணமை தான் :(
மன கசந்த செய்திகளும் நிகழ்வுகளும் மனத்திலே நிலைத்து நிற்கும். வயசானாலும் ஆகாவிட்டாலும் பக்குவம் வந்து விட்டால் எழுத்துக்களில் மாற்றம் தானாக வந்து விடும். வாழ்த்துக்கள்
அந்த ஜென் கதை நல்லா இருக்கு கார்த்திகைப் பாண்டியன்...
/*வயசானாலும் ஆகாவிட்டாலும் பக்குவம் வந்து விட்டால் எழுத்துக்களில் மாற்றம் தானாக வந்து விடும். வாழ்த்துக்கள்*/
இதுலே எதோ நுண்ணரசியல் நெடி அடிக்குதே....
( எப்பாடா.... எதோ என்னாலே இன்னிக்கு முடிஞ்சது இவ்ளோதான்.....)
என்னக்கு இது மாதிரியான ஒரு சுவாரசியமான (ஏமாறதுலயும் சுவாரசியமா!!!) அத எப்ப நினைத்தாலும் என் முட்டால் தனம் சிரிப்பை வரவழைத்து விடும்.
அந்த ஜென் கதை பொருத்தம்.
நல்லா சலிக்காம எழுதி இருக்கீங்க பாண்டியன்.
அங்க பாருங்க ஒருத்தர் உங்கள 'என்ன சொல்லுறார்னு... அடுத்த பதிவுல நீங்க 'யூத்துன்னு' நிருபிக்கிறீங்க!!
பாத்திரம் அறிவதில்தானே சூட்சுமம் இருக்கு நண்பா.. அதுதான கஷ்டம் இங்க
உண்மைதான் :)
//ஆனால் உதவி கேட்பது போல இனிமேல் யாரையும் ஏமாற்றாதே. பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடும்.."
//
மிகவும் உண்மை
//ஆனால் உதவி கேட்பது போல இனிமேல் யாரையும் ஏமாற்றாதே. பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடும்.."//
இதனால் சில நல்லவர்களும் பாதிப்பது உண்மைதான்,நல்ல பதிவு.
யை தொடரும் அனைத்து நண்பர்களுக்கும்
ஒரு இன்ப அதிர்ச்சி
மா,கா.பா. மாப்ளை பாண்டியன் ஆகிறார்....விரைவில்
டும்...டும்...டும்
உண்மை
உண்மை
உண்மை
கூடிய சீக்கிரம்(10 DAYS)
பெயர் அறிவிக்க படும்......
M.K.P யை தொடரும் அனைத்து நண்பர்களுக்கும்
ஒரு இன்ப அதிர்ச்சி
மா,கா.பா. மாப்ளை பாண்டியன் ஆகிறார்....விரைவில்
டும்...டும்...டும்
உண்மை
உண்மை
உண்மை
கூடிய சீக்கிரம்(10 DAYS)
பெயர் அறிவிக்க படும்......
M.K.P யை தொடரும் அனைத்து நண்பர்களுக்கும்
ஒரு இன்ப அதிர்ச்சி
மா,கா.பா. மாப்ளை பாண்டியன் ஆகிறார்....விரைவில்
டும்...டும்...டும்
உண்மை
உண்மை
உண்மை
கூடிய சீக்கிரம்(10 DAYS)
பெயர் அறிவிக்க படும்.//
கா.பா. வுக்கு வாழ்த்துக்கள்!!
தேர்தல் அன்று திருச்சியில் பதிவர் கூட்டம் போடசொன்ன மர்மம் இப்பதான் தெரிகிறது, சரி சரி திருமண தேதியை சொல்லுங்க திருச்சியில் கல்யானத்தன்று பதிவர் மாநாடும் நடத்திவிடலாம்
ஆமா பாஸ்..
கருணை காட்டுறதுலயும் கணக்கா காட்ட வேண்டிய நிலை இருக்குறது நம்ம துரதிஷ்டம் தான்.
கார்த்தி எல்லாம் சமயங்களிலும் அப்படி நடப்பது இல்லை..இருந்தாலும் சில சமயங்களில்..அதற்காக நான் உதவும் எண்ணத்தை விட்டு விட கூடாது..
ஜென் கதை அற்புதம்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
//டும்...டும்...டும்
உண்மை
உண்மை
உண்மை
கூடிய சீக்கிரம்(10 DAYS)
பெயர் அறிவிக்க படும்.//
வாழ்த்துக்கள்
கார்த்திகேய பாண்டியன்
நல்ல பதிவு நண்பா....அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி....
தலைவரே எவனுக்கும் ஜாமின் கையெழுத்து மட்டும் போடவே கூடாது....
நல்ல கருத்து..அதெல்லாம் ஓ.கே..அந்த அனானி சொன்ன மேட்டரு உண்மையா ??
அட சும்மா சொல்லுங்க பாஸு.
//
ஆனால் உதவி கேட்பது போல இனிமேல் யாரையும் ஏமாற்றாதே. பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடும்.
//
ரொம்ப உண்மை...எனக்கும் கூட இப்படி சில அனுபவங்கள் உண்டு..
ஆமா, நீங்க மதுரைல எந்த ஏரியா? ஆட்டோ அனுப்ப இல்ல, ச்சும்மா எதுனா காசு தேவைப்பட்டா உங்க கிட்ட்.... :0))
உண்மை
//ஆனால் உதவி கேட்பது போல இனிமேல் யாரையும் ஏமாற்றாதே. பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடும்..//
இதனால் சில நல்லவர்களும் பாதிப்பது உண்மைதான்
தென்கச்சி கோ சுவாமிநாதன்
அவர்களின் இன்று ஒரு தகவல் மாதிரி இருந்தது நண்பா
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள் சகா,
வீட்ல வேறொரு விசேஷம் இருக்கிறதா சொன்னீங்களே, அப்ப ரெண்டும் சேர்ந்து நடக்கப்போகுதா?
பதிவுக்கு வருவோம்,
நான் பிச்சைகாரர்களுக்கு பிச்சையிடாததற்கு இதுவும் ஒரு காரணம். பிச்சைப் பழக்கும் ஒழிந்தால்தான் அவர்களுக்கும் உழைக்க எண்ணம் வரும் அவர்களை வைத்து பிழைக்கும் கும்பலும் உழைக்க நேரிடும். முன்பு ஹிந்தியில் பார்த்த ஒரு திரைப்படம், traffic signal பிச்சைகாரர்களது சங்கிலி மிக நீண்டது என்பதை சாதாரணமாக சொல்லும். அதில் வரும் ஒரு காட்சி, அரசியல்வாதி ஒருவன் பிச்சைகாரனுக்கு 500 ரூபாய் பிச்சையிடுவான், அரசியல்வாயின் உடன்வருபவன் கேட்பான், 'என்ன தலைவரே பிச்சைக்காரனுக்கு போய் 500 ரூபாய் போடுறீங்க?' அதற்கு அரசியல்வாதியின் பதில், 'இது சுத்தி முத்தி நம்மட்ட தான்டா வரப்போகுது' என்பதாக. என்ன செய்ய... எல்லா இடத்திலும் இவர்களை கை உள்ளது.
அய்ய்ய்..ஒரு கல்யாண சாப்பாடு கன்ஃபார்ம் ஆயிடுச்சா?:) அட்வான்ஸா வாழ்த்திக்கறேன் தோழா..
பதிவு: ம்ம்ம்..எப்பவும் போல நல்லா இருக்கு
ந்ல்ல அனுபவ பகிர்வு
//டக்ளஸ்....... said...
உண்மைதானுங்கோ...!//
வருகைக்கு நன்றி டக்கு..
// ஆ.ஞானசேகரன் said...
சரியான பதிவு நண்பரெ! முடிந்தவரை நான் பிச்சையிடுவதை தவிர்கின்றேன். இதே போல பல அனுபவங்கள்//
நாம் ஏமாறாமல் உதவி செய்யலாம் நண்பா
//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல பதிவு ஜென் கதை மிகவும் பொருத்தமாகவுள்ளது.......
நீங்க சொல்றது உண்மை தான் ..//
நன்றிங்க
//ஸ்ரீதர் said...
அறிவுரையெல்லாம் சொல்றீங்க ,வயசு ஏறிட்டே போவுதுன்னு அர்த்தம்.எங்களை மாதிரி யூத் இல்ல நீங்க.கதை நல்லாத்தான் இருக்கு.சூப்பர்.//
ஆகா.. நம்மள போட்டுப் பாக்குறதுக்கு ஒரு க்ரூப்பே கிளம்பி இருக்கா? நம்புங்கப்பா.. நானும் யூத்துதான்
//நையாண்டி நைனா said...
சார்... பின்னூட்டமும் அப்படிதான் போடனுமா??? இல்லே சும்மா மானாவாரியா போடலாமா?//
என்னமோ சொல்றதை அப்படியே கேக்குற நல்ல பிள்ளை மாதிரி ஆக்ட் கொடுக்காதீங்க நைனா..
//பாலகுமார் said...
உணமை தான் :(//
வருத்தம் கொள்ள வேண்டிய விஷயம்தான் பாலா..
//Dhavappudhalvan said...
மன கசந்த செய்திகளும் நிகழ்வுகளும் மனத்திலே நிலைத்து நிற்கும். வயசானாலும் ஆகாவிட்டாலும் பக்குவம் வந்து விட்டால் எழுத்துக்களில் மாற்றம் தானாக வந்து விடும். வாழ்த்துக்கள்//
ஆகா.. நம்மளையும் சப்போட் பண்ணி ஒருத்தர்.. நன்றி நண்பரே
//புதியவன் said...
அந்த ஜென் கதை நல்லா இருக்கு கார்த்திகைப் பாண்டியன்...//
நன்றி புதியவன்
//ஆ.முத்துராமலிங்கம் said... என்னக்கு இது மாதிரியான ஒரு சுவாரசியமான (ஏமாறதுலயும் சுவாரசியமா!!!) அத எப்ப நினைத்தாலும் என் முட்டால் தனம் சிரிப்பை வரவழைத்து விடும்.
அந்த ஜென் கதை பொருத்தம்.
நல்லா சலிக்காம எழுதி இருக்கீங்க பாண்டியன்.அங்க பாருங்க ஒருத்தர் உங்கள 'என்ன சொல்லுறார்னு... அடுத்த பதிவுல நீங்க 'யூத்துன்னு' நிருபிக்கிறீங்க!!//
நாம எல்லோருமே ஏதாவது ஒரு சமயத்தில் இப்படி நொம்பலப் பட்டு இருப்போம் நண்பா.. நாம யூத்துனு ப்ரூவ் பண்றது ஒரு கஷ்டமா? விடுங்க.. செஞ்சுடுவோம்..
//" உழவன் " " Uzhavan " said...
பாத்திரம் அறிவதில்தானே சூட்சுமம் இருக்கு நண்பா.. அதுதான கஷ்டம் இங்க//
சரியாச் சொன்னீங்க நண்பா..
//பித்தன் said...
உண்மைதான் :)//
நன்றிங்க
//ச.பிரேம்குமார் said...
மிகவும் உண்மை//
வாங்க பிரேம்.. நன்றி..
//சொல்லரசன் said...
இதனால் சில நல்லவர்களும் பாதிப்பது உண்மைதான்,நல்ல பதிவு.//
வாங்க தலைவரே.. வீட்டை செட்டில் பண்ணிட்டு இப்போ ப்ரீ ஆகியாச்சா?
//Anonymous said...
M.K.P யை தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி
மா,கா.பா. மாப்ளை பாண்டியன் ஆகிறார்....விரைவில் டும்...டும்...டும் உண்மை
உண்மை உண்மை
கூடிய சீக்கிரம்(10 DAYS)
பெயர் அறிவிக்க படும்......//
எம்மேல எம்பூட்டு பாசம்.. அடப்பாவிகளா.. இப்படியா பழி வாங்குறது? முதல்ல வாங்கோணும்.. அப்புறம் தோண்டோனும்.. அதுக்கு அப்புறம் தான் கட்டோணும்.. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இவ்ளோ அலும்பு தாங்காதுடா யப்பா..
//thevanmayam said...
கா.பா. வுக்கு வாழ்த்துக்கள்!!//
தேவா சார்.. தோழர்கள் யாரோ விளையாண்டு இருக்காங்க.. இது சும்மா.. அப்படி எதாவது இருந்தா உங்களுக்கு சொல்லாம இருக்க மாட்டேன்..
//சொல்லரசன் said...
தேர்தல் அன்று திருச்சியில் பதிவர் கூட்டம் போடசொன்ன மர்மம் இப்பதான் தெரிகிறது, சரி சரி திருமண தேதியை சொல்லுங்க திருச்சியில் கல்யானத்தன்று பதிவர் மாநாடும் நடத்திவிடலாம்//
அண்ணே.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. நீங்களே பொங்க வைக்காதீங்கன்னே.. நான் ரொம்ப பாவம்..
//தீப்பெட்டி said...
ஆமா பாஸ்..கருணை காட்டுறதுலயும் கணக்கா காட்ட வேண்டிய நிலை இருக்குறது நம்ம துரதிஷ்டம் தான்.//
:-((((((((
//vinoth gowtham said...
கார்த்தி எல்லாம் சமயங்களிலும் அப்படி நடப்பது இல்லை.. இருந்தாலும் சில சமயங்களில்.. அதற்காக நான் உதவும் எண்ணத்தை விட்டு விட கூடாது..//
உண்மைதான் வினோத்.. நாம் என்றும் பிறருக்கு உதவ வேண்டாம் என்று சொல்ல வில்லை.. ஏமாறாமல் இருக்க வேண்டும் என்கிறேன்
//வழிப்போக்கன் said...
ஜென் கதை அற்புதம்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...//
வாங்க பிரவீன்.. நன்றிப்பா..
//பிரியமுடன்.......வசந்த் said...
வாழ்த்துக்கள்
கார்த்திகேய பாண்டியன்//
நன்றி வசந்த்.. நல்ல செய்தி வந்ததா கூடிய சீக்கிரம் சொல்றேன் :-)
//சம்பத் said...
நல்ல பதிவு நண்பா....அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி....//
தாங்க்ஸ் சம்பத்..
//jackiesekar said...
தலைவரே எவனுக்கும் ஜாமின் கையெழுத்து மட்டும் போடவே கூடாது....//
உணமை தான் :(
//அ.மு.செய்யது said...
நல்ல கருத்து..அதெல்லாம் ஓ.கே..அந்த அனானி சொன்ன மேட்டரு உண்மையா ??
அட சும்மா சொல்லுங்க பாஸு.//
நடக்குறப்போ கண்டிப்பா சொல்றேன் நண்பா..:-)
//அது சரி said...
ரொம்ப உண்மை...எனக்கும் கூட இப்படி சில அனுபவங்கள் உண்டு..
ஆமா, நீங்க மதுரைல எந்த ஏரியா? ஆட்டோ அனுப்ப இல்ல, ச்சும்மா எதுனா காசு தேவைப்பட்டா உங்க கிட்ட்.... :0))//
ரயில்வே காலனி நண்பா.. வந்து வாங்கிட்டு போங்க..
//நசரேயன் said...
உண்மை//
ஆமா நண்பா.. சில கசப்பான அனுபவங்கள்..
//குமரை நிலாவன் said...
இதனால் சில நல்லவர்களும் பாதிப்பது உண்மைதான்
தென்கச்சி கோ சுவாமிநாதன்
அவர்களின் இன்று ஒரு தகவல் மாதிரி இருந்தது நண்பா
வாழ்த்துக்கள் நண்பா//
பெரிய வார்த்தை.. வாழ்த்துக்கு நன்றி நண்பா
//Chill-Peer said...
வாழ்த்துக்கள் சகா,
வீட்ல வேறொரு விசேஷம் இருக்கிறதா சொன்னீங்களே, அப்ப ரெண்டும் சேர்ந்து நடக்கப்போகுதா?//
நன்றி நண்பா.. இப்போதைக்கு நமக்கு எதுவும் இல்லப்பா..:-)
//இயற்கை said...
அய்ய்ய்..ஒரு கல்யாண சாப்பாடு கன்ஃபார்ம் ஆயிடுச்சா?:) அட்வான்ஸா வாழ்த்திக்கறேன் தோழா..//
உங்களுக்கு சொல்லாமலா தோழி?
//பதிவு: ம்ம்ம்..எப்பவும் போல நல்லா இருக்கு//
ரொம்ப நன்றி..
//அத்திரி said...
ந்ல்ல அனுபவ பகிர்வு//
நன்றி நண்பா
உண்மை தான்!
எனக்கும் அனுபவம் உண்டு!
நல்ல கருத்து..
//.. ஆனால் உதவி கேட்பது போல இனிமேல் யாரையும் ஏமாற்றாதே. பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடும்.."..//
நெஞ்சை தொட்ட வரிகள்..
//.. டும்...டும்...டும் ..//
இந்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க உடனே அத உண்மையாக்கிருங்க..
//வால்பையன் said...
உண்மை தான்!எனக்கும் அனுபவம் உண்டு!//
நன்றி வாலு..
//பட்டிக்காட்டான்.. said...
நல்ல கருத்து..நெஞ்சை தொட்ட வரிகள்..//
நன்றிங்க..
//.. டும்...டும்...டும் ..//
இந்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க உடனே அத உண்மையாக்கிருங்க..//
கூடிய சீக்கிரம் உண்மை ஆக்கிருவோம்..:-))))))))
Post a Comment