June 3, 2009

எழவு வீட்டுக்குப் போனவர்கள்..!!!

"டேய்.. கண்ணனோட அப்பா செத்துட்டாராம்.."

அசோக் ஓடிவந்து சொன்னபோது நாங்கள் எல்லோரும் வகுப்பில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். சட்டென அங்கே ஒரு மௌனம் பரவியது. யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
"நாம என்னடா பண்றது?" - அசோக்.

"கண்டிப்பாக எல்லாரும் போகனும்டா.." - மனோஜ். வகுப்பில் தைரியமானவன். சட்டென முடிவுகள் எடுக்கக் கூடியவன்.

"இப்போ சாயங்காலம் நாலு மணி. ராத்திரியே போய் பார்த்துடலாம். காலைல போக பெர்மிஷன் கேட்டா கண்டிப்பா HOD அனுப்ப மாட்டாரு. அதனால இப்பவே கிளம்பல்லாம். என்னடா..?" மனோஜ் கேட்க எல்லோரும் சம்மதம் என்பதுபோல தலையை ஆட்டினர்.
அப்படியே பெண்களிடம் கேட்டான். வகுப்பில் மொத்தம் பனிரெண்டு பெண்கள்தான். "Girls..நீங்க வரமுடியுமா?". "சாரிடா..எங்களை ஹாஸ்தல்ல விட மாட்டாங்க.. நீங்க போயிட்டு வாங்க.. கண்ணன்கிட்ட சொல்லிடு..". ராத்திரி எட்டு மணிக்கு கிளம்புவது என முடிவானது.
கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள் நாங்கள். கண்ணன் எங்களை விட இரண்டு வயது மூத்தவர். லேட்டரல் என்ட்ரியாக சமீபத்தில்தான் எங்கள் வகுப்பில் சேர்ந்து இருந்தார். அவருடைய ஊர் மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னதாக ஞாபகம்.
வந்த முதல் நாளே எனக்கு கண்ணனைப் பிடிக்காமல் போனது. அவர் மாநில அளவில் பாட்மிண்டன் விளையாடுபவர் என் பெண்கள் எல்லாம் அவரை சுற்றி வந்து கொண்டு இருந்ததும் ஒரு காரணம். அத்தோடு, நாங்கள் எல்லோரும் முதல் வருடத்தில் ராகிங் என்ற பெயரில் நாய் படாத பாடு படுவோமாம். இந்த லேட்டரல் என்த்ரிகள் நோகாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டு வந்து விடுவார்களாம். என்னய்யா நியாயம் இது? நண்பர்களை சேர்த்துக்கொண்டு லேட்டரல்களை நாங்களே ராகிங் செய்தோம். குறிப்பாக கண்ணனை நான் ஒட்டி எடுத்து விட்டேன். அது முதல் எனக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
கண்ணனின் வீட்டுக்குப் போக எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆறு மணி நேர பயணம். எனக்கு பஸ்ஸில் உக்கார்ந்து தூங்கவும் தெரியாது. கடுப்போடு ரூமில் இருந்தபோது தேவா உள்ளே வந்தான். என் உயிர் நண்பன்.

"என்னடா.. கிளம்பலை..?"

"நான் வரலை.."

"ஏண்டா.."

"பிடிக்கலைன்னா விடேன்.."

"லூசு மாதிரி பேசாத.. எல்லாப் பசங்களும் போறாங்க.. நாம மட்டும் போகலைன்னா நல்லா இருக்காது.. கிளம்பு.." அவன் சொன்னால் என்னால் மறுக்க முடியாது. வேண்டா வெறுப்பாகக் கிளம்பினேன்.
படர்ந்து இருந்த இருட்டின் பாதையில் பஸ் போய்க்கொண்டு இருந்தது. எல்லாரும் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். காற்றின் சத்தம் மிகப் பெரியதாக, அச்சுறுத்துவதாக இருந்தது. எதன் பொருட்டு இந்தப் பயணம்? பிடிக்காத ஒருவனுக்கு நான் ஏன் போய் ஆறுதல் சொல்ல வேண்டும்? திரும்பிப் பார்த்தேன். தேவா என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா..?"-நான்.

"ரொம்ப ஏழைப்பட்ட குடும்பமாம்..விளையாட்டு கோட்டாலதான் சீட்டே கிடைச்சுதாம்..இப்போ அப்பா வேற செத்துட்டாரு.. கஷ்டம்தான்.." - தேவா.

"ஏன்தான் கஷ்டம்னு ஒன்னை ஆண்டவன் படிச்சானோ?"

"சும்மா இருடா.. கஷ்டம்னு ஒன்னு இருக்குறதாலத்தான் நல்லது நடக்குறப்ப நம்மளால சந்தோஷமா இருக்க முடியுது. எப்பவுமே சந்தோஷம் மட்டுமே இருந்தா அதுக்குப் பேரு வாழ்க்கை இல்லை.. இயந்திரத்தனம்..". எனக்கு சுரீர் என்றது. தேவா அத்தோடு தூங்கிப் போனான். நான் வெளியில் இருந்த இருட்டின் கருமையை வெறிக்கத் தொடங்கினேன்.
கண்ணனின் வீட்டை அடைந்தபோது மணி இரண்டாகி விட்டிருந்தது. அடிப்படை வசதிகள் இல்லாத சின்ன கிராமம். வீட்டின் முன்பு பந்தல் போட்டு இருந்தார்கள். ஒரு மரச்செரைப் போட்டு அதில் கண்ணனின் அப்பா உடம்பைக் கிடத்தி இருந்தார்கள். அவர் காலின் கீழே ஒரு வயதான பெண் அழுது அழுது ஓய்ந்தவராக அமர்ந்து இருந்தார். கண்ணனின் அம்மாவாக இருக்கக் கூடும். நாலைந்து பெரியவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு மரபெஞ்சின் மீது கண்ணன் உக்கார்ந்து இருந்தார். கண்ணெல்லாம் சிவந்து போய் இருந்தன. எங்களைப் பார்த்தவுடன் வேகமாக வந்தார். நெருங்கிய நண்பனான வரதன் அவரருகே சென்றவுடன் உடைந்து அழ ஆரம்பித்தார். வரதன் அவரை ஆதரவாக தோளில் சாய்த்துக் கொண்டான். எனக்கு கோபம் கோபமாக வந்தது.
"இத்தனை பேரு வந்திருக்கோம்.. பாருடா.. அவன் மேல சாஞ்சு அழறதை.."
"சும்மா இருடா.. உளராம வா.." தேவா என்னை அதட்டியவுடன் அமைதியானேன்.
"வயல்ல வேலை பார்க்கும்போது பாம்பு கடிச்சிருச்சு..பக்கத்துல ஆசுபத்திரி ஏதும் இல்லை.. மதுரைக்கு கொண்டு போயும் காப்பாத்த முடியல.." பெரியவர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். "சின்ன வயசுல என்னைக் கூட பாம்பு கடிச்சது.ஆனா பாருங்க.. அதுதான் செத்துப் போச்சு..ஹி ஹி ஹி..". சூழ்நிலைக்கு சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொண்டிருந்தான் சற்குணம். மற்றவர்கள் அவனைத் திரும்பி முறைக்கவும் வாயை மூடிக் கொண்டான்.
கிளம்பும்போது கண்ணின் அம்மா மெதுவாக எழுந்து வந்தார். அருகில் இருந்த என் கைகளைப் பிடித்துக் கொண்டார். "ரொம்ப நன்றி தம்பிங்களா.. கண்ணனுக்காக இவ்ளோ தூரம் வந்து இருக்கீங்க.. இனிமேல் என் புள்ளைய நீங்க எல்லாம்தான் பார்த்துக்கணும்.. அவனை நம்பித்தான் என் உசிரு இருக்கு.." அழத் தொடங்கினார். அவரைத் தேற்றிவிட்டு கிளம்பினோம். என் மனதில் ஏதோ சொல்ல முடியாத பாரம் கூடி இருந்தது. பஸ்ஸில் ஏறியவுடன் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.
எனக்கு முழிப்பு வந்தபோது பஸ் எங்கோ நின்று கொண்டு இருந்தது. பஸ்சுக்குள் முக்கால்வாசி பசங்களைக் காணவில்லை. கடிகாரம் மணி ஐந்தரை என்றது. தேவா கீழே நின்று கொண்டு இருந்தான்.

"எங்கடா.. எவனையும் காணோம்..?"

"எல்லாம் தண்ணியடிக்கப் போய் இருக்கானுங்க.." அவன் எரிச்சலோடு சொன்னான்.

"என்னடா சொல்ற.." என்னால் நம்பவே முடியவில்லை.

"ஆமாண்டா.. போய் அரை மணி நேரம் ஆச்சு.. ஒருத்தனையும் காணோம். இன்னைக்கு காலேஜுக்கு போன மாதிரிதான்."
எல்லாரும் வந்து பஸ்ஸை எடுத்த பொது மணி ஆறரை. முந்தைய நாள் துக்க வீட்டுக்கு போன நினைவே அவர்களிடம் இல்லை. உற்சாகத்தில் மிதந்தார்கள். ஒருவன் போய் டேப்பில் கேசட்டை போட்டான். ஏதோ ஒரு குத்துப்பாட்டு ஓடத் துவங்கியது. ஆட ஆரம்பித்தவர்கள் மற்றவர்களையும் எழுந்து ஆடச் சொன்னார்கள். ஆடியவர்களில் வரதனும் ஒருவன். எனக்கு அருவெறுப்பாக இருந்தது. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது?
கண்ணன் அப்பாவை படுக்க வைத்து இருந்த காட்சி என் கண்ணில் படமாகத் தெரிந்தது. ஆனால் அந்த முகம்.. அதை உற்றுப் பார்த்த போது என் அப்பாவின் முகமாக இருந்தது. எனக்கு வயிற்றைப் புரட்டியது. தண்ணி அடித்த நண்பன் ஒருவன் என் கையைப் பிடித்து இழுத்தான்.

"வாடா ம்மாப்ள.. வா.. நீயும் ஆடு.."
நான் எழுந்து நின்றேன். நாளை என் வீட்டிலும் ஒரு மரணம் நடக்கக் கூடும். அப்போது இவர்கள் இதேபோலத்தான் ஆடுவார்கள்..பூம் பூம் பூம்.. இசையின் வேகம் கூடியது. தப்பு சத்தத்தோடு இன்னொரு வேகமான பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.
"ஆடுறா.. ஆடு..' சுற்றி இருப்பவர்கள் கத்தினார்கள்.

நான் ஆடத் தொடங்கினேன். டம் டம் டம்.. பாட்டும் பிணமாக இருக்கும் என் அப்பாவின் முகமும் எனக்குள் மாறி மாறி வந்து போயின. கண்ணனை நினைக்கும் போது பாவமாக இருந்தது. சடாரென உடைந்து போனவனாக நான் ஓவெனக் கதறி அழத் தொடங்கினேன்.
{ 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது }
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

68 comments:

முரளிகண்ணன் said...

நல்ல கதை கார்த்திகைப் பாண்டியன்

பிரியமுடன்.........வசந்த் said...

கதைக்கரு தேர்வு நல்லாயிருக்கு.....

கார்த்திகேய பாண்டியன்

கடையம் ஆனந்த் said...

நல்லாயிருக்கு.....

பாண்டியன்

Anbu said...

அண்ணா சூப்பர்...யாரும் இருக்கும் போது அவர்கள் அருமை தெரிவதில்லை..பிரியும் போதுதான் தெரியும் அதன் வலி..

thevanmayam said...

கதை நன்னாயிட்டு இருக்கு!!

வால்பையன் said...

அருமையான கதைக்கரு!

பதிவிடுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் சுருக்க முடியுமான்னு பார்த்திருக்கலாம்!

நல்லாயிருக்கு தல!

பாலகுமார் said...

கார்த்தி,

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் !

ஆ.முத்துராமலிங்கம் said...

ஆஹா!! போட்டிக் கதை.
நண்பா இன்னும் பட்டிக்க வில்லை இரவு வருகிறேன். ஆனால் இப்பவே வாழ்த்திக் கொள்கின்றேன் வெற்றி பெற!!

அபுஅஃப்ஸர் said...

எழுத்தோட்டம் அருமை

//எனக்கு ஒன்றுக்கு வருவது போல் தோன்றியது. கண்ணனின் அப்பா மீதே பெய்வது போல கற்பனை செய்து பார்த்தேன்//

இந்த‌ வ‌ரி கொஞ்ச‌ம் ஓவ‌ர்

நாடோடி இலக்கியன் said...

என்னுடைய பள்ளி நாளில் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.இறந்தது சக மாணவனே,அப்போதும் பாட்டும் கூத்துமாக வேனில் வந்தார்கள்.அந்த ஞாபகம் உங்க கதையை படித்ததும் நினைவுக்கு வந்தது.

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்..

நையாண்டி நைனா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தமிழினி said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

தீப்பெட்டி said...

கதை நல்லாயிருக்கு கார்த்தி..
எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்தது..
நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதும் நண்பனின் தாயார் இறந்ததற்கு கோவையிலிருந்து தேனீ வருசநாடு சென்றோம்..

வெற்றி பெற வாழ்த்துகள்..

பித்தன் said...

ஒரு வரில ஜெயகாந்தன் தெரிஞ்சாரு, :)

நசரேயன் said...

நல்லா இருக்கு

vinoth gowtham said...

கதை அருமை..

ஜெட்லி said...

சூப்பர் கதைங்க....
அசத்திடிங்க போங்க பாண்டியன்.
ஒட்டு போட்டாச்சு.

ஆ.முத்துராமலிங்கம் said...

பாண்டியன் அசத்திட்டீங்க.

கதை ரொம்ப பிடித்திருந்தது. கரு நல்ல தேர்வு எழுத்தும் நல்லா இருக்கு பாண்டியன்.

வெற்றி பெற இன்னொரு முறை வாழ்த்திக் கொள்கின்றேன்.

(நானும் ஒரு கதை எழுதிகிட்டு இருக்குறேன்... ஆனா பாருங்க அது இன்னம் 'க' விலேயே நிக்குது 'தை'க்கு வரமாட்டேங்குது)

சித்து said...

நல்லா இருக்குங்க கார்த்திகை பாண்டியன், வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

நண்பா தல போட்டொவை காணவில்லை

ஆ.ஞானசேகரன் said...

கதை உருக்கமா இருக்கு நண்பா

புதியவன் said...

கதையில் கரு ரொம்ப வித்தியாசமா இருக்கு, எழுத்து நடையும் உரையாடல்களும் அருமை...

சிறுகதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கார்த்திகை பாண்டியன்...

ஆதவா said...

எடுத்துக்கொண்ட கரு ரொம்பவும் நல்லா இருக்கு. இயல்பா எததயும் மீறாம அதுபாட்டுக்குப் போயிகிட்டு இருக்கிறமாதிரி.

கண்ணனோட சண்டைங்கறது அவ்வளவு அழுத்தமா காண்பிக்கலையோன்னு தோணுது..

வெற்றிபெறத் தகுதியான கதைகளில் இதுவும் ஒன்று. வெற்றிபெற வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகண்ணன் said...
நல்ல கதை கார்த்திகைப் பாண்டியன்//

நன்றி முரளி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
கதைக்கரு தேர்வு நல்லாயிருக்கு... கார்த்திகேய பாண்டியன்//

நன்றி வசந்த்

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
நல்லாயிருக்கு.....பாண்டியன்//

வாங்க நண்பா.. வாழ்த்துக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
அண்ணா சூப்பர்...யாரும் இருக்கும் போது அவர்கள் அருமை தெரிவதில்லை.. பிரியும் போதுதான் தெரியும் அதன் வலி..//

அதைத்தான் அன்பு சொல்ல நினைத்து இருக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//thevanmayam said...
கதை நன்னாயிட்டு இருக்கு!!//

நன்றி தேவா சார்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
அருமையான கதைக்கரு!
பதிவிடுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் சுருக்க முடியுமான்னு பார்த்திருக்கலாம்!நல்லாயிருக்கு தல!//

நன்றி தல.. நெறைய வெட்டின பிறகு பாக்கிதான் இது.. ஆனாலும் கொஞ்சம் பெரிசாப் போய்டுச்சு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பாலகுமார் said...
கார்த்தி,நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் !//

நன்றி பாலா,, தனி மடல் மூலம் உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி.. என்மேல் நீங்கள் காட்டும் அக்கறைக்கும்.. நன்றி..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
ஆஹா!! போட்டிக் கதை.
நண்பா இன்னும் பட்டிக்க வில்லை இரவு வருகிறேன். ஆனால் இப்பவே வாழ்த்திக் கொள்கின்றேன் வெற்றி பெற!!//

வாழ்த்துக்கு நன்றி முத்து..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

// அபுஅஃப்ஸர் said...
எழுத்தோட்டம் அருமை.இந்த‌ வ‌ரி கொஞ்ச‌ம் ஓவ‌ர்//

ஆமா நண்பா.. யாரையும் புண்படுத்தக் கூடாதுன்னு எடுத்துட்டேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நாடோடி இலக்கியன் said...
என்னுடைய பள்ளி நாளில் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. இறந்தது சக மாணவனே,அப்போதும் பாட்டும் கூத்துமாக வேனில் வந்தார்கள். அந்த ஞாபகம் உங்க கதையை படித்ததும் நினைவுக்கு வந்தது.நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்//

நன்றிங்க.. இந்தக் கதையும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதியதுதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நன்றி நைனா.. நம்ம மேல அக்கறையா போனில் அழைத்து திருத்தங்கள் சொன்னதுக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
கதை நல்லாயிருக்கு கார்த்தி..
எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்தது..நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதும் நண்பனின் தாயார் இறந்ததற்கு கோவையிலிருந்து தேனீ வருசநாடு சென்றோம்..வெற்றி பெற வாழ்த்துகள்..//

வாழ்த்துக்கு நன்றி கணேஷ்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பித்தன் said...
ஒரு வரில ஜெயகாந்தன் தெரிஞ்சாரு, :)//

உங்களுக்கு அப்படித் தெரிஞ்சா சந்தோஷமே..நம்மள மாதிரி சின்ன ஆளுங்களுக்கு அது பெரிய ஊக்கம்தான் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

/நசரேயன் said...
நல்லா இருக்கு//

நன்றி தோழரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
கதை அருமை..//

தாங்க்ஸ் வினோத்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி said...
சூப்பர் கதைங்க....
அசத்திடிங்க போங்க பாண்டியன்.
ஒட்டு போட்டாச்சு.//

ரொம்ப நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நானும் ஒரு கதை எழுதிகிட்டு இருக்குறேன்... ஆனா பாருங்க அது இன்னம் 'க' விலேயே நிக்குது 'தை'க்கு வரமாட்டேங்குது//

தலைவா.. சொம்பேரித்தனப்படாம சீக்கிரமா எழுதங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சித்து said...
நல்லா இருக்குங்க கார்த்திகை பாண்டியன், வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நன்றிங்க சித்து..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் நண்பா..கதை உருக்கமா இருக்கு நண்பா//

நன்றி ஞானசேகரன்..

//நண்பா தல போட்டொவை காணவில்லை//

வேணும்னேதான் எடுத்துட்டேன்.. எனக்கான எந்த அடையாளமும் வேண்டாம் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
கதையில் கரு ரொம்ப வித்தியாசமா இருக்கு, எழுத்து நடையும் உரையாடல்களும் அருமை...
சிறுகதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கார்த்திகை பாண்டியன்...//

வாழ்த்துக்கு நன்றி கவிஞரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
எடுத்துக்கொண்ட கரு ரொம்பவும் நல்லா இருக்கு. இயல்பா எததயும் மீறாம அதுபாட்டுக்குப் போயிகிட்டு இருக்கிறமாதிரி.//

கதையை அதன் போக்கிலேயே விட்டுட்டேன் ஆதவா..

//கண்ணனோட சண்டைங்கறது அவ்வளவு அழுத்தமா காண்பிக்கலையோன்னு தோணுது..//

ஆமாம்ல.. இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்..

//வெற்றிபெறத் தகுதியான கதைகளில் இதுவும் ஒன்று. வெற்றிபெற வாழ்த்துகள்//

நன்றி நண்பா..

தமிழரசி said...

கதை ரொம்ப நேர்த்தியாக் கொண்டு போயிருக்கீங்க....இதில் சொல்லப்பட்ட நிகழ்வு உண்மையும் தான்..இதான் நடக்கிறது...வலியறியாத வன்மங்கள்.....கண்ணனின் அப்பாவுக்காக கண்கள் கலங்கியது..

வாழ்த்துக்கள் பாண்டியன் போட்டியில் வெற்றிப் பெற.....

Karthik said...

S.U.P.E.R.B.

குமரை நிலாவன் said...

கதை நல்லா இருக்கு நண்பா
வெற்றி பெற வாழ்த்துக்கள்

"அகநாழிகை" said...

கார்த்தி,
கதை நன்றாக வைத்திருக்கிறது.
போட்டிக்கான கதை என்பதை பதிவு தலைப்புடன் ‘உரையாடல் போட்டிக்கான சிறுகதை‘ என்பதை குறிப்பிட்டிருக்கலாம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ச.பிரேம்குமார் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் பாண்டியன் :)

குடந்தை அன்புமணி said...

கதை யதார்தமான வாழ்கை நிலையை சொல்கிறது...போட்டியில் வெற்றிக்காண வாழ்த்துகள்!

அத்திரி said...

நண்பா அருமை

" உழவன் " " Uzhavan " said...

வாழ்த்துக்கள் நண்பா!!

புல்லட் பாண்டி said...

பயங்கரமான அருவருக்கத்தக்க நிஜங்கள்... :(
நல்ல எழுத்து..

ஸ்ரீதர் said...

கலக்கல்.எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனிச்சிருக்கலாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழரசி said...
கதை ரொம்ப நேர்த்தியாக் கொண்டு போயிருக்கீங்க....இதில் சொல்லப்பட்ட நிகழ்வு உண்மையும் தான்..இதான் நடக்கிறது... வலியறியாத வன்மங்கள்..... கண்ணனின் அப்பாவுக்காக கண்கள் கலங்கியது..வாழ்த்துக்கள் பாண்டியன் போட்டியில் வெற்றிப் பெற.....//

நன்றி மேடம்.. உண்மையில் இதுபோல நடக்கத்தான் செய்கின்றன..:-(

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
S.U.P.E.R.B.//

thanks dude...:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
கதை நல்லா இருக்கு நண்பா
வெற்றி பெற வாழ்த்துக்கள்//

நன்றி தோழரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//"அகநாழிகை" said...
கார்த்தி, கதை நன்றாக வைத்திருக்கிறது.போட்டிக்கான கதை என்பதை பதிவு தலைப்புடன் ‘உரையாடல் போட்டிக்கான சிறுகதை‘ என்பதை குறிப்பிட்டிருக்கலாம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நன்றி வாசு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச.பிரேம்குமார் said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் பாண்டியன் :)//

ரொம்ப நன்றி பிரேம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
கதை யதார்தமான வாழ்கை நிலையை சொல்கிறது...போட்டியில் வெற்றிக்காண வாழ்த்துகள்!//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

/அத்திரி said...
நண்பா அருமை//

தாங்க்ஸ் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//உழவன் " " Uzhavan " said...
வாழ்த்துக்கள் நண்பா!!//

உங்க கதையும் இருக்குல்ல.. வாழ்த்துக்கு நன்றி உழவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி said...
பயங்கரமான அருவருக்கத்தக்க நிஜங்கள்... :(நல்ல எழுத்து..//

வாங்க புல்லட்.. உள்ளதை அப்படியே சொல்லி இருக்கேன்.. நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீதர் said...
கலக்கல்.எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனிச்சிருக்கலாம்.//

நன்றி ஸ்ரீ.. பெரிய பதிவு.. கொஞ்சம் பிழைகள் விட்டுட்டேன்.. பொறுத்து அருள்க:-)

சொல்லரசன் said...

உண்மைகதையா?இல்லை கதையில் உண்மையா? நன்றாக இருக்கிறது
வெற்றிபெற வாழ்த்துகள்.

//நண்பா தல போட்டொவை காணவில்லை//

வேணும்னேதான் எடுத்துட்டேன்.. எனக்கான எந்த அடையாளமும் வேண்டாம் நண்பா.."நீ நீயாக இரு அடுத்தவர்களுக்காக உனது அடையாளத்தை மாற்றிகொள்ளாதே
அப்படி மாற்றிகொண்டால் நீ அடையாளம் தெரியாமல் போய்விடுவாய்"

எங்கேயோ கேட்ட‌ குர‌ல்

பட்டிக்காட்டான்.. said...

நல்ல கதை..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன்..

கும்க்கி said...

ஓய் பாண்டி நன்னாருக்கு...
நடுவில கொஞ்சம் தடுமாற்றம் வந்து போவுது. க்ளைமேக்ஸ் தான் கதையே.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.