June 21, 2009

அன்புடன் அழைக்கிறேன்.. வாழ்த்த வாங்க..!!!


90 களின் ஆரம்பம். நான் ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்ததாக ஞாபகம். எங்கள் வீட்டில் அப்போது டிவி கிடையாது. பக்கத்து வீட்டில்தான் போய் பார்க்க வேண்டும். ஒரு முறை ஆர்வமாக டிவி பார்க்க பக்கத்து வீட்டுக்கு போனால், நான் வருவதைப் பார்த்து அந்த அக்கா கதவை வேகமாக சாத்தி விட்டார். அம்மா அதைப் பார்த்து விட எனக்கு நல்ல திட்டு. டிவி பார்க்க முடியாத ஆத்திரம் ஒரு பக்கம், அம்மாவிடம் திட்டு வாங்கியது ஒரு பக்கம் என்று உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது ஆறுதலாக என் தோளின் மீது விழுந்தன பிஞ்சு விரல்கள். "அழாதண்ணே.. நாம அம்மாக்கிட்ட சொல்லி புது டிவி வாங்கிக்கலாம்..". ஐந்தே வயதான என் தங்கை கண்களில் நீரோடு என் அருகில் நின்று கொண்டிருந்தாள்.எனக்குப் பின் ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் என் தங்கை. எங்கள் வீட்டின் ஒரே பெண் பிள்ளை என்பதால் பயங்கரச் செல்லம். எந்தப் பொருளை வாங்கினாலும் முதலில் எனக்கு வாங்கி விட்டுத்தான் அவளுக்கு வாங்கிக் கொள்ளுவாள். நான் அவளிடம் காட்டும் பாசத்தை விட பத்து மடங்கு என் மீது அன்பை பொழிபவள். பள்ளியில் சேரும்போது கூட அண்ணனோடுதான் போவேன் என்று எனது பள்ளியிலேதான் சேர்ந்தாள். கைகளைப் பிடித்து அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு போனது நேற்று நடந்தது போல இருக்கிறது. இன்றைக்கு.. அவளுக்கு கல்யாணம். காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது?எத்தனையோ திருமணங்களுக்கு சென்று இருக்கிறேன். நண்பர்களின் திருமணத்தில் முதல் ஆளாய் நின்று வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால் என் வீட்டில் ஒரு விசேஷம் என்பது இதுதான் முதல் தடவை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறேன். மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த தருணத்தை என்னுடைய நண்பர்கள் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த ஆறு மாதங்களில் இணையத்தில் எனக்கு கிடைத்த நண்பர்கள்... நீங்களும் என் தங்கையை வந்து வாழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.நாள்: 24 - 06 - 09 புதன்கிழமை

முகூர்த்த நேரம்: காலை 9:45 முதல் 10:45 வரை

மணமக்கள்: நா.நாகராணி
இர.தமிழ்க்குமரன்

இடம்: அன்னை வேளாங்கண்ணி திருமண மாளிகை,

மேலப்பொன்னகரம் ஏழாவது தெரு,

மதுரை.இல்லற வாழ்வை ஆரம்பிக்கும் என் தங்கைக்கு நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதம் கண்டிப்பாக வேண்டும். நீங்கள் அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.


பிரியமுடன்,

மா.கார்த்திகைப் பாண்டியன்.

58 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

என் மனபூர்வ வாழ்த்துக்கள்
பாண்டியன்.

லோகு said...

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்..

சோலை வானத்தில் ஒரு சோடி கிளி போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்..

***********

வாழ்த்துக்கள் சார்..

சுபா said...

//லோகு said...

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்..
//

Vaazthukkal Nanbare!

மாதவராஜ் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வினை ரசிக்க மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

அன்புதங்கை புகுந்த வீட்டிலும் நல்ல பெயர் பெற்று பெருவாழ்வு வாழ பல்லாயிரம் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

உங்களும் உங்கள் தங்கைக்கும் உண்டான பாசத்தை முதல் பத்தியில் சொல்லியிருந்தை படித்து நெகிழ்ந்தேன்!

நீங்கள் கொடுத்த வைத்த சகோதரர்!

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும் ஒரு பாசமலரை கண்ட உணர்வு,.. வாழ்த்துகள் நண்பா..

பாசமிகு தங்கையின் திருமணத்திற்கு என்னால் வர இயலாவிட்டாலும் என்றும் அன்புடன் இனிய வாழ்த்துகள் சொல்லிவிடுங்கள் நண்பா...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

நையாண்டி நைனா said...

எனது தங்கைக்கும் மற்றும் அத்தானுக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி said...

மண மக்களுக்கு வாழ்த்துகள் கார்த்தி..
திருமணத்திற்கு வர இயலாவிட்டாலும் எங்களது அன்பு எப்போதும் உண்டு..

டக்ளஸ்....... said...

என் உள்ளம் கனிந்த வாழ்த்துககளை இங்கு பதிவு செய்கிறேன் வாத்தியாரே..!

டக்ளஸ்....... said...

மச்சானுக்கு ஆழ்ந்த அணுதாபங்கள்....!
உங்களுக்கு எப்ப ஆணுதாபங்கள் சொல்றது தல..?.

வேத்தியன் said...

இதய பூர்வமான வாழ்த்துகள்...

Anonymous said...

மணமக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இரா. வசந்த குமார். said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..!

ஸ்ரீ.... said...

கார்த்திகைப் பாண்டியன்,

தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி. நேரம் அனுமதித்தால் நிச்சயம் கலந்து கொள்கிறேன்.

ஸ்ரீ....

அன்புடன் அருணா said...

என் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களுடன்!!!

சம்பத் said...

மணமக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....

யூர்கன் க்ருகியர்..... said...

வாழ்த்துக்கள் !

நிகழ்காலத்தில்... said...

மணமக்கள் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று நீடூழி வாழ்வார்களாக

அபுஅஃப்ஸர் said...

மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

Anonymous said...

இணையத்தமிழ் நல்ல நண்பர்களையும் மனிதர்களையும் ஒன்றினைக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

மணமக்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துகள்...

அன்புடன்
வர்மன்

அத்திரி said...

மணமக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

த.ஜீவராஜ் said...

மணமக்களுக்கு என்னுடைய மனபூர்வ நல்வாழ்த்துக்கள்.

Chill-Peer said...

தங்கைக்கு திருமண வாழ்த்துக்கள்.

(நான் தற்போது மதுரையில் தான் இருக்கிறேன். புதன் வரை இங்கிருந்தால் கட்டாயம் வருகிறேன். )

Dhavappudhalvan said...

பாசமிகு தங்கைக்கு திருமண வாழ்த்து

வாழ்க நலமுடன்! வாழ்க வளமுடன்!!

இனிதாய் இணையும்
இல்லறம் என்றும்,

உயிருள்ள வரை
உணர்வுகள் கலந்து,

நறுமணம் கமல
நல்லறமாய் விளங்கி,

மங்கா நலமுடன்
மகிழ்வுடன் இருக்க,

வாழ்க என்றே
வாழ்த்தினோம் இன்றே!.


உங்களில் ஒருவன்.
தவப்புதல்வன்.

வினோத்கெளதம் said...

தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்..

பிரியமுடன்.........வசந்த் said...

மச்சானுக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

அருமைத் தங்கையின் திருமணம் சீரும் சிறப்புடனும் நடைபெற நல்வாழ்த்துகள். தங்கையும் மாப்பிள்ளையும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ - பல்லாண்டு வாழ எங்களது நல்லாசிகளும் நல்வாழ்த்துகளும்

sakthi said...

எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டுகாலம் நீடுழி வாழ வாழ்த்துக்கள்!!!

வாழ்க வளமுடன்!!!!

Karthik said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..! :)

ச.பிரேம்குமார் said...

ஓ! அதான், கொஞ்ச நாளா பதிவுகள காணோமா? தங்கைக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்

ஆளவந்தான் said...

நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன் :)

Karthik Lollu said...

Manamakkalukku vaalthukkal...

pappu said...

உங்கள் தங்கை திருமணத்துக்கு வாழ்த்துக்கள்

pappu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

அ.மு.செய்யது said...

உங்கள் தங்கைக்கு எங்களின் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் கார்த்திக்.

ஜமாய்ங்க..!!!

(கிழக்கு சீமையிலே எஃபெக்ட் வருது பதிவ படிக்கும் போது...)

நித்யகுமாரன் said...

வாழிய நீடூழி....

அன்பு நித்யன்

இளைய கவி said...

மச்சான் என் வாழ்த்து எல்லாம் சொல்லி அன்னியப்பட்டு நிக்க முடியாது.. நம்ம புள்ள எங்க இருந்தாலும் நல்லா இருக்கும்யா. ங்கொன்னியா.

ச்சின்னப் பையன் said...

வாழ்த்துகள்

வசந்த் ஆதிமூலம் said...

வாழ்த்துகள்

குமரை நிலாவன் said...

எனது தங்கைக்கு
என் மனபூர்வ வாழ்த்துக்கள்
சொல்லிவிடுங்கள் நண்பா

nandhini said...

convey my regards to ur sister and ur brother in law
"heart filled wishes for their marriage.hoping the best for them forever.happy married life"

sorry sir i am unable to come but my wishes will be there for them..

with loads of wishes
Nandhini(E&i,KEC)

வழிப்போக்கன் said...

என் வாழ்த்தையும் சொல்லிவிடுங்க....
:)))
அன்புள்ள தம்பி...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

பட்டிக்காட்டான்.. said...

மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..

பாலகுமார் said...

மணமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் !!!

குடந்தை அன்புமணி said...

பாசமலருக்கு கல்யாணமா? வாழ்த்துகள் நண்பா! வேலைநாட்களாக இருப்பதால் திருமணத்திற்கு வர இயலாது போனாலும் எங்களின் மனப்பூர்வமான வாழ்த்து பூக்கள்! வாழ்க பல்லாண்டு!

குடந்தை அன்புமணி said...

//எந்தப் பொருளை வாங்கினாலும் முதலில் எனக்கு வாங்கி விட்டுத்தான் அவளுக்கு வாங்கிக் கொள்ளுவாள்.//

சீக்கிரம் உங்களுக்கும் மங்களம் உண்டாகட்டும்! ஹி ஹி...!

புல்லட் பாண்டி said...

என் மனப்பூர்வமான வாழத்துக்கள்... உங்கள் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... வரமுடியாதது வருத்தமேயாயினும் அவர்கள் நீடுழிகாலம் பல சிப்புற்று வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்..

" உழவன் " " Uzhavan " said...

மனபூர்வ வாழ்த்துக்கள் நண்பரே..

Anbu said...

அக்காவிற்கு திருமண வாழ்த்துக்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மணமக்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..!

உமா said...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறக்க வாழ்த்துகள்.

[இன்று 24.6.09, 11 மணி திருமணம் நடந்திருக்கும்.]

வாழ்த்துகள்.

Ponniyinselvan said...

அன்பு மகன் கார்த்திக்குடன் சேர்ந்து வாழ்த்தும்
கார்த்திக் அம்மா.
வாழ்க பல்லாண்டு.

தேனீ - சுந்தர் said...

வாழ்த்துக்கள் நண்பரே.,

யாழினி said...

உங்களது தங்கைக்கு எனது திருமண வாழ்த்துக்கள் பாண்டியன்.

அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும் பூரண செளபாக்கியத்துடனும் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

kannan said...

valaga valamudan