June 10, 2009

காணாமல் போன விளையாட்டுக்கள்..!!!

கண்ணு ரெண்டும் சுவத்துல இருக்கிற கடிகாரத்தப் பார்த்துக்கிட்டே இருக்கும். கடைசி கிளாஸ் யார் பாடம் நடத்துனாலும் கவனம் அதுல போகவே போகாது. எப்படா மணி அடிப்பாங்க, வீட்டுக்கு போகலாம் - இதுதான் மனசுல ஓடிக்கிட்டு இருக்கும். வீட்டுக்கு போனவுடனே பையத் தூக்கி எறிஞ்சுட்டு ஒரே ஓட்டம். "டேய்.. ஏதாவது சாப்பிட்டுட்டு போடா..." அம்மாவோட சத்தம் காதுலையே விழாது. தெருவுல நம்ம செட்டு பசங்க எல்லாம் ரெடியா இருப்பாங்க. ஆரம்பிக்குற விளையாட்டு இருட்டற வரைக்கும் தொடரும். களைச்சுப் போய் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஸ்கூல்ல கொடுத்த வீட்டுப்பாடம் நினைப்பே வரும். இந்த பால்ய நினைவுகள் நாம எல்லாருக்குமே இருக்கும்.
பம்பரம், குண்டுன்னு ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு சீசன் இருக்கும். ஒரு விளையாட்டு அதிகபட்சம் மூணு மாசம் விளையாடுவோம். அதுக்கு அப்புறம் வேற விளையாட்டு சீசன். எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள். ஆனா இன்னைக்கு நகரத்தோட தெருக்கள்ள பசங்க விளையாடுறதை பாக்குறதே அதிசயமாத்தான் இருக்கு. அப்படியே விளையாண்டாலும் கிரிக்கெட்டத் தவிர வேற எதுவும் இல்லை. டிவியும், கிரிக்கெட்டும் சேர்ந்து இன்னைக்கு பசங்களோட வாழ்க்கைல இருந்து பல சுவாரசியங்களை பரிச்சிடுச்சோன்னு தோனுது.
என்னுடைய சின்ன வயசுல நான் விளையாண்ட விளையாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது சில்லாக்கு. ஒரு தட்டையான கல், கொஞ்சம் சிகரெட் அட்டை இல்லன்னா தீப்பெட்டி அட்டை.. இதுதான் இந்த கேமுக்கான மூலதனம். தெருத்தெருவா சுத்தி, ஊர்ல இருக்குற ஒரு குப்பைத்தொட்டி விடாம அலசி, அட்டைகளை பொறுக்கிட்டு வருவோம். கிடைக்குறதுக்கு கஷ்டமான சிகரெட் அட்டை யாருக்கிட்ட இருக்கோ, அவனுக்கு மரியாதை தூள் பறக்கும். ஒரு வட்டம் போட்டு அதுல எல்லோரும் சிகரெட் அட்டையை வச்சுடுவோம். இப்போ கல்லை தூக்கி தூரமா வீசணும். இதை கட்டுறதுன்னு சொல்லுவோம். யாரு அதிக தூரம் வீசினானோ, அவனுக்குத்தான் முதல் சான்ஸ். கல்லை வீசி வட்டத்துக்கு உள்ள இருந்து எத்தனை சீட்டை எடுக்க முடியுமோ எடுத்துக்கலாம். ஒரு சில நேரங்களில் அடிதடி எல்லாம் நடக்கும். யாரு நிறையோ சீட்டு வச்சு இருக்கானோ, அவன்தான் எங்களுக்கு கோடீஸ்வரன்.
இன்னொரு அதிரடியான விளையாட்டு..பிள்ளைப்பந்து. எத்தனை பேர் விளையாடுறாங்களோ, அத்தனை குழி தோன்டனும். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு குழி. இப்போ பந்தை தூரத்துல இருந்து வீசணும். யாரோட குழில பந்து விழுகுதோ, அவன்தான் பட்டு. அந்த பந்தை எடுத்து அவன் யார் மேலயாவது எறியணும். அடி பட்டா, அவனுக்கு ஒரு பிள்ளை. அதாவது ஒரு கல்லை எடுத்து அடி வாங்குனவனோட குழியில போட்டுருவோம். இல்லன்னா எறிஞ்சவனுக்கு ஒரு பிள்ளை. அன்னைக்கு ஆட்ட முடிவுல, யார் அதிகமா பிள்ளை பெத்து இருக்கானோ அவன்தான் எல்லாருக்கும் டீயும் வடையும் வாங்கித் தரணும்.
பம்பரமும் குண்டும் பசங்களோட விளையாடுறது. பொம்பள பிள்ளைங்களோட சேர்ந்து விளையாட தனியா நிறைய விளையாட்டுக்கள். கல்லா மண்ணா, கரண்ட் பாக்ஸ், காலாட்டுமணி கையாட்டுமணி, வளையல் ஜோடி சேக்குறது.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ரவுண்டு கண்ணாமூச்சின்னு ஒரு விளையாட்டு. கிட்டத்தட்ட பத்து சந்து. எங்கன வேணும்னாலும் ஒளியலாம். பட்டு வரவன் எல்லாரையும் கண்டு பிடிக்கிறதுக்குள்ள மண்டை காஞ்சிடுவான். எல்லாமே உற்சாகமான விளையாட்டுக்கள். ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டும் பிடிச்சுக்கிட்டும் இருந்த அந்த பால்ய நாட்கள் மறக்க முடியாதவை. அதுல கிடைக்க கூடிய சந்தோஷம் கம்ப்யூட்டர் கேம்ச்லயோ, டிவிலயோ கிடையாது. இதை எல்லாம் அனுபவித்து இருக்கிறோம் என்ற வகையில் நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான்....!!!
நண்பர்களே.. இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்குன்னு சொல்லுவாங்களோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா படிச்ச எல்லாருமே அவங்களோட பால்ய நினைவுகள் பத்தி சொன்னது மகிழ்ச்சியைத் தருது. அண்ணன் பைத்தியக்காரன் இதை தொடர்பதிவா எழுதலாமேன்னு சொல்லி இருக்கார். நல்ல யோசனை. கண்டிப்பா அவங்க அவங்க சின்ன வயசுல வித்தியாசமான விளையாட்டுக்கள விளையாண்டு இருப்பீங்க. அதைப் பத்தி எழுதுங்க. இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது...
தருமி ஐயா..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

56 comments:

வால்பையன் said...

யே யப்பா!

எம்புட்டு விளையாட்டு ஞாபகம் வச்சிருக்கிங்க!
எனக்கு விளையாட்டோட விதிமுறைகள் கூட மறந்துருச்சு!

ச.பிரேம்குமார் said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.......

Anonymous said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

சுந்தர் said...

கிட்டி வெளையாண்டு இருக்கீங்கள ?

நையாண்டி நைனா said...

படிச்சாச்சு.... அதனாலே ஒரு பிரசன்ட் போட்டுகறேன். அப்பாலிக்காவும் மறுக்கா வாறேன்.

தீப்பெட்டி said...

//அவன்தான் பட்டு// //பட்டு வரவன்//

இவ்வளவு நாள் மறந்திருந்த இந்த வார்த்தகளை நினைவுபடித்திட்டீங்க கார்த்தி.. சிறுவயது வழ்க்கைக்கென்று சில வழக்கு வார்தைகள் உண்டு..

//இதை எல்லாம் அனுபவித்து இருக்கிறோம் என்ற வகையில் நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான்....!!!//

நிச்சயமா பாஸ்..

நர்சிம் said...

நண்பா... என்னத்தச் சொல்ல...ஞாபகம் வருதே...

Raju said...

விளையாட்டுகள் ஒன்னுதான்..
ஆனா பேரு மட்டும் ஒரு ஒரு இடத்துக்கேற்ப மாறும்..
ஓடிப்பிடிச்சு,ஒளிஞ்சுபிடிச்சு, திருடன்‍போலீஸ் ( இதுல போலீசுக்கு துப்பாக்கி தரப்படும்.), பச்சக்குதுர, மரக்குரங்கு,
நாடு பிரிச்சு விளையாடுறது, எரிபந்து, குழிப்பந்து, கிட்டிப்புல்லு, கம்பு தூக்குறது, ....விட்டா ஒரு பதிவு போடுற அள்வுக்கு சொல்லுவேன். உண்மையிலேயே நாம கொடுத்து வச்சவங்கதான் :)

Jackiesekar said...

குண்டும் பம்பரமும் எந்த ஊர்லயும் எந்த பயபுள்ளயும் வெல்லாட மாட்டேங்குதுப்பா? என்ன செய்ய? எல்லாத்துக்கும் காரணம் டிவி

கே.என்.சிவராமன் said...

நண்பா, ஒரு தொடர் பதிவா இதை எழுதுங்களேன்?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நாடோடி இலக்கியன் said...

// நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான்//

உண்மை.

கொஞ்ச நேரம் அப்படியே சிறுபிராயத்தின் நினைவில் மூழ்க வைத்துவிட்டீர்கள்.அருமையான பதிவு.

இதே விஷயத்தை கொஞ்ச நாள் முன் நானும் மூன்று பதிவுகளாக எழுதியிருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இப்ப எங்க இந்த விளையாட்டெல்லாம் விளையாடறாங்க பசங்க,அதது வீடியோ கேம் ,கிரிக்கெட்டுன்னு விளையாடுதுங்க,எனக்கு இப்பவும் அப்பவும் எப்பவும் பிடிச்ச விளையாட்டுன்னா அது அப்பா அம்மா விளையாட்டுதான்.

கும்மாச்சி said...

கார்த்திகைப்பண்டியன் நிறைய விளையாட்டுக்களை இந்தக்கால குழைந்தைகள் இழந்து விட்டனர். பிள்ளையார் பந்து, குச்சிப்லே, குண்டு விளையாட்டில் பேந்தா, ஆஹா, என்னுடைய பழைய காலத்திற்கு அழைத்து சென்றுள்ளீர்கள்.

ப. அருள்நேசன் said...

//மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே//
இதக் கேட்டா நீங்கபிறந்த ஊர் மெய்சிலிர்த்திடுங்கண்ணா

இளமை எனும் பூங்காற்று........ ம்ம்ம் பால்யம் உங்களுக்கு எப்படியோ அதுபோலதான் நமக்கும், சீசன் விலையாட்டு, ஸ்க்கூல் படிப்பு அந்தவலிகளின் சுகம் ம்ம்ம் அந்தக்காற்று சுகம் இல்ல

M.G.ரவிக்குமார்™..., said...

காவியம் மணிக்காவியம் வெளாட்டையும் சேத்துக்கோங்க........

மறத்தமிழன் said...

பாண்டியன்,

டார்டாய்சை சுத்திட்டங்க..பழைய ஞாபகம் ...
பிள்ளையார் பந்து,எறி பந்து,கிட்டி,பேந்தா,தாப்லாங்குச்சி,திருடன் போலிஸ்,மல்லுகட்டு...
அட‌டா..அது ஒரு அழ‌கிய‌ கனாக்கால‌ம்..
அன்புட‌ன்
ம‌ற‌த்த‌மிழ‌ன்.

ஆ.சுதா said...

தலைப்பே பழைய நினைவுகளை மீட்டுது!!. பதிவை அப்புறம் வந்து படிக்கின்றேன் நண்பா. வேலை!!!!
போனிலும் சரியாக பேச இயலவில்லை!!!

வழிப்போக்கன் said...

பொம்பள பிள்ளைங்களோட சேர்ந்து விளையாட தனியா நிறைய விளையாட்டுக்கள்//

இந்த அப்ரோச் எனக்கு ர்ர்ர்ரொம்ப புடிச்சிருக்கு!!!
:)))

Unknown said...

//.. சில்லாக்கு ..//
நாங்க 'டெல்' னு சொல்லுவோம்,

//.. ரவுண்டு கண்ணாமூச்சின்னு ..//

இது ஐஸ் நம்பர்..

மேலும் கிட்டிப்புல், ஐந்து கல், ராஜா ராணி, கொல கொலையா முந்திரிக்கா, ஈடு பந்து, கபாடி, இன்னும் பெயர் சொல்ல முடியாத விளையாட்டுகள் நிறைய..

//.. டிவியும், கிரிக்கெட்டும் சேர்ந்து இன்னைக்கு பசங்களோட வாழ்க்கைல இருந்து பல சுவாரசியங்களை பரிச்சிடுச்சோன்னு தோனுது. ..//

மறுக்க முடியாத உண்மை..

//.. பரிச்சிடுச்சோன்னு தோனுது. ..//

பறிச்சிடுச்சோன்னு தோனுது..(இப்படிதானே..??!!)

சொல்லரசன் said...

//அதுல கிடைக்க கூடிய சந்தோஷம் கம்ப்யூட்டர் கேம்ச்லயோ, டிவிலயோ கிடையாது.//


உண்மைதான்.அந்த சந்தோஷத்தை இன்றைய தலைமுறையினர் தொலைத்து
விட்டதற்கு நாமும் ஒரு காரணம்தான்.

அ.மு.செய்யது said...

ந‌ல்ல‌ கொசுவ‌த்தி சுத்தினீங்க‌ போங்க‌..

கோலி ஓவரா விளையாடி என்னோட நடுவிரல் புறங்கை வரை வளையும்.

//பொம்பள பிள்ளைங்களோட சேர்ந்து விளையாட தனியா நிறைய விளையாட்டுக்கள்.//

வாஸ்த‌வ‌மான‌ பேச்சு...

குமரை நிலாவன் said...

//ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டும் பிடிச்சுக்கிட்டும் இருந்த அந்த பால்ய நாட்கள் மறக்க முடியாதவை.//

மறுக்க முடியாத உண்மை நண்பா

நாம் எல்லாம் நிறம்ப கொடுத்து வைத்தவர்கள்தான்....!

பீர் | Peer said...

நமக்கு முந்தைய தலைமுறை விளையாட்டுக்களை நாம் விளையாடியதில்லை.
இக்கால குழந்தைகள் நம்மைப்போல் குப்பைப் பொறுக்கிகளாய் இல்லாமல் ஹைடெக் விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள் எனவும் கொள்ளலாம். இவர்களின் அறிவும் கேள்வி ஞானமும் நம்மை மலைக்க வைக்கிறதே சகா...

நசரேயன் said...

ம்ம். காலம் மாறிப்போச்சி இப்போ

Anonymous said...

பாண்டியா இப்போது பலோ பாண்டியாவா? நாளுக்கு நாள் மெருகு ஏறுகிறது எழுத்து. அட்டகாசமாக இருக்கு...தொடருங்கள்.

*இயற்கை ராஜி* said...

பலே பாண்டியா!!!!!!

வினோத் கெளதம் said...

கலக்கல்..

ஆ.சுதா said...

நண்பா பால்ய நினைவுகளை மீட்டிவிட்டது உங்கள் பதிவு!!

|சில்லாக்கு.| நானும் விளையாடியுள்ளேன் (எங்கள் ஊரில் வேர பெயர்) நீங்கள் கூறுவது போல் நிரைய விளையாட்டுகள் இப்போது விளையாட 'பசங்க' இல்லாம தூர்ந்து போகும் நிலை உள்ளது நண்பா!!

சம்பத் said...

எங்க ஊருலயும் "சில்லாக்கு" தான் நண்பா..(இந்த பேர கேட்டவுடனையே சும்மா ஜிவ்வுன்னு இருந்திச்சு..). ஆனால் எங்க ஊர்ல சோடா மூடிய வெச்சு விளையாடுவோம்.( அதுலயும் அப்பவெல்லாம் பெப்சி மூடிக்கு செம மரியாதை. பவண்டோ சும்மா லோக்கல்..).

அப்புறம் "கண்ணாமூச்சி" (கப் ஐஸ் எங்க ஊர்ல),கோலி,கிட்டி எல்லாம் ஞாபகம் வந்துடுச்சுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னத்த சொல்றது பா ரொம்ப நல்லாகீது

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...

அப்போ நாம் விளையாடிய விளையாட்டுக்கள் இன்று பல குழந்தைகள் அறியாதது.

நகரம் மட்டுமல்ல, கிராமங்களிலும் குழைந்தகள் விளையாடுவதைப் இப்போதெல்லாம் பார்க்க இயலுவதில்லை.

ஆ.ஞானசேகரன் said...

//களைச்சுப் போய் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஸ்கூல்ல கொடுத்த வீட்டுப்பாடம் நினைப்பே வரும்.//

நல்லவேலை எனக்கு மறந்தே போகும்

ஆ.ஞானசேகரன் said...

//டிவியும், கிரிக்கெட்டும் சேர்ந்து இன்னைக்கு பசங்களோட வாழ்க்கைல இருந்து பல சுவாரசியங்களை பரிச்சிடுச்சோன்னு தோனுது. //

ம்ம்ம்ம் ஆமாங்க கார்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

பிள்ளைப்பந்து விளையாட்டு வித்தியாசமாக இருக்கே, எங்கள் ஊரில் இல்லையே

புதியவன் said...

//டிவியும், கிரிக்கெட்டும் சேர்ந்து இன்னைக்கு பசங்களோட வாழ்க்கைல இருந்து பல சுவாரசியங்களை பரிச்சிடுச்சோன்னு தோனுது.//

நிதர்சனமான வரிகள் நண்பரே...

தேவன் மாயம் said...

நான் கோலி விளையாட்டில் கிங்குங்கோ!!!
பட்டம் இப்பக்கூட விடுவேன்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
யே யப்பா!எம்புட்டு விளையாட்டு ஞாபகம் வச்சிருக்கிங்க!
எனக்கு விளையாட்டோட விதிமுறைகள் கூட மறந்துருச்சு!//

இன்னமும் நிறைய விளையாட்டு ஞாபகத்துல இருக்கு வாலு..

//ச.பிரேம்குமார் said...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.......//

அதுக்குத்தானே பிரேம் எழுதுனதே..

//தமிழினி said...
நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்கhttp://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html//

பார்த்துட்டேங்க..கலந்துக்க முயல்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேனீ - சுந்தர் said...
கிட்டி வெளையாண்டு இருக்கீங்கள ?//

ஆகா.. உண்டு நண்பா

//நையாண்டி நைனா said...
படிச்சாச்சு.... அதனாலே ஒரு பிரசன்ட் போட்டுகறேன். அப்பாலிக்காவும் மறுக்கா வாறேன்.//

எங்கப்பா.. வரேனுட்டு போனவரை ஆளையே காணோம்?

//தீப்பெட்டி said...
இவ்வளவு நாள் மறந்திருந்த இந்த வார்த்தகளை நினைவுபடித்திட்டீங்க கார்த்தி.. சிறுவயது வழ்க்கைக்கென்று சில வழக்கு வார்தைகள் உண்டு.. //

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
நண்பா... என்னத்தச் சொல்ல...ஞாபகம் வருதே...//

நன்றி நரசிம்..

//டக்ளஸ்....... said...
விளையாட்டுகள் ஒன்னுதான்..
ஆனா பேரு மட்டும் ஒரு ஒரு இடத்துக்கேற்ப மாறும்..
ஓடிப்பிடிச்சு,ஒளிஞ்சுபிடிச்சு, திருடன்‍போலீஸ் ( இதுல போலீசுக்கு துப்பாக்கி தரப்படும்.), பச்சக்குதுர, மரக்குரங்கு,
நாடு பிரிச்சு விளையாடுறது, எரிபந்து, குழிப்பந்து, கிட்டிப்புல்லு, கம்பு தூக்குறது, ....விட்டா ஒரு பதிவு போடுற அள்வுக்கு சொல்லுவேன். உண்மையிலேயே நாம கொடுத்து வச்சவங்கதான் :)//

இதை.. இதைத்தான் எதிர்பார்த்தேன்.. அதனால டக்கு.. நீங்க என்ன பன்றேங்கன்னா.. நீங்களும் இதைப் பத்தி ஒரு பதிவு எழுதுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//jackiesekar said...
குண்டும் பம்பரமும் எந்த ஊர்லயும் எந்த பயபுள்ளயும் வெல்லாட மாட்டேங்குதுப்பா? என்ன செய்ய? எல்லாத்துக்கும் காரணம் டிவி//

வருத்தப்பட வேண்டிய விஷயம்..

//பைத்தியக்காரன் said...
நண்பா, ஒரு தொடர் பதிவா இதை எழுதுங்களேன்?தோழமையுடன்
பைத்தியக்காரன்//

சொல்லிட்டீங்கல்ல நண்பா.. செஞ்சிடலாம்..:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//நாடோடி இலக்கியன் said...
உண்மை.கொஞ்ச நேரம் அப்படியே சிறுபிராயத்தின் நினைவில் மூழ்க வைத்துவிட்டீர்கள்.அருமையான பதிவு.//

உங்க பதிவு இன்னும் அருமையா இருந்தது.. நன்றி நண்பா

//ஸ்ரீதர் said...
இப்ப எங்க இந்த விளையாட்டெல்லாம் விளையாடறாங்க பசங்க,அதது வீடியோ கேம் ,கிரிக்கெட்டுன்னு விளையாடுதுங்க,எனக்கு இப்பவும் அப்பவும் எப்பவும் பிடிச்ச விளையாட்டுன்னா அது அப்பா அம்மா விளையாட்டுதான்.//

oh my god.. please forgive this innocent boy..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//கும்மாச்சி said...
கார்த்திகைப்பண்டியன் நிறைய விளையாட்டுக்களை இந்தக்கால குழைந்தைகள் இழந்து விட்டனர். பிள்ளையார் பந்து, குச்சிப்லே, குண்டு விளையாட்டில் பேந்தா, ஆஹா, என்னுடைய பழைய காலத்திற்கு அழைத்து சென்றுள்ளீர்கள்.//

நீங்க சொல்ற விளையாட்டு நானும் ஆடி இருக்கேன் நண்பா.. அருமையான காலங்கள் அவை..

//சகாராவின் புன்னகை said...
//மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே//
இதக் கேட்டா நீங்கபிறந்த ஊர் மெய்சிலிர்த்திடுங்கண்ணா //

ரொம்ப நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசன்..., said...
காவியம் மணிக்காவியம் வெளாட்டையும் சேத்துக்கோங்க........//

அட ஆமாம்.. அதை விட்டுட்டேனோ?

//Marathamizhan said...
பாண்டியன்,டார்டாய்சை சுத்திட்டங்க..பழைய ஞாபகம் ...பிள்ளையார் பந்து,எறி பந்து,கிட்டி,பேந்தா,தாப்லாங்குச்சி,திருடன் போலிஸ்,மல்லுகட்டு...
அட‌டா..அது ஒரு அழ‌கிய‌ கனாக்கால‌ம்..அன்புட‌ன்
ம‌ற‌த்த‌மிழ‌ன்.//

நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழிப்போக்கன் said...
பொம்பள பிள்ளைங்களோட சேர்ந்து விளையாட தனியா நிறைய விளையாட்டுக்கள்//இந்த அப்ரோச் எனக்கு ர்ர்ர்ரொம்ப புடிச்சிருக்கு!!!
:)))//

இது சேட்டை..

//பட்டிக்காட்டான்.. said...
நாங்க 'டெல்' னு சொல்லுவோம்,
இது ஐஸ் நம்பர்..மேலும் கிட்டிப்புல், ஐந்து கல், ராஜா ராணி, கொல கொலையா முந்திரிக்கா, ஈடு பந்து, கபாடி, இன்னும் பெயர் சொல்ல முடியாத விளையாட்டுகள் நிறைய..
//.. டிவியும், கிரிக்கெட்டும் சேர்ந்து இன்னைக்கு பசங்களோட வாழ்க்கைல இருந்து பல சுவாரசியங்களை பரிச்சிடுச்சோன்னு தோனுது. ..//
மறுக்க முடியாத உண்மை..
//.. பரிச்சிடுச்சோன்னு தோனுது. ..//
பறிச்சிடுச்சோன்னு தோனுது..(இப்படிதானே..??!!)//

ரொம்ப சிலாகிச்சு படிச்சு இருக்கீங்க.. ரொம்ப நன்றி.. சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் இருக்கு.. சரி பண்ணிக்கிறேன்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
உண்மைதான்.அந்த சந்தோஷத்தை இன்றைய தலைமுறையினர் தொலைத்து விட்டதற்கு நாமும் ஒரு காரணம்தான்.//

நீங்க சொல்றதும் ஒரு கோணத்துல சரிதான்னன்பா

//அ.மு.செய்யது said...
ந‌ல்ல‌ கொசுவ‌த்தி சுத்தினீங்க‌ போங்க‌..
கோலி ஓவரா விளையாடி என்னோட நடுவிரல் புறங்கை வரை வளையும்.//

அருமையான நினைவுகள்தான் நண்பா.. கோலில குழி தோண்டி விளையாடுறதுதான் எனக்கு பிடிச்சது..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
மறுக்க முடியாத உண்மை நண்பா
நாம் எல்லாம் நிறம்ப கொடுத்து வைத்தவர்கள்தான்....!//

நன்றி நண்பா

//Chill-Peer said...
நமக்கு முந்தைய தலைமுறை விளையாட்டுக்களை நாம் விளையாடியதில்லை.
இக்கால குழந்தைகள் நம்மைப்போல் குப்பைப் பொறுக்கிகளாய் இல்லாமல் ஹைடெக் விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள் எனவும் கொள்ளலாம். இவர்களின் அறிவும் கேள்வி ஞானமும் நம்மை மலைக்க வைக்கிறதே சகா...//

வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கீங்க.. positive approach.. ஒரு வகையில் சரிதான் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
ம்ம். காலம் மாறிப்போச்சி இப்போ//

நிறையவே..

//கடையம் ஆனந்த் said...
பாண்டியா இப்போது பலோ பாண்டியாவா? நாளுக்கு நாள் மெருகு ஏறுகிறது எழுத்து. அட்டகாசமாக இருக்கு...தொடருங்கள்.//

நன்றி ஆனந்த்..

//இய‌ற்கை said...
பலே பாண்டியா!!!!!!//

நன்றி தோழி

கார்த்திகைப் பாண்டியன் said...

//வினோத்கெளதம் said...
கலக்கல்..//

ரொம்ப நன்றி வினோத்..

//ஆ.முத்துராமலிங்கம் said...
நண்பா பால்ய நினைவுகளை மீட்டிவிட்டது உங்கள் பதிவு!!
|சில்லாக்கு.| நானும் விளையாடியுள்ளேன் (எங்கள் ஊரில் வேர பெயர்) நீங்கள் கூறுவது போல் நிரைய விளையாட்டுகள் இப்போது விளையாட 'பசங்க' இல்லாம தூர்ந்து போகும் நிலை உள்ளது நண்பா!!//

உண்மைதான் நண்பா.. கவலை தரும் விஷயம்தான்..:-((

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said...
எங்க ஊருலயும் "சில்லாக்கு" தான் நண்பா..(இந்த பேர கேட்டவுடனையே சும்மா ஜிவ்வுன்னு இருந்திச்சு..). ஆனால் எங்க ஊர்ல சோடா மூடிய வெச்சு விளையாடுவோம். ( அதுலயும் அப்பவெல்லாம் பெப்சி மூடிக்கு செம மரியாதை. பவண்டோ சும்மா லோக்கல்..).//

எல்லா எடத்துலயும் அப்படித்தான் நண்பா.. நம்ம ஊரு சரக்குன்னா மட்டம்..:-(

//sgramesh said...
என்னத்த சொல்றது பா ரொம்ப நல்லாகீது//

வாழ்த்துக்கு நன்றிங்க

//இராகவன் நைஜிரியா said...
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...
அப்போ நாம் விளையாடிய விளையாட்டுக்கள் இன்று பல குழந்தைகள் அறியாதது.நகரம் மட்டுமல்ல, கிராமங்களிலும் குழைந்தகள் விளையாடுவதைப் இப்போதெல்லாம் பார்க்க இயலுவதில்லை.//

:-(((((((((((

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்லவேலை எனக்கு மறந்தே போகும்//

இதுல ஒரு சந்தோஷமா?

//பிள்ளைப்பந்து விளையாட்டு வித்தியாசமாக இருக்கே, எங்கள் ஊரில் இல்லையே//

நிறைய விளையாட்டு ஊருக்கு ஊர் மாறுபடும் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
நிதர்சனமான வரிகள் நண்பரே...//

உண்மைதான் புதியவன்.. வருத்தம் தரும் விஷயம்

//thevanmayam said...
நான் கோலி விளையாட்டில் கிங்குங்கோ!!!
பட்டம் இப்பக்கூட விடுவேன்!!//

கலக்குங்க டாக்டர் சார்..

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. கலக்கல் பதிவு.. பலபேரு சொன்னமாதிரி, ஒவ்வொரு ஊருக்கும் விளையாட்டின் பேரு மட்டும் மாறிருக்கு. ஐஸ்பாய் ஆடிருக்கீங்களா? சிகரட் அட்டை கேமை நாங்க 7ஸ்டார்னு சொல்லுவோம். கோலிக்குண்டு வெயிட் தாங்காம டவுசரின் இரண்டு பக்க பாக்கெட்டே ஓட்டை விழுந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருது. பொம்பள பிள்ளைங்களோட சேர்ந்து நொண்டி விளையாடுவோம்..ம்ம்ம்.. அது ஒரு கனா காலம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மையிலேயே அது ஒரு அழகிய கனாக்காலம்தான் நண்பா :-)))

மேவி... said...

ஹ்ம்ம் .....

பிறகு லோசிப மண்ணு போன்ற விளையாட்டுகளும் இருக்கு .....

இந்த மாதிரி விளையாட்டுகள் அழிந்து விட கூடாது என்று இத்தனை இன்றைய சிறுவர்களுக்கு சொல்லி தருவதருக்கு என்று ஓர் அமைப்பு சென்னையில் இருக்கிறது .....

பள்ளிகளின் அழைப்பின் பெயரில் , அங்கே சென்று குழந்தைகளுக்கு சில பல விளையாட்டுகளை சொல்லி தரங்க.....


பே பே போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகளை ஏன் விட்டிங்க ????

Anonymous said...

இவ்ளோ வெள்ளாட்டு கீதா....

சரி வாலி...ப விளையாடுக்களயும் எழுதறது!!! :)

pudugaithendral said...

வலைச்சரம் பார்த்து வந்தேன்.

ம்ம்ம் இதுமாதிரி தொலைந்து போன விளையாட்டுக்கள் நிறைய்ய்..

அருமையா எழுதியிருக்கீங்க