June 30, 2009

கடவு -இசையோடு ஒரு கொண்டாட்டம்...!!!

கடவு இலக்கிய அமைப்பின் சார்பாக மதுரையில் 27-06-09 மற்றும் 28-06-௦௦௦09 ஆகிய இரு தினங்களும் கூடல் சங்கமம் என்னும் பெயரில் கவிதை, சிறுகதை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை "தூறல் கவிதை" ச.முத்துவேல் எனக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அனுப்பி இருந்தார். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதால் கண்டிப்பாக நீங்கள் போக வேண்டும் என்று நண்பர் "அகநாழிகை" பொன்.வாசுதேவனும் சொல்லி இருந்தார்.
இருந்த போதிலும் எனக்குள் ஒரு தயக்கம். போவதா வேண்டாமா என்று ஒரு சின்ன தடுமாற்றம். நான் வெகு சமீபமாகத்தான் தீவிர இலக்கியங்களை வாசித்து வருகிறேன் என்பதால் அவ்வளவாக இலக்கியப் பரிச்சயம் கிடையாது. இதை எனது நண்பர் ஸ்ரீதரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார்.."ரொம்ப நல்லதாப் போச்சு.. ஒண்ணுமே தெரியாமப் போனாத்தான்யா நிறைய கத்துக்க முடியும். நம்ம ஊர்ல நடக்கும்போது நாம இல்லாமையா? கண்டிப்பா போறோம்.."
அழகர் கோவிலுக்கு வெகு அருகே இருக்கும் ஓயாசிஸ் பாஸ்கர சேதுபதி அரங்கில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சனிக்கிழமை எனக்கு கல்லூரி என்பதால் மாலை ஐந்து மணிக்குத்தான் நிகழ்ச்சிக்கு போக முடிந்தது. நண்பர் ஸ்ரீதரும் அதே நேரத்துக்கு வந்து சேர்ந்தார். பதிவுலக நண்பர்களில் வால்பையனும், கும்க்கியும் வந்து இருந்தார்கள். கவிஞர் மற்றும் பதிவரான யாத்ராவும் வந்து இருந்தார்.
சனிக்கிழமை முழுவதும் கவிதைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. நாங்கள் சென்றபோது ஆதவன் தீட்சண்யா தலைமையில் கவிஞர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த புத்தகமான தமிழச்சி தங்கபாண்டியனின் "வனப்பேச்சி" பற்றி அருமையாகப் பேசினார் யவனிகா ஸ்ரீராம். நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. பின்னர் நண்பர்கள் எல்லாரும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம்.
முத்துவேலும் யாத்ராவும் தங்கி இருந்த அறைக்கு நானும் ஸ்ரீதரும் போனபோது மணி ஒன்பதரை. அங்கே முக்கியமான இரு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நரன் - இலக்கிய உலகில் வளர்ந்து வரும் கவிஞர். அருமையாக பேசினார். விஷயங்களை தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார். இசை - இத்தனை நாளாக இவரது கவிதைகளை நாம் ஏன் படிக்கவில்லை என்று ஏங்க வைத்து விட்டார். இசையின் உறுமீன்கள் அடர்ந்த நதி என்னும் புத்தகத்தின் சில கவிதைகளை யாத்ரா வாசித்துக் காட்டினார். ஒரே வார்த்தையில் சொல்வதானால் அற்புதம். இருவருமே பதிவுலகில் எழுதி வருகிறார்கள். கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவர்கள்.
யாத்ரா நன்றாகப் பாடுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் தெரியாத விஷயம்.. முத்துவேலின் பாடும் திறன். பட்டையைக் கிளப்பி விட்டார். மனிதர் மேடைப்பாடகராம். பாட்டின் நடுவே வரும் இசைக்கோர்வைகளைக் கூட சீட்டியின் மூலம் இசைக்கிறார். அவரவருக்கு பிடித்த பாடல்களை பாடத் தொடங்கினோம். இசை கடினமான பாடல்களான நின்னைச் சரணடைந்தேன், ராக தீபமே போன்ற பாடல்களை அனாயாசமாக பாடினார். யாத்ராவுக்கோ இளையராஜா என்றால் உயிர் போல. எல்லாம் மென்மையான பாடல்களாகப் பாடினார்.
அனைவரும் கொண்டாட்டமாக இருந்த அந்தத் தருணங்கள் அற்புதமானவை. நடுவில் வேறு சில நண்பர்களும் வந்து சேர கச்சேரி களை கட்டியது. இதனால் ஓட்டல் ஊழியர்களின் சாபத்துக்கு ஆளானது வேறு கதை. நடு ராத்திரி இரண்டு மணி வரை பாடிக் கொண்டிருந்தால் பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? ஆனால் இதெல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா பாஸ்? பாட்டு பாடி முடித்த பின்னும் நரனுடன் ஒரு மணி நேரம் இலக்கியம் பற்றி பேசிவிட்டு புறப்பட்டோம். இலக்கியத்தையும் கொண்டாட்டத்தையும் ஒரு நாளில் திகட்டத் திகட்ட அனுபவித்து இருந்தேன்.
பேசிக் கொண்டிருக்கையில் முத்துவேல் திடீரென எனக்கு நன்றி சொன்னார்.
"என்னப்பா..எதுக்கு நன்றி?" - நான்.
"என்னை பாலோ பண்றதுக்கு ரொம்ப நன்றி கார்த்தி. நான் எல்லாம் சாதரணமான ஆள். எனக்கு என்ன தகுதி இருக்கு? ஆனா பெரிய பெரிய ஆள் எல்லாம் இந்தப் பதிவுலகத்துல இருக்காங்க. டாக்டர், இன்ஜினியர் எல்லாம் நாம எழுதுறதைப் படிக்கிறாங்க என்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்குத்தான்." - முத்துவேல்.
"எங்களை அசிங்கப்படுத்தாதீங்க நண்பா.. நீங்க ஒரு படைப்பாளி. கவிஞர். இதை விட என்ன பெரிய தகுதி வேண்டும்?"
இதை நான் சொல்லி முடித்த நொடியில் அருகில் அமர்ந்து இருந்த இசை என்னை கட்டிக் கொண்டார். "சரியாச் சொன்னீங்க நண்பா.." அன்போடு என் கன்னத்தில் முத்தமிட்டார். பாசத்தின் வெளிப்பாடு. ஒரு கலைஞனுக்குள் இருந்த குழந்தை. எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது..!!!
(எஸ்ராவும், கோணங்கியும் பங்குபெற்ற சிறுகதை பற்றிய உரையாடல்களும், மற்ற அனுபவங்களும் அடுத்த பதிவில்..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

31 comments:

MayVee said...

me the first

MayVee said...

hmmm

pavam hotel servers

MayVee said...

"ஆனா பெரிய பெரிய ஆள் எல்லாம் இந்தப் பதிவுலகத்துல இருக்காங்க. டாக்டர், இன்ஜினியர் எல்லாம் நாம எழுதுறதைப் படிக்கிறாங்க என்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு."


எல்லோரும் முதலில் மனிதர்கள் .....

பிறகு தான் டாக்டர், இன்ஜினியர் எல்லாம் .....

மனிதர்கள் எழுதுவதை மனிதர்கள் படிப்பது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை ....

MayVee said...

இன்று மாலை கால் பண்ணுகிறேன் ....

விவரம் அறிய

குடந்தை அன்புமணி said...

தங்களின் சந்திப்புகள் பற்றியும் அடித்த கூத்துகளும் பற்றி படிக்கையில் ரொம்பவும் வருத்தம் அடைந்தேன்.

ஆம்! நான் அங்கு இல்லாமல் போனதற்காக....


நானும் சென்னையில் ஓர் நல்ல இலக்கிய அமைப்பை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். சமீபத்தில்தான் பதிவர் நண்பர் முத்துராமலிங்கம் ஞானி ஆரம்பித்திருக்கும் அமைப்பான கேணி பற்றி சொன்னார். மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டின் பின்புறத்தில் கேணி அருகே நடைபெறுகிறதாம்.

MayVee said...

"ரொம்ப நல்லதாப் போச்சு.. ஒண்ணுமே தெரியாமப் போனாத்தான்யா நிறைய கத்துக்க முடியும்"

இதையே தான் நான் படிக்கும் போது வாத்தியார் கிட்ட சொன்னதற்கு என்னை திட்டினார்.....

MayVee said...

சாரே ....
இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாமே சந்திப்பு பற்றி

வால்பையன் said...

இசையை தான் மிஸ் பண்ணிட்டேன்!
அடுத்த சந்திப்பில் பாட சொல்லி கேட்க வேண்டும்!

நையாண்டி நைனா said...

ok nanbaa... nadathunga... nadathunga.

thevanmayam said...

இதை நான் சொல்லி முடித்த நொடியில் அருகில் அமர்ந்து இருந்த இசை என்னை கட்டிக் கொண்டார். "சரியாச் சொன்னீங்க நண்பா.." அன்போடு என் கன்னத்தில் முத்தமிட்டார். பாசத்தின் வெளிப்பாடு. ஒரு கலைஞனுக்குள் இருந்த குழந்தை. எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது..!!!///

கார்த்திகை உணர்ச்சிபூர்வமா இருக்கு!!

thevanmayam said...

ஓட்டைக்குத்திவிடுகிறேன்!!

thevanmayam said...

ஓட்டைக்குத்திவிடுகிறேன்!!

thevanmayam said...

ஓட்டைக்குத்திவிடுகிறேன்!!

பிரபு . எம் said...

என்ன பாஸ் ஊர்ல இல்லாத நேரமா பாத்து இப்படியெல்லாம் திரிய கொளுத்திப் போடுறீங்க.... மதுரைக்கு சீக்கிரமா டிக்கெட் எடுக்க வெச்சுடுவீங்க போலயே!!

ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்தப் பதிவைப் படிக்கையில்... ரொம்ப அழகா ஒரு பதிவர் வட்டம் அமைச்சு கலக்குறீங்க.... ஹலோ என்னையும் கொஞ்சம் சேத்துக்கோங்க பாஸ்

" உழவன் " " Uzhavan " said...

ஆஹா.. சூப்பர்.. கலக்கீட்டிங்கனு சொல்லுங்க.. இதுபோன்ற சந்திப்புகள் இனிமேல் சென்னையில் நடந்தால் யாராவது சொல்லுங்கப்பா..

யாத்ரா said...

நண்பா நிகழ்வை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள், என்றும் வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள் சிலவற்றில், அந்த நாளும் உண்டு. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

Rajeswari said...

இதுபோன்ற கருத்தரங்குகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.வரும் காலங்களில் அவ்வாறான வாய்ப்பு இருந்தால் தெரியப்படுத்தவும்

குமரை நிலாவன் said...

//"ஆனா பெரிய பெரிய ஆள் எல்லாம் இந்தப் பதிவுலகத்துல இருக்காங்க. டாக்டர், இன்ஜினியர் எல்லாம் நாம எழுதுறதைப் படிக்கிறாங்க என்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு."


எல்லோரும் முதலில் மனிதர்கள் .....

பிறகு தான் டாக்டர், இன்ஜினியர் எல்லாம் .....

மனிதர்கள் எழுதுவதை மனிதர்கள் படிப்பது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை ....//

பகிர்ந்ததிற்கு நன்றி நண்பா
இப்படி சந்தோசமான
நிறைய சந்திப்புகள் நடக்க வாழ்த்துக்கள்

சொல்லரசன் said...

இரண்டு நாள் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

அ.மு.செய்யது said...

கூடல் சங்கமம்

இவ்ளோ நடந்துர்க்கா நாட்டிலே...தெரியாம போச்சே.

அடுத்த முறை மறக்காம எங்களையும் கூப்பிடுங்க அண்ணே.

( பகிர்வுக்கு நன்றி கார்த்திக் )

ச.முத்துவேல் said...

முதலில் நன்றி கார்த்திகைப்பாண்டியன்
உங்களையெல்லாம் சந்தித்தது மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான விசயம்.

/மனிதர் மேடைப்பாடகராம்/
ஹையோ! இந்த பிட்டை யாரு போட்டுவிட்டது.இது உண்மையில்லை கார்த்திகை.

தலைப்பு பொருத்தம்.2 விதத்திலும் அர்த்தம்.

/"எங்களை அசிங்கப்படுத்தாதீங்க நண்பா.. நீங்க ஒரு படைப்பாளி. கவிஞர். இதை விட என்ன பெரிய தகுதி வேண்டும்?"/

இதெல்லாம் மப்புல மனச திறந்திடுற விசயம்.ஒரு படைப்பாளியா, கவிஞனா நான் இன்னும் உயர்த்துக்குப்போகலை என்கிற சாதாரணத்தன்மைன்னும் ஒரு அர்த்தம் வச்சு பேசினேன்.என்னைப் பின்தொடர்பவர்களில் நிறைய தேர்ந்த படைப்பாளிகள் இருப்பதும் அர்த்தம்.அதேமாதிரி நன்றி சொன்னதும் தேடிவந்து சந்தித்த அன்புக்காகவும் சேர்த்து.

இசை ,வெய்யில் நிறையக் கவர்ந்துவிட்டார்கள். இசை எனக்குக் கொடுத்த முத்தம்(ங்கள்?),இன்னும் இனித்துக்கொண்டேயிருக்கிறது.

பதிவுலகம்தான் எத்தனை அற்புதமான நண்பர்களைக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை மிக இனிக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு பாராட்டுகள் நண்பா... எனக்குள் ஒரு வருத்தம் நானும் இல்லையே என்று....

"அகநாழிகை" said...

கார்த்தி,
நேற்றுதான் (30.6.09) வந்தேன். வரும்போதே முத்துவேலிடமும், யாத்ராவிடமும் பேசினேன். மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் இந்நிகழ்வில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி.
அருமையான தொகுப்பு.
பகிர்விற்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.முத்துராமலிங்கம் said...

மகிழ்ச்சியான விசயம்.
பகிர்வு பெரு மகிழ்ச்சியளிக்கின்றது.
அடுத்ததை ஏதிர்பார்த்து...

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.

ராம்.CM said...

நல்ல பகிர்வு. வாழ்த்துகள். என்னாச்சு? என் சிறுகதை போட்டிக்கான பதிவை படிக்கவில்லையா?.கருத்துகளை காணோம்.

Rajeswari said...

நான் நேற்று இந்த பதிவிற்கு போட்ட கமெண்ட் காணோமே...என்ன இது???

ஒண்ணும் புரியலியே..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

டங்கு டிங்கு டு said...

உங்கள் பதிவை படித்தேன் நண்பா! ஸ்டாருடன் ஒரு நாள் எனும் ரேன்சுக்கு நீங்கள் எழுதியிருந்தது உணர்வுப்பூர்வமாக இருந்தது. நிறைய கூச்சமாகவும் கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. ஒரு திருத்தம் என் கவிதைத் தொகுப்பின் பெயர் ”உறுமீன்களற்ற நதி”. - இசை

டங்கு டிங்கு டு said...

உங்கள் பதிவை படித்தேன் நண்பா! ஸ்டாருடன் ஒரு நாள் எனும் ரேன்சுக்கு நீங்கள் எழுதியிருந்தது உணர்வுப்பூர்வமாக இருந்தது. நிறைய கூச்சமாகவும் கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. ஒரு திருத்தம் என் கவிதைத் தொகுப்பின் பெயர் ”உறுமீன்களற்ற நதி”. - இசை

மாதேவி said...

"தமிழச்சி தங்கபாண்டியனின் "வனப்பேச்சி" பற்றி அருமையாகப் பேசினார் யவனிகா ஸ்ரீராம்".

"நரன் - இலக்கிய உலகில் வளர்ந்து வரும் கவிஞர்".

"இசையின் உறுமீன்கள்... யாத்ரா வாசித்துக் காட்டினார்". இருவருமே கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவர்கள்".

தகவல்களுக்கு நன்றி.