"நாமளே எவ்வளவு நேரம் தான்ப்பா பேசுறது... பொண்ணும் பையனும் கொஞ்ச நேரம் தனியாப் பேசட்டும்.. அதுதானே முக்கியம்.." கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். அவனும் அவளும் ஒரு அறையில் தனியாக விடப்பட்டார்கள்.
அவன் அவளைப் பார்த்தான். ஒல்லியாகச் சின்னப் பெண்ணாக இருந்தாள். பட்டுச் சேலை மட்டுமே அவளைக் கொஞ்சம் பெரிய ஆளாக காட்டியது. கூரான நாசி. அழகான கண்கள். உதடுகள் மெல்லிதாக துடித்துக் கொண்டு இருந்தன. சின்னதொரு பயமாக இருக்கக் கூடும். அவனுக்கும் வயிற்றை எதோ பண்ணியது. இது போல பெண்ணோடு பேசுவது அவனுக்கும் முதல் தடவை. தயங்கியவனாக அவள் எதிரே அமர்ந்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு பிடித்த அரைக்கை சட்டை, ஜீன்ஸ் அணிந்து இருந்தான். நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். அவன் பேரழகன் இல்லை என்றபோதும் பார்க்க கம்பீரமாக இருந்தான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
"நீங்க என்ன படிச்சு இருக்கீங்க, குடும்பம் எல்லாம் பத்தி தரகர் சொன்னாரு... என்னப் பத்தியும் உங்க வீட்ல எல்லாரும் சொல்லி இருப்பாங்க.. உங்களுக்கு எதுவும் கேட்கனும்னா கேளுங்க.." அவன் பேச்சை ஆரம்பித்தான்.
"உங்களுக்கு வீடு, நிலம் ஏதாவது இருக்கா?" அவள் மெதுவாக கேட்டாள்.
"இல்லைங்க.. என்னோடது ஒரு பக்கா மிடில் கிளாஸ் பேமிலி.. நான் இப்போ வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கோம்.. அப்பாவோட ரிடயர்மெண்ட பொருத்து ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன்.."
"நான் படிச்சு இருக்குறதால வேலைக்கு போகணும்னு விருப்பப்பட்டா போகலாமா?"
"கண்டிப்பா.. எந்தப் பொண்ணும் வேலைக்கு போகணும்னு தான் நான் சொல்லுவேன்.. யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங்கறது தான் என்னோட எண்ணம்.."
"தாங்க்ஸ்.. உங்களுக்கு.. என்ன பிடிச்சிருக்கா?.." தயங்கியவாறே கேட்டாள்.
"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைங்க.. நிஜமாவே உங்களை பிடிச்சு இருக்கு.. குறிப்பா வெளிப்படையா பேசுற உங்க குணம்..இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கா..?"
"ம்ம்ம்..நிறைய..."
அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து பெற்றோரிடம் தன் சம்மதத்தை சொன்னான். அவளுடைய சொந்தக்காரர்கள் உள்ளே சென்று அவள் சம்மதத்தை கேட்டு வந்தார்கள். திருமணத்தை தையில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.
பெண்ணின் சொந்தக்காரர் ஒருவர் ஆரம்பித்தார். "அப்புறம் மத்த விஷயங்கள் எல்லாம் பேசிடுவோம்.. பொண்ணுக்கு என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க.?"
"ஒத்தப் பொண்ணு.. உங்களுக்கு என்ன விருப்பமோ செய்ங்க.."அவனுடைய அம்மா சொன்னார்.
"அப்படி இல்லீங்க.. நீங்க என்ன நினைக்குரீங்கன்னு சொன்னாதான் நல்லா இருக்கும்.."
"ஒரு நாப்பது பவுன் பொண்ணுக்கு போடுங்க.. பையனுக்கு அஞ்சு பவுன்"
'இது ரொம்ப ஜாஸ்திங்க.. இன்னைக்கு தங்கம் விக்குற விலை என்ன? நாங்க இருபது பவுன் போடலாம்னு இருக்கோம்."
"இது ரொம்பக் குறைச்சல்.. என் பையன் படிச்ச படிப்புக்கு ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க.."
பேரம் வளர்ந்து கொண்டே போய் கடைசியில் பொண்ணுக்கு முப்பது பவுனும் பையனுக்கு ஐந்து பவுன் என்றும் முடிவானது. அப்புறம் கல்யாண செலவு பற்றிய பேச்சு ஆரம்பித்தது. பையனின் அம்மா கல்யாண செலவில் ஆளுக்கு பாதி என்றார். பெண்ணின் அப்பாவோ அம்பதாயிரம் மட்டுமே தன்னால் தர முடியும் என்றார். அதை வைத்து ஒண்ணுமே செய்ய முடியாது என்று வாதிடத் தொடங்கினர் பையன் வீட்டுக்காரர்கள். பேச்சு வளர்ந்து கொண்டே போனது.
"உங்க பையனுக்கு என்ன கவர்மென்ட் உத்தியோகமா.. ரொம்ப ஓவரா பேசாதீங்க.. எங்க பொண்ணு முகத்துக்காக பாக்குறோம்.." கடைசியாக வாய் விட்டது ஒரு பைத்தியக் கிழம்.
பையனின் அம்மா முகம் சிவந்து போனது. "நீங்க இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் உங்க பொண்ணை கட்டணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல.. வாடா போகலாம்.."
இரு வீட்டாரும் அடித்துக் கொண்டதில் கடைசியில் அவர்களின் ஆசை கருகிப் போனது. அந்தப் பெண் அவனை பாவமாக பார்த்தாள். ஏதும் செய்ய இயலாதவனாக அவன் நடக்கத் தொடங்கினான்.
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
40 comments:
me the first
mee secondu
இதுல சொந்த அனுபவம் எத்தனை % புனைவு எத்தனை %?
கதை நல்லாருக்கு ஆனா முடிவுதான்......
அவனும் அவளும் ஒக்கே...
இங்கே எதுக்கு மாட்டு தாவணி வந்துச்சு....
மாட்டுத்தாவணி.. மாடுகளை விலை பேசும் சந்தை தலைவரே..
//"நாமளே எவ்வளவு நேரம் தான்ப்பா பேசுறது... பொண்ணும் பையனும் கொஞ்ச நேரம் தனியாப் பேசட்டும்.. அதுதானே முக்கியம்.." கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். அவனும் அவளும் ஒரு அறையில் தனியாக விடப்பட்டார்கள்//
குளு குளுன்னு ஆரம்பிச்சு
கடைசில பிரிச்சு விட்டுடீங்களே தல...
:(
அவலங்களை அச்சில் ஏத்தியிருக்கீங்க..இது இன்றும் தொடர்வது தான் கவலை....
இது படித்த இளைஞர்கள் பெற்றோரை எதிர்க்க முடியாமல் மெளனம் சாதிப்பதா இல்லை எதிர்ப்பார்பதால் மெளனம் பேசுகிறார்களா?
கதை யாதார்த்தம்...
பையனும் பொண்ணும் பேசிக்கொள்ளும்
உரையாடல்கள் அருமை...
நம்ம ஹீரோ ,ஏன் பேரம் பேச வேண்டாம்னு சொல்ல முடியாதவரா இருக்காரு ? ?? வந்த வரை லாபம் னு நினைச்சு பேசலை யா?
பேசாம. பாலாக்கிட்ட சேர்ந்துரலாம்..
கடைசி வரைக்கும் ஜோடிகளை சேரவே விடலையே அண்ணே..!
ஹும்.. நல்லாருங்க.
நல்லா சொல்லீருக்கீங்க..!
யதார்த்தம் கார்த்தி..
ஆனாலும் இது வழக்கமான படைப்புதானே..
கொஞ்சம் தீவிரத்தினை சேர்த்திருக்கலாம்..
யதார்த்ததை மீறிய சில முடிவுகள் புதிய சிந்தனைகளை உருவாக்கும்.
பான்டியரே மனசதேத்திங்க,
அடுத்தமுறையாவது பெரியவங்க பேசிமுடிச்சபின்னால் நீங்க பேசுங்க
நன்றாக இருக்கிறது அண்ணா
இது கதை தானா..?
இதேபோல் நேரடியாகவே நான் பார்த்து உள்ளேன்..
Kaarthi,
Ur touch is little bit missing in tis1..
But quite interesting..
எவ்வளவு கேடுகெட்ட குடும்பம் ? சீதனத்த இவ்வளவு குறைச்சுக் குடுக்க யோசிக்கிறாங்க? சே சே? முதல்லயே வடிவா விசாரிச்சில்ல போயிருக்கணும்...;)
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
இது கதையாக்கப்பட்ட உண்மையா
நல்லாருக்கு.. தீப்பெட்டி... பொன்னியின் செல்வன் தீவிரத்தை சேர்க்காமல் விட்டதுதான் தீவிரம். என்ன மாதிரி தீவிரத்தை சேர்க்கலாம் என்று நானும் நீங்களும் சிந்திக்கிறோமல்லவா? அது தான் அவரின் வெற்றி
eannga maatukku la thaavani podureenga?? :o kadha sooper.. aana mudivu thaan :(
Ungalukku Kalyana vayasu aagidiche.. oru vela konja kaatchikal unga life la suthada??
You have been tagged n ma tamil blog
//உங்களுக்கு வீடு, நிலம் ஏதாவது இருக்கா?" அவள் மெதுவாக கேட்டாள். //
இதற்காக அந்த பெண்ணுக்கும், பிரச்சனையின் போது வாயே திறக்காத அந்த ஆணுக்கும் ஆளுக்கு ஒரு குட்டு
கதை இன்னும் முடியலையா வாத்தியாரே?
முடிவு செல்லாது,... எனக்கு சரியாகப்படல
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
இது கதையாக்கப்பட்ட உண்மையா//
ரிப்பீட்டேய்!!
இதுபோல்
முடியாத கதைகள்
ஏராளம்!!
இவ்வளவு பேசிட்டு
வந்த
பையனை
ஒதைக்கணும்!!
அருமையான உரையாடல்கள் அண்ணா....
இவிங்க தொல்லை தாங்க முடியல.
சட்டுபுட்டுன்னு ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்காம ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டு?
அழகா எழுதியிருக்கீங்க கார்த்திக்.
//"உங்க பையனுக்கு என்ன கவர்மென்ட் உத்தியோகமா.. ரொம்ப ஓவரா பேசாதீங்க.. எங்க பொண்ணு முகத்துக்காக பாக்குறோம்.." கடைசியாக வாய் விட்டது ஒரு பைத்தியக் கிழம்//
திருப்புமுனை
கருத்தாழமான கதை நல்லாருக்கு கார்த்திகேய பாண்டியன்
ஆரம்பம் என்னவோ நல்லாதான் இருக்கு. இன்னப்பு கடைசியில இப்படி பண்ணிட்டீய?
சொந்த கதையா ?
இந்த நடப்புகள் ஏராளம். காதலிப்பதாய் நடித்து, கை விட்ட கதைகளும் ஏராளம்
ஏராளம். அருமையாய் தீட்டியிருக்கிறீர்கள்.
யதார்த்தமான கதை.எளிமையான நடை.
வரதட்சணை தனிப்பட்ட விருப்பங்களை தவிடு பொடியாக்கும் என்பதே
மாரல் ஆஃப் தி ஸ்டோரின்ரீங்களா ??
பாண்டியன் அசத்திட்டீங்க!!
மனதின் விருப்பங்களை விட பொருள் மீதான ஆசைகள் எந்த அளவுக்கு நம் மணமுடிச்சுகளில் சிக்கல்களாக உள்ளன. மிக அழகாக சொல்லிட்டீங்க. பாண்டியன்.
அருமை நண்பா.
நல்லா இருக்கு கார்த்திகை பாண்டியன்.
தலைப்பை பார்த்த உடனே, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுல எதோ ரெண்டு பேரு பண்ணுன கில்மாவத்தான் பதிவா போட்டுட்டீங்களோனு நினைச்சேன். ஆனா அருமையா சமூகத்துல நடக்குற அவலத்தை சொல்லிருக்கீங்க நண்பா.
கதை யாதார்த்தமாய் இருக்கு!
எதார்த்தமான நடை, நல்ல கதை... இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது இந்த அவலம்..
அருமை தல !
Post a Comment