August 28, 2009

காற்றில் யாரோ நடக்கிறார்கள்..!!!

வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதியதன் மூலமாக தமிழ் இலக்கியத்தை (என்னைப் போன்ற) சாதாரண மக்களிடமும் கொண்டு போய் சேர்த்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முக்கிய பங்குண்டு. எஸ்ராவினுடைய சிறுகதைகளை விட கட்டுரைகளே என்னை மிகவும் பாதித்து இருக்கின்றன. எளிமையான வார்த்தைகளில் ஆழமான கருத்துகளை யாவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தருவதுதான் அவருடைய சிறப்பு.

இலையின் நுனியில் தேங்கி நிற்கும் பனித்துளியை துல்லியமாகப் படம்பிடிக்கும் புகைப்படக்காரனைப் போல, நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களையும் நடக்கும் நிகழ்வுகளையும் கூர்ந்து அவதானித்து, அவற்றை வித்தியாசமான கோணங்களின் வாசகனின் பார்வைக்கு கொடுப்பதே எஸ்ராவின் உத்தி.

நாம் ஒரு சாலையில் நடக்கிறோம். நம்மைப் பொருத்த வரையில் அது ஒரு சாலை. அவ்வளவுதான். ஆனால்..அந்த சாலை ஆரம்ப காலத்தில் என்னவாக இருந்தது? எத்தனை நூற்றுண்டுகளாக அந்த சாலை இருக்கிறது? இதில் எத்தனை மனிதர்கள் நடந்து போயிருக்கக் கூடும்? இந்த சாலை எந்த ஊர்களை இணைக்கிறது? அந்த ஊர்களின் சரித்திரம் என்னவாக இருக்கக் கூடும்? இது போன்று அடுக்கடுக்காய் பல கேள்விகளை எழுப்பி, நுட்பமான பல விஷயங்களை வார்த்தைகளில் கொண்டு வருபவர் எஸ்ரா.

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - கல்குதிரை, கணையாழி, தினமணி, விகடன், குமுதம், அட்சரம், எஸ்ராவின் வலைத்தளம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள், பார்த்து ரசித்த படங்கள், இசை, புத்தக அறிமுகங்கள் என்று பல தளங்கில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை ஐந்து பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள்.

இலக்கியம்
************

எஸ்ராவின் கதாவிலாசத்தில் மௌனியின் அழியாச்சுடர் பற்றி படித்த நாள் முதலாக அவருடைய புத்தகங்களைத் தேடி வருகிறேன். சென்ற வருடம் கோவை புத்தகத் திருவிழாவில் ஒரு மனிதர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் மிகக் காட்டமானவை. "மௌனியின் எழுத்துக்கள் யாருக்கும் புரியாதவை. அவரெல்லாம் எழுத்தாளரே இல்லை.." இது போன்ற ரீதியில் இருந்தன அவருடைய வார்த்தைகள்.

வெறும் இருபது கதைகளே எழுதினாலும் இன்று வரை விவாதிக்கப்பட்டும், இன்றைய சூழ்நிலைக்கு பொருந்தும் வகையில் எழுதி இருக்கக் கூடிய ஒரு மனிதரைப் பற்றிய மதிப்பீடு இப்படியாகவா இருக்க முடியும்? "மறந்து போன மௌனி" என்னும் கட்டுரையில் இந்தக் கருத்துக்களைத்தான் எஸ்ரா முன்வைக்கிறார். புதுமைப்பித்தனைப் போல ஏன் நாம் மௌனியைக் கொண்டாடுவதில்லை? 2007 ஆம் வருடம் மௌனியின் நூற்றாண்டு விழா என்பதை இங்கே யாருமே அறிந்திருக்காத சோகத்தை நாம் அறிய நேரும்போது மனம் கனக்கிறது.

"நகுலன் இல்லாத பொழுது" என்னும் கட்டுரை நகுலனின் மரணத்தைப் பற்றியும், இல்லாமல் இருந்தும் அவருடைய எழுத்துக்களால் தொடர்ந்து இருக்கும் நிலை பற்றியும் விரிவாகப் பேசுகிறது. சாவைப் பற்றிய எழுதிய தஸ்த்யாவெஸ்கி போல தமிழில் எழுதியுள்ள முக்கிய எழுத்தாளரான சம்பத்தைப் பற்றிப் பேசுகிறது இன்னொரு கட்டுரை.

"சிப்பியின் வயிற்றில் முத்து" - தூத்துக்குடியில் இருக்கும் மீனவ மக்களின் வாழ்வை விரிவாக பதிவு செய்யும் நாவல். தென்மாவட்ட மக்களின் வாழ்வை மிகவும் அழகாக படம்பிடித்துக் காட்டும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் "போதி சத்வ மைத்ரேய" என்னும் வங்காள எழுத்தாளர் என்பது ஆச்சரியம் தரும் விஷயம். "எரியும் பனிக்காடு" என்னும் புத்தகம் தேயிலை தோட்டக் கூலிகளின் வாழ்வில் இருக்கும் அவலங்களை ஆவணப் படுத்துகிறது. இதை எழுதி இருப்பவர் டேனியல் என்னும் ஆங்கில எழுத்தாளர். நம் தமிழ் வாழ்க்கையை நம்மை விட அதிக கவனத்துடன் இவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஹோமரின் இலியட் என்னும் இதிகாசம் பற்றி படிக்கும்போது மகாபாரதத்தின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. ஆபாசம் என்று சொல்லப்படும் விஷயங்கள் கூட எப்படி இலக்கியம் ஆகின்றன என்பதை ஜேம்ஸ் ஜாய்சின் கடிதங்கள் பற்றி படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். ஆக மொத்தத்தில் வேதாளத்தை தூக்கி சுமக்கும் விக்ரமன் போல இலக்கியத்தை சுமந்தாலும் அது ஒரு சுகமான சுமையாகவே எழுத்தாளனுக்கு இருந்து வருவதை குறிப்பிடுகிறார் எஸ்ரா.

(தொடருவேன்)



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

30 comments:

அத்திரி said...

உள்ளேன் நண்பா

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க!

வினோத் கெளதம் said...

//"மௌனியின் எழுத்துக்கள் யாருக்கும் புரியாதவை. அவரெல்லாம் எழுத்தாளரே இல்லை.."//

கார்த்தி

கிட்டதட்ட என்னோட கருத்தும் அதுவே புரியாத எழுத்துக்கள் யாருக்கும் புண்ணியம் இல்லை என்னை மாதிரி சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவில் எழுத்து இருந்தால் தான் எல்லோரிடமும் போய் சேரும்..

kanagu said...

எனக்கும் எஸ்ராவின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் :))

மிகவும் எளிமையாக, நடைமுறை வாழ்க்கையில் இருந்து அவர் தரும் சம்பவங்கள் மிகவும் எளிதாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் இருக்கும்..

இப்பொழுது அவரது எழுத்துக்கள் ஆ.விகடனில் வெளிவருகின்றன.. படித்தீர்களா???

துபாய் ராஜா said...

//வேதாளத்தை தூக்கி சுமக்கும் விக்ரமன் போல இலக்கியத்தை சுமந்தாலும் அது ஒரு சுகமான சுமையாகவே எழுத்தாளனுக்கு இருந்து வருவதை குறிப்பிடுகிறார் எஸ்ரா.//

எஸ்.ராவின் கருத்து முற்றிலும் உண்மை.

நல்லதொரு பகிர்வு.

பீர் | Peer said...

கார்த்திக், மறுபடியும் சொல்றேன். நீங்க எங்கேயோ போய்கிட்டிருக்கீங்க.

வாழ்த்துக்கள்.

(கார்த்திக் வேண்டாம் இனி கா.பா என்றே வைத்துக்கொள்வோம்.)

தேவன் மாயம் said...

1940 ம் ஆண்டுகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் கால் பதித்த டேனியல் அங்குள்ள நிலவிய சகிக்க முடியாத மனிததன்மையற்ற சூழலைக்கண்டு அதை எதிர்த்துக் குரல் தந்ததோடு தென்னிந்திய தோட்ட உத்தியோகிஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக துணை நின்றிருக்கிறார். ///

அந்தோன் சேகவ்-போல் இவரும் ஒரு மருத்துவர் என்பதில் பெருமையே. தோழர் சேகுவெராவையும் சேர்த்துக் கொள்வோம்-- நம் தோள்களில் இவர்களையும் சுமப்போம்.

தேவன் மாயம் said...

எரியும் பனிக்காடு உடுமலை.காமில் ரூ.150 க்குக் கிடைக்கிறது!!!http://www.udumalai.com/prd_details.php?prd_id=4415

தேவன் மாயம் said...

வோட்டும் போட்டாச்சு கா.பா !!

ஆ.ஞானசேகரன் said...

அருமையான பகிர்வு, நல்ல எழுத்து நடை வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்

முரளிகண்ணன் said...

வணக்கம் காபா

மேவி... said...

அந்த ஹோமரின் இலியட் வந்து கிறிஸ்து பிறப்புக்கு முன் நடைபெறும் இதிகாச கதை ; இதே போன்று ஹோமர் எழுதியே ODYSSEY படிக்க நல்ல இருக்கும் ......

மேவி... said...

மஹாபாரத்தின் எல்லா புனை கதைகளையும் சேர்ந்து படித்தால் ; ஒருவனின் வாழ்க்கை நேரம் பிடிக்கும். அவ்வளவு இருக்கிறதாம்

மேவி... said...

ROMAN PALAIYA KALATHIL PALA SIRANTHA NOVELGAL ELUTHAPATTU IRUKKU KARTHIGAI PANDIAN.... ATHAIELLAM NEENGA AVASIYAM PADIKKA VENDUM

Raju said...

இந்த பதிவு எனக்கு பல கோணங்களாக தெரிகிறது கா.பா...!

* ஒரு அல்லது பல உள் மற்றும் வெளிக்குத்துகளாக,

* ஒரு இலக்கியப் பதிவாக.

* ஒரு நூல் அறிமுகமாக.

இப்படி பல....!
:)

ஈரோடு கதிர் said...

அருமையான இடுகை பாண்டியன்

வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//kanagu said...
இப்பொழுது அவரது எழுத்துக்கள் ஆ.விகடனில் வெளிவருகின்றன.. படித்தீர்களா???//

நண்பா.. நான் எஸ்ராவின் எழுத்துக்களை எப்போதும் தவற விடுவதில்லை.. "சிறிது வெளிச்சம்" படித்து வருகிறேன்..

குடந்தை அன்புமணி said...

நல்ல தொடர் இடுகை நண்பா. தொடருங்கள். தொடர்ந்து புத்தகங்கள் பற்றி எழுதிவாருங்கள். இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.

வழிப்போக்கன் said...

பகிர்வுக்கு நன்றி

Anbu said...

நல்ல பகிர்வு அண்ணா..

மணிஜி said...

நாளை நேரில் சந்திக்கும்போதும் பாராட்டுவேன்..இப்போதும்.வாழ்த்துக்கள்

மேவி... said...

புதிய பதிப்பாய் வர போகிற உப பாண்டவம் பற்றி எழுதுகளேன் ...

Karthik said...

Superb post..waiting for the next one! :)

Sanjai Gandhi said...

எஸ்ராவின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் தமிழர் உணவுகள் மற்றும் சமையறைப் பொருட்கள் பற்றி சுவையாக எழுதி இருந்தார். ரசித்துப் படித்தேன். தகவல் சார்ந்த கட்டுரையும் கூட.

thiyaa said...

நல்லைத்தான் இருக்குது

நையாண்டி நைனா said...

present sir.

வால்பையன் said...

நல்ல பகிர்வு!
எல்லா புத்தகமும் படிச்சாச்சா!?

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை நண்பா.

வாசிப்பனுபவம் எழுத்தில் மிளிர்கிறது.

ஹேமா said...

கார்த்தி,எழுத்தில் மிக மிக ஆற்றல் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

சார் வணக்கம்...

எஸ்ராவின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும் என்றாலும் இந்த அளவுக்கு நான் ரசித்ததில்லை...அவருடைய சிறுகதைகளே நான் படித்துள்ளேன் (விகடன் வழியாக).

உங்களுடைய இந்த பதிவில் அவரை எந்த அளவுக்கு பின்தொடர்கிறீர் என்பது தெரிகிறது..உங்கள் எழுத்துக்களிலும் இயல்பாகவே அதன் பாதிப்பு தெரிகிறது...

நல்ல பயனுள்ள இடுகை அன்பரே...