"இன்னும் பத்தே நிமிஷம்தான்.. புது வருஷம் பொறக்கப் போகுது.. அதை சந்தோஷமாக் கொண்டாடத்தான் நாம எல்லோரும் இங்கே ஒண்ணு கூடியிருக்கோம்.." நேரலையில் எப்.எம் தொகுப்பாளினி உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தாள்.
அந்த குடிசை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது. குழந்தைகள் தூங்கி விட்டிருந்தன. அவர்கள் இருவரும் சோகமாக உட்கார்ந்து இருந்தார்கள். கசப்பான அமைதி மட்டுமே அங்கே இருந்தது. வெகு நேரம் கழித்து அவள் பேசினாள்.
"ஏங்க.. வேற வழியே இல்லையா..?" கேட்கும்போதே அவள் குரல் கமறியது.
அவன் வெறித்த கண்களோடு அவளை ஏறிட்டான்.
"என்னை என்ன பண்ண சொல்ற.. எல்லார்கிட்டயும் கேட்டுப் பார்த்துட்டேன்.. முடியல.. நாளைக்கு காலையில கடன்காரன் வந்து கழுத்தில கத்தி வச்சு மிரட்டுவான்.. அப்படி ஊரு முழுக்க அசிங்கப்பட்டு... தேவையா? எப்படி இருந்த நம்ம குடும்பம்.. இன்னைக்கு.." உடைந்தவனாக அழத் தொடங்கினான்.
"என்னங்க.. வேணாங்க.." அவள் பதறிப்போனவளாக அவனருகே வந்தாள்.
சமாளித்துக் கொண்டு சொன்னான். "போ.. போய் நான் சொன்ன மாதிரி.. சாப்பாட்டுல விஷத்த கலந்து எடுத்துக்கிட்டு வா.. இன்னைக்கோட எல்லாம் முடிஞ்சது.."
அவள் தீர்மானத்துடன் எழுந்து போனாள். அவன் குழந்தைகளை எழுப்பத் தொடங்கினான்.
"இன்னும் எட்டே நிமிஷம்.."
"ஏஞ்சல் டிரெஸ்ல உண்மையான தேவதை தரையிறங்கி வந்த மாதிரியே இருக்கடி செல்லம்.." செல்லமாக கொஞ்சியபடி குழந்தையின் கன்னத்தில் ஆழமாக முத்தமிட்டாள்.
"மம்மி.. ச்சீ.." அது கன்னத்தை துடைத்துக் கொண்டு சிரித்தது.
"என்ன, பாப்பா ரெடி ஆகிட்டாளா?" - அவன் மாடியேறி வந்தவாறே கேட்டான்.
"ஓ.. ஆகிட்டேன் டாடி.. "
"வாவ்.... அம்முக்குட்டி இன்னைக்கு சூப்பரா இருக்காளே.. சொல்லுங்க.. உங்க பர்த்டேக்கு என்ன கிப்ட் வேணும்..?"
பிள்ளை நிறைய யோசித்து விட்டு சொன்னது.
"எனக்கு கூட விளையாட ஒரு குட்டி பாப்பா வேணும்.."
அவள் அவனை முறைத்தாள். அவன் பயந்தவன் போல நடித்தான்.
"ஏய்.. அப்படி பார்க்காத.. நான் ஒண்ணும் பிள்ளைக்கு சொல்லித் தரல.. ஆனாலும் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு..ஹி ஹி"
"கருமம்.. கருமம்.. உங்கள அப்புறம் பேசிக்கிறேன்.. கேக் வெட்ட டைம் ஆகிடுச்சு.. வாங்க கீழ போவோம்.."
"இன்னும் ஆறே நிமிஷம்.."
நகரின் ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல். அவள் தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக களைந்து கொண்டிருந்தாள். அவன் பெருகி வழியும் காமத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மலராத குவிந்த தாமரை மொட்டுகள் போன்றிருந்த அவள் மார்புகளைக் கண்டு அவன் கண்கள் விரிந்தன. உணர்சிகள் உந்தித் தள்ள பசியுடன் அவளை நெருங்கினான். அவள் வெட்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"என்னடா.. "
"நீ ரொம்ப அழகுடி செல்லம்.."
"ஐயோடா.. இது வேறவா.."
அவன் அவளை அணைக்க முற்பட்டான். அவள் நழுவி ஓடினாள்.
"என்னடா சொன்னேன்.. புது வருசத்துக்கு ட்ரீட்னு என்னையவே கேட்ட... சரின்னுதான சொன்னேன்.. இன்னும் கொஞ்ச நேரம்.. நான் முழுசா உனக்குத்தாண்டா.. பொறுமை.. பொறுமை.."
அவன் ஆர்வத்தோடு கடிகாரத்தை பார்க்கத் தொடங்கினான். அதில் முட்கள் வெகு நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தன.
"இன்னும் நாலு நிமிஷம்.."
ஏதோ ஒரு மலைவாசஸ்தலம். மர பெஞ்சின் மீது அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மணிவிழா கொண்டாடப் போகிறவர்கள்.
காலம் போன காலத்தில் எங்களுக்கு எதுக்குப்பா என்று மறுத்தும் கேளாமல் பிள்ளைகள் வற்புறுத்திய காரணத்தால் புது வருஷத்தைக் கொண்டாட இங்கே வந்து இருப்பவர்கள்.
"இங்கே இருந்து பார்க்க ஊரு ரொம்ப அழகா இருக்கு.. இல்லைங்க..?"
"ஆங்.. ஆமா.. ஆமா.."
அவர் ஞாபகமாகத் தன் கோட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பார்த்துக் கொண்டார். மோதிரம் பத்திரமாக இருந்தது.
திடீரென இதை எடுத்து நீட்டினால் அவளுக்கு எப்படி இருக்கும்? அப்படியே சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் விடுவாள்.. நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. பனிரெண்டு அடிக்க காத்திருக்கத் தொடங்கினார்.
"இன்னும் ரெண்டே நிமிஷம்.."
மாடியில் படுத்துக் கிடந்தவன் தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன். திடுக்கிட்டேன். எனக்கு வெகு அருகே அவர் நின்றிருந்தார்.
வயதான மனிதர். தீர்க்கமான கருணை நிரம்பிய கண்கள். நீளமான வெளுத்த தாடியும் கருப்பு அங்கியும் என அவருடைய தோற்றம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. யார் இவர்? என் வீட்டு மாடிக்கு இவர் எப்படி வந்தார்? இவருக்கு என்ன வேண்டும்? எத்தனையோ கேள்விகளை கேட்க நினைத்தும் வாய் எழவில்லை.
அவர் கைகளில் என்ன? சின்னதாக ஒரு உருண்டையைக் கையில் வைத்து இருந்தார். அது ரேடியம் கலரில் மினுமினுத்தது. அதை வைத்து என்ன பண்ணப் போகிறார்?
"பைவ் செகண்ட்ஸ்.."
குழந்தைகள் சாப்பிட்டு விட்டு மீண்டும் தூங்கி இருந்தன. அவள் கலங்கிய கண்களுடன் அவனருகே போய் படுத்துக் கொண்டாள்.
"போர்.."
"ஹாப்பி பர்த்டே டூ யு.." சுத்தி இருந்தவர்கள் பாட குழந்தை வெகு உற்சாகமாக கேக்கை வெட்டத் துவங்கியது.
"த்ரீ.."
உலகின் அதிஉன்னத ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலோடு அவன் அவள் மீது பரவினான்.
"டூ.."
அவர் மோதிரத்தை எடுத்து நீட்டினார்.. "ஐ லவ் யு.."
"ஒன்.."
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் இருந்த கருணை மறைந்து ஆவேசம் ததும்பியது. வெறி கொண்டவராக அந்த உருண்டையை வீசி எறிந்தார்.
"ஹாப்பி 2012.."
எங்கும் இருள் சூழ்ந்தது.

36 comments:
me the first
வாழ்க்கை...
கார்த்தி...சான்சே இல்லங்க...பின்னிட்டிங்க... உங்க எழுத்தும் ரொம்ப அருமை...இந்த கதை ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தா சூப்பர் டுப்பர் ஹிட் ஆகியிருக்குமோ...(நித்தி மேட்டர் மாதிரி :-) )
\\தீர்க்கமான கருணை நிரம்பிய கண்கள்.யார் இவர்? என் வீட்டு மாடிக்கு இவர் எப்படி வந்தார்? இவருக்கு என்ன வேண்டும்? எத்தனையோ கேள்விகளை கேட்க நினைத்தும் வாய் எழவில்லை.\\
அது நித்யானந்தர் பாஸ்...!
உங்கள் கதையின் முடிவு கண்டிப்பாக கதையில் வரும் அந்த ஏழை குடும்பத்திற்கு பிடித்திருக்கும் :-))
நல்ல முயற்சி நண்பா.
superb
// Anbu said...
me the first//
இது மட்டும் சொன்னாப் போதுமா அன்பு? பாவி.. கதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல..
// பொன்.பாரதிராஜா said...
வாழ்க்கை...//
எலேய்.. உனக்கு என்ன புரிஞ்சதுன்னு வாழ்க்கைன்னு எழுதி இருக்க?
//சம்பத் said...
கார்த்தி...சான்சே இல்லங்க... பின்னிட்டிங்க... உங்க எழுத்தும் ரொம்ப அருமை...இந்த கதை ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தா சூப்பர் டுப்பர் ஹிட் ஆகியிருக்குமோ...(நித்தி மேட்டர் மாதிரி :-) )//
டைமிங் மிஸ் ஆகிப்போச்சு நண்பா..:-))
//சம்பத் said...
உங்கள் கதையின் முடிவு கண்டிப்பாக கதையில் வரும் அந்த ஏழை குடும்பத்திற்கு பிடித்திருக்கும் :-))//
அதே அதே.. :-)))))
//♠ ராஜு ♠ said...
அது நித்யானந்தர் பாஸ்...!//
காமாலைக்காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தம்பி..:-))))
//☀நான் ஆதவன்☀ said...
நல்ல முயற்சி நண்பா.//
நன்றி தல.. எல்லாம் உங்களைப் பார்த்து செய்றதுதான்..
// வானம்பாடிகள் said...
superb//
thanks bala sir..
வித்யாசமா கதை....
நிகழ்வு ஒன்று ஆயினும் வேறுவேறான சூழ்நிலைகள்....
//வெறி கொண்டவராக அந்த உருண்டையை வீசி எறிந்தார்.
"ஹாப்பி 2012.."
எங்கும் இருள் சூழ்ந்தது.//
இது எனக்கு புரியல....
நல்லா narrate பண்ணி இருக்கீங்க அண்ணே....
nalla irukku. innum tempo yethi irukkalam. konjam lag aaguthu anne...
narration nalla irukku...
(neenga 2012 padam parthutingannu theriyuthu)
கதை எழுதப்பட்ட சம்பவங்கள் அருமை, அனைத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்த விதம் புடிச்சிருக்கு, தொடருங்க
கதை நடை அருமை கார்த்தி. தொய்வில்லாமல் சென்றது.
அப்போ, 2012 பிறக்கும் போது END CARD தானா, நிறைய படம் பார்க்காதீங்கன்னா கேட்டா தானே !
\\\கார்த்திகைப் பாண்டியன் said...
// Anbu said...
me the first//
இது மட்டும் சொன்னாப் போதுமா அன்பு? பாவி.. கதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல..\\\
மன்னிக்கனும் அண்ணா...
காலையில் கொஞ்சம் வேலை..படிக்காமலே போய்விட்டேன்.
இப்போதான் படித்தேன்.நல்லா இருக்கு அண்ணே..
kaarthigai pandiyare nalla iruku unga nadai
அருமை.
நன்று... கார்த்தி
2012 ரொம்ப நல்லா இருக்கு நண்பா. கதையாக இருக்கும் வரை.. வாழ்த்துக்கள்.. டைம் இருக்கும் போது இங்கேயும் வாங்க.. http://everythingforhari.blogspot.com/
2013 illa?
நல்ல ஃப்ளோ..
வித்தியாசமா ட்ரை பண்ணிருக்கீங்க..நல்லாவே வந்திருக்கு..nice narration !
nice and best......
அந்த உருண்டை மேட்டர் மட்டும் புர்லயே?
நண்பரே!! சுபா எழுதியா நியான் சொர்க்கம் எனும் கதை தான் நியாபகம் வருகிறது!!! அந்த கதையிலும் இதே போல காதலன் காதலி, கணவன் மனைவி என அனைவரும் புது வருட கொண்டாட்டத்திற்கு தயாராகும் போது பூகம்பம் வரும் இங்கே வெடிகுண்டு போல !!!!
மக்களே.. நிறைய பேரு கடைசி பகுதி புரியலன்னு சொல்லி இருக்கீங்க..
நான் சொல்ல வந்தது..
அந்தப் பெரியவர்தான் கடவுள்.. அவர் கையில் இருப்பது உலக உருண்டை.. மாயன் கலாசாரத்தில் 2012ல உலகம் அழியப் பொகுதுன்னு சொன்னாங்கள்ள.. அத வச்சு கத பண்ணியிருக்கேன்..
//குறை ஒன்றும் இல்லை said...
நண்பரே!! சுபா எழுதியா நியான் சொர்க்கம் எனும் கதை தான் நியாபகம் வருகிறது!!! அந்த கதையிலும் இதே போல காதலன் காதலி, கணவன் மனைவி என அனைவரும் புது வருட கொண்டாட்டத்திற்கு தயாராகும் போது பூகம்பம் வரும் இங்கே வெடிகுண்டு போல !!!!//
சூப்பர்.. அதேதான் நண்பா.. ரொம்ப நாள் முந்தி நானும் படிச்சு இருக்கேன்.. உண்மைய சொல்லனும்னா.. அந்த காதலன் காதலி மேட்டர் அந்த பாதிப்புல எழுதினதுதான்..இந்த கதைக்கு சூட் ஆகும்னு அந்த ஸ்டைல்லதான் எழுதி இருக்கேன்..:-))
பர பர பரன்னு பின்னி எடுத்திருக்கிறீங்க....
செம த்ரில்லிங் கவுண்ட் டவுன்
எளிமையான உரை நடையில், கலக்கியூள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் நண்பரே....
enna ennamo eluthareenga... peria eluthalaraiteega pola... hmm...valthukal thozha...:-)
கார்த்தி...சான்சே இல்லங்க...பின்னிட்ட...எழுத்தும் ரொம்ப அருமை.. ரொம்ப பிடிச்சுருக்கு மச்சி.. நானும் உன் பிரண்டுன்னு சொல்லிகிறதுல்ல ரொம்ப பெருமையா இருக்கு டா ! குடுத்த 10 ரூவாய்க்கு பேசியாச்சு வரட்டா???
vathiyar na......neyabagam erukka....manoj..2008 batch...kongu instru....
story super na... nice naration of story..editing ellam pakka va erukku...y dnt u try documentry ..sir..call me at 9994511545
s.u.p.e.r.b. :)
Rombave nalla irunthathu sir.theriyaatha varaikkum thaan suvaarasiyam ellame. ("vaazhkai") antha eala kudumbatha polave manasu baaramaayiduchu
ரொம்ப நல்லா விறுவிறுப்பா நிகழ்வுகளை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
நல்ல முயற்சி நண்பா
நடை மாற்றம் பிடித்திருந்தது
கதை .... லைட் நாட்
ஸ்லைட் ஷோ மெத்தட்
:)
Post a Comment