March 26, 2010

அங்காடித் தெரு - திரைப்பார்வை..!!!

மதுரையில் பாத்திரங்கள் விற்கப்படும் தெருவில் அருகருகே இருக்கும் பிரபலமான இரண்டு கடைகள். நண்பர் ஒருவருக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக நானும் அவரும் போகிறோம். இரண்டு கடைகளின் வாசல்களிலும் நின்றபடி "உள்ளே வாருங்கள், உள்ளே வாருங்கள்" என்று கூவியபடி இருந்தார்கள் சில பணியாளர்கள். நானும் நண்பரும் ஒரு கடைக்குள் நுழைந்து விட, "என்னடா புடுங்கிக்கிட்டு இருக்கீங்க... இப்படியே வர்றவன் எல்லாம் மத்த கடைக்குப் போனா நம்ம பொழப்பு வெளங்கின மாதிரிதான்..." மற்ற கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த மனிதருக்கு காரசாரமாக வசவு விழுவது எங்கள் காதில் விழுந்தது. லேசாக மனது வலித்தாலும் அதை அத்தோடு மறந்து போனேன். நம்மைப் பொறுத்தவரை அது வாழ்வில் கடந்து போகும் மற்றுமொரு சம்பவம். ஆனால் அதை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு?

நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களின் பார்த்திராத பக்கங்களைத் துணிந்து பதிவு செய்திருக்கிறார் வசந்தபாலன். கடைகளின் வாசலை நின்றபடியே நம்மை வரவேற்கும், சிரித்துப் பேசி பொருட்களை விற்கும் பணியாளர்களை மட்டுமே நாம் அறிவோம். அந்தப் பணியில் அவர்கள் சந்திக்கும் துயரங்கள் எத்தனை.. எப்படி எப்படி எல்லாமோ பாடுபடுவதை மறைத்துக் கொண்டு அவர்கள் நமக்கு சிரிப்பை மட்டுமே தருகிறார்கள்.. நமக்கு வேண்டியதை செய்து தருகிறார்கள்.. ஆனால் அவர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள் என்ன.. எதைப்பற்றியும் இதுவரை நான் யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது யோசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். இப்படி ஒரு களத்தை தெரிவு செய்து, எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் இயக்கி இருக்கும் வசந்தபாலனுக்கும், படத்தை தயாரித்து இருக்கும் ஐங்கரனுக்கும் ஹாட்ஸ் ஆப்.



சென்னையின் புகழ் பெற்ற ரங்கநாதன் தெருவில் இருக்கும் பல்பொருள் அங்காடிக் கடை. (அண்ணாச்சி, சினேகா, போலிஸ் பிரச்சினைகள் என்று பல விஷயங்களை வைத்து சரவணா ஸ்டோர்ஸ் என்றுதான் தீர்மானம் செய்ய வேண்டி இருக்கிறது) வறுமையின் காரணமாக உறவுகளைப் பிரிந்து அங்கே வந்து வேலைக்கு சேருகிறான் நாயகன் ஜோதிலிங்கம். அங்கே கூட வேலை பார்க்கும் பெண்ணான கனியோடு காதல் ஏற்படுகிறது. பணியாளர்கள் அனைவரையும் கொடுமை செய்யும் மேலாளருடன் ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் வேலை போகிறது. தங்களுக்கென புதிதாக ஒரு வாழ்க்கையை இருவரும் அமைத்துக் கொள்ள முற்படும் நேரத்தில் எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். இறுதியில் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிக்கிறது "அங்காடித் தெரு".

நாயகன் மகேஷுக்கு இது முதல் படம் என்பதை சத்தியமாக யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பக்கத்து வீட்டுப் பையன் போல மனதில் ஒட்டிக் கொள்கிறார். அத்தோடு அருமையாக நடித்து இருக்கிறார். ரொம்ப மிகையான நடிப்பு என்றில்லாமல் பாத்திரத்தை உள்வாங்கி செய்துள்ளார். தனது வேலை போய் விடுமோ என்ற பயத்தில் மேலாளரின் காலை கட்டிக் கொண்டு அழும் காட்சி.. ஒரு சோறு பதம். உதடுகளைப் பிதுக்கியபடி, கண்களில் வழிந்தோடும் மென்சோகத்தோடு "நெசமாத்தான் சொல்றியா" என்று கற்றது தமிழிலேயே உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் அஞ்சலி. அடுத்ததாக அவர் தவறான படங்களை தெரிவு செய்தபோது ரொம்பவே நொந்து கொண்டிருக்கிறேன்.. இத்தனை அருமையான நடிகை வீணாகப் போகிறாரே என்று. அதை இந்தப் படத்தில் நிவர்த்தி செய்து விட்டார். அவர் வாழ்க்கைக்கும் இந்த ஒரு படம் போதும். கனியாக வாழ்ந்து இருக்கிறார். மகேஷோடு வம்பிழுப்பது, காதலில் பொய்க்கோபம் காட்டுவது, காதலன் தன் மீது நம்பிக்கை இழந்து விட்டானே என்று கோபம் கொள்வது, அடுத்து நாம் என்ன செய்வது என்று குழம்பி தவிக்கும் இறுதி காட்சி என.. இது அஞ்சலிக்கான படம். சொந்தக்குரலில் வேறு பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அமர்க்களம். இயல்பான காதல் என்பது எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



மேலாளர் கருங்காலியாக வரும் இயக்குனர் ஏ.வெங்கடேஷும், அண்ணாச்சியாக நடித்து இருப்பவரும் பாத்திரங்களுக்கு வெகுவாகப் பொருந்திப் போகிறார்கள். படத்தின் உண்மையான "show stealer " கனா காணும் காலங்கள் பாண்டி தான். நாயகனின் நண்பனாக வந்து ரொம்ப இறுக்கமான படத்தை தன்னுடைய இயல்பான நகைச்சுவையால் கலகலப்பாக நகர்த்திக் கொண்டு செல்கிறார். நாயகியின் அப்பாவாக கவிஞர் விக்கிரமாத்தித்தன் ஒரு காட்சியில் வந்து போகிறார். படத்தில் நடித்து இருக்கும் அனைத்து துணை நடிகர்களுமே தங்களுடைய வேடத்தை அருமையாக செய்து இருக்கிறார்கள். சினேகா கவுரவ வேடத்தில் ஒரு விளம்பர ஷூட்டிங்குக்காக வந்து போவதாகக் காட்டி இருந்தாலும், அவரையும் படத்தின் ஒரு முக்கிய பாத்திரமாக மாற்றி இருப்பது இயக்குனரின் திறமை.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனியின் இசையில் "அவள் அப்படி ஒன்று அழகில்லை, உயிர் உன்னோடுதான்" ஆகிய இரண்டு பாடல்களும் அவை படமாக்கப்பட்டு இருக்கும் விதமும் அருமை. "எல்லாப் பொருட்களும் இந்தத் தெருவில் கிடைக்கும், மனிதம் மட்டும் கிடைப்பதில்லை..", "கை கால்கள் இல்லாத மனிதர்கள் கூட உண்டு, அந்நாள் வாயும் வயிறும் இல்லாத மனிதர் என எவருமில்லை.." அமிலம் தோய்ந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நா.முத்துக்குமார். "விக்கத் தெரிஞ்சவந்தான் இங்க வாழ முடியும்..", "யானை வாழுற அதே காட்டுலதான் எறும்பும் வாழுது.. நாங்களும் வாழ்ந்து காட்டுறோம்.." படத்துக்கு வெகு பாந்தமான வசனங்களைத் தந்து இருப்பவர் ஜெயமோகன். கண்களை உறுத்தாத, படத்தை விட்டு தனித்து தெரியாத இயல்பான ஒளிப்பதிவைத் தந்து இருக்கும் ரிச்சர்டுக்கு பாராட்டுக்கள். எடிட்டிங் - ஸ்ரீகர்பிரசாத். ஒரு தெரு, ஒரு கடை.. படத்தின் பெரும்பகுதி இங்கேதான் நடைபெறுகிறது. ஆனால் எந்த இடத்தில் தோய்வே இல்லை. அதேபோல படத்தின் எந்தக் காட்சியையும் என்னால் தேவை இல்லாதது என்று சொல்ல முடியவில்லை. நிறைவாக செய்திருக்கிறார்.


படம் முழுவதும் தென்படும் நுண்ணரசியல் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.

--> சென்னை கடைக்கு வேலைக்கு ஆள் சேர்க்க நெல்லைப்பகுதிக்கு வருகிறார்கள். அங்கே இருப்பவர் சொல்கிறார்.."நம்ம சாதிப்பயலா.. அதுவும் அப்பா அம்மா இல்லாதவனா எடுங்கப்பா.. அப்பத்தான் நாம என்ன பண்ணினாலும் சரி சரின்னுட்டு நாம்ம சொல்றதக் கேட்டுக்கிட்டு இருப்பான்.."

--> வேலையில் தவறு செய்த பெண்ணை மறைவான இடத்தில் வைத்து அடிக்கிறான் மேலாளர். திரும்பி வரும் நாயகியிடம் "என்ன பண்ணின.. உன்னைய வேலைய விட்டுத் தூக்காம இருக்கிறான்?" என்கிற நாயகனின் எகத்தாளமான கேள்விக்குஅவள் சொல்கிறாள்.."அவசியம் தெரியணுமா? என் மாரப் புடிச்சு பெசஞ்சான்.. ஒண்ணும் சொல்லாம இருந்தேன்.. விட்டுட்டான்." வேலைக்குப் போகும் பெண்களின் மீதான பாலியல் வன்முறையை அப்பட்டமாக சொல்லும் காட்சி இது.

--> வேலைக்கு வரும் மக்கள் தங்குமிடம் மற்றும் அவர்கள் உணவுண்ணும் விடுதி.. பல்பொருள் அங்காடிகள், செளைக்கடைகள் என்றில்லை.. சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகள்.. திருப்பூர் பனியன் கம்பெனிகள்.. திண்டுக்கல் காட்டன் மில்கள்.. இங்கெல்லாம் நடக்கக் கூடிய உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

--> கதையின் ஊடாக அங்கே இருக்கும் மற்ற மனிதர்களின் வாழ்க்கையும் படம் பிடித்து இருக்கிறார்கள். கண் தெரியா விட்டாலும் மனிதர்களை நம்பித் தான் பிழைப்பதாக சொல்லும் பெரியவரும், கழிவறையை சுத்தம் செய்து வாழ்வில் முன்னேறும் மனிதரும் நம்பிக்கையின் குறியீடுகள். குள்ள மனிதரைத் திருமணம் செய்த வேசிப்பெண்ணுக்கு கணவரைப் போலவே குழந்தை உடல் குறைப்பாட்டோடு பிறக்கிறது. மாறாக அவர் அதற்காக சந்தோஷப்படுகிறார். "இது யாருக்கோ பிறந்த குழந்தை கிடையாது, என் கணவருக்குத்தான் பிறந்தது என்று சமூகம் ஒத்துக் கொள்ளும் அல்லவா" என்று அவர் சொல்லும்பொழுது திரைஅரங்கில் கைத்தட்டல்கள் அதிர்கின்றன.

--> வேலையைக் காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்லும் கடை சிப்பந்தி.. தன் காதலை கொச்சைப்படுத்தியவன் கண்முன்னே தற்கொலை செய்து கொள்ளும் பெண்.. பணம் வாங்கிக் கொண்டு அதை மூடி மறைக்கும் போலிஸ்.. எல்லாமே நாம் கண்கூடாகப் பார்க்கும் உண்மைகள்.

வாழ்க்கையில் தோற்றுப் போன மனிதனை நாயகனாக்கி "வெயில்" எடுத்த வசந்தபாலன் இந்தப் படத்தில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை சொல்லி இருக்கிறார். கதைக்குப் பொருத்தமான நடிகர்கள், சரியான தொழில்நுட்பக் கலைஞர் என்று பார்த்து பார்த்து தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். தமிழ் சினிமாவின் யதார்த்தப் படங்கள் என்றாலே கிராமம், அருவா, ஜாதி என்று போய்க் கொண்டிருப்பவர்கள் மத்தியில், நகரத்தின் ஒரு பகுதி மக்களையும் அவர்களின் யதார்த்த வாழ்க்கையையும் முடிந்த வரை புனைவில்லாமல் பதிவு செய்திருப்பது அருமையான முயற்சி. ஒரு சில கதாப்பாத்திரங்களின் படைப்பு கொஞ்சம் நாடகத்தன்மையோடு இருந்தாலும் படத்தில் இருக்கும் நேர்மை அதனை மறக்கடித்து விடுகிறது. உலக சினிமாக்களை பார்க்கும்போது ஏன் இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழில் வருவது கிடையாது என்று மாய்ந்து போவதை நிவர்த்தி செய்து இருக்கும் வசந்தபாலனை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.

என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும்.

அங்காடித் தெரு - நம்பிக்கை

46 comments:

ராம்ஜி_யாஹூ said...

as a movie it is good, but did he (vasanthabalan /jeyamohan) address the issue, that why those boys have to go for that low paid jobs.

I mean in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs.

Maximum India said...

திரை விமர்சனம் நன்றாக இருந்தது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

vasu balaji said...

top class review karthi:)

பனித்துளி சங்கர் said...

அருமையான விமர்சனம் !! பகிர்வுக்கு நன்றி!!
வாழ்த்துகள் !

துபாய் ராஜா said...

நல்ல படம்.நல்ல விமர்சனம்.

நசரேயன் said...

நல்ல விமர்சனம் வாத்தியாரே

bandhu said...

It is so easy to say 'in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs'.
How many of them really get an opportunity to go to school and concentrate on studies?
I often feel that it is God's grace that so many people come out successfully in our society amidst all the limitations and distractions all around!

ப்ரியமுடன் வசந்த் said...

விமர்சனம் படம் எப்படியாவது ஒரு நல்லபடம் ஜெயிச்சுடணும் அப்படின்ற நோக்கில் நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி...

Anonymous said...

நல்ல விமர்சனம். பாத்திடறேன்

Yogeshwar Srikrishnan said...

karthi iam yogesh
r u my frnd karthigai pandiyan?

மேவி... said...

பட விமர்சனம் சூப்பர். வெயில் படம் பாரத்தில் இருந்தே நான் வசந்த பாலனின் ரசிகனாகி விட்டேன். வெயில் படத்தில் இருந்த சில குறைகள் இதில் இருக்காது என்று நம்புகிறேன்.

(சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு.)


கார்த்தி, நீங்க படத்தில் தான் இதையெல்லாம் பார்த்திங்க, ஆனா நேரிலையே பார்த்து இருக்கேன் பழகியும் இருக்கேன்.

selventhiran said...

படம் இன்னும் பார்க்கவில்லை. கானாபானா நல்லாருக்குன்னு சொன்னதுக்கப்புறம் பாக்காம இருக்கப்படாது... கெளம்பறேன்...:)

பொன் சுதா said...

நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள் பொன்னி வளவன்.

//as a movie it is good, but did he (vasanthabalan /jeyamohan) address the issue, that why those boys have to go for that low paid jobs.

I mean in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs.//

Blogger ராம்ஜி_யாஹூ said...

ராம்ஜி அவர்களே படிப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

வாழ்க்கையை, மனிதர்களை, சமூகத்தை ஒரு துளியும் புரிந்து கொள்ளாத மேட்டிமைத் தனம் இருக்கிறது உங்களின் வரிகளில்...

அவர்களுக்கான வேறு வேலை உங்களது தந்தையின் நிறுவனத்தில் இருந்தால் சொல்லுங்கள் ராம்ஜி. ரெங்க நாதன் தெருவே வேலைக்குச் சேர தயாராய் இருக்கிறது.

படத்தில் நாயகன் நன்றாகப் படிப்பவன் தான் ராம்ஜி. எல்லோரின் அப்பாக்களும் படித்தவர்களாய், செலவு செய்ய சக்தி உள்ளவர்களாய், பாட புத்தகங்கள் வாங்கித் தரும், டியூசன் அனுப்பும் வசதியோடு இருப்பதில்லை ராம்ஜி.

இன்னும் இன்னும் நீங்கள் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது ராம்ஜி.

நல்ல வாழ்க்கை, நல்ல படிப்பு, நல்ல வேலை கிடைத்து விட்டது என்று உலகம் முழுதும் நம்மைப் போல் தான் இருக்கும் என்று நம்புகிற உங்களைப் போன்றவர்களைக் கண்டால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை........

நர்சிம் said...

மிக நல்ல பதிவு பாஸ் நண்பா.

Balakumar Vijayaraman said...

படக் குழுவினரின் உழைப்புக்கு உங்கள் விமர்சனத்தின் நேர்மை, நியாயம் சேர்க்கிறது.

Cable சங்கர் said...

நல்ல விமர்சனம் நண்பா..

தருமி said...

//மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும்.//

மகிழ்ச்சி

kannamma said...

விமர்சனம் படிக்கும் போதே படம் பார்க்கணும் -னு தோணுது.
நல்ல விமர்சனம் !!

Anonymous said...

அருமையான விமர்சனம் கார்த்தி.

அருமையான படத்துக்கு அழகான விமர்சனம் கொடுத்த உங்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தலாம்.

இந்த படத்தின் இயக்குனர் சென்னை தியாகராயநகரில் 6 மாதம் தங்கியிருந்து இந்த கதைகயை உருவாக்கியிருக்கிறhர். .

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனம் அருமை.

ஜீவன்பென்னி said...

ஒரு சில படங்களின் திரை முன்னோட்டமே படத்தினைப் பார்க்கத்தூண்டும். அந்த தூண்டுதல் இதிலும் இருந்தது. அருமையான விமர்சனம்.

// ராம்ஜி_யாஹூ said...
as a movie it is good, but did he (vasanthabalan /jeyamohan) address the issue, that why those boys have to go for that low paid jobs.

I mean in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs//

நீங்க எந்த ஊருங்க.

திருவாரூர் சரவணா said...

மனதை வலிக்கச் செய்யும் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது உங்கள் விமர்சனம்.

Karthik Nagarajan said...

Annachi is Paza Karuppaiah.....a learned Tamil scholar, orator, politician and a columnist. He has done a marvellous job in this movie.

Unknown said...

வாத்யாரே..

நாளைக்கு பார்க்கலாம்னு நினச்சேன். Buzz ல விமர்சனம் படிச்சுட்டு இன்னைக்கே பார்த்துட்டு வந்துட்டேன்.

உண்மையிலேயே ஒரு தரமான படம். அதற்கு நல்ல விமர்சனம். இந்த படத்தை பார்த்த எதாவது ஒரு மேற்பார்வையாளர் நாளைக்கு கொஞ்சம் கனிவே நடந்துட்டாலே அது படத்தோட வெற்றியாய் இருக்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// ராம்ஜி_யாஹூ said...
as a movie it is good, but did he (vasanthabalan /jeyamohan) address the issue, that why those boys have to go for that low paid jobs.I mean in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs//

Thanks for the comment boss.. Not everyone gets an opportunity to be an engineer or a doctor boss.. its their family's poverty that drives them to such situations.. the environment that they live in also plays a vital role in shaping them sir..

//Maximum India said...
திரை விமர்சனம் நன்றாக இருந்தது.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!//

ரொம்ப நன்றிங்க..

//வானம்பாடிகள் said...
top class review karthi:)//

நன்றி பாலா சார்..:-)))

// ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமையான விமர்சனம் !! பகிர்வுக்கு நன்றி!!வாழ்த்துகள் !//

நன்றி நண்பா..

// துபாய் ராஜா said...
நல்ல படம்.நல்ல விமர்சனம்.//

:-)))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said...
நல்ல விமர்சனம் வாத்தியாரே//

நன்றிண்ணே..

//Ravi said...
It is so easy to say 'in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs'.
How many of them really get an opportunity to go to school and concentrate on studieச்//

exactly.. u have a point to tell buddy..

//பிரியமுடன்...வசந்த் said...
விமர்சனம் படம் எப்படியாவது ஒரு நல்லபடம் ஜெயிச்சுடணும் அப்படின்ற நோக்கில் நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி...//

அதேதான் தல.. இந்தப்படம் ஜெயிக்கணும்.. அப்பத்தான் தமிழ் சினிமாவுக்குப் பெருமை

//சின்ன அம்மிணி said...
நல்ல விமர்சனம். பாத்திடறேன்//

கண்டிப்பா பாருங்க..

//Yogehswar said...
karthi iam yogesh r u my frnd karthigai pandiyan?//

hi friend, cant exactly remember u..am in madurai and i did my B.E in karunya coimbatore.. please confirm ur identity

கண்ணா.. said...

அசத்தல் விமர்சனம் தல...

உங்கள் எழுத்து நடை அருமை.

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
பட விமர்சனம் சூப்பர். வெயில் படம் பாரத்தில் இருந்தே நான் வசந்த பாலனின் ரசிகனாகி விட்டேன். வெயில் படத்தில் இருந்த சில குறைகள் இதில் இருக்காது என்று நம்புகிறேன்.(சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு.)கார்த்தி, நீங்க படத்தில் தான் இதையெல்லாம் பார்த்திங்க, ஆனா நேரிலையே பார்த்து இருக்கேன் பழகியும் இருக்கேன்.//

சில விஷயங்களை நாம் நேரில் பார்க்கும்போது வரும் வலி மிகவும் கொடுமையானது.. இல்லையா நண்பா?

//செல்வேந்திரன் said...
படம் இன்னும் பார்க்கவில்லை. கானாபானா நல்லாருக்குன்னு சொன்னதுக்கப்புறம் பாக்காம இருக்கப்படாது... கெளம்பறேன்...//

நன்றி தல..

//பொன் சுதா said...
நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள் பொன்னி வளவன்.//

நீங்க ”மறைபொருள்” இயக்குனர் தானே? நன்றிங்க..

// நர்சிம் said...
மிக நல்ல பதிவு பாஸ் நண்பா.//

பாஸ்? நண்பாதான் நல்லாயிருக்கு தல..:-)))

//வி.பாலகுமார் said...
படக் குழுவினரின் உழைப்புக்கு உங்கள் விமர்சனத்தின் நேர்மை, நியாயம் சேர்க்கிறது.//

நன்றி பாலா..

கார்த்திகைப் பாண்டியன் said...

// Cable Sankar said...
நல்ல விமர்சனம் நண்பா..//

நன்றி தல

//தருமி said...
மகிழ்ச்சி//

:-)))))

//kannamma said...
விமர்சனம் படிக்கும் போதே படம் பார்க்கணும் -னு தோணுது. நல்ல விமர்சனம் !!//

தொடர்ச்சியாக வந்துக்கிட்டு இருக்கீங்க.. நன்றிங்க..

//கடையம் ஆனந்த் said...
அருமையான விமர்சனம் கார்த்தி.
அருமையான படத்துக்கு அழகான விமர்சனம் கொடுத்த உங்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தலாம்.
இந்த படத்தின் இயக்குனர் சென்னை தியாகராயநகரில் 6 மாதம் தங்கியிருந்து இந்த கதைகயை உருவாக்கியிருக்கிறhர். .//

அந்த உழைப்பு படத்துல நல்லா வெளிப்பட்டு இருக்கு தல.. பாராட்டுக்கு நன்றி

//அக்பர் said...
விமர்சனம் அருமை.//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஜீவன்பென்னி said...
ஒரு சில படங்களின் திரை முன்னோட்டமே படத்தினைப் பார்க்கத்தூண்டும். அந்த தூண்டுதல் இதிலும் இருந்தது. அருமையான விமர்சனம்.//

படம் பாருங்கப்பா.. ஒரு புது அனுபவமா இருக்கும்..

//திருவாரூரிலிருந்து சரவணன் said...மனதை வலிக்கச் செய்யும் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது உங்கள் விமர்சனம்.//

அதெதான் சகா.. அருமையான படம்

//Karthik Nagarajan said...
Annachi is Paza Karuppaiah.....a learned Tamil scholar, orator, politician and a columnist. He has done a marvellous job in this movie.//

தகவலுக்கு நன்றிங்க..

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...வாத்யாரே.. நாளைக்கு பார்க்கலாம்னு நினச்சேன். Buzz ல விமர்சனம் படிச்சுட்டு இன்னைக்கே பார்த்துட்டு வந்துட்டேன். உண்மையிலேயே ஒரு தரமான படம். அதற்கு நல்ல விமர்சனம். இந்த படத்தை பார்த்த எதாவது ஒரு மேற்பார்வையாளர் நாளைக்கு கொஞ்சம் கனிவே நடந்துட்டாலே அது படத்தோட வெற்றியாய் இருக்கும்.//

வேலன் அண்ணாச்சியோட தளத்துல உங்க பின்னூட்டம் பார்த்தேன் நண்பா.. ரொம்ப சந்தோஷமா இருந்தது.. நன்றி..

//கண்ணா.. said...
அசத்தல் விமர்சனம் தல...
உங்கள் எழுத்து நடை அருமை.//

ரொம்ப நன்றிங்க..

Azarudeen Batcha said...

Sir norukiteenga ponga... i know u... ippa thaan padam paathutu vandaen...

Really sir, review is good

தருமி said...

//...why those boys have to go for that low paid jobs.

I mean in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs.//

கா.பா.,
இவர் எந்த "உலகத்தில்" இருக்கிறார்? நல்ல தத்துவங்கள் சொல்கிறாரே?!

கார்த்திகைப் பாண்டியன் said...

//Azarudeen Batcha said...
Sir norukiteenga ponga... i know u... ippa thaan padam paathutu vandaen...Really sir review is good//

கொடைக்கானல் மாணவர் அஸாரூதீனா? நன்றிப்பா..

//தருமி said...
why those boys have to go for that low paid jobs. I mean in the school days they did not realise the importance of studies and had to go for these type of jobs.//
கா.பா.,இவர் எந்த "உலகத்தில்" இருக்கிறார்? நல்ல தத்துவங்கள் சொல்கிறாரே?!//

சத்தியமா எனக்குத் தெரியாது ஐயா.. ஜெயமோகனோட தளத்துல கூட பின்னூட்டம் போட்டு இருக்காரு.. ஆனா அங்க எதுவும் இது மாதிரி சொல்லல..

மேவி... said...

கார்த்திகை ராம்ஜி_யாஹூ சொன்னதில் நிறையவே உண்மை இருக்கிறது. படத்தின் நாயகனை போல் படிக்க வசதில்லாமல் வேலை செய்ய வருகிறவர்கள் நூறில் ஐந்து பேர் தான் இருப்பார்கள். மற்றபடி படிப்பின் அவசியத்தை உணராமல் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தான் ஜாஸ்தி.


பிறகு ....... நன்றாக படித்து, திறமை உள்ளவர்கள் எப்படியாவது அந்த நிலையில் இருந்து வெளியே வந்து இன்னொரு அண்ணாச்சியாகி விடுவார்கள் ( உதாரணம்- சென்னையை கலக்கி கொண்டு இருக்கும் சில அண்ணாச்சிகளின் வாழ்க்கை வரலாறுயை படித்து பாருங்க ) அப்படி வெளிய வந்தவர்களின் வெற்றியின் அளவு தான் மாறு படுமே தவிர யாரும் அதே நிலையில் இருப்பது இல்லை.


கல்வியை உணராமல், எதுவும் தெரியாமல் அதிலே சிக்கி இறப்பவர்கள் தான் ஜாஸ்தி.

மேவி... said...

அந்த படத்திலே பாருங்க ..நல்ல படித்த நாயகன் முன்னேற வழியை கண்டு பிடித்து விடுகிறான், ஆனால் இன்னொரு கதாபாத்திரம்மோ காதலையும் இழந்து வாழ தெரியாமல் பைத்தியம் பிடித்து அலைகிறான். (இதுவும் ஜெயமோகன் வசனங்களில் தான் வருகிறது)......

VISA said...

//கல்வியை உணராமல், எதுவும் தெரியாமல் அதிலே சிக்கி இறப்பவர்கள் தான் ஜாஸ்தி.
//


//பிறகு ....... நன்றாக படித்து, திறமை உள்ளவர்கள் எப்படியாவது அந்த நிலையில் இருந்து வெளியே வந்து இன்னொரு அண்ணாச்சியாகி விடுவார்கள் //


இத தான் நான் யதார்த்தம் இல்லைன்னு சொன்னேன் பாஸ் அடிக்க வர்றாயிங்க.


புலி புல்ல தின்னுதுன்னு கூட சினிமால சொல்லலாம்.
ஆனா அதை நம்பும்படியா யதார்த்தமா சொல்லணும். அதை சொல்ல காணோம்.

ஆனா மக்கள் ஆர்வமா போய் புலி புல்ல திங்கிதுடோய்ன்னு பாத்துட்டு வந்திடுறாங்க.
யதார்த்தம் மட்டும் இருந்திருந்தால் அங்காடித் தெருவை நான் கொண்டாடியிருப்பேன்.

மேவி... said...

யோசிக்க தெரிந்தவன் தானும் யோசித்து பிறரையும் யோசிக்க வைப்பான்.

அரைகுறையாய் யோசிப்பவன் தான் உயர பிறரை அடிமை படுத்துவான்


யோசிக்க தெரியாதவன் அடிமைப்பட்டு ...தன்னை சார்ந்த பிறரையும் அடிமைப்பட காரணமாய் இருப்பான்......



(இதை எங்கள் அம்மா எங்களுக்கு சின்ன வயசில் சொல்லி தந்தது.........இதை வைத்து இந்த படத்தின் கதையை யோசித்து பாருங்க)

மேவி... said...

நீங்க எவ்வளவு தூரத்துக்கு comfort zone ல வளர்ந்து இருக்கீங்கன்னு தெரியுது .....


இதையெல்லாம் (பிறரின் வலி உணருதல்) உணர தான் ஹிந்து மதத்தில் பல்வேறு குறியீடுகளை வைத்துள்ளனர். அதை எல்லாம் கண் முடிதனமாக வழிபட்டு .... உள் கருத்தை பலர் மறந்து விடுகிறார்கள். அதற்க்கு என்னை போல் நம்பாமல் இருந்து விடலாம்.

மேவி... said...

வசந்த பாலன் நல்ல தான் எடுத்து இருக்கிறார் பல குறைகளுடன்......அது எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பலரை சென்று அடைந்திருக்கும் அவரது கருத்துக்கள் .......

சொல்ல வந்ததை சுவாரசியத்துடன் சொன்னால் தான் இயக்குனர் வெற்றி அடைந்தார் என்று எடுத்து கொள்ளலாம்.


படத்தில் காட்டின பிரச்சனைகளை விட நிஜத்தில் அதிகமாக தான் இருக்கிறது...அதில் கொஞ்சமாச்சு வசந்த பாலன் சொல்லிருக்கலாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
கார்த்திகை ராம்ஜி_யாஹூ சொன்னதில் நிறையவே உண்மை இருக்கிறது. படத்தின் நாயகனை போல் படிக்க வசதில்லாமல் வேலை செய்ய வருகிறவர்கள் நூறில் ஐந்து பேர் தான் இருப்பார்கள். மற்றபடி படிப்பின் அவசியத்தை உணராமல் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தான் ஜாஸ்தி. //

இல்லைன்னு சொல்லல மேவீ.. நிரைய பேர் படிப்பொட அருமை உணராம இருக்கங்க என்பதெல்லாம் சரிதான்.. ஆனா எத்தனை பேருக்கு சரியான வாய்ப்பு கிடைக்குது? கிராமத்து பள்ளிக்கூடங்களும் நகரத்து பள்ளிகளும் ஒன்றாகததான் இருக்கின்றனவா? சொல்லுங்க..

//பிறகு ....... நன்றாக படித்து, திறமை உள்ளவர்கள் எப்படியாவது அந்த நிலையில் இருந்து வெளியே வந்து இன்னொரு அண்ணாச்சியாகி விடுவார்கள் ( உதாரணம்- சென்னையை கலக்கி கொண்டு இருக்கும் சில அண்ணாச்சிகளின் வாழ்க்கை வரலாறுயை படித்து பாருங்க ) அப்படி வெளிய வந்தவர்களின் வெற்றியின் அளவு தான் மாறு படுமே தவிர யாரும் அதே நிலையில் இருப்பது இல்லை.//

அந்த மாதிரி ஜெயிச்ச மக்களை விரல் விட்டு எண்ணலாம் நண்பா? ஆனா தோத்தவங்க எத்தனை பேர்..திறமை இருக்குற எல்லொருமே ஜெயிப்பது கிடையாது தல

//கல்வியை உணராமல், எதுவும் தெரியாமல் அதிலே சிக்கி இறப்பவர்கள் தான் ஜாஸ்தி.//

:-((((((

// அந்த படத்திலே பாருங்க ..நல்ல படித்த நாயகன் முன்னேற வழியை கண்டு பிடித்து விடுகிறான், ஆனால் இன்னொரு கதாபாத்திரம்மோ காதலையும் இழந்து வாழ தெரியாமல் பைத்தியம் பிடித்து அலைகிறான். (இதுவும் ஜெயமோகன் வசனங்களில் தான் வருகிறது)....//

அவன் படிச்ச படிப்பு அவனுக்கு தன்னம்பிக்கையை கொடுக்குர மாதிரி படத்துல இல்ல தல.. காதல்தான் அவனை எதிர்த்து போராட வைக்குது.. அதே காதல்தான் சவுந்தரபாண்டிய பைத்தியம் ஆக்குது..

கார்த்திகைப் பாண்டியன் said...

// VISA said...
இத தான் நான் யதார்த்தம் இல்லைன்னு சொன்னேன் பாஸ் அடிக்க வர்றாயிங்க.//

கோணங்கள் வேறுபடும் நண்பா.. இதே பிரச்சினை எனக்கு வி.தா.வ படத்தில் வந்தது.. எல்லோரும் அந்தப் படத்தின் காதலை ஆகா, ஓகோ.. யதார்த்தம் என்றெல்லாம் சொன்னார்கள்.. என்னால் அப்படி ஒப்புக் கொள்ள முடியவில்லை.. ஆனால் அங்காடித் தெரு இயல்பாக இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
யோசிக்க தெரிந்தவன் தானும் யோசித்து பிறரையும் யோசிக்க வைப்பான்.அரைகுறையாய் யோசிப்பவன் தான் உயர பிறரை அடிமை படுத்துவான் யோசிக்க தெரியாதவன் அடிமைப்பட்டு ... தன்னை சார்ந்த பிறரையும் அடிமைப்பட காரணமாய் இருப்பான்......//

எத்தனை யோசிக்கக் கூடியவனாக இருந்தாலும் சூழல்கள் துரத்தும்போது ஒரு மனிதன் என்ன செய்ய முடியும் நண்பா

//நீங்க எவ்வளவு தூரத்துக்கு comfort zone ல வளர்ந்து இருக்கீங்கன்னு தெரியுது ..... //

சுத்தமாப் புரியல.. எனக்கும் இந்த படத்தைப் பற்றிய கருத்துக்களுக்கும் என்ன சம்பந்தம்?

//டம்பி மேவீ said...
வசந்த பாலன் நல்ல தான் எடுத்து இருக்கிறார் பல குறைகளுடன்...... அது எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பலரை சென்று அடைந்திருக்கும் அவரது கருத்துக்கள் ....... சொல்ல வந்ததை சுவாரசியத்துடன் சொன்னால் தான் இயக்குனர் வெற்றி அடைந்தார் என்று எடுத்து கொள்ளலாம்.படத்தில் காட்டின பிரச்சனைகளை விட நிஜத்தில் அதிகமாக தான் இருக்கிறது...அதில் கொஞ்சமாச்சு வசந்த பாலன் சொல்லிருக்கலாம்.//

குறைகளே இல்லை என்றெல்லாம் சொல்ல வில்லை..நிஜத்தில் வலிகள் இன்னும் ஜாஸ்திதான்..ஆனால் முதல் முரையாக இதை எல்லாம் காட்சிப்படுத்தும் தைரியம் அவருக்கு இருக்கிறதே.. அதை ஏன் பாராட்ட மாட்டேன் என்கிறீர்கள்? நாளைப்பின்ன கடைக்கு யெதுவும் போகும்போது ஒரு நிமிஷமாவது அந்த கடைப்பையனைப் பற்றி நினைப்பீர்களா இல்லையா? அதுதான் தல இந்தப் படத்தோட வெற்றியா நான் பாக்குறேன்..

மேவி... said...

இதற்குமேல் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் . நீங்க தான் எதை சொன்னாலும் அதை ஊத்தப்பம் போட்டுரிங்களே. ம்ம்ம்


ஆனால் அந்த சூப்பர் வைசர் கதாபாத்திரத்தை பார்க்கும் பொழுதெல்லாம் உங்க ஞாபகம் தான் வந்துச்சு. நீங்களே ஒரு தீராத விளையாட்டு பிள்ளை தானே


ஆனால் ஒன்னு டைரக்டர் அஞ்சலியை போட்டதற்கு பதில் நமீதாவை போட்டு இருந்தால் பார்க்க நல்ல இருந்திருக்கும்.நான் படத்தில் சொன்னேன்

மேவி... said...

ஒரு ரேப் சீன், மூணு குத்து பாட்டு வைத்து இருந்தால் கட்டாயம் இதை நான் ஒரு உலக சினிமா என்று சொல்லிருப்பேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

// டம்பி மேவீ said...
இதற்குமேல் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் . நீங்க தான் எதை சொன்னாலும் அதை ஊத்தப்பம் போட்டுரிங்களே. ம்ம்ம் //

நமக்கு ஒண்ணு புடிச்சுப் போய்ட்டா அப்படித்தான் தல..

//ஆனால் அந்த சூப்பர் வைசர் கதாபாத்திரத்தை பார்க்கும் பொழுதெல்லாம் உங்க ஞாபகம் தான் வந்துச்சு. நீங்களே ஒரு தீராத விளையாட்டு பிள்ளை தானே//

உன் தலையில இடி விழ..:-)))

//ஆனால் ஒன்னு டைரக்டர் அஞ்சலியை போட்டதற்கு பதில் நமீதாவை போட்டு இருந்தால் பார்க்க நல்ல இருந்திருக்கும்.நான் படத்தில் சொன்னேன்//

உனக்கு எல்லாம் கருணையே கிடையாதாப்பா?

//டம்பி மேவீ said...
ஒரு ரேப் சீன், மூணு குத்து பாட்டு வைத்து இருந்தால் கட்டாயம் இதை நான் ஒரு உலக சினிமா என்று சொல்லிருப்பேன்//

ஆணியே புடுங்க வேண்டாம்..

Anonymous said...

super review.... keep writing friend.. its also one of the best films i have ever seen...