March 24, 2010

உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!!

தமிழ்வெளி மற்றும் சிங்கைப் பதிவர்கள் இணைந்து நடத்திய மணல்வெளி கட்டுரைப் போட்டியில் நமது அன்புக்குரிய தருமி அய்யா "அரசியல்" பிரிவில் வெற்றி பெற்று இருக்கிறார். அதேபோல பிரியத்துக்கு உரிய டாக்டர்.தேவன்மாயம் "மருத்துவப்" பிரிவில் வெற்றிவாகை சூடி முத்திரை பதித்து இருக்கிறார். மற்றொரு வெற்றியாளரான பிரபாகரும் (அமெரிக்கன் கல்லூரி) எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். நமக்குத் தெரிந்த நண்பர்கள் மூவர் வெற்றி பெற்று இருப்பதில் உள்ளூர ஒரு மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் போட்டியில் நான் பங்கேற்காத நிலையிலும் என்னுடைய மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆழமான தலைப்புகளில் எழுதும் ஆர்வத்தை தூண்டி, நிறைய பேரை எழுத வைத்து, வெற்றி பெற்றவர்களை தகுந்த முறையில் கவுரவிக்கவும் செய்யும் சிங்கைப் பதிவர்களுக்கும், தமிழ்வெளிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

***************

மதுரையில் எந்த வம்பும் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு தனியாக ஒரு அவார்டே கொடுக்கலாம் போல. ஆறு மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நிறைய சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றம், கண்டிப்பான காவலர்கள், முக்கியமான இடங்களில் சிக்னல் கம்பங்கள் என எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சமீப காலமாக எல்லாம் மாறி (நாறி) விட்டது. யாருமே சிக்னலை மதிப்பது கிடையாது. சிக்னலை மதித்து நாம் பொறுமையாக காத்து நின்றால் பின்னால் இருப்பவர்கள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். காவலர்களும் யாரையும் கண்டு கொள்வதில்லை. எல்லோரும் அவரவர் நினைத்த வழியில் எல்லாம் போகிறார்கள், வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் தினம் ஒரு விபத்து நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. பொறுப்பில் இருப்பவர்கள் யோசிப்பார்களா?

***************

போன சனிக்கிழமை மாலை. நானும் எனது நண்பரும் இருசக்கர வாகனத்தில் என் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் பாலம் - எல்லிஸ் நகர் பிரியும் பாதை. எங்களுக்கு முன்னே இறக்கத்தில் பைக்கில் இருவர் போய்க் கொண்டிருந்தார்கள். ஜீப் ஒன்று ஏறி வந்து கொண்டிருந்தது. திடீரென ஜீப்பின் முன் டயர் வெடித்து விட, வண்டி தடுமாறி எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த பைக்கை அடித்து தூக்கியது. வாழ்க்கையில் கண்முன்னே விபத்து நடப்பதை நான் இத்தனை நெருக்கத்தில் பார்த்தது கிடையாது.

பதறிப்போய் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடினோம். வண்டியை ஒட்டி வந்தவருக்கு செம அடி. வலது காலின் பாதப்பகுதி எலும்பு மொத்தமாக உடைந்து போயிருந்தது. மனிதர் நல்ல மனதிடத்துடன் இருந்ததால் கொஞ்சம் தாக்குப்பிடித்து எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். மற்றவருக்கும் ஆங்காங்கே சிராய்ப்புகள். சுற்றி இருந்த மக்கள் எல்லாம் உதவிக்கு வந்து விட்டார்கள். உடனடியாக 108 க்கு போன் செய்தேன். பிறகு அவர் வீட்டாருக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னோம். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து விட அனைவருமாக சேர்ந்து அவரை ஏற்றி விட்டோம். ஆத்திர அவசரத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு ஏற்பாடு செய்திருக்கும் 108 வசதி உண்மையிலேயே அருமையான திட்டம்தான். தமிழக அரசுக்கு நன்றி.

இரண்டு நொடிகள் முனதாக சென்று இருந்தால்.. அவர் இடத்தில் நான் இருக்கக் கூடும். நினைக்கும்போதே உடம்பு பதறுகிறது. "நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா இருந்தாலும் சுத்தி இருக்குற மக்கள் ஒழுங்கா ஓட்டலைன்னா கஷ்டம்தான்.." என் அப்பா அடிக்கடி சொல்வது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. கெட்டதிலும் ஒரு நல்லது - யாரோ அடிபட்டுக் கிடக்கிறார் என்றில்லாமல் அத்தனை மக்கள் உதவிக்கு வந்து நின்றதைப் பார்த்தபோது மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

***************

இரண்டு நாட்களுக்கு முன்பு.. காலை நேரம். கல்லூரிக்கு வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு ஆவின் வேன் போய்க் கொண்டிருந்தது. வண்டியின் ஒரு கதவு மட்டுமே மூடி இருந்தது. மற்றொரு கதவு பப்பரப்பே என்று திறந்து கிடந்தது. வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் பால் டிரேக்கள். சடாரென ஒரு பிரேக் போட்டால் அத்தனை டிரேவும் பின்னால் வரும் மனிதர் மேல் விழக்கூடும். அதே போல கதவும் திடீரென யார் மேலாவது மோதக் கூடும். வேகமாக வண்டியை ஓவர்டேக் செய்து முன்னால் போய் ஓட்டுனரிடம் கதவு திறந்து இருப்பதை சொன்னேன். அசுவாரசியமாக கேட்டுக் கொண்டவர் - "எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க சார்.." என்றார். பல்பு. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அருகில் யாராவது போலிஸ் இருந்தால் சொல்லலாம் என்று பார்த்தால் அதற்குள் ஆள் எஸ்கேப். தெரிந்தே தவறு செய்வது, மற்றவர் சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்ள மறுப்பது... என்ன கொடுமை சார் இது?

***************

நேற்று மாலை நேரம்.. எட்டு மணி இருக்கும். பொழுது போகாமல் வண்டியில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். திருப்பரங்குன்றம் சாலை - அவ்வளவாக கூட்டம் இல்லை. எனக்கு முன்னாடி வண்டியில் ஒரு புதுமண ஜோடி. புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் அந்தக் களை வருமோ? ரொம்பவே மெதுவாகப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னாடி இருந்த மனைவி அடிக்கடி ஏதோ சொல்வதும் சிரிப்பதுமாக கணவனின் முகத்தருகே குனிந்து முத்தமிடுவதுமாக இருந்தார். நம்ம சுழிதான் சும்மா இருக்காதே.. சடாரென்று ஹெட்லைட்டை அவர் முகத்தில் அடித்தேன். அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். எனக்கோ சங்கடமாக போய் விட்டது. வேகமாக தாண்டி வந்து விட்டேன். நான் அவரை ஓட்டப்போய் கடைசியில் அவர் எனக்கு பல்பு கொடுத்ததுதான் மிச்சம். என்ன ஒரு வில்லத்தனம்? ஹ்ம்மம்ம்ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

***************

"பையா" படத்தின் டிரைலர் பார்த்தேன். கார், சாலை என்று பெயர் போடுவது எல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் காட்சி அமைப்புகளும், சண்டைக் காட்சிகளும் பார்க்கும்பொழுது "ரன்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. முதல் முறையாக கார்த்தியை கொஞ்சம் கலர் கலரான உடைகளில் பார்க்க முடியும் என்பது பெரிய ஆறுதல். தமன்னா..ஆ..ஆ.. வேறு இருக்கிறார். லிங்குசாமி என்ன பண்ணக் காத்து இருக்கிறார் என்று தெரியவில்லை.. பார்க்கலாம்.

***************

நிறைய விஷயங்களை சீரியசாக சொல்லியாச்சு. அதனால் முடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் மொக்கை ஜோக்ஸ்..

நபர் 1: சினிமா என் ரத்தத்துல கலந்து இருக்கு சார்..

நபர் 2: அதெல்லாம் சரி.. ஏன் ஒரே கில்மா படமா எடுக்குறீங்க?

நபர் 1: ஹி ஹி.. என்னோட பிளட் குரூப் "A" தான சார்..

oOo

டென்சன் ஜாஸ்தி ஆனால் என்ன ஆகும்?

"லெவன்"சன் ஆகும்..

oOo

நபர் 1: நானும் என் மனைவியும் "தெய்வ மகன்" படத்துக்குப் போயிட்டு வந்த பிறகுதான் எங்களுக்கு மூணு குழந்தைங்க பொறந்தது...

நபர் 2: நல்ல வேளை.. நீங்க "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்துக்குப் போகல..

oOo

பெண்: டாக்டர்.. என்னோட மாமியார் கால்ல முள் குத்திடுச்சு..

டாக்டர்: முள்ளை எடுக்கணுமா?

பெண்: ச்சே ச்சே.. முள் சின்னது.. அதையேன் தொந்தரவு பண்ணிக்கிட்டு? பேசாம காலை எடுத்துடுங்க..

ரைட்டு.. இப்போதைக்கு அவ்வளவுதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

47 comments:

Anonymous said...

very nice

Anonymous said...

very nice

டம்பி மேவீ said...

VOTE POTACHU... PIRAGU VANTHU PADIKKIREN

Joe said...

//
இரண்டு நொடிகள் முனதாக சென்று இருந்தால்.. அவர் இடத்தில் நான் இருக்கக் கூடும். நினைக்கும்போதே உடம்பு பதறுகிறது. "நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா இருந்தாலும் சுத்தி இருக்குற மக்கள் ஒழுங்கா ஓட்டலைன்னா கஷ்டம்தான்.." என் அப்பா அடிக்கடி சொல்வது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. கெட்டதிலும் ஒரு நல்லது - யாரோ அடிபட்டுக் கிடக்கிறார் என்றில்லாமல் அத்தனை மக்கள் உதவிக்கு வந்து நின்றதைப் பார்த்தபோது மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
//

பாத்து சூதானமா வண்டி ஓட்டுங்கப்பு!

Cable Sankar said...

சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.

♠ ராஜு ♠ said...

Tamil Veliyil Vetri petra Nanbarkalukku vazthukkal...!

Paiya..! Maduraila opening showvukku Ticket kidaikkkuthaanu parungka.!
:-)

ஆக்சுவலி, ஐ ஹேவ் நோ டமில் ஃபாண்ட் ஹியர். தட்ஸ் ஒய் ஐ யூஸ்டு இங்கிலீபீஸ் ஃபாண்ட்..!
ஜாரி..!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

"ரன்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.//
உன்மைதான்

வால்பையன் said...

//மனைவி அடிக்கடி ஏதோ சொல்வதும் சிரிப்பதுமாக கணவனின் முகத்தருகே குனிந்து முத்தமிடுவதுமாக இருந்தார். நம்ம சுழிதான் சும்மா இருக்காதே.. சடாரென்று ஹெட்லைட்டை அவர் முகத்தில் அடித்தேன். அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். //


உங்களை பார்த்தவுடனே தெரிஞ்சிருக்கு வெறுப்பேத்தனும்னு!

:)

தமிழரசி said...

வாழ்த்துக்கள் தருமி அய்யா அவர்களுக்கும் நம்ம டாக்டர்,தேவன்மயம் அவர்களுக்கும்..

வானம்பாடிகள் said...

பல்ப் வாங்கினா வச்சுக்கணும். எரிய விட்டு பார்க்கப்படாது:))

க.பாலாசி said...

முதல்ல வாழ்த்துக்கள்...அனைவருக்கும்...

வண்டியில உட்காந்து யோசிச்சதுன்னு தலைப்பிருந்தா நன்னாயிருக்கும்...

108 நல்ல விசயம்...

அந்த கொடுப்பனை உங்களுக்கும் வாய்க்க வாழ்த்துக்கள்...

ஜோக்ஸ் நைஸ்....

அப்பாவி முரு said...

//ஆழமான தலைப்புகளில் எழுதும் ஆர்வத்தை தூண்டி, நிறைய பேரை எழுத வைத்து, வெற்றி பெற்றவர்களை தகுந்த முறையில் கவுரவிக்கவும் செய்யும் சிங்கைப் பதிவர்களுக்கும், தமிழ்வெளிக்கும் மனமார்ந்த நன்றிகள்//

நன்றி வேண்டியதில்லை...

வாழ்த்துகள் போதும்...

அப்பாவி முரு said...

//தெரிந்தே தவறு செய்வது, மற்றவர் சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்ள மறுப்பது... என்ன கொடுமை சார் இது?//

எங்களையெல்லாம் பயமுறுத்தாதீங்கய்யா...

அப்பாவி முரு said...

//தெரிந்தே தவறு செய்வது, மற்றவர் சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்ள மறுப்பது... என்ன கொடுமை சார் இது?//

எங்களையெல்லாம் பயமுறுத்தாதீங்கய்யா...

அப்பாவி முரு said...

//சடாரென்று ஹெட்லைட்டை அவர் முகத்தில் அடித்தேன். அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.//

உங்க கணக்குலையா...

டம்பி மேவீ said...

பல்பு எத்தனை watts ????

டம்பி மேவீ said...

" Anonymous said...
very nice

March 24, 2010 10:04 AM


Anonymous said...
very nice

March 24, 2010 10:04 AM'


யாருப்பா இந்த அனானி ?????

வி.பாலகுமார் said...

வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
http://solaiazhagupuram.blogspot.com/2010/03/blog-post_24.html

நானும், சிக்னலை மீறாம இருக்கேனுட்டு அப்பப்போ பல்பு வாங்கிட்டு தான் இருக்கேன்.

எட்டு மணி உங்களுக்கு மாலை யா? காலா காலத்துல வீட்டுக்கு போங்க சார்...

//Cable Sankar said...
சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். //

அட, சொல்லவே இல்ல :)

☼ வெயிலான் said...

எல்லாத்தையும் கொஞ்சம் சூதானமா ஓட்டுங்க தல! :)

மணிஜீ...... said...

/ தமன்னா..ஆ..ஆ.. வேறு இருக்கிறார். லிங்குசாமி என்ன பண்ணக் காத்து இருக்கிறார் என்று தெரியவில்லை.. பார்க்கலாம்.//


பார்க்க முடியுமா என்ன? வாழ்த்துக்கள் தருமி ஐயாவுக்கும், டாக்டருக்கும்...

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

ஓவரா வண்டில சுத்துரிங்க போல..

//.. புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் அந்தக் களை வருமோ? ..//

பொறாம..??

தேவன் மாயம் said...

Cable Sankar said...
சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்!///

ஆமா!! கூப்பிட்டிருக்கோம்ல!!

மங்குனி அமைச்சர் said...

//உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!! //

பைக்ல உட்காந்தே எல்லாத்தையும் யோசிச்சு இருக்கீங்க

//பிரேக் போட்டால் அத்தனை டிரேவும் பின்னால் வரும் //

சார் ஒரு சின்ன திருத்தம் , ப்ரேக் போட்டா டிரேவும் எல்லாம் பின்னாடி வராது , முன்னாடிதான் போகும் , அப்புறம் அந்த டோர் மேட்டர் கரைக்ட்டு

இரா.சிவக்குமரன் said...

ம்.........

jaffer erode said...

\\ சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.\\

சொல்லவே இல்ல....

\\ //மனைவி அடிக்கடி ஏதோ சொல்வதும் சிரிப்பதுமாக கணவனின் முகத்தருகே குனிந்து முத்தமிடுவதுமாக இருந்தார். நம்ம சுழிதான் சும்மா இருக்காதே.. சடாரென்று ஹெட்லைட்டை அவர் முகத்தில் அடித்தேன். அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். //


உங்களை பார்த்தவுடனே தெரிஞ்சிருக்கு வெறுப்பேத்தனும்னு!\\

அந்த கொடுப்பனை உங்களுக்கும் வாய்க்க வாழ்த்துக்கள்...

நேசமித்ரன் said...

சிங்கப் பூரா ரைட்டு :)

ம்ம் பல்புகள் பலவிதம் சில பல்புகள் பெட்ரோ மாக்ஸ் மேண்டில்
சிலது சீரியல் மாலை
சிலது கடலுக்குள்ளாற போறவுக நெத்தில கட்டிட்டு போவாங்களே
அப்பிடி

நீங்க அந்த பால்காரன்கிட்ட வாஙுனது புது ஜோடிங கிட்ட வாஙுனது எல்லாம்
நீங்களே ச்சூஸ் தெ பெஸ்ட் ஆன்சர்


எவண்டா அவன் எங்க வாத்தியாருக்கே
கொஸ்டின் பேப்பரான்னு சத்தம் வருது கா.பா அப்ப நான் கெளம்புறேன்

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

// Anonymous said...
very nice//

அனானி அண்ணே.. நன்றிங்கோ..

//டம்பி மேவீ said...
VOTE POTACHU... PIRAGU VANTHU PADIKKIREN//

ரைட்டு

//Joe said...
பாத்து சூதானமா வண்டி ஓட்டுங்கப்பு//

கண்டிப்பா தல.. உங்க அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி :-)))

//Cable Sankar said...
சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.//

ஆசையும் திட்டமும் இருக்கு தல.. Confirm ஆகட்டும்..

//♠ ராஜு ♠ said...
Tamil Veliyil Vetri petra Nanbarkalukku vazthukkal...! Paiya..! Maduraila opening showvukku Ticket kidaikkkuthaanu parungka.!:-)ஆக்சுவலி, ஐ ஹேவ் நோ டமில் ஃபாண்ட் ஹியர். தட்ஸ் ஒய் ஐ யூஸ்டு இங்கிலீபீஸ் ஃபாண்ட்..! ஜாரி..!//

அடேங்கப்பா.. ஆட்டம் பலமா இருக்கே.. (தில்லானா மோகனாம்பாள் பாலையா சொன்னது..)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
"ரன்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.// உன்மைதான்//

நிறைய பேரு அப்படித்தான் சொல்றாங்க நண்பா

//வால்பையன் said...
உங்களை பார்த்தவுடனே தெரிஞ்சிருக்கு வெறுப்பேத்தனும்னு!
:) //

ஹ்ம்ம்... ஒரு பச்சப்புள்ளைய.. எப்படித்தான் பார்த்தவுடனே கண்டு பிடிப்பாங்களோ..

//தமிழரசி said...
வாழ்த்துக்கள் தருமி அய்யா அவர்களுக்கும் நம்ம டாக்டர்,தேவன்மயம் அவர்களுக்கும்//

அவர்களின் சார்பாக என் நன்றி தமிழ்

//வானம்பாடிகள் said...
பல்ப் வாங்கினா வச்சுக்கணும். எரிய விட்டு பார்க்கப்படாது:))//

நமக்கு அந்த சூது எல்லாம் தெரியாது பாலா சார்.. பாருங்க.. கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டு தான் மறுவேலை..

//க.பாலாசி said...
வண்டியில உட்காந்து யோசிச்சதுன்னு தலைப்பிருந்தா நன்னாயிருக்கும்...//

பைக் ஸ்பெஷல்னு போடலாம்னு நினைச்சேன் பாலாஜி.. அப்புறம் விபத்து பத்தி எழுதுற இடத்துல அது சரியா இருக்காதுன்னு தோனுச்சு.. அதான் போடல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அப்பாவி முரு said...
நன்றி வேண்டியதில்லை... வாழ்த்துகள் போதும்...//

:-)))

//அப்பாவி முரு said...
எங்களையெல்லாம் பயமுறுத்தாதீங்கய்யா...//

ச்சே ச்சே.. நீங்க நல்லவருன்னு எனக்குத் தெரியும் நண்பா..:-))

//அப்பாவி முரு said...
உங்க கணக்குலையா...//

அதுதான தெரியல..:-((

//டம்பி மேவீ said...
பல்பு எத்தனை watts ????//

கம்பெனி சீக்ரட்..

// டம்பி மேவீ said...
" Anonymous said...
very niceயாருப்பா இந்த அனானி ?????//

பொறுக்காதே? இருந்துட்டுப் போகட்டும்.. விடுப்பா.. (சத்தியமா அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் போடப்பட்ட பின்னூட்டம் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்..ஹி ஹி ஹி)

கார்த்திகைப் பாண்டியன் said...

//வி.பாலகுமார் said...
நானும், சிக்னலை மீறாம இருக்கேனுட்டு அப்பப்போ பல்பு வாங்கிட்டு தான் இருக்கேன்.//

விடுங்க பாலா.. இதெல்லாம் பொது வாழ்க்கைல சகஜமப்பா.. நிலைமை மாறும்..

//எட்டு மணி உங்களுக்கு மாலை யா? காலா காலத்துல வீட்டுக்கு போங்க சார்... //

excuse me.. யூத்னா அப்படித்தான்ப்பா..:-)))

//☼ வெயிலான் said...
எல்லாத்தையும் கொஞ்சம் சூதானமா ஓட்டுங்க தல! :)//

சரி.. புரியுது.. பார்த்துக்கலாம் தல..:-))))

//மணிஜீ...... said...
பார்க்க முடியுமா என்ன? வாழ்த்துக்கள் தருமி ஐயாவுக்கும், டாக்டருக்கும்...//

ஆகா.. எப்படி எல்லாம் "A"த்தனம்மா யோசிக்கிறாரு?

// திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said... ஓவரா வண்டில சுத்துரிங்க போல.. பொறாம..??//

Exactly..:-)))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேவன் மாயம் said...
ஆமா!! கூப்பிட்டிருக்கோம்ல!!//

நன்றி தேவா சார்.. கலக்குவோம்..

//மங்குனி அமைச்சர் said...
பைக்ல உட்காந்தே எல்லாத்தையும் யோசிச்சு இருக்கீங்க சார் ஒரு சின்ன திருத்தம் , ப்ரேக் போட்டா டிரேவும் எல்லாம் பின்னாடி வராது , முன்னாடிதான் போகும் , அப்புறம் அந்த டோர் மேட்டர் கரைக்ட்டு//

திருத்தத்துக்கு நன்றிங்க.. அடச்சு வச்சு இருந்தாங்க.. கண்டிப்பா வெளில விழக வாய்ப்பு உண்டு.. அதுதான் சொல்லி இருக்கேன்

//இரா.சிவக்குமரன் said...
ம்.........//

;-)))

//jaffer erode said...
ந்த கொடுப்பனை உங்களுக்கும் வாய்க்க வாழ்த்துக்கள்...//

உங்க வாக்கு பொன்னப் பலிக்கட்டும் தல..

"உழவன்" "Uzhavan" said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
ஜோக்ஸ் அபாரம் நண்பா.

வரதராஜலு .பூ said...

//"நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா இருந்தாலும் சுத்தி இருக்குற மக்கள் ஒழுங்கா ஓட்டலைன்னா கஷ்டம்தான்.."//

சத்தியமான உண்மை. நமக்கு நேரம் சரியில்லன்னா என்ன வேணும்னாலும் நடக்கும்.

எப்பா, எத்தினி பல்பு கலெக்ஷன் உங்கக்கிட்ட? பத்தரமா சேத்துவைங்க.

ஜோக்குல்லாம் எல்லாமே செம.

//Blogger Cable Sankar said...

சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.//

அப்படியா? வாழ்த்துக்கள்.

மாதேவி said...

மொக்கை சூப்பர்.

வெற்றி said...

//சண்டைக் காட்சிகளும் பார்க்கும்பொழுது "ரன்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.//

அதனாலென்ன..நல்லா இருந்தா சரிதான் சார்..

வெற்றி said...

//"உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!!"//

எங்க உக்கார்ந்து..பைக்லையா :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசமித்ரன் said...
சிங்கப் பூரா ரைட்டு :)ம்ம் பல்புகள் பலவிதம் சில பல்புகள் பெட்ரோ மாக்ஸ் மேண்டில் சிலது சீரியல் மாலை
சிலது கடலுக்குள்ளாற போறவுக நெத்தில கட்டிட்டு போவாங்களே//

வகை வகையா சொல்லி ஓட்டுறதுல என்னவொரு சந்தோஷம்..:-)))))

//"உழவன்" "Uzhavan" said...
வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!ஜோக்ஸ் அபாரம் நண்பா.//

நன்றி தல..

//வரதராஜலு .பூ said...
சத்தியமான உண்மை. நமக்கு நேரம் சரியில்லன்னா என்ன வேணும்னாலும் நடக்கும்.எப்பா, எத்தினி பல்பு கலெக்ஷன் உங்கக்கிட்ட?பத்தரமா சேத்துவைங்க//

:-)))))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//மாதேவி said...
மொக்கை சூப்பர்.//

நன்றிங்க..

//வெற்றி said...
அதனாலென்ன..நல்லா இருந்தா சரிதான் சார்..//

ராசா... வாங்க போங்கன்னு மட்டும் கூப்பிடுங்க.. சார் மோர் எல்லாம் வேண்டாம்ப்பா..:-)) எப்படியா உங்களால எல்லாத்தையும் தாங்கிக்க முடியுது?

//வெற்றி said...
எங்க உக்கார்ந்து..பைக்லையா :)//

அவுனு.. அதேதான்..:-)

வினோத்கெளதம் said...

லைட்டு அடிச்சு பார்த்துட்டு..இப்ப என்னனா..;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இதென்ன கெட்டப் பழக்கம்..? லைட் அடிச்சுப் பார்க்குறது..? சின்னப் புள்ளைன்னு நினைப்பா..?

ஜெட்லி said...

பையா...பத்தி எனக்கும் அதான் தோணிச்சு...
பார்ப்போம்....

கார்த்திகைப் பாண்டியன் said...

// வினோத்கெளதம் said...
லைட்டு அடிச்சு பார்த்துட்டு..இப்ப என்னனா..;)//

சரி சரி.. அமைதி..:-)))

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said... இதென்ன கெட்டப் பழக்கம்..? லைட் அடிச்சுப் பார்க்குறது..? சின்னப் புள்ளைன்னு நினைப்பா..?//

ஐயோ அண்ணே.. யூத்துன்னா இப்படி எல்லாம் சேட்டை பண்ணனும்ணே..

//ஜெட்லி said...
பையா...பத்தி எனக்கும் அதான் தோணிச்சு... பார்ப்போம்....//

காத்திருந்து காத்திருந்து..:-))

~~Romeo~~ said...

\\ "நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா இருந்தாலும் சுத்தி இருக்குற மக்கள் ஒழுங்கா ஓட்டலைன்னா கஷ்டம்தான்.."//

உண்மையான வரி தலைவரே.


\\அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். எனக்கோ சங்கடமாக போய் விட்டது//

இப்படியா உங்க பீஸ் போகணும் .. ஹா ஹா ஹா

செல்வராஜ் ஜெகதீசன் said...

வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

// ~~Romeo~~ said...
உண்மையான வரி தலைவரே.இப்படியா உங்க பீஸ் போகணும் .. ஹா ஹா ஹா//

ஹோய்.. என்ன இப்படி கெக்க பிக்கன்னு சிரிப்பு வேண்டிக் கிடக்கு.. ஒரு மனுஷன் அசிங்கப்பட்டதுல இவ்வளவு சந்தோஷமா? சின்னப்புள்ளத்தனமா?

//செல்வராஜ் ஜெகதீசன் said...
வாழ்த்துகள்//

நன்றி நண்பா..

Asir said...

போன சனிக்கிழமை மாலை. நானும் எனது நண்பரும் இருசக்கர வாகனத்தில் என் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம் //

யாரோ அடிபட்டுக் கிடக்கிறார் என்றில்லாமல் அத்தனை மக்கள் உதவிக்கு வந்து நின்றதைப் பார்த்தபோது மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
//In monday morning you do the same thing ? Just i think to ask you.. Thats all

kannamma said...

///சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.///
அப்படியா? வாழ்த்துக்கள்.
(நிறைய பல்பு வாங்குறீங்க போல பேசாம ஒரு கட ஆரமிக்கலாமே !)காமெடி எல்லாமே சூப்பர் !