"இல்லப்பா.. எனக்கு அவரோட படம் அவ்வளவா பிடிக்காது.."
"ஐயையோ.. இந்தப் படத்துல சிம்பு நீட்டா நடிச்சு இருக்காருண்ணே.. எந்த சேட்டையும் இல்ல.. நம்பிப் பார்க்கலாம்.."
"ச்சே ச்சே.. நான் சிம்புவ சொல்லலைபா.. கவுதம சொன்னேன்.."
"அவ்வவ்.. என்னண்ணே சொல்றீங்க.."
"சிம்பு படம்னா கூட இதுதான் இருக்கும்னு தெரியும்.. வெறும் மசாலாப் படம்னு பார்த்துட்டு வந்திடலாம்.. ஆனா கவுதம்?.. அது என்னமோ தெரியல.. எனக்கும் அவருக்கும் ஆவுறதில்ல.. தமிழ்ல இங்கிலீஷு படம் எடுக்குறவரு.. காக்க காக்க ஒரு படம் மட்டும்தான் பிடிச்சது.. அதனாலதான் யோசிக்கிறேன்.."
என்னோடு பேசிக் கொண்டிருந்தவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே விலகிப் போனார்.
இயல்பாக இருப்பது ஒரு வகை. இயல்பாக இருப்பதுபோல காட்டிக்கொள்வது இன்னொரு வகை. கவுதமின் படங்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவை என்பதுதான் என்னுடைய கருத்து. இன்று வரைக்கும் அவருடைய படங்கள் பாடல்களாலேயே தப்பித்துக் கொண்டு வருகின்றன. நடிப்பவர்கள் எல்லோரும் ரொம்பவே அண்டர்பிளே செய்வது.. திணிக்கப்பட்டது போன்று தெரியும். அத்தோடு அவர் காமிக்கும் மேல்தட்டு வர்க்கத்தோடு என்னால் எப்போதும் என்னை இணைத்து பார்க்க முடிவதில்லை. அதனாலேயே வி.தா.வ பார்க்காமல் இருந்தேன்.
அந்த சமயத்தில்தான் நண்பர் முரளிகுமார் பத்மநாபனின் குறுந்தகவல் வந்தது... "வி.தா.வ பார்க்காதவர்கள் காதல் தேவதையின் சாபத்துக்கு ஆளாவார்கள்..." படம் அத்தனை நன்றாகவா இருக்கிறது? பதிவுகளிலும் நண்பர்கள் ஆகா ஓகோவென்று எழுதி இருந்தார்கள். அசலில் பட்ட அடி ஞாபகம் இருந்ததால் மாணவர்களிடம் கேட்டேன். அவர்களும் நன்றாகவே இருப்பதாக சொன்னார்கள். சரி நம்பிப் போகலாம் என்று முடிவெடுத்து தான் படத்தைப் பார்த்தேன்.
படத்தில் அடிக்கடி சிம்பு ஒரு வசனத்தை சொல்கிறார். "ஊருல எத்தனையோ பொண்ணு இருக்கும்போது நான் ஏன் சார் ஜெச்சிய லவ் பண்ணுனேன்..?" அதேதான். ஊருல எத்தனையோ தியேட்டர் இருக்கு.. நல்ல படம், நாதாரிப் படம்னு எத்தனையோ ஓடுது.. இந்தப் படத்த நான் ஏன் பார்த்தேன்?
ரொம்பவே சிம்பிளான கதை. மெக்கானிக்கல் படித்து விட்டு இணை இயக்குனராக விரும்பும் சிம்பு. போலாரிசில் வேலை பார்க்கும் மலையாளப் பெண் திரிஷாவைப் பார்த்தவுடன் காதலிக்கிறார். சில பல வேண்டாம்களுக்குப் பிறகு திரிஷாவும் காதலிக்கிறார். மதம், குடும்பம்.. இதை எல்லாம் மீறி காதலர்கள் இணைந்தார்களா.. சிம்பு தன் கனவுப்படத்தை எடுத்தாரா என்பதுதான் கதை.
கையைக் காலை ஆட்டாத சிம்பு. யங் சூப்பர் ஸ்டாராம் (அடங்குங்கப்பா..) காதலை சட்டென்று சொல்வது.. பின் அதற்காக வருத்தப்படுவது.. சின்ன சின்ன சந்தோஷங்கள்.. காதலைப் பிரிந்து வாடுவது என அமைதியாக நடித்து இருக்கிறார். அதே நேரத்தில் மனிதர் திரிஷாவோடு வாழ்ந்து இருக்கிறார். எத்தன இச்சு? முடியலடா சாமி. படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது திரிஷாதான். செம க்யூட். அவருடைய கேரியரில் இதுதான் பெஸ்ட் என்று சொல்லலாம். எல்லா உடைகளும் அவருக்கு பொருந்துவது அழகு. சிம்புக்கு உதவும் நண்பராக வரும் கணேஷின் ஒன் லைனர்கள் சிரிக்க வைக்கின்றன.
படத்தை தூக்கி நிறுத்துவது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவுதான். காட்சிகள் அத்தனையும் தெள்ளத்தெளிவு. குறிப்பாக கேரளா காட்சிகள்.. பாடல்களை படமாக்கி இருக்கும் விதமும் அருமை. ரகுமானின் இசையைப் பற்றி சொல்லவா வேண்டும். வழக்கமான வடிவங்களில் இருந்து மாறுபட்டு பாடல்களை கொடுத்து இருக்கிறார். ஹோசன்னா, ஓமனப்பெண்ணே, கண்ணுக்குள் கண்ணை வைத்து.. மூன்றும் என்னுடைய பேவரைட்ஸ். பின்னணி இசையில் ரொம்ப நாள் கழித்து கிழித்து இருக்கிறார் ரகுமான். ஆனால் அதே நேரத்தில் ஒரு சில காட்சிகளில் தூங்கி விட்டார் போல. அண்ணனோடு சண்டை என திரிஷா - சிம்பு மோதிக் கொள்ளும் காட்சி, பிரியும்போது வரும் சோகம் என மனதை உருக்கும் சோகப் பின்னணியில் பின்னப் போகிறார் என்று பார்த்தால், அங்கே வாத்தியங்கள் கிடந்து உருளுகின்றன. என்ன கொடுமை சார் இது? கண்ணை உறுத்தாத கலை ராஜீவனுடையது. எடிட்டிங்கில் ஆன்டணி தன்னால் முடிந்ததை செய்து இருக்கிறார்.
படத்தின் அடிப்படையே திரிஷாவின் கேரக்டர்தான். அவர் பிராக்டிகலா இல்லை காதலில் உணர்ச்சி வசப்படக் கூடியவரா? ஒன்றுமே புரியவில்லை. ஒரு காட்சியில் நாம் நண்பர்களாக இருப்போம் என்கிறார். அடுத்த காட்சியில் அத்தனை பழக்கம் இல்லாத ஒருவனை ரயில் கிஸ்ஸடிக்க விடுகிறார். அடுத்த காட்சியில் மீண்டும் நாம் நண்பர்கள் என பல்டி அடிக்கிறார். மதம், வயது எல்லாம் பற்றி பேசுகிறார், இவர் பிராக்டிகல் ஆனவர் என்று சொல்ல முடிகிறதா என்றால்.. அதுவும் இல்லை. தன் குடும்பத்தை பற்றி எதுவுமே யோசிக்காமல் கல்யாணத்தை நிறுத்துபவரை அப்படி சொல்லவும் முடியாது. ஜெயிலில் இருந்து வரும் சிம்புவிடம் அத்தனை உருகி உருகி காதல் பேசுபவர், வேலை காரணமாக அலைந்து திரியும் சிம்புவைப் புரிந்து கொள்ளாமல் பிரிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திரிஷாவின் கேரக்டேரைஷேஷனில் தானும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார் கவுதம். அதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் என சொல்லுவேன்.
படத்தின் முதல் ஒரு மணி நேரம் அட்டகாசம். நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு? திரைக்கதை இத்தனை மெதுவாக இருந்தால்தான் அது கிளாஸ் படம் என்று யாரோ இயக்குனரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள். இரண்டாம் பாதி நத்தை வேகத்தில் போகிறது. திரிஷா தனது திருமணத்தை நிறுத்தும் இடைவேளையில் பிடித்த சனி... கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வரை விடவில்லை. "I am crazy about you, I wanna make love to you.." வழக்கமாக கவுதம் படங்களில் வருவது போலவே குட்டி குட்டியான வசனங்கள். அதுவும் படம் பார்ப்பவர்களுக்கு புரிந்து விடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு பேசுகிறார்கள். மணிரத்னம் படமே பரவாயில்லாமல் இருக்கும் போல. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இதை வைத்தே படம் காமிப்பீர்கள் கவுதம்?
படம் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தங்கள் முதல் காதல் ஞாபகம் வரும் என்கிறார்கள். எனக்கு சத்தியமாக தோன்றவில்லை. இதில் வரும் candy floss காதலோடு மனம் ஒட்டவே இல்லை. ரொம்பவே மேலோட்டமான காதல் படம்.
கவுதம் தன்னோட அடுத்த படம் தலையோட பண்ணப் போறாராம். ஏற்கனவே நொந்து போய் இருக்கோம். இது வேறவா? ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. நடத்துங்க..
விண்ணைத் தாண்டி வருவாயா - மனதுக்கு வெகு தொலைவில்
45 comments:
விமர்சனம் நல்லா இருக்கு..
ஆனாலும் படத்தப் பாத்துட்டுத்தான் வருவேன்.. :))
நல்லாத்தான் இருக்கு உங்க கதை,,,ஆனாலும் ஒரு தடவை பாக்க விடமாட்டீங்களா?
இந்தப் படத்தைப் பற்றிய புகழுரைகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை. ஒருவிதமான கூட்ட மனப்பான்மையில் எல்லாரும் படத்தை ஆஹா ஓஹோவென்று புகழ்கிறார்கள். இதைப் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களை முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள். :-))
நான் நேற்றோடு இந்த படத்தை நான்கு முறை பார்த்துவிட்டேன்...
எங்க எப்படி நடந்தது என்று தெரியலை அண்ணே..
But I am in Love with Koutham vasudev menon.....
நெசமாலும் நீங்க யூத்து தான் :)
:)
நல்ல விமர்சனம், வழக்கம் போல உங்களது நக்கல் நையாண்டியுடன்! ;-)
அசலை விட இந்த படம் எவ்வளவோ தேவலாம்னு சில பேர் சொல்றாங்களே, அது பற்றி உங்கள் கருத்தென்ன?
கொஞ்சம் உணர்ச்சி வசப்ப் பட்டுட்டீங்க போலிருக்கு...
//But I am in Love with Koutham vasudev menon.....
//
என்ன அன்பு இது.....
//முகிலன் said...
விமர்சனம் நல்லா இருக்கு..ஆனாலும் படத்தப் பாத்துட்டுத்தான் வருவேன்:))//
சொந்தக் காசுல சூனியம்.. நடக்கட்டும்
//பிரபா said...
நல்லாத்தான் இருக்கு உங்க கதை,,,ஆனாலும் ஒரு தடவை பாக்க விடமாட்டீங்களா?//
ஒரு தடவ பார்த்துதானே நொந்து போயிருக்கேன்
// சேட்டைக்காரன் said...
இந்தப் படத்தைப் பற்றிய புகழுரைகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை. ஒருவிதமான கூட்ட மனப்பான்மையில் எல்லாரும் படத்தை ஆஹா ஓஹோவென்று புகழ்கிறார்கள். இதைப் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களை முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள். :-))//
நான் பெருமையாவே சொல்லிக்கிறேன் நண்பா.. நான் ஒரு முட்டாளுங்கோ.. ஆனா அதுக்காக இந்தப் படம் நல்லாயிருக்குன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்..
// Anbu said...
நான் நேற்றோடு இந்த படத்தை நான்கு முறை பார்த்துவிட்டேன்... எங்க எப்படி நடந்தது என்று தெரியலை அண்ணே.. But I am in Love with Koutham vasudev menon.....//
பயபுள்ள பரவச நிலையில சுத்திக்கிட்டு திரியுது.. ஒடம்புக்கு நல்லதில்ல தம்பி:-)))
// ☀நான் ஆதவன்☀ said...
நெசமாலும் நீங்க யூத்து தான் :)//
வஞ்சப்புகழ்சியா தல?
//வானம்பாடிகள் said...
:)//
இதுக்கு நான் என்ன சொல்றது... சரி.. நானும் :-)))))
//Joe said...
நல்ல விமர்சனம், வழக்கம் போல உங்களது நக்கல் நையாண்டியுடன்! ;-)
aசலை விட இந்த படம் எவ்வளவோ தேவலாம்னு சில பேர் சொல்றாங்களே, அது பற்றி உங்கள் கருத்தென்ன?//
அசல்ல பாட்டும் கொத்து அண்ணே .. இங்க பாட்டுதான் படத்த காப்பாத்துது..
//இராகவன் நைஜிரியா said...
கொஞ்சம் உணர்ச்சி வசப்ப் பட்டுட்டீங்க போலிருக்கு..//
ரொம்பவே அண்ணே...
//ஜெட்லி said...
//But I am in Love with Koutham vasudev menon.....
//
என்ன அன்பு இது.....//
வயசுப்பய.. திரிஷா பேர சொல்ல வெட்கப்பட்டுக்கிட்டு அப்படி சொல்லுது ஜெட்லி
சரியாச் சொன்னீங்க, வழக்கமா சரண் படத்துக்கு வித்யாசாகர் நல்ல பாடல்களைக் கொடுப்பாரு, இந்த தடவ ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல.
மதுரைல இருக்கும் என் சித்தி, காய்கறி விக்கிற பதினைஞ்சு வயசுப் பையனைக் கூட "அண்ணே, அண்ணே..."-ன்னு தான் கூப்பிடுவாங்க. அது மாதிரியே தான் நீங்களும் என்னை மாதிரி ஒரு டீனேஜரை தேவையில்லாமே அண்ணே-ன்னு கூப்பிடுறீங்க? ;-)
//ஜெட்லி said...
//But I am in Love with Koutham vasudev menon.....
//
என்ன அன்பு இது.....//
இப்போ தான் அதெல்லாம் சட்டப்படி தப்பில்லன்னு ஆயிடிச்சில்ல, அவரு ஆசைப்படி இருக்கட்டும் விடுங்க ;-)
Re recording is very normal.
ரொம்ப எதிர்ப்பார்த்து போனீங்களோ?
எனக்கும் வி.தா.வ. பிடிக்கவில்லை.
நண்பர்களிடம் சொன்னால், நீ ஒரு பட்டிக்காட்டான் உனக்கு அனுபவிக்கத் தெரியவில்லை என்கிறார்கள். :-(
அப்புறம் கவுதமின் மின்னலே எனக்கு ரொம்ப பிடிக்கும்(முக்கியமா முதல் அரை மணி நேரம்..)
காய்ந்து போன பஜ்ஜி
//Joe said...
சரியாச் சொன்னீங்க, வழக்கமா சரண் படத்துக்கு வித்யாசாகர் நல்ல பாடல்களைக் கொடுப்பாரு, இந்த தடவ ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல.//
அண்ணே.. அவர் பரத்வாஜ்.. வித்யாசாகர் இல்ல..
//மதுரைல இருக்கும் என் சித்தி, காய்கறி விக்கிற பதினைஞ்சு வயசுப் பையனைக் கூட "அண்ணே, அண்ணே..."-ன்னு தான் கூப்பிடுவாங்க. அது மாதிரியே தான் நீங்களும் என்னை மாதிரி ஒரு டீனேஜரை தேவையில்லாமே அண்ணே-ன்னு கூப்பிடுறீங்க? ;-)//
வீரா படம் பார்த்தீங்களா நன்பா? அதுல மீனா ரொஜாவ அண்ணின்னு கூப்பிடும்.. அதெ மாதிரி ரோஜாவும் மீனாவ அண்ணின்னு கூப்பிடுவாங்க.. ஹி ஹி ஹி.. எல்லாம் கொடுத்து வாங்குரதுதான.. அது நம்ம ஊருப் பாசம்ணே..:-))
//இப்போ தான் அதெல்லாம் சட்டப்படி தப்பில்லன்னு ஆயிடிச்சில்ல, அவரு ஆசைப்படி இருக்கட்டும் விடுங்க ;-)//
அடப்பாவமே.. அன்பு அப்படித்தான்னு முடிவே பண்ணீட்டீங்க பொலயெ..:-))))
//S said...
Re recording is very normal.//
At places, i felt so boss..
//அபுஅஃப்ஸர் said...
ரொம்ப எதிர்ப்பார்த்து போனீங்களோ?//
எல்லாம் சுத்தி இருக்குற மக்கள் பண்ணின வேலை நண்பா..
//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான் said...
எனக்கும் வி.தா.வ. பிடிக்கவில்லை.
நண்பர்களிடம் சொன்னால், நீ ஒரு பட்டிக்காட்டான் உனக்கு அனுபவிக்கத் தெரியவில்லை என்கிறார்கள். :-(//
விடுங்க சம்பத்.. இவஙக எப்பவுமே இப்படித்தான்.. இதை எல்லாம் கண்டுக்க கூடாது..
//அப்புறம் கவுதமின் மின்னலே எனக்கு ரொம்ப பிடிக்கும்(முக்கியமா முதல் அரை மணி நேரம்..)//
எனக்கு மின்னலேல பிடிச்ச விஷயம் மாதவன் மட்டும்தான் தல..
//டம்பி மேவீ said...
காய்ந்து போன பஜ்ஜி//
அதேதான் நண்பா..
உட்டுத் தள்ளுங்க பாஸ்!
ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கு!
அதென்ன இயல்பாக இருப்பது போல் காட்டி கொள்வது .. கே பாலச்சந்திரனின் பாராட்டை பெற்று விட்டார் கவுதம் என்று கதைக்கவில்லை . இயக்குனர்களில் சிறந்தவர் என்று . என்னை பொறுத்தவரை யாரும் கிட்டே வர முடியாது . கேவலாமான விமர்சகர்களை தாண்டி படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி . ஒரு படத்தை வெறுமனே ஒரு நடிகருக்காக பார்க்கும் கூட்டம் இன்னும் உண்டு . வெளியோட்டமாக தன்னுடைய கருத்தை சொல்லும் விமர்சகர்களும் உண்டு . ஒரு படைப்பு சினிமா . அதை அழகாக யதார்த்தமாக காட்டியுள்ளார் கவுதம் மேனன். தமிழ் சினிமாவை இன்னொரு தளத்திற்க்கு இட்டு சென்றுள்ளது
எனக்கு மின்னலேல பிடிச்ச விஷயம் மாதவன் மட்டும்தான் தல..
என்ன ஒரு ரசனை உள்ளம் .
ஒரு ஹீரோவுக்ககவா படம் பாப்பீங்க . அது சரி மனுஷன் காதலை ரத்தமும் வெறியும காட்டுகிற சினிமால இவளவு அழகா காட்டியிருக்கரே அதுவும் தமிழ் சினிமாவுக்கு பழக்கமில்லாத பாணி . நீங்க எல்லாம் எந்த மாதிரியான திரைப்பட ரசிகர்கள் என்று விளங்குகிறது . ஹிந்தி சினிமாக்காரன் எங்கயோ போறான் போறான் எண்டு சொன்ன போதாது . அதையும் தாண்டி தரமாக வந்தா அதை ஏற்க்க தெரிஞ்சிருக்கோணும் . ஒரு சிறந்த ரசனையாளன் படைப்பு . மசாலாக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல படம் .
நீங்க என்ன தான் சொன்னாலும்..நான் படத்தை பார்க்கதான் போகிறேன்..:)
என்னை பொறுத்தவரை கெளதம் படங்கள் அது ஒரு தனி ட்ராக்..அவரும் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக தேவை..
"//டம்பி மேவீ said...
காய்ந்து போன பஜ்ஜி//
அதேதான் நண்பா.."
நான் படத்தை சொல்லவில்லை ...உங்க பதிவை தான் சொன்னேன்.
//pappu said...
உட்டுத் தள்ளுங்க பாஸ்!
ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கு!//
ஆமா பப்பு.. உண்மைதான்.. எனக்கு பிடிக்காத படம் உங்கலுக்கும் பிடிக்கக் கூடாதுன்னு நான் சொல்ல முடியாது..
//வினோத்கெளதம் said...
நீங்க என்ன தான் சொன்னாலும்..நான் படத்தை பார்க்கதான் போகிறேன்..:) என்னை பொறுத்தவரை கெளதம் படங்கள் அது ஒரு தனி ட்ராக்..அவரும் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக தேவை..//
Opinions differ.. Enjoy..:-))
//டம்பி மேவீ said...
நான் படத்தை சொல்லவில்லை உங்க பதிவை தான் சொன்னேன்.//
அடப்பாவி மனுஷா.. கொஞ்சம் லேட்டுதான்.. அதுக்காக இப்படியா சொல்றது?
//S.Sudharshan said...
அதென்ன இயல்பாக இருப்பது போல் காட்டி கொள்வது .. கே பாலச்சந்திரனின் பாராட்டை பெற்று விட்டார் கவுதம் என்று கதைக்கவில்லை . இயக்குனர்களில் சிறந்தவர் என்று . என்னை பொறுத்தவரை யாரும் கிட்டே வர முடியாது .//
இது உங்கள் கருத்து நண்பா..
//கேவலாமான விமர்சகர்களை தாண்டி படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி .//
வெற்றி பெறும் படங்கள் எல்லாம் நல்ல படம் கிடையாது நண்பா..
//ஒரு படத்தை வெறுமனே ஒரு நடிகருக்காக பார்க்கும் கூட்டம் இன்னும் உண்டு . வெளியோட்டமாக தன்னுடைய கருத்தை சொல்லும் விமர்சகர்களும் உண்டு . ஒரு படைப்பு சினிமா . அதை அழகாக யதார்த்தமாக காட்டியுள்ளார் கவுதம் மேனன். தமிழ் சினிமாவை இன்னொரு தளத்திற்க்கு இட்டு சென்றுள்ளது//
நீங்கள் எதை யதார்த்தம் என்று சொல்லுகிறீர்கள்? முதல் நாள் பார்த்த பெண்ணை அடுத்த நாளே முத்தமிட முயல்வதும் காதலென்றே ஒத்துக் கொள்ளாத அவள் அதற்கு சம்மதிப்பதும்தானா? உங்களுக்கு அப்படித் தோன்றலாம்.. ஆனால் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை.. ஆங்கிலப் படங்களின் தாக்கம் தான் பெரிதாகப்படுகிறது.. அதே போல வலையுலகில் வரும் விமர்சனங்கள் எல்லாம் அவரவருடைய பார்வையே.. அது உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
//S.Sudharshan said...
எனக்கு மின்னலேல பிடிச்ச விஷயம் மாதவன் மட்டும்தான் தல.. என்ன ஒரு ரசனை உள்ளம் .ஒரு ஹீரோவுக்ககவா படம் பாப்பீங்க .//
ஏங்க.. மாதவன்னு சொன்னா அவர் அழகுன்னா அர்த்தம்..? அவர் நடிப்புன்னுதானங்க நான் சொன்னேன்.. இருக்கட்டும்.. அப்படியே நான் பார்த்தா என்ன தப்பு.. ரஜினி - கமல் ஆகியொருக்காக ஓடுன படங்கள் இல்லையா என்ன? என்னுடைய ரசனை என்னன்னு நீங்க கலவலைப்படுறது நியாயமா?
//அது சரி மனுஷன் காதலை ரத்தமும் வெறியும காட்டுகிற சினிமால இவளவு அழகா காட்டியிருக்கரே அதுவும் தமிழ் சினிமாவுக்கு பழக்கமில்லாத பாணி . நீங்க எல்லாம் எந்த மாதிரியான திரைப்பட ரசிகர்கள் என்று விளங்குகிறது . //
நல்லா இருக்குற எதையும் நாங்க வரவேற்கதான் செய்வோம் நண்பா.. நாங்க எந்த மாதிரியான ரசிகர்கல் என்கிற அரிய கண்டுபிடிப்பு ஒண்ணு வேற பண்ணி இருக்கீங்க.. அத கொண்டு போய் ஏதாவது கல்வெட்டுல பொறிச்சு வைங்க.. நாளைய சமுதாயம் பார்த்து பலனடையும்..
//ஹிந்தி சினிமாக்காரன் எங்கயோ போறான் போறான் எண்டு சொன்ன போதாது . அதையும் தாண்டி தரமாக வந்தா அதை ஏற்க்க தெரிஞ்சிருக்கோணும் . ஒரு சிறந்த ரசனையாளன் படைப்பு . மசாலாக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல படம் .//
படம் நல்லாயிருக்கு.. எனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்ரத மொதல்ல எப்படி சொல்றோம்னு பாருங்க.. நீங்க தான் ரசிகர்.. மத்தவங்க எல்லாம் ஒண்ணும் தெரியாதவங்க என்கிற ரீதியில் சொல்லாதீங்க.. அப்புறம் நானும் இந்த மாதிரி தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.. பப்பு சொன்ன மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு உணர்வு.. எல்லாரும் நீங்க சொல்ரதுதான் சரின்னு சொல்லனும்னு எதிர்பார்க்காதீங்க..
புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் . ஒரு நடிகருக்காக படம் ஓடும் முறைமை தமிழ் சினிமாவில் உண்டு . அதையே நீங்களும் பின் பற்றுவது போன்று தோன்றியது .
காதல் ரோமன்சே சம்மந்தப்பட்ட விடயம் . காதல் படத்தில் அது இல்லாவிட்டால் . காலை பிடிக்கும் போதே அவள் மறுக்கவில்லை . வெறுமனே மனசு மட்டும் என்றால் காதல் தேவையில்லை நண்பராக இருக்கலாம் . கவுதம் படங்களிலேயே ஒரு நெருக்கம் இருக்கும் . பிற சூழல் தாக்கம் இல்லாமல் சினிமாவை கொண்டு செல்கிறார் . பாடல்களால் வெற்றி பெறுகிறார் என்கிறீர்கள் . அந்த பாடலுக்கு காட்சி அமைப்புகள் பத்திருக்கிரீர்களா . ஐம்பது கோடி குடுத்தாலும் ஷங்கர் ஆள் எடுக்க முடியாது . எனது பார்வையில் கவுதம் மேனன் ஒரு சிறந்த ரசனையாளன் . என்னுடைய கருத்து . அழகான படைப்பு நண்பா ..
புரிந்து கொண்டதற்கு நன்றி நண்பா.. வார்த்தைகள் கொஞ்சம் காட்டமாக இருந்ததால் நானும் சற்று அதிகமாகவே பேசி விட்டேன்.. இப்போதும் சொல்கிறேன்.. அவரவர் கருத்து அவரவருக்கு.. ஒருவருக்கு பிடிக்கும் படம் மற்றவருக்கு பிடிக்காமல் போவதில் ஆச்சரியம் இல்லை.. இன்றைக்கு எனது மணவர்கள் கூட என்னொடு சண்டை போட்டார்கள்.. எப்படி படம் நல்லாயில்லை என்று சொல்லப் போனது என்று? ஆனால் யார் சொல்லியும் நாம் நம் கருத்தை மாற்றிக் கொள்ளப் போவது கிடையாது.. நீங்கள் பிடிக்கும் என்பதர்கு காரணங்கள் சொல்வது போல பிடிக்காது என்பதற்கு எனக்கும் காரணங்கள் உண்டு.. அவ்வளவே..:-)))
இதத்தாயா நான் படம் வந்த நாள்ல இருந்து சொல்லீட்டு இருக்கேன். யாரும் கேக்க மாட்டேன்ராவலே. இந்த படத்தில காட்றதுல எனக்கு காதல் பீலிங்கி வரல , ஒரு பாலிஷ் போட்ட எட்டாவது பசங்க லெவல் காதல பாத்த மாதிரி தான் இருக்கு. கேமரா கொஞ்சம் ஸ்லொவ் பண்ணி, பின்னாடி ரெண்டு டயலாக் போட்டுவிட்டு, ஒரு நல்ல மியூசிக் போட்டுவிட்டா ஒடனே கிளாசு படம்நு சொல்லிக்கிட்டு, படம் புடிக்காதவனையும் கிளாசு இல்லாதவனு சொல்றாங்க்ய. உஸ்ஸ் முடியல. ஆமா ஓசான அப்படீனா ஏன்னா, ஏதாது ஆபரேஷன்னா?
-ஒழுங்கா புள்ளங்கள படிக்க வைப்பவன்-
ஆனால் விமர்சனகள் நடு நிலையாக இருக்க வேண்டும் என்பது தாழ்மையான கருத்து . குறை இல்லாத படம் என்று சொல்லவில்லை . உங்களுக்கு முதலில் இருந்தே கவுதம் மீது வெறுப்பு இருந்ததை காண முடிகிறது . பலர் இந்த படத்துக்கு சென்றால் தமது பழைய நினைவுகள் மீள்கிறது என்றவர்களும் உண்டு . ஆனால் இதை எல்லாம் விட்டு விட்டு அந்த படத்தில் கலை , விசுஅல் போன்றவற்றை எழுதினால் பக்கங்கள் போதாது . எதோ படம் கொடுத்தால் போதும் என்று கொடுக்கவில்லை . நன்றி . கருத்து தெருவித்தமைக்கு .
//இப்போ தான் அதெல்லாம் சட்டப்படி தப்பில்லன்னு ஆயிடிச்சில்ல, அவரு ஆசைப்படி இருக்கட்டும் விடுங்க ;-)//
அடப்பாவமே.. அன்பு அப்படித்தான்னு முடிவே பண்ணீட்டீங்க பொலயெ..:-))\\\\\\\\\
என்னையை வச்சு காமெடி பண்ணலையே...
நடத்துங்க..நடத்துங்க..
Nice story but
scenes in train and trisha mentality[she is in love or not] and repeating words from her are making bore.
Even though other scenes,songs, visual ,simbu,thrisha acting are beautiful.
Thanks
Ramakrishnan t
உங்களிடமிருந்து இப்படியொரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கூறும் அளவுக்கு அப்படியொன்றும் படத்தில் பெரிய ஓட்டைகள் இருப்பதாகத் தெரியவில்லை. கெளதம் வாசுதேவ் மேனன் குறித்த உங்கள் கருத்தே பெரிய முரணாக இருக்கிறது. நீங்கள் படத்தைப் பார்க்கிறீர்களா, அல்லது திரைப்படத்தின் பின்னணி கலைஞர்களைப் பார்க்கிறீர்களா என்று சந்தேகம் எழுகிறது. இவர் படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதும் தவறு, அவர் அப்படியே இருப்பதும் தவறு. கெளதம் குறித்து எனக்கு எந்த சொல்லுரையும் இல்லை. ஏனெனில் சொல்லும்படியான எந்த தகவலும் அவரிடம் எனக்கில்லை.
ரகுமானின் அந்த சோக இசையைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். வழக்கம் போல வயலினை வாசித்திருந்தால் அவர் தமிழ்நாட்டிலேயே இருந்திருப்பார் என்றுதான் சொல்லவேண்டும், ரஹ்மான் அந்த இடத்தில் பேஸ் உபயோகித்திருப்பார், வழக்கத்தைக் காட்டிலும் அது ஒரு புதுமை, ஆனால், NFS தீம் போல இருந்ததுதான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. மற்றபடி ரஹ்மான் தூங்குமளவு எங்கும் தவறுசெய்யவேயில்லை.
வி.தா.வ நீங்கள் இன்னுமொரு முறை பாருங்கள், ரயிலில் முத்தமிட அனுமதித்தற்கு ஜெஸ்ஸி (த்ரிஷா) பின்னொரு முறை காரணம் சொல்வாள். இப்படம் முழுக்க, அவள் செய்யும் முட்டாள்தனம், அது செய்தபிறகு சொல்லப்படும், பொதுவான படித்த பெண்கள் (நான் எல்லோரையும் சொல்லவில்லை) செய்யும் தவறுகள் சில உண்டு, அது அலைநீளம் போல மேலும் கீழுமாய் அவர்களது அறிவை பயன்படுத்திக் கொண்டிருக்கும். ஜெஸ்ஸி ஒரு சமயம் காதல் வேண்டாம் என்பதும், பிறகு வேண்டும் என்பதும் அவள் முடிவெடுக்க முடியாத நடுக்கோட்டில் இருப்பதாக படம் முழுக்க சொல்லப்படுகிறது.
திரைக்கதை இத்தனை மெதுவாக இருந்தால்தான் அது கிளாஸ் படம் என்று யாரோ இயக்குனரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.
படம் மெதுவாகப் போவது என்பது வேறு, பொறுமையாகப் போவது என்பது வேறு, வருடம் முழுக்க, வேகமான திரைக்கதைகளையே பார்த்துப் பார்த்து திடீரென்று ஒரு மெதுவான கதையைப் பார்த்தால் நிச்சயம் ஒரு சந்தேகம் தவழும், படம் பார்த்த யாரும் படம் அலுப்பு தட்டுவதாக இதுவரை சொல்லவில்லை, ஏனெனில் யதார்த்தம் மிதவேகமானது.
அப்படியென்றால் படத்தில் தவறுகளே இல்லையா க்லாஸ் படமா என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. நீங்கள் சொன்ன மெதுவான திரைக்கதை கூட பலவீனமாக இருக்கலாம். அல்லது பலமாக இருக்கலாம். வழக்கத்திலிருந்து எவ்வளவு மாறுபட்டிருக்கிறது என்பதுதான் மிக முக்கியம்.
தமிழில் ஒரு இங்க்லீஸ் படம் என்பதை விட, தமிழில் ஒரு நல்ல படம் என்று சொல்லிப் பாருங்கள், கலைக்கு மொழி தெரியாது.
இருப்பினும் உங்கள் விமர்சன எழுத்துக்கள் எனக்கு ரசிக்கும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அன்புடன்
ஆதவா.
உங்களது அலைபேசி எண்ணை எனது மின்மடலுக்கு அனுப்புங்கள், தயவுசெய்து
aadava@gmail.com
ஜெஸ்ஸி CHARACTER JUSTIFICATION யை வசனங்கள் மூலமாகவே டைரக்டர் சொல்லி இருப்பரே ..நீங்க கேட்கவில்லையா
பாஸ் ..கருத்து சொல்லுவது வேறு , குற்றம் சொல்லுவது வேறு.
பட விமர்சனங்கள் எப்பொழுதுமே கருத்தை தான் சொல்ல வேண்டும்
@ Aadava
நல்லா இருக்கீங்களா நண்பா? ஏன் சுத்தமாக தொடர்பு இல்லாமல் இருக்கிறீர்கள்?
தல.. உங்களுக்கான என்னுடைய பதிலை தனியாக ஒரு இடுகையாகவே எழுதி விடுகிறேன்.. தீர்க்கமான விமர்சனப் பார்வைக்கு நன்றி:-)))
// டம்பி மேவீ said...
ஜெஸ்ஸி CHARACTER JUSTIFICATION யை வசனங்கள் மூலமாகவே டைரக்டர் சொல்லி இருப்பரே ..நீங்க கேட்கவில்லையா//
இல்லை நண்பா.. என்னால் அவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை..
//டம்பி மேவீ said...
பாஸ் ..கருத்து சொல்லுவது வேறு , குற்றம் சொல்லுவது வேறு. //
நான் என்னுடைய கருத்தை சொல்லுவது உங்களுக்கு குற்றமாக பட்டால் நான் என்னப்பா செய்ய முடியும்?
//பட விமர்சனங்கள் எப்பொழுதுமே கருத்தை தான் சொல்ல வேண்டும்//
இப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து.. ஆனால் அது எனக்கு குற்றமாகப் படுகிறதே.. அது போலத்தான் தல..
நான் ஏற்கனவே சொன்னதுதான்.. நாம் எல்லொருமே நம்முடைய கருத்துகள் தான் சரி என நினைப்போம்.. அதை மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாத சூழலில் மனம் சங்கடம் கொள்கிறது..
//படம் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தங்கள் முதல் காதல் ஞாபகம் வரும் என்கிறார்கள். எனக்கு சத்தியமாக தோன்றவில்லை.//
ஒரு வேளை நீங்கள் காதல் செய்துயிருந்தால் தோன்றியிருக்குமோ?
நீங்களும் என்னை போல் பாதிக்க பட்டிருக்குறீர் என புரிகிறது..
Y blood??? Same Blood :)
விமர்சன்ம் அருமை கார்த்திக்.
படம் ரொம்ப சூப்பர்
இடைவேளையின் போதே வெளியில் வந்திருப்பேன், வண்டி எடுக்க விட மாட்டாங்க அதான் ஒரு தூக்கம் போட்டு வந்தேன். :))
செம போர் படம் :(( 600 ரூபாய் போச்சு :((
"திரிஷாவின் கதாப்பாத்திர உருவாக்கம் - கதையின் பலவீனம்" அருமை தலைவரே... அங்க நிக்கறீங்க
Post a Comment