August 26, 2010

கோணங்கி என்றொரு மாயாவி (1)

சென்ற ஞாயிறன்று அண்ணன் நேசமித்திரன் மதுரைக்கு வந்திருந்தார். ஸ்ரீதர், தருமி ஐயா, பாலகுமார், மதுரை சரவணன், பிரபாகர் என மதுரைப் பதிவுலக நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தனர். முந்தைய நாள் முழுதும் கேரளாவுக்குப் பயணம் செய்து திரும்பியிருந்த நேசனின் களைப்பு அத்தனையும் பதிவுலக நண்பர்களைக் கண்டதும் காணாமல் போனது.

ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த நேசனுடனான எங்களுடைய முதல் சந்திப்பு முழுக்க முழுக்க கவிதைகள், இலக்கியம் என்று வெகு தீவிரமான ஒன்றாக அமைந்தது. ஆனால் இம்முறை சந்திப்பு வெகு இயல்பாக இருந்தது. நெடு நாட்கள் பழகிய நண்பனொருவனின் தோள் மீது கைபோட்டு மாலையின் மஞ்சள் வெயிலில் சாலையின் ஓரமாக நடந்து போவதைப் போன்றொரு உணர்வு. அமைதியான சலசலப்போடு ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றினைப் போல எங்கள் உரையாடல் அமைந்தது. பதிவுலகம் சார்ந்து என்ன செய்யலாம், வாசிப்பினை எப்படி மேம்படுத்துவது என்றெல்லாம் பேசினோம். கடைசியாக நேசன் கிளம்பும்போது, தான் செவ்வாயன்று கோணங்கியை சந்திக்கவிருப்பதாக தெரிவித்தார்.

ஒரு காலத்தில், தமிழ் இலக்கிய உலகில் யாருடைய பெயரைக் கேட்டால் நான் காத தூரம் ஓடுவேன் என்றால், அது கோணங்கிதான். நண்பர் நரன் கோணங்கியைப் பற்றி "உண்மையான தேசாந்திரி.. எழுத்தாளர்களின் எழுத்தாளர்" என்றெல்லாம் என்னிடம் நிறையவே சொல்லி இருக்கிறார். அதை நம்பி திலகவதி வெளியிட்ட கோணங்கியின் "முத்துக்கள் பத்து" என்ற சிறுகதைத் தொகுதியை வாங்கி வாசித்தபோது நிறையவே குழம்பிப் போனேன். சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. "மக்களுக்கு எளிதாகப் புரியாத இலக்கியத்தில் எந்த பயனுமில்லை" என்பதென் கருத்து. எத்தனை முயற்சித்தும் கோணங்கி உருவாக்கும் படிமங்களைக் கண்டுகொள்வதென்பது என்னால் இயலாத ஒன்றாகவே இருந்தது. அது முதலே கோணங்கி என்றாலே கொஞ்சம் எனக்கு அலர்ஜிதான்.

வெகு நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக "கடவு" நிகழ்ச்சியில் தான் அவருடைய பேச்சைக் கேட்டேன். தெளிவில்லாத ஆனால் ஒரு விதமான மயக்கத்தைத் தருகிற பேச்சு. அவரைப் பற்றிய என்னுடைய கருத்துக்களில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது அப்போதுதான். "மதினிமார்கள் கதை"யை வாசித்த பின்பு எனது கருத்து முற்றாக மாறிப்போனது. குறிப்பாக "கருப்பு ரயில்" என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று. பிறகு பாழி, பிதுரா போன்ற நாவல்களை வாசிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். ஆனால் அதன் பிறகும் கோணங்கி மீதான மதிப்பு உயரவே செய்திருக்கிறது. எனவே நேசன் கோணங்கியை சந்திப்பதாக சொன்னவுடன் நானும் சேர்ந்து கொள்வதாகக் கூறினேன். நேசனும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டார். (நெல்லுக்குப் பாயும் நீர் சற்றே புல்லுக்கும் பாய்வது போல..)

செவ்வாயன்று மாலை நான் சாத்தூருக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி ஆறாகி விட்டிருந்தது. அண்ணன் மாதவராஜின் வீட்டு மொட்டைமாடியில் கோணங்கி, அடர்கருப்பு "காமராஜ்", கோணங்கியின் நண்பர் பாலு, நேசமித்திரன், அவருடைய நண்பர் பாலா என நண்பர்கள் எல்லோருமே ஏற்கனவே குழுமியிருந்தார்கள். உரையாடல் ஆரம்பமாகிய கொஞ்ச நேரத்திலேயே அங்கே மற்றொரு வெளி தோன்ற ஆரம்பித்தது.

கதைகள் மற்றும் கவிதைகள், அவற்றுக்கான சாத்தியங்கள் எனப் பலவும் அங்கே வார்த்தைகளில் உருண்டோடிக் கொண்டிருந்தன. இவையனைத்தும் முக்கியமாக கோணங்கி மற்றும் நேசனுக்கிடையே அமைந்த உரையாடலாக இருக்க, மற்றவர்கள் அனைவரும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். ஆப்பிரிக்கா தேசத்து அடிமைகள், வெவ்வேறு மொழிகளில் உண்டான பாபேல் என்ற வார்த்தைப் பிரயோகம் என வெளியின் கூறுகள் அகலமாக அகலமாக, நாங்கள் அனைவருமே கண்டங்கள் தாண்டி கண்டங்கள் செல்லும் பறவைகளாக மாறிக் கொண்டிருந்தோம்.

கோணங்கியினுடைய கதை சொல்லும் முறை பற்றிய தன்னுடைய குற்றச்சாட்டை அண்ணன் மாதவராஜ் முன்வைத்தார். யாருக்கும் புரியாத எழுத்தால் என்ன பயன் என்பது அவருடைய வாதம். அதற்கு நேசன் கோணங்கியின் சார்பாக பதில் தந்தார். "வெற்றுத்தாளுக்கும், காற்றில் படபடக்கும் வெற்றுத்தாளுக்கும் இருக்கும் வித்தியாசம் முக்கியம். மொழியை இளக்கி எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாக எழுதுவது வெற்றுத்தாளில் எழுதுவதைப் போன்றது. வாசகன் அதனைப் படிக்க சிரமப்பட வேண்டியதில்லை. மாறாக, காற்றில் படபடக்கும் வெற்றுத்தாள் எனும்போது அதில் எழுதுவதற்கான அடிப்படை உழைப்புத் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ள வாசகனும் தன்னுடைய உழைப்பைத் தர வேண்டியிருக்கிறது". இதுபோல புனைவுகளின் அதீத சாத்தியங்களைக் கொண்டிருக்கும் எழுத்தே காலம் கடந்து நிற்கும் என்றும், அதனாலேயே கோணங்கியைப் போலவே தானும் அதுமாதிரியான எழுத்துக்களை எழுத முயற்சி செய்வதாகவும்நேசன் கூறினார்.

நாங்கள் பேசிக் கொண்டதில் இருந்து கோணங்கியைப் பற்றிய என்னுடைய அவதானிப்பு இதுதான். தனக்கான ஒரு மாய உலகை கோணங்கி உண்டாக்குகிறார். சிறுவர்களுக்கான புத்தகங்களில் பார்த்தீர்களேயானால், புள்ளிகளை இணைத்து உருவத்தை உண்டாக்கும் புதிரொன்று இருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக எண்களைத் தந்திருப்பார்கள். கோணங்கியும் அதைத்தான் செய்கிறார்.

ஆனால் இங்கே ஒன்றுக்குப் பிறகு ஒன்பது வருகிறது. நடுவில் இருக்கும் எண்கள் அரூபமாக இருக்கின்றன. அந்தப் புள்ளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது வாசகனின் சாமர்த்தியம். வார்த்தைகளின் ஊடாக மாயத்தோற்றங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒளிந்து கிடக்கும் புதிர்கள் சங்கமிக்கும் ஒற்றை முடிச்சை தேடியடையும்போது, அது வாசகனுக்கு தரக்கூடிய இன்பம் அலாதியானது. தொன்மங்களையும் நவீனத்தையும் பிணைத்து தன்னுடைய கதைகளில் கோணங்கி அதைத்தான் செய்கிறார். அது இன்றைக்கு புரிந்து கொள்ளப்படாவிட்டாலும், நல்ல இலக்கியம் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் காலம் கண்டிப்பாக வரும். அப்போது அதனுடைய மதிப்பு அளவிட முடியாததாக இருக்கும்.

கோணங்கி பகிர்ந்து கொண்ட விஷயங்கள், நேசனின் சுவையான உரையாடல், மாதவ் மற்றும் காமராஜ் என எழுதுவதற்கான இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவை அடுத்த இடுகையில்..

34 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

தொடருங்கள் மேலும்.
நன்றி.

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
எஸ்.ரா.

மாதவராஜ் said...

தெளிவாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது.

நன்று. காத்திருக்கிறேன்....

மாதவராஜ் said...

அப்புறம்...

//யாருக்கும் புரியாத எழுத்தால் என்ன பயன் என்பது அவருடைய வாதம்//

இப்படி எனது வாதம் இருக்கவில்லை. ஒரு எழுத்து அதன் சமகாலத்து மனிதர்களாலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டுமே என்னும் ஆதங்கமாகத்தான் என் வாதம் இருந்தது.

ஆதவா said...

அஹாஅ... நல்ல சந்திப்பு... இப்பொழுதுதான் அவரது மாயக்கம்பளத்தைப் படித்துவிட்டு வருகிறேன்!!! சுவையான சந்திப்பின் எழுத்து என்றாலும் யானைப்பசிக்குச் சோளப்பொறி!!! :(

நமக்குத்தானுங்க எதிலயும் சிக்க வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது!!

செ.சரவணக்குமார் said...

மாதவ் அண்ணனின் பதிவில் வாசித்தேன். நீங்களும் மிக அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

நன்றி கா.பா.

sakthi said...

வாழ்த்துக்கள் கா பா

அருமையான சந்திப்பை ரசித்துஇருக்கின்றீர்கள்

பா.ராஜாராம் said...

கா. பா,

அற்புதமான பகிர்வு! தொடருங்கள்..

Anonymous said...

Very good meeting. Continue Later on.

Kafga

Anonymous said...

மாடு மேய்க்குற பயலுக்கு இம்பூட்டு இலக்கிய அறிவான்னு ஊர்லே பொறாமை பட போறானுங்க பாஸ்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
ஜெயமோகன்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
சாருநிவேதிதா

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
வண்ணநிலவன்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
ராஜேஷ்குமார்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
ச.தமிழ்செல்வன்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
விஜயமகேந்திரன்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
கேபிள்சங்கர்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
பரிசல்காரன்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
யுவகிருஷ்ணா

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
நர்சிம்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
ஜாக்கிசேகர்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
இயக்குனர் இமயம் பாரதிராஜா

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Anonymous said...

நல்ல சந்திப்புலு, மென்மேலும் தொடருங்கலு கார்த்திலு..

இப்படிக்கு,
சிரஞ்சீவிலு

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
மன்மோகன்சிங்

Anonymous said...

நல்ல சந்திப்பு, மென்மேலும் தொடருங்கள் கார்த்தி..

இப்படிக்கு,
பராக் ஒபாமா

ராம்ஜி_யாஹூ said...

nice, thanks for sharing

சுவாமிநாதன் said...

அற்புதமான பகிர்வு! நல்லவுங்க எப்பவும் நம்மள சுத்திதான் இருப்பாங்க MKP

Mahi_Granny said...

புரிந்து கொள்ள வாசகனும் தன் உழைப்பைத் தர வேண்டியிருக்கிறது என்று நேசன் சொல்லியிருப்பது ஓரளவு தான் சரி. புரிந்து கொள்ள முடியாத போது வாசகிக்கு களைப்புதான் மிஞ்சுகிறது . இருந்தாலும் மாதவராஜ் சாரின் மாயக்கம்பளத்தில் பயணம் செய்த பெருமை தெரிகிறது. தொடருங்கள். பொறாமையுடன் மகிபனின் பாட்டி

டம்பி மேவீ said...

ஏற்கனவே நீங்க தாம்பரம் ரயில் ஸ்டேஷன் ல வைச்சு என்கிட்டே இலக்கியம் பேசினதற்கே இன்னும் காது ல இருந்து ரத்தம் வந்துகிட்டு இருக்கு .... கோணங்கி சாரை வேற பார்த்துடீங்களா ????

இனிமே சென்னையில் உங்களை நான் பார்க்க வரும் பொழுது இரண்டு கிலோ பஞ்சு ஓட தான் வரணும் போலிருக்கு .....


"அவை அடுத்த இடுகையில்.."

ஒடுங்க ஒடுங்க , அது நம்பள நோக்கி தான் வருது !!!!!


PRISM கேள்வி பட்டு இருக்கீங்களா கார்த்தி ??? அந்த மாதிரி தான் கோணங்கி சாரோட எழுத்துக்களும் .... வாசிக்கும் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தரும் ...(இது என்னோட தாழ்மையான கருத்து) .....


நீங்க சொன்னதின் பெயரில் இனிமேல் தரமான பதிவுகளை எழுதுறேன் தல ....

ஆதவா said...

இப்படியா ஓட்டுவீர்கள்??? அடப்பாவமே!!!

முதல் பின்னூட்டம் எஸ்ராவினுடையது எனில்,
எஸ்ராவுக்கு ஒரு வேண்டுகோள்,
சுயஅடையாளமற்ற பின்னூட்டத்தை எங்கும் இடாதீர்கள். ஒரு சின்ன ஓட்டை கிடைத்ததும் எப்படியெல்லாம் ஊதுகிறார்கள்!!!!

மாயாவி 2 பதிவைக் காண வந்தேன்... அதற்குள் நீங்க்ள் எடுத்துவிட்டீர்கள்>!!! :(

தமிழ்நதி said...

அவசியமான உரையாடல் மற்றும் பதிவு. ஆனால், இதென்ன அனானி கலாய்ப்பு... புரியவில்லை.

கார்த்திகைப் பாண்டியன் said...

அனானி நண்பருக்கு.. உங்கள் அளவற்ற பாசத்துக்கு நன்றி.. இனிமேல் இந்த வலைப்பூவில் அனானி என்றொரு ஆப்ஷன் இருக்காது.. நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்களா..:-)))

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு . வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கத்தூண்டுகிறது உங்கள் பதிவு. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்