August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக இடுகை

நண்பர்களே.. ஏற்கனவே சென்ற இடுகையில் சொன்னது போல இது ஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆதரவு தெரிவிக்கும் முயற்சி.. இதை வாசிக்கும் எல்லோரும் தாங்களும் தங்களுடைய பதிவில் இதேபோல ஒரு இடுகையைப் போட்டு.. அதிகாரத்துக்கு எதிரான உங்கள் கண்டனங்களையும், நேர்மைக்கு துணை நிற்க வேண்டும் என்கிற மன உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்..



"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இங்கே கையெழுத்து இடலாம்.. வாருங்கள் நண்பர்களே.. பதிவர்கள் ஒன்றிணைந்து இதை சாதித்துக் காட்டுவோம்..

5 comments:

Anonymous said...

அரசுக்கு எனது கண்டனங்கள்!
http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_18.html

செ.சரவணக்குமார் said...

அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பதிவுலக நண்பர்கள் இதுவரை பதிவுகளில் எழுதி இருக்கிறார்கள்.. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே..:-))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்!

குடந்தை அன்புமணி said...

இதன் மூலம் எனது கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன். இணைப்பிலும் பதிவு செய்துவிட்டேன்.