August 13, 2010

காதல் சொல்ல வந்தேன் - தேவையா?

படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்.. தமிழ் சினிமாவின் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து இது போன்ற படங்களை எடுக்காதீர்கள்.. ப்ளீஸ்..

இரண்டு நாட்களுக்கு முன், வாடிப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். எனது பின்னிருக்கையில் இரண்டு பேர். அவர்கள் பேசிக் கொண்டது இங்கே..

"மாப்ள.. எவ்வளவு கெஞ்சினாலும் மதிக்க மாட்டேங்குறாடா.. அவள ஏதாவது பண்ணனும்டா.."

"ஏண்டா.. அவ்ளோ சின்சியராவா அவள லவ் பண்ற.."

"ஆமாடா.. சத்தியம்மா அவ இல்லன்னா செத்துருவேண்டா.."

"சரி சரி விடுடா.. இப்படிச் செய்வோம்.. யாராவது ஆள வச்சு அவளைத் தூக்கிட்டு வந்து நம்ம குட்லாடம்பட்டி ஷெட்டுல ஒளிச்சு வச்சுருவோம்.. நாலு நாள் பட்டினி போடு.. மிரட்டு.. மாட்டேங்குறாளா .. அவ முன்னாடி போய் அழு.. சாகுறேன்னு சொல்லு.. எப்படியாவது மசிய வச்சிருவோம்.. பயப்படாதடா.."

"இது நடக்குமாடா மாப்ள..?"

"கண்டிப்பா.. நான் இருக்குறேன் இல்ல? நீ பணத்துக்கு மட்டும் ஏற்பாடு பண்ணு.. பார்த்துக்கலாம்.."

யாரென்று பார்க்கலாம் எனத் திரும்பியவன் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு அதிகம் போனால் பதினைந்து வயது இருக்கலாம். இந்த மாதிரியான சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நாம்.

சினிமா என்பது சமூகத்தைத்தான் எதிரொலிக்கிறது. இங்கே நடக்காததையா நாங்கள் காட்டி விட்டோம் என்பதெல்லாம் அந்தக் காலம். உண்மையைச் சொல்வதானால் இன்று சினிமாவைப் பார்த்துத்தான் சமூகம் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. திரையில் தோன்றுபவர்களைப் போலவே உடை உடுத்துவதில் ஆரம்பித்து நம்மைக் காக்கும் அரசியல் கடவுள் வரை எல்லாரையும் சினிமாவில்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

ஏற்கனவே கல்லூரி என்றாலே வகுப்புக்குப் போகாத மாணவர்கள், ரவுடிசம், காதல் என்றுதான் சினிமாவில் அர்த்தம். அதை உண்மை என்று நம்பி வந்து நிஜ வாழ்க்கையிலும் அலும்பு பண்ணுவதுதான் இன்று நிறைய கல்லூரிகளில் நடந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில்தான் "காதல் சொல்ல வந்தேன்" போன்ற படங்கள் அவசியமா என்ற கேள்வி வருகிறது.

1980களில் வந்த கல்லூரிப் படங்களை நினைவிருக்கிறதா? வீட்டில் படும் கஷ்டம் பற்றிக் கவலைப்படாத நாயகன். கல்லூரியின் முதல் நாளில்.. ஏதாவது ஒரு மரத்தின் அடியில் பூக்கள் மழையாய்ப் பொழியும் தருணத்தில் நாயகியைச் சந்திப்பான்.. பார்த்தவுடன் காதல்.. அவளுக்கோ அவனைப் பிடிக்காது.. பைத்தியம் போல அவள் பின்னாடியே அலைந்து.. அவளுக்கும் காதல்... கடைசியில் சாவான் அல்லது சாவார்கள்.. அப்புறம் தெய்வீகம், அமரம் என்றெல்லாம் சிலைடு போடுவார்கள்.

தமிழ் சினிமா கொஞ்ச காலமாக மறந்து போயிருந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் பூபதிபாண்டியன் (போன வாரம் வெளிவந்த பாணாவும் இதே போலத்தான் என்று கேள்வி..). அதிலும் இந்தப் படத்தின் புதுமை.. தன்னை விட வயதில் மூத்த பெண்ணை.. தன்னை அக்கா என்றழைக்க சொல்லும் பெண்ணை காதலிக்கிறார் என்பதே கதை.

"யார் எப்படிப் போனாலும் கவலையில்லை.. எனக்கு என் காதல்தான் முக்கியம்.. பெற்றவர்கள் காணும் கனவுகளை எல்லாம் நெருப்பில் போட்டு கொளுத்தி விட்டு என்னுடைய சொந்த ஆசைகளுக்குத்தான் நான் முன்னுரிமை கொடுப்பேன்.. நானும் கெட்டு என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நாசம் செய்வேன்.." இதுதான் இந்தப் படம் சொல்ல வரும் மெசேஜ்.

நன்றாக நடித்திருக்கும் அறிமுக நாயகன், யுவனின் அட்டகாச இசை, தெளிவான திரைக்கதை, படமெங்கும் பட்டாசு கிளப்பும் காமெடி என இப்படம் வெற்றி பெறுவதற்கான சகல விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கின்றன. ஆனால் அப்படி நடக்குமாயின், அதை நம் கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நீங்கள் நல்ல படங்களைத் தர வேண்டாம்.. என்னவென்று தெரியாமலே பல வழிகளில் தங்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இதுபோன்ற மோசமான படங்களைத் தராமல் இருக்கலாமே.. காசையும் கொடுத்து.. படத்தை பார்த்து விட்டு இப்படி பொலம்ப வச்சுட்டானுகளே பாவிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை...:-(((

42 comments:

Anonymous said...

அப்போம் படம் குப்பையா?

ஜெட்லி... said...

உங்களுக்கு தேவை தான்...
யாரு உங்களை இந்த மாதிரி படத்துக்கு முதல்
நாளே தைரியமா போக சொன்னது...
இப்ப பாருங்க நான் எஸ்கேப் ஆயிட்டேன்...

Anonymous said...

இந்த படத்தை தயாரித்தவர் அமைச்சரின் பிளாமி என்று சொல்கிறhர்கள்.

Anonymous said...

சமுக அக்கரையுடன் நீங்க எழுதி, மற்றவர்களை காப்பாற்றியிருப்பதை நெனச்சா.... ஆனாலும் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்குபா...

நசரேயன் said...

தெய்வீக காதல் படம் போல இருக்கு

நசரேயன் said...

//கடையம் ஆனந்த் said...
சமுக அக்கரையுடன் நீங்க எழுதி, மற்றவர்களை காப்பாற்றியிருப்பதை நெனச்சா.... ஆனாலும் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்குபா...
//

ஆனந்த் ஒரு வேளை கிடைக்கலைன்னு ஆதங்கமா இருக்குமோ ?

Anonymous said...

காசையும் கொடுத்து.. படத்தை பார்த்து விட்டு இப்படி பொலம்ப வச்சுட்டானுகளே பாவிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை...:-(((
//

படம் பெயிலானா பணத்தை கேட்டு தியேட்டர்காரர்கள் போராடுகிறhர்களே... அது போல மொக்கை படத்தை பார்க்க வச்சத்துக்காக தியேட்டக்காரரிடம் கேட்டால் என்னப்பா?

Anonymous said...

Blogger நசரேயன் said...

//கடையம் ஆனந்த் said...
சமுக அக்கரையுடன் நீங்க எழுதி, மற்றவர்களை காப்பாற்றியிருப்பதை நெனச்சா.... ஆனாலும் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்குபா...
//

ஆனந்த் ஒரு வேளை கிடைக்கலைன்னு ஆதங்கமா இருக்குமோ ?
//

இனி சொல்லி என்ன ஆக போகுது... மதுரக்காரரே... தல நசரேயன் கேட்காருராருல...

கார்த்திகைப் பாண்டியன் said...

இல்ல நண்பா.. படிக்குற வயசுல இந்த மாதிரிப் போறத நியாயப்படுத்தி படம் எடுக்குறதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதுவும் நாம காலேஜ்ல இருக்கோம்.. அங்க இந்த மாதிரி நிறைய பேரைப் பார்க்குறோம்ல.. அதான் நண்பா..:-((( காதல் தப்பில்ல.. ஆனா அது எப்போ, எப்படின்னு ஒண்ணு இருக்குல்ல..

Anonymous said...

ம்... உண்மை தான். நண்பா.

இந்த படம் முடிச்சு நீங்க வர்ரப்ப.. படத்தின் டைரக்டர் உங்களை பார்த்து படம் எப்டின்னு கேட்டா என்ன செய்வீங்க...

Anonymous said...

why vadipatti?

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி... said...
உங்களுக்கு தேவை தான்... யாரு உங்களை இந்த மாதிரி படத்துக்கு முதல்
நாளே தைரியமா போக சொன்னது...
இப்ப பாருங்க நான் எஸ்கேப் ஆயிட்டேன்...//

படம் நல்லாத்தான் இருக்கு தம்பி.. கதைதான் எனக்குப் பிடிக்கல.. வம்சமும் நல்லாயிருக்குறதா சொன்னாங்கப்பா..:-))

//நசரேயன் said...
ஒரு வேளை கிடைக்கலைன்னு ஆதங்கமா இருக்குமோ ?//

வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சாதீங்கப்பா..:-)

// Anonymous said...
why vadipatti?//

ஏங்க அனானி.. இந்தப் பதிவுலையே.. இந்த முக்கியமான கேள்விதான் உங்களுக்கு கேக்கணும்னு தோணுச்சா?

Revathyrkrishnan said...

Lecturer sir:-) eppadi irukinga? Diredactor oru velai trend set panna aasai pattruppar pola

சரவணகுமரன் said...

உங்களுடைய நேர்மையான சமூக உணர்வுக்கு பாராட்டுக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

// reena said...
Lecturer sir:-) eppadi irukinga? Diredactor oru velai trend set panna aasai pattruppar pola//

வாங்க.. பல நாள் கழிச்சு நம்ம கடைப்பக்கம் வந்திருக்கீங்க.. நன்றி..

//சரவணகுமரன் said...
உங்களுடைய நேர்மையான சமூக உணர்வுக்கு பாராட்டுக்கள்...//

நான் இருக்கும் இடத்துக்கு அது மிகவும் தேவையானது நண்பா..

மதுரை சரவணன் said...

காலம் கெட்டுக்கிடக்குது திருத்த வேண்டிய துவக்கப்பள்ளிகள் நற்பண்புகளை கற்றுத்தந்தாலும் ,பையன் வளர வளர உயர்கல்விகள் ம்திப்பு சார்ந்த கல்வியை மட்டும் தருவதால் இது போன்ற சமூக அவலங்கள் திகழ்கின்றன. மேலும் இது சம்பந்தமாக படம் வரும் போது எதார்த்தமான கதை என்று பிச்சுகிட்டு போகுது... நல்ல படங்கள் பிச்சுகிட்டு ஓடுது...
பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்

மதன் said...

100 ஓட்டுகள்ங்க பாஸ் - “சினிமா என்பது சமூகத்தைத்தான் எதிரொலிக்கிறது. இங்கே நடக்காததையா நாங்கள் காட்டி விட்டோம் என்பதெல்லாம் அந்தக் காலம். உண்மையைச் சொல்வதானால் இன்று சினிமாவைப் பார்த்துத்தான் சமூகம் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. திரையில் தோன்றுபவர்களைப் போலவே உடை உடுத்துவதில் ஆரம்பித்து நம்மைக் காக்கும் அரசியல் கடவுள் வரை எல்லாரையும் சினிமாவில்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.”

நிச்சயமா லூசு பய டைரக்டருங்க ஏன் இந்த மாதிரி படத்தெல்லாம் எடுக்குறாங்கனே புரியல, நம்ப மக்களுக்கு என்னையும் உட்பட தான் சொல்ரேன் ரெண்டே விசயத்த பத்தி தான் நல்லா தெரியும் - சினிமா, அரசியல். இந்த சினிமாவிலும் இந்த மாதிரி கருமம் புடிச்சதா காட்டுனா பாக்குற பயபுள்ள என்ன பண்ணும் பாவும், அதையே தான் செய்யும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

/// மதுரை சரவணன் said...
காலம் கெட்டுக்கிடக்குது திருத்த வேண்டிய துவக்கப்பள்ளிகள் நற்பண்புகளை கற்றுத்தந்தாலும் ,பையன் வளர வளர உயர்கல்விகள் ம்திப்பு சார்ந்த கல்வியை மட்டும் தருவதால் இது போன்ற சமூக அவலங்கள் திகழ்கின்றன. மேலும் இது சம்பந்தமாக படம் வரும் போது எதார்த்தமான கதை என்று பிச்சுகிட்டு போகுது...//

அதுதான் அடிப்படை பிரச்சினை தலைவரே.. கொஞ்சமாவது சமூக அக்கறைன்னு வேணும்லப்பா..

//டுபாக்கூர்கந்தசாமி said...
நிச்சயமா லூசு பய டைரக்டருங்க ஏன் இந்த மாதிரி படத்தெல்லாம் எடுக்குறாங்கனே புரியல, நம்ப மக்களுக்கு என்னையும் உட்பட தான் சொல்ரேன் ரெண்டே விசயத்த பத்தி தான் நல்லா தெரியும் - சினிமா, அரசியல். இந்த சினிமாவிலும் இந்த மாதிரி கருமம் புடிச்சதா காட்டுனா பாக்குற பயபுள்ள என்ன பண்ணும் பாவும், அதையே தான் செய்யும்.//

வருத்தப்பட்டு நொம்பலப்படுறதத் த்விர என்ன் செய்ய முடியும் பாஸ்?

தேவன் மாயம் said...

அதிலும் இந்தப் படத்தின் புதுமை.. தன்னை விட வயதில் மூத்த பெண்ணை.. தன்னை அக்கா என்றழைக்க சொல்லும் பெண்ணை காதலிக்கிறார் என்பதே கதை.//

உண்மையா!! என்னவோ செய்ரானுங்கப்பா!

சம்பத் said...

பூபதி பாண்டியனின் முந்தைய படங்கள் நல்ல நகைச்சுவையோடு இருக்கும்...கவுத்துட்டரோ...

அப்புறம் பாட்டெல்லாம் கேட்டேன்...பட்டாசா இருக்கு பாஸ்..

குடந்தை அன்புமணி said...

காதலுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றிய படங்கள் சில வந்தாளும், இப்படி பட்ட படங்கள் வந்து மீண்டும் வேதாளம் கதையாக மாறிப்போகிறது. என்னத்த சொல்ல...

வெற்றி said...

நீங்க வாத்தியாரா இருக்கலாம்..அதுக்காக சண்முவம் தப்பு பண்ணும போதெல்லாம் கொதிச்சு எழனுமா :)

வெற்றி said...

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேவன் மாயம் said...
உண்மையா!! என்னவோ செய்ரானுங்கப்பா!//

வருத்தப்பட வேண்டிய விஷயம் தேவா சார்..

//சம்பத் said...
பூபதி பாண்டியனின் முந்தைய படங்கள் நல்ல நகைச்சுவையோடு இருக்கும்...கவுத்துட்டரோ...//

தல.. படம் நல்லா இருக்கு.. அதுதான் பிரச்சினையே.. அது சொல்ல வர கருத்து மகா மட்டம்..:-((

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
காதலுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றிய படங்கள் சில வந்தாளும், இப்படி பட்ட படங்கள் வந்து மீண்டும் வேதாளம் கதையாக மாறிப்போகிறது. என்னத்த சொல்ல...//

:-((((((((

// வெற்றி said...
நீங்க வாத்தியாரா இருக்கலாம்.. அதுக்காக சண்முவம் தப்பு பண்ணும போதெல்லாம் கொதிச்சு எழனுமா :)//

இன்னும் நான் யூத் இல்லையே வெற்றி.. நிறைய கோபம் வருதே..:-((

மேவி... said...

இப்படி பண்ணுறவங்களை எல்லாம் தனிய ரூம் ல கட்டி போட்டு, கதற கதற துணையெழுத்தை ..அப்ப தான் திருந்துவாங்க.

தல நீங்க பேசாம அந்த பசங்க கிட்ட போய் இலக்கியம் பேசி இருந்தீங்க ன்ன அவங்க திருந்தி இருப்பாங்க.

= = =
jokes apart ..

நீங்க சொல்லுறதுல உண்மையும் இருக்கு பாஸ். ஆனா சில இடத்துல பசங்களுக்கு ஓவர் அரிப்பாகி கற்பழிப்பு வரைக்கும் போயிடுறாங்க. அதான் கொடுமையே .... இன்றைய சினிமாவின் தாக்கம் தெரியாமல் டைரக்டர்கள் படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் கருத்து சுகரந்திரமாம்.

இதை விட நீங்க இன்னொரு விஷயத்தையும் சேர்த்து சொல்லிருக்கலாம் ..... கல்லூரி மாணவர்கள் கைக்கு தான் பிரபல ப்ளூ பிலிம் சிடிக்கள் கிடைக்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

பாண்டியன்,உங்க விமர்சனம் சமூகம் சார்ந்ததா,சமூக நலன் கருதி இருக்கு,நான் மேலோட்டமா எழுதிட்டேன்.பாராட்டுக்கள்

Mahi_Granny said...

remark from teacher to a teacher;"good keep it up"

Ganesan said...

படத்தின் நாயகன் செய்திதுறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் ஆவார்.

Anonymous said...

//இந்த படத்தை தயாரித்தவர் அமைச்சரின் பிளாமி என்று சொல்கிறhர்கள்//

கதாநாயகன் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன். அப்புறம் எதுக்கு பினாமியெல்லாம்?

தலைவர் பேரன் படத்தோட தன்னோட மகன் படத்த மோதவுடுறாரே! நல்ல துணிச்சல்தான்.

Anonymous said...

//காலம் கெட்டுக்கிடக்குது திருத்த வேண்டிய துவக்கப்பள்ளிகள் நற்பண்புகளை கற்றுத்தந்தாலும் //

சொல்லித்தந்தா மகிழ்ச்சிதான்.

இப்பல்லாம் மூணாம் வகுப்பு, நாலாம் வகுப்பு வரை கல்வித்திட்டத்தில் moral science (நன்னெறி போதனை) மற்றும் civics ( தமிழில் என்ன?) பாடங்கள் உள்ளனவா என்ன?

கார்த்திகைப் பாண்டியன் said...

@ டம்பி மேவீ

//தல நீங்க பேசாம அந்த பசங்க கிட்ட போய் இலக்கியம் பேசி இருந்தீங்க ன்ன அவங்க திருந்தி இருப்பாங்க. //

என்னைய ஓட்டலைன்னா உனக்கு தூக்கமே வராதாப்பா?

//நீங்க சொல்லுறதுல உண்மையும் இருக்கு பாஸ். ஆனா சில இடத்துல பசங்களுக்கு ஓவர் அரிப்பாகி கற்பழிப்பு வரைக்கும் போயிடுறாங்க. அதான் கொடுமையே .... இன்றைய சினிமாவின் தாக்கம் தெரியாமல் டைரக்டர்கள் படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் கருத்து சுகரந்திரமாம். //

இதைச் சொன்னா உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைங்கிறாய்ங்கப்பா..

//இதை விட நீங்க இன்னொரு விஷயத்தையும் சேர்த்து சொல்லிருக்கலாம் ..... கல்லூரி மாணவர்கள் கைக்கு தான் பிரபல ப்ளூ பிலிம் சிடிக்கள் கிடைக்கிறது//

நாளைய தூண்கள்..:-(((

கார்த்திகைப் பாண்டியன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
பாண்டியன்,உங்க விமர்சனம் சமூகம் சார்ந்ததா,சமூக நலன் கருதி இருக்கு,நான் மேலோட்டமா எழுதிட்டேன்.பாராட்டுக்கள்//

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் தல..:-)))

// Mahi_Granny said...
remark from teacher to a teacher;"good keep it up"//

நன்றிங்க..

//காவேரி கணேஷ் said...
படத்தின் நாயகன் செய்திதுறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் ஆவார்.//

நண்பர்கள் சொன்னாங்கண்ணே.. ஏதொ ஒரு நாடகத்துல வேற நடிச்சு இருக்காராம்ல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
கதாநாயகன் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன். அப்புறம் எதுக்கு பினாமியெல்லாம்?தலைவர் பேரன் படத்தோட தன்னோட மகன் படத்த மோதவுடுறாரே! நல்ல துணிச்சல்தான்.//

செய்வனத் திருந்தச் செய்..:-)))

//Anonymous said...
சொல்லித்தந்தா மகிழ்ச்சிதான்.
இப்பல்லாம் மூணாம் வகுப்பு, நாலாம் வகுப்பு வரை கல்வித்திட்டத்தில் moral science (நன்னெறி போதனை) மற்றும் civics ( தமிழில் என்ன?) பாடங்கள் உள்ளனவா என்ன?//

எனக்குத் தெரிஞ்சு இல்லைங்க.. ஆனால் தனியார் கிருத்துவப் பள்ளிக்கூடங்களில் இருக்கின்றன..

☀நான் ஆதவன்☀ said...

ஓர் சிறந்த ஆசிரியனின் கவலை. :(

உண்மைத்தமிழன் said...

இப்படி யோசித்தால் பருத்திவீரன், களவாணி படங்கள்கூட எடுக்கக் கூடாத திரைப்படங்கள்தான்..!

கார்த்திகைப் பாண்டியன் said...

//☀நான் ஆதவன்☀ said...
ஓர் சிறந்த ஆசிரியனின் கவலை. :(//

நன்றி தல.. ஏதோ நமக்காவது பொலம்ப வழி இருக்கு..

//உண்மைத் தமிழன்said...
இப்படி யோசித்தால் பருத்திவீரன், களவாணி படங்கள்கூட எடுக்கக் கூடாத திரைப்படங்கள்தான்..!//

அண்ணே.. களவாணி, பருத்தி வீரன்ல எல்லாம் அந்தப் படத்தின் நாயகர்கள் எப்படிப்பட்டவங்கன்னு முதல்லேயே சொல்லிடுறாங்க.. ஆனா இந்த மாதிரி காலேஜ் கேம்பஸ் படத்துல? காதலிக்கிறது மட்டும்தானா மனுஷனுக்கு முக்கியம்..? அதுவும் குறிப்பா மாணவர்களுக்கு? அதனாலத்தான் இந்தப் படத்தோட அடிப்படைக் கருத்தை எதிர்க்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

கார்த்திகை..

நாயகர்களை விடுங்கள்.. நாயகிகளையும் கொஞ்சம் பாருங்கள்..!

ஸ்கூல்ல படிக்கிற வயசுலதான முத்தழகியும் களவாணி நாயகியும் காதல் வயப்படுகிறார்கள்.. தப்புதானே..?

இப்படியெல்லாம் தப்பு கண்டுபிடிச்சா தமிழ்நாட்டுல ஒரு சினிமாவைக்கூட ரிலீஸ் செய்ய முடியாது..!

கார்த்திகைப் பாண்டியன் said...

//உண்மைத் தமிழன் said...
கார்த்திகை.. நாயகர்களை விடுங்கள்.. நாயகிகளையும் கொஞ்சம் பாருங்கள்.//

நீங்க சொல்றதுலையும் நியாயம் இருக்குண்ணே.. என்ன சொல்றதுன்னு தெரியல..:-(((

Anonymous said...

சார். நீங்க பாட்டுக்கு இந்த மாதிரி வாரத்துக்கு ரெண்டு படம் பார்த்துட்டு வலையில் விமர்சனம் எழுதிகிட்டிருந்தா நாங்கள்லாம் படிச்சு உருப்பட்டமாதிரிதான்

உங்க ஸ்டூடண்ட் நம்பர் ஒன்

kannamma said...

சமூகத்துல அதிக அக்கறை கொண்டவங்க வாத்தியாரும் எழுத்தாளரும் தான் .எங்க வாத்தியார் ரெண்டுமே அதனால அக்கறை டபுளா தான் இருக்கும் .நேர்மையான விமர்சனம்."GREAT SIR NEENGA"

Praveen said...

We are fed with materialism (let it be education system, movies, serials whatever).
I feel that nothing can be done unless the entire system is cleansed.