August 23, 2010

அன்பின் வலி


துயரத்தின் நீண்ட நிழல்கள்
என்னைத் தீண்டும் போதெல்லாம்
உன் மடி தேடி
சரண்டைந்தவனாக இருக்கிறேன்

நான் யாரென்று அறியாத
முதல் அழுகையின் போதும்

பித்து பிடித்தவன் என
பள்ளி நண்பர்கள்
கேலி செய்த போதும்

பிரியத்துக்குரிய மீனாக்கா
வீடு மாறி சென்ற போதும்

முதன்முறையாக தேர்வுகளில்
தோற்றபோதும்

யிர் நண்பனின் சிதைக்குத்
தீமூட்டித் திரும்பிய
பின்னிரவு வேளையின் போதும்

முதல் காதலியால்
தகுதியற்றவன் என
நிராகரிக்கப்பட்ட போதும்

பிழைக்கத் தெரியாதவன் என
கூட வேலை பார்க்கும் ந(ண்)பர்கள்
திட்டியபோதும்

ன்னுடைய எல்லாமென நம்பியிருந்த
துணையைத் தொலைத்த போதும்

அம்மா..

ன் மடி தேடி
சரண்டைந்தவனாக இருக்கிறேன்

ருந்தும் - அடிமனதில்
வலித்துக்கொண்டே தானிருக்கிறது

ன்றேனும் ஒரு கணமேனும்
இயல்பானதொரு அன்பின் பொருட்டு
உன் மடியில் தலைவைத்து
நான் படுத்ததே இல்லையென்பது..!!!

- கல்யாண்ஜிக்கு

18 comments:

ஆர்வா said...

ஒரு உணர்வு தெறித்து போகிறது

Mohan said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது!

kannamma said...

படிக்கிறவங்களுக்கு இது ஒரு அன்பான வலி .கவிதை சூப்பர்...........

Anonymous said...

அருமையான கவிதை கா.பா.!
மற்றொரு அம்மா பாசம் பார்க்க அன்புடன் அழைக்கிறேன் தங்களை,
http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_23.html

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவிதை காதலன் said...
ஒரு உணர்வு தெறித்து போகிறது//

நன்றிங்க

//Mohan said...
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது//

:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//kannamma said...
படிக்கிறவங்களுக்கு இது ஒரு அன்பான வலி .கவிதை சூப்பர்...........//

உணர முடியுமென்கிற நம்பிக்கையில் எழுதியதுதான் தோழி..

//Balaji saravana said...
அருமையான கவிதை கா.பா.!
மற்றொரு அம்மா பாசம் பார்க்க அன்புடன் அழைக்கிறேன் தங்கள//

கண்டிப்பா படிக்கிறேன் நண்பா

நேசமித்ரன் said...

கா.பா நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும்

மேவி... said...

"பிழைக்கத் தெரியாதவன் என
கூட வேலை பார்க்கும் ந(ண்)பர்கள்
திட்டியபோதும்"

உங்களையாவது திட்டு தான் இருக்காங்க ..என்னை கிண்டலே பண்ணி இருக்காங்க. என்னோ தெரியவில்லை பணத்தை ஒரு பெரிய விஷயமாக என்னால் கருத முடியவில்லை ...

அதனால் தான் என்னவோ பாசம், அன்பு நிறைந்த மனிதர்களே எனக்கு பிடிக்கிறது

கவிதை நல்ல இருக்கு .... கொஞ்சம் வலிக்கவும் செய்கிறது

மேவி... said...

தெரியாமல் தான் கேட்கிறேன் ...இது உங்களது படைப்பா அல்லது உங்களுடைய பகிர்வா ??

கார்த்திகைப் பாண்டியன் said...

//நேசமித்ரன் said...
கா.பா நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும்//

நன்றி தலைவரே..

// டம்பி மேவீ said...
உங்களையாவது திட்டு தான் இருக்காங்க ..என்னை கிண்டலே பண்ணி இருக்காங்க. என்னோ தெரியவில்லை பணத்தை ஒரு பெரிய விஷயமாக என்னால் கருத முடியவில்லை ...//

மனிதர்களின் இயல்பு நண்பா..

//டம்பி மேவீ said...
தெரியாமல் தான் கேட்கிறேன் இது உங்களது படைப்பா அல்லது உங்களுடைய பகிர்வா ??//

கல்யாண்ஜியின் கவிதையொன்றை படித்துக் கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது நண்பா.. அந்தக் கவிதையின் சாயலும் இதிலுண்டு என்பதாலேயே இதைக் கல்யாண்ஜிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்..

யோவ்.. அது எப்படிய்யா? நான் என்னிக்காவது ஒருநாள் கொஞ்சம் உருப்புடியா எழுதுனா மட்டும், நீயா எழுதுனியா இல்ல மண்டபத்துல யாராவது எழுதித் தந்தாங்களான்னு கேக்கத் தோணுது?

ஆ.ஞானசேகரன் said...

அருமை.... வாழ்த்துக்கள் நண்பா

எஸ்.கே said...

கவிதை மிக அருமை! வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஆ.ஞானசேகரன் said...
அருமை.... வாழ்த்துக்கள் நண்பா//

நன்றி தலைவரே.. நல்லா இருக்கீங்களா?

// எஸ்.கே said...
கவிதை மிக அருமை! வாழ்த்துக்கள்!//

ரொம்ப நன்றிங்க..

எண்ணங்கள் 13189034291840215795 said...

துயரம் மிகும்போது யாராவது தேவைப்படத்தான் செய்கிறது...

அது அம்மாவோ நல்ல நட்போ.

ஆனால் அம்மா என்றால் எதிர்பார்ப்பில்லை.

நட்பிடம் இருக்கிறது..:(

சிங்கக்குட்டி said...

வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு உணர்வு உங்கள் கவிதையை படிக்கும் போது.
மிக அருமை.

சொல்லரசன் said...

//என்னுடைய எல்லாமென நம்பியிருந்த
துணையைத் தொலைத்த போதும்//

உங்கள் முதல் எதிரி எல்லாத்தையும்,எல்லாமென நம்புவதுதான்

கார்த்திகைப் பாண்டியன் said...

//புன்னகை தேசம். said...
துயரம் மிகும்போது யாராவது தேவைப்படத்தான் செய்கிறது... அது அம்மாவோ நல்ல நட்போ. ஆனால் அம்மா என்றால் எதிர்பார்ப்பில்லை.
நட்பிடம் இருக்கிறது..:(//

எதிர்பார்ப்புகள் என்று வரும்போது ஏமாற்றமும் தடுக்க முடியாததாகி விடுகிறது நண்பா..

//சிங்கக்குட்டி said...
வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு உணர்வு உங்கள் கவிதையை படிக்கும் போது. மிக அருமை.//

நன்றிங்க..

//சொல்லரசன் said...
உங்கள் முதல் எதிரி எல்லாத்தையும்,எல்லாமென நம்புவதுதான்//

:-((((((

Ganesan said...

கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் அம்மாவின் ஞாபக கனல் மனதில் எழுந்தாலே கவிதையை எழுதிய கா.பா விற்கு வெற்றியே.