August 19, 2010

உக்கார்ந்து யோசிச்சது (19-08-10)

சென்ற வாரத்தில் ஒரு நாள். சேலத்தில் இருக்கும் பதிவுலக நண்பர் சிவக்குமரன் அலைபேசியில் அழைத்திருந்தார்.

"நண்பா.. அவசரமா ஒரு தகவல் தெரியணும்.."

"சொல்லுங்க தல.."

"அசோகர் கலிங்கத்துப் போர்ல ஈடுபட்டார் இல்லையா.."

"ஆமா?"

"அதுல எந்த மன்னருக்கு எதிராக சண்டை போட்டார்னு தெரியணும்..?"

அவர் கேட்டதும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அட.. யாரது? இத்தனை நாட்களாக அசோகரைப் பற்றியும் கலிங்கப்போரைப் பற்றியும் பேசி வந்திருக்கிறோம். ஆனால் அந்த எதிரி அரசன் யாரென்று இன்று வரை நமக்குத் தெரியாதே..

"தெரியலையே தல.. நான் வேணும்னா தேடிப் பார்த்துச் சொல்லட்டுமா?"

"சரி நண்பா.."

சட்டென்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். எங்கும் எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. எல்லா இடத்திலுமே அசோகர் கலிங்க நாட்டை எதிர்த்து போர் புரிந்தார் என்று மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த அரசர் யாரென்று தெரியவேயில்லை. ஏதோ ஒரு தளத்தில் கலிங்கம் அப்போதே குடியரசாக இருந்ததாக போட்டிருந்தார்கள். மற்றொரு தளத்தில் "கரவேலன்" என்பவன் கலிங்கத்தின் அரசனாக இருந்ததாக குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் அசோகரின் காலமும் காரவேலனின் காலமும் ஒன்றாக ஒத்துப் போகவில்லை. அப்படியானால் சரித்திரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளே இல்லையா? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா..

***************

நானே என்னைக்காச்சும் எப்பவாச்சுக்கும்தான் பண்பலைல பாட்டு கேக்குறது.. அப்பப் பார்த்து நம்ம நேரத்துக்கு எதாச்சும் எடக்கு முடக்கா காதுல விழும். நம்ம ராசி அப்படி.. இப்படித்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி சூரியன் எப்.எம் கேட்டுக்கிட்டு இருக்கேன். அதுல ஒரு அறிவாளித் தொகுப்பாளினி மகராசி பேசுது...

"இப்பப் பார்த்தீங்கன்னா நம்மாளுங்க கிரிக்கட்ல சூப்பரா விளையாடுறாங்க.. ஆனா ஹாக்கில நல்லா விளையாடுறது கிடையாது.. ஏன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்.. அதுக்குக் காரணம்.. கிரிக்கட்ல யூஸ் பண்ற பேட் பார்த்தீங்கன்னா பெரிசா அகலமா இருக்கு.. ஆனா ஹாக்கி பேட் ரொம்பச் சின்னதா குச்சியா இருக்கு.. அதனால இனிமேலே ஹாக்கிலையும் நல்ல பெரிய பேட்டா யூஸ் பண்ணினா நாம ஈசியா ஜெயிக்கலாம்.. எப்படி நம்ம ஐடியா.."

அட.. உன் தலைல இடி விழ.. அது நம்ம தேசிய விளையாட்டும்மா.. அதை ஏன் இப்படி? இந்த மாதிரிப்பேசுற ஜீவராசிங்கள எல்லாம் தயவு செஞ்சு அண்டார்டிக்காவுக்கு நாடு கடத்துங்கப்பா..

***************

"தி எக்ஸ்பெண்டிபல்ஸ் " - பல ஆக்சன் ஸ்டார்கள் இணையுற படம், 80களுக்கு மறுபடியும் கூட்டிட்டுப் போறோம், நாஸ்டால்ஜியா அதுஇதுன்னு.. ரொம்பவே எதிர்பார்த்த படம். வழக்கம் போல ஓவர் பில்டப்பு ஒடம்புக்கு ஆகாதுன்னு படம் நிரூபிச்சு இருக்கு. எல்லாப் பயலும் ஒத்த ஒத்த சீனுக்கு பேருக்கு தலையக் காமிச்சுட்டு போறானுங்க.. அர்னால்ட் வர சீனுக்கு மட்டும் நம்மாளுங்க விசில் பிரிக்கிறாங்க. படத்துல ரெண்டே ஆளுங்களுக்குத்தான் ந(அ)டிக்கிறதுக்கு ஸ்கோப். ஸ்டேலோன் மற்றும் ஜேசன் ஸ்டேதம். இதுல ஜேசன் ஓகே.. பட் ஸ்டேலோன் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.. சிக்ஸ் பாக் கொடுமை வேற பண்றாரு.

படத்துல என்னோட மிகப்பெரிய வருத்தம் ஜெட்லி. தீம் ம்யூசிக்கும் ஒத்தக் குடையும் இருந்தாப் போதும், நூறு பேரை எங்காளு பறந்து பறந்து அடிப்பாரு.. அவரைப்போய் ஒரு அண்டா சைஸ் குண்டன் கிட்ட அடிவாங்கவிட்டு.. லீக்கு இது தேவையா? போதாக்குறைக்கு ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினையும் படத்துல காமெடி வில்லனா ஆக்கியிருக்காங்க. இந்தப் படத்தோட ரெண்டாம் பாகம் எடுக்கலாமான்னு ஸ்டேலோன் யோசிச்சுக்கிட்டு இருக்காராம். அண்ணே.. தயவு செஞ்சு வேணாம்னே.. நாங்க ராம்போவ நெனச்சுக்கிட்டே எங்க காலத்த ஓட்டிடுறோம். ஹ்ம்ம்ம்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்.

***************

இன்னைக்கு இருக்ககூடிய சில பழமொழிகள் எல்லாம் பார்த்தோம்னா.. நம்ம முன்னோர்கள் சொன்னிட்டுப் போனதோட மருவுதான். அதனால அதோட அர்த்தமும் மாறிப் போயிடுது.

"சேலை கட்டிய மாதரை நம்பாதே.."

இதை மேலோட்டமா பார்த்தா எந்தப் பொம்பளையையும் நம்பக்கூடாதுங்கிற மாதிரி அர்த்தம் வரும். ஆனால் உண்மைல இந்தப் பழமொழியோட அர்த்தம் என்ன? அது இதுதானாம்.

"சேல் அகட்டிய மாந்தரை நம்பாதே.."

சேல் - மீன் அல்லது மீன்களை உடைய பெண். அகட்டிய - விரிந்த தன் விழிகளால் உன்னை அழைப்பவள் (பரத்தை?) அல்லது கண்களால் கதை பேசி மயக்கக் கூடியவள்.. இப்படிப்பட்ட பெண்களை நம்பாதே என்பதுதான் உண்மையான பழமொழியாம்.

***************

ஒரு கவிதை முயற்சி.. (படிச்சுட்டு அடிக்க வரக்கூடாது)

எதுவுமே நடக்காமல்
எல்லாமே நடப்பதுபோல
நடிப்பதென்பது
எப்போதும்
கடினமானதாகவே இருக்கிறது
பிட்டு பட நாயகிக்கு..!!!

***************

கடைசியா பசங்க அனுப்பின ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக்

பரீட்சை ஹால்ல பசங்க செய்யக்கூடிய ஆறு விஷயங்கள்..

--> ஹாலுக்குள்ள எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்னு எண்ணுறது

--> லேடி சூப்பர்வைசரை சைட் அடிக்கிறது

--> எத்தனை ஜன்னல் மாறும் கதவு ஹால்ல இருக்குன்னு எண்ணுறது

--> பேனா நல்லா எழுதுதான்னு கேள்வித்தாள்ல படம் வரஞ்சு பாக்குறது

--> நேத்திக்கு ஏன் படிக்கலைன்னு பீல் பண்றது

--> அடுத்த பரிட்சைக்காவது படிக்கணும்னு சத்தியம் பண்றது

அதே பரிட்சை ஹாலுக்குள்ள பிள்ளைங்க செய்யுற ஆறு விஷயங்கள்..

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

அப்படி என்னத்தத்தான் எழுதுங்களோ.. அடத்தூ..

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

24 comments:

வெங்கட் நாகராஜ் said...

உட்கார்ந்து பலமாவே யோசிச்சு இருக்கீங்க போல! நல்லா இருக்குங்க உங்க இடுகை! வாழ்த்துக்கள்.

வெங்கட்.

ஹுஸைனம்மா said...

பழமொழியில் இன்னுமொரு சந்தேகம்.

//சேல் அகட்டிய மாந்தரை//

இதில் ‘மாந்தர்’ என்றால் இருபாலரும்தானே, ஏன் பெண்ணை மட்டும்?

’சேலை கட்டிய’ என்று மருவியபோது பெண்ணாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால், “சேல் அகட்டிய” மனிதர்கள் அனைவரையும் என்றுதானே கொள்ளவேண்டும்?

Raju said...

@ஹுசைனம்மா
மாந்தர் என்பது மாதர் என்பதாக திரிந்து விட்டிருக்கலாம்.

Raju said...

என்னோட லைவ் ஃபோன் நிகழ்ச்சி அனுபவம் சொல்றேன் கேளுங்க,

தொகுப்பாளனி : ஹையா, ஸார் நீங்க இந்த மாசம் ஃபோன் பண்ணுனதால ஒரு அயர்ன் பாக்ஸ் ஜெயிச்சிட்டீங்க!

எதிர்முனை: ஓ, தேங்க்ஸ் மேடம்.

தொ : இனிமேல் ஆஃபீஸுக்கு ஒழுங்கா டிரஸியெல்லாம் அயர்ன் பண்ணிதானே போட்டுட்டு போவீங்க...?

எமு: (மிக சீரியஸாக) ஆமா மேடம்! ரொம்ப ரொம்ப தேங்ஸ் மேடம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ஹுசைன்னம்மா

மீன போலக் கண்ணுன்னு எந்த ஆம்பளையையும் சொல்ல மாட்டாங்க இல்லையா சகோதரி? அதனாலத்தான் அது பெண்களை மட்டும் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..

க.பாலாசி said...

//அடுத்த பரிட்சைக்காவது படிக்கணும்னு சத்தியம் பண்றது//

அதென்னமோ சரிதானுங்க...

VELU.G said...

நல்லாத்தான் யோசிக்கீறீங்கப்பு

பின்னிட்டீங்க

beer mohamed said...

இதையும் படியுங்கள் ஓட்டு போடுங்களேன்
3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
http://athiradenews.blogspot.com/2010/08/3.html

Anonymous said...

i think you have already posted that hockey bat mokkai in ur older blogs ................

மணிகண்டன் said...

அசோகரோட போரிட்டது கரீனா கபூர். இது ரொம்ப எளிதாவே கூகுள் வழியா கண்டுபிடிச்சி இருக்கலாம். இனி உங்க நண்பர் போன் பண்ணினா கூகுள் செய்து பாக்க சொல்லுங்க.

வால்பையன் said...

//எதுவுமே நடக்காமல்
எல்லாமே நடப்பதுபோல
நடிப்பதென்பது
எப்போதும்
கடினமானதாகவே இருக்கிறது
பிட்டு பட நாயகிக்கு..!!!//


நீங்க வேற, எல்லா பெண்களும் அப்படி தான், இங்கே முக்கால்வாசி பெண்கள் ஆர்கஷம் அடைவதேயில்லை, ஆணும் அதை கண்டு கொள்வதேயில்லை, இருந்தாலும் ஆணின் திருப்திக்காக நடித்து கொண்டே தான் இருக்கிறார்கள்!


இதுக்கு தான் சொல்றது செக்ஸ் கல்வி வேணும்னு சொல்றது!

கார்த்திகைப் பாண்டியன் said...

//வெங்கட் நாகராஜ் said...
உட்கார்ந்து பலமாவே யோசிச்சு இருக்கீங்க போல! நல்லா இருக்குங்க உங்க இடுகை! வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றிங்க..

@ராஜூ
ஏன் ரத்தம்? ஒரே ரத்தம்..

// க.பாலாசி said...
அதென்னமோ சரிதானுங்க...//

அனுபவம்? ரைட்டு..

கார்த்திகைப் பாண்டியன் said...

// VELU.G said...
நல்லாத்தான் யோசிக்கீறீங்கப்பு பின்னிட்டீங்க//

நன்றி பாஸ்

//beer mohamed said...
இதையும் படியுங்கள் ஓட்டு போடுங்களேன் 3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்//

வாசிக்கிறேங்க..

// Anonymous said...
i think you have already posted that hockey bat mokkai in ur older blogs ................//

ஆஹா? அப்படியா? ஞாபகம் இல்லையேப்பா.. அப்படி இருந்தா சாரிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மணிகண்டன் said...
அசோகரோட போரிட்டது கரீனா கபூர். இது ரொம்ப எளிதாவே கூகுள் வழியா கண்டுபிடிச்சி இருக்கலாம். இனி உங்க நண்பர் போன் பண்ணினா கூகுள் செய்து பாக்க சொல்லுங்க.//

புலவரே.. பதிலோடு வந்த உம்மைக் கண்டு மெச்சினோம்.. யாரங்கே? அந்தப் பொற்கிழியைக் கொண்டு வாருங்கள்..:-))))

//வால்பையன் said...
நீங்க வேற, எல்லா பெண்களும் அப்படி தான், இங்கே முக்கால்வாசி பெண்கள் ஆர்கஷம் அடைவதேயில்லை, ஆணும் அதை கண்டு கொள்வதேயில்லை, இருந்தாலும் ஆணின் திருப்திக்காக நடித்து கொண்டே தான் இருக்கிறார்கள்!//

அதேதான் தல.. ஒரு சில விஷயங்கள நாம வெளிப்படையா பேசிக்கிறது கிடையாது... அதைத்தான் சொல்ல முயற்சி பண்ணி இருக்கேன்..

ராம்ஜி_யாஹூ said...

NO historical sources revealed about the name of the enemy of Ashoka at the kallinga war. main sources of maurya period mention about kalinga war but not mentioned the enemy name but most of the text book of history upto degree devel said Ashoken defeated GHARAVELEN at kallinga war.i studied main historian text book about Maurya period but these text book did not reveal the name of the enemy at kallinga war.if Imagine that Ashoken defeated Gharavelen at kallinga war there is chronoligical error that Ashokan lived from 273bc to 232 bc but GHARAVELAN lived after maurya period because there is only one source about Gharavela that is HADIGUPHA Inscription in this Gharevelan said "i am the third king of the kallinga"so he is lived between 100 aD TO 175 AD.
Source(s):
"ASHOKA AND THE DECLINE OF MAURYA EMPIRE" "CULTURAL PAST "written by ROMILA TAPER - yahoo answers

பீர் | Peer said...

அசோகர் குறித்து - கலிங்கப்போர், மரம் நட்டார், ரோடு போட்டார் (பிற்பாடு) சகோதரனை கொன்றார்.. இது மட்டுமே தெரிந்திருந்தது.

அசோகருடைய எதிரியை தெரிந்துகொள்ள ரீடரில் இருந்து இங்கு படையெடுத்து வந்தும் ஒன்றும் தகவல் இல்லை. இனி ஏதும் ஓலை வந்தால் சொல்லி அனுப்பவும்.

Kousalya Raj said...

//வால்பையன் said...
நீங்க வேற, எல்லா பெண்களும் அப்படி தான், இங்கே முக்கால்வாசி பெண்கள் ஆர்கஷம் அடைவதேயில்லை, ஆணும் அதை கண்டு கொள்வதேயில்லை, இருந்தாலும் ஆணின் திருப்திக்காக நடித்து கொண்டே தான் இருக்கிறார்கள்!//

நல்ல புரிதல்....!!

a said...

கவிதை முயற்சி நல்லா இருக்கு...........

kannamma said...

engathan ukkanthu yosippinkkalo theriyala koncham mokkaiyaa irunthaalum nalla irunthathu.//students-nale comedy irukkum ending nalla irunthathu..........//

கார்த்திகைப் பாண்டியன் said...

@Ramji

thanks for the info boss

//பீர் | Peer said...
அசோகருடைய எதிரியை தெரிந்துகொள்ள ரீடரில் இருந்து இங்கு படையெடுத்து வந்தும் ஒன்றும் தகவல் இல்லை. இனி ஏதும் ஓலை வந்தால் சொல்லி அனுப்பவும்.//

கூடிய விரைவில் வி(வ)டை கிடைக்கும் என நம்புவோம் தல

//Kousalya said...
நல்ல புரிதல்....!!//

ஓட்டுறீங்க..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
கவிதை முயற்சி நல்லா இருக்கு...........//

அது சும்மா.. உல்லுல்லாயி நண்பா

//kannamma said...
engathan ukkanthu yosippinkkalo theriyala koncham mokkaiyaa irunthaalum nalla irunthathu//

கிளாஸ்ல பாடம் நடத்தும்போது யோசிக்கிரதுதான்..:-)))

Prabhu said...

அப்படியே கிபி ஸ்டார்டிங்க்ல தமிழ்நாட்ட ஆண்ட களப்பிரர்கள் யாருன்னும் கேட்டு சொல்லுங்க. கிடைக்கிறாப்ல தெரியல.

மதுரை சரவணன் said...

அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்