August 4, 2010

கடவுளும் பிரார்த்தனையும்..!!!


ண்களை இறுக்கிக் கட்டி
கைகளைப் பின்புறம் பிணைத்து
நிர்வாணமாய்
முதுகில் சுடப்பட்டவர்களின்
மரண ஓலம்

சாவின் கொடூர முகத்தை
சுற்றி நின்று ரசித்தவர்களின்
எக்காளச் சிரிப்பு

வெற்றுக் களிமண்ணை
ரொட்டியாய் சுட்டு சாப்பிடும்
குழந்தைகளின் கேவல் சத்தம்

முகமெங்கும் அப்பிக் கிடக்கும் மண்ணும்
சீழ் வடியும் நிணமுமாய்
மதக்கூடங்களின் வாசலில்
கையேந்தித் திரியும்
கைவிடப்பட்டவர்களின் ஆழ்மன அரற்றல்கள்

சித்திரவதை பொறுக்காமல் கதறியழும்
பரத்தையின் கூக்குரல்

யாமல் உலகின் ஏதாவொரு மூலையில்
வெடித்துக் கொண்டேயிருக்கும் மார்ட்டர்கள்

லகின் எல்லா அவலங்களின் சப்தமும்
தன் காதுகளை வந்தடைய
கிளர்ச்சியடைந்த கடவுள்
கரமைதுனம் செய்யத் துவங்குகிறார்

ரியலிசம்
சர்ரியலிசம்
மேஜிக்கல் ரியலிசம்
போஸ்ட் மாடர்னிசம்
என எதையும் அறிந்திராத
சாலையோர ஓவியனொருவன்
பசியில் ஏங்கியழும்
தன் குழந்தை முகம்
மனதில் நிறுத்தி
தான் பார்த்திராத
கடவுளின் படத்தை
வரையத் தொடங்குகிறான்
மழை மட்டும் வந்து விடக் கூடாது
என்று வேண்டியபடியே

ருவறை பிளந்து
வெளிக்கொள்ளப்பட்ட
சவலைப் பிள்ளையொன்றின்
அழுகுரல் கேட்டு
உச்சநிலையெய்திய
கடவுளின் சுக்கிலத்திலிருந்து
தெறித்து பூமியில் விழுகிறது
சொட்டொன்று
மழையின் முதல் துளியாய்..!!!

26 comments:

வெறும்பய said...

முதல் வரியிலிருந்து.. கடைசி வரி வரைக்கும் கனமான உணர்வுகள்..

ஆதவா said...

ரொம்பவும் அருமையான கவிதைங்க. கவிதை நிலையில் பல படிகள் தாண்டி வந்துட்டீங்க. வார்த்தைகள் நன்றாக விழுந்திருக்கின்றன.!!

தொடர்ந்து எழுதுங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

//வெறும்பய said...
முதல் வரியிலிருந்து.. கடைசி வரி வரைக்கும் கனமான உணர்வுகள்..//

thanks dude. fine that i could transcend that feel to you..

//ஆதவா said...
ரொம்பவும் அருமையான கவிதைங்க. கவிதை நிலையில் பல படிகள் தாண்டி வந்துட்டீங்க. வார்த்தைகள் நன்றாக விழுந்திருக்கின்றன.!!//

poem is not my forte thala.. i know that.. but i write when the concept strikes me the most..:-))

தேவன் மாயம் said...

வாழ்வின் வருத்தங்களை வார்த்தைகள் கொண்டு கோர்த்துள்ளீர்கள்! கார்த்தி!

வானம்பாடிகள் said...

அடங்கப்பா. எங்க வச்சிருந்தீரு இத இத்தன நாளா?அபாரம் கார்த்தி

டம்பி மேவீ said...

ஏற்கனவே நம்ம வாழ்க்கை ரொம்ப போராட்டமாகவும் சோகமயமாகவும் இருக்கு ...இதுல நீங்க வேற கவிதை எழுதி torture பண்ணிக்கிட்டு ..... முக்கியமா இந்த கவிதையை ரசிக்கிற மனநிலைமைல நான் இல்லைங்க :)


(கட்டாயம் இதொரு சிறந்த கவிதை தான் என்பதில் சந்தேகமில்லை)

டம்பி மேவீ said...

"கடவுள்
கரமைதுனம் செய்யத் துவங்குகிறார்"

அட நீங்க வேற கார்த்தி ...... அவரு எதாச்சு சீன் படம் பார்த்துட்டு வந்து இருப்பாரு ....சரியாய் விசாரிச்சு பாருங்க ...இப்படி எல்லாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துற கூடாது.

கடவுள் ஒரு அரிப்பெடுத்தவன் .....அதனால் தானே பூமி ல இவ்வளவு மக்கள் தொகை :)

டம்பி மேவீ said...

"கடவுளின் சுக்கிலத்திலிருந்து
தெறித்து பூமியில் விழுகிறது
சொட்டொன்று
மழையின் முதல் துளியாய்..!!!"


எனக்கு மழையில் நனைவது ரொம்ப பிடிக்கும் ...இதை படித்த பிறகு மழையை நினைத்தாலே அருவெறுப்பா இருக்கு ....

டம்பி மேவீ said...

"தன் கையே தனக்கு உதவி"ன்னு கடவுள் இருக்கிறாரு ......அப்ப அவரோட மனைவியை ரோமன் சரித்திரதுல வர மாதிரி புள்ள குட்டி பெத்துக்க மட்டும் தான் வைச்சு இருக்கிறாரா ????


(கார்த்தி ...கடவுளே "பண்ணுகிற" அளவுக்கு தற்சமயம் என்ன பிட் படம் வந்து இருக்கு ????)

டம்பி மேவீ said...

"ரியலிசம்
சர்ரியலிசம்
மேஜிக்கல் ரியலிசம்
போஸ்ட் மாடர்னிசம்"

அழகான தமிழ் கவிதையில் ஏன் இந்த கலப்பு ??? வலியை சொல்ல வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ???

இதனால் உங்களது கவிதையின் WEIGHTAGE குறைவது உங்களுக்கு தெரியுமா ???

ஹேமா said...

கார்த்தி....ஆரம்பம் முதல் மழைத்துளி விழும்வரை
ஒரு மன அவதி.கவிதையின் சூட்சுமம் இதுதானோ !

டம்பி மேவீ said...

யோவ் ...வாத்தி ??? உண்மைய சொல்லு ? நீங தான் எழுதுனிய ...

பட ஷோக்க தான்லே க்குது

மதுரை சரவணன் said...

//கடவுளின் படத்தை
வரையத் தொடங்குகிறான்
மழை மட்டும் வந்து விடக் கூடாது
என்று வேண்டியபடியே//


வரிகளில் எதார்த்தம்... வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

// தேவன் மாயம் said...
வாழ்வின் வருத்தங்களை வார்த்தைகள் கொண்டு கோர்த்துள்ளீர்கள்! கார்த்தி!//

அதேதான் தேவா சார்..

// வானம்பாடிகள் said...
அடங்கப்பா. எங்க வச்சிருந்தீரு இத இத்தன நாளா?அபாரம் கார்த்தி//

அப்பப்ப இந்த மாதிரி விபத்து நடக்கும் பாலா சார்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ டம்பி மேவி

ரொம்பவே குழம்பிய மனநிலையில இருக்கிங்க மேவி.. விடுங்க.. எல்லாம் மாறும்

//ஹேமா said...
கார்த்தி....ஆரம்பம் முதல் மழைத்துளி விழும்வரை ஒரு மன அவதி.கவிதையின் சூட்சுமம் இதுதானோ !//

வலி தோழி..:-((

//மதுரை சரவணன் said...
வரிகளில் எதார்த்தம்..வாழ்த்துக்கள்//

நன்றிப்பா..

☀நான் ஆதவன்☀ said...

:(

நல்லாயிருக்கு நண்பா. நல்ல கவிதை.

தருமி said...

present sir

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

கோவி.கண்ணன் said...

நன்றாக இருக்கிறது க'விதை'

kannamma said...

ஆழமான வரிகள் கொண்டு அழகாக தொடுத்த கவிதை.

கார்த்திகைப் பாண்டியன் said...

// ☀நான் ஆதவன்☀ said...
:(நல்லாயிருக்கு நண்பா. நல்ல கவிதை.//

நன்றி தல

// தருமி said...
present sir//

:-))))

//Sweatha Sanjana said...//

thanks for ur info..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//கோவி.கண்ணன் said...
நன்றாக இருக்கிறது க'விதை'//

நன்றிங்க..

//kannamma said...
ஆழமான வரிகள் கொண்டு அழகாக தொடுத்த கவிதை.//

ரொம்ப நன்றி தோழி

வானதி said...

வலியால் வார்த்தைகள் பூக்க மறுக்கின்றன.
தோழனே ஏன் இவ்வளவு வெறுப்பு ?
கடவுள் மீது........................

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானதி said...
வலியால் வார்த்தைகள் பூக்க மறுக்கின்றன. தோழனே ஏன் இவ்வளவு வெறுப்பு ? கடவுள் மீது...//

இருந்தும் ஒன்றும் செய்ய வில்லையெனில் கடவுள் என்பது எதற்கு என்ற கேள்வியின் வெளிப்பாடே இந்தக் கவிதை தோழி..:-((

சுவாமிநாதன் said...

படம் எங்கே சுட்டது!!!
ஏன் எப்போதும் ஏழையையே கடவுள் சோதிக்கிறார், பணக்காரர்கள் இருப்பது அவருக்கு தெரியாத என்ன?

ஹைகுவாக வரவேண்டிய கவிதை காவியமாக மாறியது ஒரு சுதுதனே !!!!

மற்றபடி கவிதை சூப்பர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

// சுவாமிநாதன் said...
படம் எங்கே சுட்டது!!!ஏன் எப்போதும் ஏழையையே கடவுள் சோதிக்கிறார், பணக்காரர்கள் இருப்பது அவருக்கு தெரியாத என்ன?ஹைகுவாக வரவேண்டிய கவிதை காவியமாக மாறியது ஒரு சுதுதனே !!!//

படம் நெட்டுல இருந்து உருவுனதுதான் சாமி.. அந்த மாதிரி ஏழைங்களைப் பத்தி கடவுள் கண்டுக்க மாட்டேங்குராருங்கிற காண்டுதான் இந்தக் கவிதையே.. சூதெல்லாம் இல்ல..