June 1, 2009

தேவாரம் - நினைவுகளின் மடியில்..!!!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கும் எல்லோரும் குச்சனூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவானது. பொதுவில் எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாதபோதும் வீட்டில் சொல்லும்போது மறுப்பது கிடையாது. மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தித்தான் என்னுடைய கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பது தேவையில்லை என்ற எண்ணம் எனக்குண்டு. எனவே மகிழ்ச்சியாக சம்மதித்தேன். மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம் - அங்கிருந்து பத்து மைல் தூரத்தில்தான் என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர் இருக்கிறது. நான் விவரம் தெரிந்து அங்கே போனது கிடையாது. எனவே இந்த முறை போகலாம் என்று எனது ஆசையை சொன்னபோது வீட்டிலும் ஒத்துக் கொண்டார்கள்.

தேவாரம் - இதுதான் என் பாட்டியின் ஊர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு சின்ன டவுன். தேனி வழியாகப் போக வேண்டும். மதுரையில் இருந்து கிளம்பியபோது சரியான வெயில். ஆனால் போகப்போக காற்றின் குளுமை அதிகமாகிக் கொண்டே போனதால் வெயில் தெரியவில்லை. இருபுறமும் மலைகள் சூழ்ந்து நிற்க, குறுகிய பாதியின் வழியே பயணம் செய்யும் அனுபவமே அலாதிதான். திம்மரச நாயக்கனூர் என்னும் ஊரில் தர்ம சாஸ்தா கோவில் என்று ஒன்று உள்ளது. சிறுதெய்வம் போல. வாகனங்களை அங்கே நிறுத்தி பிரச்சினை இல்லாமல் பிரயாணம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து போகிறார்கள். அந்த சாமியின் கதை தெரிந்த மக்கள் யாரும் அங்கே இல்லை என்பது சோகம்தான். பின்பு குச்சனூர் அடைந்து சாமி கும்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

நகரத்தின் இரைச்சல்களைப் பிரிந்து சிறு கிராமங்களின் வழியே பிரயாணித்து ஊரை அடைந்தோம். போகும் வழியில் வைகை நதி என்னும் போர்டு குறுக்கிட்டது. ஆனால் ஆறு சுத்தமாக வறண்டு கிடந்தது. நீர்ப்பாசனம் இல்லாத காரணத்தால் வயல்கள் எல்லாம் காய்ந்து கிடந்தன. விவசாயம் ரொம்ப கம்மியாகி விட்டதாக சொன்னார்கள். மக்கள் எல்லாரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு செல்லும் சூழலில் வருங்காலத்தில் விவசாயம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. போகும் வழியில் நான் பார்த்த பல தியட்டர்கள் மூடிக் கிடந்தன. வீட்டிலேயே டிவியும், டிவிடியும் வந்த பிறகு தியேட்டர்கள் எதற்கு என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

ஊரில் இருக்கும் அரண்மனை ஒன்றை பற்றிய நானூறு வருடங்களுக்கு முந்தைய சுவையான கதையும் நிலவி வருகிறது. ராஜா இறந்து போனதால் ராணி இளம் வயதிலேயே பொறுப்புக்கு வருகிறார். அவருக்கும் மந்திரி ஒருவருக்கும் காதல் உண்டாகி, ராணியும் உண்டாகி விட்டாராம். ஊருக்குத் தெரியாமல் பிள்ளை பெற மதுரைக்கு போனாராம் ராணி. திரும்பி வரும்வரை அரசை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மந்திரி தன சொந்தக்காரகளிடம் தந்து உள்ளார். பிரசவத்தில் ராணி இறந்து போக, மந்திரியை தந்திரமாக மற்றவர்கள் கொன்று விட்டார்களாம். பின்னர் ராணியின் ஆவி சதிகாரர்கள் எல்லாரையும் கொன்று போட்டு விட்டதாக சொல்கிறார்கள். இன்றும் அரண்மனை பாழடைந்து கிடக்கிறது.

என் பாட்டி அந்த கிராமத்தில் ரொம்ப வசதியாக வாழ்ந்தவராம். ஊரின் முதல் மெச்சு வீடு அவருடையது தானாம். பல ஏக்கர் ஏலத்தோட்டங்கள் சொந்தமாக இருந்து இருக்கின்றன. அத்தனையையும் அவருடைய அண்ணனே ஏமாற்றி வாங்கிக் கொண்டு விட்டார். இப்போது பாக்கி இருப்பது ஒரே ஒரு வீடு மட்டுமே. நாங்கள் வந்து இருக்கும் விஷயம் தெரிந்தவுடன் அக்கம் பக்கத்து சனங்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டார்கள். ஜாதி மதம் பார்க்காமல் எல்லோரும் ஒன்றாக பழகி உள்ளார்கள் என்பதைப் பார்க்கும்போது ரொம்ப நெகிழ்வாக இருந்தது.
என் அம்மாவின் இளவயது தோழிகள் எல்லாரும் வந்து விட்டிருந்தனர். என் கண்முன்னே அம்மா அவரது பால்ய காலத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அம்மா யாரையும் வாடி, போடி என்றெல்லாம் பேசி நான் பார்த்தது கிடையாது. ஆனால் நேற்று பார்த்தேன். அம்மாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. இதுதான் நான் தூங்கும் கட்டில், இவதான் என்னோட பெஸ்ட் பிரண்டு, இந்த மாமாதான் என்னைத் தூக்கி வளர்த்தவங்க, இந்தக் கிணத்துலதான் எல்லாம் ஒண்ணா குளிப்போம் என்றெல்லாம் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே வந்தார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை.
கிளம்பும்போது அம்மா உடைந்து அழத் தொடங்கி விட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. வெளியில் சொல்லாத ஆசை ஒன்று நிறைவேறும்போது வரும் ஆனந்தக் கண்ணீர் அது. வீட்டிற்கு வந்த பிறகு அம்மா என்னிடம் சொன்னார் .. " நிறைய நாள் கழிச்சு நான் இன்னைக்கு நானாக இருந்தேன்.. ரொம்ப தாங்க்ஸ்டா தம்பி..". ஏதோ ஒன்றை சாதித்தது போல எனக்கும் சந்தோஷமாக இருந்தது...!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

71 comments:

தீப்பெட்டி said...

என்றும் மறக்க முடியாத அனுபவம்..

தாய்க்கு செய்ய வேண்டிய கடமைய குறையில்லாம செஞ்சுட்டிங்க கார்த்தி..

ச.பிரேம்குமார் said...

நெகழ்ச்சியான பதிவு பாண்டியா :)

அகநாழிகை said...

கார்த்தி,
நல்ல பதிவு. நெகிழ்வாக இருந்தது.
இனிமேல் சினிமாவிற்கு போனால் பார்த்துவிட்டு வருவதோடு விட்டு விடுங்கள். இதுபோன்ற அரிய நிகழ்வுகளை பதிவிடுங்கள்,
அவைதான் பேசப்படும்.
விவரித்த விதம் அருமை.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

வேத்தியன் said...

அனுபவத்தை மிகவும் சுவாரசியமாகவும் நெகிழ்வாகவும் எழுதியுள்ளீர்கள் கார்த்தி...

அருமை...

புதியவன் said...

//மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தித்தான் என்னுடைய கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பது தேவையில்லை என்ற எண்ணம் எனக்குண்டு. //

நெகிழ்வான வரிகள் கார்த்திகைப் பாண்டியன்...

சொல்லரசன் said...

உங்க பயன பதிவு அனுபவம்,நெகிழ்ச்சி,வரலாறு என மூன்றுசுவையையும்
கலந்த அற்புதசுவை,வாழ்த்துகள்.

புது கல்லுரி சென்றவுடன் பெட்டிதட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்.

Anbu said...

//மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தித்தான் என்னுடைய கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பது தேவையில்லை என்ற எண்ணம் எனக்குண்டு. /
நானும் அப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்..

நையாண்டி நைனா said...

அண்ணன் கோதாவில் குதிசிட்டார்...

ஸ்டார்ட் மீஜிக்

Anonymous said...

நெகழ்ச்சியான பதிவு

நையாண்டி நைனா said...

/*குச்சனூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவானது. */

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடந்தனிலே தேடி அலைவார் ஞான தங்கமே...

விடுங்க பாசு இதை எல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு.... அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்...
இதில் நான் நண்பர் "கானா பானா" வை தான் சொல்கிறேன் என்று சிண்டு முடிகிறவர்கள், உள்குத்து தேடுகிறவர்களின், மூக்கில் வால்டர் தேவாரமே வந்து குத்து விடுவாராக...

நையாண்டி நைனா said...

/* எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாதபோதும் */

ஆனா உங்க மாணவர்கள் எல்லாரும் ஆண்டவன் விட்ட வழி என்று ஆண்டவன் மேல் அதீத பற்றுள்ளவர்களா இருக்காங்களாமே....??? ஹி...ஹி..ஹி...

நையாண்டி நைனா said...

/*
ஊரில் இருக்கும் அரண்மனை ஒன்றை பற்றிய நானூறு வருடங்களுக்கு முந்தைய சுவையான கதையும் நிலவி வருகிறது. ராஜா இறந்து போனதால் ராணி இளம் வயதிலேயே பொறுப்புக்கு வருகிறார். அவருக்கும் மந்திரி ஒருவருக்கும் காதல் உண்டாகி, ராணியும் உண்டாகி விட்டாராம். ஊருக்குத் தெரியாமல் பிள்ளை பெற மதுரைக்கு போனாராம் ராணி. திரும்பி வரும்வரை அரசை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மந்திரி தன சொந்தக்காரகளிடம் தந்து உள்ளார். பிரசவத்தில் ராணி இறந்து போக, மந்திரியை தந்திரமாக மற்றவர்கள் கொன்று விட்டார்களாம். பின்னர் ராணியின் ஆவி சதிகாரர்கள் எல்லாரையும் கொன்று போட்டு விட்டதாக சொல்கிறார்கள். இன்றும் அரண்மனை பாழடைந்து கிடக்கிறது.
*/

ஐயையோ ... தயவு செஞ்சி அண்ணன் பீ.வாசு கிட்டே மட்டும் சொல்லிராதீங்க.... அப்புறம் நீங்க போற எல்லா வழியிலும் இருக்குற எல்லா தியேட்டரையும் மூட வச்சிருவார்.. பிளீஸ்... பிளீஸ்....

நையாண்டி நைனா said...

/*(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க..)*/

ஓட்டை இல்லடி... உன்னைத்தாண்டி குத்தனும்.. அது எப்படி எல்லாத்தையும் ரசனையா எழுதுறே???

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
என்றும் மறக்க முடியாத அனுபவம்..
தாய்க்கு செய்ய வேண்டிய கடமைய குறையில்லாம செஞ்சுட்டிங்க கார்த்தி..//

நன்றி நண்பா.. சாதரணமா ஆரம்பிச்சது ஒரு நெகிழ்வான பயணமா மாறிடுச்சு..

கார்த்திகைப் பாண்டியன் said...

// ச.பிரேம்குமார் said...
நெகழ்ச்சியான பதிவு பாண்டியா :)//

நன்றி பிரேம்.. ஏன் நடுவுல நடுவுல காணாம போயிடுறீங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

//"அகநாழிகை" said...
கார்த்தி,
நல்ல பதிவு. நெகிழ்வாக இருந்தது.
இனிமேல் சினிமாவிற்கு போனால் பார்த்துவிட்டு வருவதோடு விட்டு விடுங்கள். இதுபோன்ற அரிய நிகழ்வுகளை பதிவிடுங்கள்,
அவைதான் பேசப்படும்.
விவரித்த விதம் அருமை.
வாழ்த்துக்கள்.//

நன்றி வாசு.. எனக்கு எல்லாவற்றையும் பதிவிட வேண்டும் என்ற ஆசை.. முதல் நாளே படம் பார்த்து விடுவதால் அதே ஆர்வத்தோடு பதிவு போட்டு விடுகிறேன்.. மாற்றிக் கொள்ள முயல்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
அனுபவத்தை மிகவும் சுவாரசியமாகவும் நெகிழ்வாகவும் எழுதியுள்ளீர்கள் கார்த்தி...அருமை.//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
நெகிழ்வான வரிகள் கார்த்திகைப் பாண்டியன்...//

மிக்க நன்றி புதியவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
உங்க பயன பதிவு அனுபவம், நெகிழ்ச்சி,வரலாறு என மூன்று சுவையையும் கலந்த அற்புதசுவை, வாழ்த்துகள்.புது கல்லுரி சென்றவுடன் பெட்டிதட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்.//

நன்றி அண்ணே.. Iam back..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
நானும் அப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்..//

நல்ல விஷயம்தானே அன்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
நெகழ்ச்சியான பதிவு//

நன்றி தல.. போட்டாவ எல்லாம் மாத்திட்டீங்க போல?

கார்த்திகைப் பாண்டியன் said...

// நையாண்டி நைனா said...
ஓட்டை இல்லடி... உன்னைத்தாண்டி குத்தனும்.. அது எப்படி எல்லாத்தையும் ரசனையா எழுதுறே???//

அது எப்படி நைனா.. ஓட்டுறது எல்லாம் ஓட்டிட்டு கடைசில நல்ல பிள்ளை மாதிரி? இருந்தாலும்.. பாராட்டுனதுக்கு நன்றி..

Anbu said...

\\//Anbu said...
நானும் அப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்..//

நல்ல விஷயம்தானே அன்பு..\\


ஆனால் முடியவில்லையே அண்ணா..

ஆ.சுதா said...

மிகவும் நெகிழ்ச்சியா இருக்கு பதிவு.
அருமையா எழுதி இருக்கீங்க.

| இருபுறமும் மலைகள் சூழ்ந்து நிற்க, குறுகிய பாதியின் வழியே பயணம் செய்யும் அனுபவமே அலாதிதான்|
உண்மை உண்மை..

|அத்தனையையும் அவருடைய அண்ணனே ஏமாற்றி வாங்கிக் கொண்டு விட்டார்|
இது போல சம்பவங்கள் முன்பு நிரைய நடந்திருக்கும் போல எங்கள் குடும்பத்தார்களில் பலர் இப்படி சொல்வதுண்டு.

ரொம்ப நல்ல பதிவு பாண்டியன்.

இளைய கவி said...

நீ எதோ உருப்படியா எழுதன மாதிரி எனக்கு ஒரு பீலிங் மாப்பி

Anbu said...

அண்ணா 100 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

ஊர்களின் வாசனகள் எப்போதும் நினைவில் இருந்து நீங்காதவை.. பால்யநாட்களினை நினைவு படுத்திய பதிவு!

ஆதவா said...

தேவாரம் என்றதும் மும்மூர்த்திகள் (நாயன்மார்) பாடிய தேவாரமோ என்று நினைத்தேன்.

இது பயண அனுபவமாகத் தொடங்கி, ஒரு நட்பின் தொடுதலாகப் பயணித்து, பிரிதலின் வலியோடு முடிந்திருக்கிறது. அம்மாவின் நட்பு (இந்த பெயரில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று வெகுநாட்களாக நினைத்து வருகிறேன். ) எத்தனை பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கிறது? அம்மா, தம் இளம் பிராயத்தில் என்னென்னவெல்லாம் செய்திருப்பார்? கொஞ்சம் ஆற அமர்ந்து யாரேனும் யோசித்திருக்கிறோமா? பெண்களின் நட்பு குறித்து உங்களிடம் கொஞ்சம் பேசியிருக்கிறேன்..

காலங்கள் கடந்து கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் நமது நட்பையே மறந்துபோய்விடுகிறோம். இதில் மற்றவர்கள்???

இக்கட்டுரை சிறியதாக இருந்தாலும் முடிவின் கனம் தாங்கவியலாததாக இருக்கிறது.!!

வினோத் கெளதம் said...

Nalla anubavam Kaarthi..

நர்சிம் said...

மிகநெகிழ்வான பதிவு நண்பா.

வெற்றி-[க்]-கதிரவன் said...

தேவாரம் என்றதும் மும்மூர்த்திகள் (நாயன்மார்) பாடிய தேவாரமோ என்று நினைத்தேன்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது அனைவரின் நாமம் அன்னையே

*இயற்கை ராஜி* said...

ammavai santhoshapaduthiteenga...very good..


how is new college Thozha ?:-)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நெகிழ்வான சம்பவம்.விவரித்த விதம் அருமை.

வழிப்போக்கன் said...

பதிவு நிஜமாவே நெகிழவைத்தது...

அத்திரி said...

ம்ம்ம்ம்ம் நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கீங்க நண்பா

அ.மு.செய்யது said...

அகநாழிகை வாசு அவர்களின் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.

ரம்மியமான வர்ணனைகளுடன் கூடிய நெகிழ வைத்த பதிவு கார்த்தி...

ர‌சிக்க‌ முடிந்த‌து.

தங்க முகுந்தன் said...

ஆதவா சொன்னது போலவே மூவர் தேவாரம் தான் என்று நான் எண்ணி வாசிக்கும்போதுதான் ஒரு ஊரின் பெயர் என்று தெரிந்தது. அருமையான பதிவு! எமக்கும் பழமையான அனுபவங்கள் ஏற்பட்டன! தாயின் ஆசீர்வாதம் இறுதியில் உமக்கு ஒரு மனநிறைவைக் கொடுத்ததே! அதுதான் உமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் கார்த்தி! வாழ்த்துக்கள்!

புல்லட் said...

தற்செயலா flute instrumental கேட்டுக்கொண்டிருக்கும்வாசிக்க நேர்ந்தது... சும்மா குழைச்சிட்டுது நெஞ்சை... சூப்பர் பாஸ்...

ப்ரியமுடன் வசந்த் said...

நெகிழ்வு

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ் கார்த்திகைப் பாண்டினிடம் இதைதான் எதிர்ப்பார்த்தேன். நெகிச்சியான நிகழ்வு.. கடைசி இரண்டு பத்திகளில் ஒரு திரைப்படத்தின் இறுதிக்காட்சி போல இருக்கு.. நீங்கள் நேரில் வந்து சொன்னால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது உங்கள் நடை... வாழ்த்துகள் நண்பா!

//ஊரின் முதல் மெச்சு வீடு //
மச்சுவீடு என்று நினைக்கின்றேன்...

மேவி... said...

"மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தித்தான் என்னுடைய கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பது தேவையில்லை என்ற எண்ணம் எனக்குண்டு."

இது உங்களின் உயர்ந்த உள்ளதை காட்டுகிறது. இதே மாதிரியான மனநிலைமை எல்லோருக்கும் வந்துவிட்டால் ; நாம் வாழும் பூமியே ஒரு சொர்கமாய் ஆகிவிடும்.


"" நிறைய நாள் கழிச்சு நான் இன்னைக்கு நானாக இருந்தேன்.. ரொம்ப தாங்க்ஸ்டா தம்பி..". ஏதோ ஒன்றை சாதித்தது போல எனக்கும் சந்தோஷமாக இருந்தது...!!!"

உங்களை பார்த்து எனக்கு பொறாமையாக உள்ளது.
என் அம்மாவை நானும் இதே போல் அவர்கள் வளர்ந்த மைசூர் க்கு அழைத்து போக வேண்டும்.......

ரொம்ப சந்தோசமாய் உணர்ந்தேன். இந்த பதிவை படித்த பின்.
வாழ்த்துக்கள் தோழரே

மேவி... said...

சார்,
இப்ப தெரியுது நீங்க எப்படி எக்ஸாம் ல நிறைய மார்க் எடுத்து எப்படி ன்னு

மேவி... said...

ஊரர் பதிவை உட்டி வளர்த்தால் தன் பதிவு தானாக வளருமாம் ....

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
ஆனால் முடியவில்லையே அண்ணா//

முடியும் என நம்பி முயற்சி செய்யுங்கள் அன்பு :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//மிகவும் நெகிழ்ச்சியா இருக்கு பதிவு.
அருமையா எழுதி இருக்கீங்க.
உண்மை உண்மை..இது போல சம்பவங்கள் முன்பு நிரைய நடந்திருக்கும் போல எங்கள் குடும்பத்தார்களில் பலர் இப்படி சொல்வதுண்டு.ரொம்ப நல்ல பதிவு பாண்டியன்.//

இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் உண்டு நண்பா.. நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//இளைய கவி said...
நீ எதோ உருப்படியா எழுதன மாதிரி எனக்கு ஒரு பீலிங் மாப்பி//

உனக்கே பிடிச்சிருக்கா? சாதிச்சுட்டேண்டா மாப்ள..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

// கவின் said...
ஊர்களின் வாசனகள் எப்போதும் நினைவில் இருந்து நீங்காதவை.. பால்யநாட்களினை நினைவு படுத்திய பதிவு!//

நன்றி கவின்.. மெயில் அனுப்பி இருக்கேன்.. பாருங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
காலங்கள் கடந்து கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் நமது நட்பையே மறந்துபோய்விடுகிறோம். இதில் மற்றவர்கள்???//

அதேதான் நண்பா.. நாம் நம்மை பற்றி சிந்திக்கும் பொழுது நாம் இதை எல்லாம் இழந்து விடுவோமோ என்று பயம் கொள்ளுகிறோம்? ஆனால் நம் பெற்றோர் எத்தனை விஷயங்களைத் தாண்டி வந்து இருக்கிறார்கள்? அதை நேரில் காணக் கிடைத்ததுதான் இந்தப் பதிவு எழுதக் காரணம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
Nalla anubavam Kaarthi..//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நர்சிம் said...
மிகநெகிழ்வான பதிவு நண்பா.//

வாழ்த்துக்கு நன்றி நர்சிம்..

"உழவன்" "Uzhavan" said...

மகிழ்ச்சி நண்பரே.. எங்கள் மனதும் நெகிழ்வாக உள்ளது இதைப் படிக்கும்போது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//பித்தன் said...
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது அனைவரின் நாமம் அன்னையே//

அருமையான பாட்டுங்க.. நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//இய‌ற்கை said...
ammavai santhosha paduthiteenga...very good..
how is new college Thozha ?:-)//

நன்றி தோழி.. சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகின்றன.. மற்ற ஆசிரியர்கள் எல்லாம் விடுமுறையில் இருக்கிறார்கள்.. இரண்டு வாரங்கள் போனால்தான் வேலையின் தாக்கம் தெரியும்

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஸ்ரீதர் said...
நெகிழ்வான சம்பவம்.விவரித்த விதம் அருமை.//

உங்களோட முதல் பின்னூட்டம்.. நன்றி ஸ்ரீ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழிப்போக்கன் said...
பதிவு நிஜமாவே நெகிழவைத்தது...//

நன்றி பிரவீன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
ம்ம்ம்ம்ம் நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கீங்க நண்பா//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//அ.மு.செய்யது said...
அகநாழிகை வாசு அவர்களின் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.
ரம்மியமான வர்ணனைகளுடன் கூடிய நெகிழ வைத்த பதிவு கார்த்தி...
ர‌சிக்க‌ முடிந்த‌து.//

இது மட்டும்தான் எழுதுவேன்னு இல்லாம எல்லாமே எழுதனும்னு ஆசை நண்பா.. அதனாலத்தான் சினிமா பற்றி எழுதுறது.. பார்ப்போம்.. வாழ்த்துக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

/தங்க முகுந்தன் said...
ஆதவா சொன்னது போலவே மூவர் தேவாரம் தான் என்று நான் எண்ணி வாசிக்கும்போதுதான் ஒரு ஊரின் பெயர் என்று தெரிந்தது. அருமையான பதிவு! எமக்கும் பழமையான அனுபவங்கள் ஏற்பட்டன! தாயின் ஆசீர்வாதம் இறுதியில் உமக்கு ஒரு மனநிறைவைக் கொடுத்ததே! அதுதான் உமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் கார்த்தி! வாழ்த்துக்கள்!//

ரொம்ப நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி said...
தற்செயலா flute instrumental கேட்டுக்கொண்டிருக்கும்வாசிக்க நேர்ந்தது... சும்மா குழைச்சிட்டுது நெஞ்சை... சூப்பர் பாஸ்...//

ரொம்ப நன்றி புல்லட்.. உங்க பிரச்சினைகளுக்கு நடுவுல நீங்க இப்படி ரிலாக்ஸ் பண்ணிக்கிறதா பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்......வசந்த் said...
நெகிழ்வு//

நன்றி வசந்த்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
வாவ்வ்வ் கார்த்திகைப் பாண்டினிடம் இதைதான் எதிர்ப்பார்த்தேன். நெகிச்சியான நிகழ்வு.. கடைசி இரண்டு பத்திகளில் ஒரு திரைப்படத்தின் இறுதிக்காட்சி போல இருக்கு.. நீங்கள் நேரில் வந்து சொன்னால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது உங்கள் நடை... வாழ்த்துகள் நண்பா! //

ரொம்ப நன்றி தலைவரே..

//மச்சுவீடு என்று நினைக்கின்றேன்...//

பேச்சு வழக்குல அப்படியே எழுதிட்டேன்.. மாத்திக்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//MayVee said...
இது உங்களின் உயர்ந்த உள்ளதை காட்டுகிறது. இதே மாதிரியான மனநிலைமை எல்லோருக்கும் வந்துவிட்டால் ; நாம் வாழும் பூமியே ஒரு சொர்கமாய் ஆகிவிடும்.//

மாறவேண்டும் என்ற ஆசை உண்டு நண்பா..:-)

//உங்களை பார்த்து எனக்கு பொறாமையாக உள்ளது.
என் அம்மாவை நானும் இதே போல் அவர்கள் வளர்ந்த மைசூர் க்கு அழைத்து போக வேண்டும்.......//

கண்டிப்பாக கூட்டிப் போங்கள்.. ஒரு உண்மையான சந்தோஷம் இருவருக்குமே கிடைக்கும்

//ரொம்ப சந்தோசமாய் உணர்ந்தேன். இந்த பதிவை படித்த பின்.
வாழ்த்துக்கள் தோழரே//

நன்றி Mayvee

கார்த்திகைப் பாண்டியன் said...

// MayVee said...
சார்,இப்ப தெரியுது நீங்க எப்படி எக்ஸாம் ல நிறைய மார்க் எடுத்து எப்படி ன்னு//

ரகசியம் நண்பா.. வெளில சொல்லாதீங்க..

//ஊரர் பதிவை உட்டி வளர்த்தால் தன் பதிவு தானாக வளருமாம் ....//

இது எனக்கு புரிஞ்சிடுச்சே..கண்டிப்பா வளரும்ப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//"உழவன் " " Uzhavan " said...
மகிழ்ச்சி நண்பரே.. எங்கள் மனதும் நெகிழ்வாக உள்ளது இதைப் படிக்கும்போது.//

ரொம்ப நன்றி சார்..

ராம்.CM said...

அழகான கருத்து. அருமையான வரிகள் மூலம் உணர்த்தியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி ராம்..

Unknown said...

மிகவும் அருமையான பதிவு..

//.. மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தித்தான் என்னுடைய கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பது தேவையில்லை..//

எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டிய கருது இது..

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றிங்க..:-)

Joe said...

//
கிளம்பும்போது அம்மா உடைந்து அழத் தொடங்கி விட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. வெளியில் சொல்லாத ஆசை ஒன்று நிறைவேறும்போது வரும் ஆனந்தக் கண்ணீர் அது. வீட்டிற்கு வந்த பிறகு அம்மா என்னிடம் சொன்னார் .. " நிறைய நாள் கழிச்சு நான் இன்னைக்கு நானாக இருந்தேன்.. ரொம்ப தாங்க்ஸ்டா தம்பி..". ஏதோ ஒன்றை சாதித்தது போல எனக்கும் சந்தோஷமாக இருந்தது...!!!
//
அருமையான பதிவு பாண்டியன்.

பால்ய சிநேகிதர்களை சந்திப்பது, தான் வாழ்ந்த கிராமத்தில் இன்றும் இருக்கும் மக்களை, தூக்கி வளர்த்த உறவினர்களை சந்திப்பது எல்லாம் ஒரு பெண்ணின் வாழ்வில் அபூர்வமான அனுபவம். கணவனுடன் வெளியூருக்கோ / வெளிநாட்டுக்கோ சென்ற பிறகு பலருடன் தொடர்பே இல்லாமல் போய் விடுகிறது பல பெண்களுக்கு. அவர்களாக ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கி விடுகிறார்களா, இல்லை ஆண்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை தருவதில்லையா?

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மைதான் நண்பா.. சமூகத்தில் பெண்களை இன்னும் ஒடுக்கித்தான் வைத்துள்ளோம்.. அதே சமயம் பெண்களும் அதையேதான் விரும்புகிறார்களோ என்னும் ஐயமும் எனக்குண்டு..

Ponni Bala said...

nalla aluthierukkenka MKP. Please continue