June 13, 2009

மாசிலாமணி - திரை விமர்சனம்..!!!

காதலில் விழுந்தேன் பட ஜோடியான நகுலன், சுனைனா - ஈத்தரை படத்தைக் கூட விளம்பரத்தின் மூலமாக ஓட வைக்கும் சன் டிவி - திருட்டுப் பயலே தந்த கல்பாத்தி அகோரம்.. இவர்களின் கூட்டணியில் வந்து இருக்கும் படம்தான் மாசிலாமணி. லாஜிக், அது இது என்று கேள்வி கேக்காதவரா? இரண்டு மணி நேரம் பொழுது போனால் போதும் என்பவரா? இது உங்களுக்கான படம்.
வேலை வெட்டி இல்லாத, ஊருக்கு உதவும் நல்லவன் மாசிலாமணி (நகுலன்) . சுருக்கமாக மாசி. நடனாலயாவில் படிக்கும் திவ்யாவை (சுனைனா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் சுனைனா ஒவ்வொரு முறையும் நகுலனை ரவுடியாகவே பார்க்க நேரிடுகிறது. (இது துள்ளாத மனமும் துள்ளும்...) நகுலனின் காதலை ஏற்க மறுக்கிறார். சுனைனாவின் வீட்டில் இருக்கும் எல்லோரையும் கவர்வதற்காக மணியாக மாறுகிறார் நகுலன். (பூவெல்லாம் கேட்டுப் பார், ஜோடி..) மாசியும் மணியும் வேறு என்று சுனைனாவையும் நம்ப வைத்து காதலிக்கிறார். இடையில் ஒரு நொச்சு பிடிச்ச இன்ஸ்பெக்டர் தொல்லை வேறு. கடைசியில் உண்மை தெரிந்து நகுலனை சுனைனா ஏற்றுக் கொள்கிறாரா என்பதே படத்தின் கதை.
இரண்டாவது படத்திலேயே பறந்து வந்து இன்ட்ரோ ஆகிறார் நகுலன். கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். நன்றாக நடனம் ஆடுகிறார். நடிப்பும் வருகிறது. ஆனால் தமிழை உச்சரிப்பதில் படுத்தி எடுக்கிறார். அவர் சீரியஸாக பேசும்போதும், காமெடி பண்ணும்போதும் நமக்கு எரிச்சல் வருகிறது. சுனைனா அழகு. எல்லா உடைகளும் அம்சமாக பொருந்துகின்றன. கவர்ச்சியாகவும் பாடல்களில் கலக்குகிறார். வில்லன் போலிசாக வரும் பவனை கடைசி காட்சியில் நல்லவனாக்கி காமெடி பீசாக்கி விடுகிறார்கள்.
சந்தானமும் ஸ்ரீநாத்தும் நகுலனின் நண்பர்களாக சிரிக்க வைக்கிறார்கள். சந்தானம் சகட்டு மேனிக்கு எல்லாரையும் திட்டுகிறார். இயல்பான காமடியில் ஸ்ரீநாத் அசத்துகிறார். கதாநாயகனாக வேண்டும் என்று விதம் விதமான கெட்டப்புகளில் வரும் எம். எஸ். பாஸ்கர் வரும் காட்சிகள் மொக்கை காமெடி. சிவாஜி ரஜினி கெட்டப்பும், கஜினியும் ஓகே. கருணாஸ் வேஸ்ட். சுனைனாவின் குடும்பமாக வரும் எல்லோரும் நிறைவாக செய்து இருக்கிறார்கள்.
இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே அசத்தல். "ஓ திவ்யா" பாட்டும் "டோரா டோரா" பாட்டும் மெலடி என்றால் "சிக்கு புக்கு" பாட்டும் "சூப்பரு" பாட்டும் குத்தாட்ட கலக்கல்கள். ரோமிலும் தாய்லாந்திலும் படம் பிடிக்கப் பட்டு இருக்கும் பாடல்களில் ஒளிப்பதிவாளர் வெற்றி அசத்துகிறார்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் மாசியும் மணியும் வேறு என்று நகுலன் நிரூபிக்கும் காட்சிகளை நன்றாக படமாக்கி உள்ளார்கள். ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்த படங்களின் கதையை உல்டா செய்து இருக்கிறார்கள். மணி யார் என்று கேட்காமலே கல்யாணத்துக்கு சுனைனா வீட்டில் ஒத்துக் கொள்வதெல்லாம் காதுல பூந்தோட்டம். ஆனாலும் படம் போரடிக்காமல் போவதுதான் அதன் பலமே. இயக்குனர் ஆர். என். ஆர். மனோகர் அடுத்த படத்தை கொஞ்சம் லாஜிக்கோடு எடுப்பார் என நம்புவோம்.

மாசிலாமணி - ஜாலியான டைம்பாஸ் மச்சி..

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

28 comments:

ஆ.ஞானசேகரன் said...

//லாஜிக், அது இது என்று கேள்வி கேக்காதவரா? இரண்டு மணி நேரம் பொழுது போனால் போதும் என்பவரா? இது உங்களுக்கான படம். //

அதுசரி

ஆ.ஞானசேகரன் said...

//அடுத்த படத்தை கொஞ்சம் லாஜிக்கோடு எடுப்பார் என நம்புவோம்.//

எப்படி நம்புவது நண்பா...

நாடோடி இலக்கியன் said...

கேபிளாரின் விமர்சனத்தில் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி மட்டும் ஓகே என்று சொல்லியிருக்கிறார்.நீங்க மொக்கைன்னு சொல்லியிருக்கீங்க.அது மாதிரியே ஒளிப்பதிவை பற்றி அவர் எழுதியிருப்பதை நீங்களே படிச்சிக்கோங்க.

மொத்தத்தில் அது அவர் பார்வை,இது உங்க பார்வை ரெண்டையும் படிச்சிட்டு ஒரே குழப்பம் படம் பார்க்கலாமா வேண்டாமான்னு.............

நர்சிம் said...

//ஈத்தரை படத்தைக் //

ரொம்ப நேரம் சிரிச்சேன் நண்பா.. புரியுமா இந்த வார்த்தை மதுரையல்லாதவர்களுக்கு....

தருமி said...

லாஜிக், அது இது என்று கேள்வி கேக்காதவரா? இரண்டு மணி நேரம் பொழுது போனால் போதும் என்பவரா?//

அது யார்? நீங்களா....?

ஆ.சுதா said...

அதுக்குள்ள பதிவ போட்டாச்சா!!
கலக்கல் (ஆனாலும் உங்கள முந்தி ரெண்டு பேரு போட்டுடாங்கபா.. என்ன கொடும இது)

வழக்கம் போல் உங்கள் விமர்சன பாணி சிறப்பு மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்தி நிரைகுறைகளை அலசுவது உங்களின் தனி அம்சம்!

|மாசிலாமணி. லாஜிக், அது இது என்று கேள்வி கேக்காதவரா? இரண்டு மணி நேரம் பொழுது போனால் போதும் என்பவரா? இது உங்களுக்கான படம்.|

அப்பாட என்னகான படம்மில்லிங்கோ!!

ஆ.சுதா said...

உங்க கிட்ட கேட்னும்னே இருந்தேன்
நம்ம ஆதவாவை எங்க!!!

வேத்தியன் said...

விமர்சனம் நல்லா இருக்கு கார்த்தி...

வேத்தியன் said...

ஆ.முத்துராமலிங்கம் said...
உங்க கிட்ட கேட்னும்னே இருந்தேன்
நம்ம ஆதவாவை எங்க!!!

June 13, 2009 11:05 AM//

எங்க காணோம்???

வினோத் கெளதம் said...

இந்த படத்தில் நகுலனுக்கு ஆஸ்கார் கிடைக்க வைப்பு உள்ளதாக ஒரு செய்தி அடிப்படுகிரதே சன் டிவி செய்தியில்..உண்மையா...??

சொல்லரசன் said...

//ஈத்தரை படத்தைக் கூட விளம்பரத்தின் மூலமாக ஓட வைக்கும் சன் டிவி//

ஈத்தரை அர்த்தம்புரியவில்லை,உங்க விமர்சனம் அருமை.

Raju said...

எப்டிண்ணே...
நீங்க இந்த மாதிரி படங்களா, தேடி தேடி போய் பாப்பீங்களோ..!
நான் சொன்ன மாதிரி படங்கள பாருங்க.

நேத்து நைட் ஷோ வா...?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இதை ஒரு வேலையாவே எடுத்துக்கிட்டீங்க போல.ஆனாலும் ரொம்ப தைரியம் ஜாஸ்திங்க உங்களுக்கு.

தேவன் மாயம் said...

ஒரு தடவை பார்க்கலாம் என்றாலே ஓகேதான்!!

தீப்பெட்டி said...

//படம் போரடிக்காமல் போவதுதான் அதன் பலமே.//

நான் படத்தை சன் டிவில போடும் போது பாத்துக்கலாம்னு இருக்கேன்..

பாட்டுகளும் நகைச்சுவைகளும் சன்டிவிலயே சலிக்கும் வரை பாத்து தொலைக்கணுமே..

மேவி... said...

வாத்தியாரே .....

எல்லா பட விமர்சனமும் எழுதுறிங்க அது எப்படி ?????

நேத்து காலேஜ் கட் அஹ ??????


ஜாலி அஹ இருக்க படம் ......

ஹ்ம்ம் பார்க்க முடிந்தால் பார்க்கிறேன் .....

ஆமா ஈத்தரை ன்ன என்ன அங்கிள்

மேவி... said...

"லாஜிக், அது இது என்று கேள்வி கேக்காதவரா? இரண்டு மணி நேரம் பொழுது போனால் போதும் என்பவரா? இது உங்களுக்கான படம்."

நாங்க எல்லாம் அப்படி பாரபட்சம் பார்க்கறவங்க இல்லை .......

மேவி... said...

"அடுத்த படத்தை கொஞ்சம் லாஜிக்கோடு எடுப்பார் என நம்புவோம்"

இதை நான் தனம்பிக்கை என்பத ????

என்னவென்று சொல்ல்வது !!!1

மேவி... said...

"நாடோடி இலக்கியன் said...
கேபிளாரின் விமர்சனத்தில் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி மட்டும் ஓகே என்று சொல்லியிருக்கிறார்.நீங்க மொக்கைன்னு சொல்லியிருக்கீங்க.அது மாதிரியே ஒளிப்பதிவை பற்றி அவர் எழுதியிருப்பதை நீங்களே படிச்சிக்கோங்க.

மொத்தத்தில் அது அவர் பார்வை,இது உங்க பார்வை ரெண்டையும் படிச்சிட்டு ஒரே குழப்பம் படம் பார்க்கலாமா வேண்டாமான்னு............."

சார் ....
இது ஒரு சாதரண ரசிகனின் பார்வை ......

மேவி... said...

nane 100.......

(sorry maths la naan konjam weak)

வழிப்போக்கன் said...

சுனைனா அழகு. எல்லா உடைகளும் அம்சமாக பொருந்துகின்றன. கவர்ச்சியாகவும் பாடல்களில் கலக்குகிறார்.//

அப்ப இவங்களுக்காக பாக்கலாம்ன்னு சொல்லுங்க...
:)))

Muruganandan M.K. said...

"ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்த படங்களின் கதையை உல்டா செய்த..." இத்தகைய படங்களை பார்க்க வேண்டி சந்தர்ப்பம் ஏற்படாமல் காப்பாற்றிவிட்டீர்கள்.
நல்ல விமர்சனம்.

Prabhu said...

இன்னைக்கு போக வேண்டியது..... பிழைச்சேன்னு நினைக்கிறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

தானை தலைவி சுனைனா பத்தி ஒரு வரி கூட சொல்லலீயே தலைவா

Prabu M said...

அதிகம் அலட்டிக்காம ஒரு பார்வையாளன் கோணத்துல எளிமையா தேறுமா.. தேறாதா.... எந்தப் படம் யாருக்கு ஒத்துப் போகும் என்று சுருக்கமாக விமர்சிக்கும் உங்க ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு நண்பா... :)

நீங்க இவ்ளோ தூரம் சொல்லிட்டீங்க .... இது போதுமே சன் குரூப்புக்கு... படத்தை மாபெரும் வெற்றிப்படம் ஆக்கிடுவாங்களே.... !!

யாழினி said...

விமர்சனம் அருமை...

குமரை நிலாவன் said...

//வழக்கம் போல் உங்கள் விமர்சன பாணி சிறப்பு மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்தி நிரைகுறைகளை அலசுவது உங்களின் தனி அம்சம்!//

வழமை போலவே நண்பா

Karthik Lollu said...

Enakku Inda kadhaiyil Vijay nadichi irundaal nalla irundurukkom oru feel... ella padhivum padichen... Kulir 100 review thaan disappointed... Enakku padame pidikala... Naanga padam fulla kalasitu irundoom... Inda padam sunaina oda aatam eppadi??? ODI ODI VILAIYAADA VAADA... theater la rocket vithoom la??