June 27, 2009

நாடோடிகள் - திரைவிமர்சனம்..!!!


"என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்.." இந்த ஒரு வரியை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம் தான் நாடோடிகள். காதலின் வலியையும் நட்பின் ஆழத்தையும் ரொம்ப அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்கள். தெளிவான கதையுடனும், அழகான திரைக்கதையுடனும் களமிறங்கி கலக்கி இருக்கிறார்கள். இயக்குனராக சுப்ரமணியபுரம், தயாரிப்பாளராக பசங்க என்று பட்டாசு கிளப்பிக் கொண்டிருக்கும் எம்.சசிக்குமாருக்கு நடிகராக இது ஒரு அருமையான படம்.




தான் காதலிக்கும் மாமன் பெண்ணுக்காக கவர்மென்ட் வேலைக்கு முயற்சி செய்து வருபவன் கருணாகரன் (சசிக்குமார்). அவனுடைய நண்பன் சந்திரன் (விஜய்) சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கும் கருணாவின் தங்கைக்கும் காதல். இவர்களின் இன்னொரு நண்பனான பாண்டி (பரணி) வேலைக்காக வெளிநாட்டுக்கு போக விரும்புபவன். சந்தோஷமாக இருக்கிறார்கள். கருணாவின் மாமன் பெண்ணான நல்லம்மாள் (அனன்யா) அவன் மீது உயிரையே வைத்து இருக்கிறாள்.




கருணாவின் இன்னொரு நண்பன் சரவணன். அவனுடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு. அவர்களை சேர்த்து வைக்க கருணாவும் அவனுடைய நண்பர்களும் போராடுகிறார்கள். பிரச்சினையின்போது சந்திரன் தன் காலை இழக்கிறான். பாண்டிக்கு காது கேட்காமல் போகிறது. கேஸ் ஆகிப்போனதால் கவர்மென்ட் வேலை கிடைக்காது என நல்லம்மாளை அவள் அப்பா வேறு ஒருவருக்கு மணம் செய்து தருகிறார். நண்பனின் காதலுக்காக இவர்கள் தங்கள் சொந்த வாழ்வை இழக்கிறார்கள். ஆனால் அந்தக் காதல் உண்மையானது தானா? இவர்களின் தியாகத்துக்கு தகுதியானதுதானா? கடைசியில் என்ன நடந்தது.. இதுதான் நாடோடிகள்.




சசிக்குமார் ஒரு சாயலில் டீயார் போலவே இருக்கிறார். கனமான பாத்திரத்தை அலட்டாமல் செய்து இருக்கிறார். கஷ்டப்பட்டு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். அவருடைய அழுத்தமான குரல் அவருக்கு மேலும் கம்பீரத்தை தருகிறது. சென்னை 28 விஜய்க்கு அடக்கமான கேரக்டர். அவருக்கும் அவருடைய அப்பாவுக்குமான உறவை சொல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் ரியல் ஹீரோ பரணி தான். மனுஷன் பிரித்து மேய்ந்து இருக்கிறார். கல்லூரியிலியே கலக்கியவர். காதலுக்காக அலையும் காட்சிகளாகட்டும், காது கேட்காமல் அவதிப்படும் காட்சிகளாகட்டும்.. சிக்கிய இடத்தில் எல்லாம் மனிதர் சிக்சர் அடிக்கிறார். நாயகி அனந்யாவும் நிறைவாக செய்து இருக்கிறார். கஞ்சா கருப்புக்கு இது இன்னொரு டக்லஸ். படத்தின் எல்லா நடிகர்களுமே அலட்டாமல் தங்கள் வேலையை நிறைவாக செய்து உள்ளார்கள்.




"சம்போ சிவசம்போ" பாட்டுதான் படத்தின் உயிர்நாடி. இதைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக வேறு பாடல்கள் இல்லை. இசை சுந்தர்.சி.பாபு. பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கிறார். சேசிங் காட்சிகளில் கதிரின் காமிரா அதகளம் பண்ணுகிறது. படத்தின் ரியாலிட்டிக்கு கலை இயக்குனர் மிகவும் உதவி உள்ளார்.




கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் சமுத்திரக்கனி. வசனங்கள் நச். படத்தின் பெரிய பலம வசனங்கள்தான். ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் ஒரு நகைச்சுவை உணர்வு இழையோடிக் கொண்டே இருக்கிறது. அவ்வப்போது சுப்ரமணியபுரம் சாயல் வருவதை தவிர்த்து இருக்கலாம். தேவை இல்லாமல் ஒரு திருவிழாப் பாட்டும், ஒரு குத்துப்பாட்டையும் இணைத்து இருக்க வேண்டாம். உன்னைச் சரணடைந்தேன் என்னும் நல்ல படத்தையும், நெறஞ்ச மனசு என்னும் நொல்லப் படத்தையும் கொடுத்த சமுத்திரக்கனி நாடோடிகளில் பட்டையைக் கிளப்பி விட்டார்.


நாடோடிகள் - உள்ளம் கவர் கள்வர்கள்...


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

31 comments:

நாடோடி இலக்கியன் said...

படிச்சிட்டேன்.
இன்று இரவுக் காட்சி புக் பண்ணியாச்சு.

சொல்லரசன் said...

விமர்சனம் அருமை,இதன் எதிர் பதிவு நையான்டி பக்கம் எதிர்பார்க்கலாம்

லோகு said...

அருமையான படத்துக்கு அருமையான விமர்சனம்..

Raju said...

அதெப்படியா உங்களுக்கு மட்டும் படம் பாக்கத் தோதுவா, சனிக்கிழமை ரிலீஸாவுது..!
என்னமோ போங்க...!

அப்பறம், படத்துல"ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா" பாட்டு நல்லாருக்க மாதிரியிருக்கு.
வேல்முருகன் வாய்ஸ்ல..!

Raju said...

\\சொல்லரசன் said...நையான்டி பக்கம் எதிர்பார்க்கலாம்\\

நைனா எங்கிருந்தாலும் உடனடியா மேடைக்கு வரவும்..மேடைக்கு வரவும்..மேடைக்கு வரவும்..

ராம்.CM said...

நன்றாக சொல்லியுள்ளீர்கள்.படம் பார்த்தாச்சு... தாங்ஸ்சு...

மேவி... said...

neenga valmiki poga poratha sonninga la ????

தீப்பெட்டி said...

நல்ல படம் போல இருக்கு.. எல்லாரும் சொல்லியாச்சு.. பாத்துட வேண்டியதுதான்..

ஆ.ஞானசேகரன் said...

முடிந்தால் பார்க்கின்றேன் நண்பா.... உங்களைப் பார்த்தால் பொறாமையா இருக்கு... சரி சரி கால்கட்டு போடுரவரைக்கும் பாருங்க....

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா

பழூர் கார்த்தி said...

நல்லா எழுதியிருக்கீங்க..

இந்த படத்தின் டிரெயிலர்கள் பார்த்தபோதே படம் நன்றாக இருக்கும் என நினைத்திருந்தேன்..

இப்போ நீங்க படம் பாத்துட்டு சொல்லும்போது மகிழ்ச்சியாயிருக்கு..
இம்மாதிரி யதார்த்தமான, நல்ல படங்கள் நிறைய வரவேண்டும்..

சீக்கிரம் பார்த்து விடுகிறோம் :-)

Suresh said...

இன்னைக்கு கிளம்பிற வேண்டியது தான்..
தங்கைக்கு என் வாழ்த்துகளை சொல்லிடு மச்சி புதன் என்பதால் வர இயவில்லை

நல்ல விஷியம் நண்பா :-)

நான் சிறுகதை போட்டிக்கு ஒரு கதை எழுதியுள்ளேன் தங்களின் கருத்தை அரிய ஆர்வமாய் உள்ளேன் ;)

காதலுக்கு கண்ணில்லை ? - உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.!

Anonymous said...

விமர்சனம் சூப்பரு தலைவா..

Anonymous said...

http://
funny-indian-pics.blogspot.com

ஆ.சுதா said...

அஹா!! அடுத்த ஒரு நல்ல படம் கிடைச்சுடா!!
விமர்சனம் அருமை. (நாங்களும் படம் பார்க்கனும்னுதா நினைக்குரோம்... அனா நடக்கமாட்டேனுதே!!)

ப்ரியமுடன் வசந்த் said...

இப்பவே படம் பாக்கணும்போல இருக்கு நண்பா

தேவன் மாயம் said...

நேர பார்த்தாமாதிரி இருக்கு

*இயற்கை ராஜி* said...

நல்லா எழுதி இருக்கீங்க

வெற்றி-[க்]-கதிரவன் said...

அனந்யாவுக்கு கொடுத்த டப்பிங் சரியில்லை.

இரண்டாவது பாதி ஜவ்வு..

நல்ல கதை முதல் பாதி நல்ல திரைகதை...

காமெடி கலக்கல்

Prabu M said...

வழக்கம் போல தரமான விமர்சனம்...
கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.....

Prabhu said...

vara vara vimarsanamla niraya poda arambichutingale!

நையாண்டி நைனா said...

/*
சொல்லரசன் said...
விமர்சனம் அருமை,இதன் எதிர் பதிவு நையான்டி பக்கம் எதிர்பார்க்கலாம்
*/

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்ம பதிவுக்கு வந்துகிட்டு இருந்த ஒரு பத்து பதினஞ்சிபேரை என்னை வச்சே விரட்டிட்டாங்க....

எப்பா... இது சினிமா விமர்சனம்... இதுக்கு எப்படி எதிர் எழுதுறது...??? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்....... said...
\\சொல்லரசன் said...நையான்டி பக்கம் எதிர்பார்க்கலாம்\\

நைனா எங்கிருந்தாலும் உடனடியா மேடைக்கு வரவும்..மேடைக்கு வரவும்..மேடைக்கு வரவும்..
*/

வந்தாச்சு மாப்ளே...

Karthik Lollu said...

Padam sema sema.. adulayum anda 2 ponnunga sooper

Karthik Lollu said...

Sasikumar Lover - This girl in real life cannot speak .. she is Dumb.. but we can never find out that .....

Suresh said...

படம் பார்த்தேன் சூப்பர் .. அதற்க்கு என் மார்க் 98/100

Anonymous said...

படம் பார்த்துட்டேன் தல..உங்க விமர்சனமுன் நச்சுன்னு இருக்கு...படத்தைப் போலவே...

"உழவன்" "Uzhavan" said...

சனிக்கிழமையே படத்தைப் பார்த்தாச்சு.. சூப்பர்

குமரை நிலாவன் said...

அஹா!! அடுத்த ஒரு நல்ல படம் கிடைச்சுடா!!
விமர்சனம் அருமை. (நாங்களும் படம் பார்க்கனும்னுதா நினைக்குரோம்... அனா நடக்கமாட்டேனுதே!!)

repeattu

SVC/KEC said...

HAI.AFTER A LONG GAP, I READ YOUR CINE VIMARSANAM. I WOLUD LIKE TO SEE IT.

ஊர்சுற்றி said...

நாடோடிகளின் விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்....