October 2, 2009

உக்கார்ந்து யோசிச்சது - மதுரை ஸ்பெஷல் (02-10-09)..!!!

மதுரையில் கொஞ்ச நாட்களாக வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணிவதை கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். அணியாத மக்களுக்கு இருநூறு ரூபாய் ஸ்பாட் பைன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் கிடைத்த அனுபவம் வேறு மாதிரி. மனிதரிடம் ஹெல்மட் உண்டு. ஆனால் அதை அணியாமல் பைக்கின் முன்னாடி வைத்துக் கொண்டு போய் போலீசிடம் மாட்டிக் கொண்டார். அவருக்கும் போலிஸ்காரருக்கும் நடைபெற்ற உரையாடல் இங்கே..

"சார், நான் தான் ஹெல்மெட் வச்சு இருக்கேனே.. அப்புறம் எதுக்கு சார் நிப்பாட்டுறீங்க..?"

"யோவ், ஹெல்மெட் வச்சு இருந்தா போதுமா? அதை தலைல போட்டு இருக்கணும்யா.."

"அதெல்லாம் இல்லை சார்.. உங்களுக்கு என்ன.. ஹெல்மெட் இருக்கணும்.. என்கிட்டே இருக்கு.. அவ்வளவுதான்.."

"நீ அப்படி வரியா.. சரி நான் பேச்சுக்கு கேக்குறேன்.. நீ ஒரு பலான இடத்துக்கு போறேன்னு வச்சுக்குவோம்.."

"சார்.."

"யோவ், அதிர்ச்சி ஆகாதய்யா.. சும்மா போறேன்னு தானே சொன்னேன்.. அங்கே போறப்ப ஒற (காண்டம்) வாங்கிட்டுத்தான போவ.. அதை யூஸ் பண்ணாம பாக்கெட்ல வச்சு இருந்தா உனக்கு எய்ட்ஸ் வராம இருக்குமா?"

"சார்.. என்ன சார் இப்படி எல்லாம் பேசுறீங்க.."

"வலிக்குதுல.. அதே மாதிரித்தான்யா.. ஹெல்மெட் வாங்கி மாட்டாம இருக்கிறதும்.. ஒழுங்கா பைனக் கட்டிட்டுப் போ.."

நண்பர் பணத்தைக் கட்டிவிட்டு வந்திருக்கிறார். இதில் யாரை நொந்து கொள்ள?

***************

நேற்றைக்கு இரவு நண்பர்களோடு மீனாக்ஷி அம்மன் கோவில் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு வெளிநாட்டுக்கார தம்பதி (காதலர்கள்?) ரிகஷாக்காரரிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் சொல்வது எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. அதை கதைதான் அவருக்கும். என்னவென்று விசாரித்தேன். உடைந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ரிகஷா வண்டியிலேயே ஊரை சுற்றிப் பார்க்க ஆசையாம். அதில் போனால்தான் ஊரைப் பொறுமையாக ரசிக்க முடியுமாம். வண்டிக்காரரிடம் பேசி ஏற்றி விட்டேன். இது போல வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவும் வகையில் கோவிலை சுற்றி ஏன் உதவி மையங்களை அரசு அமைக்கக் கூடாது? ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் இருந்தும் பயணிகளைக் காக்க இது உதவுமே..!!!

***************

ஊர் சுற்றி விட்டு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனோம். மதுரை முருகன் இட்லிக் கடை. நான் அங்கே செல்வது நேற்று தான் முதல் தடவை. பொதுவாக எனக்கும் சைவ சாப்பாட்டுக் கடைகளுக்கும் ஆவதில்லை என்பதால் இது போன்ற கடைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆளுக்கு ஒரு தோசையை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம். நாங்கள் மூன்று பேர். டேபிளின் இன்னொரு சேரில் வேறொருவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

தோசைக்கு பல ரகத்தில் சட்னி வைத்தார்கள். ஆனால் தேங்காய் சட்னி மட்டும் இல்லை. நண்பன் ஒருவன் "என்னடா இது.. தேங்கா சட்னி இல்லை?" என்றபோது எதிரில் இருந்த நபர் சொன்னார்.."என்ன தம்பி.. உங்களுக்குத் தெரியாதா.. நான் இங்கே பல வருஷமா சாப்பிடுறேன்.. இங்கே தேங்கா சட்னி தர மாட்டாங்களே.." ஓ..இது இந்தக் கடையின் வழக்கம் போல என்று சாப்பிடத் தொடங்கினோம்.

கொஞ்ச நேரம் கழித்து சர்வர் ஒருவர் சட்டியில் சட்னியோடு வந்தார். "சாரி சார், கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.." நண்பர்கள் அனைவரும் காண்டாகி பக்கத்தில் இருப்பவரைப் பார்த்தோம். "இதுதான் நீ பல வருஷமா சாப்பிடுற அழகா?" அவர் கேனத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்கள்... அடங்கொய்யால.. எதெதுல அலப்பறை விடுறதுன்னு ஒரு அளவு இல்லையா?

***************

மதுரை பதிவுலக நண்பர் தருமி ஐயா மொழிபெயர்த்து இருக்கும் புத்தகம் "அமினா". கிழக்கு பதிப்பக வெளியீடு. அவருக்கு வாழ்த்துகள். புத்தகம் பற்றிய நண்பர் ஸ்ரீதரின் விரிவான இடுகை இங்கே...

***************

தஞ்சாவூர் பெரியகோவிலை மாதிரியாகக் கொண்டு, அது கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டு காலம் ஆகி விட்டதைக் கொண்டாடும், மதுரை அருகே இருக்கும் ஒத்தக்கடையில் ஒரு கோவிலைக் கட்ட முயற்சி செய்து வருகிறார்களாம். இந்த முயற்சி மட்டும் செயல் பெறத் தொடங்கினால் பல்லாயிரக்கணக்கான சிற்பிகளுக்கு வேலை கிடைக்கக்கூடும். அரசு இந்த முயற்சிக்கு அனுமதி வழங்குமா எனத் தெரியவில்ல்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

***************

இந்த எஸ்.எம்.எஸ். கவிதையை எனக்கு அனுப்பியவர் - மதுரையில் பிறந்தாலும் நமீதா பிறந்த சூரத் மண்ணில் இப்போது இருப்பதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதும் அன்பு நண்பர் ராஜூ. (முன்னொரு காலத்தில் டக்ளஸ் என்று அறியப்பட்டவர்).

உன் விழிகளே போதுமடி
என்னைக் கொல்ல..
அதில், மேலும் ஏன்
விஷத்தைத் தடவுகிறாய்?
கண்மை..!!!

***************

கடைசியா.. ஒரு ஜோக். இதுவும் எஸ்.எம்.எஸ்ஸில் வந்ததுதான்.

பார். போன் அடிக்கிறது. ஒரு மனிதன் எடுத்துப் பேசுகிறான்.

"ஹலோ.."

"சொல்லும்மா.."

"டார்லிங்.. நான் ஷாப்பிங் வந்த இடத்துல ஒரு நகையப் பார்த்தேன்.. சூப்பரா இருக்கு.. ஒரு லட்சம்தான்.. வாங்கிக்கவா..?"

"கண்டிப்பா.. வாங்கிக்கோ.."

"தாங்க்ஸ்.. அதோட ஒரு பட்டு புடவையும் எடுத்துக்கவா?"

"ஒண்ணு போதுமா செல்லம்.. ரெண்டா வாங்கிக்கயேன்.."

"ஐயோ.. என் செல்லம்னா நீங்கதான்.. உங்க கார்ட் என்கிட்டே தான் இருக்கு.. யூஸ் பண்ணிக்கவா?"

"உனக்கு இல்லாமலா.. ஜமாய்.. பை.."

போனை வைத்த பிறகு அருகில் இருந்த மனிதர் அவனிடம் கேட்டார்.

"உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?"

அவன் சிரித்துக் கொண்டே கூட்டத்தை பார்த்து சொன்னான்..

"யாருப்பா போனை இங்கே மறந்து வச்சிட்டு போனது?"

குறிப்பு: இன்று காந்தி ஜெயந்தி. மதுரை ரயில் நிலையத்தில் உடை அணியாமல் இருந்த ஒரு மனிதனைப் பார்த்து தான் மேலாடை அணியும் பழக்கத்தை கைவிட்டார் காந்தி மகான். இந்த நல்ல நாளில் அவருடையை எளிமையான வாழ்க்கையை பற்றி கொஞ்சமாவது யோசிப்பதுதான் நாம் அவருக்கு செய்யும் சிறு நன்றியாக இருக்க முடியும். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!!!

34 comments:

vasu balaji said...

கலாய்க்கிறீங்க. சிரிக்க சிந்திக்கன்னு. பாராட்டுக்கள்.

ச.பிரேம்குமார் said...

//இதில் யாரை நொந்து கொள்ள?//
இது என்ன கேள்வி பாண்டியன். உங்க நண்பர் செய்தது குசும்பு தானே? ஆனாலும் அந்த காவல்துறை அதிகாரி சொன்ன எடுத்துகாட்டுலயும் குசும்பு ரொம்ப அதிகம் தான் ;)

ச.பிரேம்குமார் said...

//சூரத் மண்ணில் இப்போது இருப்பதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதும் அன்பு நண்பர் ராஜூ. // டக்ளஸ் அண்ணனுக்கு இப்படி ஒரு விளம்பரமா? ;)

Prabhu said...

செம பேக்கேஜ்...

M.G.ரவிக்குமார்™..., said...

\\நண்பர் பணத்தைக் கட்டிவிட்டு வந்திருக்கிறார். இதில் யாரை நொந்து கொள்ள?//
இதென்ன கேள்வி?......உங்கள் அறிவாளி நண்பரைத் தான்!இனிமேலாவது ஹெல்மெட் போடச் சொல்லுங்கள்.மற்ற அனைத்து விசயங்களும் சூப்பர்!

ஈரோடு கதிர் said...

//இதில் யாரை நொந்து கொள்ள?//
இதிலென்ன சந்தேகம் நோயுள்ள பலான பெண்ணைத்தான்
இஃகிஃகி

இடுகை கலக்கல்

மேவி... said...

nanba ..... kadasi matter unga real life la nadanthathu thane...

மேவி... said...

indian government steps yeduthu irukkanga ... north india la nadaimurai la irukku gov-autowalahs co ordination scheme


தினசரி வாழ்க்கை

பீர் | Peer said...

அட.. டக்ளஸ் அண்ணே தான் ராஜூவா? இது தெரியாம பல தடவ....

Karthik said...

தேங்காய் சட்னி இல்லாத இட்லியா? ஓவர் அலப்பறைதான்...:))

ரோஸ்விக் said...
This comment has been removed by the author.
ரோஸ்விக் said...

ஜோக் அருமை...வாழ்த்துக்கள்!
இந்த ஹெல்மெட் விஷயம் நம்ம நல்லதுக்கு தான் சொல்லுறாங்க. உயிருக்கு பயந்து அதை தலையில மாறாம...பைன்-க்கு பயந்து சும்மா எடுத்துட்டு போறது எந்த விதத்துல நியாயம்? உங்க நண்பருகிட்ட சொல்லுங்க. போலீஸ் சொன்ன உதாரணம் மிகவும் பொருத்தமானது தான். அதுவும் மதுர திமிரோட...:-) நாங்களும் மதுரை பக்கம் தான்.

RAMYA said...

கிரெடிட் கார்டு ஜோக் அருமை!

சிந்திக்க வைத்தும் எழுதி இருக்கிறீங்க
மொத்தத்தில் நல்லா கலக்குறீங்க பாண்டி!!

ராஜு S.M.S. அருமை. அவரிடம் இன்னும் நிறைய ஜோக்ஸ்/S.M.S. இருக்கு. எல்லாவற்றையும் பதிவிடச் சொல்லுங்கள்.

ரொம்ப அறிவாளி பிள்ளை :-)

RAMYA said...

ஹெல்மெட் போடச் சொல்றதே ஆபத்தை விலக்கத்தானே!

கையிலே கொண்டு போற ஹெல்மெட்டை தலையிலே போட்டுக்க கூடாதா??

இதுபோல் செய்பவர்கள் யோசிங்க யோசிங்க.........

Jerry Eshananda said...

வந்துட்டோம்ல

ஹேமா said...

கார்த்திக்,அத்தனை விஷயங்களையும் பொறுமையாக வாசித்து ரசிக்க முடிந்தது.

சொல்லரசன் said...

ரசிக்கவைத்தது உங்க மதுரை ஸ்பெசல்

ரவி said...

ஜோக் சூப்பர் !!!!!!!!

தஞ்சைச் சோழன் said...

சூப்பர்!

புரட்டாசிச் சேரன் said...

அருமை!

☀நான் ஆதவன்☀ said...

நல்ல இடுகை நண்பா

நசரேயன் said...

கலவை கலந்து அடிக்குது

ஆ.ஞானசேகரன் said...

//இதில் யாரை நொந்து கொள்ள?//

அது சரி... பைன கட்டுங்க சாமி

ஆ.ஞானசேகரன் said...

[[இது போல வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவும் வகையில் கோவிலை சுற்றி ஏன் உதவி மையங்களை அரசு அமைக்கக் கூடாது? ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் இருந்தும் பயணிகளைக் காக்க இது உதவுமே..!!!]]

நல்ல யோசனை செய்ய வேண்டியவர்கள் யோசிக்கனுமே...

ஆ.ஞானசேகரன் said...

//"யாருப்பா போனை இங்கே மறந்து வச்சிட்டு போனது?"//

நல்லா சிரிக்க முடிந்தது நண்பா

Raju said...

ரம்யாக்கோவ் ஒய் இந்த மர்டர் வெறி..?
எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோமே..!
:)

Anonymous said...

முதல்ல சொன்ன போலீஸுக்கு ஓஓஓஓ. லஞ்சம் வாங்கிட்டு போய்க்கோன்னு சொல்லாமா மண்டை உறைக்கற மாதிரி சொன்னாரே

சிங்கக்குட்டி said...

மதுரை மதுரைதான்... கலக்குங்க...கலக்குங்க.

kanagu said...

தலை-ல ஹெல்மெட்-அ போடுறதுல என்னங்க பிரச்சனை... நமக்காக தான அத செய்றோம்...

அடுத்து அந்த கவிதையும், கிரடிட் கார்ட் ஜோக்கும் கலக்கல்..

நல்லா தான் யோசிச்சு இருக்கீங்க... :))

சுபாங்கி said...

நண்பரே,
"அழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. !!!"- போன்ற நல்ல படைப்புகளைத் தரும் நீங்கள் ஏன் இது போன்ற எஸ்.எம்.எஸ் எல்லாம் வெளியிட்டு உங்கள் blog தரத்தை குறைத்துவிடுகிறீர்கள்.

சுபாங்கி

சிவக்குமரன் said...

ம்....

பாலகுமார் said...

நல்லா இருக்கு, கார்த்தி !

வால்பையன் said...

காவலர் சரியா தான் சொல்லியிருக்கார்!

Raju said...

\\நண்பரே,
"அழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. !!!"- போன்ற நல்ல படைப்புகளைத் தரும் நீங்கள் ஏன் இது போன்ற எஸ்.எம்.எஸ் எல்லாம் வெளியிட்டு உங்கள் blog தரத்தை குறைத்துவிடுகிறீர்கள்.\\

வழிமொழியிங்...!
:-)